TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பிரபல நிறுவனப் பெயர்க் காரணங்கள் தெரியுமா?

Go down

பிரபல நிறுவனப் பெயர்க் காரணங்கள் தெரியுமா? Empty பிரபல நிறுவனப் பெயர்க் காரணங்கள் தெரியுமா?

Post by KAPILS Wed May 22, 2013 9:31 am

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் நிறுவனங்களின் பெயர்கள் உலகளவில் பிரபலமாக இருக்கும் .அதன் பெயர் காரணங்களினாலே சந்தையில் அதன் அனைத்து பொருட்களின் மதிப்பும் உயர்ந்தே இருக்கும். அது போன்ற நிறுவனங்களின் பெயர் காரணங்களை இப்பொழுது பார்ப்போம்.
01.கேனன் ( CANON ) :
மிகவும் பிரபலமான இந்நிறுவனத்தின் ஆரம்பக்கால பெயர் பிரிசிசன் ஆப்டிகல் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் லேபரட்டரி என்பதாகும். இந்நிறுவனமானது புகைப்படக் கருவி(CAMERA ) தயாரிப்பில் சிறந்த நிறுவனமாகும்.இவைத்தான் ஜப்பான் நாட்டில் முதல் முதலாக 35மிமீ போகல் பிளேன் ஷட்டர் கேமராவினைத் தயாரித்து வெளியிட்டனர் .
அந்த கேமராவின் பெயர் க்வானன் (KWAN NON ) என்பதாகும். ஜப்பானிய மொழியில் புத்தருடைய போதி தத்துவ கருணை என்ற பொருள் தரும் இதனையே சிறிதுக்காலம் கழித்து சிறிய மாற்றம் செய்து கேனன் (CANON) என்ற பெயரினை இந்நிறுவனத்திற்கு வைக்கப்பட்டது.
02. ஹிடாச்சி (HITACHI )
இந்நிறுவனம் எலக்ட்ரானிக் துறையில் புகழ் பெற்ற நிறுவனமாகும். இந்நிறுவனம் தொலைக்காட்சி பெட்டி ,ஸ்கேனர் ,குளிர்சாதனப் பெட்டி, ஏ.சி மற்றும் கணினி பாகங்கள் என இதன் சந்தைப்பொருட்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
ஜப்பான் மொழியில் ஹிடாச்சி என்பது சூரிய உதயம் என்ற பொருளினை தருகின்றது. இந்நாடு சூரியன் உதிக்கும் நாடு என்று அழைக்கப்படுவதால் இந்நிறுவனத்தின் பெயரையும் அதனை சார்ந்தே வைக்கப்பட்டுள்ளது.மேலும் ஜப்பானியர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் குறிக்கும் வகையில் இந்நிறுவனம் ஹிடாச்சி என பெயர் சூட்டியுள்ளனர்.
03.அகாய் ( AKAI )
பொதுவாக ஜப்பான் நிறுவன தயாரிப்புக்களில் பெரும்பாலும் எலக்ட்ரானிக் வகையான பொருளாகத்தான் இருக்கும். அதன் வரிசையில் இந்த இந்நிறுவனமும் பிரபலமான எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து உலகம் முழுவதும் சந்தையிட்டுள்ளது. இதன் பெயர்க் காரணத்தை இப்பொழுது காணலாம்.
அகாய் என்றால் ஜப்பானிய மொழியில் சிகப்பு வண்ணத்தை குறிக்கும் சொல்லாகும். சூரிய உதயத்தின் போது ஏற்படும் சிகப்பு வண்ணமானது இந்நாட்டின் அனைத்து இடத்திலும் இடம்பெறுகிறது.
இந்நாட்டின் தேசிய கொடியின் மையப்ப் பகுதியில் இந்த சிகப்பு வண்ணத்தை குறிக்கும் வகையில் தான் சிகப்பு நிற வட்டம் இடம்பெற்றுள்ளது.மேலே கூறியதுபோல் ஜப்பான் சூரியன் உதிக்கும் நாடு என அழைக்கப்படுகிறது ,ஏனெனில் உலகின் கிழக்கு மூலையில் உள்ள நாடு ஜப்பான் . எனவே இந்த சிகப்பு நிறத்தை குறிக்கும் வகையிலேயே இப்பெயரினை இந்நிறுவனத்துக்கு வைத்துள்ளனர்.
04. கேசியோ ( CASIO ) :
இந்நிறுவனமும் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பில் முதன்மை பெற்று விளங்குகின்றது. மேலும் இந்நிறுவனம் தொழிற்சாலை உபகரணங்களை வடிவமைப்பதினை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்டது. இவை பல வகையான எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றில் கணிப்பான் (Calculator), இசை விசைப்பலகை (Music Keyboard) மற்றும் அழகிய கைக்கடிகாரம் (Watches) போன்றவை ஓயரபலமானவை ஆகும்.
இந்நிறுவனத்தை டடாயோ கஷியோ என்பவர்த்தான் நிறுவினார் . எனவே இவரின் பெயரில் வரும் கஷியோ ( Kashio ) என்பதை சிறு மாற்றம் செய்து
கேசியோ ( CASIO ) என்ற பெயரினை இந்நிறுவனத்திற்கு பெயராக வைத்தனர்.
05.பிளாபங்க்ட் ( BLAUPUNKT ) :
இந்நிறுவனமானது ஜெர்மனியின் பிரபலமான எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் முன்னனி நிறுவனம் . பிளாபங்க்ட் ( BLAUPUNKT ) என்பது ஜெர்மன் மொழியில் நீல நிறப்புள்ளி அல்லது நீல நிற முனை என்ற பொருளை தருவதாகும். முதலில் இந்த நிறுவனத்துக்கு ஐடியல் (IDEAL) என்ற பெயரே வைக்கப்பட்டது . இங்கு ஆரம்பக்காலங்களில் ஹெட்போன்கள் தயாரிக்கப்பட்டன.
அவற்றின் தரத்தை சோதித்த பின்னர் விற்பனைக்கு அனுப்பப்படும் முன்னர் அதில் நீல நிறப் அடையாளக் குறியிடப்படும். இவை வழக்கத்தில் சரியான தன்மையின் அடையாளமாக கருதப்பட்டதால் இவை நாளடைவில் இந்நிறுவனத்தின் டிரேட் மார்க்காக மாறியது. பின்னர் இந்நிறுவனத்தின் பெயராகவும் இதனை மாற்றி அமைத்தார்கள்.
06. எப்சன் (EPSON)
இந்நிறுவனம் பிரபலமான அச்சுப்பொறி (PRINTER) மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம்.இதன் பெயர் காரணம் சற்று வினோதமான நிகழ்வாகும். இந்நிறுவனமானது 1942 -ம் ஆண்டு ஹிசாஓ யமஸகி என்பவரால் தைவா கோக்யோ (DAIWA KOGYO) என்ற பெயருடன் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் முதலில் நகனோ என்ற இடத்தில் கடிகாரத்துக்கு தேவையான பாகங்களை தயாரித்து விற்பனை செய்தது. பின்னர் இதன் பெயர் 1968-ம் ஆண்டு ஷின்சு செய்கி என்ற பெயரினை பெற்றது.
பெயர் மாற்றம் செய்த அந்த ஆண்டில் இந்த நிறுவனத்தின் முதல் மினி பிரிண்டர் தயாரித்து விற்பனைக்கு வந்தது. இந்த பிரிண்டரை E P 101(E P- Electronic Printer 101) என அழைக்கப்பட்டது. 1975-ம் ஆண்டு இரண்டாவது பிரிண்டர் புதிய வடிவமைப்புடன் தயாரித்து வெளியிடப்பட்டது.
இதனை முதலில் வெளியிடப்பட்ட பிரிண்டரின் மகன் (Son of EP -101) என அழைத்தனர். இதுவே பின்னர் Son of EP என அழைக்கப்பட்டது. இதனை மீண்டும் சிறு மாற்றம் செய்து ” EPSON ” என இந்நிறுவனத்தின் பெயரை அழைத்தனர்.
07.காம்பேக் (COMPAQ) :
இந்நிறுவனம் சிறந்த கணினி, மடிக் கணினி மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்புக்கள் சந்தையில் மிகவும் பிரபலமானவை. இந்நிறுவனம் USA -ல் பிபரவரி -1982 ல் தொடங்கப்பட்டது. அன்று முதல் பல கணினி மற்றும் அதன் உதிரி பாகங்கள் தயாரிப்பில் வெற்றிகரமான நிறுவனமாக திகழ்ந்து வருகிறது .
இவை இணைவமைதியுடன் நல்ல திறனுடன் இயங்கும் என்பதினைக் குறிக்க ஆங்கிலத்தில் Compatibility and Quality என அழைப்பார்கள். இந்நிறுவனம் இந்த இரண்டு சொல்லையும் இணைத்து CAMPAQ என ஒரு புதிய சொல்லை உருவாக்கி தன நிறுவனத்திற்கு பெயராக வைத்தனர்.
08.சோனி (SONY)
இந்நிறுவனம் உலகபுகழ் பெற்ற எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம்.இவை தயாரிக்காத எலக்ட்ரானிக் பொருட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தனது அனைத்து தயாரிப்புகளையும் சந்தையில் வெளியிட்டுள்ளது. இதனை உருவாக்கியவர் ஜப்பானை சேர்ந்த திரு அக்யோ மொரிட்டா என்பவர். இவர் 1946 ஆம் ஆண்டு மே 7 ந்தேதி தனது கடற்படை நண்பர் இபுக்கா என்பவரின் உதவியுடன் “டோக்கியோ டெலிகம்யூனிகேஷன்ஸ் கார்ப்பரேஷன்” என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
இன்நிறுவனமானது டேப் ரெக்கார்டர் தயாரிப்பில் சிறந்து விளங்கியது . இவரது கண்டுபிடிப்பான டேப் ரெக்கார்டர் அளவில் பெரியதாக இருந்தது. பின்னர் அமரிக்காவின் தொழில்நுட்ப உதவியுடன் கையடக்க டேப் ரெக்கார்டரை உருவாக்கினார்.
அதன் பின் தனது தயாரிப்பினை பிரபலப்படுத்த விரும்பி தனது நிறுவன பெயரை அனைவரிடமும் சென்றடையயும் வகையில் மாற்றி அமைக்க விரும்பி இலத்தீன் மொழியில் உள்ள சோனஸ் என்ற பெயரையும் , அமெரிக்காவில் புகழ் பெற்றிருந்த “சானி பாய்ஸ்” என்ற இசைக்குழுவின் பெயரையும் இணைத்து தனது நிறுவன பெயரை 1958-ல் ” சோனி ” (SONY)
கார்ப்பரேஷன் என்று பெயரை மாற்றினார். இதில் சோனஸ் என்றால் இலத்தீன் மொழியில் “ஒலி” என்று பொருள். இப்பெயரானது இன்று உலக புகழுடன் வளம் வந்துகொண்டிருக்கின்றது.
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» "திருச்சிராப்பள்ளி" பெயர்க் காரணம்-
» ஆஞ்சநேயர் பெயர்க் காரணம்
» நாம போன் எடுத்தவுடன் ஹலோ சொல்றோமே ஏன்னு தெரியுமா ? யாருக்காவது அர்த்தம் தெரியுமா????
» உலகின் பெரிய வழிபாட்டுத்தளம்/தலம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
» பெண்கள் கைவிடப்படுவதற்கான காரணங்கள்............

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum