TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மிஸ்டர் கழுகு : விஜயகாந்த்துக்கு போன் செய்த ராகுல்!

Go down

மிஸ்டர் கழுகு : விஜயகாந்த்துக்கு போன் செய்த ராகுல்! Empty மிஸ்டர் கழுகு : விஜயகாந்த்துக்கு போன் செய்த ராகுல்!

Post by Tamil Fri Mar 18, 2016 9:11 pm

மிஸ்டர் கழுகு : விஜயகாந்த்துக்கு போன் செய்த ராகுல்!
திசை மாறுகிறதா தே.மு.தி.க.?
மிஸ்டர் கழுகு
‘‘கூட்டணிகள் எப்போது முடிவு ஆகும்…. கட்சிகள் எப்போது தேர்தல் பணிகளைத் தொடங்கும்?” என்பதுதான் கழுகாரைப் பார்த்ததும் நாம் கேட்ட கேள்வி.
‘‘இப்போதே வேட்பாளர் பட்டியலை தலைமை வெளியிட்டுவிடக் கூடாது என்று, வேட்பாளர்கள் சாமியைக் கும்பிட்டபடி இருக்கிறார்கள். இப்பவே அறிவித்துவிட்டால், இரண்டு மாதங்களுக்குப் பணத்தை யார் செலவு செய்வது என்பதுதான் அவர்களது கவலை!” என்ற கழுகார் தொடர்ந்தார்.
‘‘கூட்டணிகள் இறுதி நிலவரத்தை அடைய இந்த மாதம் இறுதி ஆகலாம். அதற்குள் எத்தனையோ மாற்றங்கள் நடக்கலாம்.
‘இந்தத் தடவை தனியாகத்தான் நிற்பேன்’ என்று விஜயகாந்த் அறிவித்ததை ஜெயலலிதா நம்பவில்லை. விஜயகாந்த் மீது அவருக்கு இன்னமும் சந்தேகம் இருப்பதாகச் சொல்கிறார்கள். யாரையும் கடுமையாகப் பேசும் விஜயகாந்த், அந்தக் கூட்டத்தில் கருணாநிதியை ஏன் விமர்சிக்கவில்லை என்பதுதான் ஆளும் கட்சியின் சந்தேகமாம். அவர்கள் சந்தேகப்படும் வகையில் சில சம்பவங்கள் நடந்துள்ளன.”
‘‘இன்னும் ஏன் விஜயகாந்த் மீது சந்தேகம்? அவர்தான் ‘தனித்துப் போட்டி’ என்று அறிவித்துவிட்டாரே?”
‘‘விஜயகாந்த்தின் இந்த அறிவிப்பு, தி.மு.க-வைவிட காங்கிரஸ் கட்சிக்கும் அதிகப்படியான அதிர்ச்சியைக் கொடுத்துள்ளதாம். இந்தச் சட்டமன்றக் கூட்டணியை அடுத்து வரப்போகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கிறதாம் காங்கிரஸ் மேலிடம். இந்தச் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க ஆகிய கட்சிகள் கூட்டணி சேர்ந்து சந்தித்தால் அதே கூட்டணியை நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடரலாம். அது கணிசமான எண்ணிக்கையிலான எம்.பி-க்களை டெல்லிக்கு அனுப்ப அடித்தளமாக அமையும் என்று காங்கிரஸ் நினைத்தது. எனவே, விஜயகாந்த் அறிவிப்பு காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்த நிலையில்,  விஜயகாந்த்துடன் ராகுல் பேசியதாகச் சொல்லப்படுகிறது.”
‘‘அப்படியா?”
[You must be registered and logged in to see this image.]
 
‘‘ஆமாம். வழக்கமாக நலம் விசாரித்த ராகுல், ‘உங்களது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று சொல்லி இருக்கிறார். ‘தேர்தலுக்குத்தான் இன்னும் நாட்கள் இருக்கின்றனவே’ என்று விஜயகாந்த் சொன்னாராம். ராகுல் பேசியது விஜயகாந்த்துக்கு உற்சாகத்தைக் கொடுத்து உள்ளது. இதைத் தொடர்ந்து கருணாநிதியின் நிழல் மனிதர் ஒருவருடன், விஜயகாந்த் பேசியதாகவும் சொல்கிறார்கள். ‘தனித்துப் போட்டி என்றுதான் சொன்னேனே தவிர, தி.மு.க-வை நான் விமர்சிக்கவில்லையே’ என்று அப்போது சொன்னாராம். ஆளும் கட்சியில் இருந்து சர்ச்சையைக் கிளப்பிய முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரும், தி.மு.க – தே.மு.தி.க கூட்டணிக்கான பேச்சு வார்த்தைகளைத் தொடங்கி உள்ளாராம். அவர் விஜயகாந்த்திடம் பேசியதாகச் சொல்கிறார்கள். இவை கைகூடும் என்று தி.மு.க நம்புகிறது!”
‘‘ஸ்டாலின் தரப்பு மீது கருணாநிதி கோபப்பட்டதாகச் சொல்கிறார்களே?”
‘‘உண்மைதான். தனக்கு விஜயகாந்த் பற்றி அதிகப்படியான ஆசை வார்த்தை சொல்லப் பட்டதாக கருணாநிதி நினைக்கிறாராம். ஸ்டாலினுக்கு எல்லாமுமாக இருந்து பல்வேறு காரியங்களைப் பார்க்கும் சபரீசன் அண்ட் கோ மீது தவறான அபிப்பிராயம் ஏற்படுத்த சீனியர்கள் சிலர் முயற்சித் தார்கள். அவர்கள்தான் கருணாநிதியைக் கிளறிவிட்டார்கள் என்கிறார்கள். ‘நிச்சயம் நம்மோடுதான் வருவார் என்று நாங்கள் சொன்னோம். தலைவர் அதனைக் கவிதையாகச் சொல்லிவிட்டதுதான் சிக்கல்’ என்று சம்பந்தப்பட்டவர்கள் சொல்கிறார்கள்.”
‘‘விஜயகாந்த்துடன் பி.ஜே.பி பேச்சுவார்த்தை நடத்துகிறதா?”
‘‘ ‘தனித்துப் போட்டி’ என்று அறிவித்தபிறகு பி.ஜே.பி சார்பில் யாரும் பேசவில்லையாம்!”
‘‘அப்படியானால், பி.ஜே.பி – பா.ம.க கூட்டணி உருவாக வாய்ப்பு இருக்கிறதா?”
[You must be registered and logged in to see this image.]
‘‘அப்படிச் சொல்லப்பட்டது. ஆனால், சேப்பாக்கத்தில் நடந்த பி.ஜே.பி பொதுக் கூட்டத்தில் தமிழிசை பேசிய பேச்சைப் பார்த்தால், அப்படித் தெரியவில்லை. ‘ஊழல் கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்றால், அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போட்டியிட வேண்டும். ஆனால், டாக்டர் ஒருவர் என்ன சொல்கிறார் என்றால், தன்னைத்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லி வருகிறார். அவருக்கு யதார்த்தம் தெரியவில்லை. அவரால் உண்மையில் ஜெயிக்க முடியுமா? அதற்கான வாய்ப்பு இருக்கிறதா? டாக்டர்தான் முதலமைச்சர் ஆக வேண்டும் என்றால், தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான டாக்டர்கள் இருக்கிறார்கள். முதலமைச்சர் பதவி என்ன முருங்கைக்காயா?’ என்று விளாசி இருக்கிறார். இதைவைத்துப் பார்க்கும்போது பா.ம.க-வுடன் கூட்டணி வரும் என்று தெரியவில்லை. இந்தக் குழப்பங்கள் எல்லாம் அடங்கித் தெளிய இன்னும் ஒரு வாரம் ஆகும்” என்ற கழுகார் டெல்லியில் நடக்கும் சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு மனு விசாரணை பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
‘‘ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடகா அரசு மற்றும் தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நடைபெற்று வருகிறது. கர்நாடகா அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா முன்வைத்த வாதம் ஜெயலலிதா தரப்பை அதிர்ச்சி அடையவைத்து உள்ளது.
‘குற்றம்சாட்டப்பட்டவர்கள் பல்வேறு வங்கிகளில் இருந்து பெற்ற கடன் தொகை 18 கோடி ரூபாயை கர்நாடகா உயர் நீதிமன்றம் அவர்களது வருமானமாகக் கணக்குக் காட்டியுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிமன்றம், இந்தக் கடனை வருமானமாகக் கணக்கிட முடியாது என்று கூறியும் அந்தக் கடன்களை மொத்தமாக ரூ.24 கோடியாகக் கணக்கிட்டதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? அத்துடன் வங்கிக் கடன்களை பெற்றது குறித்து விளக்கம் அளிக்க குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குத் தேவையான வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அவர்களால் அதனைச் சரிவர நிரூபிக்க முடியவில்லை. முதல்வர் போன்ற பொதுப்பணியில் இருக்கும் ஒருவர் தனக்கு அளிக்கப்படும் பொருட்களை அரசுக் கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என்பது விதிமுறையாக இருக்கிறது. ஜெயலலிதா அவ்வாறு செய்யவில்லை. இது விதிமுறைகளுக்கு எதிரானதாகும்.
[You must be registered and logged in to see this image.]
வருமானவரி தாக்கல் செய்தபோது ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் மூலம் ரூ.1.15 கோடி கிடைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி அதனை ரூ.3.85 கோடி கூடுதலாகச் சேர்த்து ரூ.4 கோடியாக மதிப்பிட்டுள்ளார். இது தவறான மதிப்பீடாகும். நமது எம்.ஜி.ஆர். நாளேட்டின் சந்தாத் தொகை செலுத்தும் திட்டம் மூலம் ரூ.14 கோடி கிடைத்ததாக ஜெயலலிதா தரப்புக் கூறுகிறது. ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கு தொடங்கப்பட்ட பின்னர்தான் இந்தச் சந்தா செலுத்தும் முறையே அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன் சந்தாத் தொகை கட்டியவர்களுக்கு வழங்கப்பட்ட ரசீதுகள் தொலைந்து விட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கூறப்பட்டது. அந்த ரசீதுகளும், அவை வைக்கப்பட்டிருந்த காருடன் தொலைந்து போனதாகவும் கூறப்பட்டு உள்ளது. இந்தத் தொகைகளும் தவறான வகையில் வருமானமாகச் சேர்த்தது என்பதால், அவற்றைக் கணக்கில் சேர்க்கக் கூடாது’ என்று வாதங்களை அடுக்கி உள்ளார்!”
‘‘ம்!”
‘‘அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘நமது எம்.ஜி.ஆர்.’ சந்தாத் திட்டம் மூலம் ரூ.14 கோடி கிடைத்தது என்பதை வருமானவரி தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதை எதிர்த்து வருமான வரித் துறை மேல்முறையீடு செய்துள்ளதா?’ எனக் கேள்வி எழுப்பினர். ‘வருமானவரிக் கணக்கையே இவர்கள் ஒழுங்காகத் தாக்கல் செய்யவில்லை. சொத்துக் குவிப்பு வழக்குப் போட்ட பிறகுதான் ஆவணங்களையே திரட்டினார்கள்’ என்றும் சொல்லி ஆச்சார்யா தனது வாதத்தை நிறைவு செய்துள்ளார்.
மார்ச் 29-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்!”
‘‘இங்கு தேர்தல் பிரசாரம் நடக்கும்போது இந்த வழக்கு முக்கியத்துவம் பெறும்போல் இருக்கிறதே!”
‘‘ஆமாம்!”
[You must be registered and logged in to see this image.]
‘‘கடந்த ஜனவரி மாதம் நடந்த ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேக தினத்தன்று இரவு அமைச்சர் கோகுல இந்திரா கோயிலுக்கு வந்து சென்றார். இவரது வருகையால் சுவாமி அம்பாள் திருமணம் 2 மணிநேரம் தாமதமாக நடந்ததாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், கடந்த 16-ம் தேதி இரவு ராமேஸ்வரம் கோயிலுக்கு மீண்டும் வந்துள்ளார் கோகுல இந்திரா. மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் கவிதா சசிகுமார் உடன் கோயிலுக்கு வந்த அவர், சுவாமி மற்றும் அம்மன் சன்னதிகளில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தார். பின்னர் அம்பாள் சன்னதியில் இருந்த குருக்களிடம், தான் கொண்டு வந்திருந்த பூ மாலையுடன் முக்கியப் பொருள் ஒன்றையும் கொடுத்து அம்பாள் பாதத்தில் வைத்து எடுத்துச் சென்றுள்ளார். தான் போட்டியிடப் போகும் தொகுதியின் பெயரை அம்மன் சன்னதியில் வைத்து எடுத்துச் சென்றிருக்கலாம் எனவும், சமீபத்தில் தனது கணவர் மீது எழுந்துள்ள நில அபகரிப்பு வழக்கில் இருந்து மீள, வேண்டுதல் நடத்திச் சென்றிருக்கலாம் எனவும் கட்சிகாரர்கள் ஆளுக்கு ஒரு காரணம் சொல்லி வருகின்றனர்!’’ என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum