TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


துவரை சாகுபடியில் நாற்றுவிட்டு நடும் புதிய முறை

Go down

துவரை சாகுபடியில் நாற்றுவிட்டு நடும் புதிய முறை  Empty துவரை சாகுபடியில் நாற்றுவிட்டு நடும் புதிய முறை

Post by மாலதி Thu Jun 06, 2013 7:27 am

துவரை சாகுபடியில் நாற்றுவிட்டு நடும் புதிய முறை


துவரை சாகுபடியில் நாற்றுவிட்டு நடும் புதிய முறை  661_500506960022715_947872578_n
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலமாக, ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் லாபம் ஈட்டலாம்.


தருமபுரிவட்டாரத்தில் மானாவாரி மற்றும் வரப்புப் பகுதியில் துவரை சாகுபடி
செய்யப்படுகிறது. துவரை விதையை நேரடியாக ஊன்றுவது வழக்கம். இப்போது,
நெற்பயிரைப் போல், நாற்றுவிட்டு நடவு செய்யும் முறை அறிமுகமாகி உள்ளது.

பொதுவாக, பயறு வகைகளை நாற்றாக நடும் பழக்கம் இல்லை. துவரை போன்ற பயறுகளை,
நாற்றுவிட்டு நடும் போது அதிக மகசூல் கிடைப்பது ஆராய்ச்சியில்
தெரியவந்துள்ளது. இத் திட்டத்துக்காக தமிழக அரசு, ஹெக்டேருக்கு ரூ. 7,500
மானியம் வழங்குகிறது.

தருமபுரிமாவட்டத்தில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை
ஆடிப்பட்டம், செப்டம்பர் முதல் நவம்பர் வரை புரட்டாசிப் பட்டம் என இரண்டு
பட்டங்களில் துவரை சாகுபடி செய்யப்படுகிறது. நாற்று விட்டு நட 130 நாள்கள்
வயதுள்ள கோ.ஆர்.ஜி-7 கோ6,என்ற துவரை ரகம் புரட்டாசி பட்டத்துக்கு ஏற்றது.
ஏக்கருக்கு ஒரு கிலோ தேவைப்படும். மணல், மண் மற்றும் எரு ஆகியவற்றை சம
அளவில் கலந்து 5 அங்குலத்துக்கு மூன்று அங்குலம் அளவுள்ள பாலித்தீன்
பைகளில் நிரப்ப வேண்டும். ஒரு பாலித்தீன் பைக்கு ஒரு விதை என்ற வீதத்தில்
விதைக்க வேண்டும்.

விதைத்த எட்டாவது நாள் முளைத்துவரத் துவங்கும்.
15-வது நாள் நன்கு முளைத்துவிடும். 20-வது நாள் களையெடுக்க வேண்டும்.
துவரை நாற்றங்காலை நிழற்பாங்கான இடத்தில் அமைப்பது அவசியம். தினசரி பூவாளி
கொண்டு நீர் தெளிக்க வேண்டும். விதைத்த 30-வது நாள், நடவு செய்ய நாற்றுகள்
தயார் நிலைக்கு வரும்.

துவரை நடவுக்கு மூன்று வாரங்களுக்கு முன்,
நன்கு மக்கிய ஐந்து டன் எரு அல்லது 2.5 டன் மண் புழு உரம் இடவேண்டும்.
வரிசைக்கு வரிசை, ஐந்து அடிக்கு மூன்று அடி என்ற இடைவெளியில் நாற்றுகளை
நடவு செய்ய வேண்டும். வாழை சாகுபடி செய்யும்போது ஊடுபயிராகவும் சாகுபடி
செய்யலாம்.

காய்கள் 80 சதவீதம் முதிர்ச்சி அடைந்தவுடன், செடிகளை
அறுத்து, கட்டிவைத்து, பின்னர் வயலில் காயவைக்க வேண்டும்.
பிரித்தெடுக்கப்படும் விதைகளை 10 சதவீத ஈரப்பதம் வரும் வரை காயவைக்க
வேண்டும். சாதாரணமாக நேரடியாக துவரை விதைப்பதால் ஏக்கருக்கு 300 கிலோ
மகசூல் கிடைக்கிறது. நாற்றுவிட்டு நடவு செய்வதால் ஏக்கருக்கு 1,000 கிலோ
வரை கிடைக்கிறது.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து பச்சை துவரைக்காய் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

மாவட்டத்திலும் உற்பத்தி அதிகரிக்கும்போது வெளி மாநிலத்திற்கு அனுப்பி வைக்கலாம். இதன்மூலமாக அதிக லாபம் பெறலாம் .

ஆடிப்பட்டம், புரட்டாசிப்பட்டம் மற்றும் கோடைப்பருவகாலங்களில் துவரை
பொதுவாக சாகுபடி செய்யப்பட்டாலும், ஆடிப்பட்டத்தின் சாகுபடி பரப்பு அதிகமாக
உள்ளது. நடைமுறை சாகுபடியில் விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகள் நேரடி
விதைப்பாக உழவு சால்களில் விதைக்கப்பட்டு வருகிறது. ஆனால் கர்நாடக
மாநிலத்தில் துவரையை நாற்றுவிட்டு நடவு செய்து நல்ல விளைச்சல் கண்டு
வருகின்றனர்.

முக்கிய நடவுமுறை சாகுபடி நுட்பங்கள்:


துவரை நடவு செய்வதற்கு 3 வாரங்களுக்கு முன் நன்கு மக்கிய எருவை ஏக்கருக்கு 5
டன் அல்லது மண்புழு உரம் ஏக்கருக்கு 2.5 டன் என்ற அளவில் இடப்படுகிறது.
இறவை மானாவாரியில் தனிப்பயிர் சாகுபடிக்கு 15 செ.மீ. அளவுள்ள குழிகளை 5′ x
3 அடி இடைவெளியிலும் (2904 செடிகள்/ஏக்கர்) நடவுப்பயிர் சாகுபடி
செய்யக்கூடிய இடங்களில் 6′ x 3 அடி இடைவெளியிலும் (2420 செடிகள்/ஏக்கர்)
குழிகள் எடுக்கப்படுகின்றன.
நாற்றங்காலுக்கு 1 கிலோ விதை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
ஒரு கிலோ விதையை 0.2 சதம் கால்சியம் குளோரைடு (20 கிராம்/லிட்டர்)
கரைசலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து பின் 7 மணி நேரம் நிழலில்
உலர்த்தப்படுகிறது. இவ்விதையினை 100 கிராம் ரைசோபியம், 100 கிராம் பாஸ்போ
பாக்டீரியா ஆகிய உயிர் உரங்கள், டிரைகோடெர்மா (10 கிராம்/ கிலோ)
பூஞ்சாணத்துடன் கலந்து விதைநேர்த்தி செய்யப்பட்டு விதைக்கப் படுகிறது.

மணல், மண், எரு ஆகியவற்றை சம அளவில் கலந்து 200 மைக்ரான் அளவுள்ள பாலிதீன்
பைகளில் (6” x 4”) நிரப்பி விதைக்கப் பயன்படுத்தப் படுகின்றன.
பைகளில்
தண்ணீர் தேங்குவதைத் தடுக்க 3-4 துளைகள் போடப்படுகின்றன. பின் விதைநேர்த்தி
செய்யப்பட்ட விதைகளை ஒரு பைக்கு ஒரு விதை என்ற அளவில் ஒரு செ.மீ. ஆழத்தில்
விதைத்து ஒவ்வொரு நாளும் தண்ணீர் தெளித்து பாதுகாக்கப்படுகிறது.

இவ்வாறு விதைப்பு செய்யப்பட்ட பைகள் நிழலான இடங்களில் வைத்து 30-40 நாட்கள்
பராமரிக்கப்பட்டு நடவுக்கு பயன்படுத்தப் படுகின்றன. நடுவதற்கு சில
நாட்களுக்கு முன் இளம் வெயிலில் நாற்றுக்களை வைத்து கடினப்படுத்தி பின்
நடவு செய்வது நல்லது.
நடவுமுறை:

நாற்றுக்களை நடுவதற்கு 15
நாட்களுக்கு முன் குழிகளை மண், எருவைக் கொண்டு நிரப்பி ஒரு குழிக்கு ஒரு
செடி வீதம் நடவு செய்யப்படுகின்றன.
ஊடுபயிர் செய்யும் இடங்களில்
நடவுக்கு முன் உளுந்து, பாசிப்பயறு, சோயாமொச்சை போன்ற பயிர்களை விதைத்து
பிறகு நடவு மேற்கொள்ளப்படுகின்றது.
நடவு செய்தவுடன் நீர்ப்பாசனம் செய்யப் படுகிறது. பின் மண்ணின் ஈரத்திற்கேற்ப 3-4 முறை பாசனம் செய்யப்படுகின்றது.
நடவு செய்த 30-40 நாட்கள் வரை களையின்றி பராமரிக்கப்படுகிறது.
நடவுப்பயிர்களில் கிளைகள் அதிக எண்ணிக்கைகளில் தோன்றுவதால் செடிகள் சாயாமல்
இருக்க மண் அணைத்து பராமரிக்கப்படுகிறது.
உர நிர்வாகம்:

நடவு
நட்ட 20 முதல் 30 நாட்கள் கழித்து மண் அணைப்பதற்கு முன் ஏக்கருக்கு
10:23:50 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துக்களை அளிக்கும் வகையில் டி.ஏ.பி.,
பொட்டாஷ் உரங்களும், துத்தநாகம், கந்தகச் சத்து அளிக்கும் துத்தநாக சல்பேட்
(10 கிலோ) உரங்களும் செடியைச் சுற்றி இடுவதால் நல்ல விளைச்சல்
கிடைக்கிறது.
நடவு செய்த 20-30 நாட்கள் கழித்து 5-6 செ.மீ. அளவுக்கு
நுனி குருத்தைக் கிள்ளி விடவேண்டும். பூ உதிராமல் தடுக்க பிளானோபிக்ஸ்
ஊக்கியை பூக்கும் காலத்தில் 0.5 மி.லி./லிட்டர் தண்ணீர் பயன்படுத்த
வேண்டும்.
சோள விதைகளை துவரை வயலில் விதைத்து பறவைகள் அமர்வதற்கு ஏதுவாக வழிவகை செய்வது பூச்சிக் கட்டுப்பாட்டிற்கு நல்ல பலனைக் கொடுக்கிறது.

Satheesh Kumar Thanks! what is the duration from seed stage to cultivation

Madhu Balan 25- 30 days for nursery, after 30 days you transplant to the main field.

Subash Krishnasamy அருமையான சாகுபடியாக இருக்கும்! பாராட்டுக்கள் நண்பரே!
ஒரு ஏக்கருக்கு எத்தனை பைகள் தேவைப்படும்?சாகுபடி செலவும் விற்பனை
விலையும் தோராயமாக எவ்வளவு இருக்கும்?

Madhu Balan 2250 pockets.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum