TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கடற்கரும்புலி லெப் கேணல் நளாயினி

Go down

கடற்கரும்புலி லெப் கேணல் நளாயினி Empty கடற்கரும்புலி லெப் கேணல் நளாயினி

Post by மாலதி Sun Jun 23, 2013 7:50 pm

கடற்கரும்புலி லெப் கேணல் நளாயினி BT-Lt-Col-Nalayini-600x849

” நளாயினி படையணியின் நாயகி ” கடற்கரும்புலி லெப் கேணல் நளாயினி
தமிழ்த் தேசிய இனத்தினது அரசியல் சுபீட்சத்திர்க்கான , ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் வரலாறு என்பது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வரலாறுதான்.
இந்தப் புதிய சரித்திரத்தின் கதாநாயகனாய் முன்னின்று , தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் ,விடுதலைப் போராட்டத்தை நெறிப்படுத்தி நகர்த்திச் செல்கின்றார்.
தமிழீழ தனியரசை நோக்கிய இந்த நெடுவழிப்பதையில் , பெரிய பெரிய கனவுகளோடு அவர் பிரசவித்த குழந்தைகளில் ஒன்றுதான் விடுதலைப்புலிகளின் கடற்புலிகள்.
விடுதலைப் போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற பிரதான பரிமாணங்களில் ஒன்றான கடற்புலிகள் அமைப்பானது , எங்கள் சரித்திர ஏட்டில் பொன் எழுத்துக்களால் பொறித்து வைக்கப்படவேண்டிய ஒரு அத்தியாயமாக ஆகிவிட்டது.
வரலாற்றுத் தொடரோட்டத்தில் , யுத்தம் ஊடறுத்துச் செல்லும் இன்றைய நாட்களைக் குறிக்கும் ஒரு காலத்தின் பதிவாகவும் , கடற்புலிகள் மகிமையை பெற்றுவிட்டனர்.  சிறீலங்காவுக்கு எதிரான இரண்டாவது யுத்தத்தினூடு முன்னேறிச் சென்ற எங்கள் சுதந்திரப் போராட்டத்தை வளர்ட்சியின் இன்னொரு கட்டப் பரிமாணத்திற்கு உந்தித் தள்ளியவர்கள் கடற்புலிகள் என்றால் , அது மிகையானதல்ல.
குருதி சொரிந்து கடலின் உடலும்….
புரட்சியை அடிபணியச் செய்தல் , அல்லது அழித்து ஒழித்து விடுதல் எனும் மூலோபாயத்ததுடன் தமிழீழத்தின் தொண்டைக்குழியை நெரிபதைப் பிரதான தந்திரோபாயமாகக் கொண்டு ஆகக் கடைசி வழியெனக் கருதி எதிரி வரைந்த போர்முறைத் திட்டமொன்றையும் எங்களது கடல் வேங்கைகள் தான் முறியடித்தனர்.
பொருத்தமானதாகவும் , மிகச் சரியாகவும் கணிக்கப்பட்ட ஒரு காலகட்டத்தில் , கடற்புலிகள் அமைப்புக்குப் புத்துயிர்ப்புக் கொடுத்து யுத்த அரங்கில் மேடை ஏற்றியதன் மூலம் யாழ்ப்பாண முற்றுகையை உடைத்தேறிந்ததுடன்  , வரலாற்றில் சிறப்பான இந்தப் பாத்திரத்தை வகிக்கும் சர்ந்தப்பத்தையும் அவர்களுக்கு வழங்கிய பெருமை தேசியத்தலைவர் அவர்களையே சாரும்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னைய தமிழர்களின் சரித்திரத்தில் , சோழப் பேரரசன் ராஜராஜனின் கடற்படை அந்த மன்னனுக்கு வெற்றிகளைப் பெற்றுக் குவித்துத் தந்து வரலாற்றைப் படைத்தது.
இன்று …..
தமிழினம் மீளவும் எழுட்சிகொண்டுள்ள சரித்திரத் திருப்பவேலையில் , தமிழினப் பெருந்தலைவர் பிரபாகரனின் கடற்படை மீண்டுமோர் வரலாற்றைப் படைத்து முத்திரை பதித்து வருகின்றது.
இக்காலத்தில் படைக்கப்படுகின்ற இந்தப் புதிய சரித்திரத்தில் முன்னைய எக்காலத்திலுமே இல்லாததாக ஒரு வரலாற்று அபூர்வம் பிறப்பெடுத்துள்ளது.
அதுதான் கடற்புலிகளின் பெண்கள் படையணியாகும்.
கடலோடிப்போன ஆண் உறவுகளைத் தேடி கரைகளில் கண்ணீர் வடித்து நின்ற எங்கள் பெண்டிரை கடலேறிச் சென்று களமாட வைத்துப் புதியதோர் காவியம் படிக்கச் செய்தார் எங்கள் தேசியத்தலைவர்.
ஆரம்பத்தில் சிலர் நம்பிக்கையீனப்பட்டார்கள். கடலும் பெண்களுக்கு சரிப்பட்டுவராத சமாச்சாரம் என்றார்கள். கடல்சார் நடவடிக்கைகளிலும் , கடற்சண்டைகளிலும் மகளிரை ஈடுபடுத்துவது சாத்தியமில்லாத சங்கதி என்று கருத்துச் சொன்னார்கள்.
தேசியத்தலைவர் மட்டும் தளராதிருந்தார்.
அவரது சிந்தனையோட்டத்தில் முளைவிட்ட செயற்திடடங்களையெல்லாம் விடுதலைப்புலிகள் இயக்கம் வீரசாதனைகளாகப் படைத்த பழைய வரலாறுகளின் போது , வெளி ஆட்களுக்கு அவையெல்லாம் நம்புவதர்கரிய ஆச்சரியங்களாய்த் திகழ்ந்தன.
அவற்றைப் போன்றதொன்று தான் கடற்புலிகளின் மகளிர் படையணியுமாகும்.
தேசியத்தலைவரது ஆழ்மனக் குகைக்குள்ளிருந்து உதயசூரியனாகப் பிரகாசித்த எண்ணக் கருவைச் செயற்பாட்டுச் சாத்தியமாக்கி தளபதி சூசையின் தோளுக்குத் தோல் தந்து நின்று பாடுபட்டு மகளிர் கடலைணியை வானுயரக் கட்டியெழுப்பிய அதன் முதற் சிறப்புத் தளபதி தான் லெப் கேணல் நளாயினி.
மகளிர் படையணியிலிருந்து கடற்புலிகளுக்கென வழங்கப்பட்ட 30 பேர் கொண்ட முதற் குழுவில் அவளோடு அங்கம் வகித்து , கடற்புலிகள் பெண்கள் படையணியின் மூலவேர்களுள் ஒன்றாக இயங்கி , அதனைத் திடகாத்திரத்தோடு வளர்த்தெடுக்க உரம் சேர்த்த இன்னொருத்திதான் மேஜர் மங்கை.

கடற்கரும்புலி லெப் கேணல் நளாயினி BT-Capt-Laxman-600x849

இந்துமாசமுத்திரத்தின் அலை மலைகளைத் தாவிக் கடந்து , தமிழீழப் பெண்ணினம் சாதனை படைக்கவென அல்லும் பகலும் அயராது உழைத்த அந்த மேனிகள் , இப்போது ஓய்ந்து விட்டன.
புதிய வரலாற்றின் அத்தியாயங்களாக…..  புதிய வழித்தடத்தின் சுவடுகளாக…..   புதிய மாற்றமொன்றின் திறவுகோல்களாக அவர்கள் கடற்தாயோடு கலந்துவிட்டார்கள்.
விண்மீன்களை வைத்துத் திசையறியச் சொன்னதிலிருந்து , கடலோடிச்சென்று களமாடக்கற்றது வரை , ஒன்றாகச் சோறு குழைத்து ஊட்டி வளர்த்தெடுத்து எம்மை ஆளாக்கிவிட்ட அந்த ஆசான்கள் ஆருயிர் நண்பிகள் அன்புக்கினிய எங்கள் தளபதிகள் இனி வரமாட்டார்கள்.
ஓயாது மூசிவந்து கரைகளில் மோதி அறையும் அலைகளைப்போல அவர்களது சுவடுகளில் ஆயிரமாயிரமாய் நாங்கள் தொடர்ந்து அணிவகுப்போம்.
கடற்புலிகளுக்கு வரும்போதே கரும்புலிகளாக வந்தவர்கள் அவர்கள்……   வந்ததன் பின்பு கரும்புலிக் காவியத்தைக் கடலிலேதான் படைக்கவேண்டும்  என்பது ஒரு ஆக்ரோசமான வேட்கையாக அவர்களை ஆட்கொண்டது.
எதிரியை எதிர்கொண்ட ஒவ்வொரு கடற்சண்டைக் களத்திலும் மட்டுமல்ல , ” சாகரவர்த்தனா ” வைச் சாகடித்தும் அவர்கள் அதனைத்தான் சாதித்துப் போனார்கள்.
‘ ஒப்பரேசன் தவளை ‘ க்குப் படையெடுக்கும் வேளையில் பாமா சொல்லிவிட்டுப் போனவைகள் நளாயினியின் ஆழ்மனக் குகையில் பசுமையாய்த் தேங்கிக் கிடந்தன.
நேற்றிரவு கடலும் துடித்தது
” தரைச் சண்டைகளில் நாங்கள் திறமையாகச் செயற்ப்படவேண்டும் தான் , ஆனால் நாங்கள் கடற்சண்டைக்குரியவர்கள். நாங்கள் கடலிலே சாதிப்பது மட்டுமல்ல கடலிலேதான் சாகவும் வேண்டும். ‘ யாழ்தேவி ‘ யில் சுகன்யாவை இழந்தது எனக்குள் துரதிஸ்டம்.  எனவே நீங்கள் திறமையாகச் சண்டையிட்டு கவனமாகத் திரும்பி வாருங்கள்.. ”
காவலரண் தொகுதி ஒன்றைத் தாக்கும் அணிக்குப் பொறுப்பாகச் சென்று வெடிபட்டு மருத்துவமனைக் கட்டிலில் சுயநினைவற்றுக் கிடந்தது ” பாமா….. பாமா…. ” என்று நளாயினி கத்திக்கொண்டேயிருக்க பாமா எங்களைவிட்டும் அவளைவிட்டும் எட்டாததூரத்திர்க்குப் போய்விட்டாள்.
காங்கேசன்துறையில் கண்காணிப்பு நிர்வாகக் கப்பலைத் தகர்க்க கடற்கரும்புலிகள் புறப்பட்டுப் போனபோது தானும் போக முடியவில்லையே என்ற ஆதங்கம் ” நளாயினிக்கு ”
தன்னுடைய பிள்ளைகளுக்கு முன்பு தான் கரும்புலியாகப் போகவேண்டும் என்ற மன உணர்வோடு இருந்தவள்தானே அவள்.
திரும்பிவந்த தாக்குதல் அணிக்குள் அங்கையர்கண்ணி இல்லாததைக் காணநேர்கையில் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
நளாயினி உண்மையிலேயே வித்தியாசமானவள்தான்.
சிந்திப்ப்பில் செயற்ப்பாட்டில் சுறுசுறுப்பில் நினைத்ததைச் செய்து முடிக்கும் உழைப்பில் அவள் எங்களைவிட மேலோங்கித்தான் நின்றாள்.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

கடற்கரும்புலி லெப் கேணல் நளாயினி Empty Re: கடற்கரும்புலி லெப் கேணல் நளாயினி

Post by மாலதி Sun Jun 23, 2013 7:51 pm

கடற்கரும்புலி லெப் கேணல் நளாயினி BT-Capt-Vaman-600x849

ஒரு மிதிவண்டிதானும் இல்லாமலிருந்த ஆரம்ப நாட்களில் , மங்கையும் அவளும் ஒழுங்க்கைக்கு ஒழுங்கை நடையாய் நடந்தார்கள்.
வீதிவீதியாகத் திரிந்து , வீடுவீடாகக் கருத்துச் சொல்லி , புதிது புதிதாகப் பிள்ளைகளைச் சேர்த்து , கடற்புலிகள் மகளிர் அணியை உறுதியான ஒரு அத்திவாரத்தின் மீது அவர்கள் கட்டியெழுப்பினார்கள்.
பெரிய பெரிய கனவுகளெல்லாம் அவர்களது நெஞ்சுக் கூட்டுக்குள் புதைந்து கிடந்தன.
” ஆண்போராளிகள் துணையின்றி கடலில் நாங்கள் தனித்து சண்டை பிடிக்க வேன்றும் ”
தங்களது கனவுகளையெல்லாம் நனவாக்க அவர்கள் பட்டபாடு கொஞ்ச் நஞ்சமல்ல.
நளாயினிக்கும் – மங்கைக்கும் உள்ளே ஒரு வேட்கை குடிகொண்டிருந்த்தை ஆரம்பத்திலிருந்தே நாங்கள் கண்டோம்.
” ஆண் போராளிகளுக்கு நிகராக அல்ல. அவர்களைவிட மிகையாக நாங்கள் செய்து காட்டவேன்றும் , அவர்கள் சாதிப்பதைவிட அதிகமாக நாம் சாதிக்க வேண்டும். ”
இந்த வைராக்கியம் தான் அவர்களுக்குள் இருந்து அவர்களை இயக்கியது. எங்களையும் இயக்குவித்தது.
தமது சொல்லாலும் – செயலாலும் எப்போதும் எங்களுக்கு உருதியூட்டிக்கொண்டு
இருந்தார்கள்.

அலை குமுறும் , ஆர்பரித்தெழும் , கடற்கரைகளில் மூசி அடிக்கும். ‘ பெரிய கடலாக ‘ இருந்த கடலைப்பார்த்து அச்சப்பட்டு நின்றோம் நாங்கள்.
ஒவ்வொருத்தராய்க் கடலில் இறங்கி மெல்ல மெல்லத் தவழவிட்டு , காலடித்து கையடித்து முக்குளித்து நிமிர்ந்த எங்களை திரும்பவும் தவழவிட்டு மீன்களுக்கு இணையான நீச்சல்க்காரர்களாக உருவாக்கிவிட்டவர்கள் அவர்கள்தான்.
உளம் தளராமல் , மனம் குழம்பாமல் தந்த்தனியாய்க்கூடக்  கதைத்துத் தெளிவூட்டி , அன்போடு எங்களை அரவணைத்து நல்லவழிப்படுத்திய தளபதி அவள். போகும் போதுகூட எங்கள் மனங்களில் எந்தச் சந்தேகத்தியும் அவள் கேள்விக்குறியாக விட்டுவிட்டுப் போகவில்லை.
பூவரசங்குளம் சண்டையில் சன்னங்கள் துளையிட்ட ஆழமான வடுக்களைத் தாங்கியதால் நிரைகுறைந்து போயிருந்தது அவளது மேனி.
எவ்வளவோ எல்லாம் சாதிக்கவேண்டும் என்ற அவளின் உணர்வின் வேகத்திற்கு , அந்த புண்பட்ட உடலால் ஈடுகொடுத்து இயக்க முடியவில்லை பாவம்.
என்றாலும் நளாயினி ஓய்ந்தாளில்லை.  தன்னுடைய சக்திக்கு மீறியும் அவள் செயற்ப்பட்டால். உடலை வருத்தி , வருத்தித்தான் உழைத்தாள்.
கடற்புலிகள் மகளிர் படையணி குறுகிய காலத்தில் கண்ட இந்தப் பெருகிய வளர்ச்சியானது அதனுடைய அடிவேரில் தன்னுடைய உயிரையே உருக்கிவார்த்த அவளது உழைப்பின் பெறுபேறு என்றுதான் சொல்ல வேண்டும்.
மேற்கில்…..
இந்துமாசமுத்திரத்தின் தொடுவானத்தைச் செவ்வானமாக்கிவிட்டு , சூரிய தேவன் ஆபிரிக்காவுக்குப் போய்விட்டுகிற அந்திப்பொழுது.
கிழக்கு வேனில் நிலவு நங்கை இரவு உணவுக்குப் புறப்படுவாள்.
வளர்பிறையாய்…..  தேய்பிறையாய்….  முழுநிலவாய் அவள் வருவாள்.  சில நாட்களில் வராமலும் விடுவதுண்டு.
ஆனால்…..
நளாயினி கடலுக்கு வராமல் ஒரு நாளும் விடாள்.
60 கடல்மைல் வேகத்தில் வீசும் கடற்காற்று சில்லிடும்.
நீர்பதம் செறிந்த உவர்க்கார்ரின் வருடலில் மேனி சிலிர்க்கும்.
அமைதியாக , அல்லது ஆர்பரித்து அலைக்கரம் வீசி எங்கள் நீர் நங்கை நிலைமைகளோடு பாசம் பேசுவாள்.
உடலுறையும் அந்தக் குளிரில் நளாயினியும் – மங்கையும் தோழிகளோடு கடலில் இறங்குவார்கள்.
பகலெல்லாம் எமக்கு பயிற்சி தந்து ஓயாமல் இயங்குகின்ற அவர்கள் , இரவான பின்னர்தான் எம்மை ஓய்வாக உறங்கவிட்டு தமக்காகப் பயிற்சி எடுக்கக் கடலுக்குப் போவார்கள்.
கடல்சார்ந்த எந்த அறிவும் இல்லாமல் தான் அவர்கள் கடற்புலிக்கு வந்தார்கள்.  புதிய போராளிகளுக்குப் பயிற்சி வழங்கும் அதேவேளையில் கடலுக்கு அவர்களும் புதியவர்களே…!
கனிந்து பழுத்த மீனவக் கிழவர்கள் கடலோரங்களில் குந்தியிருக்க , மெல்லக் கதை கொடுப்பாள் நளாயினி. பொக்கை வாய் திறந்து , தன வீரதீரங்களைப் பேசத் தொடங்கும். கடல்பற்றி , கடலின் சுழிகளைப் பற்றி , நீரோட்டங்கள் பற்றி , நடுக்கடல் மர்மங்கள் பற்றி ஆழ்கடல் இரகசியங்கள் பற்றி கிழவர்களது முதிர்ந்த அறிவினை அவள் உறிஞ்சிக் கறப்பாள்.
பின்னர் அவற்றை எங்களுக்குப் பருகத்தருவாள்.
பிள்ளைகளுக்கு எதையும் சொல்லிக் கொடுக்க முன்னர் அதனை நாங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்லுவதோடு நில்லாமல் , அவர்கள் செய்யவும் முனைந்தார்கள்.
மீனவர்களை வெல்லவேண்டுமென்று நளாயினிக்கு ஆசை. திரண்ட அலைகளோடு போராடி அவள் வழித்து நீந்துவாள். கைகள் சோறும். உடலியக்க சத்தியின் கொள்ள்ளளவு குறையவும் அவள் தொடர்ந்து முன்னேறுவாள். கால்கள் சோரும். வல்லு இழந்த உடல் , வலு நிறைந்த மனதோடு முரண்டு பிடிக்கும்.  மனந்தளராது நீந்திக் கடலலைகளை வெல்ல முயன்றும் முடியாமற் போய் , உடல் துவண்டு  களைத்தவளை நாங்கள்தான் கரை சேர்த்தோம் பலதடவைகள்.
அவள் பாவம். எவ்வளவு சுமைகளைத்தான் தனியொருத்தியாக அவள் தாங்குவாள்…?
நிர்வாகத்தைக் கவனித்தாள். நிதியைக் கவனித்தாள். படைகளைக் கவனித்தாள். பயிற்சிகளையும் கவனித்தாள்.  அரசியலையும் கவனித்தாள். சண்டைகளையும் கவனித்தாள். எங்களது உணவைக் கவனித்து , உடைகளையும் கவனித்ததோடு ஒவ்வொரு பிள்ளையின் உள்ளத்தையும் கவனித்தாள்.
எல்லா இடங்களிலும் தானே நின்றாள். எல்லாப் பாரங்களையும் தானே சுமந்தால்.
நாளாயினையைப் பார்த்து நாங்கள் பிரபித்திருக்கின்றோம்.

கடற்கரும்புலி லெப் கேணல் நளாயினி BT-Maj-Mangai-600x849

எங்களது மகளிர் படையணி கடலில் வளர்ந்த ஒவ்வொரு துளிர்ப்பிலும் அவளது குருதியும் வியர்வையும்தான் கலந்திருக்கிறது.
அவளை எக்காலத்திலும் நாங்கள் மறக்கவே முடியாது.
பெண்கள் கடற்படையின் தோற்றமும் வளர்ட்சியும் அந்தத் தளபதியும் உயிரால் எழுதப்பட்ட வரலாறு.
வல்வெட்டித்துறையில் ஆறுமுகசாமி யாவின் 8 செல்வங்களில் இவள் 6வது குழந்தை.
ஐந்தாண்டுகளுக்கு முன்பு கல்விப் பொதுத்தராதர உயர் வகுப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு இயக்கத்திற்கு வந்தபோது பெரிய வசதிகளைத் தூக்கி எரிந்துவிட்டுத்தான் அவள் புறப்பட்டாள்.
வீட்டுக்குப் போயிருந்த ஒரு பொர்ணமி நாளில் முற்றத்தில் அம்மாவின் மடியில் தலைசாய்த்துப் படுத்திருந்த பிள்ளையை ஆசையோடு வருடிவிட்ட அன்னையிடம்…
அக்காவுக்குப் பத்து இலட்சம் கொடுத்து கலியாணம் செய்து வைத்தீர்கள் அம்மா , எனக்கு ஐந்து இலட்சம் thaangko இயக்கத்திற்கு கொடுக்க என்றாளாம்.
மிகச் சரியானவளாய் இனங்கண்டு கடற்புலிகளின் தொழில்நுட்பக் கல்லூரிக்கு மங்கையைப் பொறுப்பாக நியமித்தாள் நளாயினி.
சின்னப் பெண் குழந்தை. தத்தித் தவழ்ந்து மணல் அளைந்தது. அது வளர்ந்து பெரியவளாகிய பின்பு தரை உழுது , நெல் விதைத்து , உரம்போட்டு , வயல் பார்த்து , அறிவி வெட்டி , சூடடித்து , மூடைகட்டி , வீட்டுக்கு எடுத்து வந்து காசாக்குவது வரை எல்லாவற்றியும் தானே செய்தது என்றால் எவரும் நம்பமாட்டார்கள்.
அப்படிபட்டவளின் கையில் தொழில் நுட்பக் கல்லூரி. நெல் மணிகள் குலுங்கும் வயல் சேனையாய் அது செழித்தது.
வடமராட்சியில் ஊரிக்காடு கிராமம். கணபதிப்பிள்ளை சோதி தம்பதிகளின் 9 குழந்தைகளில் இரண்டேபேர்தான் பையன்கள் கடைசித் தங்கைக்கு நேர் மேலே மங்கை.
குடும்பத்தின் வறுமை புத்திகூர்மையான அந்தக் குழந்தைக்கும் பக்கத்திலேயே இருந்த பள்ளிக்கூடத்திற்கும் இடையில் வேலிபோட்டது.
தளர்ந்து போகவில்லைத் மங்கை. அந்த இழப்பால் இளகிப் போகாமல் இறுகியது நெஞ்சம். குடும்பத்தின் துயரமும் அவளை உந்தித் தள்ளியது.
அவள் வெளியில் வந்தாள். ஊரவருக்கு நிகராக அன்னவளும் வயலில் இறங்கினாள். குடும்பத்தின் துன்பச்சிளுவைக்கு அந்தப் பெண்குழந்தையும் தோள் கொடுத்தது.
அவளது வியர்வை பாய்ந்தது சேறாகி வரலில் செழித்துக் குலுங்கிய நெல் மணிகள் அக்காவோருத்தியின் திருமணத்தின் போது கழுத்தில் சங்கிலியாய் மின்னியது முண்டாம்.
இப்போது அதைச் சொல்லிச்சொல்லித்தான் அம்மா அழுகிறாள்.
ஊருக்குள் யாருக்கும் உதவிஎன்றால் ஓடோடிச் சென்று ஒத்தாசை புரிந்துகொண்டிருந்தவள் , இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் நாட்டுக்காகப் போராடப் புறப்பட்டு வந்தாள்.
அரசியல் பணியில் மக்கள் அரங்கத்திலும் , படையியல் பணியில் யுத்த அரங்கத்திலும் கடமையாற்றிய அந்த வீராங்கனையை கடற்புலிகளின் அணி அலைகளின் மடியில் களமாட அழைத்தது.
கடற்புலிகளின் ஆரம்ப நாட்களில் அரியாலையிலிருந்து அராலி வரையான கரையோரப் பிரதேசத்தில் மங்க்கைக்கு அரசியல் வேலை.
எங்கள் அன்புக்கினிய மக்களைப் பற்றியே அவள் எப்போதும் பேசிக்கொண்டிருப்பாள்.
அல்லல்ப்படும் எம் மக்களது துன்பங்கள் தீரவேண்டும் , துயரப்படும் எம் மக்களை நின்மதியோடு வாழவேண்டும். அடக்கப்பட்ட எம்மக்கள் சுதந்திரமாய் ஆளவேண்டும்.
ஆத்மார்த்தமான ஒரு தாகமாக அவளுக்குள் இவை ஊர்றேடுத்த்தை நாங்கள் அறிவோம் . இந்த உள்ளக்கிடங்கை சொல்லாகவும் – செயலாகவும் அவளுக்குள்ளிருந்து வெளிப்பாடு கண்டது.
தட்டிக்கேட்க யாருமின்றி எம் மக்கள் நீட்டி நிமிர்ந்து படுக்கவேண்டுமானால் இம் மண்ணின் இளைய சந்ததி போராட்டத்தோடு அணி திரள வேண்டுமென்றாள் , யுத்தத்தில் கலந்து அதனை விரைவாக வென்றெடுக்கச் சொன்னாள்.
படிப்படியாக மங்கை பெற்ற வளர்ட்சி , எங்களுக்கு அபாரமானதாகத் தெரிந்தது.
ஐந்து கடல் மைல்கல் நீந்திக் கடந்து விடு வந்தவளுக்கு தலைவர் பரிசு வழங்கினார்.
ஆரம்பத்தில் எதுவுமே தெரியாதவளாய் மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு திரிந்தாள்.  நாளடைவில் எல்லாம் தெரிந்த அவளிடம் மற்றவர்கள் கேட்டுத் தெரிந்து கொண்டு திரிந்தார்கள். யுத்தப்புயல் கிளாலிக் கடற்பரப்பில் மையம் கொண்டிருந்த வரலாற்றுக் காலத்தில்  அலைகிழித்து
விரைந்து பொறி கக்கிப் பகை விரட்டும் விசைப்படகுகளில் அவள் ஒட்டி , பின்பு சண்டைக்காரி , அடுத்து படகுத் தளபதி.
யாழ் நீரேரியிலிருந்து கடற் போர்க்களம் படிப்படியாக விரிவாக்கம் கண்டு , பெருங்கடலில் படர்ந்த போது எழுந்த தேவையின் காரணமாக உகந்த வடிவங்களில் படகுகளை அமைக்கவென உருவாக்கப்பட்ட , படகுக் கட்டுமானத் தொழிட்சாலை மங்கையின் பணிப்பின் கீழ் இயங்கியது.
படகுகளின் வெளியிணைப்பு இயந்திரங்களைக் கையாளும் தொழில்நுட்பப் பிரிவிற்கும் , மண்டைதீவிலிருந்து இழுத்து வந்த நீருந்து விசைப்படகு  ‘ ஒப்பறேசன் தவளை ‘ க்குப் பிறகு 6 ஆக அதிகரித்த போது படகுகளின் உள்ளிணைப்பு இயந்திரங்களைக் கையாளவென உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப்பப் பிரிவிற்கும் மங்கைதான் பணிப்பாளர்.
மன உறுதி விடாமுயற்சி தன்னம்பிக்கை.
வகுப்பு எடுக்க ஆரம்பிக்கும் போது கரும்பலகையில் இப்படி எழுதித்தான். தொடங்குவாள்…..
உயரத்துக்கு அவளை உயர்த்திச் சென்றதும் இவையேதான்.
ஒன்றாக நீந்தி….  ஒன்றாக பயின்று….   ஒன்றாக படகோடி……    ஒன்றாகக் களமாடிய  தன் தளபதியோடு எங்கள் படையணியை வளர்த்தெடுக்க எப்போதும் துணைநின்ற அந்த வீராங்கனை இறுதிப் பயணத்திலும் நளாயிநிக்குத் துணையாகவே போய்விட்டாள்.
நளாயினிக்கும் – மங்கைக்கும் உள்ளே நீருபூத்த நெருப்பாக ஒரு இலட்சியம் எப்போதும் கனன்று கொண்டே இருந்தது.  ஒரு டோரா அடித்து மூழ்கடிக்க வேண்டுமென்று.
ஆனால்…. புவீந்திரன் – மணியரசனும் பருத்தித்துறையில் ” சுப்படோறா ” வை நொறுக்கிவிட இவர்களது குறி , அதிகரித்த ஆவேசத்தோடு பெரிய கப்பல்களில் மீது விழுந்தது.
ஒரு தரையிறங்கு கலத்தை  அல்லது ஒரு கட்டளைக் கப்பலை இல்லாமல் போனால் ஒரு கண்காணிப்புக் கப்பலை , இப்படியாக ஏதோ ஒரு பெரிய இலக்கை அவர்கள் தேடியலைந்தார்கள்.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

கடற்கரும்புலி லெப் கேணல் நளாயினி Empty Re: கடற்கரும்புலி லெப் கேணல் நளாயினி

Post by மாலதி Sun Jun 23, 2013 7:52 pm

கடற்கரும்புலி லெப் கேணல் நளாயினி Karppidi-Attack-_-thesakkaaru-600x337

சமுத்திர அலைகளின் மீது அவர்கள் விரித்து வைத்திருந்த மரண வலைக்குள் சிலாபத்துறைக் கரையிலிருந்து 15 கடல்மைல் தூரத்தில் விழுந்து – சிக்கியது ” சாகரவர்த்தனா “.
தலையெடுக்கவிடாத  தாக்குதல்
மரண அடி
வளைத்துத் தாக்கிய சண்டைப் படகுகள். அதன் அசைவியக்கத்தைக் கட்டுப்படுத்த முயல இருண்ட வானில் சன்னங்களின் ஓளிக்கோடுகள்.
கிளாலி ஏரியில் எம்மக்கள் பார்த்த வர்ணஜாலங்கள் , சிலாபத்துறைக் கடலில் அரங்கேறின.
வேகங்கொண்டன  வெடிகுண்டுப் படகுகள்.
குறுக்கும் நெடுக்கும் பாய்ந்த சன்னங்கள் இலக்கை இனங்காண்பதில் சிக்கலைத் தோற்றுவித்தன.
சரியாகத் தெரியாவிட்டால் இடிபடுவது எங்கள் படகாய்ப் போய்விடும்.
விரியும் படகிலிருந்து….  நளாயினியின் குரல் , உப்புக் காற்றில் அலைவரிசையாகி  ” றாடர் ” நிலையத்திலிருந்த ‘ தொலைத்தொடர்பு சாதனத்தில் ‘ ஒலித்தது.
” இரண்டு பக்கமும் வெளிட்சம் தெரியுது. ‘ இலக்கு ‘  விளங்குதில்லை சரியான பாகையைச் சொல்லுங்கோ… ”
திரும்பத்திரும்ப இதையே கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு துல்லியமான திசை வழியைக் கொடுத்துக் கொண்டேயிருந்தது ” றாடர் ” நிலையம்.
விசையைப் பெற்றது படகு…..
40 கடல்மைல் கிட்டிய வேகம்.
அலைகள் அடிபணிந்தன.
” தொலைத்தொடர்பு சாதனம் ” ஒலித்தது.
இலக்கு தெரியுது.
நல்லா கிட்ட வந்திட்டம்…
இடிக்கிறம்….
ஆவேசமாக நெருக்கம்.
” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ”
மங்கையும் – நளாயினியும்.
மின்னலின் பிரகாசிப்போடு அணியத்தில் மோதிய முழக்கம் கடலில் இறைந்து அடங்கு முன்னர்…
கடையாலில் விழுந்தது அடுத்த இடி….!
அது …. லக்ச்மனும் – வாமனும்.

கடற்கரும்புலி லெப் கேணல் நளாயினி Sakaravarththganaa

ஒரு பக்கமாய்ச் சரிந்து மூழ்கிக் கொண்டிருந்த கப்பலின் மீது , தாவிப் பாய்ந்தனர் கடற்புலிகள்.
மூர்க்கத்தனமான தாக்குதல்….
துப்பாக்கிகளின் முரட்டுத்தனமான உறுமல்.. !
” பொங்கு தமிழுக்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு ”
செய்யுள் ஆக்கியவர் பாரதிதாசன்.
செய்து காட்டியவர் பிரபாகரன்.

கடலுக்குள் குதித்துக் கைகளைத் தூக்கியோரை , கப்பலில் எடுத்த ” 50 கலிபர்களோடு ” கரைக்குக் கொண்டுவந்தனர் கடற்புலிகள்.
ஒருவர் கப்பலின் தளபதி – அடுத்தவர் கப்பலின் துணைத் தளபதி.
போர்க்கைதியாய் உள்ள கொமாண்டர் சொன்னார்…..
எனது 20 வருட படியில் வாழ்வில் என்றுமே மறக்கமுடியாத நிகழ்வு , என் கண்களால் பார்த்த இந்தத் தற்கொடைத் தாக்குதல்தான்.

கடற்கரும்புலி லெப் கேணல் நளாயினி 923423_457698064307676_326033898_n-copy-600x382

தேசியத்தலைவர் கூறினார்….
சிறீலங்கா கடற்படியின் ஒரு காப்பர் தளபதியை , தமிழீழக் கடற்படையின் ஒரு பெண் தளபதி சிறைப்பிடித்தாள்.  அவர் உயிரைக் காக்க சரணடைந்தார். இவள் வெறியைப் பெற உயிர் துறந்தாள்.
1994 . 09 . 19 அன்று நள்ளிரவில் தயாரிக்கப்பட்ட திட்டத்தில் எந்தவிதப் பிசகுமே இல்லாமல் செய்து பார்த்த பயிற்சிகளில் எந்த தவறுமே நேராமல் நளாயினியும் – மங்கையும் இவர்களைத் தொடர்ந்து வாமனும் – லக்ஸ்மனும் மோதியதில் ” சாகரவர்த்தனா “  மூழ்கத் தொடங்கியது.
நளாயினியையும் இன்னும் எண்ணற்ற வீரர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்ட கடலைன்னியின் அலைகரங்களிலே நீந்தி விளையாடிப் படகோட்டிப் பயிற்சிகள் செய்யும் அந்த வேகமான வீராங்கனைகள் யார்…?
தெரியவில்லை…..! ?
இன்னும் கொஞ்சம் கிட்டப் போய்ப் பார்ப்போமா…. அட ” நளாயினி படையணி ”
- உயிராயிதத்திலிருந்து….


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

கடற்கரும்புலி லெப் கேணல் நளாயினி Empty Re: கடற்கரும்புலி லெப் கேணல் நளாயினி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum