TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


9வது படித்தவர் பல் மருத்துவர்; 10வது படித்தவர் பொது மருத்துவர்

Go down

9வது படித்தவர் பல் மருத்துவர்; 10வது படித்தவர் பொது மருத்துவர் Empty 9வது படித்தவர் பல் மருத்துவர்; 10வது படித்தவர் பொது மருத்துவர்

Post by மாலதி Sat Aug 04, 2012 8:05 am

சேலம்: சேலம் மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில், ஐந்து போலி
மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். சேலம், வீராணத்தைச் சேர்ந்த
கிருஷ்ணசாமி மகன் சிவகுமார்,38. அதே பகுதியில், சொந்தமாக போட் டோ ஸ்டுடியோ
வைத்துள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர், குப்பனூர் செக்-போஸ்ட்
பகுதியில், வீட்டிலேயே கிளினிக் நடத்தும் மருத்துவர் ரத்தினவேல்,47,
என்பவரிடம் சிகிச்சை பெற்றுள்ளார்.

10ம் வகுப்பு வரை...: நோய் குணமாகாததால்,மருத்துவரிடம்
விசாரித்தபோது, அவர் சரிவர பதிலளிக்காததால் சந்தேகம் ஏற்பட்டது. அக்கம்
பக்கத்தில் விசாரித்தபோது, ரத்தினவேல், மருத்துவரே இல்லை என்கிற அதிர்ச்சி
தகவல், சிவகுமாருக்கு தெரிய வந்தது. இதுகுறித்து, வீராணம் போலீசில் புகார்
செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில், ரத்தினவேல் 10ம் வகுப்பு
படித்தவர் என்பதும், சேலத்தில், தனியார் மருத்துவமனை ஒன்றில், சிறிது காலம்
வேலை பார்த்த அனுபவத்தில், வீட்டில், கடந்த ஆறு மாதமாக மருத்துவர் தொழில்
செய்து வந்ததும் தெரிந்தது. அதையடுத்து அவர், நோயாளிகளுக்கு சிகிச்சை
அளிக்க பயன்படுத்தி வந்த மருந்து, மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்டவை
அதிரடியாக கைப்பற்றப்பட்டன. வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து, போலி
மருத்துவர் ரத்தினவேலுவை கைது செய்தனர்.

9வது படித்தவர் பல் பிடுங்கினார்: சேலம், இரும்பாலை அடுத்த
நாயக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் சின்னசாமி,48. இவர், பல்
மருத்துவர் எனக் கூறி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இவரது
நடத்தையில் சந்தேகம் அடைந்த பொதுமக்கள், இரும்பாலை போலீசாருக்கு தகவல்
தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார், சின்னசாமி
வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், ஒன்பதாம் வகுப்பு
படித்த சின்னசாமி, சேலத்தில், தனியார் பல் மருத்துவமனை ஒன்றில் உதவியாளராக
வேலை செய்து வந்ததும், அந்த அனுபவத்தில், பல் சிகிச்சை அளித்து வந்ததும்
தெரிந்தது. சோதனையில், மூன்று பல் செட், 12 தனி பல், மருந்துகள்,
இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை, போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து
வழக்கு பதிவு செய்து, சின்னசாமியை கைது செய்தனர்.

பெண் மருத்துவரும் போலி: சேலம், இளம்பிள்ளையைச் சேர்ந்த சுப்ரமணி
மனைவி ஜம்புகேஸ்வரி,44. இவர், அதே பகுதியில், பூர்ணிமா கிளினிக் என்ற
பெயரில், மருத்துவத் தொழில் செய்து வந்தார். இவர், போலி மருத்துவர் என,
புகார் வந்ததையடுத்து, மகுடஞ்சாவடி போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில், ஜம்புகேஸ்வரி போலி மருத்துவர் என்பது தெரிந்தது. இதுகுறித்து
போலீசார் வழக்கு பதிவு செய்து, ஜம்புகேஸ்வரியை கைது செய்தனர். சங்ககிரி,
வெள்ளையம்பாளையம், வடக்குத் தெருவைச் சேர்ந்த பெரியண்ணன் மகன் பழனிசாமி,47.
இவர், கீர்த்தனா கிளினிக் என்ற பெயரில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து
வந்துள்ளார். இவரிடம், சிகிச்சை பெற்று, நோய் குணமாகாத, அதே பகுதியைச்
சேர்ந்த நைனா கவுண்டர்,49, சங்ககிரி போலீசில் புகார் செய்தார்.
விசாரணையில், பழனிசாமி, போலி மருத்துவர் என்பது தெரிந்தது. அதையடுத்து,
அவரை போலீசார் கைது செய்தனர்.

கிராமம் கிராமமாக ஏமாற்றி...: இடைப்பாடி அடுத்த கொங்கணாபுரம்,
கோரணம்பட்டியைச் சேர்ந்த பெரியதம்பி மகன் ரங்கநாதன்,42. இவர்,
கிராமம்தோறும் சென்று சிகிச்சை அளித்து வந்தார். இவரிடம், சிகிச்சை
பெற்றும் குணமாகாத மலங்காடு கிராமத்தைச் சேர்ந்த பாலு மகன் நரசிம்மன்,21,
புகார் செய்தார். இடைப்பாடி போலீசார் நடத்திய விசாரணையில், ரங்கநாதன், போலி
மருத்துவர் என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரை போலீசார் கைது
செய்தனர். சேலம் மாவட்டத்தில், போலி மருத்துவர்களை கைது செய்யும்படி,
எஸ்.பி., அஸ்வின் கோட்னீஸ் உத்தரவின்பேரில், மேலும் போலி மருத்துவர்கள்
உள்ளனரா என்பது குறித்து, போலீசார் தீவிர விசாரணை மற்றும் சோதனை நடத்தி
வருகின்றனர்.

திருப்பூரில் ஐந்து பேர் கைது: திருப்பூரில் சட்ட விரோதமாக
கிளினிக் நடத்தி, சிகிச்சை அளித்து வந்த சுகாதார ஆய்வாளர், போலி டாக்டர்
உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். போலி டாக்டர்களில், ஜமால் அகமது,
அவர் மனைவி மொபின் பேகம், ஜோசப், கருப்பையா ஆகியோர் அடங்குவர். கொடுவாய்
அரசு ஆரம்ப சுகாதார ஆய்வாளர் சுப்ரமணியம், மருந்து வாங்க வருபவர்களுக்கு
ஊசி போடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டார்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum