TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:00 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


60/10 இது, மார்க் அல்ல; லஞ்ச ரேட்

2 posters

Go down

60/10 இது, மார்க் அல்ல; லஞ்ச ரேட் Empty 60/10 இது, மார்க் அல்ல; லஞ்ச ரேட்

Post by மாலதி Wed Jun 02, 2010 5:58 am

கோவை அருகே, நள்ளிரவில் போக்குவரத்துத்துறை செக்போஸ்ட்டில் திடீர்
சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், 28 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணத்தை
கைப்பற்றினர். சுவற்றின் துளை மற்றும் ஆவணங்களுக்கு இடையே லஞ்ச பணம்
பதுக்கி வைக்கப்பட்டிருந்தது அம்பலமானது.
கோவை, மதுக்கரை, கந்தேகவுண்டன் சாவடியில் வட்டார
போக்குவரத்துத்துறையின் இரு செக்போஸ்ட்கள் உள்ளன. தமிழகத்தில் இருந்து
கேரளா செல்லும் வாகனங்களும், கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் நுழையும்
வாகனங்களும் இங்கு சோதனையிடப்படுகின்றன. அதிக பாரம் ஏற்றி வருவது; வாகன
பர்மிட் இல்லாதது; பயண ஆவணம் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களுக்கு
அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த செக்போஸ்ட்களில், விதிமீறி செல்லும் வாகன
டிரைவர்களிடம் போக்குவரத்துத்துறையினர் லஞ்சம் பெறுவதாக அடுத்தடுத்து
புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கோவை லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி.,
சண்முகப்பிரியா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஞானசேகரன், ஜெரால்டு ஆகியோர்
நேற்று முன் தினம் நள்ளிரவில், கேரளாவுக்கு செல்லும் வாகனங்களை
சோதனையிடும் செக்போஸ்ட்டில் திடீர் சோதனை நடத்தினர். நள்ளிரவு 12.00
மணிக்கு துவங்கிய சோதனை அதிகாலை 3.00 மணி வரை தொடர்ந்தது.
இதில், செக்போஸ்ட் அலுவலகத்தில் ஆவணங்களுக்கு இடையேயும், சுவற்றின்
துளையிலும், கம்ப்யூட்டர் யு.பி.எஸ்., சாதனங்களுக்கு அடியிலும் பதுக்கி
வைக்கப்பட்டிருந்த 28 ஆயிரத்து 220 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.அபராத
வசூல் தொடர்பான அலுவலக ஆவணங்களுக்கு தொடர்பில்லாத இத்தொகை எப்படி வந்தது?
என, அங்கிருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் பிரேமா, அலுவலக உதவியாளர்கள்
கங்கையம்மாள், அப்துல்ரகுமான் ஆகியோரிடம், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள்
விசாரித்தனர். "பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும், தங்களுக்கும் எவ்வித
தொடர்பும் இல்லை' என, மூவரும் கைவிரித்துவிட்டனர். பணம் பறிமுதல்
செய்யப்பட்டு குற்றவியல் நடைமுறைச் சட்டம் 102 (யாராலும் உரிமை கோரப்படாத
சொத்து) பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விசாரணையில் அம்பலம்: லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 28
ஆயிரத்து 220 ரூபாய், ஒரே இரவில், அதுவும் பாதி பணி நேரத்துக்குள் வசூலான
தொகை ஆகும். இந்த செக்போஸ்ட் வழியாக பல்வேறு விதிமுறைகளை மீறி கேரளாவுக்கு
சென்ற வாகனங்களின் டிரைவர்களுக்கு போக்குவரத்து துறையினர் அபராதம்
விதிக்காமல், லஞ்சம் பெற்று மேற்கொண்டு செல்ல அனுமதித்துள்ளனர். இதன்
மூலம், மாநில அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். ஒரே இரவில்,
அதுவும் பாதி பணி நேரத்திலேயே இவ்வளவு லஞ்சத்தொகை வசூலாகியிருக்கிறது
என்றால், மாதம் முழுவதும் எவ்வளவு லட்சம் ரூபாய் முறைகேடாக
வசூலிக்கப்பட்டிருக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது:குறிப்பிட்ட ஒரு
விதிமீறலுக்கு வாகன டிரைவர் 3,000 ரூபாயை சட்டப்படியாக அபராதம் செலுத்த
நேரிடும் போது, 500 முதல் 600 ரூபாயை லஞ்சமாக கொடுத்து தப்பிச்
செல்கின்றனர். அதாவது, அபராத தொகையில் ஆறில் ஒரு பங்கு அல்லது ஐந்தில் ஒரு
பங்கு தொகை லஞ்சமாக கைமாறுகிறது. இதன் மூலமாக, அரசுக்கு பெரும் வருவாய்
இழப்பு ஏற்படுகிறது. செக்போஸ்ட் பணி அதிகாரிகள், ஊழியர்கள், மாதம் தோறும்
தங்களுக்கு நிர்ணயிக்கப்படும் சட்டப்படியான அபராத வசூல் இலக்கை மட்டுமே
எட்டுகின்றனர். இலக்கை தொட்ட பின், லஞ்ச வசூலில் தீவிரமாக ஈடுபடுகின்றனர்.
அதாவது, நூற்றுக்கு 40 சதவீத வாகனங்களுக்கு மட்டுமே அபராதம்
விதிக்கப்பட்டு, 60 சதவீத வாகன டிரைவர்களிடம் லஞ்சம் பெறப்படுவதாக
தகவல்கள் வந்துள்ளன; இதுகுறித்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு, லஞ்ச
ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

60/10 இது, மார்க் அல்ல; லஞ்ச ரேட் Empty Re: 60/10 இது, மார்க் அல்ல; லஞ்ச ரேட்

Post by kalairaja Wed Jun 02, 2010 11:43 am

இது ஒரு தொடர்கதை.
லஞ்சம் என்பது வாழ்க்கை முறை.
இது தான் இன்றைய நிலை.
அவலநிலை மாறது.
மாற்ற முடியாது.
kalairaja
kalairaja
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 500
Join date : 09/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum