TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நவீன விவசாயத்தில் ரெயின்கன் நீர் பாசனம். பாகம் - 2

Go down

நவீன விவசாயத்தில் ரெயின்கன் நீர் பாசனம். பாகம் - 2 Empty நவீன விவசாயத்தில் ரெயின்கன் நீர் பாசனம். பாகம் - 2

Post by மாலதி Thu Sep 19, 2013 1:18 pm

சென்ற முதல் பதிவில் தெளிப்பு நீர் அமைப்பை பற்றி குறிப்பிட்டிருந்தேன், மரபுவழி வாய்க்கால் பாசனத்திற்கும் இதற்கும் என்ன வேறுபாடு மற்றும் நன்மைகள் பற்றி விரிவாக பார்போம்.


நவீன விவசாயத்தில் ரெயின்கன் நீர் பாசனம். பாகம் - 2 First+image+second+blog+copy
ரெயின்கன் உபயோகிப்பதால் என்ன நன்மை ?

அவை :





  1. [b]நீரானது மேலிருந்து பயிரின் குருத்தின் மீது விழுவதால் பயிர் வளர்வதற்கேற்ற தட்வெப்ப நிலை கிடைக்கிறது. இதனால் பயிரின் வளர்ச்சி சீராக இருப்பதுடன் முதல் தர விளைபொருளும் மார்க்கெட்டில் நல்ல விலையும் கிடைக்கிறது.[/b]



  2. அடிக்கடி மழைபோல் விழுவதால் பூச்சிகளின் இனப்பெருக்கம் தடைபட்டு மிகச்சிறந்த பூச்சி நோய் கட்டுப்பாடு இயற்கையிலேயே நமக்கு கிடைக்கிறது.   

  3. பயிர் இலையின்மேல் நீர் தெளிக்கப்படும் போது இலை சுத்தமாவதால் ஒளிச்சேர்க்கை முழுவதும் நடந்து அதிகபட்ச ஸ்டர்ச் தயாரிக்க ஏதுவாகிறது.

  4. இதன் மூலம் இலைவழி உரம் தெளிக்க முடியும் என்பதால் நேரடியாக தாவரத்திற்கு உரம் மற்றும் நுண் ஊட்ட சத்துக்கள் இலை வழியாக எளிதில் கிடைத்து சீரான வளர்ச்சிக்கு உத்திரவாதமாகிறது.

  5. வெப்ப காலங்களில் ரெயின்கன் உபயோகிப்பதால் நீர் திவளைகள் ஆவியாகி வெப்ப நிலை குறைந்து பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படுவதில்லை மற்றும் தேவையற்ற நீராவிப் போக்கை கட்டுப்படுத்தி பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.



  6. பனிக்காலங்களில் பயிரின் நுனி கருகும் பிரச்சினையை சமாளிக்க வெங்காயம். மல்லி. தக்காளி போன்ற பயிர்களில் மிகச் சிறந்த அமைப்பாக தெளிப்பு நீரை பயன்படுத்தலாம்.



  7. மிக முக்கியமாக மூன்று மடங்கு நீர் மிச்சமாகிறது, ஒரு ஏக்கர் நீர்ப்பாசனம் செய்ய மண்ணின் தன்மையை பொருத்து வாய்க்கால் பாசனத்தில் சுமார் 1,25,000- லிட்டரும் தெளிப்பு நீர் பாசனத்தில் 42,000 லிட்டர் நீரும் செலவாகிறது.


  8. சமனில்லாத சரிவு பூமிகளிலும் மலை பகுதிகளிலும் நீர்ப்பாசனம் செய்ய மிகச் சிறந்த அமைப்பு. 


  9. மிக முக்கியமாக வாய்க்கால். பாத்தி கட்டுவது. நீர் பாய்ச்சும் ஆள் செலவு எதுவுமே இல்லாததால் விவசாயம் செய்வது மிகவும் எளிமையாகிறது, ஆட்கள் கிடைக்காத இந்த நேரத்தில் இதன் தேவை மிக அதிகம். 




தெளிப்பு நீர் அமைப்புகள்

 
அடிப்படையில் தெளிப்பு நீர் அமைப்பு, தெளிக்கும் பரப்பளவு மற்றும் இயங்கும் தன்மையை வைத்து மூன்று வகையாக பிரிக்கலாம்.



  1. ரெயின்கன் (செயற்கை மழைத்தூவி) (RainGun)
  2. ஸ்ப்ரிங்க்ளர் (சிறிய தெளிப்பான்) (Sprinkler)
  3. [b]மைக்ரோ இரிகேடர். (நுண் நீர் தெளிப்பான்கள்) (Micro Irrigator)[/b]



1. ரெயின்கன் (செயற்கை மழைத்தூவி) (RainGun)

            தற்போதைய சூழ்நிலையில் மிகவும் பிரபலமடைந்து வரும் நீர்பாசன அமைப்பு ரெயின்கன் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. சிறந்த இயக்கு திறன் சீரான நனைப்பு (Uniform Wetting ) எளிமையாக கையாளும் நடைமுறை மற்றும் நீண்ட கால உழைப்பில் (50 வருடம் வரை) இதற்கு நிகரானது எதுவும் இல்லை, சிறியதும் பெரியதுமாக எத்தனையோ மாடல்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டும். இறக்குமதி செய்யப்பட்டுமிருந்தாலும் சிறிய மாடல் ரெயின்கன்களே (60 அடி முதல் 120 அடி ஆரம் வரை பரப்பை நனைப்பவை) மிகவும் பொருத்தமானவை ஏனென்றரால் இந்திய நிலங்கள் சிறு சிறு துண்டான ஒழுங்கற்ற வடிவத்துடன் இருப்பதே.   

                  


ரெயின்கன் மாடல்கள் : (Raingun Models)

பொதுவாக இவற்றை இரண்டு வகையாக பிரிக்கலாம்:

1. இந்திய தயாரிப்புகள் :  ([b]Indian Makes)[/b]
நவீன விவசாயத்தில் ரெயின்கன் நீர் பாசனம். பாகம் - 2 Penguin
[color][font] கடந்த 12 ஆண்டுகளாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டட்ட பல்வேறு மாடல் ரெயின்கன்கள் வெளியிடப்பட்டு இருந்தாலும் அவற்றில் மிக சிலவே இந்திய சூழ்நிலைக்கு பொருத்தமானதாக உள்ளன, அவற்றில் மிக முக்கியமானவை ”ஹாரித்” பிராண்டில் வெளிவந்துள்ள பென்குயின் (1½”) பெலிகன் (1¼”), ஜெயின் கம்பெனியின் வெளியிட்ட 1” 1¼” மற்றும் 2” விட்ட (Comet) உள்ளீடு உள்ள ரெயின்கன்கள் வழக்கத்தில்உள்ளன, இதை தவிர பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டரெயின்கன்கள் பல காரணங்களால் வந்த வேகத்தில் விற்பனையை நிறுத்திக்கொண்டனர். இவற்றின் சிறப்பு. விலை குறைவு என்பதோடு குறைந்த குதிரை சக்தி மோட்டாரே போதுமானது என்பதே.

நவீன விவசாயத்தில் ரெயின்கன் நீர் பாசனம். பாகம் - 2 Pelicansmall[/font][/color]



2. அயல்நாட்டு ரெயின்கன்கள் ([b]Imported Rain Guns)[/b]

நவீன விவசாயத்தில் ரெயின்கன் நீர் பாசனம். பாகம் - 2 Marinerfto
அயல்நாட்டு தயாரிப்பில் மிகமுக்கியமானவை இத்தாலி நாட்டு “Sime” கம்பெனி தயாரிப்புகளானான ஆம்போ (1¼”). ஸ்கிப்பர் (1½” ). ட்யூப்லெக்ஸ் (2"). மெரினர் (2½”). போன்ற மாடல்கள், இவை 7 HP முதல் 40 HP வரை பல்வேறு சூழ்நிலைகளில் திறம்பட செயல் ஆற்ற கூடியவை, இவற்றில் முக்கிய சிறப்பு  கியர் அமைப்பு (Gear Driver) ஜெட் பிரேக்கர் (Jet breaker) மற்றும் சதுர வடிவ தெளிப்பு (Square irrigation) அமைப்புடன் கிடைப்பதே. இவை இயங்க கண்டிப்பாக 3 முதல் 5 Kg/cm2 அழுத்தம் தேவை.

அடுத்ததாக கனடா நாட்டு தயாரிப்பான நெல்சன் கம்பெனியின் (SR Series) ரெயின்கன்கள் (SR – 75, SR – 100, SR - 200)  இவை உருவில் பெரியதும் இயங்குவதற்கு 15 முதல் 40 HP வரை தேவைப்படுவதால் வெகு சில இடங்களில் மட்டுமே அமைக்கப்படுகிறது. இவை ஒரே இடத்தில் 1½ முதல் 2 ஏக்கர் வரை ஒரே சீராக தெளிக்க கூடியவை இவற்றில் விலை இந்திய சூழ்நிலையில் மிக அதிகம் என்பதோடு அதிக குதிரை திறன் உள்ள மோட்டார் தேவை என்பதும் பாதகமான அம்சங்கள், இருந்தாலும் இயக்கும் திறனில் (Performance) தற்போதைக்கு (2013) இந்திய தயாரிப்புகளைவிட மேம்பட்டவையே என்பதை மறுக்க முடியாது. கூடிய விரைவில் இந்த நிலையை மாற்றி இந்திய தயாரிப்புகள் உலகெங்கும் இயங்கும் நிலையை உருவாக்குவோம்.

நவீன விவசாயத்தில் ரெயின்கன் நீர் பாசனம். பாகம் - 2 Skipper

தெளிப்பு நீர் அமைப்பவர்கள் தெரிந்து கொள்ள
வேண்டிய விஷயங்கள் :-
அழுத்தம் : (Pressure)
ரெயின்கன் அமைக்க விரும்பும் விவசாயிகள் முதன் முதலில் நினைவில் கொள்ள வேண்டியது அவை இயங்க அதிக அழுத்தம் (Pressure) தேவை என்பதே. நீர்ம இயக்கவியலில்(liquid Dynamics) திரவ அழுத்தத்தை Kg/cm2, PSI, Bar என்ற அழுத்த அலகுகளை கொண்டு அளக்கிறோம். அதாவது

1 Kg/cm2 என்பது ஒரு கிலோ கிராம் எடையை ஒரு சதுர சென்டி மீட்டர் பரப்பின் மீது வைத்தால் எவ்வளவு அழுத்தம் அந்த பரப்பின் மீது ஏற்படும் என்பதை குறிக்கிறது.

முக்கியமாக இதை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.


நவீன விவசாயத்தில் ரெயின்கன் நீர் பாசனம். பாகம் - 2 1kgpercm+copy
அதன் மற்றஅலகுகள் கீழ்கண்டவாறு ஒப்பிடப்படுகிறது.

                                 1kg/cm2 = 14.45 PSI
                                 1kg/cm2 = 0.969 Bar

        இதில் 1kg/cm2 அழுத்தம் என்பது  மோட்டார் 32 அடி உயரம் வரை செங்குத்தாக  நீரை தள்ளும் திறனை குறிக்கிறது. ரெயின்கன் சிறப்பாக இயங்க 3kg/cm2 அழுத்தம் அது இருக்கும் இடத்தில் தேவை.  இதை வைத்து நீங்களே உங்களுடைய மோட்டாரின் பிரஷரை பொறுத்து, உங்கள் மோட்டார் அழுத்தம் ரெயின்கன் இயங்குவதற்கு   போதுமா என்பதை நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள்.



மோட்டார் : (Pump set)

               ரெயின்கன் அமைப்பு சிறந்த முறையில் இயங்க நீர்ம அழுத்தம் 3 முதல் 4 Kg/cm2 ரெயின்கன் இருக்கும் இடத்தில் தேவை என்று பார்த்தோம், தற்போது நடைமுறையில் உள்ள எந்த பம்புசெட்டும் இவ்வளவு அழுத்தத்தை பெரும்பாலும் கொடுப்பதில்லை. எனவே அந்த பம்பு செட்டை மாற்றி தேவையான அழுத்தத்தை கொடுக்கும் பம்புசெட்டை ஒவ்வொரு இடத்திற்கு தகுந்த வகையில் பிரத்யேகமாக வடிவமைத்து தயாரித்து பொருத்தவேண்டும். தெளிப்பு நீர் அமைப்பின் வெற்றியில் உயர் அழுத்த பம்பு செட்டின் பங்கே மிக முக்கியமானது. இதற்காக 1.5 HP முதல் 40 HP வரை சுமார் 120 மாடல்களில் தனிப்பட்ட உபயோகத்திற்காக மோட்டார் வடிவமைக்கபடுகிறது. பொதுவாக இதை பற்றிய அடிப்படை அறிவில் பெரும்பாலான விவசாயிகள் பின்தங்கியே உள்ளனர். நிறைய விவசாயிகள் தன்னிடம் நீர்மூழ்கி பம்புசெட் உள்ளதால் உறுதியாக ரெயின்கன் ஓடிவிடும் என்கின்றனர்.இன்னும் சிலரோ தன்னிடம் இருந்த சாதாரண மோட்டரை ரெயின்கண் அமைப்பதற்காகவே நீர்மூழ்கி மோட்டாராக மாற்றியுள்ளேன் என்கிறார்கள்.ஆனால் அது  தவறு என்று அவர்களுக்கே தெரிவதில்லை. வெளியில் இயங்கும் மோனோபிளாக் (Openwell Mono block) ஆனாலும் நீரினுள் ஓடும் நீர்மூழ்கி் பம்புசெட் (Submersible Pump set) ஆயினும் அடிப்படை வேலையில் இரண்டுமே ஒன்றுதான். இதில் அழுத்தத்தை தீர்மானிப்பது அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பம்ப் (Pump) ஆகும். எனவே ஒவ்வொரு இடத்திற்கு தேவையான சரியான அழுத்தத்தையும் (Pressure) கூடுமானவரை அதிக நீரினை வெளியேற்றும் (Max Discharge) திறனுடைய பம்புசெட்டை வடிவமைத்து பொருத்தவேண்டும். மோட்டார் வடிவமைப்பில் முக்கியமாக கவனிக்கவேண்டியது கிடைக்கும் குதிரைசக்தி (HP), கிணற்றின் ஆழம் (Depth), ரெயின்கன் மாடல் (Range of Raingun Model), பைப்லைன் அமைப்பு (Pipe line) முதலியவை. இவற்றை சரியாக கணித்து தகுதியான மோட்டாரை தேர்வு செய்யவேண்டும், இதில் சிறு தவறு நடந்தாலும் அது ரெயின்கன் இயக்கு திறனை (Efficiency) பாதிக்கும்.


பைப் லைன் : (Pipe line)

அடுத்தது உருவாக்கிய நீர்ம அழுத்தத்தை இழப்பில்லாமல் எடுத்துச் செல்வது.

               நீர் இருக்கும் இடத்திலிருந்து ரெயின்கன் இயங்க வேண்டிய இடம் வரை அமைக்கப்படும் குழாயின் விட்டம் (Pipe diameter), எடுத்துச் செல்லவேண்டிய மொத்த நீரின் அளவு (Discharge/min), மோட்டரின் அழுத்தம் (Kg/cm2) மற்றும் நிலத்தின் சாய்வு உயரம் (Elevation) முதலியவற்றை பொருத்தே தீர்மானிக்க வேண்டும். இதில் மோட்டரின் குதிரைதிறன் (HP) கணக்கில் வராது, ஏனென்றரல் 5 HP யில் சில மாடல் மோட்டார்கள் 450 லிட்டர் / நிமிடம் வரையும், 10 HP யில் சில மாடல் மோட்டார்கள் 450 லிட்டர் / நிமிடம் உள்ளதையும் பொருத்த வேண்டி வரும். எனவே HP யை பொருத்து குழாயின் விட்டத்தை (Pipe Dia) தீர்மானிக்க வேண்டியதில்லை.


வால்வுகள் :(VALVES)


ரெயின்கன் அமைப்பை நிறுவும் போது கீழ்க்கண்ட வால்வுகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.


1. ஏர் வால்வுகள் : (Air Releaser Valves)

நவீன விவசாயத்தில் ரெயின்கன் நீர் பாசனம். பாகம் - 2 Airvalve+copy

                பைப் லைனில் ஏற்படும் வாட்டர் ஹேமரிங் (Water hammering) என்று சொல்லக்கூடிய பெரிய திடீர் அழுத்த அடி அதனுள் அடைபட்டுள்ள காற்றினாலேயே ஏற்படுகிறது. இது பைப்லைனை உடைப்பதோடு நீரையும் வீணாக்கி விடுகிறது, எனவே பைப்லைனில் காற்று வெளியேற்றும் ஏர் வால்வுகள் அமைப்பது மிக முக்கியமானது, பைப்லைனில் செல்லும் மொத்த நீரின் அளவை (LPM) பொருத்து 1” இஞ்ச் முதல் 3 இஞ்ச வரை விட்டமுள்ள பல்வேறு ஏர்வால்வுகள் பயன்படுத்தப்படுகிறது.  தற்போது திட டெப்லான் (Solid Teflon)பந்துடன் உயர் தரமான ஏர் வால்வுகள் வெளிவந்துள்ளது. சரியான இடத்தை தேர்வு செய்து ஏர் வால்வுகள் கண்டிப்பாக பொருத்தப்பட வேண்டும்.





2. ஒருவழி வால்வுகள் : (Non Return Valves) (NRV)


நவீன விவசாயத்தில் ரெயின்கன் நீர் பாசனம். பாகம் - 2 Nrv+copy
 சற்றுஉயரமான நீண்டதூரங்களுக்குக்கு பைப் லைன் அமைத்து நீரினை  கொண்டுசெல்லும்போது போது ஓடிக்கொண்டிருக்கும் மோட்டார் நின்றுவிடும் பட்சத்தில் முன்னே சென்ற நீர் உயர் அழுத்தத்துடன் கிணற்றுக்குள் அல்லது போர் வெல்லினுள் திரும்பிவந்து (Return water) மோட்டார் ரிவேர்சில் இரண்டு மடங்கு வேகத்தில் ஓடும் நிலை ஏற்படும், இதனால் திரஸ்ட் பேரிங்
(Thrustbearing)பழுதடைவதுடன், ஆட்டோமேட்டிக் ஸ்டார்ட்டர் பொருத்தப்பட்ட மோட்டாராக இருந்தால் மோட்டார் ரிவர்சில் ஓடும்போது ஸ்டார்ட்ஆகும் சூழ்நிலையில் மோட்டார் ஓவர்லோடு ஆவதால் பியுஸ் பழுதாவதுடன் மோட்டார் காயிலையும் பாதித்துவிடும். இந்த பிரச்சினைகளை தடுத்து மோட்டாரை பாதுகாக்கவே ஒருவழி வால்வுகள் (NRV) முக்கியமாக தேவைப்படுகிறது. இது முன்னே சென்ற நீரை திரும்ப பின்னோக்கி விடுவதில்லை. எனவே கிணற்றின்மேல் கண்டிப்பாக ஒருவழி வால்வு அமைக்கப்படவேண்டும்.



பிரசர் ரிலீப் வால்வு :(PRESSURE RELIEF VALVES)


நவீன விவசாயத்தில் ரெயின்கன் நீர் பாசனம். பாகம் - 2 Pressurerelefvalve+copy

            ரெயின்கன் அமைப்பானது 3 முதல் 5 Kg/cm2 அழுத்தத்தில் ஓடும் அமைப்பாதலால் நீர் செல்லும் குழாயில் அதிக அழுத்தம் இருக்கும். திறந்து ஓடிக்கொண்டிருக்கும் வால்வு தவறுதலாக அடைக்கப்பட்டாலோ, ஏதோ ஒரு காரணத்தினால் அழுத்தம் திடீரென அதிகமானாலோ குழாய் வெடித்து விடும் அபாயம் உள்ளது. எனவே இதனை தவிர்க்கும் பொருட்டு தரமான பிரசர் ரிலீப் வால்வு பொருத்தப்பட வேண்டும். அழுத்தம் திடீரென அதிகமாகும் போது வால்வு தானே திறந்து நீரை வெளியேற்றி அழுத்தத்தை குறைத்து குழாய் உடையாமல் பாதுகாப்பதோடு அழுத்தம் குறையும்போது தானே  மூடியும் கொள்ளும். இதில் 1Kg/cm2 முதல் 8 Kg/cm2 வரை தேவையான அழுத்தத்தை நாமே தீர்மானித்து செட்டிங் செய்து கொள்ள முடியும்.




ரெயின்கன்களை எப்படி அமைப்பது ?

இதை இரண்டு முறைகளில் அமைக்கலாம்

அவை :


1. தற்காலிக அமைப்பு. (Temporary System)

2. நிரந்தர அமைப்பு.( Permanent System )


அவற்றை பற்றி விரிவாகாக காண்போம்.

1) தற்காலிக அமைப்பு : [b](Temporary System)[/b]
முதல் விசயம் இது செலவு குறைவானது, அதாவது ஒன்று அல்லது இரண்டு மெயின் பைப் லைன் அமைத்து ஒவ்வொரு 100 அடிக்கும் ஒரு டெலிவரி வால்வு அமைக்கப்படும், அதிலிருந்து பிரிதுகொள்ளும் அமைப்புடன் HDPE பைப்லைனை கழற்றி வேறு இடத்திற்கு எடுத்துச் சென்று திரும்பவும் ஸ்டேண்டை பொருத்தி அதன்மேல் ரெயின்கன் இணைத்து இயக்கப்படுகிறது, இதை இயக்க இரண்டு வேலையாள்; தேவைப்படும் என்பதோடு. கரும்பு. மக்காச்சோளம். மரவள்ளி. வாழை போன்ற பயிர்களில் ஸ்டேண்டை எடுத்துச் செல்வது சிரமமான காரியம் எனவே இது முக்கியமாக குத்தகை பூமியில் அமைக்க சிறந்த அமைப்பாகும், வேலை முடிந்த உடன் பிரித்து எடுத்து சென்று விடலாம்.




2) நிரந்தர அமைப்பு : (Permanent System)





நவீன விவசாயத்தில் ரெயின்கன் நீர் பாசனம். பாகம் - 2 Permanent+raingun+copy      இதுதான் தற்போது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையில் ஒத்துவரக்கூடியதும், நீண்டகாலம் (50 வருடம் வரை) தொடர்ந்து எந்த பிரச்சினையும் இன்றி இயங்க கூடிய மிகச்சிறந்த அமைப்பு இதற்கு ஒரே ஆள் போதுமானது. இதில் எந்த நிலத்தில் ரெயின்கன் அமைக்கவேண்டுமோ முதலில் அந்த நிலத்தை அளந்து எங்கெங்கு ரெயின்கன் பில்லர் (Piller) அமைக்க வேண்டும். என்பதை வடிவமைத்து அங்கெல்லாம் பைப்லைன் அமைத்து தகுந்த வால்வு பொருத்தப்படுகிறது, ரெயின்கன்னை எளிதில் கழற்றி  மாற்றுவதற்கு “குயிக் கப்ளிங்” (Quick Couplings)  எனப்படும் அமைப்பு பொருத்தப்படுகிறது, எந்த ரெயின்கன் ஓட வேண்டுமோ அந்த வால்வை மட்டும் திறந்துவிட்டு மற்றதை அடைத்து விட்டால் திறந்துள்ள ரெயின்கன் மட்டும் இயங்குகிறது, ஒவ்வொரு   பில்லரிலும்  ஒரு வால்வு இருப்பதால் தேவையான வால்வை மாற்றி மாற்றி திறந்து கொள்ள முடியும், இதுவே நிரந்தர அமைப்பு இதில் ரெயின்கன்னை மட்டும் மாற்றினால் போதுமானது, மற்றவை நிரந்தரமான அமைப்பாக நிலத்தில் அமைக்கப்பட்டிருக்கும், இதனால் உழவு செய்வதற்கு எந்த இடையூறும் இல்லை.



           இதில் எல்லோருக்கும் ஒரு சந்தேகம் மூலை   பகுதிகள் மற்றும் ஒழுங்கற்ற வடிவுடன் இருக்கும் நிலத்தில் ஒரே சீராக எவ்வாறு நனைப்பது என்பது இது மிகவும் எளிது இதற்கு  மூன்று வழிகள் உள்ளன.


                 முதலாவது வழி. ரெயின்கன் உபகரனத்தில் அரைவட்ட பாசன அமைப்பு வசதி உள்ளது, அதை செட்டிங் செய்து 180 டிகிரி ஒரு பக்கம் மட்டுமே தெளிக்கும்படி செட்டிங் செய்து எல்லை கோட்டில் பில்லர் அமைத்து விட்டால் போதும், உள்பகுதி மட்டும் நனைந்து விடும் பின்பகுதிக்கு நீர்  தெளிக்காது .

       இரண்டாவது ஒரு பக்கம் மட்டும் நீர் தெளிக்கும் சிறிய  ஸ்ரிங்க்ளர்  அமைப்பை எல்லைக் கோட்டில் அமைத்து விட்டால் ஒரங்கள் நன்றாக நனைவதுடன் காற்றினால் நனைவது பாதிப்படைவதில்லை, இதை நிரந்தரமாக அமைத்து விட்டு வால்வை மட்டும் திறந்து இயக்கி கொள்ளலாம்.





              மூன்றாவதாக பெரிய இறக்குமதி செய்யப்படும் ரெயின்கன்களில் சதுர வடிவ நீர் தெளிக்கும் அமைப்பு (Square irrigation settings) இனைந்து வருவதால் அதன் மூலம் நாம் சதுர செவ்வக வடிவ பூமியை செட்டிங் செய்தும் நனைத்துக் கொள்ளலாம். இதில் ஒரு சிக்கல் என்னவென்றால்  பெரிய  அதாவது, ஒரே இடத்தில் வைத்து ஒரு ஏக்கருக்கு மேல் தெளிக்கும் ரெயின்கன்னில் மட்டுமே இது நடைமுறை சாத்தியம் அதை இயக்க குறைந்தது 15 HP முதல் 40 HP வரை தேவை எனவே இது இந்திய சூழ்நிலைக்கு பொருத்தமில்லாதது.


இதுபோல் இன்னும் எத்தனையோ விசயங்கள் ரெயின்கன் அமைக்கப்படும் போது தெரிந்து இருக்க  வேண்டும். இது சம்பந்தமாக எந்த சந்தேகம் இருந்தாலும் இந்த பதிவில் தங்களின் கேள்விகளை எழுதலாம்.

இதுவரை எப்படியெல்லாம் அமைப்பது என்பதை பார்த்தோம், இனி அதை எப்படி இயக்குவது எந்த நேரத்தில் இயக்கலாம். எப்படி இயக்குவது எந்த நேரத்தில் இயக்கலாம். எப்போது இயக்க கூடாது என்பது பற்றி வரும் மூன்றாம் பதிவில் தெளிவாக  கூறுகிறேன்.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» எளிமையான சொட்டு நீர் பாசனம்.!!
» பூமிக்கு நீர் வந்தது எப்படி ? நவீன அறிவியல் கண்டுபிடிப்பு
» நிலக்கடலை, சூரியகாந்தி, பருத்தி, எள், கரும்பு பயிர்களுக்கான நீர் மேலாண்மை நவீன தொழில்நுட்பம்
» மண்ணுக்குள் சொட்டுநீர் பாசனம்
» “ நாங்கள் மற்றவர்களைப் போல் பூமியிலிருந்து நீர் எடுப்பவர்கள் அல்ல. “ பூமிக்கு நீர் அளிப்பவர்கள் “

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum