TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நாளைய வளைய சூரிய கிரகணம் : வாழ்நாளின் அரிய வானியல் நிகழ்ச்சி

Go down

நாளைய வளைய சூரிய கிரகணம் : வாழ்நாளின் அரிய வானியல் நிகழ்ச்சி Empty நாளைய வளைய சூரிய கிரகணம் : வாழ்நாளின் அரிய வானியல் நிகழ்ச்சி

Post by Tamil Thu Jan 14, 2010 7:22 am



நாளைய வளைய சூரிய கிரகணம் : வாழ்நாளின் அரிய வானியல் நிகழ்ச்சி Tblfpnnews_40302675963













வானில்
நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும், இந்த உலகத்துக்கு பொதுவானவை என்பதால்,
அந்நிகழ்ச்சியை அறிந்து கொள்ள எல்லோருக்கும் ஆர்வம் இருக்கும்.
கிரகணங்கள், ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே தெரியும் என்பதால், அந்த
பகுதி மக்கள் அதை பார்க்கும் அரிய வாய்ப்பைப் பெறுகிறார்கள்.


சூரிய
கிரகணங்களில் முழு சூரிய கிரகணமும் வளைய சூரிய கிரகணமும் மிகவும் முக்கி
யத்துவம் பெறு கின்றன. முழு சூரிய கிரகணத் தின் போதும், வளைய சூரிய
கிரகணத்தின் போதும் வானில் தோன்றும் வைர மோதிர நிகழ்ச்சி சாமான்யர்களையும்
விஞ்ஞானி களையும் கவரக்கூடிய ஒரு வானியல் அற்புத நிகழ்ச்சி.வளைய சூரிய
கிரகணத்தின் போது, சூரியன் செல்லும் பாதையில் உள்ள மக்கள் முழு
வளையத்தையும் பார்க்கும் அரிய வாய்ப்பை பெறுகிறார்கள். மற்ற
பகுதியினருக்கு இது பகுதி சூரிய கிரகணமாக தெரியும். பகுதி சூரிய
கிரகணத்தின் போது, சூரியனின் ஒரு பகுதியை மட்டுமே சந்திரன்
மறைக்கும்.அப்பகுதியினருக்கு வளைய சூரிய கிரகண நிகழ்ச்சி தெரியாது.
கன்னியாகுமரியில் முதலில் துவங்கி மிசோரம் மாநிலத்தில் நாளை கிரகணம்
முடிவடைகிறது. அப்போது, இந்தியப் பெருங் கடல் மற்றும் மன்னார் வளை குடா
வழி யாக சூரியனின் பாதை செல்கிறது.


இந்தியாவில்
ராமேஸ்வரத்தைத் தவிர்த்து வேறு எந்த நிலப் பகுதியின் ஊடாகவும் சூரியனின்
மையப்பாதை செல்லவில்லை. என்றாலும், இந்த பாதையின் இரு புறங்களிலும் 300
கி.மீ., பரப்பில் உள்ள மக்கள் முழு வளைய சூரிய கிரகணத்தை தரி சிக்க
முடியும். இது இந்திய நிலப்பகுதியில் மதுரை, இலங்கைப் பகுதியில் அனுராத
புரம் வரை முழு வளையம் பார்க் கும் வாய்ப்புப் பெறுகிறார்கள். தமிழகத்தில்
கன்னியாகுமரி முதல் நாகப்பட்டினம் வரையிலான கடலோர மாவட்டங்களில் சூரிய
கிரகணம் மற்ற பகுதிகளை விட நீண்ட நேரம் தெரியும். இதுபோன்ற வாய்ப்பு
தமிழகத்தில் இன்னொரு முறை இந்த நூற் றாண் டில் கிடைக் காது.நாளைய சூரிய
கிர கணம், இந்த ஆண்டின் முதல் சூரிய கிர கணம் என்பதோடு, இந்த நூற்றாண்டின்
நீண்ட கிரகணம் என்ற சிறப் பினையும் பெற்றுள்ளது. இந்தியாவில் இதற்கு
முன்பு, 1965 நவ.23ல் வளைய சூரிய கிரகணம் தோன்றியது. இனி அடுத்த வளைய
சூரிய கிரகணம் 2019ல் தோன்றும். தமிழகத்தில் 108 ஆண்டுகளுக்கு முன்பு வளைய
சூரிய கிரகணம் தெரிந்தது. அதன் பின் நாளை தெரியும். தமிழகத்தில் தெரியக்
கூடிய அடுத்த வளைய கிரகணம் 3038ம் ஆண்டில் தான் நடக்கும்.சூரிய கிரகண
நிகழ்ச் சியின் போது, கோயில்களின் நடை சாத்தப் பட்டிருக்கும். ராமேஸ்வரம்,
காசி உள்ளிட்ட புண்ணிய தலங்களில் புனித நீராடுதல் நிகழ்ச்சிகள்
நடக்கின்றன.


வளைய சூரிய கிரகணம் :
சூரிய கிரகணங்களில் பல்வேறு வகைகள் உண்டு. சந்திரன் பூமியை சுற்றி
வருகிறது. பூமி, சூரியனை நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. மூன்றும்
ஒரே நேர்கோட்டில் வரும் போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது. ஒவ்வொரு சூரிய
கிரகண தினத் தன்றும் இவை அனைத்தும் ஒரே நேர் கோட்டில் வந்தால் கூட, தூரம்,
கோணம் ஆகியவற்றில் தொடர்ந்து மாற்றங்கள் இருக்கும். இதனால்தான் எல்லா
சூரிய கிரகணமும் ஒரே மாதிரியாக அமைவதில்லை. சூரிய கிரகணத்தின் போது,
சூரியனை சந்திரன் முழுமையாக மறைக்கும் போது, சந்திரனின் நிழல் பூமியில்
ஒரு குறிப்பிட்ட பகுதியில் விழும். அந்த நிழல் விழும்
இடத்திலிருப்பவர்களுக்கு முழு சூரிய கிரகணம் தெரியும்.அந்த இடத்திலிருந்து
தொலைவில் உள்ளவர் களுக்கு பகுதி சூரிய கிரகணம் தெரியும். அந்த பகுதியைத்
தவிர்த்து பூமியின் மற்ற பகுதியில் சூரிய கிரகணம் தெரியாது.சூரியனும்
பூமியும் ஒரே நேர்கோட்டிலும் நெருங்கியும் வரும் போது, பூமியைச் சுற்றும்
சந்திரன், பூமியிலிருந்து அதன் அதிகபட்ச தொலைவில் உள்ள போது, சூரியனின்
வட்டுப் பகுதியை சந்திரானால் முழுமை யாக மறைக்க முடியாமல் போகிறது.
சூரியனின் மையப் பகுதியை மறைக்கும் சந்திரனால் விளிம்புப் பகுதியை மறைக்க
முடியாமல் போய்விடுகிறது. அப்போது வளைய சூரியகிரகணம் ஏற்படுகிறது. இது
கங்கண சூரிய கிரகணம் என்றும் நெருப்பு வளைய சூரிய கிரகணம் என்றும்
அழைக்கப்படுகிறது.


ராமேஸ்வரத்துக்கு அரிய வாய்ப்பு :
வளைய சூரிய கிரகணத்தின் மையப் பாதை செல்லும் வழி, பெரும்பாலும் இந்திய
நிலப்பகுதியை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் மற்றும் மன்னார் வளைகுடாப்
பகுதியில் அமைந்திருக்கிறது. கன்னியாகுமரி பகுதியில் உள்ளவர்களுக்கு
முழுமையான வளைய சூரிய கிரகணம் முதலில் தெரியும் என்றாலும், சூரியனின்
மையப்பகுதி இந்தியப் பெருங்கடல் வழியேதான் செல்லும். எனவே, இந்திய
நிலப்பகுதியை சூரியனின் மைய கிரகண பாதை முதலில் தொடும் இடம்
ராமேஸ்வரம்தான். அதேபோல் இப்பாதை இந்திய நிலப்பகுதியில் முடியும் இடமும்
ராமேஸ்வரம்தான். இதுதான் இந்த சூரிய கிரகணத்தின் போது நடக்கும் அரிய
நிகழ்ச்சி. ராமேஸ்வரம் சிறியத் தீவுப் பகுதி என்பதால் அதைக் கடந்து,
கிரகணம் மன்னார் வளைகுடாப் பகுதியில் செல்கிறது. ராமேஸ்வரத்தில் உள்ள
தனுஷ்கோடிதான் இந்தியா விலிருந்து கிரகணத்தைப் பார்க்க விரும்புவோருக்கு
சிறந்த இடம். மாலத்தீவுகளுக்கு அடுத்து இங்கு 10.4 நிமிடம் கிரகணம்
தோன்றுவதால் இங்கும் விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்கள் கூடுகிறார்கள்.
கன்னியாகுமரி, நாகர்கோவில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமேஸ்வரம்,
மதுரை, ராஜபாளையம், சிவகங்கை, காரைக்குடி, நாகப்பட்டினம், தஞ்சை,
கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் உள்ளிட்ட வரைபடத்தில் 300 கி.மீ.,
எல்லைக்குள் உள்ள பகுதிகள் 100 சதவீதம் வளைய சூரிய கிரகணத்தைப்
பார்க்கலாம்.


மாலத்தீவுகளில் அதிக நேரம் :
இந்தியப் பெருங்கடல் பகுதியில்தான் சூரிய கிரகணம் அதிக நேரம் நீடிக்கிறது.
ஆகவே, கடல் பகுதியிலிருந்து விஞ்ஞானிகள் அவற்றைப் பார்க்க முடியாது.
அதையடுத்து மாலத்தீவுகளில் சூரிய கிரகணம் அதிக நேரம் நீடிக்கிறது. அங்கு
10.8 நிமிடங்கள் தெரியும். ஆகவே இந்த ஆண்டு வளைய சூரியகிரகணத்தைப் பார்க்க
மாலத்தீவுகள்தான் சிறந்த இடம் என்பதால், வானியல் அறிஞர்கள் அந்த நாட்டை
நோக்கிப் படையெடுத்துச் சென்றிருக்கிறார்கள். மாலே நகரில் சர்வதேச விமான
நிலையம் இருப்பதால், அங்கு விஞ்ஞானிகள் சென்று வருவதும் எளிதாக உள்ளது.


கர்ப்பிணிகளுக்கு ஆபத்தா?சூரிய
கிரகணத்தையொட்டி மூட நம்பிக்கைகள் ஏராளமாக உள்ளன. கிரகணத்தின் போது
சாப்பிட்டால் தோஷம் பிடிக்கும், தண்ணீர் குடிக்கக்கூடாது, கர்ப்பிணிகள்
வெளியில் செல்லக்கூடாது போன்றவை இன்றும் நம்பப்படு கின்றன. ஆனால்
இவற்றுக்கும் இந்த வானியல் நிகழ்ச் சிக்கும் எந்த அறிவியல் பூர்வ
உண்மையும் இல்லை. உபகரணங்கள் ஏதும் அணியாமல் பார்த்தால் ஆபத்து என் பதைத்
தவிர, வேறு எந்த பிரச்னையும் இந்த கிரகணத்தில் இல்லை.


வானில் தோன்றும் நெருப்பு வளையம் :
கிரகணம் துவங்கும் போது, சந்திரனின் வட்டுப் பகுதி, சூரியனின் வட்டுப்
பகுதியை மறைக்கத் தொடங்குகிறது. பின்னர், தொடர்ந்து மறைக்கும் போது,
சூரியனை ஒரு பிறை போல் காட்டும். பின்னர் முழு சந்திரனின் வட்டும் சூரியனை
மறைக்கும் போது, நெருப்பு வளையம் தோன்றும். அது மிகப்பிரகாச மாக தோன்றும்.
இது சில வினாடிகளுக்கு நீடிக்கும் பின்னர், சூரியனிலிருந்து விலகிச்
செல்லும் போது, திடீரென ஒரு பகுதியிலிருந்து ஒளிவெள்ளம் பாயும். இது
வைரமோதிரம் போன்று காட்சி அளிக்கும்.


வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது :
சூரியனை வெறும் கண்களால் சாதாரண நாட்களில் பார்த்தால் கூட, கருவிழி சேதம்
அடைந்து பார்வை பறிபோகும் வாய்ப்பு உள்ளது. ஆகவே இதே நிலைதான் சூரிய
கிரகணத்தன்றும். ஆகவே கிரகணத்தை பார்க்க விரும்புவோர், அதற்குரிய
கண்ணாடிகளை அணிந்துதான் பார்க்க வேண்டும். அது சூரியனின் புறஊதாக்
கதிர்களை தடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். சாதாரண கண்ணாடிகளில்
புகையை ஏற்படுத்தி பார்ப்பதோ, போட்டோ பிலிம், அல்லது கலர் கண்ணாடிகள்
வழியோ பார்ப்பது ஆபத்தானது.


300 கி.மீ., அகல பாதை :
சூரியனின் வளையத்தை சூரிய கிரகணப் பாதையில் 300 கி.மீ., தூரத்தில் உள்ள
மக்கள் பார்க்கலாம். இந்நிழல், மத்திய ஆப்ரிக்காவில் உகாண்டாவில் துவங்கு
கிறது. நைரோபி வழியாக சென்று, இந்தியப்பெருங்கடலில் மாலத்தீவு களை
அடைகிறது. அங்கிருந்து தென் தமிழகத்தில் ராமேஸ்வரம், வட இலங்கையில்
நெடுந்தீவில் நுழைந்து யாழ்ப்பாணத்தில் வெளியேறுகிறது. பின்னர் மியான்மர்
வழியாக சீனாவில் மஞ்சள் கடல் பகுதியில் சூரிய கிரகணம் முடிவடைகிறது. பூமி
உருண்டையின் பாதித் தூரத்தை கிரகணம் கடக்கிறது.


ஜன.15: கிரகணம் மற்றும் வளையம் தோன்றும் நேரம் : காலை
10.44 மணிக்கு மத்திய ஆப்ரிக்காவில் கிரகணம் தோன்றுகிறது. இது சீனாவில்
உள்ள மஞ்சள் கடலில் முடிகிறது. தமிழகத்தில் காலை 11.05க்கு துவங்கும்
கிரகணம் மதியம் 3.15க்கு முடிவடைகிறது. எனினும், இக்கிரகணத்தின் உச்சகட்ட
நிகழ்ச்சியான முழு வளைய சூரிய கிரகணம் வெவ்வேறு இடங்களில், மதியம் 1.10
மணிக்குத்தான் துவங்கி 1.28 வரை நீடிக்கும். சென்னையில் முழு வளைய சூரிய
கிரகண நிகழ்ச்சி தோன்றாது. என்றாலும் 82 சதவீத வளைய கிரகண நிகழ்ச்சியை
பார்க்க முடியும். சென்னையில் காலை 11.25க்கு துவங்கும் கிரகணம் 3.15க்கு
முடியும். மதியம் 1.30க்கு அதிகபட்ச சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum