TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஆற்றலினால் கருவிகள் செய்வோம்!

3 posters

Go down

ஆற்றலினால் கருவிகள் செய்வோம்! Empty ஆற்றலினால் கருவிகள் செய்வோம்!

Post by ஜனனி Thu Sep 27, 2012 7:33 pm

ஆற்றலினால் கருவிகள் செய்வோம்!

புதுச்சேரி புதுமை!
ஆற்றலினால் கருவிகள் செய்வோம்! Expition-0%281%29

'மின்சாரம் இல்லாத உலகத்தில் எப்படி இருக்கப் போகிறோம்?’ வருங்காலத்தைப் பற்றிய ஒரு சின்னக் கற்பனைஆற்றலினால் கருவிகள் செய்வோம்! Expition-1
செய்து பாருங்கள். ஒரு துளி பெட்ரோல்கூட இல்லை என்றால் என்ன செய்ய
முடியும்? குறைந்து வரும் கனிமவளங்கள், அதிகரிக்கும் உலக வெப்பநிலை என்று
மேடைக்கு மேடை ஏற்கெனவே நிறைய அலசியாகிவிட்டது . இதற்கான விடையும்
அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. புதிய ஆற்றல், புதிய வளங்கள் அல்லது
மாற்றுவளங்கள் வேண்டும் என்பதே அது. அதை ஊக்குவிக்கும் வகையில் புதுச்சேரி
கல்வி இயக்கம் நடத்திய அறிவியல் கண்காட்சி 'ஆற்றல் திருவிழா’ எதிர்காலத்தை
நோக்கிய பார்வையில் பரவசப்படுத்தியது. கிட்டத்தட்ட 60 பள்ளிகளில் இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தன 148 இயங்கு காட்சிப்பொருட்கள். 90 சிறந்த
படைப்புகளில், சின்ன அறிவியல் உலகத்தையே கட்டிஇருந்தார்கள் பள்ளி
மாணவர்கள். 3 முதல் 5-ம் வகுப்புவரை, 200 குழந்தைகளுடன் நிறைந்து இருந்தது
இந்திரா நகரில் இருக்கும் அரசுத் தொடக்கப்பள்ளி.

ஆற்றலினால் கருவிகள் செய்வோம்! Expition-2

ஆற்றலினால் கருவிகள் செய்வோம்! Expition-3

பொதுவாக இந்த மாதிரியான அறிவியல் கண்காட்சிகளில் மாணவர்கள் தங்கள்
படைப்புகளை விளக்க, தெர்மோகோல் போன்ற பிளாஸ்டிக்குகளை உபயோகப்படுத்துவது
வழக்கம். ஆனால், இங்கு முதல்விதியே தெர்மோகோல் உபயோகப்படுத்தக்கூடாது
என்பதுதான்.

அங்கே செயல்பாட்டில் இருந்த சின்னச் சின்ன ஐடியாக்களில் சில, உங்கள் பார்வைக்கு...

'' குட்மார்னிங் சார். ஐ ஆம் லோகேஷ்...'' என்று ஆரம்பித்தான் குண்டு
பாளையம் அரசுத் தொடக்கப்பள்ளி மாணவன். '' பஸ், ட்ரெயின் பயணத்துல
இருக்கிறவங்க மொபைலுக்கு சார்ஜ்போட ரொம்பக் கஷ்டப்படுறாங்க. அவங்களுக்கு
கரன்ட் இல்லாம எப்படி சார்ஜ் போடலாம்னு சொல்றேன். மொபைலுக்கு 6 வோல்ட்டேஜ்
கரன்ட் வேணும். ஒரு சின்ன பேட்டரியில 1 .5 வோல்ட்டேஜ் இருக்கும். அதனால், 4
பேட்டரி எடுத்து சார்ஜர் ஒயர்கூட கனெக்ட் பண்ணுங்க. இப்போ ஈசியா சார்ஜ்
பண்ணிக்கலாம்!'' என்று வியக்கவைத்தான்.

ஆற்றலினால் கருவிகள் செய்வோம்! Expition-4

ஆற்றலினால் கருவிகள் செய்வோம்! Expition-5

அடுத்ததாக மோகன் ஃபெலிக்ஸ்ராஜ், ''வீடு, கல்லூரி, மருத்துவமனை அரசு
அலுவலகங்கள் அனைத்து இடங்களிலும் மின்சாரத்தில் இயங்குகிற நீர் தெளிப்பான்
உபயோகப்படுத்துவாங்க. அதுக்கு மின்சாரம் செலவழிக்காம காற்றினால
இயக்குவதுதான் இந்த ஐடியா. உபயோகம் இல்லாத பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்,
ஒரு பெரிய ஊசியின் முனையில் முக்கோண வடிவ அமைப்பு. அவ்வளவுதான், இதற்கான
செலவு. காற்று வேகமாக வீசும்போது இந்த முக்கோண வடிவம் தண்ணீரை வேகமாகச்
சிதறி அடிக்கவைக்கும் நீர் தெளிப்பான் போல'' என்று விளக்கிக்கொண்டு
இருக்கும்போதே காற்றடிக்க, அழகாக நீர் பீய்ச்சி அடிக்கிறது. மனசெல்லாம்
சந்தோஷச்சாரல் அந்தப் பையனுக்கு!

'பீ... பீ’ என்று பி.வி.சி. பைப்பில் ஊதி விளையாடிக்கொண்டு இருந்த ஜான்
சாலமன், அரசுப்பள்ளி முருகம்பாக்கம் மாணவன். '' வேஸ்ட் ஆகிற பி.வி.சி.
பைப்புகளில் இருந்து இந்த மாதிரியான விளையாட்டுப் பொருட்கள்
செய்து விளையாடலாம்... நான் இதை விளையாட்டாகச் செய்யக்கத்துக்கிட்டு
இன்னிக்கு இதுபோல நிறைய பேருக்குச் செஞ்சு கொடுக்கிறேன்'' என்று உற்சாகமாக
பிசினஸ்மேன் அவதாரம் எடுத்தவன் மீண்டும் 'பீ... பீ...’ என்று ஊதியபடியே
டாட்டா சொன்னான்.

ஆற்றலினால் கருவிகள் செய்வோம்! Expition-6

ஆற்றலினால் கருவிகள் செய்வோம்! Expition-7

கைகளில் நான்கு இயக்கிகளுடன் பிரமாண்டமான 'ஜே.சி.பி'-க்கு, எந்தவித மின்சார உதவியும் இல்லாமல்

பாஸ்கல் விதிப்படி நீர் அழுத்தத்தினால் இயக்கமுடியும் என்று இயக்கியும்
காண்பித்தாள், தேங்காய்த்திட்டு அரசுப்பள்ளி மாணவி பரமேஸ்வரி.

கண்காட்சியில் மாணவர்களே ஆசிரியராக அவதாரம் எடுத்தது அழகோ அழகு.
வகுப்பு அறைக்குள் சின்ன தியேட்டர் மாதிரிவைத்து ஆற்றலின் வகைகளை
விளக்கினார் வெற்றி வெங்கடேஸ்வர தொடக்கப்பள்ளி மாணவி சரண்யா. நிறங்களைப்
பிரிக்கும் சிவப்பு, நீலம், பச்சைக்கான வித்தியாசங்களை மாணவர்களுக்கு எளிய
முறையில் விளக்கினார் மாணவி கேத்ரின். நியூட்டனின் ஆற்றல், அழிவின்மை
விதிகளை விளக்கும்வகையில் 'அபூர்வ சகோதரர்கள்' கமல்ஹாசன் மாதிரி கோலிகுண்டை
வைத்துக்கலக்கினார் இந்திரா நகர் அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும்
மாணவரான அர்ஜூன்.

ஆற்றலினால் கருவிகள் செய்வோம்! Expition-8

பரமபுரியைச் சேர்ந்த சரவணன், 'மாக்ளவ் டிரெயின்' பற்றியும் அதன்
எதிர்கால ஆக்கிரமிப்பு பற்றியும் தெளிவான விரிவுரையுடன், எல்லோருக்கும்
பாடம் எடுத்தார். மின்சாரம், பெட்ரோல், நிலக்கரி உதவியின்றி வெறும்
காந்தசக்தி மட்டும்கொண்டு 600 கி.மீ வேகத்தில் ரயிலை இயக்கமுடியும்
என்பதைக் காந்த சக்தியின் உதவியினால் பென்சிலைக்கொண்டு இவர் செய்து
காட்டியபோது கூடி இருந்த மாணவர் கூட்டம் கைதட்டி ஆர்ப்பரித்தது. இந்த
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த வட்டக் கல்விஅலுவலர் ஹேமாவதியை மனதார வாழ்த்தி,
அங்கிருந்து விடைபெற்றேன்!

கட்டுரை: ரா. ராபின் மார்லர்

படங்கள்: ஆ.நந்த குமார்
நன்றி :http://en.vikatan.com/article.php?aid=24373&sid=691&mid=35
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

ஆற்றலினால் கருவிகள் செய்வோம்! Empty Re: ஆற்றலினால் கருவிகள் செய்வோம்!

Post by KAPILS Thu Sep 27, 2012 9:13 pm

clap clap
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

ஆற்றலினால் கருவிகள் செய்வோம்! Empty Re: ஆற்றலினால் கருவிகள் செய்வோம்!

Post by அருள் Fri Sep 28, 2012 9:57 am

ஆற்றலினால் கருவிகள் செய்வோம்! 135634 ஆற்றலினால் கருவிகள் செய்வோம்! 135634
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

ஆற்றலினால் கருவிகள் செய்வோம்! Empty Re: ஆற்றலினால் கருவிகள் செய்வோம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum