TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தென் மாநிலங்களுக்கும் எரிவாயு: ஒரு கனவு நினைவாகிறது

Go down

தென் மாநிலங்களுக்கும் எரிவாயு: ஒரு கனவு நினைவாகிறது Empty தென் மாநிலங்களுக்கும் எரிவாயு: ஒரு கனவு நினைவாகிறது

Post by ஜனனி Wed Apr 07, 2010 6:07 am

தென் மாநிலங்களுக்கும் எரிவாயு: ஒரு கனவு நினைவாகிறது Tblfpnnews_36635553837







கிருஷ்ணா,
கோதாவரி நதிப் படுகையிலிருந்து உற்பத்தியாகும் இயற்கை எரிவாயுவின் ஒரு
பகுதி தென் மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று 'தினமலர்' பத்திரிகை,
பொருளாதார பத்திரிகையான 'இண்டஸ்ட்ரியல் எகானமிஸ்ட்' பத்திரிகையுடன்
இணைந்து கோரி வருகிறது. இது பற்றி விரிவான கருத்தரங்கம் ஒன்றை கடந்த
டிசம்பர் மாதம் சென்னையில் நடத்தினோம்.

சமீபத்தில் பார்லிமென்டில் பெட்ரோலியம்
மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் முரளி தியோரா சமர்ப்பித்த
அறிக்கை, இந்த நெடுநாளைய கனவு நிறைவேற வழி வகை செய்துள்ளது. 5,523 கி.மீ.,
நீளத்திற்கு தேசிய அளவிலான 9 புதிய எரிவாயுக் குழாய்கள் அமைக்க உரிமம்
வழங்குவதாக அமைச்சர் அறிவித்துள்ளார். இவற்றில் 5 தென் மாநிலங்களில்
பொருத்தப்படும். ரிலையன்ஸ் நிறுவனம் விஜயவாடாவிலிருந்து சென்னை (445
கி.மீ.,) சென்னை - தூத்துக்குடி (670 கி.மீ.,) சென்னை - பெங்களூரு -
மங்களூரு குழாய்களை அமைக்கவும், மற்றவை பொது நலத்துறையான 'கெயில்'
நிறுவனம் நிறுவவும் உரிமம் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
2012ம் ஆண்டின் இறுதிக்குள் தென் மாநிலங்கள் முழுமைக்கும் இயற்கை எரிவாயு
எளிதாக கிடைக்க இந்த உரிமம் வழி வகை செய்யும்.

சமீப காலங்களில் தென் மாநிலங்களின் பொருளாதார
வளர்ச்சிக்கு உதவும் திட்டங்களில் இது மிகவும் முக்கியமான ஒன்று. வளர்ந்த
நாடுகளில் இயற்கை எரிவாயு மிகவும் முக்கிய எரிசக்தியாக பரவலாக
உபயோகிக்கப்பட்டு வருகிறது. இயற்கை எரிவாயு மலிவானது. எளிதில் எடுத்துச்
செல்லக்கூடியது. உபயோகிப்பதற்கு எளிதானது. இந்தியாவில் கிடைக்கும்
எரிவாயுவின் கணிசமான பகுதி, குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களினால்
உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மாநிலங்களின் அதிவேக வளர்ச்சிக்கு
இது ஒரு முக்கிய காரணம். குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய நான்கு ரசாயன
உரத் தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், பெட்ரோ கெமிக்கல்
தொழிற்சாலைகள், எரிவாயுவை மூலப்பொருளாகக் கொண்டவை. இவை தவிர, பல வகையான
ரசாயன மற்றும் மருந்துத் தொழிற்சாலைகள், போக்குவரத்து வாகனங்கள் மற்றும்
வீடுகளுக்கு குழாய் மூலம் எரிசக்தி போன்ற பல வகையான உபயோகங்களிலும்
இம்மாநிலம் முதன்மை வகிக்கிறது.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மும்பை
நகரத்தையொட்டிய ஆழ்கிணறு பகுதிகளில் கிடைக்கும் எரிவாயு, மேற்கு மற்றும்
சில வட மாநிலங்களில் முழுமையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை
அடிப்படையாகக் கொண்டு ஆறு பெரிய ரசாயன உரத் தொழிற்சாலைகள், மூன்று மின்
உற்பத்தி நிலையங்கள் மற்றும் சமையல் எரிவாயுத் தொழிற்சாலைகள் குஜராத்,
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேச மாநிலங்களில், பல ஆயிரம் கோடி
ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு லாபகரமாகச் செயல்பட்டு வருகின்றன. இதன்
அருமையை உணர்ந்த இந்த மாநிலங்கள், இந்திய உற்பத்தியை மட்டும்
சார்ந்திராமல் கணிசமான அளவில் இயற்கை எரிவாயுவை இறக்குமதியும் செய்து
வருகின்றன. 2008ம் ஆண்டில் கிட்டத்தட்ட நாளொன்றுக்கு 10 கோடி கன மீட்டர்
என்ற அளவில் இதன் உபயோகம் பெருகியுள்ளது. இதில் தென் மாநிலங்கள் அதிகம்
அக்கறை செலுத்தவில்லை.

ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா, கோதாவரி நதிப்
படுகைகளில் எரிவாயு பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆகியும்
உற்பத்தி பெருமளவில் துவங்கி, ஓராண்டுக்கு மேலாகியும், கேரளா, தமிழகம்,
கர்நாடக மாநிலங்களில் அரசியல் தலைவர்களோ, ஏன் தொழில் வல்லுனர்களோ இதில்
அதிக கவனம் செலுத்தவில்லை. இதற்கு மாறாக, எரிவாயுவின் அருமையை நன்கு
உணர்ந்த ரிலையன்ஸ் போன்ற பெரும் நிறுவனங்களும் மற்றும் குஜராத்
மாநிலத்தின் அரசியல் தலைவர்களும், தொழில் நிறுவனங்களும் உற்பத்தி
துவங்குவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே எரிவாயு உபயோகத்தில் சீரிய கவனம்
செலுத்தத் துவங்கினர். ரிலையன்ஸ் நிறுவனம் 25,000 கோடி ரூபாய்க்கு மேல்
செலவு செய்து ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து, 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம்
எரிவாயு உற்பத்தியை பெருமளவில் துவக்கியது. ஒரே ஆண்டு காலத்தில் 1,352
கி.மீ., நீளத்திற்கு தினசரி 8 கோடி கன மீட்டர் எரிவாயு எடுத்துச் செல்ல
வசதியாக காக்கிநாடாவிலிருந்து குஜராத் மாநிலத்திற்கு குழாய்களை
அமைத்துள்ளது. இதற்கு நூற்றுக்கணக்கான, திறமை வாய்ந்த சீனத் தொழிலாளர்களை
அமர்த்தியது.

கடந்த ஓராண்டு காலமாக கிருஷ்ணா கோதாவரி நதிப்
படுகைகளில் இயற்கை எரிவாயு இந்த குழாய்களின் மூலம் மேற்கு இந்திய
மாநிலங்களில் உள்ள பெரும் ரசாயன உரத் தொழிற்சாலைகளுக்கும், மின் உற்பத்தி
நிலையங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் முதல்
உற்பத்தி அளவு தினசரி 8 கோடி கன மீட்டர் என்று உயரும் என
கணக்கிடப்பட்டுள்ளது. இதன் பரிமாணத்தை பாருங்கள். 2009ம் ஆண்டு மார்ச் வரை
நாட்டின் மொத்த உபயோகம் 10 கோடி கன மீட்டர். இது வரும் ஏப்ரல் மாதம் முதல்
நாளொன்றுக்கு 18 கோடி கன மீட்டராக அதிகரித்துள்ளது. இதில், ஒரு மிகச்
சிறிய பகுதியே தென் மாநிலங்களுக்கு கிடைத்து வருகிறது. இன்னும் இரண்டு
ஆண்டுகளில் ரிலையன்ஸ் நிறுவனம் தவிர, மேலும் நான்கு எரிவாயு உற்பத்தி
செய்யும் நிறுவனங்கள் உற்பத்தியை பெருமளவில் அதிகரிக்கக் கூடும் என்று
கணிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ஆந்திராவின் ஆழ்குழாய் கிணறுகள் மட்டும்
16 கோடி கன மீட்டருக்கும் அதிகமாக உற்பத்தி செய்யக்கூடும்.

மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ராஜசேகர
ரெட்டி, தன் மாநிலத்தில் எரிவாயுவை அதிக அளவில் உபயோகப்படுத்தி மின்சாரம்,
இயற்கை உரம் போன்றவற்றின் உற்பத்தியை பெருமளவில் அதிகரிக்க ஏற்பாடு
செய்தார். இதுதவிர, முக்கிய நகரங்களுக்கு குழாய் மூலம் எரிவாயு
கிடைக்கவும் முயற்சிகள் மேற்கொண்டார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர்
முகேஷ் அம்பானி டிசம்பர் 2006ம் ஆண்டு தமிழக முதல்வர் கருணாநிதியை
சந்தித்து, தென் மாநிலங்களுக்கு ஒரு பெரிய எரிவாயுக் குழாய் திட்டம் 2, 3
ஆண்டுகளில் அமைக்க முடியும் என்று உறுதியளித்தார். ஆனால், முகேஷ்
அம்பானிக்கும், அவருடைய சகோதரர் அனில் அம்பானிக்கும் ஏற்பட்ட குடும்பத்
தகராறில் இந்த திட்டம் முக்கியத்துவம் பெறவில்லை. எரிவாயுவிற்கு என்ன விலை
நிர்ணயம் செய்வது, எந்த அளவிற்கு அதைத் தன் சொந்த உபயோகத்திற்கு ரிலையன்ஸ்
நிறுவனம் எடுத்துக் கொள்ளலாம் என்பது பற்றி தெளிவான கொள்கைகளும்,
திட்டங்களும் தீட்டப்படாததினால், இந்த குழாய் அமைக்கும் திட்டம் கிடப்பில்
போடப்பட்டுள்ளது. தற்போது இந்த பிரச்னை சுப்ரீம் கோர்ட்டில்
விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதேபோன்று இறக்குமதி செய்யப்படும் மற்றும்
இந்தியாவில் உற்பத்தியாகும் எரிவாயுவின் விலைகளை நிர்ணயம் செய்வதில்
தெளிவான கொள்கை ஏற்படவில்லை. எரிவாயுவைக் கொண்டு பல வகைப் பொருட்களை
துரிதமாக, மலிவாக பெருமளவில் உற்பத்தி செய்ய முடியும். 20 லட்சம் கன
மீட்டர் நாளொன்றுக்கு கிடைத்தால், தினசரி 3,000 டன் யூரியா உற்பத்தி செய்ய
முடியும் அல்லது 500 மெகா வாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையம்
அமைக்கலாம். கிருஷ்ணா, கோதாவரி நதிப் படுகைகளிலிருந்து தினசரி 2 கோடி கன
மீட்டர் எரிவாயு தமிழகத்திற்கு கிடைத்தால் (இது தற்போது உற்பத்தியாகும்
அளவில் 1/4 பங்கு), 2,500 மெகா வாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையம்
ஒன்றும், தினசரி 5,000 டன் யூரியா உற்பத்தித் திறன் கொண்ட ஒரு
தொழிற்சாலையும் அமைக்கலாம் மற்றும் பல நகரங்களுக்கு குழாய் மூலம் எரிவாயு
அளிக்கலாம். பல தொழில் நிறுவனங்கள் அதிக விலையில் உபயோகிக்கப்படும் எரி
எண்ணெய்க்கு பதிலாக எரிவாயுவை உபயோகப்படுத்தலாம்.

இதுதவிர போக்குவரத்து வாகனங்களை டில்லி,
குஜராத் மாநிலங்கள் போல் சி.என்.ஜி.,யை அடிப்படையாகக் கொண்டு இயக்கலாம்.
பெரிய கண்ணாடி உற்பத்தியாளரான செயின்ட் கோபெய்ன் நிறுவனம் மட்டும் இத்தகைய
மாற்று ஏற்பாட்டினால் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வரை சேமிக்க முடியும்
என்று அதன் தலைவர் பி.சந்தானம் கூறுகிறார். பெட்ரோலியம் மற்றும் இயற்கை
எரிவாயுத் துறை செயலர் சுந்தரேசன், சமீபத்தில் சென்னையில் இந்த குழாய்
வசதிகள் 2012ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் மாதங்களில் அமைக்கப்பட்டு
விடும் என்று கூறினார். ரிலையன்ஸ், கெயில் போன்ற நிறுவனங்கள் முயற்சி
செய்தால், ஓராண்டுக்குள் சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு இந்த
குழாய்களை அமைக்க முடியும். பெரும் நஷ்டத்தில் இயங்கி வரும் ஸ்பிக்,
எம்.எப்.எல்., உர நிறுவனங்கள் இதன் மூலம் பெருமளவில் பயன் பெற முடியும்.
தற்போது நாப்தாவை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் யூரியா, டன்
ஒன்றுக்கு 31,000 ரூபாய் என்ற அளவில் உற்பத்தியாகிறது.

எரிவாயுவை மூலப்பொருளாகக் கொண்டு தயாரித்தால்
ஒரு டன் 7,000 ரூபாய் என்ற அளவில் உற்பத்தி செய்யக்கூடும். இந்த எரிவாயு
கிடைப்பதால் சென்னை பெட்ரோலியம் நிறுவனமும் கணிசமாக பயன் பெறும். இவை
தவிர, நூற்றுக்கணக்கான தொழில் நிறுவனங்கள் டீசல் மற்றும் எரி எண்ணெய்
உபயோகத்திற்கு பதிலாக எரிவாயுவை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான கோடி
ரூபாய்களை சேமிக்க முடியும். ஆக, இந்த குழாய் வசதியை துரிதமாக முடிக்க
ரிலையன்ஸ் நிறுவனத்தை ஊக்குவிக்க வேண்டும். மும்பை, டில்லி நகரங்கள்
போன்று சென்னை மாநகரத்திற்கும் எளிதாக மலிவாக சமையல் எரிவாயு கிடைக்கக்
கூடும்.

தமிழக அரசின் முதன்மை செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி,
'இந்த குழாய்களை அமைக்க நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்படாது;
தற்போது இருக்கும் நெடுஞ்சாலைகளின் வழியாகவே இவற்றை அமைக்க முடியும்'
என்று கூறினார். அரசு தீவிர கவனம் செலுத்தினால், வெகு விரைவில் இந்த
குழாய்களை அமைத்து எரிவாயுவை தமிழகத்திற்கு கொண்டு வர முடியும். ஆனால்,
எரிவாயுவை பெருமளவில் உபயோகிக்கக்கூடிய திட்டங்கள் தீட்டப்பட்டு தொழில்
நிறுவனங்கள், பெரிய தொழிற்சாலைகளை அமைக்க இரண்டு மூன்று ஆண்டுகள்
தேவைப்படும். தென் மாநிலங்களில் உள்ள தொழிலதிபர்கள் ஆயிரக்கணக்கான
ரூபாய்களில் முதலீடு செய்ய இன்னும் தேர்ச்சி பெறவில்லை. ஆனால், ரிலையன்ஸ்,
டாடா, பிர்லா போன்ற பெரும் நிறுவனங்கள் தகுந்த ஊக்கமளித்தால் இத்தகைய
முதலீடுகளை செய்ய முடியும். இவை தவிர, பெரிய பொதுத்துறை நிறுவனங்கள்
இத்தகைய முதலீடுகளை செய்ய முடியும். தமிழக அரசு இத்தகைய நிறுவனங்களின்
தலைவர்களை அழைத்து, தேவையான வசதிகள் செய்து தர உறுதி அளிக்கலாம். ஒவ்வொரு
தொழிற்சாலையும் 5,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய வாய்ப்பிருக்கிறது.
இதன் மூலம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பு வசதிகள் பெருகும்.

தமிழக அரசு தீவிர கவனம் செலுத்துமா?
தமிழகத்தில் 4,000 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலையம்,
செய்யாறு பகுதியில் அமைக்க ஒப்புதல் பெற்றுள்ளது. இது ஏன் எரிவாயுவை
அடிப்படையாகக் கொண்டு செயல்படக்கூடாது. இதற்கு தினசரி 1.6 கோடி கன மீட்டர்
எரிவாயு தேவை. நான்கு தென் மாநிலங்களும் சேர்ந்து கோரிக்கை எழுப்பினால்,
கிருஷ்ணா - கோதாவரி நதிப் படுகைகளில் கிடைக்கும் எரிவாயுவை இதற்கு
அளிக்கலாம்; உற்பத்தியாகும் மின்சாரத்தை பகிர்ந்து கொள்ளலாம். தமிழக அரசு
உடனடியாக ஒரு நிபுணர் குழு அமைத்து, இந்த எரிவாயு பற்றி தீவிரமாக
ஆராயும்படி பணிக்கலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநிலம் இத்தகைய
ஒரு குழுவை நியமித்து, அதன் அடிப்படையில் எரிவாயுவின் உபயோகத்தைப் பரவ வழி
வகை செய்தது. ஆந்திர மாநில எரிவாயு நிறுவனம் ஒன்றை நிறுவி, ஆழ்கடலில்
எரிவாயு உற்பத்தி செய்யவும் ஏற்பாடு செய்தது. காவிரி நதிப்படுகையில்
எரிவாயு கிடைப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது. குஜராத் மற்றும் ஆந்திர
மாநிலம் போல் தமிழகமும் ஒரு எரிவாயு நிறுவனம் ஒன்றை அமைக்கலாம்.எரிவாயு
எளிதில் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்தி தென் மாநிலங்களில்
புதிய பெரிய தொழில்களில் பெருமளவில் முதலீடு செய்யும் வாய்ப்பினைப்
பெற்றிருக்கின்றன. இதை முழுமையாக பயன்படுத்துவதில் உடனடியாக சீரிய கவனம்
செலுத்தப்பட வேண்டும்.

- சீனி விசுவநாதன், ஆசிரியர், இண்டஸ்ட்ரியல் எகானமிஸ்ட்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum