TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஆயிரம் ரூபாய் போதும் ; பைண்டிங்கில் அசத்தலாம்!

3 posters

Go down

ஆயிரம் ரூபாய் போதும் ; பைண்டிங்கில் அசத்தலாம்! Empty ஆயிரம் ரூபாய் போதும் ; பைண்டிங்கில் அசத்தலாம்!

Post by KAPILS Fri Jan 11, 2013 9:30 pm

ஆண்டு முழுவதும் படிக்கக்கூடிய பாடப்புத்தகங்கள் சிதையாமல் இருக்க பைண்டிங் செய்வது வழக்கமாக உள்ளது. பல்வேறு நிறுவனங்களில் கம்ப்யூட்டர் இருந்தாலும் ஆவணங்களை பாதுகாக்க இன்றும் பைண்டிங் செய்யப்பட்ட லெட்ஜர்கள் பயன்படுத்தப்படுகின்றன. பைண்டிங் தொழிலுக்கு என்றும் குறையாத வருவாய் உள்ளது. இதில், ஈடுபடுபவர்கள் வீட்டில் இருந்தவாறே ஆயிரம் ரூபாய் முதலீட்டில் சுய வேலைவாய்ப்பு பெறுவதோடு, லாபமும் அடையலாம் என்று கூறுகிறார் கோவை சுந்தராபுரம் எல்ஐசி காலனியை சேர்ந்த உமா.

அவர் கூறியதாவது: பிஎஸ்சி விலங்கியல், எம்ஏ, பிஎட் மற்றும் இந்தி படித்துள்ளேன். தனியார் பள்ளியில் இந்தி ஆசிரியையாக உள்ளேன். படித்து முடித்த பிறகு, வேலை கிடைக்கும் வரை ஏதாவது தொழில் செய்யலாம் என்று இருந்தபோது, கோவை அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலையில் பல்வேறு சுய வேலைவாய்ப்பு தொழில் குறித்த பயிற்சிகளை அளித்தார்கள். அதில் சேர்ந்து புக் பைண்டிங் பயிற்சி பெற்று, வீட்டிலேயே பைண்டிங் வேலை செய்ய துவங்கினேன்.

புத்தகம் பைண்டிங் செய்வது எளிய வேலைதான். பசை காய்வதற்கு மட்டும் காத்திருக்க வேண்டும். ஒவ்வொரு புத்தகத்தையும் தனித்தனியாக பைண்டிங் செய்யக்கூடாது. தேவையான பொருட்களை தயாராக வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்தமாக புத்தகங்களுக்கு பைண்டிங் செய்வதே சிறந்தது. 8 மணி நேரத்தில் 50 புத்தகங்களை ஒருவரே பைண்டிங் செய்து விட முடியும். புத்தக விளிம்புகளை பிரின்டிங் பிரஸ்களில் கொடுத்து கட்டிங் செய்து கொள்ளலாம்.
பெரிய முதலீட்டில், பைண்டிங் செய்ய விரும்புபவர்கள் கட்டிங் மெஷின் வாங்கி வைத்துக்கொள்ளலாம். புத்தகம் நன்றாக அமுங்க பிரஸ்சிங்மெஷின், துளை போட டிரில்லிங் மெஷின் வாங்கி கொள்ளலாம்.

இந்த மெஷின்கள் இல்லாமல் ஆயிரம் ரூபாய் முதலீடு இருந்தால்கூட தொழிலை துவக்கிவிட முடியும். பைண்டிங் செய்து, அதன் மூலம் வரும் வருவாய் மூலம் தேவையான பொருட்களை வாங்கி கொள்ளலாம். வீட்டில் இருந்தவாறு சுய தொழில் செய்ய ஏற்ற தொழில் இது. பைண்டிங் செய்வதை ஒரு முறை பார்த்தால் போதும்; எளிதில் கற்றுக்கொள்ளலாம். ஆசிரியர் வேலை கிடைத்த பின், ஓய்வு நேரங்களில் பைண்டிங் செய்து வருகிறேன். அதன் மூலமும் வருவாய் கிடைக்கிறது.

பைண்டிங் செய்வது எப்படி?

முதலில் பைண்டிங் செய்யப்படும் புத்தகங்களின் அளவுகளை தனித்தனியாக எடுத்து, அதற்கேற்ப அட்டைகள், பிரவுன் ஷீட், மார்பிள் ஷீட், காலிகோ துணியை வெட்டி வைக்க வேண்டும். பைண்டிங் செய்ய வேண்டிய புத்தக முன் அட்டையின் இடது புற மார்ஜின் பகுதியில் தையல் போடுவதற்கு இடம் விட்டு, அதற்கடுத்து ஒரு இஞ்ச் அகலத்தில் மேலிருந்து கீழாக பைண்டிங் பேஸ்ட் தடவ வேண்டும். அதன் மீது 4 பக்கம் கொண்ட டபுள்ஷீட் பிரவுன் பேப்பரை ஒட்ட வேண்டும். இதேபோல் புத்தகத்தின் பின்புறமும் ஒட்ட வேண்டும். பின்னர் பேஸ்ட் காயும் வரை காத்திருக்க வேண்டும்.

பின்னர் தையல் போட ஒதுக்கப்பட்ட பகுதியில் சம இடைவெளியில் 3 துளைகள் போட அளவெடுக்க வேண்டும். 3 துளைகள் போட உத்தேசித்த இடத்தில், மேல் துளையிலிருந்து கீழ் துளை வரையிலான பகுதியில் பேஸ்ட் தடவி காலிகோ துணியை ஒட்ட வேண்டும். ஒட்டிய துணி காயும் வரை காத்திருக்க வேண்டும். அடுத்து, காலிகோ துணியில் உத்தேசித்த இடத்தில் ஆணியால், சுத்தியல் மூலம் 3 துளை போட வேண்டும். பின்னர் முப்பட்டை ஊசியில், ட்வைன் நூலை கோர்த்து, துளை வழியாக தையல் போட வேண்டும்.

தையல் போடும் போது 3 துளைகளில் புத்தகத்தின் முன்புறமுள்ள கீழ் துளை வழியாக ஊசி நூலை விட்டு பின்புறம் இழுத்து, அதை பின்புற மத்திய துளை வழியாக விட்டு முன்புறம் இழுக்க வேண்டும். அங்கு 2 முனைகளையும் முடிச்சு போட வேண்டும். இதேபோல் புத்தகத்தின் பின்புற மத்திய துளையின் மேல் பகுதியில் மற்றொரு முடிச்சு போடும் வகையில் தைக்க வேண்டும். இவ்வாறு தையல் போட்டால் இறுக்கமாக இருக்கும். பின்னர் ஏற்கனவே ஒட்டிய பிரவுன் ஷீட்டின் வெளிப்புறம் முழுவதும் பேஸ்ட் தடவி, அதில் பைண்டிங் அட்டையை ஒட்ட வேண்டும். இதேபோல் புத்தகத்தின் பின்புறத்திலும் செய்ய வேண்டும். ஒட்டிய அட்டை காயும் வரை காத்திருக்க வேண்டும்.

புத்தகத்தில் தைக்கப்பட்ட பகுதியிலும், அதன் மேல், கீழ் பகுதிகளிலும், ஏற்கனவே ஒட்டப்பட்ட அட்டை மீது அரை இஞ்ச் அளவு வரையும் பேஸ்ட் தடவ வேண்டும். அங்கு பேஸ்ட் தடவிய அளவுக்கு வெட்டிய காலிகோ துணியை, ஒட்ட வேண்டும். பின்னர் காய வைக்க வேண்டும். காய வைக்கும்போது முன்புறம் காய்ந்தவுடன், பின்புறம் காயும் வகையில் புத்தகத்தை திருப்பி விட வேண்டும். காய்ந்த பின்னர், அட்டை மீது மார்பிள் ஷீட்டை ஒட்டி அதையும் காய வைக்க வேண்டும். பின்னர் அவற்றை மெஷினில் 3 புறமும் கட்டிங் செய்தால் சீராக இருக்கும். கட்டிங் செய்த புத்தகங்களை அடுக்கி அவற்றின் மீது வெயிட் வைத்தால் பைண்டிங் செய்த புத்தகங்களின் அட்டைகள் வளையாமல் இருக்கும். பைண்டிங் செய்யப்பட்ட புத்தகங்கள் தயார்.

தேவைப்படும் பொருட்கள்!

4 வகை ஆணி(50 காசு), சுத்தியல் (ரூ.50), 3 வகை முப்பட்டை ஊசி (ரூ.10) ஆகியன மூலப்பொருட்கள். பிரவுன் ஷீட்(குயர் ரூ.40), பைண்டிங் பேஸ்ட் (பாக்கெட் ரூ.8), காலிகோ துணி (மீட்டர் ரூ.20), ட்வைன் நூல் (ஒரு கண்டு ரூ.17), பைண்டிங் அட்டை (ஒரு ஷீட் ரூ.7), மார்பிள் ஷீட் (ரூ.2). இவை ஸ்டேஷனரி, பேன்சி ஸ்டோர்களில் கிடைக்கும். ஆணி, சுத்தியல் ஹார்டுவேர் ஸ்டோர்களில் கிடைக்கும். பெரிய அளவில் பைண்டிங் தொழில் செய்வதாக இருந்தால் தனியாக ஒரு அறை வேண்டும். கட்டிங் மெஷின் (ரூ.1.5 லட்சம்), பிரஸ்சிங் மெஷின் (ரூ.5 ஆயிரம்), டிரில்லிங் மெஷின் (ரூ.2 ஆயிரம்) என ரூ.1.57 லட்சம் முதலீட்டுக்கு தேவை.

மாதம் ரூ.25 ஆயிரம் வருவாய்!

பள்ளி பாட புத்தகம் ஒன்று பைண்டிங் செய்ய ரூ.5 செலவாகும். ஒரு நாளைக்கு ஒரு நபர் 50 புத்தகங்கள் வரை பைண்டிங் செய்யலாம். இதற்கு ரூ.250 மதிப்பிலான பொருட்கள் தேவைப்படுகின்றன. 25 நாளில் 1250 புத்தகம் பைண்ட் செய்யலாம். அதற்கு ரூ.6,250 செலவாகும். பள்ளி பாட புத்தகம் ஒவ்வொன்றுக்கும் பைண்டிங் கூலி ரூ.20 வசூலிக்கப்படுகிறது. ஒரு நாளில் 50 புத்தகங்கள் மூலம் வருவாய் ரூ.1,000. செலவு ரூ.250 போக லாபம் ரூ.750. மாதம் ரூ.25 ஆயிரம் வருவாய் கிடைக்கும். இதில் லாபம் ரூ.18,750. இதை சுய தொழில் உழைப்பு கூலியாகவும் கருதலாம்.

ஆர்டர் எளிதில் கிடைக்கும்!

வீடுகளில், ‘இங்கு பைண்டிங் செய்யப்படும்’ என்று சின்ன போர்டு போட்டால் போதும். கல்வியாண்டு துவக்கத்தில் 2-3 மாதங்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தங்கள் வீட்டு பள்ளி, கல்லூரி பாட புத்தகங்களை பைண்டிங் செய்ய ஆர்டர் தருவார்கள். மற்ற மாதங்களில் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சென்று ஆவணங்களை பெற்று வந்து பைண்டிங் செய்து கொடுக்கலாம். அச்சகங்களில் அச்சிடப்படும் பில் புக் மற்றும் நோட்டுகள் உள்ளிட்டவற்றையும் பைண்டிங் செய்ய ஆர்டர் எடுக்கலாம். எளிதில் கிடைக்கும். சிறிய அளவு முதல் பெரிய லெட்ஜர் வரை நோட்டு புத்தகங்கள் உள்ளதால், அதற்கேற்ப கூடுதல் கூலி கிடைக்கும்.
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

ஆயிரம் ரூபாய் போதும் ; பைண்டிங்கில் அசத்தலாம்! Empty Re: ஆயிரம் ரூபாய் போதும் ; பைண்டிங்கில் அசத்தலாம்!

Post by மாலதி Fri Jan 11, 2013 9:36 pm

கண்டிப்பாக ..அனைவரும் அரசு வேலை தான் வேண்டும் என்று இல்லாமல் இது போல் பயன்தரும் தொழில் செய்யலாம்


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஆயிரம் ரூபாய் போதும் ; பைண்டிங்கில் அசத்தலாம்! Empty Nice

Post by ANGURAJAN Fri Jan 11, 2013 10:36 pm

Very Nice

by V. Angurajan
ANGURAJAN
ANGURAJAN
உதய நிலா
உதய நிலா

Posts : 2
Join date : 09/01/2013
Location : Tirunelveli

Back to top Go down

ஆயிரம் ரூபாய் போதும் ; பைண்டிங்கில் அசத்தலாம்! Empty Re: ஆயிரம் ரூபாய் போதும் ; பைண்டிங்கில் அசத்தலாம்!

Post by மாலதி Sat Jan 12, 2013 6:53 am

ANGURAJAN wrote:Very Nice

by V. Angurajan
நன்றிகள்


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஆயிரம் ரூபாய் போதும் ; பைண்டிங்கில் அசத்தலாம்! Empty Re: ஆயிரம் ரூபாய் போதும் ; பைண்டிங்கில் அசத்தலாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 15 சென்ட்... 150 நாள்... 70 ஆயிரம் ரூபாய் லாபம்!
» ஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய்; தமிழகத்தில் 3 ஆண்டுகள் பட்ஜெட் போடலாம்
» ஜீன்ஸ் பேன்ட் அணிந்த அவுஸ்திரேலிய டாக்ஸி டிரைவருக்கு 75 ஆயிரம் ரூபாய் அபராதம்!
» வீட்டு கூரையில் சோலார் பவர் போட 20 ஆயிரம் ரூபாய் மான்யம்!- முதல்வர் அறிவிப்பு!
» கோப்புகளை அழிக்கும் போதும்,திரும்பப் பெறும் போதும் (File delete and recover) நடப்பது என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum