TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஒரு லாரி மணல் விலை ரூ.19,500 : பேரை கேட்டாலே மயக்கம் வருது

Go down

ஒரு லாரி மணல் விலை ரூ.19,500 : பேரை கேட்டாலே மயக்கம் வருது Empty ஒரு லாரி மணல் விலை ரூ.19,500 : பேரை கேட்டாலே மயக்கம் வருது

Post by ஜனனி Sat Jan 08, 2011 7:38 am

சேலம்:மணல் விலை இருமடங்கு உயர்ந்துள்ளதால், மணல் கிடைக்காமல் தமிழகத்தில் கட்டுமான பணிகள் முற்றிலுமாக ஸ்தம்பித்து விட்டது.
தமிழகத்தில் ஏற்கனவே கட்டுமான பொருட்களான சிமென்ட், இரும்பு உள்ளிட்ட
பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், கட்டுமான பணி தள்ளாடி வருகிறது.
இந்நிலையில், ஒரு வாரத்தில் மணல் விலையும் இரு மடங்கு உயர்ந்துவிட்டதால்
கட்டுமான பணிகள் முற்றிலுமாக முடங்கிவிட்டது.திருச்சி மாவட்டம்
சீனிவாசநல்லூர், மணல்மேடு, முசிறி, நொச்சியம், வாத்தலை, குளித்தலை,
லாலாப்பேட்டை, வாங்கல் போன்ற இடங்களில் உள்ள மணல் குவாரிகளில் இருந்து
நாள்தோறும் மணல் எடுக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான லாரிகள் மூலம் தமிழகத்தின்
அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வரப்படுகிறது.சென்னை, மதுரை,
திருப்பூர், கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட ஊர்களில் இருந்து 7,000 லாரிகள்
மூலம் தினம்தோறும் மணல் எடுத்து, தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும்
விநியோகம் செய்வது வழக்கம். கடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதி, இந்த
பகுதிகளில் பொக்லைன் மூலம் மணல் எடுக்க சென்னை ஹைகோர்ட் தடை உத்தரவு
பிறப்பித்தது.
இதனால், ஆட்கள் மூலம் மட்டுமே மணல் அள்ளப்படுகிறது. இதில் ஒரு நாளைக்கு
அதிகபட்சமாக 20 முதல் 30 லாரிகளுக்கு மட்டுமே லோடு ஏற்றப்படுகிறது. இப்படி
ஏற்றப்படும் லோடு, கட்டுமான பணிகளுக்கு போதுமானதாக இல்லாமல் பற்றாக்குறை
ஏற்பட்டது.கடந்த மாதம் ஒரு லாரி மணல்( 3யூனிட்) 6, 200 ரூபாய்க்கு
விற்றது. கடந்த மாதம் தொடர் மழை பெய்ததால் இன்னும் கொஞ்சம் அதிகரித்து ஒரு
லாரி மணல் 7, 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்பொழுது குவாரிகளில் மணல்
எடுப்பது நிறுத்தப்பட்டதால், ஒரு லாரி மணல் விலை 15 ஆயிரம் ரூபாயில்
இருந்து 19 ஆயிரம் 500 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. ஏற்கனவே இருப்பு
வைத்துள்ள மணல் வியாபாரிகள் தான், தற்பொழுது விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த இருப்பும் குறைந்த நாட்களுக்கு மட்டுமே தாக்குபிடிக்கும். இந்த
பற்றாக்குறையினால் தமிழகம் முழுவதும் கட்டுமான பணிகள் முற்றிலுமாக
பாதிப்படைந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் கட்டுமான துறையை சார்ந்த
லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி
தவிக்கின்றனர்.இப்பிரச்னைக்கு தீர்வு காண, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை
எடுக்க வேண்டும். அப்போது தான் கட்டுமானப் பணிகள் மீண்டும் துவங்கும்.
மதுரையில் மணலுக்கு திடீர் "மவுசு': ரூ.10 ஆயிரம் என்றாலும் "ம்ஹூம்': கட்டடம் கட்டுவதில் சிக்கல் :
மதுரையில் மணல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு
உள்ளதால், மணலுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே இருப்பு
வைத்திருக்கும் மணல் ஒரு லோடு(10 டன்) 4 ஆயிரம் என்பது 10 ஆயிரம் ரூபாய்
வரை உயர்ந்து உள்ளது. இத்தொகையை கொடுக்க தயாராக இருந்தாலும், மணல்
கிடைப்பது அரிதாக உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் இருந்து இயந்திரத்தின் மூலம்
மணல் அள்ளப்பட்டு, மதுரை கொண்டு வரப்படுகிறது. இத்தொழிலை நம்பி 436
அரைபாடி லாரிகள் உள்ளன. இரண்டு யூனிட் (10 டன்) கொண்ட ஒரு லோடு மணலை 1700
ரூபாய்க்கு எடுத்துக் கொண்டு வரும் லாரி உரிமையாளர்கள், போக்குவரத்து
செலவு 1300 ரூபாய், லோடுமேன் கூலி 150 ரூபாய், டிரைவர் படி 350 ரூபாய் ,
லாபம் 500 ரூபாய் என 4 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கின்றனர்.
இந்நிலையில், "இயந்திரத்தின் மூலம் ஆற்றில் மணல் அள்ளுவதால்
சுற்றுச்சூழல் பாதிக்கிறது. ஆட்களை வைத்து அள்ள வேண்டும்' என மதுரை
ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்ய குழு
அமைக்கப்பட்ட நிலையில், நான்கு நாட்களாக பரமக்குடியில் இருந்து
இயந்திரத்தில் மணல் அள்ளும் பணி நிறுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் இதே
நிலை நீடிப்பதால், நேற்று முதல் அரைபாடி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். மதுரை மணல் லாரி உரிமையாளர்களும்
இதில் பங்கேற்றுள்ளனர்.
சங்கத் தலைவர் ரவிராஜன் கூறியதாவது : ஆள் வைத்து மணல் அள்ளுவது
முடியாதகாரியம். ஆட்கள் கிடைப்பது கஷ்டமாக உள்ளது. பரமக்குடியில் இருந்து
இயந்திரத்தின் மூலம் மணல் கொண்டு வந்து, மதுரையில் இறக்க ஆட்கள்
கிடைப்பதில்லை. ஆட்களை வைத்து மணல் அள்ளுவதால் காலதாமதம் மற்றும் மணல்
அள்ளும் கூலி ஆகியவற்றை கணக்கிடும்போது, பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம்
வசூலிக்க வேண்டிய நிலை ஏற்படும். ஏற்கனவே, இப்பிரச்னையால் 50 லாரிகள்
முடங்கி உள்ளன. இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
ஏற்கனவே செங்கல், இரும்பு, சிமென்ட் என கட்டுமான பொருட்களின் விலை
கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், மணல் விலையும் 10 ஆயிரம் ரூபாய் வரை
உயர்ந்துள்ளதால், கட்டடம், வீடு கட்டும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
இத்தொகையை கொடுக்க பொதுமக்கள் தயாராக இருந்தாலும், மணல் தட்டுப்பாட்டால்
"கிராக்கி' ஏற்பட்டுள்ளது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» காஞ்சிபுரம் அருகே மணல் லாரி தாறுமாறாக ஓடி விபத்து: 2 பேர் பலி
» விலை மதிக்க முடியா மணல் ஓவியம்-VIDEO
» மீண்டும் வருது கிழக்கிந்தியக் கம்பெனி : விலை கொடுத்து வாங்கினார் ஒரு இந்தியர்
» ரேஷன் அரிசியை விட மணல் விலை அதிகம்: கட்டுமானப் பணிகள் தேக்கம்
» டீசல் விலை உயர்வுக்கு லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு : ஆகஸ்ட் 1 முதல் ஸ்டிரைக் நடத்த பரிசீலனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum