TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ரெடிமேடு சுடிதார்..மாதம் ரூ.51 ஆயிரம் சம்பாதிக்கலாம்!

Go down

ரெடிமேடு சுடிதார்..மாதம் ரூ.51 ஆயிரம் சம்பாதிக்கலாம்! Empty ரெடிமேடு சுடிதார்..மாதம் ரூ.51 ஆயிரம் சம்பாதிக்கலாம்!

Post by மாலதி Thu Sep 19, 2013 12:49 pm

[You must be registered and logged in to see this image.]ஆண்கள் ரெடிமேடு சட்டைகளை விரும்புவது போல, பெண்களும் ரெடிமேடு சுடிதார்களை விரும்புகின்றனர். வித்தியாசமான டிசைன்கள், விலை குறைவு போன்றவற்றால் ரெடிமேடு சுடிதார்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இவற்றை தயாரித்து விற்றால் லாபகரமான தொழிலாக இருக்கும் என்று கூறுகிறார் திருப்பூர் மாவட்டம் உடுமலை எஸ்.வி.மில் அருகே நிலா டிசைனர்ஸ் நடத்தி வரும் வளர்மதி. அவர் கூறியதாவது: பிளஸ் 2 முடித்ததும் தையல் கற்றேன். வீட்டில் இருந்தவாறே ஜாக்கெட்கள் தைத்து கொடுத்தேன். திருமணத்துக்கு பின் வீட்டில் தைத்து வந்தேன். 

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் தையல் நிலையம் தனியாக துவக்கினேன். 3 பேரை வேலைக்கு அமர்த்தினேன். அருகில் மகளிர் கல்லூரி உள்ளதால், மாணவிகள் பலர், ‘துணியை நீங்களே எடுத்து சுடிதார் தைத்து கொடுங்கள்’ என்றார்கள். இதற்காக துணிகளை வாங்கி வந்து இருப்பு வைத்தேன். அதை தேர்வு செய்து கொடுத்தனர். தையலோடு, துணி விற்பனையும் நடந்தது. ‘பலர் ரெடிமேடாக சுடிதார் இருக்கிறதா?’ என்று கேட்டார்கள். இதற்காக பல்வேறு சைஸ்களில் ரெடிமேடு சுடிதார்களையும் தைத்து விற்பனைக்கு வைத்தேன். 

சுடிதார் அளவு தேர்வு செய்ய ஒவ்வொரு அளவிலும் மாதிரி சுடிதார்களை தயாரித்து வைத்தேன். அவற்றை போட்டு பார்த்து அளவை தெரிந்து கொண்டபின், துணி ரகம், தையல் டிசைன், கலர் போன்றவற்றை தேர்வு செய்தால் போதும். ரெடிமேடு சுடிதார்களை தேர்வு செய்வது அவர்களுக்கு எளிதாக இருந்தது. 
தற்போது எனது கடையில் பெண்கள் கொண்டு வரும் துணியை தைத்து கொடுப்பது, இங்கு அவர்கள் தேர்வு செய்யும் துணிக்கு தைத்து கொடுப்பது, ரெடிமேடாக விற்பது என்று 3 முறையில் தொழில் நடக்கிறது. 

தொழில் அபிவிருத்திக்கு வெண்புறா மகளிர் சுய உதவி குழு அமைத்து கடனுதவி பெற்றேன். மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமும் வாடிக்கையாளர்கள் பெருகினர். என்னதான் அழகாக சுடிதார் தைத்தாலும், உள்புறம் கொடுக்கும் லைனிங் துணி தரமில்லாவிட்டால், சுடிதாரின் உழைப்பும், அணியும் சவுகரியமும் குறைந்துவிடும். தரமாக தயாரிப்பது தொழில் வெற்றிக்கு முக்கியமானது. இவ்வாறு வளர்மதி கூறினார்.

தயாரிப்பது எப்படி?

சுடிதார் தைப்பதற்கு அடிப்படை கட்டிங் செய்வது தான். தைக்க வேண்டிய துணியோடு தைக்கப்பட்ட சுடிதாரின் புகைப்படம் இணைக்கப்பட்டி ருக்கும். அதில் டாப்ஸின் முன்புற மேல்பகுதி டிசைன் மற்றும் சுடிதாரின் மாடல் இடம்பெற்றிருக்கும். அதன்படி வெட்டி தைக்க வேண்டும். இதில் மீடியம்(எம்), லார்ஜ்(எல்), எக்ஸ்ட்ரா லார்ஜ்(எக்ஸ் எல்), டபுள் எக்ஸ்ட்ரா லார்ஜ்(டபுள் எக்ஸ் எல்) என்று தனித்தனி அளவுகள் உள்ளன.

சுடிதாரில் டாப்ஸ், பேன்ட் என்று 2 பாகங்கள் உள்ளன. டாப்ஸில் சோல்டர், உயரம், உடல் சுற்றளவு, இடுப்பு, பாட்டம் அகலம், கை உயரம், கை அகலம், பேன்டில் இடுப்பு சுருக்கு, பெல்ட் பிளிட்ஸ், உயரம், லூஸ், பாட்டம் அகலம் என்று தனித்தனி அளவுகள் உள்ளன. சில டாப்ஸ்கள் கை இல்லாமலும் (ஸ்லீவ்லெஸ்), சில முழுக்கையாகவும்(புல் ஸ்லீவ்ஸ்) இருக்கும். அதற்கு நிலையான அளவுகள் உள்ளன. 

சுடிதாரில் 50க்கும் மேற்பட்ட டிசைன்கள் உள்ளதால், அதற்கேற்ப அளவுகளை அறிந்து கொண்டு, துணிகளை வெட்டி தைத்து, அயர்னிங் செய்தால் சுடிதார் ரெடி.
பயிற்சிக்கு: சுடிதார்களின் அளவு அறியவும், வெட்டவும், தைக்கவும் பயிற்சி வேண்டும். ஒரு மாதம் பயிற்சி எடுத்தால் முறையாக கற்றுக்கொள்ளலாம். 

முதலீடு

குறைந்தபட்சம் 15க்கு 15 அடியில் 2 அறைகள் வேண்டும். 3 லோக்கல் தையல் பவர் மெஷின் தலா ரூ.9 ஆயிரம்(பழையது ரூ.5 ஆயிரம்). ஒரு ஓவர்லாக் மெஷின் ரூ.7 ஆயிரம்(பழையது ரூ.4 ஆயிரம்), ஒரு ஜிக்ஜாக் மெஷின் ரூ.10 ஆயிரம் (பழையது ரூ.7 ஆயிரம்), எம்ப்ராய்டரி மெஷின் ரூ.15 ஆயிரம் (பழையது ரூ.10 ஆயிரம் வரை). 4 ஷெல்ப் தலா ரூ.4 ஆயிரம். 

கட்டிங் டேபிள் ரூ.3 ஆயிரம், அயர்னிங் டேபிள் ரூ.3 ஆயிரம். தையல் மெஷின் ஒயர் ஸ்டூல் 3 ரூ.2400, 4 கத்தரிக்கோல் ரூ.1000, 6 அளவை நாடா (டேப்) தலா ரூ.60, ஹேங்கர் 5 டஜன் ரூ.300, 2 சுடிதார் அளவை ஸ்கேல் ரூ.80, இட வாடகை அட்வான்ஸ் ரூ.20 ஆயிரம். மொத்த முதலீட்டுக்கு (பழைய மெஷின்களாக வாங்கினால்) ரூ.60 ஆயிரம் வேண்டும்.

கிடைக்கும் இடங்கள்

தையல் இயந்திரங்கள், தளவாட சாமான்கள் மற்றும் தேவைப்படும் பொருட்கள் அனைத்து நகரங்களிலும் கிடைக்கும். எனினும் தையல் இயந்திரங்கள் திருப்பூரில் குறைந்த விலையிலும், சுடிதார் துணி வகைகள் சென்னை, பெங்களூர், மதுரை, கோவை, ஈரோட்டில் குறைந்த விலையில் கிடைக்கும். 

உற்பத்தி செலவு!

ஒரு நாளைக்கு ஒரு நபர் மூலம் ஒரு ஷிப்டில் 6 சுடிதார் தைக்கலாம். 3 பேர் மூலம் 18 சுடிதார் என மாதம் 25 நாளில் 450 சுடிதார் தைக்கலாம். ஒரு சுடிதாருக்கு டாப்ஸ்(இரண்டரை மீட்டர்), பேன்ட்(2 மீட்டர்), சால்(2 மீட்டர்) என 7 மீட்டர் துணி வேண்டும். இவை அனைத்தும் அடங்கிய துணி ஒரே பேக்கிங்கில் இருக்கும். இதில் காட்டன் மற்றும் சிந்தடிக் துணிகள் ரகம் வாரியாக ரூ.150 முதல் ரூ.600 வரை வாங்கலாம். 

இதில் ரூ.150 மதிப்புள்ள துணியில் 150 சுடிதார்கள், ரூ.200 துணியில் 100, ரூ.250, ரூ.300 துணிகளில் தலா 50, ரூ.350, ரூ.400, ரூ.450, ரூ.500, ரூ.600 மதிப்புள்ள துணிகளில் தலா 20 என 100 என்று 450 சுடிதார்கள் தைக்க துணி கொள்முதல் செலவு ரூ.1.16 லட்சம். லைனிங் துணி ரூ.22,500, தையல் கூலி, தையல் பொருள் செலவுகள் ரூ.22,500, மின்கட்டணம், இட வாடகை உட்பட நிர்வாக செலவுகள் ரூ.9 ஆயிரம், கட்டிங், அயர்னிங், பேக்கிங் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் உரிமையாளர் சம்பளம் ரூ.10 ஆயிரம். ஒரு மாத உற்பத்திக்கு ரூ.1.8 லட்சம் வேண்டும். 

மாதம் ரூ.51 ஆயிரம் சம்பாதிக்கலாம்!

உற்பத்தி செய்யப்பட்ட சுடிதார்களை அதே கடையிலேயே வாடிக்கையாளர்களுக்கு விற்கலாம். விற் காமல் மீதமானதை இருப்பில் வைத்தால் பண்டிகை, திருவிழாவின் போது எளிதில் விற்று விடலாம். சுடிதார் துணியின் ரகத்திற்கேற்ப ரூ.400 முதல் ரூ.850 வரை விற்கலாம். இதன் மூலம் மாத வருவாய் ரூ.2.31 லட்சம் கிடைக்கும். இதில் லாபம் ரூ.51 ஆயிரம்.

கடைகளுக்கு விற்கலாம்!

ரெடிமேடு சுடிதார்கள் கிராமப்புற ஜவுளிகடைகள், ரெடிமேடு கடைகளில் கூட மற்ற ஆடைகளுக்கு இணையாக விற்கப்படுகின்றன. உற்பத்தி செய்யப்படும் சுடிதார்களை பல்வேறு ஊர்களில் உள்ள கடைகளுக்கு மொத்தமாக குறைந்த லாபத்தில் விற்கலாம்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» காபி பேஸ்ட் செய்து மாதம் பத்தாயிரம் சம்பாதிக்கலாம்......
» 50 சென்ட்... மாதம் ரூ.30 ஆயிரம்... பட்டதாரி இளைஞர்களின் பசுமைப் புரட்சி .!
» தாயை பராமரிக்காத மகன் மாதம் ரூ. 3 ஆயிரம் வழங்க உத்தரவு
» மாதம் ரூ.1000 ஓய்வூதியம், திருமணத்துக்கு ரூ.10 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்!
» நர்சரியில் கரும்பு நாற்று பயிர்; மாதம் ரூ.25 ஆயிரம் வருமானம் - சாதிக்கிறார் ராமநாதபுரம் முன்னோடி விவசாயி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum