TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


7 _ 7 _ 7 _ 7 ….................................................பொதுஅறிவை வளர்க்க நான்கு ஏழுகள்.

5 posters

Go down

 7 _ 7 _ 7 _ 7 ….................................................பொதுஅறிவை வளர்க்க நான்கு ஏழுகள்.  Empty 7 _ 7 _ 7 _ 7 ….................................................பொதுஅறிவை வளர்க்க நான்கு ஏழுகள்.

Post by sakthy Tue Sep 18, 2012 6:11 pm

7 _ 7 _ 7 _ 7 ….................................................பொதுஅறிவை வளர்க்க நான்கு ஏழுகள்.

உலகின் கடல் கீழ் அதிசயங்கள்- 7

1.The Galapagos Islands: கலாபகசுத் தீவுகள்- பசுபிக் கடலில் ஈகுவாடோருக்கு மேற்கே 965 கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் தீவுக் கூட்டங்கள் ஆகும். கிட்டத்தட்ட 30,000 பேர் வசிக்கும் இத்தீவுகள் தென் அமெரிக்கவின் ஈகுவாடோரின் ஒரு மாகாணம் ஆகும். இதன் தலைநகரம் புவெர்ட்டோ பாக்குவெரிசோ மோரெனோ (Puerto Baquerizo Moreno). சார்ள்ஸ் டார்வின் கடல் வழியே HMS Beagle என்னும் கப்பலில் காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகளுக்காக இத்தீவுகள் பெருமை அடைந்தன.
இங்கு 13 பெரிய தீவுகளும் 6 சிறிய தீவுகளும் 107 சிறிய தீவுத் திட்டுகளும் உள்ளன. இந்தத் தீவுகள் புவியியல் உயர் வெப்பப் பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு எரிமலை வெடிப்பு அடிக்கடி இடம்பெறுவதுண்டு. மிகப் பழைய தீவு சுமார் 5 முதல் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது. மிகவும் அண்மையில் 2007 இல் இடம்பெற்ற எரிமலை வெடிப்புகளினால் இசபெல்ல தீவு, பேர்டினட்டீனா தீவு ஆகியன உருவாகின.இந்தப் பகுதிகளில் வெவ்வேறு வகையான அழகிய கடல் உயிரினங்களும்,திமிங்கில,ஆமை வேட்டைகளும் இடம்பெறுகின்றன.School of Hammerhead Sharks, Wolf Island, Goatfish and a Burrito Grunt,Diver, Hogfish and Parrotfish, Darwin Island,Long-nose Hawkfish.Coral Hawkfish, Large-Banded Blenny,Diver and Southern Stingray,Male Frigate bird,நீலக் கால்களுடன் பூபி (Blue-footed booby) போன்றவை பெயர் போனவை.

2. The Northern Red Sea: இந்த செங்கடலை கிரேக்க மொழியில் Erythra thalassa (எரித்ர தலசா) என்றும், இலத்தீன் மொழியில் Mare Erythraeum (மரே எரித்ரயம்) என்றும் குறிப்பிடப்படுவதால் முன்பு இதனை எரித்ரயன் சீ (Erithreyan sea) என்று அழைப்பர். இச்சொல் தமிழ் மொழியில் இருந்து வந்திருக்கக் கூடும். எரி + திரை - எரிதிரை என்பது திரிந்து எரித்ரயன் சீ என்றாகியிருக்கலாம்.முன்னர் யவணர்,கிரேக்கர் உடனான வர்த்தகத்தில் இந்தப் பகுதி பெரும் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.செங்கடல் (Red Sea) ஆபிரிக்காவுக்கும்,ஆசியாவுக்கும் இடையில் இந்திய பெருங்கலின் நுழைவாயிலில் அமைந்துள்ளது. செங்கடலை இந்தியப் பெருங்கடலுடன் தெற்கே பாப்-எல்-மாண்டெப் நீரிணையும் ஏடன் வளைகுடாவும் இணைக்கின்றன.வடக்கே சினாய் குடா, அக்காபா,சூஜெஸ் வளைகுடா ஆகியன இணைக்கின்றன.செங்கடலின் மொத்தப் பரப்பு ஏறத்தாழ 174,000 சதுர மைல்களாகும். கிட்டத்தட்ட 1,900 கிமீ நீளமும், 300 கிமீ அகலமும் கொண்டது. இதன் அதிகூடிய ஆழம் 2,500 மீற்றர்கள் ஆகும்.70 விதமான கடின பவளக்கற்களும்( coral),30 வகையான மென் பவளக்கற்களும்,500 ற்கு மேற்பட்ட மீனினங்களும்,100 ற்கு மேற்பட்ட முதுகெலும்பற்ற கடல் உயிர் இனங்களும் கானப்படுகிறது.

3.Palau: பலாவு, பலாவுக் குடியரசு, பசுபிக் பெருங்கடலில் உள்ள ஒருதீவாகும். இது பிலிப்பைன்ஸில் இருந்து 800 கிமீ கிழக்காகவும்,டோகியோவிற்கு 3200 கிமீ தெற்காகவும் அமைந்துள்ளது. இது உலகின் வயதில் குறைந்த,சிறிய நாடாகவும் விளங்குகிறது. 350 ற்கு மேற்பட்ட கடின பவளப்பாறைகளும்,200 ற்கு மேற்பட்ட மென் பவளப்பாறைகளும்,300 ற்கு மேற்பட்ட கடற் பஞ்சுகளும்,1300 விதமான பவளப்பாறை மீனினங்களும் காணப்படுகின்றன.

4.Lake Baikal: பைக்கால் ஏரி ரஷ்யாவில்,சைபீரியாவில் உள்ள நன்னீர்பேரேரி,உலகில் உள்ள ஏரிகள் யாவற்றினும் மிக ஆழமும் (1637 மீட்டர்), மிக அதிகளவு (23,600 கன கிலோமீட்டர்) நீரும், மிகப்பழைய ஏரியும் இதுவே. இது ஐக்கிய நாட்டுகள் நிறுவனத்தால் உலக வரலாற்றுச்சிறப்பு இடம் என்று தேர்ந்தெடுக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது. உலகின் 20 வீத நன்னீரை கொண்ட இது, 30 மில்லியன் ஆண்டுகள் பழமையானது. இங்குள்ள உயிரினங்களில் 80% வேறெங்கும் காண இயலாதவை எனவும், 1085 வகையான நீர்வாழ்ச் செடிகொடி இனங்களும் 1550 நீர்வாழ் விலங்கினங்களும் இருப்பதாகவும் அறிந்துள்ளனர்.

5.The Great Barrier Reef: பெரும் தடுப்புப் பவளத்திட்டு (The Great Barrier Reef) உலகின் மிகப் பெரிய பவளப்பாறைத் திட்டுத் தொகுதியாகும். இது 2,900 தனித் திட்டுக்களையும், 2,600 கிமீ தூரம் நீண்டிருக்கும் 900 தீவுகளையும், 344,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்துள்ளது. இது வடகிழக்கு அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் பவளக்கடலில் (Coral Sea) அமைந்துள்ளது. பெரும் தடுப்புப் பவளத்திட்டு,உயிரினங்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய அமைப்பாகும். இதனை விண்வெளியில் இருந்தும் பார்க்க முடியும். இந்தப் பவளத்திட்டு அமைப்பு பல கோடிக்கணக்கான நுண்ணிய உயிரினங்களாலும், உயிரினங்களின் வாழ்விடமாகவும் உள்ள பெரும் தடுப்புப் பவளத்திட்டு1981 ல் ஆண்டில் உலகின் பாரம்பரிய களமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இப் பவளத்திட்டின் பெரும் பகுதி,பெரும் தடுப்பு பவளத்திட்டு கடல்சார் பூங்கா திட்டத்தினால் பாதுகாக்கப்படுகிறது.

6.The Deep Sea Vents: கடலின் நிலப் பகுதியில் சிறிய துளைகளில் இருந்து சூடான நீர் உருவாகி மேலே வருகிறது.1970 ல் கலபாகோஸ் தீவுகளுக்கு அருகே கண்டு பிடிக்கப்பட்ட இவை, பசுபிக் அத்திலாந்தா கடலில் 2100 மீ. ஆழத்தில் உருவாகிறது. நில படுகைகளில் நிலத்திற்குக் கீழே நிலக் குழம்புகளினால்(magma) சூடேற்றப்பட்டு,360 பாகையளவில்,மேலே வரும் போது இடுக்குகளில் உள்ள கந்தகம் போன்ற கனிமங்களையும் கரைத்து கடல் மேற் பகுதிக்கு கரு நிறமாக குழாய் போல் வளர்ந்து,9 மீ உயரத்திற்கு மேலாக,ஒரு கரிய புகை போக்கி போல்,black smoke, வருகிறது. இதன் அருகே கடல் உயிரினங்களும் காணப்படுகின்றன.

7.The Belize Barrier Reef: இரண்டாவது பெரிய தொடர் பவளப்பாறைகள், பெலிசி கடற்கரைப் பகுதியில் இருந்து 300 மீ வடக்கும் 40 கிமீ தெற்கிலும் அமைந்துள்ளது.70 கடும் பவளக்கற்பாறைகளும்,36 மென் பவளப்பாறைகளும்,500 ற்கு மேற்பட்ட மீன் இனங்களும் கொண்ட இது கங்குன்னில் இருந்து கொண்டுராஸ் வரையான 300 கிமீ நீளம் கொண்டது.இதை டார்வின்,the most remarkable reef in the West Indies என்று குறிப்பிட்டதாக் குறிப்பிடப்படுகிறது.

உலகின் தொழில்சார்ந்த அதிசயங்கள் - 7

1.The SS Great Eastern: என்பது Isambard Kingdom Brunel ஆல் வடிவமைக்கப்பட்டு, ஜே எஸ் ரஸ்செல் கம்பனியால் 1858 ல் உருவாக்கப்பட்ட இரும்பினால் ஆன நீராவிக் கப்பலாகும்.215 மீ நீளமும் 17274 -21035 தொன் நிறையும் கொண்டதும் 4000 பயணிகளை கொண்டு செல்லக் கூடியதும் ஒரு முறை நிரப்பிய எரிபொருளுடன் உலகை வலம் வரக் கூடியதுமான கப்பலாகும்.

2.The Brooklyn Bridge:புரூக்ளின் பாலம்,அமெரிக்க,நியு யோர்க் மாநிலத்தில் உள்ள பழமையான தொங்குபாலங்களில் ஒன்றாகும். 1825 மீ நீளமுள்ள இப்பாலம் கிழக்கு ஆற்றின் மீது மன்ஹற்றனில் இருந்து புருக்ளின் வரை கட்டிமுடிக்கப்பட்ட போது, இதுவே உலகின் மிகப்பெரிய தொங்குபாலம் ஆகும்.இப்பாலத்தின் கட்டுமானப்பணிகள் ஜனவரி 3, 1870-ல் தொடங்கி பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மே 24, 1883-ல் இது கட்டி முடிக்கப்பட்டது. முதல் நாள், மொத்தம் 1,800 ஊர்திகளும் 150,300 மக்களும் இப்பாலத்தைக் கடந்தனர்.துரதிஸ்டவசமாக கட்டிய சமயத்தில் 27 உயிர்களைப் பலி கொண்டது.

3.Bell Rock Lighthouse: Inchcape எனவும் அழைக்கப்படும் இது உலகின் மிகப் பழமையான கலங்கரை விளக்காகும்.வட கடலில் அங்குஸ் ஸ்கொட்லாந்து 18 கிமீ. 1807 -1810 இடைப்பட்ட காலத்தில் ரொபேர்ட் ஸ்டீவின்சன் ஆல் 35 மீ உயரத்தில் 2835 கிரனயிட் கற்களால், கட்டப்பட்ட இது 58 கிமீ தூரம் வரை தெரியக்கூடியது.உயர் தரத்தில் கட்டப்பட்ட இது 200 ஆண்டுகள் வரை எதுவும் மற்றப்படாது 1843 ல் ஒளிக்கண்ணாடி மட்டும் மாற்றப்பட்டு 1998 வரை செயல்பட்டது.1955 டிசம்பர் 15 ல் ஏற்பட்ட உலங்குவானூர்தி விபத்தின் போது பாதிக்கப்பட்டது.

4.The London Sewerage System: 19 ம் நூற்றாண்டு காலப் பகுதி வரை தேம்ஸ் நதியே கழிவு நீர்ப்பாதையாக இயங்கி வந்தது.ஜேம்ஸ் பசல்கெட்ட் என்ற பொறியியலாளர் 720 கிமீ நீள சாக்கடை கால்வாயை 1859-1865 இடைப்பட்ட காலத்தில் கட்டி முடித்தார்கள்.இதன் மொத்த நீளம் 21000 கிமீ ஆகும். நம்ம கூவத்தைப் போல் இருந்து, பல நோய்களுக்கு வித்திட்ட தேம்ஸ் நதி மாற்றியமைக்கப்பட்டது.

5.The Panama Canal: பனாமா கால்வாய் பசுபிக் பெருங்கலையும் அத்திலாந்திக் பெருங்கடலையும் அமெரிக்கக் கண்டங்களிடையே இணைக்கும் செயற்கைக் கால்வாய் ஆகும். இது அமைக்கப்படும் முன்னர் கப்பல்கள் தெ தெ அமெரிக்காவை சுற்றியே செல்ல வேண்டியிருதது. பதினாறாம் நூற்றாண்டிலேயே இத்தகைய கால்வாய்க்கான எண்ணம் இருந்தது. 1880 இல் பிரான்சு தலைமையில் கால்வாய் வெட்டும் பணி தொடங்கியது. 22000 தொழிலாளர்கள் இறந்த இம்முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. 1900களில் அமெரிக்கா மீண்டும் இப்பணியைத் தொடங்கி 1914 இல் பனாமா கால்வாய் திறக்கப்பட்டது. பிரெஞ்சு, ஐக்கிய அமெரிக்க முயற்சிகளில் மொத்தமாக 27,500 தொழிலாளர் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இக்கால்வாய் 78 கிமீ நீளமானது.

6.The First Transcontinental Railroad: இது Pacificroad என்றும் பின்னர் Overland Route அழைக்கப்படுகிறது.அமெரிக்காவால் 1863 -1869 ற்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட,அத்திலான்டிக் பசிபிக் கடற்கரைகளை இணைக்கும் புகையிரதப் பாதையாகும்.கிழக்கே Council Bluffs,Iova தொடங்கி 1749 கிமீ நீளப் பாதை 1962 வரை இயங்கியது.

7. The Hoover Dam: கூவர் அணை(Boulder Dam) அமெரிக்க நாட்டில் பாயும் கொலராடோ ஆற்றில், அரிசோனாவிற்கும் நெவேடா மாநிலங்களுக்கிடையே 1936 ல் கட்டி முடிக்கப்பட்ட,379 மீ. நீளமும் 221 மீ.உயரமும் கொண்ட காங்கிறிட் அணையாகும். 2080மெ.வா மின் உற்பத்தி செய்து 130 கிமீ தூரத்திற்கு அனுப்பி வருகிறது.

உலகின் புதிய அதிசயங்கள் 7. இவற்றை USA Today என்ற அமெரிக்கப் பத்திரிகை 2006 ல் அறிவித்துள்ளது.

1.Potala Palace: Lozang Gyatso என்ற 5 வது தலைலாமாவால் 1645 ல் கட்டத் தொடங்கிய இந்த மாளிகை 1959 ல் சீன ஊடுருவலினால் 14 வது தலைலாமா இந்தியாவிற்கு தப்பி வந்தது வரை இருந்து தற்போது மியூசியமாக உள்ளது.13 அடுக்காய்க் கொண்ட இதில் 1000 அறைகளும்,10000 வரயிலான வணக்க இடங்களும்,200,000 சிலைகளும் கொண்டது.

2.Old City of Jerusalem:பழைய நகர் தற்போதைய ஜெருசலெம் நகரினுள் மதிலால் சூழப்பட்டு 0.9 சதுர கி.மி பரப்பளவில் அமைந்து,1860 இல் சமாதான குடியிருப்பு எனும் கட்டம் எருசலேமில் யூதரால் அமைக்கப்பட்டது. பழைய நகர் சமயங்களுக்கு ஓர் முக்கிய இடமாகவுள்ளது. கோயில் மலையும்,மேற்கு சுவரும் ஜூதர்களுக்கும், புனித கல்லறைத் தேவாலயம் கிறிஸ்தவர்களுக்கும்,பாறைக்குவிமாடமும் அல் அக்சா பள்ளிவாசலும் இஸ்லாமியர்களுக்கும் முக்கிய இடங்களாகும்.பழைய நகர் நான்கு பகுதிகளாக சமமற்று பிரிக்கப்பட்டு காணப்பட்டது. இப்போதுள்ள பகுதிகளின் பிரிப்பு 19ம் நூற்றாண்டில் அறிமுகமாகியது.இன்று கிறிஸ்தவப் பகுதி, யூதப் பகுதி, ஆர்மேனியப் பகுதி, இசுலாமியப் பகுதி என்று தோராயமாய் பிரிக்கப்பட்டுள்ளன. 1948 அரபு-இசுரேல் போரைத் தொடர்ந்து பழைய நகர் ஜோர்தானால் கைப்பற்றப்பட்டு, யூதர்கள் வெளியேற்றப்பட்டனர். 1967 ஆறு நாள் போரில் இஸ்ரேல், பழைய நகரையும் கிழக்கு எருசலேமையும் கைப்பற்றி, முழு பகுதியையும் கட்டுப்பாட்டில் வைத்து, தேசிய தலைநகராக்கியுள்ளது.

3.Polar ice caps:கிரகங்களில் உள்ள வட தென் துருவ பனி மூடி.பூமியில் வடக்கே 12 மில்லியன் கிமீ பரப்பளவையும்,தெற்கே 14.6 கிமீ பரப்பளவையும் கொண்ட 3 - 20 மீ தடிப்பான பனிப் பிரதேசமாகும்.இப்படியான பகுதி செவ்வாய் கிரகத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது. பூமியின் பனி கரையுமானால்.........?

4.Papahanaumokuakea Marine National Monument: 360.000 கிமீ பரப்பளவைக் கொண்ட கவாய் தீவுகளை அடக்கிய 10 தீவுகள் வரை கொண்ட கடல் பகுதியாகும்.கவாய் கலாச்சாரத்தை உள்ளடக்கியதும்,மிகப் பழமையான தொல்பொருள் எச்சங்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.7000 த்திற்கு அதிகமான கடல் வாழ் தரை வாழ் உயிரினங்கள் பாதுகாக்க்கப்படுகின்றன.2006 ல் இருந்து உலக பாரம்பரிய சொத்தாக பாதுகாக்கப்படுகிறது.

5.Internet:இணையம்...................தனியாக ஒரு சிறிய விளக்கம்.

6.Mayan ruins:The Maya ruins of Belize மாயன் கட்டிட இடிபாடுகள்.கொலம்பிய மாயன் கலச்சாரத்தை கிமு.2000 முன்னர் என கணக்கிடுகிறார்கள்.

7.Serengeti and Masai Mara:Great Migration of Serengeti and Masai Mara -மாசா என்ற இனமக்களின் பெயரைக் கொண்ட தென் மேற்கு கென்யாவில் 25.000 கிமீ பரப்பளவில் உள்ள வேட்டை விலங்கு ஒதுக்ககமாகும்.இங்கு புலி,சிங்கம்,வரிக்குதிரை போன்ற மிருகங்களின் இடப்பெயர்வு நடைபெறுகிறது. இந்த இடப்பெயர்வே பெயர் போனதும் அதைக் காண மக்கள் செல்கிறார்கள்.

Times of India 2007 ல் அறிவித்த இந்திய அதிசயங்கள் இவை.

1.Gomateshwara in Shravanabelagola.
2.Harmandir Sahib,Amritsar.
3.Taj Mahal,Agra.
4.Hampi,Karnataka.
5.Konark Sun Temple,Orissa.
6.Nalanda,Bihar.
7.Khajuraho,Madhya Pradesh.

இருப்பினும் உலக நாடுகள் இராமேஸ்வரத்தையும்,காஞ்சீபுரத்தையும் அதிசயங்களில் சேர்த்திருக்கிறது.

சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

 7 _ 7 _ 7 _ 7 ….................................................பொதுஅறிவை வளர்க்க நான்கு ஏழுகள்.  Empty Re: 7 _ 7 _ 7 _ 7 ….................................................பொதுஅறிவை வளர்க்க நான்கு ஏழுகள்.

Post by ஜனனி Tue Sep 18, 2012 6:18 pm

 7 _ 7 _ 7 _ 7 ….................................................பொதுஅறிவை வளர்க்க நான்கு ஏழுகள்.  471843  7 _ 7 _ 7 _ 7 ….................................................பொதுஅறிவை வளர்க்க நான்கு ஏழுகள்.  471843  7 _ 7 _ 7 _ 7 ….................................................பொதுஅறிவை வளர்க்க நான்கு ஏழுகள்.  471843
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

 7 _ 7 _ 7 _ 7 ….................................................பொதுஅறிவை வளர்க்க நான்கு ஏழுகள்.  Empty Re: 7 _ 7 _ 7 _ 7 ….................................................பொதுஅறிவை வளர்க்க நான்கு ஏழுகள்.

Post by logu Wed Sep 19, 2012 7:14 am

நன்றி சக்தி  7 _ 7 _ 7 _ 7 ….................................................பொதுஅறிவை வளர்க்க நான்கு ஏழுகள்.  917304
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

 7 _ 7 _ 7 _ 7 ….................................................பொதுஅறிவை வளர்க்க நான்கு ஏழுகள்.  Empty Re: 7 _ 7 _ 7 _ 7 ….................................................பொதுஅறிவை வளர்க்க நான்கு ஏழுகள்.

Post by மாலதி Wed Sep 19, 2012 11:46 am

 7 _ 7 _ 7 _ 7 ….................................................பொதுஅறிவை வளர்க்க நான்கு ஏழுகள்.  917304  7 _ 7 _ 7 _ 7 ….................................................பொதுஅறிவை வளர்க்க நான்கு ஏழுகள்.  917304


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

 7 _ 7 _ 7 _ 7 ….................................................பொதுஅறிவை வளர்க்க நான்கு ஏழுகள்.  Empty Re: 7 _ 7 _ 7 _ 7 ….................................................பொதுஅறிவை வளர்க்க நான்கு ஏழுகள்.

Post by அருள் Fri Oct 18, 2013 8:24 am

நல்ல இருக்கு நல்ல இருக்கு நல்ல இருக்கு நல்ல இருக்கு
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

 7 _ 7 _ 7 _ 7 ….................................................பொதுஅறிவை வளர்க்க நான்கு ஏழுகள்.  Empty Re: 7 _ 7 _ 7 _ 7 ….................................................பொதுஅறிவை வளர்க்க நான்கு ஏழுகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum