TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அந்தக் கோரத்தை உணர்ந்தபோது... - மூப்பனார்

Go down

அந்தக் கோரத்தை உணர்ந்தபோது... - மூப்பனார் Empty அந்தக் கோரத்தை உணர்ந்தபோது... - மூப்பனார்

Post by piraba Sun Jan 26, 2014 7:48 am

 (ஜூனியர் விகடன்: 5.6.1991)
ஸ்ரீபெரும்புதூர் துயரச் சம்பவத்தை நேரில் பார்த்த மூப்பனாரை, அவரது அலுவலகத்தில் சந்திக்கச் சென்றோம்.
அலுவலகம் முழுக்கக் கட்சிப் பிரமுகர்களும் தொண்டர்களுமாக நிறைய கும்பல்! ஒவ்வொருவரும் அவரவர் மாவட்டத்தில் நிறைய காங்கிரஸ் தொண்டர்களை போலீஸார் பிடித்துச் சென்றுவிட்டதாக மூப்பனாரிடம் குறை சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டத்தில் கிட்டத்தட்ட இருநூறு பேர்... வேலூரில் எழுபதுக்குமேல் என்றபடி அந்தந்த மாவட்ட போலீஸாரிடம் பிடிபட்ட காங்கிரஸார் லிஸ்ட் மூப்பனாரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. போலீஸார் பிடித்துச் சென்றிருப்பவர்களில் அநேகம் பேர் இளைஞர் காங்கிரஸ்காரர்கள் என்று அழுதுகொண்டே சொன்னார் ஒரு தொண்டர்.
எப்போதும் காணப்படும் புன்சிரிப்பான மூப்பனாரைக் காணவில்லை. இதழ்க்கடையில் புன்னகையோடு எதிர்க்கட்சிகள் பற்றி நறுக்குத் தெறித்தாற்போன்ற ஜோக்குகளை உதிர்க்கும் மூப்பனார், வழக்கத்துக்கு மாறாக, சோர்வான முகத்துடன் இருந்தார்.
மெள்ள அவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.
 ''சம்பவம் நடந்த இடத்துக்கு நீங்கள் எப்போது சென்றீர்கள்?''
''ராஜீவ் சென்ற காருக்குப் பின்னால்தான் என் காரும் சென்றது. அவர் இந்திரா சிலைக்கு மாலை போட நிறுத்த... நான் முன்னே நடந்து சென்று கூட்டம் நடக்கவிருந்த இடத்தின் நுழைவாயிலில் நின்றிருந்தேன். அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் லதா பிரியகுமாரிடமும் மற்றொரு வேட்பாளரிடமும் அவரவர் தொகுதிகள் எப்படியிருக்குன்னு விசாரிச்சுக்கிட்டிருந்தேன். அப்பத்தான் ராஜீவ் வந்து இறங்கினாரு. அவர் காரை விட்டு இறங்கினதுமே பட்டாசு வெடிக்கிற சத்தம் ஜோரா கேட்டுது. தலைவர் இறங்கி மாலையெல்லாம் வாங்கிக்கிட்டே மேடையை நோக்கிப் போனாரு...
[You must be registered and logged in to see this image.]
அப்போது லதா என்னிடம், 'என்ன இப்படி ஒரு வனாந்திரத்துல கூட்டம் போட்டிருக்காங்க... சொல்லப் போனா, ஸ்ரீபெரும்புதூர் 'மாதிரி ஸ்ட்ராங்கான தொகுதிக்கு தலைவர் வரவே தேவையில்லையே... இதுக்குப் பதிலா கொஞ்சம் 'வீக்’கான சட்டமன்றத் தொகுதிகளாகப் போயிருக்கலாம்!’னு சொல்லிக்கிட்டிருந்தாங்க. நான் லதாகிட்ட, 'சீக்கிரம் மேடைக்குப் போங்கம்மா... உங்களை அறிமுகப்படுத்த தலைவர் கூப்பிட்டாலும் கூப்பிடலாம்!’னு சொல்லிக்கிட்டிருந்தப்பவே 'டமால்’னு ஒரு வெடிச் சத்தம் கேட்டுது. நான் என்னன்னு யோசிக்கறதுக்குள்ள சில போலீஸ் கார்கள் கிளம்பிச்சு. என்னவோ ஏதோ நடந்து ராஜீவுக்கு அடிபட்டிருக்கு... அதான் போலீஸ்காரங்க அவரை எடுத்துக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடுறாங்க அல்லது ராஜீவை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துப் போகிறாங்கன்னுதான் நான் முதல்ல நினைச்சேன்! ஆனா, மத்தவங்கள்லாம் 'ராஜீவ் எங்கே... எங்கே’ன்னு தேடறதைப் பார்த்ததும்தான் விபரீதம் ஏதாவது நடந்து போச்சோன்னு கலக்கமாயிடுச்சு.
சில நொடிகளுக்கெல்லாம் ஜெயந்தி, 'தலைவர் அங்கே விழுந்து கிடக்கிறார்’னு சொன்னதும்... அது தலைவர்தானான்னு ஊர்ஜிதப்படுத்திக்க, குப்புற விழுந்திருந்த அந்த முகத்துக்குக் கீழே கையை விட்டேன்... அந்தக் கோரத்தை என் மூளை உணர்ந்ததும் நான் செய்த முதல் காரியம், அலங்கோலமா விழுந்திருந்த என் தலைவர் உடலை துண்டால் போர்த்தினது... இதுக்கப்புறம்தான், வெடிச்சத்தம் கேட்டு முதல்ல விரைந்த சில கார்கள்ல போலீஸ் பெரிய அதிகாரிங்க சில பேர் ஓடினாங்கன்னு எனக்குத் தெரிஞ்சது.
இதுக்குள்ள, 'எங்கே எங்கே’ன்னு தேடிக்கிட்டிருந்த கூட்டம், தலைவர்தான் இறந்து கிடக்கிறார்னு தெரிஞ்சதும் மிஞ்சியிருந்த போலீஸ்காரங்களைத் தாக்க ஆரம்பிச்சது. அந்த ஏ.எஸ்.பி. ராமகிருஷ்ணா, 'அடிங்க... என்னை அடிங்க! அவரே இறந்துட்ட பிறகு எங்க பாதுகாப்பு பத்தி உங்ககிட்ட விளக்க என்ன இருக்கு? என்னை அடிச்சுக் கொன்னு வேணாலும் போடுங்க!’ன்னு பரிதாபமா சத்தம் போட்டாரு... ஐ.ஜி. ராகவனையும் சில தொண்டர்கள் இப்படி அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க... அப்புறம் நான்தான் 'அவங்க என்னய்யா பண்ணுவாங்க! இப்ப அடுத்து நடக்க வேண்டியதைப் பார்ப்போம்!’னு சொல்லி தொண்டர்களை விலக்கி, அடக்கி வெச்சேன்.
அங்கே உறைஞ்சு போய் நின்னிருந்த ராஜீவின் ஆலோசகர் சுமன் துபேகிட்டே, 'இனிமே மருத்துவ உதவி எதுவும் ராஜீவைக் காப்பாத்தப் போறதில்லே... எல்லாம் முடிஞ்சு போச்சு! இப்ப அடுத்து என்ன செய்யணும்?’ன்னு கேட்டேன். அதுக்கு அவர், 'நாம இப்ப உடலை எடுத்துக்கிட்டுப் போயிட்டா பின்னால விசாரணைக்குத் தடயம் கிடைக்காமப் பிரச்னையாயிடப் போவுது.... போலீஸைக் கேட்டுச் செய்யுங்க!’ன்னார். நான் ராகவன்கிட்ட 'உங்க வழக்கம் என்ன?’ன்னு கேட்டேன்.
'இறந்திருக்கிறது பெரிய தலைவர்... உடலை ரொம்ப நேரம் இங்கே வெச்சிருக்கறது நல்லதில்ல... கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போய், அந்த உடலுக்கு மேலும் ஏதாவது டேமேஜ் ஆகிடலாம். முதலில் எடுத்துச் சென்றுவிடுங்கள்! அதனால் தடயம் எதுவும் அழிந்து விடாது’ என்றார் ராகவன்.
ஆம்புலன்ஸ் எதுவும் இல்லாத காரணத்தினால் போலீஸ் வேன்லயே எடுத்திட்டுப் போறதுன்னு முடிவாச்சு! இதைத் தொடர்ந்து கூட்ட மேடையை விட்டு சற்றுத் தள்ளி நின்றிருந்த தீயணைப்பு வண்டியிலிருந்து ஸ்ட்ரெச்சர் கொண்டு வரப்பட்டது. பொங்கி வந்த அழுகையை அடக்கிக்கிட்டு, தலைவர் உடலை எடுத்து ஸ்ட்ரெச்சரில் வைத்தோம்.
ஏற்கெனவே அடிபட்ட ரெண்டு பேரை அந்த போலீஸ் வேன்ல ஏத்தியிருந்தாங்க. அதனால ஸ்ட்ரெச்சர் முழுசுமா உள்ளே நுழையல... கதவுக்கு வெளியே நீட்டிக்கிட்டிருந்த ஸ்ட்ரெச்சரை வழி நெடுக நானும் மற்ற தொண்டர்களும் மாத்தி மாத்திப் பிடிச்சுக்கிட்டு வந்தோம். வண்டி அங்கிருந்து கிளம்பி கொஞ்ச தூரம்கூட வந்திருக்காது... 'போலீஸ்காரங்கதான் தப்பிச்சு ஓடறாங்க’ன்னு நினைச்சு பொதுமக்கள் எறிஞ்ச கல் ஒண்ணு இந்த வேனையும் தாக்கியது. இப்படி பலவகையான சிரமங்களுக்கு நடுவுல ஒருவழியா ஜி.எச். வந்து சேர்ந்தால்... அங்கே போலீஸ் எந்தவொரு முன் அறிவிப்பும் கொடுத்திருக்கல... நாங்க போய் விஷயம் சொன்னதுக்குப் பிறகுதான் அங்கிருந்தவங்களுக்கு சீரியஸ்னெஸ் தெரிஞ்சது.
எந்த உயர் அதிகாரியும் வந்திருக்காத நிலையில், நான் கவர்னரோட போனில் பேசி அவரை வரச் சொன்னபோது, அவர் 'நான் வரணுமா... வரணுமா..’ன்னு இழுத்தார். 'உடனடியா வந்து சேருங்க’ன்னு சொல்லி போனை வெச்சேன்.
ராஜீவ் உடல் ஜி.எச்-சுக்கு வந்த ஒரு மணி நேரம் கழிச்சு, போலீஸ் டி.ஜி.பி-யும் தேவாரமும் வந்தாங்க. அப்புறம் 'போஸ்ட்மார்ட்டம் இங்கே வேண்டாம்... டெல்லியிலே வெச்சுக்கலாம்’னு சுமன் துபே அபிப்பிராயப்பட்டதால் விடியறதுக்கு முன்னேயே தலைவர் உடலை ஏர்போர்ட்டுக்குக் கொண்டு போயிட்டோம். அங்கே அதற்கு முன்பே சோனியாவும் பிரியங்காவும் வந்திருந்தாங்க. அதே விமானதளத்துல முந்தின நாள் இரவு, கம்பீரமா வந்து இறங்கின எங்க தலைவர், கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரத்துல சிதறிய உடலா போயிட்டார்'' என்றார் (சிறிது நேரம் மௌனம்).
தொடர்ந்து பேசுகையில் மூப்பனார் சொன்னது:
''இந்தத் தடவை தலைவர் ப்ரோக்ராமே சரியான முறையில் திட்டமிடப்படலை... ஆரம்பத்திலிருந்தே ஏகப்பட்ட குழப்பம்... பதிமூணாம் தேதி என்னோட பேசினப்போ, அவர் சிதம்பரம், மயிலாடுதுறை, பாண்டிச்சேரி, ஸ்ரீபெரும்புதூர் போகிறார்னு சொன்னாங்க. அதே சமயத்துல தலைவர் காஞ்சிபுரத்துல பெரியவாளைத் தரிசிக்க விரும்பறதாவும் சொன்னாங்க. அப்போ நேரா ஃப்ளைட்டை திருச்சியில் இறக்கி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சிதம்பரம், பாண்டிச்சேரியை முடிச்சுக்கிட்டு காஞ்சிபுரம் போயிடலாம்... அங்கிருந்து வர்றப்ப ஸ்ரீபெரும்பதூரை 'டச்’ பண்ணிட்டு சென்னையிலேர்ந்து கிளம்பி அவர் போயிடட்டும்னு சொன்னேன்... அல்லது நேரா சென்னைக்கு வந்தால், காஞ்சிபுரத்துக்கு ஹெலிகாப்டர்ல போயிட்டு, அங்கிருந்து மத்த ஊர்களுக்குப் போயிடலாம்னும் சொன்னேன்...   முக்கியமா இரண்டுநாள் ட்ரீப்பை தமிழ்நாட்டில் ஒரு நாளா குறைச்சுக்கலாம்னு சொன்னேன். இதுக்கப்புறம் நான் தமிழ்நாடு முழுக்க டூர் போயிட்டேன். நான் டூர்ல இருந்தப்ப ராஜீவ் பதினெட்டாம் தேதி மெட்ராஸ் வர்றார்னாங்க... அப்புறம் பத்தொன்பதுன்னாங்க... இருபதுன்னாங்க... கடைசியா இருபத்தொண்ணாம் தேதின்னாங்க...!
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி சென்ற முறை குறைஞ்ச வோட்டு வித்தியாசத்துல ஜெயிச்ச தொகுதி... இதை டெல்லி கம்ப்யூட்டர் கணிப்பு தெளிவாச் சொல்லியிருக்கு! அதே மாதிரி நாகப்பட்டினம் தொகுதிக்கு ராஜீவ் வந்து போனால் வெற்றி கிடைக்கும்கிற சூழ்நிலை! அதனாலதான் இங்கெல்லாம் ராஜீவ் வர நினைச்சிருக்கார். ஆனால், இருபத்தொண்ணாம் தேதி ப்ரோக்ராம் சொன்னப்ப இந்தத் தொகுதிகள்லாம் மிஸ் ஆகி, ஸ்ரீபெரும்புதூர், மயிலாடுதுறை, சிவகங்கை, கிருஷ்ணகிரின்னு முடிவாச்சு. முழுக்க முழுக்கப் பலமுள்ள வி.ஐ.பி. தொகுதிகளாகவே ராஜீவ் சுற்றுப்பயணம்..! இதை யார் முடிவு செய்தாங்கன்னு தெரியல... இதுக்குப் பதிலா 'வீக்’ ஆன தொகுதிகளுக்கு ராஜீவ் வரணும்கிற அபிப்பிராயம் கட்சி ஆட்கள்கிட்டேயே இருந்தது.
எல்லாம் போக, இருபத்தொண்ணாம் தேதி ஸ்ரீபெரும்புதூர்ல ராஜீவைத் தங்க வைக்கிற ஐடியா இருக்குங்கற மாதிரி தெரிஞ்சது. அப்படின்னா காலையில ஏழு மணி விமானத்துக்கு ராஜீவ் ஆறரைக்கே அங்கிருந்து கிளம்ப வேண்டியிருக்கும். அது ரொம்ப அயர்ச்சியா இருக்கும்கிறதால ராத்திரியே ஏர்போர்ட்டுக்குத் திரும்பி அங்கேயுள்ள வி.ஐ.பி. லவுஞ்சுலயே தலைவர் தங்கட்டும்னு முடிவா சொல்லிட்டேன்.
அதேமாதிரி கிருஷ்ணகிரியை முடிச்சுட்டு சென்னைக்கு வந்து டெல்லி போறதா இருந்தாங்க. ஆனா, கிருஷ்ணகிரியிலிருந்து பெங்களூர் போய் அங்கிருந்தே டெல்லி போறதுதான் சுலபம்னு சொல்லி, ராஜீவ் சென்னைக்கு வந்த பிறகு நான் ப்ரோக்ராமை மாற்றிக் கொடுத்தேன். இதனால், ராஜீவே ஓட்டிக்கிட்டு வந்த விமானத்தை யாராவது பெங்களூர் கொண்டு போயிடறதுன்னும், தமிழ்நாட்டுச் சுற்றுப்பயணத்தை லோக்கல் விமானத்துல ராஜீவ் முடிச்சுக்கறதுன்னும் முடிவாச்சு! கடைசியில்... எல்லாமே ஸ்ரீபெரும்புதூரோட போச்சு!'' - சொல்லி முடித்துவிட்டு உணர்ச்சிவசப்பட்டார் மூப்பனார்.
- எஸ். சுபா


[You must be registered and logged in to see this link.]
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அந்தக் காலத்தில், தமிழகத்தில் இருந்த சிற்பிகள் ஒரு வழக்கத்தைக் கடைப்பிடித்தார்கள்.
» அந்தக் காலத்து நடிகர்கள் பன்ச் பேசி இருந்தால் எப்படி இருக்கும்?
» தூக்கிலிடப்பட்ட ரெஹானா ஜப்பாரி (உள்ளத்தை உருக்கும் அந்தக் கடைசி வேண்டுகோள் இது.)
» ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்வது குற்றம் என்றால் அந்தக் குற்றத்தைத் தொடர்ந்து செய்வோம்… – பெரியார் திக தலைவர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum