TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கூட்டணிக் கணக்கு லாபம் யாருக்கு? ஒரு விரிவான அலசல்

Go down

கூட்டணிக் கணக்கு லாபம் யாருக்கு? ஒரு விரிவான அலசல் Empty கூட்டணிக் கணக்கு லாபம் யாருக்கு? ஒரு விரிவான அலசல்

Post by Tamil Sat Apr 02, 2016 6:50 am

கூட்டணிக் கணக்கு லாபம் யாருக்கு? ஒரு விரிவான அலசல்
லாபம்
ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கூட்டணிக் கணக்கு இருக்கிறது. அது, கடந்த காலங்களில் அவர்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் உருவானது. அதனால்தான் பழம் நழுவி, பக்கத்து டம்ளர் பாலில் விழும் வரைக்கும் விஜயகாந்த்தை கூட்டணிக்கு அழைத்தார் கருணாநிதி. காலங்காலமாக அரசியல் கட்சிகளை அலையவிடும் இந்தக் கூட்டணிக் கணக்கில், அப்படி என்னதான் இருக்கிறது? தமிழ்நாட்டின் பிரதானக் கட்சிகளான தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் இதுவரை கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டதில் அது யாருக்கு சாதகம், யாருக்குப் பாதகம்? 1991-ம் ஆண்டு தேர்தல் தொடங்கி, கடந்த 25 ஆண்டுகாலத் தேர்தல் வரலாற்றில் கூட்டணிகள் பெற்ற வாக்குச் சதவிகித எண்களில் இருந்து உண்மைகளைத் தேடுவோம்.
(குறிப்பு: [You must be registered and logged in to see this image.]  இதில், தேசியக் கட்சிகள் மற்றும் மாநிலத்தில் உள்ள பெரிய கட்சிகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளோம். சிறிய கட்சிகளின் வாக்கு வங்கியை மற்றவை என்ற வகையில் சேர்த்துள்ளோம்.
[You must be registered and logged in to see this image.]  பல்வேறு சிறிய கட்சிகள், தி.மு.க., அ.தி.மு.க கூட்டணியில் சேரும்போது, உதயசூரியன், இரட்டை இலை சின்னங்களிலேயே போட்டியிட்டன. அவர்கள் வெற்றிபெற்றால், அது தி.மு.க., அ.தி.மு.க-வின் கணக்கில்தான் சேரும். தேர்தல் ஆணையம் அவ்வாறுதான் கணக்கிடுகிறது. இங்குள்ள டேட்டாவில் அந்தக் கணக்கே கருத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது.)
1991
இந்தத் தேர்தல் பிரசாரத்துக்காக வந்தபோதுதான் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்கு முன்னதாகவே அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டு இருந்தது. ராஜீவ் காந்தியின் மரணம், காங்கிரஸ் கட்சிக்கு மாபெரும் அனுதாப அலையை உருவாக்கியது. அது தேர்தலிலும் எதிரொலித்தது. அ.தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி, 225 தொகுதிகளில் வெற்றிபெற்றது. தமிழக அரசியல் வரலாற்றில் இந்தக் கூட்டணி பெற்ற வெற்றி, ஒரு பெஞ்ச் மார்க்.

[You must be registered and logged in to see this image.]
தி.மு.க அணியில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், ஜனதா தளம் போன்ற கட்சிகள் இருந்தன. ஏழு தொகுதிகளில் மட்டுமே தி.மு.க கூட்டணி வென்றது.
இந்தத் தேர்தலில் புது வரவான பாட்டாளி மக்கள் கட்சி, 194 இடங்களில் போட்டியிட்டு ஒரு தொகுதியை மட்டுமே வென்று 5.89 சதவிகித வாக்குகள் பெற்றது.
ஹைலைட்ஸ்
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ‘ராஜீவ் காந்தி கொலையின் அனுதாப அலையால் அ.தி.மு.க வெல்லவில்லை’ என்றார் ஜெயலலிதா. இது கதர் சட்டைக்காரர்கள் இடையே கசப்பை உண்டாக்கியது.

1996

ஜெயலலிதாவின் முந்தைய ஐந்து ஆண்டுகால ஆட்சியில் நடந்த கணக்கற்ற ஊழல்கள், அந்தக் கட்சியின் மீது மிகப் பெரிய அதிருப்தியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. தி.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் சி.பி.ஐ ஆகியவை அணி திரண்டு அ.தி.மு.க-வுக்கு எதிராக தேர்தலைச் சந்தித்தன. காங்கிரஸில் இருந்து பிரிந்து, புதிதாக உதயமான மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தது. இந்தக் கூட்டணி, 221 தொகுதிகளில் வெற்றிபெற்று 53.77 சதவிகிதம் வாக்குகள் பெற்றது.

[You must be registered and logged in to see this image.]
காங்கிரஸுடன் கைகோத்து தேர்தலை எதிர்கொண்ட அ.தி.மு.க., நான்கு தொகுதிகளில் மட்டுமே வென்றது. அ.தி.மு.க கூட்டணி 27.08 சதவிகிதம் வாக்குகள் வாங்கியது.
இந்தத் தேர்தலின் புதுவரவு ம.தி.மு.க. அதோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், ஜனதா தளமும் இணைந்து தேர்தலை எதிர்கொண்டன. ம.தி.மு.க 177 தொகுதிகளில் போட்டியிட்டு, ஓர் இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஜனதா தளம் கட்சி ஓர் இடத்தையும், சி.பி.ஐ.(எம்) ஓர் இடத்தையும் பிடித்தன.
பா.ம.க 116 இடங்களில் போட்டியிட்டு, 4 இடங்களில் வெற்றிபெற்றது.
ஹைலைட்ஸ்
நடிகர் ரஜினிகாந்த், தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக பிரபல தொலைக்காட்சி மூலம் பிரசாரம் செய்தார். `தி.மு.க கூட்டணியின் பிரமாண்ட வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம்’ எனச் சொல்லப்பட்டது.
2001
‘தொடரட்டும் பொற்காலம்’ என, மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தி.மு.க விளம்பரம் செய்தது. பா.ஜ.க., விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் சில சாதிக் கட்சிகள் தி.மு.க கூட்டணியில் இருந்தன. 1999-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் த.மா.கா-வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதுதான் விடுதலைச் சிறுத்தைகளுக்கு முதல் தேர்தல். சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை இந்தத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் புதுவரவு. இந்தக் கட்சி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது.

[You must be registered and logged in to see this image.]
அ.தி.மு.க-வோ, மெகா கூட்டணி அமைத்தது. காங்கிரஸ், த.மா.கா., பா.ம.க., இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லாம் ஒன்றுசேர்ந்தன. இந்தக் கூட்டணி 196 தொகுதிகளில் வென்று, 50.09 சதவிகிதம் வாக்குகள் பெற்றது. ஜெயலலிதா இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஆனார்.
தி.மு.க கூட்டணி 37 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. 38.30 சதவிகிதம் வாக்குகள் வாங்கியது.
தேர்தலை தனித்து சந்தித்த ம.தி.மு.க., 211 தொகுதிகளில் போட்டியிட்டு 4.65 சதவிகிதம் வாக்குகள் பெற்றாலும் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறவில்லை.
ஹைலைட்ஸ்
மூப்பனாரின் த.மா.கா., அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்போது த.மா.கா-வில் இருந்த ப.சிதம்பரம் பிரிந்து சென்று, புதுக் கட்சி தொடங்கினார்.
2006 
காங்கிரஸ், பா.ம.க இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லோரும் அப்படியே தி.மு.க பக்கம் முகாம் மாறினார்கள். இந்தக் கூட்டணி மொத்தம் 163 இடங்களைப் பிடித்தது. 44.75 சதவிகித வாக்குகளைப் பெற்றது.
அ.தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க-வும் விடுதலைச் சிறுத்தைகளும் இருந்தனர். இந்தக் கூட்டணி மொத்தம் 69 இடங்களில் வென்று, 39.91 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றது.

[You must be registered and logged in to see this image.]
இந்தத் தேர்தலின் புதுவரவு தே.மு.தி.க. 232 தொகுதிகளில் போட்டியிட்டு ஓர் இடம் மட்டுமே கிடைத்தது. ஆனால், 8.38 சதவிகிதம் வாக்குகள் பெற்றது.
ஹைலைட்ஸ்
இலவச டி.வி., இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்ற தி.மு.க-வின் இலவச வாக்குறுதிகள் இந்தத் தேர்தலின் வைரல் ஹிட்.
2011
தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் மற்றும் சில சிறிய கட்சிகள் இருந்தன. மெகா கூட்டணியாக இருந்தாலும் மொத்தம் 31 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இந்தக் கூட்டணி 39.43 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றது.

[You must be registered and logged in to see this image.]
`மக்களுடனும் தெய்வத்துடனும்தான் கூட்டணி’ எனச் சொல்லிக்கொண்டிருந்த விஜயகாந்த், அ.தி.மு.க கூட்டணியில் இணைந்தார். இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், மேலும் ஏழு சிறிய கட்சிகளும் இந்தப் பக்கம் இருந்தன. இந்தக் கூட்டணி மொத்தம் 203 தொகுதிகளில் வென்றது.
ஹைலைட்ஸ்
அ.தி.மு.க கூட்டணியில் கடைசி நேரம் வரை தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் வைகோ. உரிய தொகுதிகள் கிடைக்காததால், ம.தி.மு.க இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை.
கூட்டணி டேட்டா சொல்லும் உண்மை என்ன?

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.] கூட்டணி அமைப்பதால் யாருக்கு ஆதாயம்… பெரிய கட்சிகளுக்கா, சிறிய கட்சிகளுக்கா? டேட்டாவில் இருந்து பார்க்கும்போது, கூட்டணி அமைக்கும் நேரத்தில் சிறிய கட்சி களின் வாக்கு வங்கி கூடியிருக்கிறது; பெரிய கட்சிகளின் வாக்கு வங்கி சரிந்துள்ளது. குறிப்பாக, தி.மு.க மெகா கூட்டணி அமைக்கும்போது எல்லாம் அதன் வாக்கு வங்கியில் சரிவு ஏற்படுகிறது. காரணம், குறைந்த தொகுதிகளில் போட்டியிடுவதுதான்.
[You must be registered and logged in to see this image.]  எத்தனை கட்சிகளுடன் கூட்டணி அமைத்தாலும் அ.தி.மு.க எப்போதுமே, தான் அதிகமான தொகுதிகளில் போட்டியிடுவதை முதலில் உறுதிசெய்துகொள்கிறது. அ.தி.மு.க மிகக் குறைவாகப் போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கையே 141-தான். (2001-ம் ஆண்டு தேர்தல்). அதிகபட்சமாக 2006-ம் ஆண்டு தேர்தலில் 188 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது.
ஆனால், தி.மு.க எப்போதுமே கூட்டணிக் கட்சிகளுக்கு தாராளமாகத் தொகுதிகளை வாரி வழங்கி, குறைவான தொகுதிகளிலேயே போட்டியிடுகிறது. 2011-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க 124 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. தி.மு.க-வின் வாக்கு வங்கி சதவிகிதம் சரிவதைப்போலத் தோன்றுவதற்கு, கூட்டணிக் கட்சிகளுக்கு அதிகமான தொகுதிகளை ஒதுக்குவதும் மிக முக்கியமான காரணம்.

[You must be registered and logged in to see this image.]  1991-ம் ஆண்டு பா.ம.க தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை ஐந்து சட்டமன்றத் தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் இரண்டு முறை தனித்தும், இரண்டு முறை தி.மு.க கூட்டணியிலும், ஒரு முறை அ.தி.மு.க கூட்டணியிலும் தேர்தலை எதிர்கொண்டுள்ளது. இருப்பினும் பா.ம.க-வின் மீது அடிக்கடி கூட்டணி மாறும் கட்சி என்ற இமேஜ் எப்படி வருகிறது எனில், அவர்கள் நாடாளுமன்றத் தேர்தலிலும் அடிக்கடி கூட்டணி மாறியுள்ளனர்.
[You must be registered and logged in to see this image.]  கடந்த ஐந்து சட்டமன்றத் தேர்தல் டேட்டாவைப் பார்க்கும்போது, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அடிக்கடி கூட்டணி மாறியுள்ளன. 1991-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க பக்கம் இருந்தவர்கள், 2001-ல் அ.தி.மு.க கூட்டணியிலும்; 2006-ல் தி.மு.க கூட்டணியிலும்; 2011-ல் அ.தி.மு.க கூட்டணி யிலும் இருந்தனர். 1996-ம் ஆண்டு தேர்தலில் மட்டும் சி.பி.ஐ., தி.மு.க கூட்டணியிலும், சி.பி.ஐ(எம்.), ம.தி.மு.க கூட்டணியிலும் போட்டியிட்டன. இப்போது 2016-ல் மக்கள் நலக் கூட்டணியாகச் சேர்ந்து விஜயகாந்துடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கின்றனர்.
[You must be registered and logged in to see this image.] 1991-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக வந்த ராஜீவ் காந்தி, படுகொலை செய்யப்பட்டார். இதனால் எழுந்த அனுதாப அலையில் அ.தி.மு.க மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அப்போது அ.தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 15.19 சதவிகித வாக்குகளுடன் 60 இடங்களில் வெற்றிபெற்றது. அதற்கு முந்தைய 1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் வாக்கு வங்கி, 19.83 சதவிகிதம். தனித்து போட்டியிட்டு, இந்த சதவிகிதத்தை எட்டியது காங்கிரஸ். ஒருவேளை, 1991-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், ராஜீவ் காந்தி படுகொலையால் எழுந்த அனுதாப அலையைப் பயன்படுத்திக்கொண்டு காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டிருந்தால், பெரும் வெற்றியை ஈட்டியிருக்க முடியும். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி மீண்டும் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்பை அப்போது அ.தி.மு.க பயன்படுத்திக்கொண்டது.
[You must be registered and logged in to see this image.]  தமிழக அரசியலில் எப்போதும் பேரம் பேசும் வலிமையுள்ள கட்சியாக தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் பா.ம.க., தனது வாக்கு வங்கியை கடந்த 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒரே அளவில் தக்கவைத்து வருகிறது. 1991-ம் ஆண்டில் கட்சியைத் தொடங்கி 194 இடங்களில் தனித்துப் போட்டியிட்டபோது பா.ம.க., 5.89 சதவிகித வாக்குகள் பெற்றது. 2001-ம் ஆண்டு அ.தி.மு.க கூட்டணியில் 5.56 சதவிகிதமும், 2006-ம் ஆண்டு தி.மு.க-வுடன் சேர்ந்து 5.65 சதவிகிதமும், 2011-ல் மீண்டும் தி.மு.க-விலேயே இருந்து 5.23 சதவிகிதமும் வாக்குகளைப் பெற்றது. ஆனால், பா.ம.க-வின் பலம் வட தமிழகத்தில் மட்டுமே.
[You must be registered and logged in to see this image.]  இப்போது விஜயகாந்துடன் இணைந்து மக்கள் நலக் கூட்டணி தேர்தலைச் சந்திக்கிறது. இவர்கள் கணிசமான வெற்றியைப் பெறுவார்களா, வாக்குகளைப் பிரிக்கும் சக்தியாக இருப்பார்களா, கூட்டணிக் கணக்கின் சூத்திரத்தை மாற்றி எழுதுவார்களா?
காத்திருப்போம்..!

லாபம்,
லாபம் தரும் விவசாயம்,
லாபம் தரும் சிறு தொழில்கள்,
லாபம் தரும் மரங்கள்,
லாபம் தரும் தொழில்,
லாபம் தரும் சிறு தொழில்,
லாபம் தரும் முதலீடுகள்,
லாபம் தரும் சுயதொழில்,
லாபம் தரும் வியாபாரம்,
லாபம் தரும்,
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum