TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உலகத் தமிழ் செம்மொழி மாநாடு- 5 நாள் நிகழ்ச்சி நிரல் வெளியீடு!

4 posters

Go down

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு- 5 நாள் நிகழ்ச்சி நிரல் வெளியீடு! Empty உலகத் தமிழ் செம்மொழி மாநாடு- 5 நாள் நிகழ்ச்சி நிரல் வெளியீடு!

Post by logu Wed Jun 09, 2010 10:58 pm

கோவையில் வருகிற 23ம் தேதி தொடங்கி
27ம் தேதி வரை நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான நிகழ்ச்சி
நிரல் வெளியிடப்பட்டுள்ளது.

முழுமையான நிகழ்ச்சி நிரல்:

தொடக்க
விழா கோவை மாநாட்டு அரங்கில் 23-ந்தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது.
முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். துணை முதல்வர் மு.க. ஸ்டாலின்
வரவேற்று பேசுகிறார்.

குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் மாநாட்டை
தொடங்கி வைத்து, “கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை”
பின்லாந்தைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு வழங்குகிறார்.
தமிழக ஆளுநர் பர்னாலா மாநாட்டு சிறப்பு மலரை வெளியிடுகிறார். அமைச்சர்
அன்பழகன் தகுதியுரை நிகழ்த்துகிறார்.

பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்
(அமெரிக்கா), வா.செ. குழந்தைசாமி, கா. சிவத்தம்பி (இலங்கை) ஆகியோர்
வாழ்த்தி பேசுகிறார்கள். தலைமை செயலாளர் ஸ்ரீபதி நன்றி கூறுகிறார்.

23ம் தேதி மாலை பிரமாண்டப் பேரணி:

23-ந்தேதி
மாலை 4 மணிக்கு உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு பேரணி நடைபெறுகிறது. இது
கோவை வ.உ.சி. மைதானத்தில் தொடங்கி, அவினாசி சாலை வழியாக சென்று மாநாட்டு
வளாகத்தை அடைகிறது.

“இனியவை நாற்பது” என்ற தலைப்பில் இந்த பேரணி
நடைபெறுகிறது. இதில் இலக்கியம், கலை, வரலாறு ஆகியவற்றை நினைவூட்டும்
அலங்கார வண்டிகள், கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.

24ம் தேதி மாற்றுத் திறனாளிகளின் கலை நிகழ்ச்சி:

24-ந்தேதி
காலை 10.30 மணிக்கு லாரன்ஸ் குழுவின் மாற்று திறனாளிகள் வழங்கும் கலை
நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது. பகல் 12 மணிக்கு பொது கண்காட்சியை மத்திய
அமைச்சர் மு.க. அழகிரி திறந்து வைக்கிறார். மலேசிய மந்திரி சுப்பிரமணியம்
சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

புத்தக கண்காட்சியை ஜி.கே.
வாசன் திறந்து வைக்கிறார். மாலத்தீவு அமைச்சர் அகமது நசீர் சிறப்பு
விருந்தினராக கலந்து கொள்கிறார். இணைய தள கண்காட்சியும் திறக்கப்படுகிறது.

அப்துல் ரகுமான் தலைமையில் கவியரங்கம்:

பிற்பகல்
2.30 மணிக்கு “புதியதோர் உலகம் செய்வோம்” என்ற தலைப்பில் கவியரங்கம்
நடக்கிறது. கவிஞர் அப்துல் ரகுமான் தலைமை தாங்குகிறார். வ.மு. சேதுராமன்,
பொன்னடியான், ஆண்டாள் பிரியதர்சினி, வின்சென்ட் சின்னத்துரை, கவிதை
பித்தன் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.

மாலை 4 மணிக்கு “சமயம்
வளர்த்த தமிழ்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது. இதற்கு
சுந்தரலிங்க சாமியடிகளார் தலைமை தாங்குகிறார். பேராயர் சின்னப்பா,
ஸ்ரீபால், சாரதாநம்பி ஆரூரான், காதர் மொய்தீன் உள்பட பலர் பேசுகிறார்கள்.
இரவு முதல்-அமைச்சர் கருணாநிதி எழுதிய “போர் வாளும் பூவிதழும் நாட்டிய
நிகழ்ச்சியை பத்மா சுப்பிரமணியம் குழுவினர் வழங்குகிறார்கள். நடனம்,
நாடகம், இசை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன.

25ம் தேதி கிளம்பிற்று காண் தமிழ்ச் சிங்க கூட்டம்:

25-ந்தேதி
காலை 10 மணிக்கு “கிளம்பிற்று காண் தமிழ்ச்சிங்க கூட்டம்” என்ற தலைப்பில்
கவியரங்கம் நடக்கிறது. கவிஞர் வைரமுத்து தலைமை தாங்குகிறார். ஈரோடு
தமிழன்பன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட பலர் கவிதை படைக்கிறார்கள்.

11.30
மணிக்கு “தமிழர் வாழ்வோடு பெரிதும் சார்ந்திருப்பது சங்க இலக்கியமே,
இடைக்கால இலக்கியமே, இன்றைய இலக்கியமே என்ற தலைப்பில் பட்டிமன்றம்
நடக்கிறது. சோ. சத்தியசீலன் நடுவராக பங்கேற்கிறார். குமரி அனந்தன் உள்பட
பலர் பேசுகிறார்கள்.

25ம் தேதி கருணாநிதி தலைமையில் கருத்தரங்கம்:

மாலை
4 மணிக்கு “எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” என்ற தலைப்பில் சிறப்பு
கருத்தரங்கம் நடக்கிறது. இதற்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார்.

இதில்
தங்கபாலு, சீத்தாராம் யெச்சூரி எம்.பி., கி. வீரமணி, டாக்டர் ராமதாஸ், இல.
கணேசன், டி. ராஜா எம்.பி., ஆர்.எம். வீரப்பன், திருமாவளவன், ஸ்ரீதர்
வாண்டையார், காதர் மொய்தீன், ஜெகன்மூர்த்தி, செல்லமுத்து, தாவூத்
மியாகான், திருப்பூர் அல்தாப், சந்தானம் பஷீர் அகமது ஆகியோர் கலந்து
கொள்கிறார்கள். இதையடுத்து கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.

26ம் தேதி வாலி தலைமையில் கவியரங்கம்:

26-ந்தேதி
“தமிழுக்கும் அமுதென்று பேர்” என்ற தலைப்பில் கவியரங்கம் நடக்கிறது.
இதற்கு கவிஞர் வாலி தலைமை தாங்குகிறார். கவிஞர்கள் மு. மேத்தா, பா. விஜய்
உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.

அடுத்து வா.செ. குழந்தைசாமி
தலைமையில் “செம்மொழி தகுதி” என்ற தலைமையில் கருத்தரங்கம் நடக்கிறது.
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உள்பட பலர் பேசுகிறார்கள். இதையடுத்து
க.ப. அறவாணன் தலைமையில் “கடல் கடந்த தமிழும் தமிழரும்” என்ற தலைப்பில்
கருத்தரங்கம் நடக்கிறது.

நடிகை ரோகினியின் நாட்டிய நாடகம்:

மாலை
4.30 மணிக்கு சாலமன் பாப்பையா நடுவராக பங்கேற்கும் பட்டிமன்றம் “தமிழ்
வளர்க்கும் பெரும் பொறுப்பு வெள்ளித் திரைக்கே, சின்னத்திரைக்கே,
அச்சுத்துறைக்கே” என்ற தலைப்பில் நடக்கிறது. இதில் பாரதிராஜா, நடிகர்
சந்திரசேகர், லியோனி, எஸ்.வி. சேகர், நக்கீரன் கோபால் உள்பட பலர்
பங்கேற்கிறார்கள். இரவு கொடிசியா வளாகத்தில் நடிகை ரோகிணி நடிக்கும்
“பாஞ்சாலி சபதம்” நாடகம் நடக்கிறது.

27-ந்தேதி காலை 10 மணிக்கு
“வித்தாக விளங்கும் மொழி” என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கத்துக்கு
நடிகர் சிவக்குமார் தலைமை தாங்குகிறார். சுப. வீரபாண்டியன், திருச்சி
செல்வேந்திரன், ஜெகத்கஸ்பார் உள்பட பலர் பங்கேற்கிறார்கள். இதையடுத்து கலை
நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.

பிரணாப் தலைமையில் நிறைவு விழா:

மாலை
4 மணிக்கு மாநாட்டு நிறைவு விழா நடக்கிறது. மத்திய அமைச்சர் பிரணாப்
முகர்ஜி தலைமை தாங்குகிறார். ப. சிதம்பரம் முன்னிலை வகிக்கிறார். சிறப்பு
தபால் தலையை மத்திய அமைச்சர் ராசா வெளியிடுகிறார்.

முதல்வர்
கருணாநிதி, “சிறந்த தமிழ் மென் பொருளை உருவாக் கியதற்கான “கணியன்
பூங்குன்றனார்” விருது வழங்கி மாநாட்டு நிறைவுரை ஆற்றுகிறார். முன்னதாக
தலைமை செயலாளர் ஸ்ரீபதி வரவேற்கிறார். முடிவில் உலகத்தமிழ் செம்மொழி
மாநாட்டு தனி அதிகாரி அலாவுதீன் நன்றி கூறுகிறார்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு- 5 நாள் நிகழ்ச்சி நிரல் வெளியீடு! Empty Re: உலகத் தமிழ் செம்மொழி மாநாடு- 5 நாள் நிகழ்ச்சி நிரல் வெளியீடு!

Post by tamilparks Thu Jun 10, 2010 10:46 am

நல்ல தகவல்
avatar
tamilparks
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 135
Join date : 20/05/2010

http://tamilparks.50webs.com

Back to top Go down

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு- 5 நாள் நிகழ்ச்சி நிரல் வெளியீடு! Empty Re: உலகத் தமிழ் செம்மொழி மாநாடு- 5 நாள் நிகழ்ச்சி நிரல் வெளியீடு!

Post by kalairaja Thu Jun 10, 2010 11:13 am

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு- 5 நாள் நிகழ்ச்சி நிரல் வெளியீடு! 135634 உலகத் தமிழ் செம்மொழி மாநாடு- 5 நாள் நிகழ்ச்சி நிரல் வெளியீடு! 135634
kalairaja
kalairaja
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 500
Join date : 09/04/2010

Back to top Go down

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு- 5 நாள் நிகழ்ச்சி நிரல் வெளியீடு! Empty Re: உலகத் தமிழ் செம்மொழி மாநாடு- 5 நாள் நிகழ்ச்சி நிரல் வெளியீடு!

Post by அன்பு Fri Jun 11, 2010 2:30 am

தகவலுக்கு நன்றி
avatar
அன்பு
பண்பாளர்
பண்பாளர்

Posts : 98
Join date : 10/05/2010

Back to top Go down

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு- 5 நாள் நிகழ்ச்சி நிரல் வெளியீடு! Empty Re: உலகத் தமிழ் செம்மொழி மாநாடு- 5 நாள் நிகழ்ச்சி நிரல் வெளியீடு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இன்று நிறைவு
» "லண்டன் உலகத் தமிழர் மாநாடு ஆரம்பமானது"
» 13ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு, புதுச்சேரியில் நாளை ஆரம்பம்!
» உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே!
» உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கொண்டாடுவோரின் கவனத்திற்கு இச்செய்தியினை எடுத்துச்செல்லுங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum