TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


படத்தொகுப்பு மென்பொருள் - பகுதி -1

Go down

படத்தொகுப்பு மென்பொருள் - பகுதி -1 Empty படத்தொகுப்பு மென்பொருள் - பகுதி -1

Post by Tamil Sun Jan 03, 2010 9:44 pm

வணக்கம் நண்பர்களே

என்னுடைய முந்தைய தொடரை(தொழில் முறை டிவிடி உருவாக்கம்) ஆதரித்து ஊக்கம்
தந்த நண்பர்களுக்கு நன்றி. நான் முன்னரே குறிப்பிட்டிருந்த படி இன்று
முதல் ஒளி/ஒலித்தொகுப்பு மென்பொருள் பற்றி காண்போம்.

இன்றைய காலகட்டத்தில் எடிட்டிங் வேலைக்கு பல மென்பொருட்கள் இருக்கின்றன.
அதில் இண்ட்ஸ்ட்ரியல் ஸ்டாண்டர் என்று அழைக்கப்படுவை சில மட்டும். அதில்
முன்னிலையில் இருப்பவை இரண்டு மென்பொருட்கள் மட்டுமே.

1.அவிட் புரோ
2.பைனல் கட் புரோ

இவை இரண்டு மட்டுமே பெரும்பாலும் திரைப்பட ரீதியிலான படத்தொகுப்பு மென்பொருட்கள்.

அவிடே இதில் பிராதானம், பைனல் கட் புரோ(FCP) ஆப்பிள் நிறுவணத்தின்
தயாரிப்பு எனவே கட்டாயம் ஆப்பிள் கணினி வேண்டும் இயக்க. அவிட்
விண்டோஸ்/மேக் கில் இயங்கும் படி உள்ளது.

மேலே சொன்ன இரண்டும் நல்ல மென்பொருட்கள் இன்றைய காலகட்டத்தில் அவற்றிற்கு
போட்டியாக சில மென்பொருட்கள் உள்ளன.அவற்றை கொண்டு வெளிநாடுகளில்
படத்தொகுப்பும் செய்கின்றனர்.

1.அடோப் ப்ரிமியர்
2.பினாக்கில்
3.சோனி வேகாஸ்
4.எடியஸ்

இதில் முதல் இரண்டு மென்பொருட்கள் உங்களுக்கு முன்னரே பரீட்சயம் ஆகி
இருக்கலாம் குறைந்த பட்சம் கேள்விப்பட்டிருக்கலாம். அடோப் நிறுவணத்தின்
மென் பொருளான ப்ரிமியர் தொகுப்பு நம் நாட்டில் கொஞ்சம் பரவலாக
பயன்படுத்தப்பட்டு வருகிறது காரணம் ரெம்ப நாளா பீல்டில் அந்த மென்பொருள்
இருப்பதால்.

பினாக்கில் நம்முடைய திருமண வீடியோ தொகுப்பாளர்களின் விருப்பமாக
இருக்கிறது காரணம் எளிதான முறை ,திருமண வீடியோக்களுக்கு ஏற்ற
டெம்ப்ளட்டுகள், எபக்ட்டுகள் போன்றவை.

எல்லா மென்பொருட்களும் ஒன்றே அவை வித்தியாசப்படும் அளவீடுகள் சில முறைகளை சார்ந்ததே. அவை

1. வெளியீட்டு தரம்
2. உள்ளீட்டு முறைகள்
3. புரிந்து கொள்ளும் தன்மை
4. நீட்சிகள்(ப்ளக்கின்) / உதவிகள்

வெளியீட்டு தரம் எல்லா தொழில்நுட்ப மென்பொருட்களிலும் பெரும்பாலும் ஒரே
முறையில் இருக்கும். உள்ளீட்டு முறைகள் இன்றைய காலகட்டத்தில் எல்லா
மென்பொருட்களும் எல்லா பார்மட்டுகளையும் ஏற்றுக்கொள்கிறது. இந்த கடைசி 2
பாயிண்டுகள் தான் நமக்கு முக்கியம்.

புரிந்து கொள்ளும் தன்மை, அவிட் , fcp போன்றவை புதிய பயனர்கள் எளிதில்
புரிந்து கொள்ளும் தன்மையில் இல்லை என்பது உண்மை காரணம் அவற்றின் உயர்வான
நிலை. இந்த அவிட் மென்பொருளை பின்பற்றி இடைமுகப்பை (interface)கொண்டுள்ள
மென்பொருட்கள் பிரிமியர் மற்றும் இடியஸ். எனவே இவற்றையும் கவனிக்கும்
புதிய பயனருக்கு(user) இந்த வகை மென்பொருட்களை கண்டாலே பயம் ஏற்படும்.

நீட்சிகள் என்று அழைக்கப்படும் ப்ளக்கின்கள் பெரும்பாலும் முன்னிலையில்
உள்ள நிறுவனங்களுக்கே அதிகமாக கிடைக்கின்றன. அந்த வகையில் அதிகம் காசு
பார்ப்பவர் முதல் இரண்டு நிறுவணங்களும் , அடோப்பும் மட்டும். பினாக்கில்
இந்த நீட்சிகளின் மூலமாக தான் பொழப்பை நடத்திக்கொண்டிருக்கிறது என்று
சொன்னால் மிகையில்லை. அந்த வகையில் பினாக்கில் கொஞ்சம் விலை குறைவே. ஒரு
யுஎஸ்பி கேப்சர் கார்ட் பினாக்கிலில் வாங்கினாலே போதும் உடனே ஒரு
பினாக்கில் மென்பொருள் சேர்த்தே கொடுத்துருவாங்க .

நம்மில் பெரும்பாலோனர் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்து பல குறிப்புகள்,
மின் புத்தகங்களை படித்து முயற்சி செய்தாலும் சில அடிப்படை தொழில்நுட்ப
தகவல்கள் தெரியாததாலும், இடைமுகப்பின் குழப்பமான சூழலும் நமக்கு பெரும்
பின்னடைவை தரும் என்று சொல்லுதல் மிகையாகாது.

நான் உங்களுக்கு இந்த தொடரில் தரமான ஒரு தொழில் நுட்ப ரீதியிலான
மென்பொருளை பற்றி சொல்லலாம் என்று நினைக்கிறேன். இந்த மென்பொருளின் தரம்
பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஆங்கிலப்படங்கள் இந்த மென்பொருளில்
தொகுக்கப்பட்டுள்ளது(எடிட்) . மேலும் வீடியோ துறையில் ஒரு உலகப்புகழ்
பெற்ற நிறுவணத்தின் வெளியீடு. மிக எளிதான் விண்டோஸின் அமைப்பை கொண்ட
இடைமுகப்பு இதனை விண்டோஸ்/மேக் இரண்டிலுமே இயக்கலாம். சரி பில்டப் போதும்
அந்த மென்பொருளின் பெயர் சோனி வேகாஸ்
படத்தொகுப்பு மென்பொருள் - பகுதி -1 Vegaspro9


ஆம்
சோனி நிறுவனத்தின் தயாரிப்பு தான் இந்த சோனி வேகாஸ். சோனி நிறுவனத்தில்
இதே போல நிறைய மென்பொருட்கள் வெளியிடப்படுகின்றன. அந்த நிறுவணத்தின் இணையத்தளத்தில் நீங்கள் காணலாம். மேலும் எல்லா மென்பொருட்களுக்கும் இலவச சோதனைகால தொகுப்பு உள்ளது. நீங்கள் தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்.



இந்த மென்பொருளை தேர்ந்தெடுக்க காரணங்கள்



1.எல்லோருக்கும் பார்த்தவுடன் குழப்பம் ஏற்படா இடைமுகப்பு

2.தொழில் நுட்ப ரீதியிலானது

3.கையாள எளிது



மேலும்
என்னுடைய நோக்கம் ஒரு மென்பொருளை கற்பிப்பது அல்ல வீடியோ எடிட்டிங்கை
பற்றி சொல்லித்தருவதே அதனை ஒரு எளிய அதே நேரத்தில் தரமான மென்பொருள்
கொண்டு விளக்கும் போது உங்களுக்கு எளிதில் புரிந்து கொள்ள முடியும்
அதனைக்கொண்டு நீங்க இன்ன பிற மேலே சொன்ன மென்பொருட்களையும் கையாளலாம்
எளிதாக.



விருப்பப்படும் நண்பர்கள் இந்த மென்பொருளை நிறுவிக்கொள்ளுங்கள் அடுத்த பகுதியில் இருந்து நேரடியாக மென்பொருளுக்கு செல்வோம்.



தொடரும்.... thanks:ennuleyblogs
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

படத்தொகுப்பு மென்பொருள் - பகுதி -1 Empty Re: படத்தொகுப்பு மென்பொருள் - பகுதி -1

Post by Tamil Mon Jan 04, 2010 11:33 pm

எல்லோரும் வேகாஸை தரவிறக்கி நிறுவியாச்சா? நான் உங்களை போர் அடிக்காமல் பாடத்திற்கு கூட்டிச்செல்கிறேன்.

படங்களை முழுவதும் காண படத்தினை க்ளிக் செய்யவும்.

வேகாஸை இயக்க தொடங்குகள்

படத்தொகுப்பு மென்பொருள் - பகுதி -1 Vegas


வேகாஸ்
இயங்க தொடங்கும் பொழுது இந்த திரை தோன்றி அதனுடைய பதிப்பு , இந்த
மென்பொருள் யார் பெயரில் வாங்கப்பட்டுள்ளது போன்ற விவரங்களை காட்டி ஓடும்.



பிறகு எல்லாம் லோட் ஆன உடன் பின் வரும் வேலைக்கேற்ற திரை தோன்றும்





படத்தொகுப்பு மென்பொருள் - பகுதி -1 VEGAS-SCREEN


மேலே உள்ள படத்தில் ஆங்கிலத்தில் எழுத்துக்களை குறிப்புகளாக கொடுத்துள்ளேன் அவற்றை காண்போம் இப்பொழுது.



மேலே உள்ள திரை தான் நாம் வேலை செய்யபோகும் திரை வேகாஸின் எளிமை இரண்டு படங்களிலே தெரிய ஆரம்பித்துள்ளது.



பொதுவாக
இந்த மாதிரியான தொழில் முறை எடிட்டிங் மென்பொருட்களில் இந்த ஸ்டெப்லே
நம்மை கேள்வி கேட்டு திண்டாட வைச்சிடுவாங்க. ஆனால் அந்த மாதிரி
வேலையெல்லாம் செய்யாம வேகாஸ் உள் நுழைந்துவிடும் இந்த முறை விண்டோஸின்
இயக்கு முறை போன்றது எனலாம்.


சரி மற்ற மென்பொருட்களில் ஆரம்பத்தில் என்ன கேட்க்கும்? இந்த கேள்வி
நியாயமானதே. பொதுவாக சேமிக்கும் இடம் , நீங்கள் செய்யப்போகும்
வேலை(புராஜக்ட்) பண்புகள் பற்றி ஆரம்பத்திலே தீர்மானிக்க சொல்லி கேட்கும்.
இந்த கேள்விகள் அவசியம் என்றாலும் அந்த மென்பொருட்களில் சாதாரண பயனருக்கு
புரியும் படி கேள்விகள் இருக்காது பின், புராஜக்ட் போன்று இருக்கும் எனவே
ஒரு புது பயனர் குழம்பிவிடுவார் இல்லை இல்லை பயந்து விடுவார். சரி
படத்தில் உள்ள குறிப்புகளை காண்போம்.

A - சில டேப் கள் இருக்கிறது அவைகள் பின் வருவன

1.Project media - நாம் ஒரு புராஜக்ட்டில் இணைத்துள்ள மீடியாக்கள் இங்கு
காட்டப்படும், மீடியா என்பவைகள் - வீடியோ,ஆடியோ , இமேஜ் போன்றவைகள்.

2.Explorer - நம்ம விண்டோஸ் எக்ஸ்புளோரர் தான் மீடியாக்களை எளிதில் தேட இங்கே எக்ஸ்புளோரர் இணைக்கப்பட்டுள்ளது.

3.Transitions - இரண்டு வீடியோக்களுக்கு இடையே மாறும் பொழுது கொடுக்க கூட
ஒரு வகை இயக்கம் சார்ந்த எபக்ட்டே டிரான்சிசன்ஸ். உதாரணமாக
படங்களில்(பழைய) பார்த்திருக்கலாம் ஒரு காட்சி முடிந்து மற்றொரு
காட்சிக்கு செல்லும் பொழுது ‘பூ’ வடிவம் அல்லது முக்கோனம் , சதுரம் ,
இழுத்து விடுதல் போன்ற எபெக்ட்டில் நகரும் இவையே டிரான்ஸிசன்

4.video FX - இது எதற்கு என்றால் இதனை கொண்டு ஒரு வீடியோவில் தேவையான
மாற்றங்கள் செய்யலாம் , வண்ணம் , க்ரோமோ கீ , குக்கீ கட்டர் போன்ற நிறைய
எபக்டுக்கள் இருக்கின்றன. இவை ஆரம்பத்தில் கேட்க புரியாதது போல் இருக்கும்
ஆனால் வேகாஸில் இவற்றை எளிதாக கையாளலாம் என்பது நமக்கு கூடுதல் வசதியே
பின்னால் பார்க்கலாம்.

5.Media Generators : இந்த மீடியா ஜெனரேட்டரை கொண்டு நாம் டைட்டில் ,
பின்புலம் போன்றவற்றை உருவாக்கலாம் இது மென்பொருளிலே உள்ள இன்பில்ட் வசதி .

மேலே சொன்ன எல்லாம் எளிதில் கையாளும் படி வேகாஸில் இருக்கு இந்த
டேப்புகள் தெரியவில்லை எனில் view மெனு சென்று எல்லாவற்றையும்
தெரியவைக்கலாம். இவைகளை பற்றி தேவையான பொழுது விளக்கமாக காணலாம்.

B - இது ப்ரிவியூ திரை இதிலே செய்யும் வேலையை இயக்கி ப்ரிவியூ பாக்கலாம்
இது ஹார்ட்வேர் சார்ந்து இயங்கும் படியும் செய்யலாம் உங்களுடைய கணினியில்
இருந்து வீடியோ அவுட் எடுக்கும் வசதி இருப்பின் அதனை கொண்டு இந்த
ப்ரிவியுவை அருகில் உள்ள டிவியில் பார்க்கலாம். இல்லை இரண்டு மானிட்டர்கள்
இருந்தால் அதில் ஒன்றை ப்ரிவியூவிற்காக பயன்படுத்தலாம். பொதுவாக இந்த
மாதிரி வேலைக்கு இரண்டு மானிட்டர் ஒரு டிவி வைத்துக்கொள்வது நல்லது.

C - இது ஒலி ஈக்குலைசர் மெதுவாக பார்க்கலாம்

D - வீடியோ/ஆடியோ பான்(pan) மேலே திரையில் காலியாக உள்ளது

E - இது டைம் லைன் இங்கே வீடியோ ஆடியோ லேயர்கள் வைக்கலாம். இதுவும் காலியாக உள்ளது

F - இது ப்ளே கர்சர் அதாவது வீடியோவை சரியான இடத்தில் டைம்லைனில் இயக்கி பார்க்க பயன்படுகிறது

G - இது வீடியோ ப்ளே ரேட் அதாவது 0.00 வில் டீபால்டாக இருக்கும் பொழுது
வீடியோ எப்பொழுதும் போல ஓடும் ரேட்டை அதிகரித்தால் வேகமாக ஓடும்
குறைத்தால் மெதுவாக ஓடும்.

H - இது ஒரு ப்ளேயரில் உள்ள ப்ளேபேக் கண்ட்ரோல்கள்

I - இது ப்ளே கர்சர் நிற்கும் இடம் இந்த டீட்டெய்லை வீடியோ/ஆடியோ பான் க்கு மேலேயும் காணலாம்.

சரி இந்த திரையில் எப்படி ஒரு வீடியோ ஆடியோவுக்கான லேயர்களை கொண்டு வருவது பின்வரும் படத்தினை கவனியுங்கள்

படத்தொகுப்பு மென்பொருள் - பகுதி -1 INSERT


டைம்லைனில் வைத்து ரைட் க்ளிக் செய்தால் மேலே படத்தில் காட்டியுள்ள படி (பச்சை வண்ணம்) துனை மெனு தோன்றும் அதில்



open - சென்றால் நேரடியாக ஒரு ஆடியோ/வீடியோ/இமேஜ் போன்றவற்றை இனைக்கலாம்



insert audio track -இதை தேர்வு செய்தால் ஒரு ஆடியோ டிராக் தோன்றும்



insert video track - இதை தேர்வு செய்தால் ஒரு வீடியோ டிராக் தோன்றும்



preference
- இதை பற்றி பின்னால் பார்ப்போம் அதாவது இந்த வேலை செய்யும் சூழ்நிலை
மற்றும் மென்பொருளில் உள்ள வசதிகளை மாற்றி அமைக்க பயன்படுத்தப்படும்
அமைப்பே இது. சிம்பிள்ளா விண்டோஸில் பொதுவாக வரும் ஆப்சன்ஸ் எனும் மெனுவை
ஒத்தது.





படத்தொகுப்பு மென்பொருள் - பகுதி -1 VIDEO-AUDIO


மேலே படத்தில் ஒரு வீடியோ/ஆடியோ டிராக் சேர்க்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது



அடுத்த பகுதியில் சந்திப்போம்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» இலவச ஆல் இன் ஒன் மென்பொருள் மற்றும் லைசென்ஸ் கீகள் மீட்டெடுக்க மென்பொருள்
» கணிதம் கற்றுக் கொள்ள மென்பொருள் இலவசமாக மருத்துவ மென்பொருள் இலவசமாக
» ஏழாம் அறிவு ‍-‍ போஸ்டர் மற்றும் அரிய படத்தொகுப்பு
» இப்பொழுது வன்னி நிலம் எப்படி உள்ளது – படத்தொகுப்பு
» பக்தி முற்றி பித்து பிடித்துவிட்டவர்களின் சிவதாண்டவ நடனம்.படத்தொகுப்பு.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum