TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:36 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:15 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:14 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:17 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 6:45 am

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 5:22 am

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 5:19 am

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 5:14 am

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 5:08 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 5:56 am

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 2:45 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:01 am

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 8:49 am

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:28 am

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 2:56 am

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 12:45 am

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Thu Aug 11, 2022 11:58 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:18 am

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Thu Jul 21, 2022 10:44 pm

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Thu Jul 14, 2022 11:29 pm

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 2:46 am

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 2:37 am

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 4:17 am

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 2:34 am

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Sun Dec 12, 2021 5:14 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 9:44 am

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 2:39 am

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 3:15 am

» மனசு அமைதி பெற .......
by veelratna Sun Nov 07, 2021 10:43 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:41 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Sun Nov 07, 2021 10:36 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Sun Nov 07, 2021 10:34 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:28 pm

» புது வரவு விளையாட்டு
by veelratna Sun Nov 07, 2021 10:26 pm

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Mon Oct 25, 2021 11:21 pm

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Mon Oct 25, 2021 11:18 pm

» மெல்லிசை பாடல்
by veelratna Sun Oct 24, 2021 11:05 pm

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Sun Oct 24, 2021 11:01 pm

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:23 am


டாஸ்மாக் கடைகளை மூடுவது என்று முடிவெடுத்தால் 30ஆயிரம் கோடி வருவாய் இழப்பை எப்படி ஈடுகட்டுவது?

Go down

டாஸ்மாக் கடைகளை மூடுவது என்று முடிவெடுத்தால் 30ஆயிரம் கோடி வருவாய் இழப்பை எப்படி ஈடுகட்டுவது? Empty டாஸ்மாக் கடைகளை மூடுவது என்று முடிவெடுத்தால் 30ஆயிரம் கோடி வருவாய் இழப்பை எப்படி ஈடுகட்டுவது?

Post by Tamil Tue Aug 11, 2015 5:55 pm

டாஸ்மாக் கடைகளை மூடுவது என்று முடிவெடுத்தால் 30ஆயிரம் கோடி வருவாய் இழப்பை எப்படி ஈடுகட்டுவது?
======================================
ஓர் அரசாங்கத்துக்கு ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி திரட்டுவது பெரிய விஷயம் அல்ல.தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தின் தலைவர் பொறியாளர் வீரப்பன் அவர்கள் சொல்கிறார், ‘
1. தமிழகத்தில் 39 ஆயிரத்து 202 ஏரிகள், கண்மாய்களும் 5,000-க்கும் மேற்பட்ட கோயில் குளங்களும் உள்ளன. இவற்றை ஆழப்படுத்தி வண்டல் மண்களை எடுக்க வெளிப்படையான ஏலம் விடவேண்டும்.
2. இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு ஏராளமான கட்டுமானங்களும் வணிக கடைகளும் விளைநிலங்களும் இருக்கின்றன. இவற்றில் இருந்து பெறும் வாடகை, குத்தகைப் பணம் மிகவும் சொற்பம். அவற்றை மறு ஆய்வு செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பு நிலங்களை கைப்பற்றி, நில வருவாயை முறையாகக் கையாண்டு வருவாய் ஈட்டத்தக்கதாக மாற்ற வேண்டும்.
3. லட்சக்கணக்கான ஏக்கர் வருவாய் புறம்போக்கு, நத்தம் புறம்போக்கு என்று அரசு நிலங்கள் மாநிலம் முழுவதும் பரவிக்கிடக்கின்றன. இவை பற்றிய புள்ளி விவரங்கள் வருவாய்த் துறை சார்ந்த கிராம நிர்வாக அலுவலர்களிடம் உள்ளன. இந்த நிலங்கள் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் பயன்பாட்டுக்கு மாற்றப்பட வேண்டும்.
4. உள்ளாட்சி, நகராட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டுகளுக்குள் இருக்கும் பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளில் லட்சக்கணக்கான புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆயிரமாயிரம் வீடுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. புதுப்புது வீட்டுமனைகள் போடப்பட்டு, மாற்றம் செய்யப்பட்டு நிறைந்த அளவில் எங்கு பார்த்தாலும் விற்பனை செய்யப்படுகின்றன. இதை முறைப்படுத்தி வரிகளைப் புதுப்பிக்க வேண்டும்.
5. கடந்த 20 ஆண்டுகளில் உள்ளாட்சி அமைப்புகளின் கணக்குகள் சரியாக தணிக்கை செய்யப்பட்டதில் ரூ.20,000 கோடி நிதி இழப்பு குறிப்புரைகள் எழுதப்பட்டுள்ளன. உள்ளாட்சி செயல் அலுவலர்கள், தலைவர்கள், கவுன்சிலர்கள், உள்ளாட்சித் துறை மேல் அலுவலர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரின் கூட்டுச் சதியே இந்த இழப்புக்குக் காரணம். இவை சீர்செய்யப்பட வேண்டும்.
6. கோயில் சுற்றுலா, கோடை வாசஸ்தல சுற்றுலா இடங்களில் தேவையான அளவுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தினால் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.5,000 கோடி சுற்றுலா வரி வருவாய் உறுதியாகக் கிடைக்கும். கேரளா, புதுச்சேரி, கோவா, மேற்கு வங்காளம், காஷ்மீர், வட கிழக்கு மாநிங்களில் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு 1,000 கோடிக்கு சுற்றுலா வரி வருவாய் ஈட்டப்படுகிறது.
7. பலநூறு ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு மிகமிகக் குறைந்த விலைக்கு பல்வேறு சலுகைகளுடன் தாரை வார்க்கப்படுகிறது. அதனை முறைப்படுத்த வேண்டும்.
8. பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மூலமாகவே பல திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இத்தகைய திட்டங்கள் வகுத்தலில், செயலாக்கத்தில் ஒவ்வொரு மதிப்பீடும் உண்மையில் தேவைப்படும் திட்ட செலவைவிட 3 முதல் 5 மடங்கு வரை வேண்டுமென்றே கூட்டப்பட்டு இந்தத் தொகையில் 20 சதவிகிதம் முதல் 25 சதவிகிதம் வரை தொடர்பு உடையவர்களுக்கு ஊக்கத்தொகை என்ற பெயரில் லஞ்சப் பணமாகச் செல்கிறது. இந்த முறையினை நீக்க வேண்டும்.
9. நம் நாட்டு வளர்ச்சித் திட்டங்களுக்கு நபார்டு வங்கி, எல்.ஐ.சி மற்றும் உள்நாட்டு வங்கிகள், நிதி முனையங்களில் இருந்து கடன் பெறும் முறையினை அமல்படுத்த வேண்டும். பன்னாட்டு நிதி அமைப்புகளிடம் வாங்கும் போது திட்டச் செலவுகள் கூடுவதோடு, இந்தக் கடன்களுக்கு ஆண்டுதோறும் செலுத்த வேண்டிய வட்டித்தொகை மட்டுமே பல்லாயிரம் கோடிகளைத் தாண்டுகிறது. தமிழக அரசின் ஒட்டுமொத்த 1 லட்சத்து 81 ஆயிரம் கோடி கடன் தொகைக்கு இந்த ஆண்டு வட்டி மட்டும் 17,000 கோடி. இத்தகைய கடன்களுக்கான வட்டித் தொகையை குறைத்தாலே ரூ.2000 கோடி அளவுக்கு ஓர் ஆண்டுக்கு மிச்சமாகும். எனவே, உள்ளூர் நிதி நிறுவனங்களில் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கலாம். தனியார், அரசு பங்களிப்புடன் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றினால் மாநில நிதிச்சுமையும் கடனுக்கான வட்டியும் பெரிய அளவில் குறையும்.
10. பன்னாட்டு வணிக நிறுவனங்கள் நம்முடைய ஆற்று நீர், ஊற்று நீர் 1,000 லிட்டரை 50 பைசாவுக்கு வாங்கி அதை பாட்டிலில் அடைத்து ஒரு லிட்டர் குடிநீரை ரூ.15, ரூ.20 என்று நம்மிடையே விற்று லாபம் அடிக்கின்றன. இந்தக் கொள்கையினை மாற்றி அரசே பாதுகாக்கப்பட்ட குடிநீரை லிட்டர் ஒன்றை ஒரு ரூபாய்க்கு வழங்க வேண்டும்.
11. தமிழக அரசுக்குச் சொந்தமான அனல் மின் நிலையங்களை நவீனப்படுத்தியும் புதிய அனல் மின் நிலையங்களைக் கட்டியும் நமக்குத் தேவையான மின் சக்தியை நாமே உற்பத்தி செய்ய முடியும். தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.7 முதல் ரூ.14 வரை கூடுதல் விலைக்கு வாங்க வேண்டியதைப் படிப்படியாகக் குறைக்கலாம். இதன் மூலம் தமிழக அரசுக்கு ஓராண்டு செலவு கூடுதலாக ரூ.2,758 கோடி குறைக்கலாம்.
12. தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் லாபத்தில் இயங்கும்போது, அரசு போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவது என்பது மோசமான மேலாண்மைக்கும் பொய்யான கணக்குக்கும் எடுத்துக்காட்டு. எனவே, நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பு உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் மிகை ஊழியர்களையும் எடுத்துவிட்டு திறமையும் நேர்மையும் மிக்க இயந்திரப் பொறியாளர்களை அரசுத் துறையில் இருந்து நியமித்தால் இப்போதைய இழப்பான ரூ.2,000 கோடியை உடனடியாகத் தவிர்க்கலாம்.
- இப்படி ஆண்டு ஒன்றுக்கு ரூ.30,000 கோடிக்குப் பதிலாக ரூ.5 லட்சம் கோடிகளை கூடுதல் வருவாய் ஈட்டித்தரும் கருத்துரைகளை முன்னோடித் திட்டங்களைத் தந்துள்ளோம். இவை அனைத்தும் எங்களின் 45 ஆண்டுகால பிசிறில்லா புள்ளி விவரங்களின் அடிப்படையில் தந்துள்ளோம். 2016-ம் ஆண்டை மதுவில்லா தமிழகமாக மாற்றுவோம். இதைப் படித்தாவது அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் புதிய கொள்கைகளை மாற்றுவார்களா? புதிய பாடம் படிப்பார்களா? இந்த நிலையிலாவது சீரழிந்த தமிழ் மக்களை கடைந்தேற்ற முன்வருவார்கள் என்று நம்பலாமா? நம்முடைய நோக்கமெல்லாம் முழு மதுவிலக்கு. தமிழ் சமுதாயத்தைச் சத்தமில்லாத கொடிய இனப்படுகொலையில் இருந்து காப்பாற்றுவதுதான்’’ என்கிறார் வீரப்பன்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 01/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum