TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கொள்கை பிரகடனம்: வெளியிட்டது அன்னா ஹசாரே குழு

Go down

கொள்கை பிரகடனம்: வெளியிட்டது அன்னா ஹசாரே குழு Empty கொள்கை பிரகடனம்: வெளியிட்டது அன்னா ஹசாரே குழு

Post by அருள் Sun Aug 05, 2012 8:02 am

"ஜனநாயகம் என்ற பெயரில், நாட்டிலுள்ள எண்ணற்ற அரசியல் கட்சிகள், ஒரு சில
குடும்பத்தினரின் பிடிக்குள் தான் இருக்கின்றன. சிறிய குழுக்களே அதிகார
மையங்களாக இயங்குகின்றன. உண்மையான ஜனநாயகம் நிறைய கட்சிகளில் இல்லை. அந்த
நிலையை மாற்ற நினைக்கிறோம். அதற்காக, புதிதாக கட்சி ஆரம்பித்துதான் மாற்று
அரசியலை செய்ய வேண்டும் என்பதில்லை. இப்போதைக்கு ஆரம்ப கட்ட நிலையில் தான்
உள்ளோம்' என, அன்னா ஹசாரே குழு அறிவித்து உள்ளது.

டில்லி ஜந்தர் மந்தரில், உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த அன்னா ஹசாரே
குழுவினர், நேற்று முன்தினம் தங்களின் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டனர்.
உண்ணாவிரதத்தின் இறுதியாக பேசிய அன்னா ஹசாரே மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால்
ஆகியோர், அரசியலுக்கு வருவது என முடிவு எடுத்திருப்பதாக அறிவித்தனர்.

விளக்க அறிக்கை: இந்நிலையில், தங்களது அரசியல் பிரவேசம்
குறித்து, அந்த குழுவின் சார்பில், விரிவான விளக்க அறிக்கையும் நேற்று
வெளியிடப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; தற்போதுள்ள
அரசியல் சூழ்நிலையில், மாற்று அரசியல் சக்தி உருவாக வேண்டும். அந்த சக்தியை
உருவாக்குவதற்கு, தனியாக அரசியல் கட்சியை ஆரம்பித்து தான் ஆக வேண்டும்
என்கிற கட்டாயம் இல்லை. அரசியல் கட்சி ஆரம்பிப்பது என்ற யோசனையெல்லாம் மிக
மிக ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது.

கதைக்கு உதவாது: இப்போதுள்ள சூழ்நிலையில், நாட்டில் உள்ள அரசியல்
கட்சிகள் பெரும்பாலானவை கதைக்கு உதவாத வகையில் தான் உள்ளன. அதிகாரங்கள்
எல்லாம் ஒரே இடத்தில் குவிந்துள்ளன. எந்த கட்சியிலும் வெளிப்படையான
அணுகுமுறை இல்லை. நாட்டிலுள்ள மிக முக்கிய கட்சிகள் எல்லாம், ஒரு சில
குடும்பங்களின் பிடிக்குள் தான் இருக்கின்றன. ஜனநாயகம் என்ற பெயரில்,
அவற்றில் குடும்ப ஆதிக்கம் தான் நடக்கிறது. மிகச்சிறிய குழுக்கள் தான்,
அதிகார மையங்களாக இயங்குகின்றன. உண்மையான ஜனநாயகம் என்பது மருந்துக்குக்
கூட அந்த கட்சிகளில் கிடையாது. சட்ட விரோதமாக அதிக அளவில் பணத்தை, எல்லா
கட்சிகளுமே சேர்த்து வைத்துள்ளன. மக்களுக்கு இந்த உண்மைகள் தெரியும்.
இவர்களை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும், வேறு வழியின்றி
ஓட்டுப்போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் ஊழலை எதிர்த்து இப்போது
தான் என்றில்லை. ஏற்கனவே நிறைய இயக்கங்கள் தோன்றி, போராடியும் உள்ளன. அவை
என்ன சாதித்தன என்பதையும், எங்கெல்லாம் சறுக்கின என்பதையும், நாங்கள்
நிச்சயம் ஒரு பாடமாக எடுத்துக் கொள்வோம். அந்த இயக்கங்கள் ஏன் சாதிக்க
முடியவில்லை என்ற காரணங்கள் தான், எங்களுக்கு மிக தெளிவை தரும் முக்கிய
மைல்கற்களாக இருக்கும். அவற்றை களைய முழு முயற்சி எடுப்போம்.

கடினமான பயணம்: இது மிகவும் கடினமான பயணம் தான். இந்த பயணத்தில்
எத்தனை பெரிய சிரமங்கள் இருக்கும் என்பதெல்லாம், எங்களுக்கு முழுவதுமாகவே
தெரியும். இதுபோன்ற போராட்டங்களில் நினைத்தவுடன் தயாராகும், இன்ஸ்டன்ட்
காபியை போல வெற்றியை பெற்றுவிட முடியாது. தவிர, நாங்கள் எடுத்துள்ள
முயற்சியில், வெற்றி, தோல்வி என்பதை எல்லாம் கருத்தில் கொள்வது
அவசியமற்றது. இப்போதைய சூழ்நிலையில், எங்களது எதிர்கால மாற்று அரசியலுக்கான
கொள்கைகள் என்று சிலவற்றை சுருக்கமாக வைத்து உள்ளோம். எங்களது சுருக்கமான
கொள்கையின்படி, ஜனநாயகம் என்பது மக்களுக்கு உரியதாக இருக்க வேண்டும். இறுதி
முடிவு மக்களுடையதாகவே இருக்க வேண்டும். அரசின் அதிகாரம் என்பது, மக்களின்
நலன்களுக்காக பயன்படுத்தப்படுவதாக இருக்க வேண்டும். அனைவருக்கும் சமமான
உரிமைகள் அளிக்கப்படும். எல்லா தரப்பு மக்களுக்கும் பயன்படும் வகையில்,
அதிகாரப்பகிர்வு இருக்கும். சமூக நீதி என்பது தான் உயிர் மூச்சு. கடைக்கோடி
மனிதனும் முதலிடத்திற்கு வருவதாக அமையும். ஜாதி அடிப்படையில் அமைவதாக
இருக்காது.

முக்கியத்துவம்: பல்வேறு வேற்றுமைகளை கொண்ட நாடாக இந்தியா
திகழ்வதால், நாட்டின் பன்முகத்தன்மை காப்பாற்றப்படும். வேற்றுமையில்
ஒற்றுமை என்பது, உண்மையான வகையில் நிலைநாட்டப்படும். சிறுபான்மை மக்களின்
உரிமைகள் அனைத்துமே முழுஅளவில் பாதுகாக்கப்படும். அவர்களுக்கு உரிய
முக்கியத்துவம் அளிக்கப்படும். வெளியுறவு கொள்கையை பொறுத்தவரை
உள்நாட்டிலும் சரி, அண்டை நாடுகளுடனும் சரி, அமைதியான அணுகுமுறையே
மேற்கொள்ளப்படும். இந்த கொள்கைகள் அனைத்தும் மிகச்சுருக்கமான ஆரம்ப
கட்டத்தில் அமைந்தவை மட்டுமே. எங்களது போராட்டப் பயணம் தொடர தொடர இவை
அனைத்துமே, வரும் நாட்களில் விரிவான முறையிலும், உறுதியான வகையிலும், பெரிய
அளவிலும் முன்னெடுத்துச் செல்லப்படும். இவ்வாறு அறிக்கையில், அன்னா ஹசாரே
குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்க: எங்களது முயற்சியின் முதல்
கட்டமாக, நாடு முழுவதும் சுராஜ் யாத்திரை என்ற பெயரில், சுற்றுப் பயணம்
மேற்கொள்ள உள்ளோம். அடித்தட்டு மக்களை நேரடியாகவே சந்திக்கப் போகிறோம்.
எத்தகைய மாற்றத்தை விரும்புகின்றனர் என்பதை, அவர்கள் மூலமாகவே தெரிந்து
கொள்வோம். இந்த எங்களது பயணத்தில் முழுக்க முழுக்க, இளைய சமுதாயத்தினரைத்
தான் நம்பி உள்ளோம். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் என, முக்கிய இடங்களுக்கு
எல்லாம் சென்று பேசுவோம். அவர்களது கருத்துகளை கேட்போம். ஊழலற்ற
அரசாங்கத்தை இந்தியாவில் அமைக்கவும், அதற்குரிய அரசியல் சக்தியை
உருவாக்கவும், அவர்கள் தெரிவிக்கப்போகும் அந்த கருத்துகள் தான் இறுதியானவை.
தவிர, இந்த நெடிய போராட்டப் பயணத்தில் பங்கெடுக்கவும், தங்களது கருத்துகளை
தெரிவிக்கவும் விரும்புவோர் [You must be registered and logged in to see this link.]
என்ற முகவரிக்கு இ-மெயில் செய்யலாம். தங்களது கருத்துகளை அஞ்சல் வழியாக
தெரிவிக்க விரும்புவோர் A119, Kaushambi, Ghaziabad, U.P. 201010 என்ற
முகவரிக்கு அனுப்பலாம்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum