TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


2013 டாப் 25

Go down

2013 டாப் 25  Empty 2013 டாப் 25

Post by Tamil Tue Dec 31, 2013 12:57 pm

கலக நாயகனே!  
ருடத்தின் விஸ்வரூபக் காமெடி! உலக நாயகனை ஊறப் போட்டு ஊறப் போட்டு அடித்தது 'விஸ்வரூபம்’. ஆழ்வார்பேட்டையில் சீரியஸ் திங்கிங்கில் இருந்த கமலுக்கு சடாரென ஒரு சிந்தனை உதிக்க, 'டி.டி.ஹெச்-சில் விஸ்வரூபத்தை ரிலீஸ் பண்ணப்போறேன்...’ என அறிவித்தார். 'இது வேலைக்காகாது...’ என தியேட்டர்காரர்கள் கொதித்தெழ, பத்திக்கிச்சு பரபரப்பு. பிரச்னை பெரிதாக, 'முதல் நாள் தியேட்டர்ல... அடுத்தநாள் டி.டி.ஹெச்-ல’ என்று துவையல் அரைத்தார். 'காரம் பத்தலையே...’ என யோசிக்கும்போதே, 'முஸ்லிம்களை இழிவாகச் சித்திரிக்கிறது படம்’ என்று அடுத்தக்
கச்சேரிக்கு மைக் கட்டின முஸ்லிம் அமைப்புகள். 'படம் காமிக்கிறேன்... ஆனா, எந்தப் பிரச்னையும் இல்லைனா பிரியாணி செஞ்சு போடுவீங்களா?’ என்று லந்து கொடுத்தபடியே, 23 அமைப்புகளைக் கூட்டிப் படத்தைப் போட்டுக்காட்டினார் கமல். 'ரைட்டு, நாங்க சந்தேகப்பட்டது கன்ஃபார்ம்தான்’ என்று முஸ்லிம் அமைப்புகள் வெகுண்டெழ, கன்ஃப்யூஸானார் கமல்.

'சட்டம்-ஒழுங்குப் பிரச்னை வரும்’ என்று படத்துக்கு கேட் போட்டது தமிழக அரசு. முன்னர் 'வேட்டி கட்டியவர்தான் பிரதமர் ஆக வேண்டும்’ என்று கமல் வைத்த ஐஸில்தான் அம்மா சூடானார் என செய்திகள் வர, 'படம் ரிலீஸ் ஆகலைனா நான் நாட்டை விட்டு வெளியில போயிடுவேன்’ என்று சென்டிமென்ட் ராக்கெட்டை கமல் ஏவ, ஃபீலிங்கானான் தமிழன். அதற்குள் படம் ஆந்திராவில் ரிலீஸாக, வண்டி கட்டிப்போய் கூட்டம் கூட்டமாகப் பார்த்தார்கள் தமிழர்கள். முத்தரப்புப் பேச்சுவார்த்தைகள் முடிவில் சிலபல கட்களுக்குப் பிறகு விஸ்வரூபம் வெளியாக, இந்தப் பஞ்சாயத்துகளாலேயே படம் ஹிட். ஆனா, இதெல்லாம் காமெடி இல்ல பாஸ்!
கடுப்பு எம்.ஜி.ஆர்.!
ண்டு முழுவதும் இருட்டு அறையில் முரட்டுக் குத்து வாங்கிக்கொண்டே இருந்தார் கேப்டன்.
'நீ போலிங் போடு... நீ ஸ்லிப்புக்குப் போ...’ என கேப்டன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, 'பக்கத்தூர்ல கபடி... நாங்க போறோமே...’ என சரமாரியாக சைக்கிள் மிதித்தார்கள் ஏழு எம்.எல்.ஏ-க்கள். அம்மா வேறு தாறுமாறாக அவதூறு வழக்குகளைப் போட்டுப் புரட்ட, 'ஆங்... அக்கக்காங்...’ என கோர்ட்டுக்கும் கோயம்பேட்டுக்குமாகக் குடை ராட்டினத்திலேயே இருந்தார். ஆனாலும் அசராமல் கூட்டத்துக்குக் கூட்டம் ஜெ-வைக் கொத்து பரோட்டா போட்டார்.
[You must be registered and logged in to see this image.]
ராஜ்யசபா தேர்தலில் தனது கட்சி வேட்பாளரையே நிறுத்தியது ரொம்பத் தெகிரியம். உச்சகட்டமாக ஏற்காடு இடைத்தேர்தலைப் புறக்கணித்தவர், டெல்லி சட்டசபைத் தேர்தலில் 'பதிணொண்ணுல நிக்கிறோம்’ என பாண்டிபஜாரில் ஸ்வெட்டர் வாங்கியபோது எகிறியது டாஸ்மாக் விற்பனை. டெல்லியில் நின்ற அத்தனை வேட்பாளர்களும் டெபாசிட் அந்து, 'மாமா டவுசர் கழண்டுச்சு’ என அலற, 'இந்தி நை மாலும்... ஆங்ங்...’ என ஜாலியானார் கேப்ஸ். கடைசியாக ஷ§கர் அண்ணாச்சி பண்ருட்டியாரும் வாக் அவுட் பண்ண, 'பட் பிரேமா ஹேப்பி அண்ணாச்சி...’ என தொகிறியவர், மகன் சண்முகபாண்டியனை வைத்து 'சகாப்தம்’ ஆரம்பித்து, தமிழகத்துக்கு அடுத்த டைம் பாஸ் ஆரம்பித்தார்!
கருத்து புத்திரன்!
னுஷ்ய புத்திரன்தான் 2013-ன் கருத்து கந்தசாமி! அண்ணன் பல்லு வெளக்கும்போதே கார் ஹார்ன் அடிக்கும். 'பேக்ட்ராப் வெள்ளை... நீங்க ஊதா கலர் டி-ஷர்ட்டோட வந்துருங்க...’ என யார் [You must be registered and logged in to see this image.]போன் அடித்தாலும், போக ஆரம்பித்தார் கவிஞர். ''தலைவா’ பிரச்னைல என்ன சொல்றீங்க...’, 'பூனைக்கண் புவனேஸ்வரி இப்ப என்ன பண்றாங்க?’ என யார் என்ன கேட்டாலும் முக்கால் மணி நேரத்துக்கு மெட்டீரியல் ரெடி பண்ணிப் பொளந்த மனுஷைப் பார்த்து மற்ற எழுத்தாளர்கள் எல்லாம் மிரண்டார்கள். சித்த வைத்தியசாலை சிவராஜ், ஆண்மை டாக்டர் அகமது, ஆசீர்வாதக் கூட்டம் எல்லாவற்றையும் லெஃப்ட்டில் அடித்து, ஃபுல் ஃபார்மிலேயே இருந்தார் புத்திரன்.
ஹிப்-ஹாப் தலையோடு மீடியம் மேக்கப்பில் மனுஷ் தோன்றினாலே, சுட்டி டி.வி-க்கு ஓடினார்கள் மக்கள். ஃபேஸ்புக்கில் பரதேசியாகவும் கங்காணியாகவும் பல ரூபங்கள் எடுத்து மனுஷ் போட்ட ஸ்டேட்டஸ்களுக்கு பின்னிப் பிரித்தது ரெஸ்பான்ஸ். மனுஷின் அசுர வளர்ச்சியைக் கண்டு, சாரு நிவேதிதா மதியமே தியானத்தில் மூழ்க ஆரம்பிக்க, எஸ்.ரா-வும் ஜெயமோகனும் தீவிரமாக நோபல் பரிசுக்கு டிரை பண்ண ஆரம்பித்தார்கள். 'கலைஞர் 90’ நிகழ்ச்சியில் கருணாநிதியைப் பாராட்டிப் பேசியது, ஜாலி பேட்டி கொடுத்தது, ஒருகாலத்தில் தூர்தர்ஷனை ஆன் பண்ணினாலே ராஜீவ் காந்தி முகம் தெரிந்த மாதிரி இப்போது எல்லா சேனல்களிலும் தெரிவது... என இலக்கிய உலகின் பவர் ஸ்டார், இந்தக் கண்ணாடி அங்கிள்தான்!
[You must be registered and logged in to see this image.]'நடப்பதெல்லாம்’ நன்மைக்கே!
'நாட்ல எது நடக்குதோ இல்லையோ... இவர் நடக்கறது மட்டும் நடக்குது...’ என கிரேஸி மோகன் வகையறா வசனம் எழுதுகிற அளவுக்கு இந்த வருஷமும் வாக்கிங்கிலேயே இருந்தார் வைகோ. 'கட்சியைக் கலைச்சிரலாமா... கட்சியைக் கலைச்சிரலாமா...’ எனத் தினமும் 'மல்லை’ சத்யா போன் அடிக்க, 'பொறு தம்பி... பொறு தம்பி’ எனத் துண்டு முறுக்கலிலேயே இருந்தார் தாயகத் தலைவர். ஆளாளுக்கு அனல் அரசியலில் இருக்க, 'கம்பன் கழகத்துக்கு கால் டாக்ஸி சொல்லியாச்சா?’, 'நெடுமாறனை கண்ணதாசன் மெஸ்ஸுக்கு வரச் சொல்லுங்க’ எனத் தனி ரூட்டில் போய்க்கொண்டிருந்தார் வைக்ஸ்.
'இப்பிடியே இருந்தா எப்பிடி?’ எனக் கௌளி கத்த, 'பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்’ என்று நடைப்பயணத்தைக் கிளப்பினார். அங்கே கிடைத்தது குபீர் பப்ளிக்குட்டி. வைகோ நடைப்பயணம் போகிற வழியில் காரில் வந்த ஜெயலலிதா, திடுதிப்பென்று இறங்கி வைகோவை விசாரிக்க, பரபரப்பானது பாலிடிக்ஸ். 11 நாளாக பூரண மதுவிலக்குக் காக நடைப்பயணம் மேற்கொண்ட வைகோவிடம், 'எதுக்காக இந்த நடைப்பயணம்?’ என்று ஜெயலலிதா கேட்க, பொறுப்பாகப் பதில் சொன்னார் வைகோ. முள்ளிவாய்க்கால் முற்றச் சுவர் இடிப்பு, கொளத்தூர் மணி கைது என்று ஈழ ஆதரவாளர்கள் மேல் ஜெ. அரசு எகிறி அடிக்க, வைகோ கொந்தளித்தது... கோபக் காமெடி!
ஹன்சிகாவுக்காக ப்ரே பண்ணுவோம்!  
ரு வெள்ளிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு டி.ஆர். வடமாலை சாத்திக்கொண்டிருந்தபோது, 'சிம்புவுக்கும் ஹன்சிகாவுக்கும் ஆக்ரி பூக்ரி...’ என அதிகாரபூர்வ அரசாணை வெளியானது. 'மேட்டர் கன்ஃபார்மா..?
டீ கேன்சல்...’ என பிஸியானார்கள் சினிமா ரிப்போர்ட்டர்கள். 'ஆமாண்ணே... ஒரு மாரியா இருக்குண்ணே’ என சிம்பு மறுபடி லெக்பீஸ் கடிக்க, சிந்திக்க ஆரம்பித்தான் தமிழன். 'எங்களுக்குள்ள லவ்தான்... ஆனா அஞ்சு வருஷம் கழிச்சுதான் மேரேஜ்...’ என ஹன்சிகா ட்வீட்ட, தீவிர சிந்தனைக்குப் போனான் தமிழன். திகீரென்று காவி, ருத்ராட்சம், தலைப்பாக்கட்டோடு சிம்பு காசிக்கு ஆன்மிக ட்ரிப் அடிக்க, 'அகம் பயம்மாஸ்மி’ என அலறினார்கள் அகோரிகள்.
அஞ்சாவது நாள் சிம்பு-ஹன்சிகா கட்டிப்பிடித்து கொஞ்சுகிற பெர்சனல் போட்டோ இணையத்தில் ரிலீஸாக, 'ப்ரே பண்ணுவோம்... எல்லா சாமியும் நல்லா இருக்க ப்ரே பண்ணுவோம்’ என எகிறியது பல்ஸ். வருஷக் கடைசியில் சிம்புவுக்கு ஜோடி நயன்தாரா என கன்ஃபார்ம் செய்தி வர, 'தூக்கந்தான் பிரச்னை டாக்டர்...’ என ஆஸ்பத்திரிகளில் கும்மியது கூட்டம்!
[You must be registered and logged in to see this image.]
லுல்லுலாயி ஷோ!
'டெசோ’தான் இந்த வருடத்தின் கைப்புள்ள காமெடி! போர் நடக்கும்போதெல்லாம் நாட் ரீச்சபிளில் இருந்தவர்கள், திடுதிப்பென 'டெசோ’ லைனில் வந்தனர். 'அய்யகோ தமிழா...’ எனக் கலைஞர் திடீரென டெசோவைத் தூசு தட்ட, தும்மியபடி பெரியப்பு வீரமணியும் வர, கலகலப்பானது அரசியல். 'ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாட்டில் பொது வேலைநிறுத்தம் செய்யவேண்டும்’ என டெசோ அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியது.
இதையடுத்து, 'எல்லாரும் வள்ளுவர் கோட்டத்துக்கு வந்திருங்க... முற்றுகைப் போராட்டம்...’ என ஜாலியானார் ஸ்டாலின். 'டெசோ’ அறிவித்த பொது வேலை நிறுத்தம் பிசுபிசுத்தது. ''டெசோவா... ஏர்டெல்ல புது பிளான் பேரா..?'' என தமிழன் கேட்க, தி.மு.க-காரர்கள் கூட்டம் கூட்டமாக கல்யாண மண்டபங்களில் கூடிக் கும்மியடித்தார்கள். மாணவர் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறியது... ச்சும்மா லுல்லுலாயி!
[You must be registered and logged in to see this image.]கொம்பன் இறங்கிட்டான்!
'நூறாவதுநாள்’ திகில் படத்தைவிட, திகிலைக் கிளப்பியது ராஜகுமாரன் நடத்திய 'திருமதி தமிழின்’ 100-வது நாள் விழா. மன்சூர்அலிகான், ரித்தீஷ், பவர் ஸ்டார் வரிசையில் 'இந்த வருஷக் கோட்டா நாந்தேன்’ என்று பப்பரக்கா பவுடர் அடித்துவந்தார் ராஜகுமாரன். 'திருமதி தமிழ்’ படத்துக்காக ராஜகுமாரனும் தேவயானியும் கொடுத்த ரொமான்டிக் விளம்பரங்கள் சட்டம்-ஒழுங்கை முற்றிலுமாக நாசமாக்கின. ரத்த வெறி அடங்காத ராஜகுமாரன், கௌபாய் தொப்பி, கோட்டிங் பவுடர், லிப்ஸ்டிக் என எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்தார். ஐஸ் கட்டியில் படுக்கவைத்து, லத்தி சொருகும் வைபவத்துக்குச் சற்றும் குறையாத சித்ரவதையாக அமைந்தது அன்னாரின் அலப்பறைகள்.
'திருமதி தமிழ்’ படம் பார்க்கப்போனவர்கள், 'கொம்பன் எறங்கிட்டான்... கொம்பன் எறங்கிட்டான்’ எனத் தெறித்து ஓடிவந்தார்கள். ரிசல்ட் கேட்டு 'சாவட்டும்... ஜனங்க சாவட்டும்...’ எனக் கொக்கரித்தன ராஜகுமாரனின் நாஜிப் படைகள். 'யாராச்சும் பட்டம் தாங்களேன்’ என கேட்டுப்பார்த்தவர், கடுப்பாகி அவருக்கு அவரே 'சோலார் ஸ்டார்’ பட்டம் கொடுத்துக்கொண்டார். 'பவர் போனாலும் சோலார் இருக்கும்ல’ என்ற இவரது கமென்ட்டுக்கு புழலில் இருந்த பவருக்கே புரையேறியது. 'தேவயானியை வைத்து இயக்க இருக்கும் அடுத்த படம்... 'உலக நாயகி’ என்று இவர் அறிவிக்க, வீடு வீடாக வசூலித்து வெள்ளை வேன் வைக்க ரெடியாகிறது தமிழகம்!
தீவிரவாதி மேட்டரு... ஃபீல் ஆயிட்டாப்ல!
து பப்ளிக்குட்டி காமெடி! தொடர்ந்து இந்துத்துவ அமைப்பின் தலைவர்கள் கொலைகளுக்கு தீவிரவாதிகள்தான் காரணம் என்று காவிக் கட்சிக்காரர்கள் எகிற, அந்த கேப்பில் விளம்பரக் கெடா வெட்டினார்கள் சில அல்லுசில்லுகள். கன்னியாகுமரியில் அனுமன்சேனாவைச் சேர்ந்த [You must be registered and logged in to see this image.]ஒருவரை யாரோ கடத்திவிட்டார்கள் என்று பரபரப்பு கிளம்ப, கடைசியில் அவரே டெம்போ புக் பண்ணி கடத்தல் நாடகம் ஆடியது அவுட்டானது. கோவையில் ராமநாதன் என்கிற பா.ஜ.க-காரர் தன் வீட்டுக்குத் தானே பெட்ரோல் குண்டு வீசிவிட்டு, 'தீவிரவாதி மேட்டரு... ஃபீல் ஆயிட்டாப்ல... குண்டு வீசிட்டாப்ல’ என்று புகார் சொல்ல, 'அந்தத் தீவிரவாதியே நீங்கதான் சார்’ என்று கண்டுபிடித்து ராட்டி தட்டியது போலீஸ். திண்டுக்கல் பி.ஜே.பி-காரர் பிரவீண்குமாரும் சொந்த செலவில், தன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிக் கைதாக, 'அத்வானிகூட மதுரைக்கு வரும்போது அவரே பைப் வெடிகுண்டு பார்சல் வாங்கி வந்திருப்பாரோ?’ என பலரும் சந்தேகிக்கத் தொடங்கினார்கள். ஜாமீனில் வந்த கோவை ராமநாதனை பா.ஜ.க-வைச் சேர்ந்த விஜயகுமாரும் ரமேஷ§ம், 'கட்சிப் பேரைக் காலி பண்ணிட்டியேடா’ என்று கத்தியில் பின்னடிக்க, இப்போது மூவரும் ஜெயிலில் பாத்ரூம் போகிறார்கள். 'அட நான்சென்ஸ்களா...’ என டென்ஷன் பண்ணியது இந்த டெரர் காமெடி!
டைம் டூ ஹைட்!  
[You must be registered and logged in to see this image.]மலுக்கு 'விஸ்வரூபம்’ என்றால் விஜய்க்கு 'தலைவா’! 'டைம் டூ லீட்’ என கேப்ஷன் போட்டு போஸ்டருக்குக் கஞ்சி காய்ச்சியபோதே, ஆரம்பித்தது பஞ்சாயத்து. 'தம்பி... நீதான் அடுத்த சி.எம். ராம்ராஜ்ல பத்து வெள்ளை வேட்டி-சட்டை சொல்லியாச்சு. எல்லாம் சுத்தபத்தமாத்தான இருக்கு..?’ என சாலிகிராமம் வீட்டில் எஸ்.ஏ.சி. சலம்பியதை உளவுத்துறை குறிப்பெடுத்து, வருங்கால பிரதமருக்கு அனுப்ப, 'ஆல்ட்... டெலிட்... கன்ட்ரோல்... ஓவர்...’ என வைப்ரேஷனிலேயே இருந்தன வயர்லெஸ்கள். தியேட்டர்காரர்கள் கேட்டை மூடினார்கள். படம் ரிலீஸ் ஆகவே இல்லை. திருட்டு டி.வி.டி-கள் ரவுண்டு கட்டின. 'உண்ணாவிரதம் இருப்போம் தலைவா...’ என ரசிகர்கள் ஊறுகாய் பாக்கெட் கடித்தனர். 'ரைட்டு... வெஜ் தனி... நான்வெஜ் தனி...’ எனப் படக்குழு மனு போட, அதில் பஜ்ஜி மடித்தார் கமிஷனர். கொடநாட்டில் இருந்த ஜெயலலிதாவைச் சந்திக்க விஜய்யும் எஸ்.ஏ.சி-யும் போனார்கள். 'உள்ளே விடலையாம்...’ என ஸ்கூப்புகள் வர, அமைதி காத்தது விஜய் தரப்பு. ஒருவழியாக கேப்ஷனைக் காவு கொடுத்து 'தலைவா’ வெளிவரும்போது, தமிழ்நாட்டில் பாதிப் பேர் டி.வி.டி. பார்த்திருந்தார்கள். இடையில் 'புரட்சித்தலைவி ஆட்சி... பொற்கால ஆட்சி’ என்று விஜய் கைகட்டிப் பேட்டி தந்தது... துன்பியல் நகைச்சுவை!
[You must be registered and logged in to see this image.]அப்போ கம்பி... இப்போ எம்.பி.!
'போன வருஷம் கம்பி... இந்த வருஷம் எம்.பி.’ என எகிறிய கனிமொழியின் ராஜ்ய சபாக் கூத்துகள், அலேக் அரசியல் காமெடி. திஹாரில் இருந்து திரும்பிய கனிமொழி, 'கொசு கடித்தது... வாழ்க்கை புரிந்தது...’ என உணர்ச்சிப் பேட்டிகளில் பிஸியானார். 'கனியை எம்.பி. ஆக்குங்க...’ என ராஜாத்தியம்மாள் 'அன்பாக’ எடுத்துச் சொல்ல, கியர் தட்டிக் கிளம்பினார் கருணாநிதி. ஐந்து ராஜ்ய சபா சீட்களில் அ.தி.மு.க-வே லம்படிக்க, விஜயகாந்தை வளைக்க கலைஞர் மேப் போட, 'அக்காங்.... நாங்களும் குதிப்போம்ல...’ என கேப்டனும் வேட்பாளரை நிறுத்தினார். 'மாணவர் போராட்டத்தால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகிவிட்டது’ என்ற கலைஞர், 'கனிமொழிக்கோசரம் காங்கிரஸ் ஆதரவு கொடுத்தா... ஓகே...’ எனப் பொறி போட்டார். காங்கிரஸும் ஆதரவு அல்வா நீட்ட, 'தப்பாச்சே...’ என மண்டை காய்ந்தான் தமிழன். தே.மு.தி.க-வின் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் 7 பேரும், 'நெல்லுச்சோறு... கூதலுக்குக் கம்பளி’ என அ.தி.மு.க. பக்கம் கிளம்பிப் போக, அந்த கேப்பில் கனிமொழி எம்.பி. ஆக, கேம் ஓவர்!
அலாப் பலாக் அமைச்சரவை!  
மிழக அமைச்சரவை மாற்றம்தான் இந்த வருடத்திலும் இடியாப்பக் காமெடி! அமாவாசை வந்தாலே அலற ஆரம்பித்தார்கள் அ.தி.மு.க. அமைச்சர்கள். 'யாரும் தூங்கக் கூடாது... பிரம்ம முகூர்த்தத்துலகூட தூங்கக் கூடாது’ என அத்தனை பேரையும் ரவுண்டு கட்டி அடித்தார் மம்மி. 'இப்போது இங்கு வந்திருக்கும் பால்வளத் துறை அமைச்சர் அவர்கள்...’ என அறிவித்துக் கொண்டிருக்கும்போதே 'டிஸ்மிஸ்’ எனத் துண்டு சீட்டு வந்ததில், கிறுகிறுத்தது அமைச்சர்கள் ஏரியா. பள்ளிக் கல்வி அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வைகைச்செல்வன், ஆசிரியர் தினத்தன்று அப்பீட்டு. 'ஓ.பி.எஸ்-க்குத் தண்ணி தெளிக்கப் போறாங்க...’ என வதந்தி கிளம்ப, அக்குளில் பவுடர் அடிக்காமலே இருந்தார் பணிவுப் பன்னீர். ரைட் சைடில் இன்டிகேட்டர் போட்டு, லெஃப்ட்டில் வண்டியை வளைக்கிற ஜெயலலிதா, ஓ.பி.எஸ்-க்குக் கூடுதல் பொறுப்பு கொடுத்ததுதான் ஜாலி ட்விஸ்ட்!
[You must be registered and logged in to see this image.]
ஊதுப்பா... ஃபோர்ஸா ஊது!
சென்ற வருடம் வாங்கிய மெடல்களோடு இந்த வருடம் அமெரிக்காவில் ரெஸ்ட் போடப் போனார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு மதுரை திரும்பியவரை, கோரிப்பாளையம் சிக்னலில் நிறுத்திய ட்ராஃபிக் போலீஸ், 'ஊதுப்பா... ஃபோர்ஸா ஊது...’ என அதட்ட, நிலவரம் புரிந்தது அண்ணனுக்கு. ஊரில் ஒரு ஃப்ளெக்ஸ் இல்லை... பேனர் இல்லை. 'சாம்பவி மகாமுத்ரா க்ளாஸ் போகலாமா..?’ என யோசிக்கும்போதே, 'பொட்டு’ சுரேஷைப் போட்டுத் தள்ளினார்கள். உடனே டிபார்ட்மென்ட் தொப்பி மாட்டிக் கிளம்ப, 'அட்டாக்’ பாண்டி அப்ஸ்கான்ட் ஆனார். 'அடுத்து என்ன நடக்குமோ?’ என்று திகில் திருவிழா கொண்டாடினார்கள் மிச்சமிருக்கும் அழகிரி ஆதரவாளர்கள். இந்த நிலவரக் கலவரமே புரியாமல் துரை தயாநிதி, உதயநிதி, அருள்நிதி சேர்ந்து கொண்டு 'வலைபாயுதே’விலேயே இருக்க, 'நாங்க காட்டுமிராண்டிகதேன்... இந்தக் காட்டுமிராண்டிக் கூட்டத்துக்கு என்ன பண்ணீக..?’ என கடுப்ஸிலேயே இருந்தார் அழக்ஸ். ஸ்டாலின் ஃபீவரில் தி.மு.க-வில் நடந்த பொதுக்குழு, செயற்குழு எதற்கும் போகாமல் அண்ணன் காட்டியது தனி சர்க்கஸ்!
காமெடி காம்ரேட்!
''பொருள் முதல் வாதம் தோன்றியதே போயஸ் கார்டனில் இருந்துதான். மூலதனத்தை எழுதியது சசிகலா. ரஷ்யாவின் தலைநகரம் கொடநாடு...'' என்ற அளவுக்குத் தலைவிரித்தாடிய தா.பாண்டியனின் காமெடிகள்தான் இந்த வருடத்தின் கெக்கிளி பிக்கிளி. அ.தி.மு.க. ஆதரவுடன் ராஜ்ய சபா எம்.பி-யைப் பெற்றுவிடலாம் என்ற கனவில் தகர டப்பா அடித்தபடி கயிற்றில் நடந்த தா.பா-வைப் பார்த்து, தோழர்கள் எல்லாம் கோபத்தில் உண்டியல் உடைத்தார்கள். அந்த அளவுக்கு அறிவிக்கப்படாத அ.தி.மு.க-காரராகவே வலம் வந்தார் தா.பா. 'கூடவே சுத்துறாரே செவ்வாழை... அவருக்குத்தான் சீட்டு கிடைக்கும்’ என்று நினைத்துக்கொண்டிருக்க, தோழர்களோ டி.ராஜாவையே மறுபடியும் வேட்பாளர் ஆக்கினார்கள். ''எங்களது கட்சிக்குள் எந்த மோதலும் நடக்கவில்லை'' என திண்ணையில் தன்னிலை விளக்கம் கொடுத்த தா.பா., கொல்லைக்குப் போய் கதறியது... ஃபுல் மீல்ஸ் காமெடி!
[You must be registered and logged in to see this image.]
பன்ச்சரான பவர்!
போன வருடம் பொலிகாளையாகத் திரிந்த சீனியை, இந்த வருடம் காயடித்தது காவல் துறை. ஒன் ஃபைன் டே தலைவனை போலீஸ் பொடனியில் அடித்து புழலுக்குக் கொண்டுபோக, கொந்தளித்தது தமிழகம். 'நான் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் காமெடியன். என்னை வெளியில விட்டா, ஒரே வருஷத்துல  எல்லாக் கடன்களையும் வட்டியோட திருப்பித் தந்துடுவேன்!’ என ஜெயில் பேட்டிகள் தட்டி அலுமினியத் தட்டு அடிகள் வாங்கினார் பவர். பவர், பயன்படுத்திய காரின் பதிவு எண்ணில் முறைகேடு என விருதுநகர் ஆர்.டி.ஓ. புகார் கொடுக்க, திடுதிப்பென்று வடநாட்டு போலீஸ் வந்து பிடித்துச் செல்ல... பவரின் புகழ் எல்லை தாண்டியது. திகாரிலும் களி தின்றவர், 'சிம்பு, ஆர்யா, சந்தானம்லாம் என் தம்பிங்க...’ எனக் கோணியில் ஆள் பிடித்தார். எல்லோரும் தெறித்து ஓட, பவருக்கு ஃப்யூஸ் போனது. இவ்வளவுக்குப் பிறகும் விக்கும் கலர் சட்டைகளும் மாட்டிக்கொண்டு வந்து, 'ரஜினி போன் பண்ணார்ல...’ என கார் பேட்டி குடுக்குதே... அதான் பவரு!
சங்கத்து ஆள அடிச்சது எவன்டா?
2013-ல் சினிமாவில் எல்லா சங்கங்களுமே அபராதத்தில்தான் ஓடின. கேயார் - எஸ்.ஏ.சி-யின் சங்கச் சடுகுடுகள்தான் டாப் கியர். அணிலின் அப்பா மீது கேயார் குரூப் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து வெற்றி பெற்றாலும், 'எந்திரிக்க மாட்டேனே...’ என ஃபெவிகால் போட்டார் எஸ்.ஏ.சி. கமிஷனர் ஆபீஸுக்குக் கூட்டத்தோடு போய் மனு கொடுத்தார் கேயார். கோர்ட் மேற்பார்வையில் சங்கத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட, இங்கிட்டு தாணு, அங்கிட்டு கேயார் என்று கும்கி - கொம்பன் விளையாட்டு ஆரம்பித்தது. 'விஜய்யின் ஆதரவு பெற்ற அணி’ என்று யாரோ கிளப்பிவிட, 'ஐயையோ எனக்கு எல்லாத் தயாரிப்பாளர்களும் வேண்டும்’ என்று பதறிப்போய் அறிக்கை விட்டார் பன்ச் தளபதி. தேர்தல் அன்று பேப்பரில் 'அம்மா ஆதரவு பெற்ற அணி’ என்று கேயார் அணியைக் குறிப்பிட்டு, சரத்குமார் விளம்பரம் செய்ய... 'சங்கத்து ஆள அடிச்சது எவன்டா....’ என ஆளாளுக்கு சூப்படித்தார்கள். கடைசியில் கேயார் வின்னடிக்க, கோர்ட்டுக்குப் போனது எதிர் அணி!
[You must be registered and logged in to see this image.]
'தாதா’ தாஸ்!
ரசியல் நிலவரம் கிறுகிறுவென சரிய, 'காரெடுங்க சென்ட்ராயன்...’ என கலவரத்துக்கு கால் வெயிட்டிங்கிலேயே இருந்தார் டாக்டர். அரசியலில் கூட்டணிகள் அம்பேல் ஆனதால், மீண்டும் சாதி அரசியலைக் கையில் எடுத்தார் தாஸ். 'வேணாம் மச்சான் வேணாம் இந்த சாதி மறுப்புக் காதலு’ என்று ராமதாஸும் 'காடுவெட்டி’ குருவும் ரணகளப் பாட்டுப் பாடினார்கள். சொந்த சாதியிலேயே செல்வாக்கு இல்லாத லெட்டர்பேடு தலைவர்களைக் கூட்டி, 'அனைத்துச் சமுதாயப் பேரியக்கம்’ ஆரம்பித்தார் அய்யா. 'மதுரைக்கு வராதீங்க...’ என்று சாதிப் பூனைக்கு மணி கட்டினார் மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா. அப்படியே மேட்டர் பரவி, 'மருத்துவரை மறிங்கடா... மருத்துவரை  மறிங்கடா...’ என ஊருக்கு ஊர் குதூகலமானார்கள். ராமநாதபுரம், கடலூர் என்று 'நோ என்ட்ரி' போர்டுகள்தான் ராமதாஸை வரவேற்றன. மாமல்லபுர சித்திரை முழு நிலவு மாநாட்டில், 'இந்தா டைமைத் தாண்டிப் பேசறோம்ல... போட்டுப் பாரு கேஸை’ என்று சவால்விட, 'அதான் சொல்லிட்டார்ல... தூக்கிர வேண்டியதுதான்...’ என ஆள் அனுப்பினார் அம்மா. திருச்சி ஜெயிலில், ''ஃபேன அஞ்சுல வை... மண் பானைல கூழ வை...'' என அந்து அவலானவர், ஒருவழியாகப் பாடுபட்டு ரிலீஸ் ஆனார்!
எங்கேருக்க அஞ்சலி... எங்கேருக்க அஞ்சலி..?
'அஞ்சலியைக் காணும்... அஞ்சலியைக் காணும்...’ என ஒருநாள் மீடியா அலற, போட்ட வேலையைப் போட்டபடி ஓடிவந்தான் தமிழன். திடீரென வீட்டைவிட்டு எஸ்கேப்பான அஞ்சலி, தனது சித்தி பார்வதிதேவி, டைரக்டர் களஞ்சியம் மீது சரமாரியாகப் புகார் கொடுத்தார். 'என்னை சித்ரவதை பண்றாங்கோ... சொத்துக்களைப் பறிக்கிறாங்கோ...’ என
அஞ்சலி விசும்ப, ''அவ பல தடவை ஓடிப்போயிருக்கா...'' என சித்தி வெடிக்க, 'ஓ மை காட்...’ சொன்னது தமிழகம். '’இப்ப நான் தெரியுறனா...'' என தலைக்குக் குளித்துவிட்டு போட்டோவுக்கு ஓடிவந்த களஞ்சியம், ''என்னை அந்தப் புள்ள அவமானப்படுத்திருச்சு... ரகசியங்களை வெளியிடுவேன்'' என ஜாலி பிஸியானார். அஞ்சலி மீது களஞ்சியம் அவதூறு வழக்குத் தொடர, நான்கு நாட்கள் அலப்பறைகளுக்குப் பின் அஞ்சலி ஹைதராபாத் கமிஷனர் ஆபீஸில் ஆஜரானார். ''யார் மீதும் குற்றம் சுமத்த விரும்பவில்லை. மன அழுத்தத்தைக் குறைக்கவே வீட்டைவிட்டு வெளியேறினேன். இனி என் வாழ்க்கையை நானே பார்த்துக்கொள்வேன்!'' என்று பிரச்னைகளுக்கு ஃபுல்ஸ்டாப் வைத்தார்.
[You must be registered and logged in to see this image.]
'தூம்... தூம்... டுஃப் டாக் டுஃப் டாக்’!
டி.ஆர்-தான் 2013-ன் காமெடி ஜட்ஜ். டி.வி. நிகழ்ச்சியில் நீதிபதியாக வந்து இவர் பண்ணிய அலப்பறைகள் எல்லாம் மன்னிக்க முடியாத காமெடிகள். ஷோவில் வரும் உறுப்பினர்களை ஆடவிடாமல், 'டிப்ஸ் கொடுக்கிறேன்’ என்று இவர் போட்ட ஆட்டங்கள்... மன்மோகன் சிங் வரை மன உளைச்சலை ஏற்படுத்தின. 'தூம் தூம்... டுஃப் டாக் டுஃப் டுஃப் டாக்’ எனப் புத்தம்புது வார்த்தைகளை உருவாக்கி, இவர் பேய்த்தனமாக பேன் பார்க்க, அழிகிற மொழிகள் பட்டியலில் தமிழ் சல்லென்று முன்னேறியது. மீனா, சங்கீதா என பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஜட்ஜ்களுக்கு எல்லாம் டெங்கு வருகிற மாதிரி ஆடிப் பாடினார். ல.தி.மு.க. கூட்டங்கள், சிம்பு லவ் மேட்டர், குத்து டான்ஸ், 'ஒருதலைக் காதல்’ ஷூட்டிங்... என எப்போதும் பிஸியாக இருக்கிற டி.ஆர்-க்கு, இந்தப் பட்டியலில் ஆல்டைம் இடம் உண்டு!
ஜிங்குச்சா... ஜிங்குச்சா... பிரதமருக்கு பஹுத் அச்சா!
ரத்குமார்தான் 2013-ன் காமெடி ஜிங்குச்சா! வருடம் முழுக்க அவர் அடித்த அம்மா டைவ்களைப் பார்த்து, அ.தி.மு.க. அமைச்சர்களே டென்ஷனானார்கள். காலையில் தம்புள்ஸ் போடுகிற கேப்பில், 'அம்மா உணவகத்துல பொங்கல்... சான்ஸே இல்லப்பா’ என அறிக்கை விடுகிற அளவுக்குத் தொகிறியது சரத் டார்ச்சர். 'நான் உங்கள் அட்ட்டிம்ம்ம்மை...’ என சரத் ஓட்டிய காக்காக்களைக் கண்டு ஓ.பன்னீர்செல்வமும்
தா.பாண்டியனும் 'இதுக்கும் வந்துட்டாய்ங்களா...’ என ரூம் போட்டு அழுதார்கள். 'வாட்டர் பாட்டில் சூப்பரு... மினி பஸ் அச்சா....’ என இவர் பாட்டுக்கு தேங்காய் பொறுக்கலிலேயே இருக்க, 'நீங்க ஒரு கட்சிக்குத் தலைவருங்க... அக்கவுன்ட்ல எவ்வளவு இருக்கு..?’ என ராதிகாவும் ரசிகர்களும் கடுப்பிலேயே இருந்தார்கள்.
திடீரென செட்டு சேர்த்துக்கொண்டு வந்த விஷால், 'இந்த வருஷம் திருவுழால திண்டுக்கல் ரீட்டாவோட ஆடலும் பாடலும் வைக்கிறீங்க... சங்கத்துக் கணக்கைச் சொல்லுங்க சிவனாண்டி...’ எனக் கலகத்தில் இறங்க, ராதாரவி, 'வாகை’சந்திரசேகர், கிங்காங் என கான்ஃபரன்ஸிலேயே இருந்தார் தலைவர். 'இந்தியாவுக்குப் பிரதமர் ஆக அம்மாவுக்கு மட்டும்தான் தகுதி இருக்கு’ என சொல்லிவிட்டு, 'அப்ப நீங்க..?’ என்ற கேள்விக்குக் கை பிசைந்தது நான்ஸ்டாப் காமெடி.
திருநெல்வேலியில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், ''கட்சிக்கு போட்டி போட்டுக்கொண்டு நிதி கொடுக்க வேண்டும். யார் அதிக நிதி கொடுக்கிறார்களோ, அவர்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பேன்'' என்று அதிரடியாக அறிவிக்க, 'சச்சினுக்கு முன்னாடி இவருக்குத்தான் பாரத் ரத்னா அறிவிச்சிருக்கணும்...’ என ஃபீலானான் தமிழன்!
[You must be registered and logged in to see this image.]
மாங்குயிலே... பூங்குயிலே... சேதி ஒண்ணு சொல்லு!
னகா... இந்த வருடத்தின் ரூமர் ஆன்ட்டி! 'கனகாவுக்கு கேன்சர்...’ என எவனோ நாலாவது லார்ஜில் கிளப்பிவிட, 'உருக்கிரணும்யா...’ என ஃபீலிங் ரிப்போர்ட்டர்கள் ரெக்கார்டரோடு கிளம்பினார்கள். ஆன் தி வேயில் எவனோ எட்டாவது லார்ஜில், 'கனகா இறந்துவிட்டார்’ என அடுத்த ஸ்டேட்டஸ் போட, கேமராக்களோடு கனகா வீட்டை ரவுண்ட் பண்ணியது மீடியா.
ரொம்ப நேரத்துக்குப் பிறகு புசுபுசுவென ஃபுல் ஸ்மைலில் வந்த கனகா, ''நான் நல்லாருக்கேன்... கரகம் இருக்கா... ஒரு டான்ஸ் வேண்ணா போடுறேன்...'' என சிரிக்க, 'இதுவும் நியூஸு...’ என ஜாலியானது ஏரியா. ''நான் பூனைங்க நாய்களோட நிம்மதியா இருக்கேன்... எல்லாம் எங்க அப்பா [You must be registered and logged in to see this image.]செய்ற சதி...'' என கனகா ஓட்டியது செம சீரியல். கொஞ்ச நேரத்தில் அப்பா கேரக்டரும் என்ட்ரி கொடுத்து, ''இல்லைங்க... இவ லூஸு... நான் ரொம்ப லூஸு... அதுலயும் பாத்தீங்கன்னா...'' என எபிசோடை இழுக்க... எகிறியது டி.ஆர்.பி!
மகா குண்டலினீ யோக முனி!
லஹாபாத் கும்பமேளாவில் ஆரம்பித்து 'நித்ய தர்மம்’ நிகழ்ச்சி வரை நித்தியானந்தா நடத்தியதெல்லாம் அட்ராசிட்டி பப்ளிசிட்டி.  கும்பமேளாவில் நித்திக்கு 'மகா மண்டலேஸ்வரர்’ என்ற விருது வழங்கப்பட, ஏற்கெனவே 'குண்டலினீ யோகம்’னு குண்டக்க மண்டக்கப் பறக்கவிட்டவர் ஆச்சே என்று பக்தகோடிகள் பல்லுக்குள் சிரிப்பை அடக்கிக்கொண்டார்கள். ஆனானப்பட்ட அகோரி சாமியார்கள் எல்லாம் சிம்பிள் டென்டில் தங்கியிருக்க, சினிமா செட்டுக்கு இணையாக டென்ட் போட்டு நூறு பேர் புடைசூழ நித்தி வத்து கும்பமேளாவில் கெத்து பொங்கல் வைத்தார். 'நித்ய தர்மம்’ என்ற பெயரில் பஞ்சாயத்துப் பண்ணும் டி.வி. நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். ஏற்கெனவே இவர் மீதே பல பஞ்சாயத்துகள் இருக்க, இவருக்கு எதுக்குய்யா இந்தப் பஞ்சாயத்து என்று ஆதங்கத்தோடு... நாங்க கேட்கலைங்க, நேயர்கள் கேட்கிறாங்க!
[You must be registered and logged in to see this image.]
அம்மம்மா!
வாட்டர் பாட்டிலில் இருந்து மினி பஸ் வரை ஜெயலலிதா 'இரட்டை இல
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

2013 டாப் 25  Empty Re: 2013 டாப் 25

Post by Tamil Tue Dec 31, 2013 1:02 pm

[You must be registered and logged in to see this image.]
அம்மம்மா!
வாட்டர் பாட்டிலில் இருந்து மினி பஸ் வரை ஜெயலலிதா 'இரட்டை இலை’யைப் போட்டுத் தாக்க, ''புதுசா ரெட்ட எல சரக்கு வந்தி ருக்கா..?'' என விசாரித்தார்கள் ட்ரிங்ஸ் தமிழர்கள். அந்த அளவுக்கு எகிறியது இலைக் குடைச்சல். குதிரை றெக்கை, இயற்கைக் காட்சி, பசுமையின் அடையாளம் என்று பாணபத்திர ஓணாண்டிப் புலவர்களே எகிறித் தெறிக்கிற அளவுக்கு பல பொழிப்புரைகளை அம்மா கட்சிக்காரர்கள் கொடுக்க, மன உளைச்சலில் அலைந்தார்கள் மக்கள். 'நியாயமாரே...’ என அலறின எதிர்க்கட்சிகள். அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா பேருந்து, அம்மா காய்கறிக் கடை... அம்மம்மா... அநியாயம்மா!
டூத்பேஸ்ட்ல இருக்குற உப்பு சத்தியமா..!
மிழகத்தைத் திரும்பிப் பார்க்கவைத்த காமெடி கதகளி தாராபுரத்தைச் சேர்ந்த கடலை வியாபாரி ராமலிங்கம்தான். இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அமெரிக்கக் கருவூலத் துறையின் கடன் பத்திரத்தின் மதிப்பு மட்டுமே 27,500 கோடி. 'என்ன சார் நடக்குது இங்க?’ என்ற கிறுகிறுப்பில் கிடுக்கிப்பிடி விசாரணையை ஆரம்பித்தது வருமான வரித் துறை. ராமலிங்கமோ கொஞ்சமும் கவலைப்படாமல் கூல் ஸ்டேட்மென்ட்களை அள்ளிவிட்டார். ராமநாதபுரத்தில் பெட்ரோல் நிறுவனம் தொடங்கப்போவதாக ராமலிங்கம் சொல்ல, 'அடங்கொன்னியா...’ என்று ஆடிப்போனார்கள் அம்பானி, டாடா வகையறாக்கள். 'கண்டிப்பா இது போலிப் பத்திரம்தான்’ என்று பலர் சொல்ல, 'என் டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கு’ என்று அடித்து சத்தியம் செய்தார் ரணகள ராமலிங்கம். க்ளைமேக்ஸில் அத்தனையும்  டுபாக்கூர் பத்திரங்கள் என்றது அமெரிக்க வங்கி. டாக்ஸ் போடும் வருமான வரித் துறையே டயர்டு ஆகிப்போனது!
[You must be registered and logged in to see this image.]
கட்டுமரத்தை மூழ்கடிப்போம்ல..!
மாணவர்கள் போராட்டம் காரணமாக காங்கிரஸ் கூட்டணியைவிட்டு வெளியே வந்த கருணாநிதி, கனிமொழியை ராஜ்ய சபா தேர்தலில் ஜெயிக்கவைக்க  மறுபடியும் ஒரு 'உள்ளே வெளியே’ வெளாட்டு காட்டியது இந்த வருட சாதனை! ஆனால், இந்த வெளாட்டு காங்கிரஸோடு நிற்கவில்லை. ஏற்காடு இடைத்தேர்தலில், 'உங்கள் ஓட்டு எங்கள் கட்சி வேட்பாளருக்கே...’ என்று லெட்டர் எழுதி அத்தனை கட்சி அட்ரஸுக்கும் தட்டிவிட்டார். டெக்னாலஜி கில்லி ஆக வேண்டும் என்று ட்விட்டர், ஃபேஸ்புக் கடலில் தன் கட்டுமரத்தை மிதக்கவிட்டார். ஆனால், கழுவிக் கழுவி ஊத்திய கமென்ட்களால்  கட்டுமரமே மூழ்கியது. ஆனாலும் சளைக்காமல், 'கல்லக்குடி தண்டவாளத்திலேயே தலை வெச்சவன்டா நான்’ என மீண்டும் வந்து ஃபேஸ்புக் கணக்கில் 'நானே கேள்வி... நானே பதில்’களைத் தூவிக்கொண்டிருக்கிறார். 'விஜயகாந்த் மீது ஆளுங்கட்சி இத்தனை வழக்குகள் பாய்வதைப் பார்த்தால் கண்ணு வேர்க்குது’ என்று கறுப்பு எம்.ஜி.ஆருக்கு வெள்ளைக்கொடி ஆட்டினாலும், அவர் கண்டுகொள்ளவில்லை.
கடைசியாகக் கூடிய பொதுக்குழுவில் காங்கிரஸ் கூட்டணிக்கு குட்பை சொன்னவர், 'காவிக் கட்சியோடும் கை குலுக்கப்போவதில்லை. தனியாக நிற்போம்’ என்றார். ஆனால், மறுநாளே தாமரைப் பாச வார்த்தைகளை வீசுகிறார். 'அம்பது வருசமா இவர் கேரக்டரைப் புரிஞ்சுக்கவே முடியலையே’ என்று சேனல் மாற்றினான் தமிழன்!  
[You must be registered and logged in to see this image.]இனிய இயக்குநர்களுக்கு இனிமா!
சீனியர் டைரக்டர்களுக்கு இது சிக்கல் வருடம்! புதிய புதிய தளங்களுக்கு தமிழ் சினிமாவைத் தூக்கிப் போக, பல இளைஞர்கள் வந்துகொண்டிருக்க, சீனியர்கள் பண்ணியதெல்லாம்... டார்ச்சர் காமெடி. 'கடலை’ கொடுத்துக் குடலை உருவிய மணிரத்னம்தான் கணக்கை ஆரம்பித்துவைத்தது. 'சாத்தான்... பெர்கிஸ்...’ என்றெல்லாம் படத்தில் ஏதேதோ பேச, 'போகாதீங்க... போகாதீங்க...’ என மொபைலில் இருந்து முகப்புத்தகம் வரை சூனியம் வைத்தார்கள்.
பாராதிராஜாவின் 'அன்னக்கொடி’யில் சடையன் போட்ட கணக்கு ரத்தக்காவு வாங்கியது. செல்வராகவனின் 'இரண்டாம் உலகம்’ போனவர்கள் 'கண்ணி வெடியில கால் வெச்சுட்டமே...’ என உசுருக்குப் பயந்து ஓடிவந்தார்கள். காமெடி கிங் ராஜேஷின் 'ஆல் இன் ஆல் அழகு ராஜா’ ரிலீஸான அன்று அத்தனை ஆம்புலன்ஸ்களும் பிஸியாக இருந்தன. காப்பியடித்தாலும் கச்சிதமாக அடிக்கிற விஜய், 'தலைவா’வில் 'நாயகன்’, 'புதிய பறவை’யையெல்லாம் காப்பியடித்து பித்தக் கஷாயம் தேடவைத்தார். 'தொப்புளைக் காட்டிட்டாய்ங்க...’ என நஸ்ரியா கொந்தளித்ததில் சற்குணத்தின் 'நய்யாண்டி’க்கு பப்ளிஸிட்டி எகிறியது. ஆனால், படம் ரிலீஸான அன்றே, மிஷ்கின் பட ரோடு மாதிரி வெறிச்சோடிக் கிடந்தன தியேட்டர்கள். 'ஒரத்தநாட்லயுமா படம் ஓடலே?’ என சற்குணம் கேட்க, 'மும்பைல மூணு ஷோ ஃபுல்லாம்...’ என தனுஷ் சொல்ல... மொக்கை காமெடியானது 'நய்யாண்டி’. ஆர்.கண்ணன் 'சேட்டை’ படத்தில் ரசிகர்களை ரத்த வேட்டை ஆட... இவர்களை எல்லாம்  'அப்டேட் ஆகுங்க பாஸ்’ என்று சொல்லாமல் சொல்லியது 2013!
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum