TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அம்பலமாகியுள்ள பறக்கும் தட்டு இரகசியங்கள் - Area 51! photos

2 posters

Go down

அம்பலமாகியுள்ள பறக்கும் தட்டு இரகசியங்கள் - Area 51! photos Empty அம்பலமாகியுள்ள பறக்கும் தட்டு இரகசியங்கள் - Area 51! photos

Post by mmani Wed Aug 21, 2013 2:42 pm

[You must be registered and logged in to see this image.]

றக்கும் தட்டுக்கள் வானில் தென்படுவது தொடர்பிலும், அவற்றினைப் பயன்படுத்தி வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்து செல்கின்றார்கள் எனவும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பலதரப்பட்ட கதைகள் பரவி வந்துள்ளதுடன், இது தொடர்பில் பல புகைப்படங்களும் வெளிவந்திருந்தன. இவை தொடர்பிலான ஆதாரங்கள் எதுவும் இன்று வரையிலும் சரிவர நிரூபிக்கப்படாத காரணத்தினால், பறக்கும் தட்டுக்கள் தொடர்பிலான மர்மங்கள் முடிச்சவிழ்க்கப்பட முடியாமல் இன்று வரையில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
[You must be registered and logged in to see this image.]

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் ஆர்வம் உடையவர்கள் எவரும் நிச்சயமாக Area 51 பற்றி அறிந்திருக்காமல் இருக்க முடியாது. அந்தளவுக்கு, பறக்கும் தட்டுக்களுடனும் வேற்றுக்கிரகவாசிகளுடனும் நெருங்கிய தொடர்புடைய ஒன்றாக Area 51 காணப்படுகின்றது.
Area 51 மேற்கு அமெரிக்காவின் Nevada பிராந்தியத்திலுள்ள மலைசார்ந்த வறண்ட நிலப்பிரதேசத்தில் அமைந்துள்ளது. Area 51 என்பது அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான ஒரு பயிற்சி பட்டறையும் பரிசோதனை கூடமும் ஆகும். மிக நீண்டகாலமாகவே குறித்த பகுதிக்கு சாதாரண மக்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பிரதேசத்தின் மீதான பொதுவான விமானப்பறப்புக்களும் தடை செய்யப்பட்டுள்ளன. குறித்த பிரதேசம் தொடர்பிலான தகவல்கள் ஆரம்பத்தில் பலருக்கும் தெரியாமல் மிகவும் இரகசியமாகப் பேணப்பட்டு வந்த போதிலும், நாளடைவில் Area 51 தொடர்பிலான விடயங்கள் வெளியுலகத்திற்குக் கசியத் தொடங்கியதையடுத்து அமெரிக்க மக்கள் உள்ளிட்ட உலகத்தில் உள்ள அனைத்து மக்களினதும் கவனமானது Area 51 இன் மீதும், அங்கு என்ன நடக்கின்றது என்பது தொடர்பிலும் திரும்பத்தொடங்கியது.
[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]


1955 களில் நிர்மாணிக்கப்பட்டு செயற்படுத்தப்படத் தொடங்கிய குறித்த கட்டமைப்பானது மிகவும் இரகசியமான இராணுவ பரிசோதனை நவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது என்று ஆரம்பத்தில் கருதப்பட்ட போதிலும், குறித்த பகுதியில் காணப்படுகின்ற Groom Lake எனப்படுகின்ற பனிக்கட்டிகள் போன்ற தரைத்தோற்றத்தினைக் (Salt Lake) கொண்ட பாரிய நிலப்பரப்பு மற்றும் அதனைச்சுற்றி ஏற்படுத்தப்பட்டிருந்த விமான ஓடுபாதை மேலும் குறித்த பகுதியில் வழமைக்கு மாறான விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்த கட்டட அமைப்புகள், சந்தேகத்தினை ஏற்படுத்தும் வகையில் இடம்பெறத் தொடங்கிய பல இராணுவ பரிசோதனைகள் என்பன Area 51 மீதான கவனத்தினை வேறு விதமாக திசை மாற்றியிருந்தது. அத்துடன் Groom Lake  என அழைக்கப்பட்ட பகுதியில் நிலத்தின் அடியில் பாரிய புகையிரதப்பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்கின்ற தகவல்களும் வெளிவந்திருந்தன.

இதற்கேற்றாற்போல், 1947 ஆம் ஆண்டு ஜுலை 7 ஆம் திகதியளவில் மெக்சிக்கோவின் Roswell எனும் பகுதியில் விபத்துக்குள்ளாகியிருந்த பறக்கும் தட்டு ஒன்றும், அதிலிருந்து மீட்கப்பட்ட உயிரிழந்த வேற்றுக்கிரகவாசிகளின் உடலும் Area 51 பகுதியில் வைத்து ஆய்வுக்குட்படுத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. அத்துடன் குறித்த பறக்கும் தட்டானது Area 51  பகுதியில் வைத்து மீள்கட்டமைக்கப்பட்டு வருவதாகவும், அதன் தொழிநுட்பத்தினை அறிந்து கொள்ளும் பொருட்டும் சோதனைகளுக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் மேலதிக தகவல்கள் வெளிவந்திருந்தன.
[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]



குறித்த பறக்கும் தட்டின் சிதைவுகள் Area 51 பகுதியில் அமைந்துள்ள Hangar 18 என்று அழைக்கப்படும் கட்டடப்பகுதியில் வைத்தே மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும்,  MJ-12  மற்றும் SECTOR 7என்று அழைக்கப்படுகின்ற உயர்மட்ட அதிகாரிகள், மற்றும் இராணுவ அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவொன்று இது தொடர்பிலான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


[You must be registered and logged in to see this image.]



இதனையடுத்து Area 51 என்பது வேற்றுக்கிரகவாசிகள் மற்றும் பறக்கும் தட்டுக்கள் தொடர்பிலான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கென அமெரிக்க அரசினால் அமைக்கப்பட்ட அதியுயர் பாதுகாப்பும், இரகசியமும் மிகுந்த பிரதேசம் என பல தரப்பினரும் கருதத்தொடங்கியிருந்தனர். இவையெல்லாவற்றிற்கும் அப்பால், வானிலைக் கட்டுப்பாடு, இரகசிய ஆயுதங்களின் உற்பத்தி, மற்றும் முன்னைய காலத்தினை நோக்கிப் பயணிப்பதற்கான தொழிநுட்பம் (Time Travel Technology) என்பவை தொடர்பிலான ஆய்வுகளும் Area 51 பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் பல்வேறு சர்ச்சைகள் தோற்றுவிக்கப்பட்டிருந்தன.
அத்துடன், Area 51 இனைச் சார்ந்த ஏனைய நிலப்பகுதிகளானது பாரிய அணுவாயுதச் சோதனைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுமிருந்தன. இதன் காரணமாக Area 51 பகுதியில் பணியாற்றிய ஊழியர்கள் பலர் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்ததுடன், குறித்த பிரதேசத்தினை அண்மித்த பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு நாளடைவில் புற்றுநோய்த் தாக்கங்கள் ஏற்பட்டிருந்தன எனவும் பலத்த விமர்சனங்களும் கிளம்பியிருந்தன.
மேலும், Area 51 மற்றும் அதன் இரகசியங்கள் குறித்து The Independence Day போன்ற திரைப்படங்களும் வெளிவந்திருந்தன. அத்துடன், Indiana Jones திரைப்படமொன்றில் அமெரிக்க அரசினால் கைப்பற்றப்பட்டிருந்த விநோதமான பொருட்களைச் சேமித்து வைக்கும் களஞ்சியம் ஒன்று தொடர்பான காட்சி அமைக்கப்பட்டிருந்ததுடன், குறித்த களஞ்சியசாலைக்கு Hangar 51 எனப் பெயரிடப்பட்டுமிருக்கும்.
இவ்வாறான பல சர்ச்சைகளின் முடிச்சுக்களைத் தன்னகத்தே வைத்திருந்த Area 51 தொடர்பிலும், அதன் இரகசியத் தன்மை தொடர்பிலும் தற்போது முதல் முறையாக CIA யினர் உத்தியோகபூர்வமான தகவல்களை வெளியிட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பிலான தகவல்கள் வொஷிங்டனின் George Washington பல்கலைக்கழகத்திலுள்ள தேசிய பாதுகாப்பு ஆவணக்காப்பகத்திலிருந்து தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 1998 ஆம் ஆண்டளவில் குறித்த விடயம் தொடர்பில் சில ஆவணங்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்த போதிலும், அவற்றில் பல முக்கியமான விடயங்கள் மறைக்கப்பட்டே குறித்த ஆவணங்கள் வெளியிடப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது Area 51 குறித்த முழுமையான ஆவணம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த ஆவணங்கள் மூலம் தெரியவருவதாவது;
அமெரிக்காவின் இரகசிய உளவு விமானமொன்றின் தயாரிப்பு தொடர்பிலும் அதன் பரிசோதனை தொடர்பிலுமே குறித்த Area 51 பகுதியானது அமெரிக்க அரசினால் 1955 ஆம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்டிருந்தது. இதன்பின் CIA, விமானப்படை அதிஉயர் தொழில்நுட்பம் கொண்ட வேவுபார்க்கும் விமானம் ஒன்றை உருவாக்க Lockheed என்கின்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து Area 51 பகுதியில் விமான கட்டுமான பணிகளை ஆரம்பித்தது.
U - 2 
[You must be registered and logged in to see this image.]



U-2 programme என இத்திட்டம் அழைக்கப்பட்டிருந்ததுடன் தனித்துவமிக்க வகையில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய U-2 என்கின்ற உளவு விமானத்தினைத் தயாரித்து பரிசோதிப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். குறித்த விமானமானது பனிப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் சோவியத் யூனியன் மீதான கண்காணிப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படத்து.

U-2 உளவு விமானத்தினைப் பொறுத்த வரையில் குறித்த விமானமானது அதிக உயரத்தில் பறக்கக் கூடியதாக இருப்பதுவே அதன் தனித்துவமிக்க சிறப்பம்சமாகும். குறித்த விமானமானது கிட்டத்தட்ட 60,000 அடிகளுக்கும் மேல் பறக்கக் கூடியது என்பதுடன் இவ்விமானத்தின் பறப்புக்களே பறக்கும் தட்டு குறித்த சந்தேகங்களைத் தோற்றுவித்தன என தற்போது தெரிவிக்கப்படுகின்றது.
அதாவது, 1957 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த விமானம் பரிசோதிக்கப்பட்டபோது U-2 விமானத்தின் தொழிநுட்பமானது அக்காலகட்டத்தில் கற்பனையிலும் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு ஒரு பாரிய தொழிநுட்பமாகக் காணப்பட்டது. இதனால் இவ்வாறான தொழிநுட்பத்தினைக் கொண்டமைந்த விடயங்கள் அக்காலகட்டத்தில் உலகத்தில் இருந்திருக்கவே முடியாது என்கின்ற எண்ணம் மக்கள் மத்தியில் காணப்பட்டிருந்தது.
அத்துடன், குறித்த விமானமானது மிகவும் உயரத்தில் பறக்கும் போது அது சாதாரண கண்களுக்குப் பெரும்பாலும் புலப்படமாட்டாது ஆயினும், குறிப்பிட்ட ஒரு உயரத்தில் பொதுமக்கள் U-2 வினைக் காணும் போது அது இனங்காணப்பட முடியாத ஒரு பொருள் (Unidentified Flying Object - UFO) பறப்பது போன்ற தோற்றத்தினை அக்காலத்தில் ஏற்படுத்தியிருந்தது. மேலும், குறித்த விமானத்தின் பரிசோதனையானது பெரும்பாலும் மாலை நேரத்திலேயே மேற்கொள்ளப்படுவதனால், குறித்த நேரத்தில் விமானத்தின் மீது சூரியனின் ஒளி பட்டுத் தெறிக்கின்ற பிரகாசத்தினை அப்போதைய மக்கள் பறக்கும் தட்டு என நம்பியிருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு பிற்பட்ட காலப்பகுதிகளில் OXCART, D-21 & F-117 எனும் உளவு விமானங்களும் Area 51 பகுதியில் பரிசோதிக்கப்பட்டமை பறக்கும் தட்டு தொடர்பான சந்தேகங்களுக்கு தீனி போடுவதாக அமைந்தது.
OXCART
[You must be registered and logged in to see this image.]



D 21


[You must be registered and logged in to see this image.]



F - 117


[You must be registered and logged in to see this image.]



இவ்வாறு வெளிவந்த வதந்திகளை அமெரிக்க அரசாங்கம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது காரணம் இவ் அதி நவீன உளவு விமானங்கள் சோவியத் உடனான பனிப் போரில் அமெரிக்காவிற்கு தலை சிறந்த ஆயுதமாக விளங்கியது. இப்படி ஓரு ஆயுதம் இருப்பதையே வெளி உலகிற்கு குறிப்பாக சோவியத்திஇற்கு காட்டி கொள்ள விரும்பவில்லை. அகவே பறக்கும் தட்டுக்கள் சம்பந்தமான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் அதை ஒரு திசை திருப்பும் கருவியாக பாவித்து Area 51 பகுதியில் உண்மையான இரகசிய நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்தது CIA. மேலும் பறக்கும் தட்டுக்கள் மற்றும் வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பிலான சில பொய்யான தகவல்களை அவ்வப்போது திட்டமிட்டு வெளியிட்டு பொதுமக்களை ஒரு குழப்பமான நிலையில்  வைத்திருப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தது.
இந்நிலையில், இவ்வளவு காலத்தின் பின்னர் இவ்வாறான ஒரு ஆவணத்தினை வெளியிட்டு இதுதான் Area 51இல் நடந்தது என்று சொல்வதன் மூலம் அமெரிக்க அரசாங்கம் எதனை உலகத்திற்கு வெளிப்படுத்த விரும்புகின்றது என்று தெரியவில்லை. அத்துடன் அண்மையில் பறக்கும் தட்டு தொடர்பில் விசாரணை செய்யும் பிரித்தானிய பிரிவு மூடபட்டது CIA இன் பிந்திய அறிகைய உறுதி செய்வதாகவே உள்ளது. ஆக மொத்தத்தில் பறக்கும் தட்டு என்று வதந்தியை உருவாக்கி முழு உலகையும் முட்டாளாக்கி உள்ளது CIA.
Area 51 இன் பல ஆராய்ச்சி நடவடிக்கைகள் பெரும்பாலும் நிலத்திற்கு அடியிலேயே மேற்கொள்ளப்பட்டு வருவதனால், உண்மையில் அங்கு என்ன நடந்தது?, மற்றும் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கின்றது? என்பது தொடர்பில் உறுதியான தகவல்கள் வெளியுலகத்தினருக்குத் தெரியவாய்ப்பில்லை. அத்துடன், உலகின் ஏனைய நாடுகளைப் பொறுத்தவரையில்  1950 காலப்பகுதிகளில் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாத பரிசோதனைகளை வெற்றிகரமாக அமெரிக்கா முன்னெடுத்திருக்கின்றது என்பது தற்போது உறுதியாக வெளிப்படுத்தப்பட்டிருப்பதால், தற்போதைய காலகட்டத்தில் எம் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட எவ்வளவோ விடயங்கள் அமெரிக்காவினால் வெற்றிகரமாகப் கண்டு பிடிக்கப்பட்டு பின் மறைக்கப்பட்டு இருக்கும் என்பதும் மறுக்க முடியாத ஒரு விடயமாகும், காலதத்தின் கைகளிலேயே இதற்கான விடை மறைந்துள்ளது.
-brit-tamil.co.uk-
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

அம்பலமாகியுள்ள பறக்கும் தட்டு இரகசியங்கள் - Area 51! photos Empty Re: அம்பலமாகியுள்ள பறக்கும் தட்டு இரகசியங்கள் - Area 51! photos

Post by logu Wed Aug 21, 2013 7:09 pm

அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு 
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» சீனவாசி உருவாக்கிய அதிசய பறக்கும் தட்டு
» பறக்கும் தட்டு விபத்து & வேற்று கிரக மனிதரின் சடலங்கள்
» தென்கொரியாவின் சியொல் நகருக்கு மேலாக பறந்த பறக்கும் தட்டு? (வீடியோ)
» லண்டனுக்கு மேலாக பறந்து சென்ற வேற்றுக் கிரகவாசிகளின் பறக்கும் தட்டு
» சீன போயிங்க் 757 பயணர் விமானத்தை தாக்கிய பறக்கும் தட்டு. உலகவலம் செய்தித் துணுக்குகள் படத்துடன்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum