TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நடந்தது என்ன?: இத்தாலியர்களால் கொல்லப்பட்ட 2 தமிழக மீனவர்கள்!! பரபரப்புத் தகவல்கள்

Go down

நடந்தது என்ன?: இத்தாலியர்களால் கொல்லப்பட்ட 2 தமிழக மீனவர்கள்!! பரபரப்புத் தகவல்கள்  Empty நடந்தது என்ன?: இத்தாலியர்களால் கொல்லப்பட்ட 2 தமிழக மீனவர்கள்!! பரபரப்புத் தகவல்கள்

Post by அருள் Fri Feb 17, 2012 9:56 am

நடந்தது என்ன?: இத்தாலியர்களால் கொல்லப்பட்ட 2 தமிழக மீனவர்கள்!! பரபரப்புத் தகவல்கள்  Tenksai-fishermen

இத்தாலிய கப்பலின்
பாதுகாப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்கள் இருவருமே தமிழகத்தின்
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
நடந்தது குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

குமரி மாவட்ட
கடற்கரை கிராமங்களான ராமன்துறை, இரயுமன் துறை, பூத்துறை பகுதிகளை சேர்ந்த
மீனவர்கள் கேரள கடலில் மீன்பிடித் தொழில் செய்வது வழக்கம். இதுபோல
பூத்துறையை சேர்ந்த பிரடி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை
சேர்ந்த அஜீஸ் டிங்கு(20), கிலாரி, ஜான்சன், முத்தப்பன், அலெக் சாண்டர்,
பிரான்சிஸ், பிங்செரியன், மார்ட்டின், ஆன்டனி, குளச்சலை சேர்ந்த ஜெலஸ்டின்
ஆகி யோரும் கேரளாவை சேர்ந்த சில மீனவர்களும் இணைந்து கொல்லம் கடலில் கடந்த
10 நாட்களுக்கு முன்பு மீன் பிடிக்கச் சென்றனர்.

நேற்று ஆழ்கடல்
பகுதியில் இவர்கள் வலை வீசி மீன்களை பிடிக்க காத்திருந்த போது அந்த வழியாக
ஆயில் டேங்கர் ஏற்றிய சரக்கு கப்பல் வந்தது. திடீரென கப்பலில்
இருந்தவர்கள் விசைப்படகின் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில்
படகின் மேல்தளத்தில் நின்று கொண்டிருந்த அஜீஸ் டிங்கு, ஜெலஸ்டின் ஆகியோர்
மீது குண்டுகள் பாய்ந்தன. அவர்கள் படகு தளத்திலேயே சுருண்டு விழுந்து
இறந்தனர்.

அஜீஸ் டிங்கு, ஜெலஸ்டின் ஆகியோரின் அலறலைக் கேட்டு
படகின் கீழ்தளத்தில் இருந்தவர்கள் மேல்தளத்திற்கு ஓடி வந்தனர். அதற்குள்
மீனவர்களை சுட்ட கப்பல் அங்கிருந்து வேகமாக சென்று விட்டது. இதுபற்றி
படகில் இருந்தவர்கள் பூத்துறையில் உள்ள உறவினர்களுக்கும், மீன்வளத்துறை
அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் இந்த தகவல் கொல்லம்
மீன்பிடித் துறைமுக அதிகாரிகளுக்கு கூறப்பட்டது.

உடனே அதிகாரிகள்
கடலோர காவல்படையினரின் உதவியுடன் தப்பிச் சென்ற கப்பலை விரட்டிச் சென்று
மடக்கினர். நடுக்கடலில் பிடிபட்ட அந்த கப்பல் பின்னர் கொச்சி
துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு கப்பலின் மாலுமிகளிடம் துறைமுக
அதிகாரிகள் விசாரித்தனர். இத்தாலி கப்பல் மாலுமிகள் கூறும்போது,
விசைப்படகில் இருந்தவர்கள் கடற்கொள்ளையர்கள் என கருதி துப்பாக்கியால்
சுட்டதாக தெரிவித்தனர்.

இருந்தாலும் மாலுமி கூறிய காரணத்தில் உண்மை இருக்கிறதா? என்பதை கண்டறிய அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தற்போது
இருவரின் உடலும் கொச்சியில் இருந்து இன்று மாலை பூத்துறை கிராமத்திற்கு
வந்து சேரும் என்று தெரிகிறது. அவர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள
பூத்துறை, இரயுமன்துறை மற்றும் குளச்சல் பகுதியில் இருந்து ஏராளமான
மீனவர்கள் குடும்பத்துடன் பூத்துறை ஆலயம் முன்பு கூடினர். இதனால் மீனவ
கிராமங்களே சோகத்தில் ஆழ்ந்தது. பெரும்பாலான மீனவர்கள் இன்று கடலுக்கு
செல்லவில்லை.வீடுகள் முன்பு கறுப்புக் கொடி கட்டி துக்கம்
அனுஷ்டிக்கப்பட்டது.

துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட
அஜீஸ் டிங்கு பெற்றோரை இழந்தவர். இவருக்கு அபினா சேவியர்(17), அபுனா
சேவியர் (15) என்ற இரண்டு சகோதரிகள் மட்டுமே உள்ளனர். அஜீஸ் டிங்குக்கு
இன்னும் திருமணம் ஆகவில்லை.

இறந்து போன இன்னொரு மீனவரான ஜெலஸ்டின்
குளச்சலை சேர்ந்தவர். தற்போது குடும்பத்துடன் கேரளாவில் வசித்து வந்தார்.
அவர் இறந்த தகவல் குளச்சலில் உள்ள அவரது உறவினர்களை அதிர்ச்சியில்
ஆழ்த்தியது.

2 மீனவர்கள் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கடலுக்கு செல்லும் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இத்தனை
காலமாக இலங்கை கடற்படையினர்தான் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொன்று
வந்தனர். தற்போது எங்கிருந்தோ வந்த இத்தாலிக்கார்கள் தமிழக மீனவர்களை
சுட்டு வீழ்த்தியிருக்கும் செயல் தமிழக மீனவர்களை பெரும்
அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum