TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பிரசவத்துக்கு பின் வரும் பிரச்னைகள்

Go down

பிரசவத்துக்கு பின் வரும் பிரச்னைகள் Empty பிரசவத்துக்கு பின் வரும் பிரச்னைகள்

Post by mmani Sun May 12, 2013 8:52 am

பிரசவம், பெண்களுக்கு மறுஜென்மம் போன்றது. பெரும்பாலான பெண்கள் முதல்
குழந்தை பிறந்ததுமே தங்களது உடலை கவனிக்க மறந்து விடுகிறார்கள். அதுவரை
ஸ்லிம் டயட், ஆரோக்கியத்தில் முழுகவனம் செலுத்தும் அவர்கள்,
குழந்தைபேறுக்கு பின்னர் அவற்றை காற்றில் பறக்க விடுவதால் பிரச்னை
ஆரம்பமாகி விடுகிறது. ஒபிசிடி, ரத்தசோகை, மன உளைச்சல் போன்ற உடல்
பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். இதனால் தாம்பத்தியத்திலும் விரிசல்
விழுகிறது.

முதல் பிரசவத்துக்கு பின் பெண்கள் உடலையும், மனதையும்
ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஹெல்த், டயட் இரண்டிலும் கவனம் செலுத்த
வேண்டும் என்கிறார் மகப்பேறு மருத்துவ நிபுணர் கல்பனா சம்பத். ‘‘முதல்
பிரசவத்துக்குப் பின்னர் பெண்களின் உடல் பலம் இழக்கிறது. பிரசவத்தின் போது
சிலருக்கு சர்க்கரை நோய் மற்றும் பிபீ பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
குழந்தை பிறந்த பின், உணவு முறைகளில் கவனம் செலுத்தாமல் விட்டால் ரத்தசோகை,
உடல்பருமன் போன்ற பிரச்னைகள் வரும். உடற்பயிற்சி இல்லாததால் வயிறு லூசாகி
தொங்கிய நிலையில் காணப்படும். இதனை கவனிக்காமல் விட்டால் குடல் இறக்கம்
ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

பிரசவத்துக்குப் பின்னர் உடலில் உள்ள
சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை சோதிப்பது அவசியம். பாதிப்பு
ஏதேனும் இருப்பின் சிகிச்கை எடுக்க வேண்டும். தைராய்டு பிரச்னை உள்ளவர்கள்
உரிய மருந்துகள் எடுத்து கட்டுக்குள் வைக்க வேண்டும். சர்க்கரை, பிபீ
ஆகியவற்றைக் கண்டு கொள்ளாமல் விடும் போது அடுத்து உருவாகும் குழந்தைதான்,
இந்தப் பிரச்னைகளுக்கு இலக்காகும். தைராய்டு பிரச்னையால் அடிக்கடி சோர்வு,
வேலையில் ஆர்வமின்மை என உடலுக்குள் ஒரு போர்க்களமே உருவாகி விடும். எனவே
பிரசவத்துக்குப் பின்னர் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்”
என்கிறார் டாக்டர் கல்பனா.

பிரசவத்துக்குப்
பின்னர் தாய்ப்பால் கொடுப்பதால், பெண்களுக்கு அடிக்கடி பசி ஏற்படும்.
அப்போது கொழுப்பு சத்து உணவுகளைத் தவிர்த்து, நார்ச்சத்து மற்றும் புரதம்
அதிகம் உள்ள பச்சை கீரைகள், அவரை, பீர்க்கன், சாத்துக்குடி, ஆரஞ்சு
ஆகியவற்றை சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்த எந்த உணவுகளையும் சாப்பிடக்
கூடாது. மீன் சேர்த்துக் கொள்ளலாம்.

தாய்ப்பால் கொடுப்பதை
நிறுத்தியவுடன் டயட்டில் முழுகவனம் செலுத்த வேண்டும். அந்த காலக்கட்டத்தில்
உடல் எடையை குறைக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். பச்சைக்
காய்கறி, கீரைகள் மற்றும் பழ வகைகளை அதிகரித்தும் அரிசி மற்றும் கொழுப்பு
உணவு வகைகளைக் குறைத்தும் சாப்பிட வேண்டும். பிரசவத்தின் போது பெண்கள்
சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னை ரத்தம் இழப்பு. உடலில் இருந்து ரத்தம்
அதிகளவில் வெளியேறுவதால் ரத்த சோகை உருவாகிறது. இதைத்தடுக்க முழு பருப்பு
வகைகள், முளை கட்டிய தானியம், முழு கோதுமை, கொழுப்பு நீக்கப்பட்ட பால்
கட்டாயம் உணவில் இருக்க வேண்டும். கீரை வகைகளில் முளைக்கீரை மற்றும்
தண்டுக் கீரையிலும் அதிகளவு இரும்புச் சத்து உள்ளது. இவற்றை சாப்பிடுவது
ரத்த விருத்திக்கு வழிவகுக்கும் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

உடற்பயிற்சி:

குழந்தை
பிறந்த பின்னர் பெண்கள் தொடர்ந்து சில மணி நேரம் கூட அயர்ந்து தூங்க
முடியாது. அப்போது வீட்டில் உள்ள மற்றவர்கள் அவர்களது வேலையைப் பகிர்ந்து
கொள்ள வேண்டும். குழந்தை தூங்கும் நேரத்தில் தாயும் தூங்கி ஓய்வெடுப்பது
முக்கியம்.

குழந்தை சுகப்பிரசவமாக இருந்தால் ஒரு வாரத்திலும்,
அறுவை சிகிச்சையாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படியும் வயிற்றைக்
குறைப்பதற்கான பயிற்சியை செய்யலாம். தற்போது பெல்ட் போடும் வழக்கம் உள்ளது.
இவற்றால் வயிற்றுப் பகுதியை முழுமையாக சுருங்க வைக்க முடியாது.
உடற்பயிற்சி தான் அவசியம்.

தோல் இறுக்கம் அடைந்து பழைய நிலைக்கு
திரும்ப உடற்பயிற்சி மட்டுமே முழுமையாகக் கை கொடுக்கும். பின்பக்கத்தில்
சேர்ந்திருக்கும் கொழுப்பைக் கரைக்கவும் இந்தப் பயிற்சி அவசியம். காலை
படுக்கையை விட்டு எழும் போது, மதியம், இரவு தூங்கும் முன்னர் உடற்பயிற்சி
செய்தால் போதும். மல்லாந்து காலை நீட்டி உடலை லேசாக உணரும் படி படுத்துக்
கொள்ளவும். வயிற்றை உள் இழுத்து மூச்சை நன்றாக இழுத்து விடவும். இதே போல்
பத்து முறை செய்யவும். பின்னர் படுத்த நிலையில் முதுகு நன்றாக தரையில்
படும் படி வைத்து, ஒரு காலை நேராக மேலே தூக்கவும்.

இதே போல் ஐந்து
முறை செய்து விட்டு அடுத்த காலுக்கும் இதே பயிற்சியை செய்ய வேண்டும்.
பின்னர் படுத்த நிலையில் தலையை மட்டும் மேலே தூக்கவும். படுத்த நிலையில்
காலையும், தலையையும் தரையில் படாமல் தூக்கவும். இவ்விதம் குறைந்த பட்சம்
பத்து முறை செய்யலாம். இப்படி செய்வதன் மூலம் பின் பக்கத்தில் உள்ள
கொழுப்பு கரையும், முன்வயிற்று சதை இறுக்கம் அடையும்.

ரெசிபி

கிரீன்
கிரேவி: பச்சைப் பயறை 50 கிராம் அளவுக்கு எடுத்து முதல் நாள் இரவே ஊற
வைக்கவும். தண்டுக் கீரையை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். சிறிது
சின்ன வெங்காயம், இரண்டு பல் பூண்டு, பச்சை மிளகாய் நான்கு, சீரகம்
ஆகியவற்றை எடுத்து ஊற வைத்த பாசிப்பயறுடன் சேர்த்து வேக வைக்கவும். இறக்கிய
பின் கடுகு தாளித்து உப்பு சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.
பருப்பில் உள்ள புரதம் மற்றும் கீரையில் உள்ள நார்ச்சத்து மற்றும்
இரும்புச் சத்து ஆகியவை சேர்வதால் இது ஒரு முழுமையான சத்துணவாக அமையும்.

பிரவுன் மில்கி:

ரத்த
சோகைக்கு மிகவும் உகந்தது பேரீச்சை. அதனுடன் பாலும் சேரும் போது இரும்பு
சத்து மற்றும் கால்சியம் ஆகிய சத்துகளும் உடலுக்குக் கிடைக்கிறது. பொடியாக
நறுக்கிய பேரீச்சை, முந்திரி, உலர்ந்த திராட்சை ஆகியவற்றை சூடான பாலில்
சேர்த்து வெல்லம் அல்லது சர்க்கரை கலந்து பருகலாம். இந்த பிரவுன் மில்கி
கலவை எலும்புக்கு வலிமை தரும்.

கலர்புல் பீட்ஸ் மிக்ஸ்:

பழங்கள்,
உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து மினுமினுப்பை அதிகரிக்கச் செய்யும்.
தொடர்ந்து சாப்பிடும் போது தோல் சுருக்கங்கள் நீங்கி வனப்பு பெறும்.
மாதுளை, ஆப்பிள், கருப்பு திராட்சை, சப்போட்டா ஆகிய பழங்களை உரித்து,
துண்டுகளாக்கிக் கொண்டு பாலில் கலந்து சாப்பிடலாம். இந்த பீட்ஸ் மிக்ஸ்
ஆரோக்கியத்துக்கு உகந்தது.

பாட்டி வைத்தியம்

வேப்பிலையை அரைத்து சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் ரத்த சோகை குணமாகும்.

பூண்டை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் பிபீ பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். ரத்த அழுத்தம் சீராகும்.

வெள்ளரி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் சம அளவில் எடுத்து சாறு பிழிந்து குடித்து வந்தால் உடல் பருமன் மற்றும் ஊளைச் சதை குறையும்.
வெந்தயம்,
சுண்டைக்காய் வற்றல், மிளகு ஆகியவை ஒவ்வொன்றிலும் 50 கிராம் எடுத்து
வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தினமும் வெறும் வயிற்றில்
சாப்பிட உடல் எடை குறையும்.

வாழைத்தண்டு சாறு, பூசணிச்சாறு,
அருகம்புல் சாறு மூன்றையும் சம அளவில் எடுத்துக் கலந்து கொள்ளவும். இதனை
ஒருநாள் விட்டு ஒருநாள் குடித்து வந்தால் உடல் எடை குறைந்து அழகிய தோற்றம்
கிடைக்கும்.

வல்லாரைக் கீரை 3, சீரகம் 10 கிராம் அளவுக்கு எடுத்து
பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை இரவில் சாப்பிட்டு வந்தால் ரத்த
அழுத்தம் சீராகும்.

வங்காரவள்ளைக் கீரையை தொடர்ந்து சமைத்து சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.

லவங்கப்
பட்டையுடன் வேப்பிலை மற்றும் மிளகு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அரைத்து
அதிகாலையில் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிடவும். இதன் மூலம் உடலில் உள்ள
கெட்ட கொழுப்புகள் கரையும்.

ரோஜாப்பூ, வெள்ளை மிளகு, சுக்கு,
ஆகியவற்றை தலா 50 கிராம் எடுத்துக் கொள்ளவும். இதனை அரைத்து காலை, மாலை இரு
வேளையும் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

உலர்ந்த ரோஜா
இதழ்கள், சுக்கு, ஏலக்காய் தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும்.
தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு
வந்தால் ரத்த அழுத்தம் குறைவதுடன் கெட்ட கொழுப்புகள் கரையும்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரசவத்துக்கு பின் அழகாகலாம்!
» பிரசவத்துக்கு பின் கவனிப்பு அவசியம்
» பிரசவத்துக்கு பின் ஏற்படக் கூடிய தழும்புகள் நீக்க
» பிளாஸ்டிக் பாவனையால் வரும் பின் விளைவுகளை உணர்த்தும் ஒரு தொகுப்பு
» ''இந்திய - இலங்கைக் கடற்பகுதியில் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் போல, வேறு நாட்டின் கடற்பகுதியில் இப்படிப் பிரச்னைகள் எதுவும் உண்டா?''

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum