TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள்.

Go down

தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள். Empty தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள்.

Post by ஜனனி Fri Oct 04, 2013 7:26 pm

தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள்.
தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள். 1378433_492601710835397_365449347_n
1987 செப்ரெம்பர் 26ம் நாள் தமிழீழம் எங்கும் ஒரு துயரம் தோய்ந்த சோகநாளாகவே அமைந்தது. திலீபனின் இழப்பு அனைத்து தமிழர் மனங்களையும் வாட்டிவதைத்தது. சிறீலங்கா – இந்தியா ஒப்பந்தம் மூலம் தமிழீழத்தை ஆக்கிரமித்த இந்திய அரசின் வஞ்சகச்சதியால் மக்களுக்காக வாழ்ந்த அந்த ஒளிவிளக்கு ஓய்ந்தது.

இத்தோடு முடிந்துவிட்டது என்று மக்களின் மனத்தில் எண்ணங்கள் ஓட, தமிழீழக் கடற்பரப்பிலே பயணித்துக் கொண்டிருந்த லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளைக் கைதுசெய்து அவர்களின் சாவுகளுக்கு சிறீலங்கா – இந்திய அரசுகள் காரணமாகின. அது அனைத்து மக்களையும் இன்னுமோர் சோகத்தில் ஆழ்த்தியது. 1987ம் ஆண்டு யூலை 29ம் நாள் சிறீலங்கா – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

சிறீலங்கா – இந்திய ஒப்பந்தம் மூலம் தமிழ் மக்களிற்கு நன்மைகள் கிட்டும், இந்தியா எமக்கு ஒரு வழியைக்காட்டும் என நம்பியிருந்த மக்களிற்கு மாறாக துன்பங்களையும் துயரங்களையுமே சிறீலங்கா அரசும், இந்திய அரசபடைகளும் சுமத்தின. 1987ம் ஆண்டு ஒக்டோபர் 3ம் நாள் தமிழீழக் கடற்பரப்பிலே நிராயுத பாணிகளாக எதிர்கால எண்ணக் கனவுகளுடன் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகள் படகில் பயணித்தனர். அன்று விடுதலைப் போராட்டம் முனைப்பு பெற்றிருந்த காலத்தில் மிகத்திறமையான படகோட்டிகள், ஆழ்கடலோடிகளாகச் செயற்பட்டவர்கள் இவர்கள்.

சிறீலங்கா இராணுவத்தின் ஆதரவோடு தமிழீழக் கடற்பரப்பில் வைத்து இந்தியப் படைகளால் கைதுசெய்யப்பட்டனர். 1987ம் ஆண்டு ஒக்ரோபர் 3ம் நாள் இவர்களைக் கைதுசெய்து பலாலி இராணுவ முகாமிற்கு கொண்டுசென்று விசாரணகள் நடாத்திவிட்டு, பின் கொழும்பு கொண்டுசென்று அதன் மூலம் ஒரு சதி நாடகத்தை அரங்கேற்றலாம் என எண்ணி சிறீலங்கா பேரினவாத அரசு திட்டம் தீட்டியது. பலாலி இராணுவ முகாமில் பன்னிருவேங்கைகளும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட சிறீலங்கா அரசபடைகள் எதுவித பலனையும் அடையவில்லை.

தமிழர்களின் காவலர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உயிர் நாடியாகவும் இருந்த இவர்களைக் கைதுசெய்வதன் மூலம் தமிழ் மக்களையும் விடுதலைப் போராட்டத்தையும் அழித்துவிட எண்ணி பல சதிகளைச் செய்தனர். சிறையிலும் எதுவித தளர்வுகளும் இன்றி தமிழர்களின் உரிமைக்காகவே வாதாடினார்கள். இரண்டு நாட்கள் பலாலி இராணுவ முகாமில் தடுத்துவைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு அது நடைபெறும் சமநேரத்தில் விடுதலைப் புலிகள் அவர்களை மீட்டுவிட முடியும் என்ற நம்பிக்கையில் இந்தியப் படைகளுடன் பேச்சுவார்த்தையும் நடாத்திப் பார்த்தனர்.

அதுவும் பயனற்றுப் போய்விட்டது. குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளையும் கொழும்பு சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல அரசு திட்டமிட்டிருந்தது. 1987ம் ஆண்டு ஒக்ரோபர் 5ம் நாள், தமிழ் மக்கள் மீதும் தாயக மண்மீதும், தலைவர் மீதும் கொண்ட பற்றினால் அங்கு நின்ற இராணுவத்துடன் தங்களால் இயன்றவரை அவர்களுடன் மோதி இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீர மரபினைக்காக்க சயனைட் அருந்தி பன்னிரு வேங்கைகளும் அந்த மண்ணில் தங்கள் உயிர்களை அர்ப்பணித்தனர்.

அன்றைய நாட்களில் அச்சம்பவம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழீழ மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனாலும், விடுதலைப் போராட்டம் இன்னும் வீச்சுடன் முன்னகர்ந்தது. தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் போரிடும் வல்லமையை தூண்டியது. பலாலி இராணுவ முகாமில் வைத்து சயனைட் உட்கொண்டு வீரச்சாவடைந்த லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் மற்றும் ரகு, நளன், ஆனந்தக்குமார், மிரேஸ், அன்பழகன், றெஜினோல்ட், தவக்குமார், கரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் வித்துடல்களும் யாழ்ப்பாணம் வடமராட்சி தீருவிலிற்கு எடுத்துவரப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் போராளிகள் முன்னிலையில் தீயில் சங்கமமாகின.

இன்று அங்கு அந்தப் பன்னிருவேங்கைகள் நினைவான நினைவுச் சதுக்கம் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களப் படைகளால் சிதைக்கப்பட்டாலும், அவர்களின் நினைவுகள் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டே உள்ளன. இந்த திட்டமிட்ட சிறிலங்கா அரசின் சதி நடந்தேறி 22 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் ஆறாத வடுவாகவே அந்தச் சம்பவம் உள்ளது.

ஆனால், சிறிலங்கா அரசோ, சர்வதேசமோ கடந்த கால சமாதான காலத்திலும் சரி, அதற்கு முற்பட்ட காலங்களிலும் சரி தமிழ் மக்களின் மீதும் நிராயுதபாணிகளாக உள்ள போராளிகள் மீதும் தமது நடவடிக்கைளை மேற்கொண்டு தமிழினத்தை அழிக்கும் நடவடிக்கையிலேயே முனைப்புடன் செயற்படுகின்றன. தற்போதைய நில ஆக்கிரமிப்பு, மக்களின் மீதான வான், எறிகணைத் தாக்குதல்கள் இதனையே சுட்டிக் காட்டி நிற்கின்றன.

|| புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள். Empty Re: தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள்.

Post by ஜனனி Fri Oct 04, 2013 7:28 pm

இத்தனையும் கண்டு அனுபவித்த பின்னரும் இந்தியா நமக்கு வரம் தரும் எனச் சாமியாடும் தொண்டர் படையை நினைக்கும் போது அப்பாவித்தனம் என்பதா இனத் துரோகம் என்பதா? நாங்கள் இன்னமும் எமது சிந்தனையைச் சீர்செய்யாது இருப்போமானால் எப்படி எமது முன்னைய தமிழர் தலைவர்களைக் குறை சொல்லமுடியும்? ஈழத் தமிழினம் கொழும்புத் தமிழரால் வழிநடத்தப் பட்ட நிலை சேர் பொன் அருணாசலத்தின் அரசியல் யாழ் இளைஞர் பேரவையைத் தமது வழிக்குத் திருப்பிய 1920 களில் தொடங்கி விட்டது. இதனால் தொடர்ச்சியான விட்டுக் கொடுப்புகளால் எமது இனம் இழந்த நிலமும் வளமும் வாழ்வும் அளவிட முடியாதவை. இந்த நீண்ட கால அசமந்தப் போக்கை எமக்கு உணர வைத்தவர் சிங்களத் தலைவர் டி.எஸ். சேனாநாயக்க. அவரே தமிழ்த் தலைவர்களுக்கு பதவி பாராட்டுக்களை வழங்கி தமிழரின் உயிர் குடித்த பருந்து.

தமிழினத்தின் ஏமாளித்தனத்தை ஜீ.ஜீ. பொன்னம்பலம் தமது 50:50 என்ற கோரிக்கை மூலம் தமிழ்ப் பொது மக்களுக்கும் சிங்களத்துக்கும் வெளிப் படுத்தினார். பின்னர் அவர் குட்டைக்குள் விழுந்தாலும் அவரால் அரசியலுக்கு அறிமுகப் படுத்தப் பட்ட தந்தை செல்வாவும் அவருடன் கோப்பாய்த் தொகுதிப் பிரதிநிதியாக 1947 இல் தெரிவான கு.வன்னியசிங்கமும் தமிழினத்தின் தர்ம நோக்கும் உரிமைக் குரலும் தடம் புரளாமற் காப்பாற்றினர்.

இவர்கள் இருவரும் நல்லவராக இருந்ததால் இந்திய வம்சாவழித் தமிழருக்கும் இலங்கைத் தமிழருக்கும் அழிக்க முடியாத வரலாற்றுத் துரோக வழியில் தமிழினம் போகாது தப்பியது. இவர்களால் தொடங்கப் பட்ட தமிழரசுக் கட்சி முன்வைத்த சுவிஸ் அரசமைப்பு முறையிலான சமஷ்டி ஆட்சிமுறையைச் சிங்களத் தலைமை ஏற்றிருந்தால் இன்று இலங்கை பூலோக சொர்க்கமாக இருந்திருக்கும். இன்றைய இந்த அவல நிலைக்குப் படிக்காத சிங்கள மக்களும் தமிழ்ப் பொது மக்களும் காரணம் எனக் கூற முடியாது. ஆங்கிலக் கல்வி கற்ற சிங்கள, தமிழ்த் தலைவர்களே முழப் பொறுப்பும் ஏற்க வேண்டியவர்கள்.

அப்பாவிப் பொது மக்களுக்குப் பொய்யான தேர்தல் வாக்குறதிகளை வழங்கி வாக்கு மோசடிகளைச் செய்து பதவிக்கு வருவது, பின்னர் தமக்கிடையே ஏற்படுத்திக் கொண்ட போட்டிகளால் நாட்டைச் சூறையாடிக் குட்டிச்சுவராக்கும் அரசியல் நடத்துவது. கடந்ந 80 ஆண்டுகளாக டி.ஏஸ் முதல் மகிந்தர்வரை நடக்கும் கதை இதுதான். இவ்வகையாக உருவாக்கப் பட்ட சிங்களத் தமிழ் அரசியல் முரண்பாடுகள் வெளியார் தலையிட வசதியாக இருந்தது. இந்திய வம்சாவழித் தமிழரின் குடியுரிமைப் பறிப்பும் நாடற்றவராக்கி நாடு கடத்தும் சிங்களத்தின் செயலும் இந்திய அரசுக்குத் தலையிட அன்றே போதுமான காரணிகளாக இருந்தன. தன்னால் முடியாது போனாலும் இந்தியா சர்வதேச கவனத்தைப் பெற்றுத் தீர்வு கண்டிருக்க முடியும். ஆனால் இரு தேசத் தலைவர்களும் ஆங்கில மோகத்தில் ஊறிய ஆதிக்கப் பிரபுக்கள் வகுப்பினர். காட்டிக் கொடுத்தே ஆங்கில அரசிடமிருத்து நற்பெயர் பெற்றவர்கள். அதனால் இவர்களுக்கு மக்கள் நலமோ நாட்டு நலமோ சுட்டுப் போட்டாலும் வராத சமாச்சாரங்கள்.

இரு நாடுகளிலும் இன்றும் ஆளும் கதிரைக்கு அதே ஆங்கில, அல்லது மேல்நாட்டு மோகம் கொண்ட பிரபுக்களின் வாரிசுகளே அலங்கரித்து வருகின்றனர். வாரிசுகள்தான் வரவும் முடியும் என்ற நிலையில் இந்திய அரசு உறுதியாக நிற்பது தெரிகிறது.. இன்று மக்களின் கருத்து உலகம் அளவு விரிந்த அறிவைப் பெற முடிவதால் ஆழும் வர்க்கத்துக்குப் பதவியில் இருக்கத் தேவையானது மக்களின் கவனமாகும். மக்களின் கவனத்தை இலகுவில் ஈர்க்கக் கூடியவையாக இன்று மதமும் மதம் சார்ந்த அடிப்படைவாத வன்முறைகளும் இருப்பதால் இலங்கையில் புத்தம், இந்தியாவில் இந்துத்துவம், ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் கத்தோலிக்கம், பாக்கிஸ்தான் ஆப்கான் மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்லாம் என்பன இன்று வன்முறைக் களங்களாக உள்ளன.

இப்படியான சூழலில் இரத்தம் சிந்தும் கோரச் செயல்கள் சொத்தழிவு உயிர்க் கொலை என்பன முரண்பாடுகளின் பொதுமையான பின் விளைவுகள் என்ற உண்மைகள் மறைக்கப் படுகின்றன. அரச இயந்திரங்களிலிருந்து பாயும் துப்பாக்கி ரவைகள், விமானக் குண்டு வீச்சுக்கள், எறிகணை வீச்சுக்கள் எத்தகைய அழிவுகளைத் தந்தாலும் அவை மக்களாட்சி என்ற பெயரால் நியாயப் படுத்தும் கொடுமை நடக்கிறது. நியாயமான அரசியல் கோரிக்கைகளை அமைதியான வகையில் அணுகித் தீர்வு காணாது அரச இராணுவ இயந்திரங்களைக் கொண்டு வன்முறையால் அடக்குவது எப்படி மக்களாட்சி ஆகமுடியும்? மக்களால் மக்களுக்காக மக்களை ஆழும் முறை மக்களாட்சி என்றால் எப்படி ஒரு அரசு தான் ஆளும் மக்களையே அரசியல் காரணங்களுக்காகக் கொல்ல முடியும்?

அப்படிப் பார்த்தாலும் 1977 முதல் தமிழ் மக்கள் சுதந்திரமான வாக்களிப்பு மூலம் இனிமேலும் சிங்களத்துடன் ஒற்றையாட்சியில் இருக்க முடியாது என்பதைத் தெளிவாகத் தெரிவித்து விட்டனர். ஆனாலும் தமது ஜனநாயக உரிமைகளைப் பயன் படுத்தும் நோக்கமாகவே தேர்தல்களில் பங்களித்து வந்தனர். 1972 லும் 1980 லும் செய்யப் பட்ட அரசியலமைப்பு மாற்றங்களில் தமிழ் மக்களின் வாக்களிப்பு மூலம் தொரிவான சம்மதம் இல்லாமலே சிங்களத்தாலும் அதன் நியமனத் தமிழ் பிரதிநிதிகளாலுமே ஏற்கப் பட்டவை. சிங்களத்தின் அணுகுமுறை மாறும் என நினைத்து ஏமாந்த நிலையில் இன்றைய அரசுத் தலைவர் தமிழ் மக்களின் வாக்குப் பெறாமலே பதவிக்கு வந்தவர். அவருக்குத் தமிழர் மீது ஆட்சி செய்யவோ ஆணை செலுத்தவோ எந்த விதமான ஜனநாயக யோக்கியதையும் கிடையாது.

ஆனால் இன்று உலகம் எங்கும் மக்களாட்சி என்ற பெயரால் தன் மக்களைத் தானே கொன்று அழிக்கும் அரசுகள்தான் இயங்குகின்றன. இதில் இயங்கு சக்தியாக ஆளுவோர் யார் மீதும் எதற்காகவேனும் பயங்கரவாதி என்ற முத்திரை குத்திவிட முடிகிறது. இது இலங்கை அரசைப் பொறுத்த வரை தமிழரின் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு ஆப்பு வைக்கச் சிறந்த ஆயுதமாக உள்ளது. இலங்கை அரசியலைக் கூர்ந்து கவனிப்பவருக்கு ஒன்று புரியும். மகிந்தரின் இடத்தில் எவர் பதவிக்கு வந்தாலும் இதே வழியைத்தான் பின்பற்ற வேண்டும். ஏனென்றால் இது பண்டாரநாயக்க ஜே.ஆர். 1940களில் தொடக்கி வைத்த அரசியலின் பரினாம வளர்ச்சி. இதில் பின் நோக்கிப் போக முடியாதபடி 1960ல் அரசுடமை யாக்கப்பட்ட கல்வித் துறையும் அது புகுத்திய பாடநெறிப் புத்தகங்களும் செய்து விட்டன. இதனை அறியாதவர் இலங்கையின் இன முரண்பாடுகளை என்றுமே விளங்கிக் கொள்ள முடியாது.

ஒரு புதிய சிங்கள இனமேலாதிக்கச் சிந்தனைக்குள் முழுச் சிங்கள இனமும் சிக்கிக் கொண்டு விட்டது. வேறு இனங்களை முக்கியமாக அரசியல் பொருளாதார அறிவியல் என்பவற்றில் தொடர்ந்தும் மேல் நிலையைத் தக்க வைக்கும் தமிழினத்தை மதிக்கவோ மன்னிக்கவோ தயாராக இல்லை. இராணுவ ரீதியாக மட்டுமல்ல வாழ்வியல் ரீதியாகப் பார்த்தாலும் சிங்களம் புலி வாலைப் பிடித்துக் கொண்டவன் கதையாகவே உள்ளது. இந்நிலை ஜே.ஆரின் காலத்தில் தொடங்கியது என்றே சொல்ல வேண்டும். திம்புவிலும் பெங்களூரிலும் நேருக்கு நேராகப் பொது மேடையில் எமது அரசியல் தோன்றியபோதே சிங்களம் புலிவாலைப் பிடித்து விட்டது.

இலங்கை அரசியல் உண்மையான மக்களாட்சியாக இருந்தால் திலீபன் போல் எத்தனையோ கல்வியிற் சிறந்த மாணவர்களைப் பாழாய்ப் போன சிங்களப் பேரினவாத அரசியலும் காட்டிக் கொடுக்கும் தமிழ் அரசியல் துரோகிகளின் தன்னலமும் தமிழ் மக்களிடமிருந்து அபகரித்து முடிவில்லாத போருக்கு இன்று வரை பலியாக்கி வருவது எமது இனத்தின் சாபக் கேடாக உள்ளது. இதற்கு முடிவு காணும் வாய்ப்பும் வசதியும் புகலிடத் தமிழரிடமே உள்ளன. இன்று உள்ள நிலையில் இது வன்னி மக்களதோ தமிழீழ மக்களதோ பிரச்சனையாக இல்லை- மாறாக அனைத்துலகத் தமிழரதும் மனித இனத்தினதும் பிரச்சனையாகப் பார்க்கப்பட வேண்டும்

இன்று வன்னியில் நடப்பது மனித வதை, இன அழிப்பு, மற்றும் மனித இனத்துக்கு எதிரான போரக் குற்றங்களாகும். இதே குற்றத்தைக் கிழக்கில் செய்தபோது அனைத்துலக அரசுகளும் அமைதிப் பேச்சின் அனுசரணையாளர்களும் நடவடிக்கை எடுப்பர் என நம்பி நாம் ஏமாந்து விட்டோம். வன்னியில் இடம்பெறும் குற்றச் செயல்களின் பொறுப்பாளிகளாக, முக்கிய குற்றவாளிகளாக இலங்கை இந்திய அரசுகள் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட வேண்டியவர்கள். கிளிநொச்சியில் இலங்கைப் படைத் தளத்தில் காயம் பட்டவர்களில் இரு இந்தியர்கள் இருப்பது இந்திய அரசைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் போதுமானதாக உள்ளது. எமது அடுத்த நடவடிக்கை இது பற்றியதாக இருக்க வேண்டியது நியாயமான தேவையாக உள்ளது. காலத்தின் கட்டாயம் தெரிந்து இதனைச் செய்வோமா?

ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள். Empty Re: தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum