TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கருணை போதுமே... கருணைக் கொலைகள் எதற்கு!

Go down

கருணை போதுமே... கருணைக் கொலைகள் எதற்கு! Empty கருணை போதுமே... கருணைக் கொலைகள் எதற்கு!

Post by ஜனனி Fri Oct 10, 2014 7:44 am

சின்னச் சின்ன சிரிப்புகளால் மலர்ந்திருக்கிறது, மதுரையில் உள்ள ‘ஷைன்’ பள்ளி. சிறப்புக் குழந்தைகளுக்கான இந்தப் பள்ளியை ஐந்து தோழிகள் இணைந்து நடத்தி வருகிறார்கள். அவர்கள் அனைவரும், சிறப்புக் குழந்தைகளின் அம்மாக்கள்! இந்த தோழிகளில் ஒருவரான விசாலாட்சி பேசினார்.
கருணை போதுமே... கருணைக் கொலைகள் எதற்கு! Child01
‘‘எனக்கு ஒரு மகள் மற்றும் மகன். மகன் செரிபரல் பாலப்ஸியால் பாதிக்கப்பட்டான். அவனுக்கு தினமும் ஃபிஸியோதெரபி கொடுப்பதற்காக ஒரு ஃபிஸியோதெரபி சென்டருக்குச் சென்றபோது, அங்கு என்னைப் போலவே தங்களின் சிறப்புக் குழந்தைகளை அழைத்து வந்திருந்த அம்மாக்களின் அறிமுகம் கிடைத்தது. எங்களின் குழந்தைகளை மட்டுமின்றி, அங்கு அனைவரும் எல்லோர் குழந்தைகளின் மீதும் அக்கறையாக இருப்போம். அதை கவனித்துதான், அங்கு பயிற்சியளித்த டாக்டர். உமாஷா, ‘பெற்றோரின் விழிப்புணர்வின்மையாலும், வெறுப்பாலும் வாடும் சிறப்புக் குழந்தைகள் பலர். அவர்களுக்கான ஒரு பள்ளியை நீங்கள் இணைந்து ஆரம்பிக்கலாமே..? அதற்கான அக்கறையும் பக்குவமும் உங்களுக்கு இருக்கிறது!’ என்றார். அப்படி சில வருடங்களுக்கு முன் மூன்று குழந்தைகளோடு ஆரம்பித்த எங்கள் ‘ஷைன்’ பள்ளியில் இன்று 80 குழந்தைகள் பயில்கிறார்கள்.
கருணை போதுமே... கருணைக் கொலைகள் எதற்கு! Child03
தங்களின் அத்தியாவசியத் தேவைகளைக்கூட கேட்டுப் பெறும் திறனற்ற இந்தக் குழந்தைகளை, தொடர் பயிற்சிகள் மூலம் சுயதேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் அளவுக்கு முன்னேற்றுவதே எங்களின் முதல் இலக்கு. ஆக்குபேஷனல் தெரபி, ஃபிஸியோதெரபி, சிறப்புக் கல்வி ஆகியவற்றை பயிற்றுவிக்கிறோம். இவர்களை விட்டுப்பிடிக்க வேண்டும். திடீரென்று முரண்டு பிடிப்பார்கள், தூங்க வேண்டும், வெளியில் செல்ல வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். இதனால் ஒரே மாதிரியான பயிற்சியோ அல்லது சிறப்புக் கல்வியோ இவர்களுக்கு பலனளிக்காது. ஒவ்வொரு குழந்தைக்கும் தனி கவனம் செலுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு சகிப்புத்தன்மைதான் மிக முக்கியம்.

சிறப்புக் குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்குத் தேவை. இவர்களுக்கு பயிற்சி அளிப்பது வீண் என்று எந்த முயற்சியும் எடுக்காமல் அவர்களை கைவிடுகிறார்கள். பின்னர் பருவ வயதானதும் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறாள், இயற்கை உபாதைகளை வீட்டிலேயே கழித்து அசிங்கம் செய்கிறான் என்று சொல்லி சங்கிலியால் கட்டி வைப்பது தொடங்கி கருணைக் கொலைக்கான அனுமதி கேட்பது வரை தவறு செய்கிறார்கள்.

கருணை போதுமே... கருணைக் கொலைகள் எதற்கு! Child02
இவர்களும் நம் குழந்தைகள்தான், நம்மைப்போலவே அவர்களுக்கும் இந்த பூமியில் வாழ 100% உரிமை இருக்கிறது. ஒரு வயதில் நடக்க வேண்டிய குழந்தை பத்து வயதில் நடந்தால், அது நம் குழந்தை இல்லை என்றாகிடுமா? இவர்களுக்கு நீண்ட காலப் பயிற்சி தேவை. ஆரம்பத்தில் முரண்டு பிடித்தாலும், தொடர்ந்து பயிற்சி அளிக்கும்போது அவர்கள் அதற்குப் பழகிவிடுவார்கள். சில குழந்தைகள் முழு ஆரோக்கியத்துடன் பிறந்தும், புறப் பிரச்னைகளால் சிறப்புக் குழந்தைகளாக மாறிவிட வாய்ப்பிருக்கிறது.

கருணை போதுமே... கருணைக் கொலைகள் எதற்கு! Child04அதற்கு உதாரணம்தான், என் தோழி மைதிலியின் குழந்தை. பிறக்கும்போது ஆரோக்கியமாகதான் இருந்தான். பின்னர் அவனுக்கு இருதயத்தில் ஓட்டை இருக்கிறது எனச் சொல்லி, அறுவை சிகிச்சைக்காக மயக்க மருந்து கொடுக்க, டோஸ் அதிகமாகி, இரண்டு ஆண்டுகள் கோமாவில் இருந்து மீண்டபோது, ஒரு சிறப்புக் குழந்தையாகத்தான் அவன் தன் பெற்றோருக்குக் கிடைத்தான். ஆரம்பத்தில் அவனால் உட்காரவே முடியாது என்று பலரும் ஆரூடம் சொன்னாலும், மனம் தளராமல் அவன் அம்மா தொடர் பயிற்சி அளித்து, இறுதியில் வெற்றியும் பெற்றார். இந்தக் குழந்தைகளால் முடியாது என்று இல்லை, தொடர்ந்து பயிற்சியளிக்க வேண்டும். அவர்கள் ஓட்டப் பந்தய வீரனாக, வீராங்கனையாக வேண்டும் என்றால் அவர்களோடு சேர்ந்து நாமும் ஓட வேண்டும். 

இப்போது என் மகன் எம்.பி.ஏ., முடித்து விட்டு பிஸினஸ் செய்வதற்காக பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறான். எனவே, உங்கள் வீட்டில் ஒரு சிறப்புக் குழந்தை இருந்தால், விதி என்று நோகாமல், அன்பும், கடமையும், பொறுமையுமாக அதற்கு தொடர் பயிற்சி அளியுங்கள். ஆரம்பத்தில் சலிப்பாய், கஷ்டமாய் தெரிந்தாலும், உங்கள் பயிற்சியால் கற்ற ஒரு விஷயத்தை அவர்கள் முதல் முறை செய்வதைப் பார்க்கும்போது, எல்லா வலிகளும் பறந்துவிடும். தயக்கத்தை தூர எறிந்துவிட்டு அவர்களை எல்லா வெளியிடங்களுக்கும் அழைத்துச் செல்லுங்கள். புது இடத்தை, புது மனிதர்களைச் சந்திக்க அவர்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்துத் தருவது அவசியம். அவர்களிடம் தினமும் இன்று வீட்டில், பள்ளியில் என்ன நடந்தது என்று கேளுங்கள். அவர்கள் சொல்லும் பதில் முழுமையாக இல்லை என்றாலும், அவர்களின் அந்த ஆர்வமும் முயற்சியும் நிச்சயம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். அவர்கள் சாதிக்கும் தூரம் வெகு தூரம் இல்லை என்பதை அந்தத் தருணத்தில் உணர்வீர்கள்!’’அக்கறையுடன் முடித்தார் விசாலாட்சி. 

-ந.ஆஷிகா

படங்கள்: வி.சதீஷ் குமார்

-விகடன்-
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum