TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:42 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 3:08 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


காங்., எதிர்க்கட்சிகள் பலப்பரீட்சை ஆரம்பம்: முன்கூட்டியே லோக்சபா தேர்தல் வருமா?

Go down

காங்., எதிர்க்கட்சிகள் பலப்பரீட்சை ஆரம்பம்: முன்கூட்டியே லோக்சபா தேர்தல் வருமா?  Empty காங்., எதிர்க்கட்சிகள் பலப்பரீட்சை ஆரம்பம்: முன்கூட்டியே லோக்சபா தேர்தல் வருமா?

Post by அருள் Mon Dec 13, 2010 7:58 am

புதுடில்லி : ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ், காமன்வெல்த் போட்டிகள் ஆகியவற்றில்
நடந்த ஊழல் விவகாரத்தில், காங்கிரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே
பலப்பரீட்சை ஆரம்பமாகியுள்ளது. எதிர்க்கட்சிகளின் போராட்டம்,
பார்லிமென்டின் அடுத்த கூட்டத் தொடரிலும் தொடர்ந்தால், லோக்சபாவுக்கு
முன்கூட்டியே தேர்தல் வரக் கூடும் என்ற பேச்சும் எழுந்துள்ளது.
"ஸ்பெக்ட்ரம் "2ஜி' ஒதுக்கீடு, ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பு,
காமன்வெல்த் போட்டிகள் ஆகியவற்றில் நடந்த ஊழல் குறித்து, பார்லிமென்ட்
கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும்' என, பா.ஜ., - இடதுசாரி கட்சிகள்
உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. மத்திய அரசு
இதை ஏற்க மறுத்து வருகிறது.இதனால், பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர்
முற்றிலும் முடங்கிப் போய்விட்டது. கூட்டத் தொடரில், இன்று ஒரு நாள்
மட்டுமே மீதமுள்ளது. எதிர்க்கட்சிகளின் போராட்டம் காரணமாக, இன்றும்
பார்லிமென்ட் நடப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றே தகவல்கள்
தெரிவிக்கின்றன.இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து குரல்
எழுப்பி வருவதால், மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஊழல்
விவகாரங்களை விசாரிக்க, பார்லிமென்ட் பொது கணக்குக் குழு, ஒரு நபர் கமிஷன்
என, பல ஆலோசனைகளை மத்திய அரசு தெரிவித்தாலும், பார்லிமென்ட் கூட்டுக் குழு
விசாரணை தான் தேவை என்பதில் எதிர்க்கட்சிகள் பிடிவாதமாக உள்ளன.
குளிர்கால கூட்டத் தொடர் முடிந்தாலும், அடுத்தாண்டு பிப்ரவரியில்
நடக்கவுள்ள பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரிலும், இதே பிரச்னையை
வலியுறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அப்போதும், பார்லிமென்டில்
ஆளும் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும் என, எதிர்க்கட்சிகள்
கருதுகின்றன.
எதிர்க்கட்சிகள் தீவிரம்: மேலும், பார்லிமென்டின் அடுத்த
கூட்டத் தொடர் வரை, ஊழல் விவகாரங்கள் மறக்கடிக்கப்படாமல் இருப்பதற்கான
நடவடிக்கைகளிலும் எதிர்க்கட்சிகள் தீவிரமாக உள்ளன. வரும் 22ம் தேதி டில்லி
ராம்லீலா மைதானத்தில், ஊழல் விவகாரங்களை எதிர்த்தும், பார்லிமென்ட்
கூட்டுக் குழு விசாரணை கோரியும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தை நடத்தவும்
எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.இந்த விஷயத்தில் இடதுசாரி கட்சிகள்
தீவிரமாக உள்ளன. பா.ஜ., அல்லாத தெலுங்கு தேசம், அ.தி.மு.க., - பிஜூ ஜனதா
தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்த,
இடதுசாரி கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா கூறுகையில்,
"எங்கள் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம், ஐதராபாத்தில் நாளை (14ம்
தேதி) முதல் 16ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில், அடுத்த கட்ட நடவடிக்கைகள்
குறித்து ஆய்வு செய்யப்படும். இதைத் தொடர்ந்து, ஊழல் விவகாரங்களுக்கு
எதிராக போராட்டம் நடத்துவது குறித்து, பிற எதிர்க்கட்சிகளுடன்
ஆலோசிப்போம்' என்றார்.
எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை சமாளிக்க, காங்கிரஸ் கட்சியும் தயாராகி
வருகிறது. இதன்முதல் கட்டமாக, இன்று காங்கிரஸ் எ ம்.பி.,க்கள் பொதுக்குழு
கூட்டம் நடக்கிறது . அதில் கட்சித் தலைவர் சோனியா, ஸ்பெக்ட்ரம் விவகாரம்
பற்றி கட்சி கொண்டிருக்கும் அணுகுமுறையை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு
இருக்கிறது. ஏனெனில், அடுத்தடுத்த ஊழல்களால் ஏற்பட்ட நெருக்கடி குறித்து
அவர் எம்.பி.,க்களுக்கு வழிகாட்டியாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு
காணப்படுகிறது.மேலும், வரும் 18ம் தேதி காங்கிரஸ் கட்சியின் முக்கிய
நிர்வாகிகள் பங்கேற்கும் மாநாட்டை கூட்டவும் காங்கிரஸ் முடிவு
செய்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இரண்டாவது முறையாக
பதவியேற்றபின் நடக்கும் முதல் மாநாடு இது என்பதால், அரசியல் வட்டாரத்தில்
முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இது கருதப்படுகிறது.
ஏனெனில், அடுத்த ஆண்டில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும்
மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவிருப்பதால், அதற்கு முன்
கட்சியின் செல்வாக்கை நிலைநிறுத்த வழிகண்டாக வேண்டும்.இந்த
மாநாட்டின்போது, எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை சமாளிப்பதற்கு மேற்கொள்ள
வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என,
எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அதிரடியான முடிவுகள் எடுக்கப்படும் என,
காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
தேர்தல் வருமா? காங்கிரசுக்கும், எதிர்க்கட்சிகளும் இடையேயான
மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், லோக்சபாவுக்கு முன்கூட்டியே தேர்தல்
வரக் கூடும் என்றும் பேச்சு எழுந்துள்ளது. பார்லிமென்ட் கூட்டுக் குழு
விசாரணை கோரி, பார்லிமென்டின் அடுத்த கூட்டத் தொடரிலும் எதிர்க்கட்சிகள்
போர்க்கொடி தூக்கும் பட்சத்தில், லோக்சபாவுக்கு முன்கூட்டியே தேர்தல்
வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum