TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நெல் வயலுக்குள் மீன், நாட்டுக்கோழி வளர்ப்பு!!!!!!

Go down

நெல் வயலுக்குள் மீன், நாட்டுக்கோழி வளர்ப்பு!!!!!! Empty நெல் வயலுக்குள் மீன், நாட்டுக்கோழி வளர்ப்பு!!!!!!

Post by Tamil Mon Nov 30, 2015 1:28 pm

நெல் வயலுக்குள் மீன், நாட்டுக்கோழி வளர்ப்பு!!!!!!
வயலில் நெல்நாற்றுகள் நிறைந்திருக்க, அருகிலேயே சிறுகுட்டையில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. அதையொட்டி, நாட்டுக்கோழிகள் நலமாக வளர்கின்றன.
எங்கே என்கிறீர்களா? மதுரை குலமங்கலம் பகுதியில் விவசாயி கிருஷ்ணனின் வயலில் தான், ஒருங்கிணைந்த பண்ணையம் நடக்கிறது.
நெல்லில் சாதனை படைத்து, 2012 - 13 தேசிய அளவில் மகேந்திரா அவார்டு வாங்கியுள்ளேன்.பண்ணை அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார், கிருஷ்ணன்.

நெல் வயலுக்குள் மீன், நாட்டுக்கோழி வளர்ப்பு!!!!!! 12301470_1118862228131931_2393152543706094029_n

நான்கரை ஏக்கரில் நெல்விவசாயம் செய்கிறேன். வெறுமனே விவசாயத்தை நம்பி வாழமுடியாது. மழை இருந்தால் செழிக்கும். இல்லாவிட்டால் வயிற்றில் அடிக்கும். எனவே, விவசாயத்தோடு இணைந்த சிறுதொழில்களை செய்ய நினைத்தேன். 15 சென்ட் நிலத்தை, பள்ளம் தோண்டி சிறுகுட்டையாக்கினேன். கட்லா, ரோகு, கண்ணாடி கெண்டை குஞ்சுகளை, தலா ரூ.2க்கு வாங்கி விட்டால், 3 மாதத்தில் அரைகிலோ அளவு வளர்ந்து விடும். கிலோ ரூ.160 வரைக்கும் விற்பேன். 500 குஞ்சுகள் என்றாலும், ரூ.15ஆயிரம் வரை லாபம் கிடைக்கும்.
கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம், ஏழை விவசாயிகளுக்கு நாட்டுக்கோழி வளர்ப்புக்கு, 50 சதவீத மானியத்தில் கடனும், இலவச பயிற்சி தரப்படுகிறது. மதுரையில் என்னைப் போல், 35 பேர் திருப்பரங்குன்றத்தில் உள்ள கால்நடை ஆராய்ச்சி பல்கலையில் ஐந்து நாட்கள் பயிற்சி பெற்றோம். கொட்டகை அமைக்க, நாட்டுக்கோழி குஞ்சுகள், தீவனம் வாங்க ரூ.ஒருலட்சத்து 17ஆயிரம் ஆனது. இதில் 25 சதவீதத்தை தமிழக அரசும், 25 சதவீதத்தை நபார்டும் மானியமாக தருகிறது.
ஈரோட்டில் உள்ள அரசு பதிவு பெற்ற, குஞ்சு பொறிப்பகத்தில் இருந்து, 21 நாட்களான 250 குஞ்சுகளை வாங்கினேன். ஒரு குஞ்சின் விலை ரூ.61. 90 நாட்கள் வளர்த்தால், ஒன்றே கால் கிலோ முதல் ஒன்றரை கிலோ எடையளவு அதிகரிக்கும். கிலோ ரூ.200க்கு விற்கலாம். இன்னும் 25நாட்களில் கோழிகள் விற்பனைக்கு தயாராகி விடும். ஐ.எஸ்.ஐ., முத்திரை இடப்பட்ட தீவனத்துடன், முட்டைகோஸ், கேரட், கீரை வகைகளை தீவனமாக தருகிறேன்.
குலமங்கலத்தில் கால்நடை மருந்தகம் மூலம், கோழிகளுக்கு இலவச தடுப்பூசி, பராமரிப்பு கிடைக்கிறது. பிராய்லர் கோழிகளைப் போலின்றி, ஆண்டுமுழுவதும் நாட்டுக்கோழிகளை வளர்க்கலாம். குளிர் காலத்தில் மண்பானையில் அடுப்புக்கரி மூட்டி சூடேற்றி, வெப்பத்தை உண்டாக்கலாம். ஏற்கனவே 5000 காடை குஞ்சுகள் வாங்கி வளர்த்தேன். அதில் ரூ.20ஆயிரம் வரை லாபம் கிடைத்தது. தேன்கூடு வைத்து தேனீக்களை வளர்த்தேன். ஆறுமாதமாக தேன் கிடைக்கிறது.
கொட்டகைக்குள் நெல் உமி, மரத்தூள், ரம்பத்தூளை படுக்கை போல் தயாரித்துள்ளேன். கோழி களின் எச்சம் இதில் படியும். அவ்வப்போது கிளறி விடுவதால், ஈரம் காய்ந்து விடும். இதன்மூலம் கோழிகளுக்கு வரும் 50 சதவீத நோய்களை தடுத்துவிடலாம். மாதத் திற்கு ஒருமுறை உமி, மரத்தூள் படுக்கையை அகற்றி, புதிதாக தயார் செய்வேன். கோழி எச்சத்துடன் கூடிய உமி, மரத்தூள் சிறந்த இயற்கை உரம். இதை எடுத்து, நெல், தென்னைக்கு உரமாகத் தருகிறேன். மண்புழு உரமும் தயாரிக்கிறேன்.
விவசாயத்தை மட்டும் நம்பியிருக்காமல், உபதொழில்களையும் கூடவே செய்தால், வறட்சியின் போதும், நம்மை வாழவைக்கும் என்றார்.
தொடர்புக்கு :கிருஷ்ணன்: 89737 37379.
நன்றி: தினமலர் நாளிதழ்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum