TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 7:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வெற்றியை நோக்கி இந்தியா : அஷ்வின் மீண்டும் அசத்தல்: சுழலில் சரிந்தது ஆஸி

Go down

வெற்றியை நோக்கி இந்தியா : அஷ்வின் மீண்டும் அசத்தல்: சுழலில் சரிந்தது ஆஸி Empty வெற்றியை நோக்கி இந்தியா : அஷ்வின் மீண்டும் அசத்தல்: சுழலில் சரிந்தது ஆஸி

Post by மாலதி Tue Feb 26, 2013 6:26 am

வெற்றியை நோக்கி இந்தியா : அஷ்வின் மீண்டும் அசத்தல்: சுழலில் சரிந்தது ஆஸி Ashwin-300_3











சென்னை: சென்னை டெஸ்டில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது.
அஷ்வின், ஹர்பஜன் "சுழலில்' சிக்கிய ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை மடமடவென
இழந்தது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட்
தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சென்னையில் நடக்கிறது. மூன்றாவது நாள்
ஆட்ட நேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில், 8 விக்கெட்டுக்கு 515
ரன்கள் எடுத்திருந்தது.

நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. தனது விளாசலை தொடர்ந்த கேப்டன்
தோனி, லியான் ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் பறக்க விட்டார். இவர்,
பட்டின்சன் "வேகத்தில்' 224 ரன்களுக்கு(24 பவுண்டரி, 6 சிக்சர்)
அவுட்டானார். புவனேஷ்வர் குமார் (38), சிடில் பந்தில் வெளியேற, இந்திய அணி
முதல் இன்னிங்சில் 572 ரன்களுக்கு "ஆல் அவுட்' ஆனது. இதன் மூலம் 192 ரன்கள்
முன்னிலை பெற்றது.

ஆஸ்திரேலிய தரப்பில் பட்டின்சன் 5 விக்கெட் கைப்பற்றினார்.

வாட்சன் ஏமாற்றம்:

பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணி அஷ்வின் "சுழலில்'
ஆட்டம் கண்டது. இவர் "ஆபத்தான' வாட்சனை (17) வெளியேற்றினார். பின்
கோவனையும்(32) அவுட்டாக்கினார். ஹியுஸ் (0) வந்த வேகத்தில் "பெவிலியன்'
திரும்பினார்.

ஹென்ரிக்ஸ் அரைசதம்:

ஹர்பஜன் "சுழலில்' வார்னர் (23) சிக்கினார். வேட் (8) நிலைக்கவில்லை.
பின் கிளார்க்கை (31), அஷ்வின் வெளியேற்றினார். அடுத்து வந்த சிடில் (2),
ஜடேஜாவிடம் சரணடைந்தார். தொடர்ந்து அசத்திய அஷ்வின் வலையில் பட்டின்சன்
(11), ஸ்டார்க் (8) வீழ்ந்தனர்.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், மறுபுறம் கடுமையாக போராடிய அறிமுக வீரர்
ஹென்ரிக்ஸ், டெஸ்ட் அரங்கில் இரண்டாவது அரைசதம் கடந்து, அணியின் இன்னிங்ஸ்
தோல்வியை தவிர்த்தார். கடைசி விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் இந்திய
பவுலர்கள் தவித்தனர்.நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி
இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 232 ரன்கள் எடுத்து, 40 ரன்கள்
முன்னிலை பெற்றிருந்தது. ஹென்ரிக்ஸ் (75), லியான் (8) அவுட்டாகாமல்
இருந்தனர்.

இந்தியா சார்பில் மீண்டும் "சுழலில்' அசத்திய அஷ்வின் 5 விக்கெட் கைப்பற்றினார். ஹர்பஜன் சிங், ஜடேஜா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில், எஞ்சியுள்ள ஒரு ஆஸ்திரேலிய விக்கெட்டை
விரைவில் கைப்பற்றும் பட்சத்தில், இந்திய அணி எளிய இலக்கை துரத்தி, மிகப்
பெரும் வெற்றி பெறலாம்.

572

முதல் இன்னிங்சில் 572 ரன்கள் குவித்த இந்திய அணி, சேப்பாக்கம்
மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
முன்னதாக, 2001ல் 501 ரன்கள் எடுத்திருந்தது.

* இது, சேப்பாக்கம் மைதானத்தில், இந்திய அணி பதிவு செய்த இரண்டாவது
அதிகபட்ச ஸ்கோர். ஏற்கனவே தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 2008ல் இங்கு நடந்த
டெஸ்டில், 627 ரன்கள் எடுத்தது.

* இது, இந்திய மண்ணில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட
4வது சிறந்த ஸ்கோர். அதிகபட்சமாக, கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில்,
2001ல் நடந்த டெஸ்டில், இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 657 ரன்கள் எடுத்து
"டிக்ளேர்' செய்தது.

* டெஸ்ட் அரங்கில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 6வது
சிறந்த ஸ்கோர். அதிகபட்சமாக, சிட்னியில், 2004ல் நடந்த போட்டியில் 7
விக்கெட்டுக்கு 705 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது.

215

ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லியான், 47 ஓவர்கள் பந்துவீசி 215
ரன்கள் கொடுத்து, 3 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் முதன்முறையாக 200
ரன்களுக்கு மேல் கொடுத்துள்ளார். முன்னதாக, கடந்த ஆண்டு தென்
ஆப்ரிக்காவுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடந்த டெஸ்டில், 136 ரன்கள்
கொடுத்தார்.

* டெஸ்ட் போட்டியில், இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்களை வழங்கிய
பவுலர்கள் வரிசையில், மூன்றாவது இடத்தை சகவீரர் ஜாசன் கிரெஜ்ஜாவுடன்
பகிர்ந்து கொண்டார். கடந்த 2008ல் நாக்பூரில் நடந்த டெஸ்டில், கிரெஜ்ஜா
43.5 ஓவரில் 8 விக்கெட் கைப்பற்றி 215 ரன்கள் வழங்கினார். முதலிரண்டு
இடங்களில் இலங்கையின் ஹெராத் (53.3 ஓவர், 240 ரன்கள், 3 விக்.,
இடம்-மும்பை, 2009), சுராஜ் ரந்திவ் (73 ஓவர், 222 ரன்கள், 2 விக்.,
இடம்-கொழும்பு)

* இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்கள் வழங்கிய ஆஸ்திரேலிய பவுலர்கள்
வரிசையில் மூன்றாவது இடம் பிடித்தார். ஏற்கனவே பிரட் லீ (39.3 ஓவர், 201
ரன்கள், 4 விக்., இடம்-சிட்னி, 2003-04), கிரெஜ்ஜா (43.5 ஓவர், 215 ரன்கள்,
8 விக்., இடம்-நாக்பூர், 2008) உள்ளனர்.

சச்சின் சாதனையை

தகர்த்த தோனி

நேற்றைய போட்டியில் 224 ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் தோனி, அதிக ரன்கள்
எடுத்த இந்திய கேப்டன்கள் வரிசையில் சச்சினை (217 ரன்கள்,
எதிர்-நியூசிலாந்து, 1999, இடம்-ஆமதாபாத்) பின்தள்ளி முதலிடம் பிடித்தார்.
அடுத்த இரு இடங்களில், சுனில் கவாஸ்கர் (205), நவாப் பட்டோடி (203)
உள்ளனர்.

* டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர் வரிசையில்
தோனி மூன்றாவது இடம் பிடித்தார். முதலிரண்டு இடங்களில் ஜிம்பாப்வேவின்
ஆண்டி பிளவர் (232 ரன்கள், எதிர்-இந்தியா, 2000, இடம்-நாக்பூர்),
இலங்கையின் சங்ககரா (230, எதிர்-பாகிஸ்தான், 2002, இடம்-லாகூர்) உள்ளனர்.

* ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர்
வரிசையில் முதலிடம் பிடித்தார் தோனி. இதற்கு முன் கடந்த 1980ல் பாகிஸ்தானி
தஸ்லீம் ஆரிப் 210 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இந்தார்.

* இது, சேப்பாக்கம் மைதானத்தில் எடுக்கப்பட்ட மூன்றாவது அதிகபட்ச ரன்.
முன்னதாக சேவக் (319 ரன், எதிர்-தென் ஆப்ரிக்கா, 2008), சுனில் கவாஸ்கர்
(236 ரன், எதிர்-வெஸ்ட் இண்டீஸ், 1983) ஆகியோர் இம்மைல்கல்லை எட்டினர்.

அசத்தல் அறிமுகம்

சென்னை டெஸ்டில், அறிமுக வீரராக களமிறங்கிய ஆஸ்திரேலியாவின் ஹென்ரிக்ஸ்,
முதல் இன்னிங்சில் 68 ரன்கள் எடுத்தார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய
இவர், 2வது இன்னிங்சில் 75 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார். இதன்மூலம்
அறிமுக போட்டியின் முதலிரண்டு இன்னிங்சில் அரைசதம் அடித்த 5வது ஆஸ்திரேலிய
வீரர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக ஹெர்பி கோலின்ஸ் (70, 104 ரன்கள்,
எதிர்-இங்கிலாந்து, இடம்-சிட்னி, 1920), பீட்டர் டூஹே (82, 57 ரன்கள்,
எதிர்-இந்தியா, இடம்-பிரிஸ்பேன், 1977), ரிக் டார்லிங் (65, 56 ரன்கள்,
எதிர்-இந்தியா, இடம்-அடிலெய்டு, 1978), புரூஸ் லேய்ர்டு (92, 75 ரன்கள்,
எதிர்-வெஸ்ட் இண்டீஸ், இடம்-பிரிஸ்பேன், 1979) ஆகியோர் இச்சாதனை
படைத்திருந்தனர்.

* அறிமுக போட்டியில், பேட்டிங் வரிசையில் 7 அல்லது அதற்கு மேல்
களமிறங்கி, இரண்டு இன்னிங்சிலும் 60 ரன்களுக்கு மேல் எடுத்த, முதல் வீரர்
என்ற சாதனை படைத்தார். முன்னதாக பாகிஸ்தானின் அசார் முகமது, 1997ல்
ராவல்பிண்டியில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார்.
இதில் 7வது வீரராக களமிறங்கிய இவர், முதல் இன்னிங்சில் 128, 2வது
இன்னிங்சில் 50 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

* இதுவரை 4 வீரர்கள், அறிமுக போட்டியில் 7வது அல்லது அதற்கு மேல் வரிசையில் களமிறங்கி, இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் அடித்துள்ளனர்.

12

சுழலில் அசத்திய இந்தியாவின் அஷ்வின், இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து
மொத்தம் 12 விக்கெட் (7+5) கைப்பற்றினார். இதன்மூலம் இரண்டாவது முறையாக 10
அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்தினார். முன்னதாக, கடந்த ஆண்டு,
நியூசிலாந்துக்கு எதிராக ஐதராபாத்தில் நடந்த டெஸ்டில், 12 விக்கெட்
வீழ்த்தினார்.

6

இந்திய கேப்டன் தோனி, 265 பந்தில் 6 சிக்சர், 24 பவுண்டரி உட்பட 224
ரன்கள் எடுத்தார். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில், மூன்றாவது முறையாக 6
சிக்சர் விளாசினார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகளுக்கு எதிராக
ஒரு இன்னிங்சில் தலா 6 சிக்சர் அடித்துள்ளார்.

* தவிர, டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில்
அதிக சிக்சர் அடித்த வீரர்கள் வரிசையில், முதலிடத்தை ரவி சாஸ்திரியுடன்
பகிர்ந்து கொண்டார். கடந்த 1986ல் மும்பையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு
எதிரான டெஸ்டில் 287 பந்தில் 121 ரன்கள் எடுத்த ரவி சாஸ்திரி, 6 "சிக்சர்'
அடித்தார்.

140

டெஸ்டில், 9வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த இந்திய ஜோடிகளின்
வரிசையில் தோனி, புவனேஷ்வர் குமார் (140 ரன்கள்), 3வது இடம் பிடித்தனர்.
முதலிரண்டு இடத்தில் தேசாய்-ஜோஷி (149 ரன்கள், எதிர்-பாகிஸ்தான், 1960,
இடம்-மும்பை), கவாஸ்கர்-கிர்மானி (143 ரன்கள், எதிர்-வெஸ்ட் இண்டீஸ், 1983,
இடம்-சென்னை) ஜோடி உள்ளன.

5

நேற்று வேகத்தில் அசத்திய ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பட்டின்சன், 5
விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் இந்தியாவுக்கு எதிராக முதன்முறையாக 5
விக்கெட் வீழ்த்தினார்.

* டெஸ்ட் அரங்கில், மூன்றாவது முறையாக 5 அல்லது அதற்கு மேல் விக்கெட்
வீழ்த்தினார். இதற்கு முன், நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு முறை இச்சாதனை
படைத்திருந்தார்.

* சேப்பாக்கம் மைதானத்தில், 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் கைப்பற்றிய 6வது ஆஸ்திரேலிய பவுலரானார்.

ஜாக்சன் பேர்டு காயம்

முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, ஆஸ்திரேலிய
வேகப்பந்துவீச்சாளர் ஜாக்சன் பேர்டு, தாயகம் திரும்புகிறார். அங்கு,
இவருக்கு "ஸ்கேன்' எடுத்து பார்க்கப்பட உள்ளது. இதன்முடிவை பொறுத்து இவர்,
மீண்டும் இந்தியா வருவது குறித்து முடிவு செய்யப்படும்.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» புஜாரா சதம்: மீண்டது இந்தியா: சுழலில் பனேசர் அசத்தல்
» கோஹ்லி அபார சதம்: அஷ்வின் அசத்தல் பந்துவீச்சு
» இந்திய "சுழலில்' சிக்கியது நியூசி., * அஷ்வின், ஓஜா அபாரம்
» சென்னை கிங்ஸ் சூப்பர் வெற்றி :அஸ்வின் சுழலில் சரிந்தது கோல்கட்டா
» "டுவென்டி-20: இந்தியா அசத்தல் வெற்றி * விராத் கோஹ்லி விளாசல் * இலங்கைக்கு மீண்டும் "அடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum