TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:00 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உங்கள் பாப்பா பாதுகாப்பாக இருக்கிறதா?

Go down

உங்கள் பாப்பா பாதுகாப்பாக இருக்கிறதா? Empty உங்கள் பாப்பா பாதுகாப்பாக இருக்கிறதா?

Post by Tamil Wed Nov 12, 2014 7:16 am

உங்கள் பாப்பா பாதுகாப்பாக இருக்கிறதா? P4
நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் ப்ரீத்தி - சூரி தம்பதி இருவரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கின்றனர். கை நிறையச் சம்பளம். ஏராளமான சலுகைகள். இளமையில் ஓடி ஓடி உழைத்தவர்களுக்கு, தங்கள் குழந்தைகளின் சிரிப்பையும் ஒவ்வோர் அசைவையும் வளர்ச்சியையும் பார்த்து ரசிக்க முடியவில்லையே என்ற வேதனை. ஒரு கட்டத்தில் சம்பாதித்தது போதும் என்று வேலையை உதறிவிட்டனர். வருமானத்துக்காக உழைத்த காலத்தில் தங்கள் குழந்தைகளைக் காப்பகத்தில் விட்டுவிட்டு அலுவலகத்துக்கு ஓடும் இந்தப் பரபரப்பான வாழ்க்கையில் தங்களுக்கு ஏற்பட்ட சிக்கலான அனுபவமே 'காஞ்சனா பாட்டி குழந்தைகள் காப்பகங்கள்’ உருவாவதற்கு இவர்களுக்கு விதையாக அமைந்து இருக்கிறது. இன்று சென்னையில் 14 இடங்களில் குழந்தைகள் காப்பகங்களை நடத்திவருகிறார்கள் ப்ரீத்தி-சூரி.   
பிறந்து மூன்றே மாதங்களே ஆன பச்சிளம் குழந்தைகளைத் தாயின் அரவணைப்புடன் பாதுகாக்கும் குழந்தைக் காப்பகங்கள் எப்படி இருக்க வேண்டும்? என்னென்ன வசதிகள் தேவை? என்பது பற்றி ப்ரீத்தி - சூரியும், ஆயாவின் மடியில் தவழும் குழந்தைகளின் ஆரோக்கியம்குறித்துக் குழந்தைகள் நல மருத்துவர் ஸ்ரீனிவாசனும் இங்கே விரிவாகப் பேசுகின்றனர்.
''இரண்டு மாதக் குழந்தை தனது அம்மாவின் முகம் பார்த்துச் சிரிக்கும். மூன்று மாதங்களில் தலை நிற்கும். நான்கு முதல் ஐந்து மாதங்களில் கவிழ்ந்து படுக்கும். ஏழு முதல் எட்டு மாதங்களில் உட்காரும். ஒன்பது, பத்து மாதங்களில் நிற்கும். ஒரு வயதில் நடக்க ஆரம்பிக்கும். ஒரு சில குழந்தைகளுக்கு இந்தச் செயல்பாடுகளுக்கான காலம் வேறுபடலாம். இப்படிக் குழந்தை படிப்படியாக உடல் வளர்ச்சியில் முன்னேறி, தத்தித் தத்தி நடந்து வரும் அழகை இன்றைய பெற்றோர்கள் ரசிக்க முடியாமல் போய்விடுகிறது. உடல் மற்றும் மனரீதியான வளர்ச்சிக்கான பருவம் இந்த மழலைப் பருவம். உடல் நல்ல ஆரோக்கியமாக இருந்தால்தான், அந்தக் குழந்தையின் வருங்காலம் நன்றாக இருக்கும். எனவே, குழந்தையுடன் செலவிட முதல் ஐந்து வருடங்களை ஒதுக்குங்கள். ஒருவேளை தவிர்க்கவே முடியாமல் காப்பகங்களில் கொண்டுபோய்விட நேரிட்டால், இந்தப் பாதுகாப்பான வழிகளைக் கடைப்பிடியுங்கள்'' என்றவர்கள் காப்பகத்தில் குழந்தைகள் நலமாக இருப்பதற்கான வழிகளைப் பட்டியலிட்டனர்.
உங்கள் பாப்பா பாதுகாப்பாக இருக்கிறதா? P5a
குழந்தை எப்போதும் குதூகலமாக இருக்க...
உங்கள் பாப்பா பாதுகாப்பாக இருக்கிறதா? Plus பிறந்து ஆறு மாதங்கள் வரை குழந்தைக்குத் தாய்ப்பால் மட்டுமே கட்டாயம் தர வேண்டும். உங்கள் பாப்பா பாதுகாப்பாக இருக்கிறதா? P6aமுடிந்தவரை ஆறு மாத விடுப்பைக் கட்டாயமாக்கிக்கொள்வது நல்லது.  
உங்கள் பாப்பா பாதுகாப்பாக இருக்கிறதா? Plus குழந்தை எட்டு மணி வரைக்கும் தூங்கட்டும் என்று விட்டுவிட்டு எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு பிறகு அவசர அவசரமாக எழுப்பிக் குளிக்க வைத்து, பால் மற்றும் உணவைக் கொடுத்துக் காப்பகத்தில் கொண்டுவிடும் பெற்றோர்கள்தான் அதிகம். இதனால் குழந்தையும் சரியாகச் சாப்பிடாது. ஆற அமரக் குழந்தையுடன் விளையாட்டுக் காட்டியபடியே சாப்பாட்டை ஊட்டுங்கள். குழந்தையும் ஆர்வமாகச் சாப்பிடும்.
உங்கள் பாப்பா பாதுகாப்பாக இருக்கிறதா? Plus சூடான சாதத்தைக் குழையப் பிசைந்து ஊட்டும்போது, குழந்தை நன்றாகச் சாப்பிடும். மதியம், மாலை உணவுகளையும் தயாரித்துத் தரும் காப்பகங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
உங்கள் பாப்பா பாதுகாப்பாக இருக்கிறதா? Plus மருத்துவ ஆலோசகர்கள் இருக்கிறார்களா அங்கு இருக்கும் ஒவ்வொரு குழந்தையைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் பதிவு செய்திருக்கிறார்களா என்பனவற்றைக் கவனியுங்கள். உங்கள் குழந்தையின் ரத்த வகை, ஒவ்வாமை, குடும்ப மருத்துவர், உணவு முறைகள், கொடுக்கும் மாத்திரை மருந்துகள்பற்றிய அனைத்து விவரங்களையும் நீங்களே, ஒரு ஃபைலில் போட்டுத் தந்துவிடலாம்.  
உங்கள் பாப்பா பாதுகாப்பாக இருக்கிறதா? Plusபிஞ்சுக் குழந்தைகளுக்கு அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படும். மூக்கில் சளி, இருமல், லேசான காய்ச்சல் இருந்தால், அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு குழந்தையை வீட்டுக்கு அழைத்துச் சென்று கவனிப்பது உத்தமம்.
உங்கள் பாப்பா பாதுகாப்பாக இருக்கிறதா? Plusகுழந்தைகள் உடுத்துவதற்குத் தளர்வான மெல்லிய பருத்தி ஆடைகளைப் பயன்படுத்தினால், குழந்தைகளுக்குத் தோல் தொடர்பான பிரச்னை வராமல் இருக்கும். காய்ச்சி ஆறவைத்த நீரை, நன்கு கிருமி நீக்கம் செய்யப்பட்ட பாட்டிலில் ஊற்றிக்கொடுக்கலாம்.
உங்கள் பாப்பா பாதுகாப்பாக இருக்கிறதா? Plusஒரு வயதைக் கடந்துவிட்டால், குழந்தையைக் குடும்பத்தினருடன் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடப் பழக்குங்கள். இதனால் காப்பகத்துக்குச் செல்லும்போது மற்ற குழந்தைகளுடன் அது சேர்ந்து சாப்பிடும்.
உங்கள் பாப்பா பாதுகாப்பாக இருக்கிறதா? Plus  மண்ணில் விளையாடும்போது குழந்தைகளுக்குத் தோலில் அரிப்பு, கொப்புளங்கள் வரலாம். காப்பகத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் தனித் தனி சோப்பைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.  
குழந்தைக் காப்பகத்தைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க மேலும் சில யோசனைகள்...
உங்கள் பாப்பா பாதுகாப்பாக இருக்கிறதா? Plusதரை தளத்தில் இயங்கும் காப்பகங்களைத் தேர்ந்தெடுங்கள்.
உங்கள் பாப்பா பாதுகாப்பாக இருக்கிறதா? Plus குழந்தைகள் ஓடி விளையாடக்கூடிய அளவுக்கு இடம் தாராளமாக இருக்க வேண்டும். வெளிச்சமும் காற்றோட்டமும் நன்கு இருக்க வேண்டும். காப்பகத்தில் இருக்கும் கதவு, ஜன்னல், டேபிள் எல்லாவற்றின் முனையும் கூர்மையாக இருக்கக் கூடாது என்பதைக் காப்பகம் நடத்துபவர்களிடம் வலியுறுத்துங்கள்.
உங்கள் பாப்பா பாதுகாப்பாக இருக்கிறதா? P6b
உங்கள் பாப்பா பாதுகாப்பாக இருக்கிறதா? Plus ஏ.சி. இல்லாமல் இருப்பதே குழந்தைகளின் உடல் நலத்துக்கு நல்லது.
உங்கள் பாப்பா பாதுகாப்பாக இருக்கிறதா? Plus சிறிய அறையில் அளவுக்கு அதிகமான குழந்தைகள் இருக்கின்றன என்றால், அந்தக் காப்பகத்தைத் தவிர்ப்பது நல்லது.  
உங்கள் பாப்பா பாதுகாப்பாக இருக்கிறதா? Plus மூன்று குழந்தைகளுக்கு ஓர் ஆயா என்கிற ரீதியில் இருந்தால்தான் அவரால் ஒவ்வொரு குழந்தையின்மீதும் அக்கறையுடன் தனிக் கவனம் செலுத்த முடியும்.
உங்கள் பாப்பா பாதுகாப்பாக இருக்கிறதா? Plusகாப்பகத்தில் உள்ள ஆயாக்கள், முதலுதவிப் பயிற்சி பெற்று இருக்கிறார்களா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.  
உங்கள் பாப்பா பாதுகாப்பாக இருக்கிறதா? Plusஆயாக்களின் உடை மற்றும் விரல் நகங்கள், கை, கால்களைச் சுத்தமாக வைத்திருக்கிறார்களா என்பதைக் கவனியுங்கள்.
உங்கள் பாப்பா பாதுகாப்பாக இருக்கிறதா? Plus உங்கள் வீடு, அலுவலக நேரம், பயணத்துக்காக ஆகும் நேரம் போன்றவற்றையும் கணக்கிட்டு, அதற்கேற்ப காப்பகத்தைத் தேர்ந்தெடுங்கள்.
உங்கள் பாப்பா பாதுகாப்பாக இருக்கிறதா? Plus காப்பங்களின் சுவர்கள் வண்ண மயமாக இருந்தால், குழந்தைகள் கூடுதல் உற்சாகத்துடன் இருப்பார்கள்.  
உங்கள் பாப்பா பாதுகாப்பாக இருக்கிறதா? Plusஓடியாடி வரும் குழந்தைகளுக்கு உடம்பில் சின்னச் சின்னச் சிராய்ப்புகள் ஏற்படலாம். இதற்காகக் காப்பக நிர்வாகிகளிடம் சண்டை போடுவது நல்லது அல்ல.
உங்கள் பாப்பா பாதுகாப்பாக இருக்கிறதா? Plus குழந்தைகளிடம் மனம்விட்டுப் பேசுங்கள். காப்பக ஆயாக்களைப் பற்றி விசாரியுங்கள். மற்ற குழந்தைகளைப் பற்றியும் பேசுங்கள். அந்த மழலைக் குரலில் புகாரும் இருக்கலாம். புகழ்ச்சியும் இருக்கலாம். இதை வைத்துக் குழந்தையின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடியும்!
 உங்கள் பாப்பா பாதுகாப்பாக இருக்கிறதா? P6
குழந்தைகள் காப்பகம் நடத்துவோர் கவனத்துக்கு...
உங்கள் பாப்பா பாதுகாப்பாக இருக்கிறதா? Plus நல்ல மற்றும் கெட்ட பழக்கவழக்கங்களைக் குழந்தைகள் தங்களைச் சுற்றி நடப்பதைப் பார்த்தே கற்றுக்கொள்கிறார்கள். காப்பக ஆயாக்கள் ஒருவரிடம் மற்றொருவர் உரையாடும்போது, மரியாதைக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்துவது நல்லது.
உங்கள் பாப்பா பாதுகாப்பாக இருக்கிறதா? Plus  கண்களுக்கு எது தென்பட்டாலும், உடனே அதை வாயில் வைத்துக்கொள்ளும் பழக்கம் குழந்தைகளுக்கு உண்டு. எனவே, கைக்கு எட்டும் தூரத்தில் எதையும் வைக்காதீர்கள்.
உங்கள் பாப்பா பாதுகாப்பாக இருக்கிறதா? P5
உங்கள் பாப்பா பாதுகாப்பாக இருக்கிறதா? Plus பற்கள் முளைப்பதால் கடிக்கும் பழக்கம் வரும். மற்ற குழந்தைகளைக் கடிப்பதைத் தவிர்க்க, டீத்தர், நிப்புள் போன்ற பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.
உங்கள் பாப்பா பாதுகாப்பாக இருக்கிறதா? Plus ஒரு குழந்தை கையை நீட்டிப் பேசும்போது மற்றொரு குழந்தையின் கண்ணில் குத்த நேரிடலாம். பென்சில், பேனா, பிரஷ் போன்ற பொருட்களைக் குழந்தைக்குக் கொடுக்கும்போது, ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும் இடைவெளி விட்டு உட்காரவைப்பது நல்லது.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum