TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 7:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இணையத்தை ஒடுக்க பாசிச ஜெயாவின் குண்டர் சட்டம் !

Go down

இணையத்தை ஒடுக்க பாசிச ஜெயாவின் குண்டர் சட்டம் ! Empty இணையத்தை ஒடுக்க பாசிச ஜெயாவின் குண்டர் சட்டம் !

Post by மாலதி Thu Dec 20, 2012 8:07 pm

இணையத்தை ஒடுக்க பாசிச ஜெயாவின் குண்டர் சட்டம் ! It-act-goondas-tamilnaduமாவட்ட
ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாட்டை முடித்து வைத்துப் பேசிய
முதலமைச்சர் ஜெயலலிதா சில, பல முடிவுகளை பாசிச ரசனையோடு
அறிவித்திருக்கிறார்.

போலீசாருக்கான ரொக்கப்பரிசு உயர்த்தப்படுதல், போலீஸ் அதிகாரிகளுக்கு
இடையே வீடியோ கான்பரன்சிங் ஏற்படுத்துதல், சிறை கைதிகளை அழைத்து வரும்
போலீசாருக்கான செலவுத் தொகையை உயர்த்துதல், மத்திய சிறைச்சாலைகளில் ஸ்கேன்
கருவிகள் வாங்குதல், போலீசுக்கு உதவும் பொருட்டு மாவட்டம் தோறும் சட்ட
அதிகாரி நியமித்தல் என்று போலிசாருக்கு ஏராளம் சலுகைகள் வசதிகளை ஜெயலலிதா
அறிவித்திருக்கிறார். இவற்றில் முக்கியமானது குண்டர் சட்டம் குறித்த
அறிவிப்பு!

ஏற்கனவே இருக்கும் குண்டர் சட்டத்தில் தொழில்முறைத் திருடர்கள்,
ரவுடிகள், போதை பொருள் கடத்துபவர்கள், திருட்டு விசிடி தயாரிப்பவர்கள் –
விற்பவர்கள் மற்றும் ஜெயலலிதாவுக்கு பிடிக்காத அரசியல்வாதிகள் குறிப்பாக
தி.மு.க தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு
வந்தனர். எங்கள் தோழர்கள் கூட முன்னரும் இப்போதும் இப்படி கைது
செய்யப்பட்டிருக்கின்றனர். இந்தச் சட்டப்படி கைது செய்யப்படுபவர்கள் யாரும்
ஒரு வருடம் வரை சிறையில் இருந்தாக வேண்டும், பிணை கிடையாது. வழக்கு,
விசாரணை தாமதம் என்று எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சம்பந்தப்பட்டவர்களை
கைது செய்து சிறையில் அடைக்க முடியும்.

தற்போது இந்த குண்டர் சட்டத்தின் வரம்புகளை அகற்றிவிட்டு இன்னும்
அதிகப்படுத்தியிருக்கிறார்கள். அதன் படி, “பொது அமைதிக்கு குந்தகம்
விளைவிக்கும் வகையில் முதல் முறை குற்றம் செய்பவர்கள் மீதும் குண்டர்
சட்டம் பாயும்”. அதாவது இனி கைது செய்யப்படுபவர்கள் யாரும் தொழில்முறைத்
திருடர்களாகவோ, ரவுடிகளாகவோ இருக்க வேண்டியதில்லை. ஒரு குற்றம்
புரிந்திருந்தாலே போதும். முதல் குற்றம் புரிபவர்கள் அனைவரும் வாழ்நாள்
முழுவதும் குற்றம் செய்பவர்களாக போலிசால் கருதப்பட்டு கைது
செய்யப்படுவார்கள்.

முக்கியமாக இந்த விதி கிரிமனல்களை மட்டும் குறிவைக்கவில்லை. மக்களுக்காக
போராடுபவர்களை பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் என்று
தீர்மானித்து கைது செய்து ஒரு வருடம் சிறையில் அடைப்பதற்கு வழிவகுக்கிறது.
இதன்படி இனி கல்வியில் தனியார்மயத்தை எதிர்த்து போராடும் புரட்சிகர மாணவர்
இளைஞர் முன்னணி தோழர்களை குண்டர்கள் சட்டத்தில் அடைக்க முடியும்.
போலிசாரின் லாக்கப் கொலையை எதிர்த்து போராடும் மனித உரிமைப் பாதுகாப்பு மைய
வழக்கறிஞர்களையும் ஒரு வருடம் உள்ளே தள்ள முடியும்.

சரி இது ஏதோ வெளியே போராட்டம் நடத்துபவர்களுக்கு மட்டும் என்று நினைத்து
விடாதீர்கள். பாசிச ஜெயாவின் குண்டர்கள் சட்ட அறிவிப்பில் அடுத்து வரும்
அணுகுண்டு அறிவிப்பு என்னவென்றால் “சைபர் கிரைம் குற்றம் செய்தவர்கள்
மீதும் குண்டர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்பதாகும். சைபர்
கிரைம் என்றால் ஏதோ நைஜீரியன் மோசடி மட்டும் என்று நினைத்து விடாதீர்கள்.
அரசியல் ரீதியாக எழுதுபவர்கள், அரசுகள், கட்சிகள், மதவெறி, சாதிவெறிகளைக்
கண்டித்து எழுதுபவர்களும் கூட பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் என்ற
முகாந்திரத்தில் கைது செய்யப்படலாம்.

வினவு தளம் இந்து மதத்தை தாக்கி எழுதுகிறது, சாதிய சமூக ‘இணக்கத்தை’
குலைக்கும் வகையில் எழுதுகிறது என்று யாராவது ஒரு புகார் கொடுத்தால் அல்லது
போலீசே அப்படி ஒரு வழக்கு பதிவு செய்தால் எங்களையும் கேட்பார்
கேள்வியின்றி ஒரு வருடம் உள்ளே தள்ள முடியும். ஜெயலலிதாவை கண்டித்து
யாராவது ஒரு ஓவியர் கார்ட்டூன் வரைந்தால் கூட குண்டர்கள் சட்டம் பாயலாம்.
அந்த ஓவியத்தை விரும்பி லைக் செய்தவர்களும் கூட கைது செய்யப்படலாம். இப்படி
ஓரிரு முறை நடந்து விட்டால் மற்றவர்கள் பயந்து ஒதுங்கி விடுவார்கள்.

இதன்போக்கில் இணையப்பரப்பில் அரசியல் ரீதியாக பேசுபவர்களும்,
வினையாற்றுபவர்களும் இல்லாமல் போய்விடுவார்கள். இதற்கு தோதாக “பள்ளி
படிப்பிலேயே சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பது தொடர்பான பாடத்திட்டம்
அறிமுகம் செய்யப்படும்” என்று ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். அதாவது
முகநூலிலோ, பதிவுகளிலோ அரசியல் பிரச்சினைகளை எழுதாமல் கடி ஜோக், சினிமா,
முதலியவற்றை மட்டும் மாணவர்கள் எழுதலாம், இல்லையெனில் கைது செய்யப்படும்
அபாயம் உள்ளது என்று மிரட்டப்படுவார்கள்.

அடுத்து போலீசு இந்த குண்டர் சட்டத்தை சுறுசுறுப்பாகவும் அதிகமாகவும்
பயன்படுத்த வேண்டும் என்று உற்சாகப்படுத்தும் வகையில் “குண்டர் தடுப்பு
சட்டத்தில் வழக்கு பதிவு செய்வதற்கான செலவுத் தொகை ரூ.3 ஆயிரத்தில் இருந்து
ரூ.8ஆயிரமாக உயர்த்தப்படும்” என்றும் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். இனி
ஏட்டையாவுக்கு ஏதாவது பாக்கெட் மணி வேண்டுமென்றால் கூட கடைதெருவில் புதிய
ஜனநாயகம் இதழை படித்துக் கொண்டிருக்கும் ஒருவரை கைது செய்து குண்டாசில்
போடலாம். பணத்துக்கு பணம், பாசிசத்துக்கு பாசிசம் இரண்டும் நிறைவேறும்.

இப்படி மெய்யுலகிலும், மெய் நிகர் உலகிலும் பாசிச ஜெயாவின் போலீஸ்
ராஜ்ஜியம்தான் நடக்கப் போகிறது. அப்படி நடக்கக் கூடாது என்றால் நாம்
இணையத்திலும், இணையத்திற்கு வெளியிலும் போராட வேண்டும். பாசிச ஜெயாவின்
இந்த அடக்குமுறை தர்பாரை வாசகர்களும், பதிவர்களும், முகநூல் – ட்விட்டர்
நண்பர்களும் கடுமையாக கண்டிப்பதோடு இந்த பிரச்சாரத்தை பரந்து பட்ட அளவில்
கொண்டு செல்லுமாறும் தோழமையோடு கோருகிறோம்.
-வினவு-


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» குண்டர் தடுப்புச் சட்டம்: ஆலோசனைக் குழு முன் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம்
» செக்ஸ் இன்ஜினியர் மீது குண்டர் சட்டம்? மின்னணு ஆவணங்கள் தீவிர ஆய்வு
» ரேஷன் அரிசி கடத்தினால் குண்டர் சட்டம் பாயும் : இதுவரை 29 பேரை " உள்ளே' தள்ளியது போலீஸ்
» அழகிரி பிறந்தநாள் கொண்டாட ரூ.50 ஆயிரம் கேட்டு தாக்குதல் – திமுக பகுதி செயலாளர் மீது குண்டர் சட்டம்
» பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் என்கிறது ஜெயலலிதாவின் அரசு...இது ஆபத்தான விஷயமாகவே படுகிறது..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum