TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Today at 7:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இந்திய "சுழலில்' சிக்கியது நியூசி., * அஷ்வின், ஓஜா அபாரம்

Go down

இந்திய "சுழலில்' சிக்கியது நியூசி., * அஷ்வின், ஓஜா அபாரம் Empty இந்திய "சுழலில்' சிக்கியது நியூசி., * அஷ்வின், ஓஜா அபாரம்

Post by ஜனனி Sat Aug 25, 2012 10:00 am











இந்திய "சுழலில்' சிக்கியது நியூசி., * அஷ்வின், ஓஜா அபாரம் Dhoni-10-336



ஐதராபாத்: ஐதராபாத்
டெஸ்டில் இந்திய பவுலர்கள் அசத்தினர். அஷ்வின், பிரக்யான் ஓஜாவின்
"சுழலில்' சிக்கிய நியூசிலாந்து அணி "பாலோ ஆனை' தவிர்க்க போராடி வருகிறது.
இந்தியா
வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்
பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் சர்வதேச மைதானத்தில்
நடக்கிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில், 5
விக்கெட்டுக்கு 307 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா (119), தோனி (29)
அவுட்டாகாமல் இருந்தனர்.
தோனி அரைசதம்:
நேற்று
இரண்டாம் நாள் ஆட்டம், மழை காரணமாக 26 நிமிடம் தாமதமாக துவங்கியது. புஜாரா,
தோனி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பவுல்ட் ஓவரில் இரு
பவுண்டரிகள் அடித்த புஜாரா, பிரேஸ்வெல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி, 150
ரன்களை கடந்தார். இவருக்கு நல்ல "கம்பெனி' கொடுத்த தோனி, சர்வதேச டெஸ்ட்
அரங்கில் 25 வது அரைசதம் கடந்தார். ஆறாவது விக்கெட்டுக்கு 127 ரன்கள்
சேர்த்த நிலையில், சிக்சருக்கு ஆசைப்பட்ட புஜாரா, 159 ரன்கள் எடுத்த போது,
ஜீதன் படேல் பந்தில் சிக்கினார். இவரது "சுழலில்' தோனியும் (73)
அவுட்டானார். ஜாகிர் கான் "டக்' அவுட்டானார். அஷ்வின் 37 ரன்கள் எடுத்து
ஆறுதல் தந்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 438 ரன்களுக்கு ஆல்
அவுட்டானது.
நியூசிலாந்து சார்பில் ஜீதன் படேல் 4, பவுல்ட் 3 விக்கெட் வீழ்த்தினர்.
அஷ்வின் அசத்தல்:
முதல்
இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணிக்கு, பிரண்டன் மெக்கலம் அதிரடியாக
ரன்கள் சேர்த்தார். இம்மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. 27
பந்தில் 22 ரன்கள் எடுத்த மெக்கலம், ஓஜா சுழலில் வீழ்ந்தார்.
இதன்பின்,
தன்பங்கிற்கு பந்தை அசத்தலாக சுழற்றத் துவங்கினார் அஷ்வின். முதலில்
கப்டிலை (2) அவுட்டாக்கிய இவர், பின் கேப்டன் ராஸ் டெய்லரையும் (2)
வெளியேற்றினார். ஓஜா ஓவரில் தொடர்ந்து இரு பவுண்டரி அடித்த பிளைனும் (16),
அஷ்வின் சுழலில் சிக்கினார்.
நியூசிலாந்து அணி 55 ரன்னுக்கு, 4
விக்கெட்டுகளை இழந்து திணறியது. வில்லியம்சன், பிராங்க்ளின் இணைந்து,
விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தப் போராடினர். ஐந்தாவது விக்கெட்டுக்கு
44 ரன்கள் சேர்த்த போது, வில்லியம்சனை (32) வெளியேற்றி, மீண்டும் சிக்கல்
கொடுத்தார் ஓஜா.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், நியூசிலாந்து
அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்து தடுமாறியது.
பிராங்க்ளின் (31), வான் விக் (0) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா
சார்பில் சுழலில் கலக்கிய அஷ்வின் 3, பிரக்யான் ஓஜா 2 விக்கெட்
வீழ்த்தினர்.
"பாலோ-ஆன்' தவிர்க்குமா:
"டாப்
ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் அவுட்டான நிலையில், நியூசிலாந்து அணி முதல்
இன்னிங்சில் 332 ரன்கள் பின்தங்கியுள்ளது. கைவசம் 5 விக்கெட்டுகள் மட்டுமே
உள்ள நிலையில், "பாலோ-ஆனை' தவிர்க்க, இன்னும் 133 ரன்கள் தேவைப்படுவதால்,
நியூசிலாந்து அணி மீள்வது கடினம் தான்.
தப்பிப்பிழைத்த கப்டில்
நேற்று
முதல் இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணிக்கு, முதல் ஓவரில் அதிர்ஷ்டம்
அடித்தது. ஜாகிர் கான் வீசிய ஐந்தாவது பந்தை, கப்டில் எதிர்கொண்டார்.
வேகமாக வந்த பந்து "ஆப் ஸ்டம்பின்' மேல் பகுதியில் மோதி, தோனியிடம்
சென்றது. ஆனால், "பெயில்ஸ்' கீழே விழாததால், கப்டில் தப்பிப் பிழைத்தார்.
"ஸ்னிக்கோ மீட்டரிலும்' பந்து "ஸ்டம்சில்' மோதுவது தெளிவாகத் தெரிந்தது.
கோஹ்லி அபாரம்
டிராவிட்,
லட்சுமண் ஓய்வு பெற்ற நிலையில், "சிலிப்' பகுதியில் யார் "பீல்டிங்'
செய்யப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. நேற்று சேவக், ரெய்னா,
கோஹ்லி ஆகியோர் முறையே முதல் மூன்று "சிலிப்' பகுதியில் "பீல்டிங்'
செய்தனர். இதில் அசத்திய கோஹ்லி, மெக்கலம், ராஸ் டெய்லர், கப்டில் ஆகிய
மூவரையும் "கேட்ச்' செய்து, "சீனியர்கள்' இல்லாத குறையை தீர்த்து
வைத்தார்.
அம்பயர் தீர்ப்பு சரியா
அஷ்வின்
ஓவரில் ராஸ் டெய்லர் அடித்த பந்தை, "ஷார்ட் லெக்' பகுதியில் இருந்த கோஹ்லி
"கேட்ச்' செய்தார். இதை ஐந்து நிமிடமாக "ரீப்ளேயில்' பார்த்தும், உறுதி
செய்ய முடியவில்லை. சந்தேகத்தின் பலன் பேட்ஸ்மேனுக்கு தரவேண்டும் என்ற விதி
உள்ள நிலையில், பீல்டிங் செய்த அணிக்கு சாதகமாக "டிவி' அம்பயர் வினீத்
குல்கர்னி (இந்தியா) வழங்கினார். இது சரியா.
விரைவில் வீழ்த்துவோம்
அஷ்வின்
கூறுகையில்,"" நியூசிலாந்து அணியை விரைவில் "ஆல் அவுட்' செய்ய
முயற்சிப்போம். "பாலோ-ஆன்' கொடுக்க முயற்சிப்போம். அதேநேரம், வானம்
மேகமூட்டமாக உள்ள நிலையில், ஆடுகளம் எப்படி ஒத்துழைக்கும் என்பதைப்
பொறுத்து இது அமையும்,'' என்றார்.
"சூப்பர்' கேப்டன்
நியூசிலாந்துக்கு
எதிரான முதல் டெஸ்டில் பொறுப்பாக ஆடிய இந்திய கேப்டன் தோனி 73 ரன்கள்
எடுத்தார். இது டெஸ்ட் அரங்கில் இவரது 25வது அரைசதம். தவிர கேப்டனாக 20வது
அரைசதம் (38 போட்டி). இதன்மூலம் டெஸ்ட் வரலாற்றில் அதிக அரைசதம் அடித்த
இந்திய கேப்டன்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.
முதலிடத்தில் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் (25 அரைசதம், 47 போட்டி)
உள்ளார். மூன்றாவது இடத்தை தலா 18 அரைசதம் அடித்த அசாருதின் (47 போட்டி),
கங்குலி (49 போட்டி), நவாப் பட்டோடி (40 போட்டி) ஆகியோர் பகிர்ந்துள்ளனர்.
புஜாரா அபாரம்
முதல்
இன்னிங்சில் 159 ரன்கள் எடுத்த புஜாரா, டெஸ்ட் அரங்கில் நியூசிலாந்துக்கு
எதிராக மூன்றாவது வீரராக களமிறங்கி அதிக ரன் எடுத்த இந்திய பேட்ஸ்மேன்கள்
வரிசையில் ஐந்தாவது இடம் பிடித்தார். முதல் நான்கு இடங்களில் பாலி உம்ரிகர்
(223 ரன்கள்), டிராவிட் (222, 191, 190 ரன்கள்) ஆகியோர் உள்ளனர்.
*
தவிர இது, டெஸ்ட் வரலாற்றில், இந்திய வீரர் ஒருவர், நியூசிலாந்துக்கு
எதிராக மூன்றாவது வீரராக களமிறங்கி 150 அல்லது அதற்கு மேல் ரன் சேர்ப்பது
16வது முறை. முதன்முறையாக 1956ல் சென்னையில் நடந்த டெஸ்டில் முன்னாள்
இந்திய வீரர் வினோ மன்கத் 231 ரன்கள் எடுத்தார்.
சரியான ஜோடி
கேப்டன்
தோனி, புஜாரா இணைந்து ஆறாவது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்தனர்.
இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் நியூசிலாந்துக்கு எதிராக 6வது விக்கெட்டுக்கு
அதிக ரன் சேர்த்த இந்திய ஜோடிகள் வரிசையில் மூன்றாவது இடம் பிடித்தனர்.
முதலிரண்டு இடத்தில் ஹனுமந்த் சிங்-சர்தேசாய் (193* ரன்கள், 1965, மும்பை),
தோனி-டிராவிட் (193 ரன்கள், 2010, நாக்பூர்) ஜோடிகள் உள்ளன.
இரண்டாவது அதிகபட்சம்
நியூசிலாந்துக்கு
எதிராக முதல் இன்னிங்சில் இந்திய அணி 438 ரன்கள் எடுத்தது. இதன்மூலம்
ஐதராபாத் ராஜிவ் தேசிய மைதானத்தில் இந்திய அணி தனது இரண்டாவது அதிகபட்ச
ஸ்கோரை பதிவு செய்தது. முன்னதாக 2010ல் நியூசிலாந்துக்கு எதிராக இங்கு
நடந்த போட்டியில் இந்திய அணி 472 ரன்கள் எடுத்தது.
"டக்' ஜாகிர்
மோசமான
ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர் ஜாகிர் கான், நியூசிலாந்துக்கு
எதிராக ஐந்தாவது முறையாக "டக்-அவுட்' ஆனார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில்
அதிக "டக்-அவுட்' ஆன இந்திய வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார்.
இதுவரை இவர் 84 டெஸ்டில் 26 முறை ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகி
உள்ளார். இவரை தொடர்ந்து சந்திரசேகர் (23 "டக்-அவுட்'), பிஷன் சிங் பேடி
(20), ஹர்பஜன் சிங் (18), அனில் கும்ளே (17) ஆகியோர் உள்ளனர்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» புஜாரா ஜோர்! * இரட்டை சதம் விளாசினார் * இந்திய "சுழலில்' சிக்கியது இங்கிலாந்து
» வெற்றியை நோக்கி இந்தியா : அஷ்வின் மீண்டும் அசத்தல்: சுழலில் சரிந்தது ஆஸி
» இளம் இந்திய வீரர்களுக்கு நியூசி., அணியில் வாய்ப்பு
» நியூசி., புது அவதாரம்: தெ.ஆப்ரிக்கா சேதாரம்! * ஜேக்கப் ஓரம் அபாரம்
» பாக்., அபார வெற்றி! * அப்ரிதி சுழலில் சிக்கியது கென்யா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum