TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 7:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஸ்ரீநகரில் கண்டதும் சுட உத்தரவு : காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை இல்லை

Go down

ஸ்ரீநகரில் கண்டதும் சுட உத்தரவு : காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை இல்லை Empty ஸ்ரீநகரில் கண்டதும் சுட உத்தரவு : காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை இல்லை

Post by piraba Wed Aug 04, 2010 7:36 am

ஸ்ரீநகர் : தொடரும் வன்முறையால், காஷ்மீர் கலவர பூமியாக
காட்சியளிக்கிறது. பாதுகாப்புப் படையினர் நேற்று நடத்திய துப்பாக்கிச்
சூட்டில், மூன்று பேர் பலியாயினர். இதனால், அங்கு பதட்டம்
அதிகரித்துள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறுவோரை கண்டதும் சுட
உத்தரவிடப்பட்டுள்ளது.
காஷ்மீரில் செயல்படும் பிரிவினைவாத அமைப்புகள், பாதுகாப்புப்
படையினருக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை நடத்துகின்றனர். இதனால்,
பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே, கடந்த ஒரு
மாதமாக மோதல் நடக்கிறது. கலவரத்தை கட்டுப்படுத்த, பாதுகாப்புப் படையினர்
துப்பாக்கிச் சூடு நடத்துகின்றனர். இந்த கலவரம் சில நாட்களுக்கு முன்
தற்காலிகமாக ஓய்ந்திருந்தது. ஆனாலும், கடந்த 30ம் தேதி முதல் மீண்டும்
கலவரம் வெடித்தது. பாதுகாப்புப் படையினர் மீது கல்வீச்சு, அரசு
அலுவலகங்கள் சூறை, தீ வைப்பு, துப்பாக்கிச் சூடு சம்பவங்களால், காஷ்மீர்
கலவர பூமியாக மாறிவிட்டது.
மூன்று பேர் பலி: ஸ்ரீநகரின் பல இடங்களில் நேற்று ஊரடங்கு
உத்தரவையும் மீறி, போராட்டக்காரர்கள் வீதிக்கு வந்து, பாதுகாப்புப்
படையினர் மீது கற்களை வீசி தாக்கினர். இதனால், இரு தரப்புக்கும் இடையே
மோதல் வெடித்தது. கமர்வாரி என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினர்
சுட்டதில், ஒருவர் பலியானார். இதேபோல், இதிகா என்ற இடத்திலும் வன்முறை
வெடித்தது. இங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் அனிஸ் குர்ஷித் என்பவர்
பலியானார். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த ரியாஸ் அகமது என்பவர்,
மருத்துவமனையில் உயிரிழந்தார். கடந்த 30ம் தேதியிலிருந்து, இதுவரை 24 பேர்
பலியாகியுள்ளனர். இதையடுத்து, காஷ்மீரின் பெரும்பாலான இடங்களில் பதட்டம்
நீடிக்கிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதாலும், வன்முறை
ஏற்பட்டுள்ளதாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பல
நெடுஞ்சாலைகளில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. வாகன போக்குவரத்து
அடியோடு முடக்கப்பட்டது.
சுட உத்தரவு: வன்முறை தொடர்வதால், ஊரடங்கு உத்தரவை மீறுவோரை
கண்டதும் சுட, உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்ரீநகரில்,
பாதுகாப்புப் படையினர் வாகனங்களில் சென்று ஒலிபெருக்கி மூலம்
பொதுமக்களுக்கு அறிவித்தனர். கலவர பீதி காரணமாக ஸ்ரீநகரில் இருந்த
நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள், ஜம்முவுக்கு இடம்
பெயர்ந்துள்ளனர். இதற்கிடையே, ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர்
நடத்திய சோதனையில், பயங்கரவாதிகள் மறைவிடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இங்கிருந்த ஏராளமான வெடி குண்டுகள் மற்றும் வெடி பொருட்களை பாதுகாப்புப்
படையினர் கைப்பற்றினர்.
ஜம்மு - காஷ்மீர் பகுதியில் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு யாராவது
வர வேண்டும் என்றால், அது அவ்வளவு சுலபம் அல்ல; அதிக கட்டணம் கொடுத்து
தனியார் வாகனங்களை பிடித்து செல்ல வேண்டும். அதிக இடங்களில் மோதல்
இருப்பதால், தெருக்களில் தடைகளாக, கவச வாகனங்கள், போலீசார் துப்பாக்கி
சகிதமாக ரோந்து ஆகியவை காணப்படும். இதைத் தவிர தெருக்களில் சுருள் கம்பித்
தடைகள் போடப்பட்டிருக்கின்றன. வடக்கு காஷ்மீரில் உள்ள குப்வாரா,
சுல்தான்புரா போன்ற நகரங்கள் மட்டும் அல்ல, தெற்கு காஷ்மீரிலும் மோசமான
நிலை நீடிக்கிறது. கடைகள் திறக்கப்படாததால் அத்தியாவசியப் பொருட்களுக்கும்
தட்டுப்பாடு இருக்கிறது.
துணை ராணுவப் படை குவிக்கப்பட்ட இச்சூழ்நிலையில், நேற்று மிதவாத
இயக்கமான ஹுரியத் தலைவரான மிர்வாயிஸ், ஒமர் பரூக் விடுத்த வேண்டுகோளின்
படி, பாதுகாப்புப் படையினருக்கு எதிராக கல்வீச்சும் இல்லை, கடந்த
ஒருவாரமாக பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பி போராட்டம் செய்ததை மாற்றிக்
கொண்டனர். மாறாக "காஷ்மீருக்கு சுதந்திரம்' தேவை என்று மட்டும் கோஷம்
எழுப்பினர்.
ஐ.நா., மறுப்பு: ஐ.நா., பொதுச் செயலர் பான்-கீ-மூனின் செய்தி
தொடர்பாளரும், பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவருமான பர்கான் ஹக் என்பவர்
கடந்த வாரம் கூறுகையில், "பத்திரிகையாளர் சந்திப்பின்போது பொதுச் செயலர்
பான்-கீ-மூன், காஷ்மீர் நிலவரம் குறித்து கவலை தெரிவித்தார். பிரச்னைக்கு
அமைதியான வழியில் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்' என்றார்.
இது, இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஐ.நா.,
பொதுச் செயலரின் செய்தி தொடர்பாளர் கூறியது குறித்து, ஐ.நா., அலுவலகத்தில்
விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள், பத்திரிகையாளர் சந்திப்பின்போது
காஷ்மீர் விவகாரம் பற்றிய எந்த கேள்வியும் எழவில்லை என்றும், அதுகுறித்து
பொதுச் செயலர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் விளக்கம்
அளித்தனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆந்திராவில் பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
» பாரத் பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
» மேற்கு வங்கம், கேரளம், ஒரிசா, உ.பி.யில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
» துபாய் அபுதாபியில் பலத்த மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு(வீடியோ)
» பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து ஸ்டிரைக்: கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum