TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


செய்முறை 30 வகையான குழம்புகள்

Go down

செய்முறை 30 வகையான குழம்புகள்  Empty செய்முறை 30 வகையான குழம்புகள்

Post by logu Fri Jun 28, 2013 8:17 am

தக்காளி குழம்பு
தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி – தலா 2 (மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைக்கவும் அல்லது பொடியாக நறுக்கவும்), கீறிய பச்சை மிளகாய் – 1, பூண்டு -  2 பல், பொடியாக நறுக்கிய தேங்காய் – சிறிதளவு, சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தனியாத்தூள் – 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை 30 வகையான குழம்புகள்  P104
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, தேங்காயைப் போட்டு… பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். தீயைக் குறைத்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போட்டு வதக்கி, நறுக்கிய தக்காளிகளைப் போட்டு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பச்சை வாசனை போனதும், சீரகத்தூள், அரைத்த தக்காளி விழுது (அ) பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு, எண்ணெய் பிரிந்து வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சுக்கு குழம்பு
தேவையானவை: சுக்கு – ஒரு சிறிய துண்டு, மிளகு – 2 டீஸ்பூன், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – ஒரு கப், நறுக்கிய தக்காளி – கால் கப், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை 30 வகையான குழம்புகள்  P105
செய்முறை: சுக்கு, மிளகு, வெந்தயத்தை எண்ணெய் விடாமல் தனித்தனியே வறுத்து, ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கி, புளிக் கரைசல் விட்டு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்க்கவும். எண்ணெய் பிரிந்து வரும்போது பொடித்த சுக்கு கலவையைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
வேர்க்கடலை குழம்பு
தேவையானவை: வேர்க்கடலை – அரை கப் (ஊற வைத்து, வேக வைக்கவும்), தேங்காய் துண்டுகள் – 2 (அரைக்கவும்), கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், புளிக் கரைசல், பொடியாக நறுக்கிய வெங்காயம் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை 30 வகையான குழம்புகள்  P106
செய்முறை: ஒரு பாத்திரத்தில் புளிக் கரைசலை விட்டு… அரைத்த தேங்காய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு, தேவையான தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். வேக வைத்த வேர்க்கடலையைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் தீயைக் குறைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகத்தூள், கறிவேப்பிலை போட்டு, பொரிந்ததும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வந்ததும் கொதிக்கும் குழம்பில் கொட்டி இறக்கவும்.
பிடிகருணை குழம்பு
தேவையானவை: பிடிகருணை – கால் கிலோ (வேக வைத்து, தோலுரித்து, வட்டமாக நறுக்கவும்), சின்ன வெங்காயம் – 10 (ஒன்றிரண்டாக தட்டிக் கொள்ளவும்), கீறிய பச்சை மிளகாய் – 2, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – இரண்டரை டீஸ்பூன், தேங்காய்ப்பால் – ஒரு கப், புளி – எலுமிச்சை அளவு (கரைத்துக் கொள்ளவும்), வறுத்து பொடித்த சீரகம் – 2 டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு
செய்முறை 30 வகையான குழம்புகள்  P107
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் புளிக் கரைசல், வெங்காயம், சீரகம், கீறிய பச்சை மிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு, எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து மூடி, கொதிக்க வைக்கவும். நன்றாகக் கொதித்ததும் தேங்காய்ப்பால், வேக வைத்த கிழங்கை சேர்த்து மிதமான தீயில் தளதளவென கொதிக்க வைத்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.
அரைக்கீரை குழம்பு
தேவையானவை: அரைக்கீரை – ஒரு சிறிய கட்டு (ஆய்ந்து, கழுவி நறுக்கிக் கொள்ளவும்), பச்சை மிளகாய் – 3, பூண்டு – 5 பல், நாட்டுத் தக்காளி – 4, சின்ன வெங்காயம் – 5, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை 30 வகையான குழம்புகள்  P108
செய்முறை: பச்சை மிளகாய், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். வெங்காயத்தை தோல் உரித்துக் கொள்ளவும். குக்கரில் கீரை, பச்சை மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளியைப் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து, மூன்று விசில் வந்ததும் இறக்கி, உப்பு சேர்த்து மத்தினால் நன்றாகக் கடையவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் போட்டு, பொரிந்ததும் கீரைக் கலவையில் சேர்த்துக் கடையவும்.
மோர்க் குழம்பு
தேவையானவை: தேங்காய் துண்டுகள் – 2, பொட்டுக்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 3, பூண்டு – ஒரு பல், இஞ்சி – சிறிய துண்டு, சீரகம் – 2 டீஸ்பூன் (இவற்றை  ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும்), மோர் – ஒரு கப், மஞ்சள்தூள், வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயம், வெண்டைக்காய் (அ) கத்திரிக்காய் வத்தல் (எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும்), வெள்ளரிக்காய், கொத்தமல்லி – சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை 30 வகையான குழம்புகள்  P109
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் மோரை விட்டு, அரைத்த தேங்காய் கலவை, மஞ்சள்தூள், உப்பு போட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறவும். கலர் மாறியதும், சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, வறுத்த வத்தல், வெள்ளரிக்காயைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்து குழம்பில் கொட்டி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
வெண்டைக்காய் குழம்பு
தேவையானவை: வெண்டைக்காய் – கால் கிலோ, வெங்காயம் – 1, கீறிய பச்சை மிளகாய், தக்காளி – தலா 2, பூண்டு – 2 பல், புளி – நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்தூள் – 2 டீஸ்பூன், தேங்காய் துண்டுகள் – 2, சீரகம் – ஒன்றரை டீஸ்பூன், கறிவேப்பிலை, குழம்பு பொடி – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை 30 வகையான குழம்புகள்  P110
செய்முறை: வெங்காயம், வெண்டைக்காய், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். தேங்காய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, வெண்டைக்காய் ஆகியவற்றை ஒன்றன்  பின் ஒன்றாகப் போட்டு நன்றாக வதக்கவும். தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மீண்டும் வதக்கி… மிளகாய்த்தூள், தேங்காய் – சீரகம் விழுதைப் போட்டு வதக்கவும். கடைசியாக புளியைக் கரைத்து ஊற்றி, சிறிது தண்ணீர் விட்டு, குழம்பு பொடி சேர்த்து, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.
கத்திரி | முருங்கை குழம்பு
தேவையானவை: கத்திரிக்காய் – 100 கிராம், சிறிய முருங்கைக்காய், வெங்காயம், தக்காளி – தலா 1, பூண்டு – 2 பல், மிளகு – அரை டீஸ்பூன், துவரம்பருப்பு – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், தனியாத்தூள், வறுத்து பொடித்த சீரகம், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, புளி – நெல்லிக்காய் அளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை 30 வகையான குழம்புகள்  P111
செய்முறை: கத்திரிக்காய், முருங்கைக்காய், தக்காளி, வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து, காய்ந்ததும் எண்ணெய் விட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, துவரம்பருப்பு போட்டு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில் முருங்கைக்காய் சேர்த்து வதக்கி, கத்திரிக்காய், தக்காளி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாத்தூள் போட்டு சிறிது நேரம் வதக்கவும். புளியைக் கரைத்து ஊற்றி, காய் வேகும் அளவுக்கு தண்ணீர் விட்டு மூடி வைக்கவும். தீயைக் குறைத்து, சீரகத்தூளை சேர்த்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.
கடலைப்பருப்பு குழம்பு
தேவையானவை: கடலைப்பருப்பு – 100 கிராம், வாழைக்காய், தக்காளி, வெங்காயம் – தலா 1, பச்சை மிளகாய் – 2, பூண்டு – 3 பல், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தேங்காய் துண்டுகள் – 2, சீரகம், தனியா – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, குழம்பு பொடி – ஒன்றரை டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், பெருங்காயம், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை 30 வகையான குழம்புகள்  P112
செய்முறை: தேங்காய், சீரகம், தனியா, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து ஒன்றிரண்டாக பொடிக்கவும். காய்கறிகளை பொடியாக நறுக்கவும். குக்கரில் கடலைப்பருப்பு,  பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள்தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, ஒரு கொதி வந்ததும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு மூடி வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் ஒன்றிரண்டாக அரைத்த பொடி, குழம்பு பொடி, உப்பு, பெருங்காயம் போட்டு நறுக்கிய வாழைக்காயைப் போட்டு வதக்கி, வேக வைத்த பருப்பில் கொட்டி, சிறிது தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.
சிறு பருப்பு குழம்பு
தேவையானவை: பயத்தம்பருப்பு – ஒரு சிறிய கப், தக்காளி, சௌசௌ, வெங்காயம் – தலா 1, பூண்டு – 2, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், கடுகு,  உளுத்தம்பருப்பு, சீரகம், தனியாத்தூள், குழம்பு பொடி – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, கறிவேப்பிலை, பெருங்காயம் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை 30 வகையான குழம்புகள்  P113
செய்முறை: சௌசௌ, தக்காளி, வெங்காயம் மூன்றையும் நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் பயத்தம்பருப்பு, தக்காளி, பூண்டு, மஞ்சள்தூள் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், தனியாத்தூள், வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம், குழம்பு பொடி சேர்த்து… நறுக்கிய சௌசௌ, தேங்காய் துருவல், உப்பு போட்டு நன்றாக வதக்கவும். இதை, வெந்த பருப்புடன் சேர்த்துக் கொதிக்க விடவும். சௌசௌ நன்றாக வெந்ததும் இறக்கவும்.
மீல் மேக்கர் குழம்பு
தேவையானவை: சோயா உருண்டைகள் – முக்கால் கப், வெங்காயம் – 1, தக்காளி – 3, இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன், வறுத்துப் பொடித்த சீரகம் – 2 டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், சோம்பு – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு – தேவையான அளவு.
செய்முறை 30 வகையான குழம்புகள்  P114
செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். சோயாவைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 நிமிடம் வைத்திருந்து, நன்றாகப் பிழிந்து கொள்ளவும். கொதிக்கும் நீரில் தக்காளியைப் போட்டு 2 நிமிடம் வைத்திருந்து எடுத்து, தோலுரித்து ஒன்றிரண்டாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு போட்டு தாளித்து, வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து வதக்கி… மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, அரைத்த தக்காளி சேர்த்து எண்ணெய் பிரிந்து வந்ததும், சோயா உருண்டைகளை சேர்த்து வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் (தேங்காய்ப்பாலும் சேர்க்கலாம்) விட்டு, வறுத்துப் பொடித்த சீரகத்தைப் போட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
மணத்தக்காளி குழம்பு
தேவையானவை: பச்சை மணத்தக்காளிக்காய், நறுக்கிய சின்ன வெங்காயம், தேங்காய்ப்பால் – தலா ஒரு கப், பூண்டு – 4 பல், தக்காளி – 1, புளி – எலுமிச்சை அளவு, கறிவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், குழம்பு பொடி – 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு – தேவையான அளவு,
செய்முறை 30 வகையான குழம்புகள்  P115
செய்முறை: மணத்தக்காளியைக் கழுவி காம்பு நீக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பூண்டு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி… கறிவேப்பிலை, நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்தூள், குழம்பு பொடி, உப்பு போட்டுக் கிளறவும். மணத்தக்காளிக்காயைச் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கி, புளியைக் கரைத்து விட்டு, காய் வேகும் வரை கொதிக்க விடவும். இதில் தேங்காய்ப்பால் சேர்த்து, மிதமான தீயில் சிறிது நேரம் வைத்திருந்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.
பாகற்காய் குழம்பு
தேவையானவை: மிதி பாகற்காய், சின்ன வெங்காயம் – தலா அரை கப், பூண்டு – 4 பல், தக்காளி – 2, கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய்ப்பால் – ஒரு கப், மஞ்சள்தூள் – அரை  டீஸ்பூன், குழம்பு பொடி – 2 டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள், உப்பு – தேவையான அளவு,
செய்முறை 30 வகையான குழம்புகள்  P116
செய்முறை: மிதி பாகற்காயை காம்பு நீக்கி கழுவி, இரண்டாக நறுக்கி, சிறிது உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து… நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், குழம்பு பொடி, வேக வைத்த பாகற்காய் போட்டு மறுபடியும் வதக்கி, புளியைக் கரைத்து ஊற்றி, நன்றாகக் கொதித்ததும் தேங்காய்ப்பால் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.
பச்சை மொச்சைப் பயறு குழம்பு
தேவையானவை: பச்சை மொச்சைப் பயறு – கால் கிலோ, வெங்காயம், தக்காளி – தலா 1, புளி – நெல்லிக்காய் அளவு, பூண்டு – 2 பல், தேங்காய் துண்டுகள் – 2, சீரகம் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்தூள் – 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை 30 வகையான குழம்புகள்  P117
செய்முறை: வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். தேங்காய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும். பூண்டு, தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பச்சை மொச்சைப் பயறு போட்டு வதக்கவும். புளியை கரைத்து விட்டு… தேங்காய்-சீரகம் விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, குக்கரை மூடி, 4 விசில் வந்ததும் இறக்கவும்.
வத்தல் குழம்பு
தேவையானவை: ஏதேனும் ஒரு வத்தல் – ஒரு கப் (சிறிது எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும்), கடுகு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, புளி – எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், குழம்பு பொடி – 2 டீஸ்பூன், நறுக்கிய சின்ன வெங்காயம் – ஒரு கப், எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு – தேவையான அளவு,
செய்முறை 30 வகையான குழம்புகள்  P118
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து… வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், குழம்பு பொடி, வறுத்த வத்தல், உப்பு சேர்த்து, புளியைக் கெட்டியாக கரைத்து ஊற்றி, நன்றாகக் கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.
உருளைக்கிழங்கு மசாலா குழம்பு
தேவையானவை: உருளைக்கிழங்கு – கால் கிலோ, பூண்டு – 2 பல், வெங்காயம், தக்காளி, கீறிய பச்சை மிளகாய் – தலா 1, புளி – நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு, குழம்பு பொடி – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு – தேவையான அளவு,
செய்முறை 30 வகையான குழம்புகள்  P119
செய்முறை: உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு போட்டு தாளித்து… நறுக்கிய வெங்காயம், பூண்டு, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி, உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், குழம்பு பொடி சேர்த்து வதக்கி, புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு போட்டு, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.
வெந்தயக்கீரை குழம்பு
தேவையானவை: சின்ன வெங்காயம் – கால் கப், வெந்தயக்கீரை – ஒரு கட்டு (சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும்), பூண்டு – 4 பல், தக்காளி – 2, புளி – நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், குழம்பு பொடி – ஒன்றரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – ஒன்றரை டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை 30 வகையான குழம்புகள்  P120a
செய்முறை: வெங்காயம், பூண்டு, தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் போட்டு தாளித்து… வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். இதில், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், குழம்பு பொடி, உப்பு, கீரை சேர்த்து வதக்கி, புளியைக் கரைத்து ஊற்றி, மூடி போட்டு சிறிது நேரம் வைத்திருந்து, பிறகு மூடியைத் திறந்து, மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
கொண்டைக்கடலை புளிக்குழம்பு
தேவையானவை: கறுப்பு கொண்டைக்கடலை – ஒரு கப், தக்காளி, வெங்காயம் – தலா 1, பூண்டு – 2, இஞ்சி – அரை துண்டு, கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் துண்டுகள் – 2, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், தனியாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், புளி – நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள், எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை 30 வகையான குழம்புகள்  P120
செய்முறை: தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். தேங்காய், சீரகத்தை விழுதாக அரைக்கவும். கறுப்பு கொண்டக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் குக்கரில் வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து… பூண்டு, இஞ்சி, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதனுடன் தேங்காய்-சீரக விழுதை சேர்த்து… மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாதூள், உப்பு, வெந்த கொண்டைக்கடலையைப் போட்டு, புளியைக் கரைத்து ஊற்றி, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.
மிக்ஸ்டு மிளகாய் குழம்பு
தேவையானவை: பச்சை மிளகாய் – 10, குடமிளகாய் – 2, சின்ன வெங்காயம் – ஒரு கப், தக்காளி – 1, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, வெந்தயம், சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை 30 வகையான குழம்புகள்  P121
செய்முறை: பச்சை மிளகாய், குடமிளகாய், தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், சீரகம் போட்டு தாளித்து… வெங்காயம், பச்சை மிளகாய், குடமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். இதனுடன் தக்காளி, உப்பு சேர்த்து வதக்கி, புளியைக் கரைத்து ஊற்றி, கொதிக்கவிடவும். மிளகாய் நன்றாக வெந்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.
பக்கோடா குழம்பு
தேவையானவை: பக்கோடா – ஒரு கப், வெங்காயம், தக்காளி – தலா 1, புளி – நெல்லிக்காய் அளவு, மிளகாய்த்தூள் – காரத்துக்கேற்ப, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, சோம்பு, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய், உப்பு – தேவையான அளவு,
செய்முறை 30 வகையான குழம்புகள்  P122
செய்முறை: வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், சோம்பு போட்டு தாளித்து… நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் புளியைக் கரைத்து ஊற்றி… மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு, தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். குழம்பு கெட்டியாக இருக்கக் கூடாது. பச்சை வாசனை போனதும் பக்கோடாவை குழம்பில் போட்டு, சிறிது நேரம் கொதிக்க வைத்து, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
சுரைக்காய் குழம்பு
தேவையானவை: சிறிய சுரைக்காய், கீறிய பச்சை மிளகாய், வெங்காயம் – தலா 1, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள் – தலா 2 டீஸ்பூன், புளி – நெல்லிக்காய் அளவு, தேங்காய் துண்டுகள் – 2, சீரகம் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தனியாத்தூள் – ஒன்றரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை 30 வகையான குழம்புகள்  P123
செய்முறை: தேங்காய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். காய்களைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். இதில், கீறிய பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். புளியைக் கரைத்து ஊற்றி… மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், அரைத்த தேங்காய்-சீரக விழுதைச் சேர்த்து வதக்கி… சுரைக்காய், உப்பு, தேவையான தண்ணீர் விட்டு, கொதித்து நன்றாக வெந்ததும் இறக்கவும்.
பூண்டு குழம்பு
தேவையானவை: தோல் உரித்த பூண்டு – ஒரு கப், புளி – எலுமிச்சை அளவு, மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை 30 வகையான குழம்புகள்  P124a
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பூண்டை போட்டு வதக்கவும். இதில் மிளகுத்தூள், சீரகத்தூள் போட்டு… உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, பூண்டு வேகும் அளவு தண்ணீர் விடவும். பிறகு புளியைக் கரைத்து ஊற்றி, நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.
சுண்டைக்காய் குழம்பு
தேவையானவை: பச்சை சுண்டைக்காய், சின்ன வெங்காயம் – தலா ஒரு கப், தேங்காய் துண்டுகள் – 2, பூண்டு – 2 பல், கீறிய பச்சை மிளகாய் – 1, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்,  குழம்பு பொடி – 2 டீஸ்பூன், புளி – நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை 30 வகையான குழம்புகள்  P125
செய்முறை: பூண்டு, வெங்காயம், தேங்காயை பொடியாக நறுக்கவும். சுண்டைக்காயை காம்பு நீக்கி, கழுவி, மத்தால் லேசாக நசுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து… வெங்காயம், பூண்டு, கீறிய பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து வதக்கி, சுண்டைக்காயைப் போட்டு நன்றாக வதக்கவும். இதில் மஞ்சள்தூள், உப்பு, குழம்பு பொடி போட்டு, புளியைக் கரைத்து ஊற்றி (காரம் தேவைப்பட்டால் மிளகாய்த்தூள் சேர்க்கலாம்), சுண்டைக்காய் வேகும் வரை கொதிக்க வைத்து, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
பருப்புக்கீரை குழம்பு
தேவையானவை: பருப்புக்கீரை – ஒரு கட்டு (கழுவி, பொடியாக நறுக்கவும்), துவரம்பருப்பு – முக்கால் கப், பூண்டு – 2 பல், வெங்காயம், தக்காளி – 1, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, தனியாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பச்சை மிளகாய் – 2, சின்ன வெங்காயம் – 5, புளி – நெல்லிக்காய் அளவு, குழம்பு பொடி – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை 30 வகையான குழம்புகள்  P124
செய்முறை: தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, துவரம்பருப்பு, கீரை, தக்காளி, உரித்த பூண்டு பல், கீறிய பச்சை மிளகாய், பாதி அளவு சின்ன வெங்காயம், மஞ்சள்தூள் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வேக வைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து… மீதமுள்ள வெங்காயம், காய்ந்த மிளகாய், சீரகம், தனியாத்தூள், கறிவேப்பிலை, குழம்பு பொடி, உப்பு போட்டு வதக்கி, புளியைக் கரைத்து விடவும். கடைசியில் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து வதக்கி, வேக வைத்த பருப்புக் கலவையில் கொட்டிக் கடைந்து, சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்.
காலிஃப்ளவர்-பட்டாணி குழம்பு
தேவையானவை: காலிஃப்ளவர் (தனித்தனியாக உதிர்த்து வெந்நீரில் போட்டு எடுக்கவும்), பச்சைப் பட்டாணி – ஒரு கப், தக்காளி, வெங்காயம் – தலா 1, பச்சை மிளகாய், தேங்காய் துண்டுகள் – தலா 2, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், தனியாத்தூள், இஞ்சி-பூண்டு விழுது – தலா 2 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்ந்தது – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு, – தேவையான அளவு.
செய்முறை 30 வகையான குழம்புகள்  P126a
செய்முறை: தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். தேங்காய், சீரகத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு வதக்கி… வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு, காலிஃப்ளவர், பச்சைப் பட்டாணி போட்டு, மிதமான தீயில் நன்றாக வதக்கவும். கடைசியில் தேங்காய் – சீரக விழுதைச் சேர்த்துக் கிளறி, தேவையான அளவு தண்ணீர் விட்டு, கொதிக்க வைத்து காய்கறி நன்றாக வெந்ததும் இறக்கவும்.
வாழைப்பூ குழம்பு
தேவையானவை: வாழைப்பூ – 1 (ஆய்ந்து, நடுவில் உள்ள நரம்பை நீக்கவும்), ஒன்றிரண்டாக தட்டிய சின்ன வெங்காயம், தேங்காய்ப்பால் – தலா ஒரு கப், சீரகம் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு – தேவையான அளவு.
செய்முறை 30 வகையான குழம்புகள்  P126
செய்முறை: ஆய்ந்த வாழைப்பூவை சுத்தம் செய்து வேக வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து விட்டு, வெங்காயம், சீரகத்தைப் போட்டு… உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும் வெந்த வாழைப்பூ, தேங்காய்பால் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.
காளான் குழம்பு
தேவையானவை: நறுக்கிய காளான் – ஒரு கப், சின்ன வெங்காயம் – 10, தேங்காய் துண்டுகள் – 2, சீரகம் – ஒரு டீஸ்பூன், மிளகு – 3 டீஸ்பூன், தனியாத்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை 30 வகையான குழம்புகள்  P127
செய்முறை: தேங்காய், மிளகு, சீரகத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு… நறுக்கிய காளான், சின்ன வெங்காயம், அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தண்ணீர் தெளித்து, அடுப்பில் வைத்து தட்டால் மூடவும். லேசாக வெந்ததும் மூடியைத் திறந்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, காளான் வேகும்வரை கொதிக்க வைத்து இறக்கவும்.
குண்டு மொச்சை குழம்பு
தேவையானவை: குண்டு மொச்சை – முக்கால் கப், கத்திரிக்காய் – 2, முருங்கைக்காய், கீறிய பச்சை மிளகாய், தக்காளி, பெரிய வெங்காயம் – தலா 1, புளி – எலுமிச்சை அளவு,  பூண்டு – 2 பல், தேங்காய் துண்டுகள் – 2, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், தனியாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, துவரம்பருப்பு – ஒரு கைப்பிடி, புளி – நெல்லிக்காய் அளவு, மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு – தேவையான அளவு,
செய்முறை 30 வகையான குழம்புகள்  P128
செய்முறை: காய்களை நறுக்கிக் கொள்ளவும். வெறும் கடாயில் மொச்சையை வறுத்து, குக்கரில் போட்டு தண்ணீர் விட்டு, 5 நிமிடம் வேக வைக்கவும் (ஊற வைத்து, வேக வைப்பதனால் 3 விசில் வந்தால் போதும்). துவரம்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, தனியே எடுத்து வைக்கவும். தேங்காய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி, கத்தரிக்காய், முருங்கைக்காய், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கி… மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு, கறிவேப்பிலையை போட்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum