TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


செய்தித் துளிகள்.............................காலையில் படித்த சில செய்திகளில் இருந்து........................

2 posters

Go down

செய்தித் துளிகள்.............................காலையில் படித்த சில செய்திகளில் இருந்து........................ Empty செய்தித் துளிகள்.............................காலையில் படித்த சில செய்திகளில் இருந்து........................

Post by sakthy Sun Sep 23, 2012 4:43 pm

செய்தித் துளிகள்.............................காலையில் படித்த சில செய்திகளில் இருந்து........................
…....இந்தியாவின் சாஞ்சியில், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெளத்த பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டி,சகிப்புத்தன்மையின் அவசியம் பற்றி பேசிக்கொண்டிருந்த போது,முல்லைத்தீவில் அவரது இராணுவ படைகள்,இராணுவத்தின் புலனாய்வுதுறையினர் தமிழர்கள் மீது, மீது சகிப்புத்தன்மையற்ற, வெறுப்புடன் கூடிய வன்முறை தாக்குதல்களை நடத்தினார்கள்.
…...கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா செயல்படுவதாக ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் கூறியுள்ளது.ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப்பூர்வ ஏடான ஆர்கனைஸர். வெளிநாட்டு நிதியிலிருந்து தீவிரவாதம் செய்வது யார்? வெளிநாட்டு நிதியிலிருந்து இந்தியாவை பல மடங்காக உடைக்க துடிப்பவர்கள் இந்த காவி கயவர்கள் என்பது நாடறிந்த உண்மை என்கிறார்கள் சிலர்.
….....காவிரி நதி நீர் பிரச்சனைக்கு, எஸ்.எம்.கிருஷ்னாவின் தமிழர்களுக்கு எதிரான கர்நாடக சார்பு புதிய ஐடியா .
….....இந்தியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் சார்பில் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ நடத்தப்பட்டு வருகிறது. இதன் 6வது சீசன் அக்டோபர் 7ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதில் பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சீசனில் நித்தியானந்தர் பங்கேற்க உள்ளதாக அவருடைய செய்தித்தொடர்பாளர் டாலே பக்வகர் தெரிவித்துள்ளார்.

…......கொள்கை மாறுபாடுகள் ஏற்பாட்டாலொழிய, நாங்கள் கூட்டணியிலிருந்து விலகுவதில்லை,என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.ஒரு நாட்டின் பிரதமரையோ, அதிபரையோ வரவேற்பது என்பதும், உபசரிப்பது என்பதும் மரபுகள். அந்த மரபினை, மத்திய அரசு பின்பற்றுவதாக நமக்கு பதில் சொல்கிறார்கள். ஆனால், இப்போதுள்ள சூழ்நிலையில், இலங்கையிலே தமிழ் மக்கள் கொடுமைப்படுத்தபட்ட பின், இவ்வளவு எதிர்ப்புகளுக்கிடையே, ராஜபக்ஷேயின் இந்திய வருகையை தி.மு.க., மாத்திரமல்ல; தமிழகத்திலே உள்ள எல்லா எதிர்க் கட்சிகளும் கண்டித்தும் கூட, அவருக்கு வரவேற்பு அளித்தது உசிதமல்ல. கருணானிதியின் புதிய டுமீல்.
…...அரைகுறையாக துண்டிக்கப்பட்ட அண்ணா வளைவை, ஒட்ட வைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், கடந்த 20 நாட்களாக, வளைவு, கிரேனில் தொங்கிக் கொண்டு இருக்கிறது. இதுவரை அதை தாங்கி பிடிக்கும் செலவு, 80 லட்சம் ரூபாயை நெருங்கி உள்ளது. அண்ணாவை கழுத்தில் தொங்கவிட்ட அரசு.
…...மத்திய பிரதேச மாநில ஆளும் பாரதிய ஜனதா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே அழைக்கப்பட்டு அடிக்கல் நாட்டு விழா நடந்து முடிந்துவிட்டது. ராஜபக்சேவின் வருகையைக் கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அந்த மாநிலத்துக்கே போய் தமிழன் யார் என்று காட்டிவிட்டு வந்திருக்கிறார். ஆனால் தமிழக பாஜகவோ இப்போதுதான் ராஜபக்சேவை அடிக்கல் நாட்ட அழைத்ததற்கு கண்டனம் தெரிவித்து, ராஜபக்சே பேச்சு வேதாளம் வேதம் ஓதுவது போல் இருக்கிறது,இது தெரியுமா சுஷ்மாவிற்கு?
…......வடகிழக்கு மாநிலமான திரிபுரா தலைநகர் அகர்தலாவிலிருந்து வங்கதேச தலைநகர் டாக்கா நோக்கி நேற்று திரிபுரா மாநிலப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. வங்கதேசத்திலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நர்சிங்க்டி என்ற இடத்தில் பேருந்து சென்றபோது அடையாளம் தெரியாத ஒரு கும்பல் வழிமறித்து பேருந்துக்கு தீவைத்தது.
…....மதுரை அருகே 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தால் பெரும் பரபரப்பு ஏறபட்டுள்ளது.

…....காதலிக்க மறுக்கும் பெண்களை கொலை செய்வது, திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்துவது, இல்லையெனில் தீர்த்துக் கட்டுவது போன்ற பெண்களுக்கு எதிரான கொடூரச் செயல்கள் தொடருகிறது.இது தான் தமிழனின் நாகரீகம் என்று சொல்கிறார்கள்.
…....எமது நிலம் எமக்கு வேண்டும், என்ற முழக்கத்துடன் பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் ஜெனீவாவில் திரண்டுள்ளார்கள்.‏ ஜெனீவா ஐ.நா சபை முன்பாக முருகதாசன் திடலில் இடம்பெற்ற பொங்குதமிழ் 2012 நிகழ்வில் ஐரோப்பிய தேசமெங்குமிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பேரெழுச்சியுடன் கலந்து கொண்டனர்.
…....பூந்தமல்லி தடுப்புவதை முகாமுக்குக் கொண்டுவந்து தள்ளப்பட்ட நாளான செப்டம்பர் 17ம் நாளிலிருந்து மீண்டும் அதே கோரிக்கையை முன்வைத்து நீரும் அருந்தாது பட்டினிப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார் செந்தூரன். அவரது போராட்டம் இன்று ஆறாவது நாளாகத் தொடர்கிறது .தமிழகத்தில் பூந்தமல்லி தடுப்பு முகாமில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் செந்தூரன், 'பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் உள்ள உறவுகள் அனைவரும் திறந்தவெளி முகாமிற்கு மாற்றப்பட்டு தங்களது குடும்பங்களுடன் இணைந்து வாழ அனுமதிக்க வேண்டும் ' என்ற கோரிக்கையை முன்வைத்து ஆகஸ்டு 06ம் நாள் அன்று உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினார் என்பது அறிந்ததே.
ஆகஸ்ட் 06ம் நாள் முதற்கொண்டு ஆகஸ்ட் 20ம் நாள் வரையான 16 நாட்கள் தொடர்ந்த இந்த உண்ணாநிலைப் போராட்டத்தின் போது செந்தூரனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் எதற்கும் தமிழக அரசு செவிசாய்க்காத நிலையில், 20ஆம் நாள் முதல், நீரும் அருந்தாது தனது பட்டினிப் போராட்டத்தை தீவிரப்படுத்தினார் செந்தூரன். 10 நாட்களாக நீரும் அருந்தாது பட்டினிப் போராட்டத்தை அவர் தொடர்ந்த நிலையில், ஆகஸ்ட் 31ம் நாள் அன்று இரவு 8 மணியளவில் மயங்கிய நிலையில் இருந்த செந்தூரனை - அவரது அறப்போராட்டத்தை.. இழிவுபடுத்தி, 'தற்கொலைக்கு முயன்றார்' என்ற கூசாமல் குற்றம் சுமத்தி 'புழல்' சிறைச்சாலையில் அடைத்தது தமிழகக் காவல்துறை.
…...இலங்கை கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன், இந்த வருட இறுதியில் திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இவர் ராஜபக்சேயின் புதிய ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
…........இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்ற விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப்படும்....இந்தியா என்ற நாராயண சுவாமி.…....
பிரபாகரனின் பாதாள வீட்டை குண்டு வைத்து தகர்த்தது சிங்கள இராணுவம்.
….....தற்கொலையில் முடிந்த பேஸ்புக் காதல்.திடுக்கிடும் புதிய தகவல்கள்,அவிழாத மர்ம முடிச்சுக்கள்...
…...கோவை கணபதி கணேஷ்- அஜிதா தம்பதியினரின் 9 வது படிக்கும் 14 வயது மகள் அபிநயா வுடனான ஒரு தலைக் காதலை அபினயா ஏற்காததால் எதிர்வீட்டு 21 வயது வேணுகோபால் கழுத்தை வெட்டி கொலை செய்ததுடன் தானும் கழுத்தை வெட்டிக் கொண்டார்..காதல் படுத்தும் பாடு.
…....கொமன்வெல்த் நாடாளுமன்றச் சங்கத்தின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கொழும்பு வந்த பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கடந்தவாரம் அலரி மாளிகையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்த போது, பாகிஸ்தானின் உதவியும் ஆதரவும் கிடைக்காது போயிருந்தால், விடுதலைப் புலிகளைத் தோற்கடித்திருக்கவே முடியாது என்று நன்றியுடன் குறிப்பிட்டிருந்தார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ.அதைத் தொடர்ந்து, இந்தியாவின் நீர்மூழ்கிகளின் நடமாட்டம் மற்றும், கடற்படையின் தகவல் தொடர்புகளைக் கண்காணிக்க பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவான ஐஎஸ்ஐ, யாழ்ப்பாணத்தில் இரகசிய முகாமை அங்குள்ள முஸ்லிம்கள் உதவியுடன் அமைத்துள்ளது.
…....இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தை அரசியல்மயப்படுத்த வேண்டாம் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் கோரிக்கை விடுத்துள்ளார்.இலங்கைத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களின் நலனைக் கருத்திற் கொள்வோர், ஜனாதிபதி மஹிந்தவின் விஜயத்தை அரசியல் மயப்படுத்த மாட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எது அரசியல் என விளக்கம் கேட்கிறார்கள்.

…...முகமது நபிகளை அவதூறாக சித்தரித்து திரைப்படமெடுத்த அமெரிக்கர் தலைக்கு 1 லட்சம் அமெரிக்க டொலர்களை பரிசாக தருவதாக பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.சல்மான் றுஸ்டியின் தலையின் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது தெரிந்ததே.
…...சில்லறை வணிகத்தை அனுமதித்து அரசாணை வெளியிட்டுள்ள மத்திய அரசை கண்டித்து, வரும் 25-ந் தேதி முதல் ஒரு வாரம் தமிழகத்தில் உள்ள எல்லா கடைகளிலும் கறுப்பு கொடி ஏற்றி போராட்டம் ...
…..டீசல் விலை உயர்வு, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு அனுமதிக்கு எதிராக, நாடு முழுவதும் நடத்திய,பந்த் போராட்டத்திற்கு, தி.மு.க ஆதரவு அளித்ததே தவிர, போராட்டம் நடத்த முன்வரவில்லை.
பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்கிற ரீதியில், மத்திய அரசுக்கு எதிராக நடக்கும், பந்த் போராட்டத்திற்கு ஆதரவு மட்டும் தெரிவித்து விட்டு, போராட்ட களத்தில் குதிக்காமல் ஒதுங்கிய, தி.மு.க.,வின் செயல்பாடு......??????

சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

செய்தித் துளிகள்.............................காலையில் படித்த சில செய்திகளில் இருந்து........................ Empty Re: செய்தித் துளிகள்.............................காலையில் படித்த சில செய்திகளில் இருந்து........................

Post by ஜனனி Sun Sep 23, 2012 5:20 pm

செய்தித் துளிகள்.............................காலையில் படித்த சில செய்திகளில் இருந்து........................ 471843 செய்தித் துளிகள்.............................காலையில் படித்த சில செய்திகளில் இருந்து........................ 471843 செய்தித் துளிகள்.............................காலையில் படித்த சில செய்திகளில் இருந்து........................ 471843
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum