TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா?

2 posters

Go down

ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? Empty ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா?

Post by மாலதி Wed Jun 13, 2012 12:44 pm

ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? 20111118-VIRU-2
The Sri Lankan government declares a limited ceasefire from 1 to 3
February 2009 to allow civilians to leave, but the LTTE restricts the
number of people allowed to depart and uses the lull to launch a counter
strike. At the same time, two foreign nations crafted a plan on a
government guaranteed amnesty for LTTE cadres other than the top
leadership.



நார்வேயின் Pawns of Peace அறிக்கையில் வெளியாகியுள்ள சில விஷயங்கள்
ஏற்படுத்திய சர்ச்சைகள் ஓயவில்லை. மாறாக, முன்பைவிட அதிகமாகின்றன. சர்வதேச
அரசியல் நகர்வுகள் பற்றிய அன்டர்ஸ்டான்டிங் இருந்தால், இந்த அறிக்கை
இவ்வளவு நாட்களின் பின் இப்போது ஏன் வெளியிடப்படுகின்றது என்பது சுலபமாக
புரியும்.

ஸ்ரீலங்காவில் உள்ள பிரதான தமிழ் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின்
குழு ஒன்று திடீரென அமெரிக்காவரை அழைக்கப்பட்டபோது, அதைத் தொடர்ந்து வேறு
சில விவகாரங்களும் கிளப்பி விடப்படும் என்பதை சுலபமாக ஊகிக்கலாம்.
ராஜதந்திர அரசியலில் அதுதான் வழமை. அப்படி இந்த நேரத்தில் வெளிவர
வைக்கப்பட்டதுதான் நார்வே அறிக்கை.

அந்த விதத்தில், அறிக்கை வெளியிடப்பட்ட டைமிங், அறிக்கை
வெளியிட்டவர்களுக்கு (அல்லது வெளியிட வைத்தவர்களுக்கு) வெற்றிதான்! காரணம்,
அவர்கள் நினைத்த திசையில்தான் விவகாரம் சுலபமாக செல்கிறது.

நார்வே வெளியுறவு அமைச்சில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மற்றும், இந்த
விஷயத்தில் டீல் பண்ணிய முக்கியஸ்தர்களின் நேரடி பேட்டிகள் ஆகியவற்றில்
இருந்து தயாரிக்கப்பட்டது இந்த Pawns of Peace அறிக்கை. கடந்தவாரம்
வெளியாகியிருந்த இதிலுள்ள சில பகுதிகள், ஸ்ரீலங்காவில் யுத்தம் நடைபெற்ற
இறுதி நாட்களில் இந்தியா மற்றும் தமிழகத்தில் நடந்த சில விஷயங்கள் பற்றிக்
குறிப்பிடுகின்றன.

அறிக்கையிலுள்ள இந்தியா தொடர்பான பகுதிகளே சர்ச்சைக்கு காரணம். அந்தப்
பகுதிகள் என்ன சொல்கின்றன என்பதையும், நாம் தெரிந்து கொண்ட விஷயங்களையும்
கலந்து தருகிறோம்.

ஸ்ரீலங்காவில் யுத்தம் இறுதிக் கட்டத்துக்கு வந்து விட்ட நேரத்தில்,
புலிகள் தோற்கலாம் என்ற நிலை கிளிநொச்சி வீழ்ந்த உடனேயே வந்துவிட்டது.
உள்விஷயம் அறிந்தவர்களுக்கு அது நன்றாகவே தெரியும். ஆனால், அதை வெளியே
சொல்ல தமிழர் தரப்பில் யாரும் தயாராக இல்லை. சொன்னால் துரோகி பட்டம்
கிடைக்கும் என்பது மிகமிக நன்றாகவே தெரிந்ததால், ஒதுங்கி வேடிக்கை
பார்த்தார்கள்.

ஆனால், வெளிநாடுகள் சொன்னார்கள். சில நாடுகள் யுத்தத்தை ஏற்கனவே நடந்த
அழிவுகளோடு நிறுத்திக்கொள்ள சீரியசாகவே சில முயற்சிகளைச் செய்தார்கள்.
ஸ்ரீலங்கா அரசுக்கும் சில அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.

வெளிநாட்டு ராஜதந்திரிகள் பலர் விடுதலைப்புலிகள் தலைமையை நன்றாகவே
புரிந்து கொண்டிருந்தார்கள். “சொல்லிப் பார்க்கலாம். கேட்டால் சரி,
இல்லாவிட்டால் முழுமையான அழிவுவரை போவதற்கு விட்டுவிடலாம்” என்பதே இந்த
விவகாரத்துடன் சம்மந்தப்பட்ட முக்கிய ராஜதந்திரிகளின் மென்டாலிடியாக
இருந்தது.

வெளிநாட்டு அழுத்தங்கள் காரணமாக, 2009-ம் ஆண்டு, பிப்ரவரி 1-ம் தேதி,
ஸ்ரீலங்கா அரசு இரு நாட்களுக்கான (3-ம் தேதி வரை) யுத்த நிறுத்தம் ஒன்றை
அறிவித்தது. இந்த இரு தினங்களும் யுத்தம் நடைபெற்ற இடத்தில் (புலிகளின்
கட்டுப்பாட்டில் இருந்த பகுதி) இருந்த பொதுமக்கள், அரசுக் கட்டுப்பாட்டு
பகுதிக்குள் செல்லலாம் என்ற அறிவிப்பு வெளியாகியது.

இந்த தேதிதான் பிரேக்கிங் பாயின்ட். இந்த இடத்திலிருந்து போராட்டத்தின்
போக்கை திருப்பியிருந்தால், கொல்லப்பட்ட பலர், போராளிகள், பொதுமக்கள்,
புலிகளின் முக்கியஸ்தர்கள் உட்பட இன்று உயிருடன் இருந்திருப்பார்கள்.

ஆனால், விடுதலைப் புலிகள் இயக்கம், மக்கள் தமது கட்டுப்பாட்டுப்
பகுதியில் இருந்து வெளியேறுவதை அனுமதிக்கவில்லை. அன்றைய யுத்த நிலைமையைப்
பொறுத்தவரை மக்களை வெளியேற அனுமதிப்பதும், புலிகள் தோற்பதும் ஒன்றுதான்.
மக்கள் வெளியேறி விட்டால், யுத்தம் 3 மணி நேரத்தில் முடிந்திருக்கும்.

பிப்ரவரி 3-ம் தேதி, உதவி வழங்கும் நாடுகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
பப்ளிக் ஸ்டேட்மென்ட் பாணியில் விடப்பட்ட இந்த அறிக்கையில்,
விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை கீழே வைக்குமாறு கோரப்பட்டிருந்தது.
புலிகளால் இனியும் தாக்குப்பிடிக்க முடியாது, இருப்பவர்களின் உயிர்களையாவது
காப்பாற்றுங்கள் என்பதே அந்த அறிக்கை கூறிய உட்கருத்து.

ஆனால், புலிகள் இயக்கம் இந்த வேண்டுகோளுக்கு செவிசாய்க்கவில்லை.

இந்தக் கட்டத்தில், வெளிநாடுகள் ஒதுங்கத் தொடங்கின. (“சொல்லிப்
பார்க்கலாம். கேட்டால் சரி, இல்லாவிட்டால் முழுமையான அழிவுவரை போவதற்கு
விட்டுவிடலாம்”)

எல்லோரும் கைவிடத் தொடங்குகிறார்கள் என்பது புரியத் தொடங்கவே, பிப்ரவரி
24-ம் தேதி, விடுதலைப் புலிகள் இயக்கம் வெளிநாடுகளுக்கு கடிதங்களை அனுப்பத்
தொடங்கியது. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான், நார்வே ஆகியவற்றுக்கு
அனுப்பப்பட்ட கடிதங்களில், யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்பாடு செய்து
கொடுங்கள் என்று கோரியிருந்தது புலிகள் இயக்கம்.

ஆனால், உத்தேச யுத்த நிறுத்தம் குறித்து புலிகள், தமது தரப்பிலிருந்து
விபரமான உறுதி மொழி எதையும் அந்தக் கடிதங்களில் தரவில்லை. பொதுவாகவே
இப்படியான விவகாரங்கள், “நாங்கள் பாதிவழி வருகிறோம். நீங்கள் பாதிவழி
வாருங்கள்” என்ற பாணியில் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும்.

புலிகள் வெளிநாடுகளுக்கு அனுப்பிய கடிதங்களில், வெளிநாடுகள் ஏற்கனவே
கோரியிருந்தபடி ஆயுதங்களை கீழே வைக்கும் முடிவோ, மக்களை வெளியே அனுப்பும்
முடிவோ இல்லை. அதனால், இந்தக் கடிதங்கள் புலிகளை எந்த விதத்திலும்
காப்பாற்றவில்லை.

இந்தக் கடிதங்களின் விபரங்கள் ஸ்ரீலங்கா அரசுக்கு தெரியவந்தபோது,
“நடைமுறைக்கு ஒத்துவராத யுத்த நிறுத்தத்துக்கான பிரார்த்தனைகள்” என்றனர்.
இந்தக் கட்டத்திலும் வெளிநாட்டு அரசுகள் சில தொடர்ந்தும் முயற்சிகள்
செய்தன. ஆயுதங்களை கீழே வைக்குமாறு புலிகளுக்கு வேண்டுகோள் விடுத்த வண்ணம்
இருந்தன.

இப்படியான நிலையில் இரு நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிட முடிவு
செய்தன. நார்வேயும், அமெரிக்காவும் இந்த விவகாரம் குறித்து தமக்கிடையே
பேசத் தொடங்கியன.

“பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தடுப்பதற்கு, ஒரே வழிதான் இருக்கின்றது,
புலிகள் ஏதோ ஒரு விதத்தில் சரணடைய வேண்டும்” என்பதே இந்தப் பேச்சின்
அடிப்படை விஷயமாக இருந்தது.

அமெரிக்க-நார்வே பேச்சுக்கள், இந்த யுத்தத்தை சில வழிமுறைகளை கையாள்வதன்
மூலம் முடிவுக்கு கொண்டுவரலாம் என்ற ரீதியில் இருந்தன. 4 வழிமுறைகள்
பரிசீலனையில் இருந்தன.

1) விடுதலைப் புலிகள் அமைப்பில் உச்ச தலைமை (பிரபாகரன்) தவிர்ந்த மற்றைய
போராளிகள் சரணடைந்தால் பொது மன்னிப்பு உத்தரவாதத்தை ஸ்ரீலங்காவிடம்
இருந்து பெறுவது.

2) விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களை ஸ்ரீலங்கா ராணுவத்திடம் ஒப்படைக்காமல் ஐ.நா.விடம் ஒப்படைப்பது.

3) புலிகளின் போராளிகள் ஸ்ரீலங்கா ராணுவத்திடம் சரணடையாமல், ஐ.நா. அல்லது, ரெட்-கிராஸிடம் சரணடைவது.

4) அமெரிக்கா, நார்வே உட்பட உதவி நாடுகள் பொதுமக்களின் நலன்களைக்
கவனிப்பது, மற்றும் ஸ்ரீலங்காவில் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஒன்றைக்
காண்பது.

இந்த வழிமுறைகளை நடைமுறைப் படுத்துவதற்காக சரணடைதல் நடைபெறும் நேரத்தில்
சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் அந்த இடத்தில் இருப்பதற்கான
முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.

அந்த முன்னேற்பாடுகளில், சரணடையும் நேரத்தில் அந்த இடத்தில்
அனைத்தையும் கவனிக்கும் பார்வையாளர்களாக இரு நாடுகள் இருப்பது என முடிவு
செய்யப்பட்டது. அந்த இரு நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இருப்பது எனவும்,
2-வது நாடாக இந்தியாவை அழைத்துக் கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த ஏற்பாடுகள் குறித்து நோர்வே, ஸ்ரீலங்கா அரசுக்கும் அறிவித்ததில்,
சாதகமான சிக்னல்கள் கிடைத்தன. இது நடைபெற்ற காலப்பகுதியில் (யுத்தம்
முடிவதற்கு இரண்டரை மாதங்கள் இருந்த நிலை) புலிகள் சரணடைவதை ஏற்றுக்
கொள்ளும் நிலையில் ஸ்ரீலங்கா அரசும் இருப்பதாகவே நோர்வேக்கு தெரியவந்தது.
ஆனால், ஐ.நா. இதில் காட்சிக்குள் வருவதை ஸ்ரீலங்கா அரசு விரும்பவில்லை
என்றும் தெரிந்தது.

விடுதலைப்புலிகள் இந்த ஏற்பாட்டுக்கு சம்மதிப்பார்கள் என நோர்வே
நம்பியது. அதற்கு என்ன காரணம்? சிறிய நிலப்பரப்பில் ஸ்ரீலங்கா ராணுவம்
முற்றுகையிட்டிருக்க, தோல்வியடையும் நிலையில் புலிகள் இருந்ததால்,
இப்படியொரு ஏற்பாட்டை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நோர்வே நம்பியது.

இந்த திட்டம் தொடர்பாக வெவ்வேறு தரப்புகளுடன் பேசியதன்மூலம், புலிகளின்
முக்கியஸ்தர்களை என்ன செய்வது என்ற விஷயத்தில் ஒரு யோசனை இருந்தது. யுத்தம்
நடைபெற்ற வன்னியில் இருந்து கொழும்புக்கு புலிகளின் முக்கியஸ்தர்களை
அழைத்துச் செல்வது எனவும், கொழும்பில் அவர்களது நலன்களுக்கு சர்வதேச
உத்தரவாதம் கொடுப்பது என்பதுமே அந்த முடிவு.

இதை மற்றொரு விதத்தில் சொன்னால், புலிகளின் முக்கியஸ்தர்களை வெளிநாட்டு
பாதுகாப்பு உத்தரவாதத்துடன் கொழும்பில் வைத்திருப்பது இந்திய அமைதிப்படை
ஸ்ரீலங்காவில் இருந்து வெளியேறியபோது, அன்றைய வடக்கு-கிழக்கு முதல்வர்
வரதராஜ பெருமாளுக்கு இந்தியா கொடுத்த உத்தரவாதம் போன்றது இது.

இந்தியா வழங்கிய பாதுகாப்புடன் வரதராஜபெருமாள் இந்தியாவில் தங்க
வைக்கப்பட்டார். இன்றும் இந்தியாவில் வசிக்கிறார். அதேபோல புலிகளின்
முக்கியஸ்தர்களை கொழும்பில் தங்க வைப்பதற்கான திட்டம் இது.

ஒரு விஷயத்தைக் கவனியுங்கள். இது நடைபெற்ற காலப்பகுதியில் (பிப்ரவரி
கடைசி வாரம்) ராணுவத்தினால் முற்றுகையிடப்பட்ட பகுதிக்குள் புலிகளின்
முக்கியஸ்தர்கள் பலர் (தளபதிகள், பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள்) உயிருடன்
இருந்தார்கள். அவர்களை கொழும்பில் வெளிநாட்டு பாதுகாப்பு உத்தரவாதத்துடன்
வைத்திருப்பதற்கான திட்டம் இது.

அமெரிக்க-நார்வே திட்டம் இந்த அளவுக்கு வந்துவிட்ட நிலைமையில்தான்
புலிகளின் சார்பில் கே.பி. என்று அறியப்பட்ட குமரன் பத்மநாதன் அல்லது
செல்வராசா பத்மநாதனுடன் இந்த ஏற்பாடு பற்றி மேலும் விவாதிக்க விரும்பியது
நார்வே. அப்போது மலேசியாவில் தங்கியிருந்த கே.பி.-யுடன் பிப்ரவரி 26-ம்
தேதி நார்வே அதிகாரிகள் சந்தித்து இதுபற்றிப் பேசினர்.

புலிகளின் சார்பில் பேசுவதற்காக நார்வே ஏன் கே.பி.-யை அணுக வேண்டும்?
அமெரிக்க-நார்வே திட்டம் கே.பி.-யை சந்தித்தபின் எப்படி மாறியது? கே.பி.
இதை ஹான்டில் பண்ணியது எப்படி? அமெரிக்கா என்ன உறுதிமொழி கொடுத்தது?
புலிகளின் முக்கியஸ்தர்களை அழைத்துச் செல்ல திரிகோணமலை துறைமுகத்துக்கு
கப்பல் வருவதாக இருந்த கதை உண்மையா? அதன் பின்னணி என்ன?
தேங்க்ஸ்:http://viruvirupu.com/category/2-investigation/1-investigation-articles/


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? Empty Re: ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா?

Post by மாலதி Wed Jun 13, 2012 12:47 pm

ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? 20111120-VIRU-4ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா?

நார்வேயும் அமெரிக்காவும் புலிகளை ஆயுதங்களை கீழே வைக்கச்
செய்யும் முயற்சியில் தமக்குள்ளே திட்டம் போடத் தொடங்கியது பிப்ரவரி மாத
நடுப்பகுதியில். இது நடைபெற்ற காலப்பகுதியில் ராணுவத்தினால்
முற்றுகையிடப்பட்ட பகுதிக்குள் புலிகளின் முக்கியஸ்தர்கள் பலர் (தளபதிகள்,
பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள்) உயிருடன் இருந்தார்கள்.

அமெரிக்க-நார்வே திட்டம் 4 அம்சங்களுடன் உருவாகிவிட்ட நிலைமையில்தான்
புலிகளின் சார்பில் கே.பி. என்று அறியப்பட்ட குமரன் பத்மநாதன் அல்லது
செல்வராசா பத்மநாதனுடன் இந்த ஏற்பாடு பற்றி மேலும் விவாதிக்க விரும்பியது
நார்வே. அப்போது மலேசியாவில் தங்கியிருந்த கே.பி.-யுடன் பிப்ரவரி 26-ம்
தேதி நார்வே அதிகாரிகள் சந்தித்து தமது திட்டம் பற்றி பேசினர்.

புலிகளின் சார்பாகப் பேசுவதற்கு நார்வே, கே.பி.யை தேர்ந்தெடுத்தது
எதற்காக என்பதைத் தெரிந்துகொள்ள முன், இது நடைபெற்ற நாட்களில்
புலிகளுக்கும் ஸ்ரீலங்கா ராணுவத்துக்கும் இடையிலான யுத்தம், எங்கே
நடைபெற்றுக் கொண்டு இருந்தது என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.

அப்போதுதான் புலிகள் பிப்ரவரி மாத இறுதியில் ராணுவ ரீதியில் எந்த
நிலையில் இருந்தார்கள் என்று தெரிந்து கொள்ள முடியும். காரணம், யுத்தம்
முடிவடைவதற்கு இரண்டரை மாதங்களே மீதமிருந்த சூழ்நிலை அது.

புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னி பகுதியில் ஸ்ரீலங்கா ராணுவம்,
2007-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தரை மார்க்க யுத்தத்தை ஆரம்பித்தது.
ராணுவத்தின் 57-வது டிவிஷன் படைப்பிரிவு வவுனியா பகுதியில் தாக்குதலை
தொடங்கியது. அங்கே தாக்குதல்களை நடைபெற்றுக் கொண்டிருக்க, செப்டெம்பர்
மாதத்தில் இரண்டாவது போர்க்களம் ஒன்றை மன்னார் மாவட்டத்தில் திறந்தது
ராணுவம். ராணுவத்தின் அதிரடிப்படை-1 இந்தக் களமுனையில் புலிகளை தாக்கியது.

இந்த இரு முனைகளிலும் புலிகளால் சில மாதங்களுக்கு தாக்குப்பிடிக்க முடிந்தது.

இந்த இரு முனைகளிலும் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்க, ஜனவரி 2008-ல்,
3-வது போர்க்களத்தை வெலிஓயாவில் திறந்தது ராணுவம். இந்த முனையில் புலகளைத்
தாக்கியது ராணுவத்தின் 59-வது டிவிஷன் படைப்பிரிவு.

இப்படியே வெவ்வேறு இடங்களில் போர்க்களங்களை திறப்பதன் மூலம், ஸ்ரீலங்கா
ராணுவத்தின் 5 டிவிஷன் படைப்பிரிவுகளும், 3 அதிரடிப்படை படைப்பிரிவுகளும்
இணைந்து 8 வெவ்வேறு இடங்களில் தாக்கத் தொடங்கின. புலிகள் ஒவ்வாரு
முனையிலும் பின்வாங்கத் தொடங்கினர்.

முதலில் தாக்கத் தொடங்கிய 57-வது டிவிஷன் படைப்பிரிவு மேஜர் ஜெனரல்
ஜெகத் டயஸ் தலைமையில் கிளிநொச்சி நகரை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.
2009-ம் ஆண்டு புத்தாண்டு தினத்துக்கு மறுநாள் (ஜனவரி 2-ம் தேதி)
கிளிநொச்சி நகரம் 57-வது படைப்பிரிவால் கைப்பற்றப்பட்டது. புலிகள்,
பின்வாங்கி முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் சென்றனர்.

மறுபக்கத்தில் 58-வது டிவிஷன் படைப்பிரிவு அடம்பன் டவுனில் தொடங்கி,
ஒவ்வொரு இடமாக கைப்பற்றியபடி நகர்ந்தது. முள்ளிக்கண்டல், பரப்பக்கண்டல்,
பாப்பாமோட்டை என்று இடங்களைக் கைப்பற்றிச் சென்ற இந்த டிவிஷன், பெரியமடு
என்ற இடத்துக்கு வந்தபோது, 57-வது படைப்பிரிவும் மற்றொரு பாதையில்
இடங்களைக் கைப்பற்றியபடி அங்கு வந்திருந்தது.

பெரியமடுவுக்கு தென்மேற்கே இரு டிவிஷன்களும் இணைந்து கொண்டன.

அதன்பின் 58-வது படைப்பிரிவு விடத்தல் தீவு நோக்கி நகர்ந்து, அதைக்
கைப்பற்றியது. தொடர்ந்து, நாச்சிக்குடா, நொச்சிமோட்டை, பூநகரி, பரந்தன்,
தர்மபுரம், விஸ்வமடு டவுன் என்ற பாதையிலுள்ள அனைத்து இடங்களையும்
கைப்பற்றியபின், இந்தக் கட்டுரையில் கே.பி.-யை நார்வே சந்தித்ததாக நாம்
குறிப்பிடும் பிப்ரவரி 26-ம் தேதியில் தேவிபுரம் என்ற இடம்வரை
வந்துவிட்டிருந்தது.

பிரிகேடியர் சவேந்திர சில்வாவின் தலைமையில் இயங்கிய படைப்பிரிவு அது.
(அதிரடிப்படை-1 படைப்பிரிவுதான், 58-வது டிவிஷன் என பெயர்
மாற்றப்பட்டிருந்தது)

மற்றொரு திசையில் புலிகளை தாக்கத் தொடங்கியிருந்த 59-வது படைப்பிரிவு,
புலிகளின் முன்னகம் முகாமைக் கைப்பற்றியதுடன் தொடங்கி, ஜனவரி 25-ம் தேதி
முல்லைத்தீவு டவுனை கைப்பற்றியிருந்தது. மறுமுனையில் 55-வது படைப்பிரிவு
நகர்ந்து, சாலை என்ற இடத்தை பிப்ரவரி 5-ம் தேதி கைப்பற்றியிருந்தது.

அதிரடிப்படை-2, புளியங்குளம் டவுனை கைப்பற்றி, அங்கிருந்து நகர்ந்து
ஒவ்வொரு இடமாகக் கைப்பற்றியபடியே ஜனவரி 21-ம் தேதி உடையார்கட்டு குளம்
அணைக்கட்டை கைப்பற்றியிருந்தது. அதிரடிப்படை-3, மாங்குளத்தில் ஆரம்பித்து,
அம்பகாமம் வரை வந்திருந்தது. அதிரடிப்படை-4 ஒட்டிசுட்டான் வரை
கைப்பற்றியிருந்தது.

மொத்தத்தில், 2007-ல் பெரிய வன்னிப் பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டில்
வைத்திருந்த புலிகள் ஒவ்வொரு முனையிலும் பின்வாங்க நேர்ந்ததில், மிகச்
சிறிய பகுதி ஒன்றுக்குள் பெட்டிக்குள் அடைபட்டதுபோல முடக்கப்பட்டு இருந்த
நிலையில்தான், பிப்ரவரி 26-ம் தேதி மலேசியாவில் புலிகளுக்காக
அதிகாரபூர்வமாக பேசத் தொடங்கினார் கே.பி.

கே.பி. பேசத்தொடங்கிய தினத்தில், 57-வது டிவிஷன் விஸ்வமடு டவுனிலும்,
58-வது டிவிஷன் தேவிபுரத்திலும், 59-வது டிவிஷன் முல்லைத்தீவு டவுனிலும்,
55-வது டிவிஷன் சாலை கிராமத்திலும், அதிரடிப்படை-2 உடையார்கட்டு
குளத்திலும், அதிரடிப்படை-3 அம்பகாமத்திலும், அதிரடிப்படை-4
ஒட்டுசுட்டானிலும் நின்றிருக்க, புலிகளின் போராளிகள் தளபதிகள், தலைவர்
உட்பட சிறிய நிலப்பரப்பு ஒன்றில் முற்றுகையில் சிக்கியிருந்தனர்!

கே.பி.-யை புலிகளின் அதிகாரபூர்வ பேச்சாளராக நார்வே ஏற்றுக்கொண்டு அவருடன் பேசியதன் காரணம் என்ன?

இது நடப்பதற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பு
கே.பி-யை தமது பிரதான ராஜதந்திரியாக அறிவித்திருந்தது. புலிகள் அமைப்பின்
தலைவர் வே.பிரபாகரனின் கையொப்பத்துடன் கூடிய கடிதம் ஒன்றையும்
வெளியிட்டிருந்தது

(கடிதத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்)

இங்கேயும் ஒரு விஷயத்தைக் கவனியுங்கள். யுத்தம் முடிவுக்கு வந்து,
புலிகளின் தலைவர்கள் யாரும் தற்போது இல்லை என்ற நிலையில் இந்தக் கடிதம்
பற்றிய வெவ்வேறு கருத்துக்கள் வெவ்வேறு தரப்புகளிடம் இருந்து வருகின்றன.
ஆனால், குறிப்பிட்ட கடிதம் வழங்கப்பட்ட காலத்தில் அது பற்றிய சந்தேகத்தை
யாரும் எழுப்பியிருக்க இல்லை.

இந்தக் கடிதம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த கடிதம் அல்ல. இதன் பிரதிகள்
இணையத்தளங்களிலும் அச்சு ஊடகங்களிலும் வெளியாகி இருந்தன. யுத்தம்
முடிவதற்குமுன், புலிகளின் முக்கியஸ்தர்கள் உயிருடன் இருந்த நிலையில்
இந்தக் கடிதம் பகிரங்கப்படுத்தப் பட்டிருந்தது.

அப்போது இந்தக் கடிதம் பற்றி யாரும் சந்தேகத்தைக் கிளப்பவில்லை.

அந்தக் காலகட்டத்திலும், அதற்குப் பிறகு மே மாதம் நடுப்பகுதி வரையிலும்,
வன்னிக்குள் இருந்த புலிகளின் முக்கியஸ்தர்கள், அதன் தலைவர் பிரபாகரன்
உட்பட, வெளியேயுள்ள பலருடன் தொடர்பில் இருந்தனர். அப்போதெல்லாம் இந்தக்
கடிதம் பற்றி யாரும் சந்தேகத்தை எழுப்பவில்லை.

இது ஒரு போலியான கடிதமாக இருந்தால், கடிதம் வெளியான உடனேயே புலிகள்
மறுத்திருப்பார்கள் (கடிதம் ஜனவரி 2009-ல் வெளியாகியிருந்தது).
அதற்குப்பின் சுமார் 5 மாத காலத்தின் பின்னரே யுத்தம் முடிவுக்கு வந்தது.
அந்த 5 மாதங்கள் என்பது மறுப்பு தெரிவிப்பதற்கு மிகத் தாராளமான கால
அவகாசம்.

இந்தக் காலப்பகுதியில் புலிகளின் பிரதான ராஜதந்திரியாக கே.பி.,
புலிகளின் தலைவர் பிரபாகரனால் நியமிக்கப்பட்டது குறித்து வன்னிக்கு
உள்ளேயிருந்து எந்த மறுப்பும் வரவில்லை. வன்னிக்கு வெளியேயிருந்து எந்த
சந்தேகமும் எழுப்பப்படவில்லை.

இந்த உண்மை புரிந்தால், யுத்தம் முடிந்தபின், புலிகள் தரப்பில் இருந்து
மறுப்பதற்கு யாருமில்லாத நிலையில், இதே கடிதம் பற்றி எழுப்பப்படும்
சந்தேகங்கள் பற்றி, நீங்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம்.

மொத்தத்தில் விடுதலைப்புலிகள் தொடர்பான ராஜதந்திர விவகாரங்களை
இலங்கைக்கு வெளியே பேசுவது என்றால், பேசக்கூடிய அதிகாரமுடைய ஒரேயொரு நபர்
கே.பி. மாத்திரமே என்பதுதான் அப்போது இருந்த நிலை. நார்வேக்கும் இந்த
நிலைப்பாடு புலிகளால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதையடுத்தே, கே.பி.-யுடனான சந்திப்புக்கு நார்வே ஏற்பாடு செய்தது.

புலிகளைப் பொறுத்தவரை யுத்தம் மிகவும் இக்கட்டான நிலையில் நடைபெற்றுக்
கொண்டிருந்தது. அப்படியான நிலையில் நார்வே, கே.பி.-யுடன் என்ன பேசியது
என்பது மிக முக்கியமானது. மலேசியாவில் நடைபெற்ற அந்தச் சந்திப்பில் என்ன
நடந்தது? இரு தரப்பிலும் யார்யார் கலந்து கொண்டனர்? என்ன பேசப்பட்டது? என்ன
முடிவு எடுக்கப்பட்டது?

வெளியே பெரிதாக அறியப்படாத மிக முக்கியமான இந்தத் தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டுமா?


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? Empty Re: ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா?

Post by மாலதி Wed Jun 13, 2012 12:49 pm

ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? 20111123-VIRU-5அத்தியாயம் 3
ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா?

வன்னியில் ரொம்பவும் ஆபத்தான சிறிய பகுதிக்குள் சிக்கியிருந்த
புலிகளின் தலைவர், தளபதிகள், போராளிகள் மற்றும் பொதுமக்களை காப்பாற்றும்
முயற்சிகள் தொடங்கின. இந்த முயற்சியில் அமெரிக்காவும் நார்வேயும் ஒன்றாகவே
இறங்கியிருந்தாலும், அமெரிக்கா சைலன்ட் பார்ட்னர் போல நார்வேயை
முன்னிறுத்தியே காரியங்களைச் செய்தது.

புலிகளுடன் பேசும் பொறுப்பை நார்வே ஏற்றுக்கொண்டது. நார்வே நாட்டுப்
பிரதிநிதிகள் வெளிநாடு ஒன்றில் ரகசியமாக புலிகளுடன் பேசுவது என்ற திட்டம்
தயாரானது. புலிகளுடனான சந்திப்பு மிக ரகசியமாகவே வைக்கப்பட வேண்டியதன்
காரணம் என்ன?

ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்புவில் அப்போதைய நோர்வே தூதுவர் டோர் ஹட்டேர்மை
வைத்தே புலிகளுடன் பேசுவது என்று நார்வே தீர்மானித்திருந்தது. அதே
நேரத்தில், இந்த சந்திப்பு பற்றிய தகவல் எதையும் ஸ்ரீலங்கா அரசுக்கு நார்வே
தெரிவித்திருக்கவில்லை. அதனால்தான் அனைத்துமே ரகசியமாக வைக்கப்பட
வேண்டியிருந்தது.

காரணம், ராஜதந்திர ரீதியில் இது ஒரு சிக்கலான விஷயம். Diplomatic code
of conduct on international practices-க்கு எதிராகவே புலிகளைச் சந்திக்கத்
துணிந்திருந்தது நார்வே.

எப்படியென்றால், ஒரு நாட்டின் விவகாரங்களில், அந்த நாட்டில் உள்ள
மற்றொரு நாட்டின் தூதர் தலையிடும்போது, குறிப்பிட்ட நாட்டுக்கு தகவல்
தெரிவிக்கப்பட வேண்டும் என்பது diplomatic code of conduct நடைமுறை. அதை
மீறியே, புலிகளுடனான இந்தச் சந்திப்பில் கொழும்பில் பணியாற்றிய நார்வே
தூதுவரை ஈடுபடுத்தியிருந்தது நார்வே வெளியுறவு அமைச்சு.

கொழும்புவில் அப்போதைய நோர்வே தூதுவராக பணிபுரிந்த டோர் ஹட்டேர்ம்,
நோர்வே தலைநகர் ஆஸ்லோவில் உள்ள வெளியுறவு அமைச்சின் உத்தரவுக்கு அமைய இந்த
ரகசிய முயற்சியில் இறங்கியிருந்தார். ஆஸ்லோவின் திட்டப்படி, டோர் ஹட்டேர்ம்
கொழும்புவில் இருந்து வெளிநாடு ஒன்றுக்கு செல்ல வேண்டும். ஆஸ்லோவில்
(வெளியுறவு அமைச்சில்) இருந்து வேறு சிலரும் அந்த நாட்டுக்கு அனுப்பி
வைக்கப்படுவார்கள். புலிகளை அங்கு வைத்து ரகசியமாகச் சந்திக்க வேண்டும்.

புலிகளின் தரப்பில் இருந்து, வெளிநாடு ஒன்றில் பேசக்கூடிய ஒரேயொரு நபர்
என்ற அந்தஸ்து செல்வராசா பத்மநாதனுக்கு (கே.பி.) மாத்திரமே
வழங்கப்பட்டிருந்தது பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம் (பாகம்-2).
இதனால், எந்த வெளிநாட்டில் சந்திப்பது என்பதை முடிவு செய்வதற்கு நார்வே
வெளியுறவு அமைச்சு கே.பி.-யை தொடர்பு கொண்டது.

கே.பி.-யால் குறிப்பிடப்பட்ட இடம்தான் மலேசியாவின் தலைநகர், கோலாலம்பூர். இதனால் சந்திப்பை அங்கே வைத்துக் கொள்வது என்பது முடிவானது.

இந்த இடத்தில் நார்வே புலிகளின் சார்பில் கே.பி.-யை புலிகளின்
அதிகாரபூர்வ பிரதிநிதியாக சந்திப்பது பற்றிய சுவாரசியமான உபகதை ஒன்றும்
உள்ளது. நார்வேயின் எரிக் சோல்ஹேமும் கே.பி.-யும் இதற்குமுன் தாய்லாந்தில்
சந்தித்துக் கொண்ட அந்த உபகதை, பெட்டிச் செய்தியாக உள்ளது. அதைப் படிக்க
விரும்பினால், இங்கே கிளிக் செய்யவும்.

கோலாலம்பூரில் இந்த ரகசிய சந்திப்புக்காக ஹில்டன் ஹோட்டலில் ஒரு suite
புக் பண்ணப்பட்டிருந்தது. 2009-ம் ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி,
ஸ்ரீலங்காவுக்கான நோர்வே தூதுவர் டோர் ஹட்டேர்ம் கொழும்பில் இருந்து
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் தடம் இலக்கம் MH178-ல் கோலம்பூர் புறப்பட்டுச்
சென்றார்.

1962-ல் பிறந்த டோர் ஹட்டேர்ம், நார்வேயில் திறமைசாலியான
ராஜதந்திரிகளில் ஒருவர். அதனாலோ என்னவோ, யுத்தம் நடக்கும்
இடங்களுக்குத்தான் அவரை தூதுவராக அனுப்புவது நார்வே வெளியுறவு அமைச்சின்
வழக்கம்.

2007-ம் ஆண்டு ஸ்ரீலங்காவுக்கான தூதுவராக அனுப்பப்பட்ட அவர், 2010-ம்
ஆண்டுவரை கொழும்புவில் இருந்தார். பின்னர் கொழும்புவில் இருந்து பணி
மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு வழங்கப்பட்ட

ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? 20111123-VIRU-62010-ல்
கொழும்புவிலுள்ள நோர்வே தூதரகத்திலிருந்து டோர் ஹட்டேர்ம் பணி இடமாற்றம்
பெற்று சூடானுக்கு பயணமாவதற்கு முன் கொழும்புவில் நடைபெற்ற பிரிவுபசார
விருந்தில்...

குறுகியகால அசைன்மென்ட், கார்ட்டூம் நகரில் (சூடான்) இயங்கிவந்த நோர்வே
தூதரகத்தை பொறுப்பேற்பது. அதன்பின் இந்த ஆண்டு (2011) தொடக்கத்தில் காபுல்
நகரில் (ஆப்கானிஸ்தான்) உள்ள நோர்வே தூதரகத்தில் அடுத்த அசைன்மென்ட்
கொடுக்கப்பட்டு, தற்போது ஆப்கானிஸ்தானுக்கான நார்வே தூதுவராக
பணியாற்றுகிறார்.

டோர் ஹட்டேர்ம் கொழும்பில் இருந்து கோலாலம்பூர் செல்ல, நார்வே தலைநகர்
ஆஸ்லோவில் இருந்து வேறு இருவரும் கோலாலம்பூருக்கு வெளியுறவு அமைச்சால்
அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் இருவரில் ஒருவர் வில்லிஸ், வெளியுறவு
அமைச்சின் உயரதிகாரி. இரண்டாவது நபரான தாமஸ், எரிக் சோல்ஹேமின் அந்த நாளைய
செயலாளர்.

2009 பிப்ரவரி மாதம் 26-ம் தேதி வியாழக்கிழமை. மலேசியா தலைநகர்
கோலாலம்பூர், ஜாலன் ஸ்டெசென் சென்ட்ரல் பகுதியில் அமைந்துள்ள ஹில்டன்
ஹோட்டலில் இவர்கள், புலிகளை ரகசியமாக சந்திப்பது என்று ஏற்பாடு
ஆகியிருந்தது.

இதோ, நார்வே குழுவினர் கோலாலம்பூர் சென்று இறங்கப் போகின்றனர். அவர்கள்
அங்கே போய்ச் சேர்வதற்குமுன், புலிகள் தரப்பில் இவர்களை ரகசியமாக
சந்திக்கப் போகும் ஆட்கள் யார், அவர்கள் எப்படி கோலாலம்பூர்வரை சென்றார்கள்
என்பதைப் பார்க்கலாமா?

புலிகளின் அதிகாரபூர்வ ராஜதந்திரியாக நியமிக்கப்பட்டிருந்த
கே.பி.-யிடம், “நார்வேயின் பிரதிநிதிகள் உங்களை மலேசியாவில் வந்து
சந்திப்பார்கள். உங்கள் (புலிகள்) தரப்பில் யார் இந்தப் பேச்சுக்களில்
கலந்து கொள்ளப் போகின்றீர்கள்?” என்று நார்வே வெளியுறவு அமைச்சில் இருந்து
கேட்கப்பட்டது.

இதற்கு பதில் கொடுக்க ஒரு நாள் அவகாசம் தேவை என்று கே.பி.-யிடமிருந்து
வெளியுறவு அமைச்சுக்கு தகவல் சென்றிருந்தது. மறுநாள் நார்வே வெளியுறவு
அமைச்சை தொடர்பு கொண்ட கே.பி., தமது தரப்பில் மூவரும், ஒரு உதவியாளரும்
கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்திருந்தார். கலந்து கொள்பவர்களின்
பெயர்களும் மலேசியாவில் இருந்து ஆஸ்லோவுக்கு வந்து சேர்ந்தது.

புலிகளிடமிருந்து வந்து சேர்ந்த பட்டியலில் இருந்த முதலாவது நபர்,
செல்வராசா பத்மநாதன் (கே.பி.) அவர் அப்போது மலேசியாவில் தங்கியிருந்ததால்,
பயண ஏற்பாடுகள் ஏதும் அவசியமாக இருக்கவில்லை.

பட்டியலில் இருந்த இரண்டாவது நபர் யார் தெரியுமா? தற்போது நன்கு
அறியப்பட்ட பிரபலம். அவர், அவரது பெயர், விசுவநாதன் உருத்திரகுமாரன்! ஆம்.
நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் என தற்போது அறியப்பட்டுள்ள
உருத்திரகுமார்தான் அது. அவர் அமெரிக்காவில் இருந்ததால், அமெரிக்காவில்
இருந்து மலேசியாவுக்கு வருவதற்கு பயண ஏற்பாடுகள் அவசியமாக இருந்தது.

பட்டியலில் இருந்த மூன்றாவது பெயர், ஜோய் மகேஸ்வரன். இவர் ஆஸ்திரேலியாவில் இருந்து வரவேண்டியிருந்தது.

இந்த மூவருடன் இணைந்து கலந்து கொள்ளப் போவதாக பட்டியலில் நான்காவதாக
இருந்த உதவியாளரின் பெயர் பொறி. அவர் அப்போது கே.பி.-யின் தனி உதவியாளராக
மலேசியாவில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

இந்த நால்வரில் இருவர் ஆஸ்திரேலியாவில் இருந்தும், அமெரிக்காவில்
இருந்தும் மலேசியாவுக்கு வருவதற்கான ஏற்பாடுகளை துரிதமாகச் செய்யுமாறு
அறிவித்தது ஆஸ்லோவில் இருந்த வெளியுறவு அமைச்சு. மறுநாளே ஆஸ்லோவுக்கு
மலேசியாவில் இருந்து ஆச்சரியகரமான தகவல் ஒன்று வந்து சேர்ந்தது.

அமெரிக்காவில் இருந்து உருத்திரகுமாரன் புலிகளின் பணத்தில் மலேசியா செல்ல விரும்பவில்லை என்பதே அந்த தகவல்.

அமெரிக்காவில் வசிக்கும் தனக்கு, புலிகளின் பணத்தில் பயணம் செய்வது
பின்னாட்களில் சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்று வழக்கறிஞரான உருத்திரகுமார்
கருதுவதாக இருந்தது, ஆஸ்லோ வெளியுறவு அமைச்சுக்கு புலிகளின் தரப்பிலிருந்து
வந்த தகவல். (விடுதலைப்புலிகள் அமைப்பு அமெரிக்காவில், தடை செய்யப்பட்ட
பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இருந்தது)

இதற்கு உடனடியாகவே பதில் கொடுத்தது நார்வே.

“திரு. உருத்திரகுமாரன் தனது சொந்தப் பணத்தில் டிக்கெட் எடுத்துக்கொண்டு
வந்தால், டிக்கெட்டுக்கான பணத்தை நார்வே கொடுத்து விடும். அதில் சிக்கல்
ஏதுமில்லை” என்பதே நார்வே, கே.பி.-க்கு அனுப்பிய பதில். (நார்வேயின்
அனுசரணையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் இதற்கு
முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது, புலிகளின் பிரதிநிதிகள் பயணம்
செய்வதற்கு பிசினெஸ் கிளாஸில் விமான டிக்கெட் வழங்கியது நார்வேதான்)

இந்தப் பதில் கிடைத்ததும், மலேசியாவில் இருந்து உருத்திரகுமாரனுக்கு
தகவல் அனுப்பப்பட்டது. “டிக்கெட்டுக்கு பணம் ‘அவர்கள்’ கொடுக்கிறார்களாம்.
நீங்கள் டிக்கெட் எடுத்துக் கொண்டு ‘கேப்பிடலுக்கு’ (தலைநகர்) வரவும்”
என்பதுதான் சுருக்கமான தகவல்.

புலிகள் அமைப்போடு தொடர்புடைய அனைவரதும் தொடர்புகள் எல்லாம்
வெளிநாடுகளில் ஒட்டுக் கேட்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், இப்படி
சுருக்கமாக தகவல் அனுப்புவது புலிகளின் வழக்கம். அந்த வகையில் இப்படி
சுருக்கமாக போய்ச் சேர்ந்தது மெசேஜ்.

தகவல் கிடைத்தபின், உருத்திரகுமாரன் அமெரிக்காவில் இருந்து விமானம்
ஏறினார். அவர் போய் இறங்கிய இடம் எது தெரியுமா? சொன்னால் நம்ப மாட்டீர்கள்,
இருந்தாலும் சொல்கிறோம்… பாங்காக்!

கேப்பிட்டலுக்கு வாருங்கள் என்று மலேசியாவின் தலைநகருக்கு வருமாறு
கூறினால், தாய்லாந்தில் தலைநகர் பாங்காக் விமான நிலையத்தில் போய்
இறங்கிவிட்டார் அவர். கே.பி. மலேசியாவில் வசிப்பதற்குமுன் தாய்லாந்தில்
வசித்ததை அறிந்திருந்த உருத்திரகுமாரன், கே.பி. அழைப்பது
தாய்லாந்துக்குத்தான் என்று நினைத்து விட்டார். பாங்காக்குக்கு டிக்கெட்
எடுத்து, அங்கே போய் இறங்கிவிட்டார்.

அதன்பின்னர் என்ன நடந்தது? தொடரின் அடுத்த பாகத்தில் படியுங்கள்!


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? Empty Re: ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா?

Post by மாலதி Wed Jun 13, 2012 12:51 pm

ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? 20111128-VIRU-2அத்தியாயம் 4
ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா?

உருத்திரகுமாரன் அமெரிக்காவில் இருந்து விமானம் ஏறி போய் இறங்கிய
இடம் பாங்காக் என்று கடந்த பாகத்தை முடித்திருந்தோம். கேப்பிட்டலுக்கு
வாருங்கள் என்று மலேசியாவின் தலைநகருக்கு வருமாறு கூறினால், தாய்லாந்தில்
தலைநகர் பாங்காக் விமான நிலையத்தில் போய் இவர் எதற்காக இறங்கினார்?

காரணம், கே.பி. தாய்லாந்தில் வசித்து வந்தார் என்ற விபரம் ஒரு பரபரப்பான
சூழலில் வெளியாகி இருந்தது. பரபரப்பு எதற்கு என்றால், அவரை இன்டர்போல்
தாய்லாந்தில் வைத்து கைது செய்துள்ளது என்ற தகவல் பத்திரிகையில்
வெளியாகியிருந்தது. அதிலிருந்து தொடங்கியது பரபரப்பு.

அப்போது இந்திய வெளியுறவு அமைச்சர் தாய்லாந்தில் நின்றிருந்தார்.
கே.பி.-யை தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார். கே.பி.
கைது செய்யப்பட்டார் என்ற தகவல் கிடைத்ததும், ஸ்ரீலங்கா உளவுத் துறையினரும்
அங்கே போய் இறங்கினார்கள். ஆனால் கே.பி.-யை காணவில்லை. மாயமாக மறைந்து
விட்டிருந்தார்.

அவரைக் கைது செய்யவில்லை என்றது இன்டர்போல் போலீஸ். அவரைக் கைது
செய்யும் விஷயமே தமக்கு தெரியாது என்றது தாய்லாந்து போலீஸ்! எல்லாமே ஒரே
மர்மமாக இருந்தன.

இந்தப் பழைய நினைப்பில்தான் உருத்திரகுமார் பாங்காக், தாய்லாந்து விமான
நிலையத்தில் போய் இறங்கியிருந்தார். அவர் அங்கிருந்து கோலாலம்பூரில்
நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு எப்படிப் போய்ச் சேர்ந்தார் என்பதைப்
பார்க்குமுன், தாய்லாந்தில் இருந்து மாயமாக மறைந்ததாக சொல்லப்படும் கே.பி.,
மலேசியாவரை எவ்வாறு போய்ச் சேர்ந்தார்? அந்த சுவாரசியமான விபரங்களைப்
பார்த்துவிட்டுச் செல்லலாமா?

கே.பி.-க்கு தாய்லாந்தில் என்ன நடந்தது என்பது தொடர்பாக பலவித வதந்திகள்
உலாவி வந்தன. ஆனால், தென்-கிழக்கு ஆசிய உளவு வட்டாரங்களில் இருந்து எமக்கு
கிடைத்திருந்த தகவல்கள் நிஜமானவை. முக்கியமான தென்கிழக்கு ஆசிய நாட்டு
உளவுத்துறையில் இருந்து கிடைத்த தகவல்கள் இவை.

2007-ம் ஆண்டு செப்டெம்பர் முதல் வாரத்தில் சர்வதேச போலீஸ் இன்டர்-போல்,
கே.பி.-யை கைது செய்வது என்ற முடிவை எடுத்தது. அதற்கான உத்தரவுடன்
இன்டர்போல் அதிகாரிகள் செப்டெம்பர் 2-வது வார இறுதியில் தாய்லாந்து வந்து
இறங்கினார்கள். இந்த விஷயத்தில் இன்டர்போல் மிக ரகசியமாக வைத்திருந்தது.
எவ்வளவு ரகசியம் என்றால், தாய்லாந்து உளவுத்துறைக்கே இந்த விஷயத்தை
இன்டர்போல் அறிவிக்கவில்லை.

தாய்லாந்தில் இருந்த இன்டர்போல் ஸ்டேஷன் சீஃப்-க்கு மட்டுமே சொல்லப்பட்ட ரகசியமாக இருந்தது. அது.

2-வது வார இறுதியில் வந்திறங்கிய இன்டர்போல் அதிகாரிகள், அந்த
திங்கட்கிழமை கே.பி.-யை கைது செய்யும் திட்டத்தில் இருந்தார்கள்.
திங்கட்கிழமை, செப்டெம்பர் 10-ம் தேதி (2007)

இதில் ஒரு நடைமுறை இருக்கிறது. இன்டர்போல் அமைப்பின் அங்கத்துவ
நாடுகளில் அவர்கள் யாரையும் இன்டர்போல் தலைமையக வாரண்ட் ஒன்றுடன் கைது
செய்ய முடியும். ஆனால் அதற்குமுன் லோக்கல் கோர்ட் ஒன்றில் அந்த வாரண்ட்
என்டோஸ் செய்யப்பட்டு, லோக்கல் ஆர்டர் ஒன்று பெற வேண்டும்.

திங்கட்கிழமை காலை இந்த வேலையை முடித்துக்கொண்டு, அன்று மாலையே
கே.பி.-யை கைது செய்வது என்ற திட்டம், அவர்கள் நினைத்தது போல
நிறைவேறவில்லை. லோக்கல் கோர்ட்டில் ஆர்டர் பெறுவது இழுபறி விவகாரமாக
முடிந்தது. அத்துடன் காதும் காதும் வைத்ததுபோல ரகசியமாக செய்ய முயன்ற வேலை
கோர்ட் ஆர்டர் பெறும் காரியத்தில் சிலருக்கு தெரிய வந்துவிட்டது.

இந்த விவகாரம் முதலில் ஒரு ஆங்கில இணையத்தளத்துக்கு தெரியவரவே, அவர்கள்
அதை சிறியதாக பிளாஷ் செய்தார்கள். பாங்காக்கில் இருந்து வெளியாகும் ஆங்கில
நாளேடு பாங்காக் போஸ்ட் அந்த நியூஸை பிக் பண்ணியது. அவர்கள் மேலதிகமாக சில
தகவல்களை விசாரித்தார்கள்.

இந்த நியூஸ் மறுநாள், செவ்வாய்க்கிழமை காலை வெளியான பாங்காக் போஸ்ட் பத்திரிகையில் இடம்பெற்றது.

இதில் ஒரு சறுக்கல் நடந்தது.

கே.பி.-யை திங்கட்கிழமை கைது செய்வதற்கு என்றே இன்டர்போல் கோர்ட் ஆர்டர்
கேட்டு விண்ணப்பம் செய்திருந்தது. அந்தச் செய்தியை மறுநாள் காலை பாங்காக்
போஸ்ட் பத்திரிகையில் வெளியிடும்போது, திங்கட்கிழமை கே.பி. கைது
செய்யப்பட்டார் என்று வெளியிட்டிருந்தார்கள். ஆனால், திங்கட்கிழமை மாலைவரை
கோர்ட் ஆர்டர் கிடைக்காத காரணத்தால், தமது கைது செய்யும் திட்டத்தை
செவ்வாய்க்கிழமைக்கு (11-ம் தேதி) மாற்றி விட்டிருந்தது இன்டர்போல்!

அதுதான் இன்டர்போலுக்கு ஏற்பட்ட சறுக்கல். செவ்வாய்க்கிழமை காலை 10
மணிக்கு கே.பி-யை கைது செய்வது என்று அவர்கள் தயாராக இருந்தார்கள். ஆனால்,
அன்று காலை 6 மணிக்கு வெளியான பாங்காக் போஸ்ட் பத்திரிகையில், முதல்நாள்
மாலையே கைது நடந்து விட்டதாக செய்தி வெளியாகியிருந்தது!

மறுநாள் இந்திய மீடியாவில் இந்தச் செய்தி எப்படி வெளியானது தெரியுமா?
இதைவிட சுவாரசியமான அந்த விஷயத்தை ‘கே.பி. கைது தொடர்பாக சி.பி.ஐ.-க்கும்,
கார்த்திகேயனுக்கும் என்ன தெரியும்?’ என்ற எமது பெட்டிச் செய்தியில்
பார்க்கவும். (பெட்டிச் செய்திக்கு இங்கே கிளிக் செய்யவும்)

பாங்காக் போஸ்ட் செய்தி வெளியாகும்வரை தாய்லாந்து உளவுத்துறைக்கு இந்த செய்தி தெரிந்திருக்கவில்லை.

தாய்லாந்து உளவுத்துறையில் ஒரு எலிமென்ட்டுக்கு கே.பி.-யுடன் நெருக்கமான
பரிச்சயம் இருந்தது. காலை 10 மணிக்கு இன்டர்போல் கைது செய்ய போகும்
முன்னரே அவர்கள் கே.பி.-யை தொடர்பு கொண்டு தமது இடம் ஒன்றுக்கு வரச்
சொன்னார்கள்.

இந்த நிலையில் தாய்லாந்து உளவுத்துறை ஒரு முடிவு எடுத்திருந்தது.

கே.பி. தாய்லாந்தில் வைத்து கைது செய்யப்பட்டால், இன்டர்போல் அவரை
தம்முடன் அழைத்துச் செல்ல தயாராக வந்திருப்பார்கள். தகவல் வெளியே
வந்தவுடன், கே.பி.-யை தம்மிட்ட ஒப்படைக்குமாறு இந்தியாவும் கோரிக்கை
விடும், ஸ்ரீலங்காவும் கோரிக்கை விடும். தாய்லாந்து அரசு தர்மசங்கடமான
சூழ்நிலையில் சிக்கிக் கொள்ளும். அதிலிருந்து தப்பித்துக் கொள்ள
வேண்டுமென்றால், கே.பி.-யை தாய்லாந்தில் இருந்து வெளியேற்றுவது என்பதே
அவர்கள் செய்த முடிவு.

தாய்லாந்து உளவுத்துறை கூறியிருந்த இடத்துக்குச் சென்ற கே.பி.-யிடம்
இன்டர்போல் அவரைக் கைது செய்தால், தாங்கள் நினைத்தால்கூட காப்பாற்ற
முடியாது என்று தெரிவித்த அவர்கள், கே.பி.-க்கு உள்ள ஒரே சாய்ஸ், உடனடியாக
நாட்டைவிட்டு வெளியேறுவதுதான் என்றார்கள். கே.பி-யை கைது செய்யும் விஷயம்
பாங்காக்கில் இனிஷியேட் பண்ணப்பட்ட காரணத்தால், பாங்காக விமான நிலையத்தில்
இருந்து பயணம் செய்வதை தவிர்த்து, சிறிய விமான நிலையம் ஒன்றின் ஊடாக
வெளியேறுவது என்று முடிவாகியது.

அந்த சிறிய விமான நிலையம், உடொன்-தானி (Udon Thani)

ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? 20111128-VIRU-3உடொன்-தானி (Udon Thani) விமான நிலையம்.

உடொன்-தானி, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வட-கிழக்கே 450
கி.மீ. தொலைவில் உள்ளது. தாய்லாந்து-லாவோஸ் எல்லைக்கு அருகே உள்ளது இந்த
இடம். தாய்லாந்தில் இருந்து லாவோஸ் நாட்டுக்குள் தரை மார்க்கமாக செல்ல
பிரபலமான பாதை, நொங்-காய் (Nong Khai) பாலம். தரை மார்க்கமாக செல்லாமல்
விமான மார்க்கமாக லாவோஸ் செல்வது என்றால், நொங்-காய் நகரில் இருந்து வெறும்
55 கி.மீ. தொலைவில் உள்ளது நாம் கூறிய உடொன்-தானி விமான நிலையம்.

அந்த விமான நிலையம் ஊடாக கே.பி. தாய்லாந்தில் இருந்து வெளியேறி லாவோஸ் நாட்டுக்குள் செல்வது என்பதே திட்டம்.

அதிலும் ஒரு சிக்கல் உள்ளது என்பதை தாய்லாந்து உளவுத்துறைக்கு அப்போது
தெரிந்திருக்கவில்லை. அந்த சிக்கல் கே.பி. வைத்திருந்த பாஸ்போர்ட்!. அதை அடுத்த பாகத்தில் பார்க்கலாமா?

-விறுவிறுப்பு.காம் இணையத்துக்காக, ரிஷி


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? Empty Re: ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா?

Post by மாலதி Wed Jun 13, 2012 1:15 pm

ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? 20111205-Viruvirupu-1அத்தியாயம் 5
ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா?

கே.பி., தாய்லாந்து உளவுத்துறை கூறியபடி உடொன்-தானி விமான
நிலையம் ஊடாக தாய்லாந்தில் இருந்து வெளியேறி லாவோஸ் நாட்டுக்குள் செல்வது
என்பதே திட்டம். அதிலும் ஒரு சிக்கல் உள்ளது என்பதை தாய்லாந்து
உளவுத்துறைக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. அந்த சிக்கல் கே.பி.
வைத்திருந்த பாஸ்போர்ட்!

அவர் பயணம் செய்த பாஸ்போர்ட், காலாவதியாகாமல் இருந்தது, ஆனால், அதில்
போதியளவு பக்கங்கள் காலியாக இல்லை. லாவோஸ் நாட்டு விசா ஒரு ஸ்டிக்கர்
வடிவில் இருந்தது. அதை இவரது பாஸ்போர்ட்டில் எந்தப் பக்கத்திலும்
ஒட்டுவதற்கு இடமில்லை. லாவோஸ் செல்வதென்றால் புதிய பாஸ்போர்ட் எடுக்க
வேண்டும்.

அதிலும் ஒரு சிக்கல். அவர் வைத்திருந்தது தாய்லாந்து பாஸ்போர்ட்டோ
அல்லது, வேறு எந்த ஆசிய நாட்டு பாஸ்போர்ட்டோ அல்ல. ஒரு ஆபிரிக்க நாட்டு
பாஸ்போர்ட்! அதனால் தாய்லாந்தில் வைத்து சுலபமாக புதிய பாஸ்போர்ட் எடுப்பது
சாத்தியமில்லை.

புதிய பாஸ்போர்ட் எடுப்பதென்றால் அதை வழங்கிய நாட்டுக்குத்தான் போக வேண்டும்.

முதலில் அந்த பாஸ்போர்ட்டுடன் உடொன்-தானி ஊடாக தாய்லாந்தைவிட்டு வெளியேற
கே.பி. முயற்சி செய்ய, இமிகிரேஷன் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

இப்படியான நிலையில், அந்த பாஸ்போர்ட்டில் இருந்த சைனீஸ் விசா ஸ்டிக்கர்
ஒன்றை உரித்து எடுத்து, பாஸ்போர்ட்டில் காலியான பக்கம் ஒன்று
உருவாக்கப்பட்டது. மீண்டும் அந்த பாஸ்போர்ட்டுடன் லாவோஸ் நாட்டு ஸ்டிக்கர்
விசாவை காலியான அந்தப் பக்கத்தில் ஒட்டலாம் என்று கூறப்போக, இமிகிரேஷன்
அதிகாரிகள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

பாஸ்போர்ட்டில் உள்ள எந்தவொரு பதிவையும் அகற்றக் கூடாது என்ற விதிமுறை உள்ளது.

ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? 20111205-Viruvirupu-2லாவோஸ் நாட்டு ஸ்டிக்கர் விசா

உடொன்-தானி பெரிய இடம் என்றால் அந்த பாஸ்போர்ட்டில் ஒரு பக்கம்
இவர்களால் காலியாக்கப்பட்டுள்ளது என்பது தெரியாமல் போயிருக்கும். ஆனால்,
உடொன்-தானியில் இருப்பதே 4 இமிகிரேஷன் அதிகாரிகள்தான்.

இவர் ஏற்கனவே காலியான பக்கங்கள் ஏதும் இல்லாத பாஸ்போர்ட் ஒன்றுடன்
வந்து, திருப்பி அனுப்பப்பட்டவர் என்று அவர்கள் 4 பேருக்குமே
தெரிந்திருந்தது.

மொத்தத்தில், உடொன்-தானி விமான நிலையம் ஊடாக வெளியேறும் திட்டம் நிறைவேறவில்லை.

இந்த விபரங்கள் தாய்லாந்து உளவுத்துறைக்கு தெரியவர, அவர்கள் கே.பி.-யை பாங்காக் வருமாறு சொன்னார்கள்.

கே.பி.யை தாய்லாந்து உளவுத்துறையினர் எதற்காக உடொன்-தானிக்கு போகுமாறு
சொன்னார்கள் என்பது தெரியாதவர்கள் விறுவிறுப்பு.காம் இணையத்தில் இந்தத்
தொடரின் 4-ம் பாகத்தைப் பார்த்துவிட்டு, தொடர்ந்து படிக்கவும்.
இல்லாவிட்டால் புரிவது சிரமமாக இருக்கும். இப்போது உடொன்-தானியில் இருந்து
மீண்டும் பாங்காக் செல்லவேண்டிய வேண்டிய நிலை கே.பி.-க்கு ஏற்பட்டது.

பாங்காக்கிலோ நிலைமை மிக இறுக்கமாக இருந்தது.

இன்டர்போல் ஒரு பக்கமாக கைது செய்ய வாரண்ட் சகிதம் தேடிக்கொண்டு
இருந்தது. இன்டர்போல் விஷயத்தில் ஒரு முரண்பாடு இருந்தது. அது என்ன
தெரியுமா?

இன்டர்போல் தலைமைக்கு தெரிந்திராத ரகசியம் ஒன்று, இன்டர்போல் பாங்காக் ஆபிஸில் அப்போது இருந்தது.

பாங்காக் அலுவலகத்தால் இன்டர்போல் தலைமைச் செயலகத்துக்கு அனுப்பப்பட்ட
தகவலின்படி கே.பி. கைது செய்யப்பட்டு விட்டார். ஆனால், நிஜத்தில் அவரை
செவ்வாய்க்கிழமை (செப். 11-ம் தேதி) காலையில் கோட்டை விட்டிருந்த விபரங்களை
கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். முதலில் அனுப்பிய தகவலை உண்மையாக்க
வேண்டும் என்றால், கே.பி.-யை கைது செய்ய வேண்டும். அல்லது கைது
செய்யவில்லை என்ற உண்மையை தலைமைச் செயலகத்திடம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

இதனால், கே.பி.-யை கைது செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது பாங்காக்கில் இருந்த இன்டர்போல் டீம்.

செவ்வாய் காலை தனது வீட்டிலிருந்து கிளம்பிய கே.பி. அதன்பின் அங்கு
வரவில்லை என்பதை இன்டர்போல் அறிந்திருந்தது. பாங்காக்கில் எங்கோ இருப்பார்
என அவர் தொடர்புடைய இடங்களில் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால்,
கே.பி. உடொன்-தானி சென்ற விஷயத்தை அவர்களால் டிடெக்ட் பண்ண
முடிந்திருக்கவில்லை.

இப்படியான நிலையில், உடொன்-தானியில் விமானம் ஏற முடியாத கே.பி.,
மீண்டும் பாங்காக் வருவது, இன்டர்போலிடம் வலியப் போய் தலையைக் கொடுப்பதற்கு
ஒப்பானது. பாங்காக்கில் காத்திருந்த முதல் ஆபத்து அது.

இரண்டாவது ஆபத்து, ஸ்ரீலங்கா உளவுத்துறை!

கே.பி. கைது என்ற தகவல் பாங்காக் போஸ்ட் பத்திரிகையில் வெளியானதில்,
ஸ்ரீலங்கா உளவுப் பிரிவினர் பாங்காக் வந்து இறங்கியிருந்தனர் என்று ஏற்கனவே
குறிப்பிட்டிருந்தோம். அவர்கள் தாய்லாந்து வெளியுறவு துறையிடம் கே.பி.-யை
தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமது தூதரகம் ஊடாக கோரிக்கை
விடுத்திருந்தனர்.

இவர்களது டீலிங் பாங்காக் போலீஸ் தலைமையத்துடன் இருந்தது.

இது நடைபெற்ற காலத்தில் (செப்டெம்பர் 2007) பாங்காக் போலீஸ் பிரிவில்
இந்த விவகாரத்தை டீல் பண்ணியவர் லெப்டினென்ட் ஜெனரல் ரொனாரொங் யொங்யுன்
(Lieutenant-General Ronnarong Youngyuen) என்பவர்.

அவர், “கே.பி. என்ற நபர் இங்கே இல்லவே இல்லை” என்று சூடம் அடித்து சத்தியம் செய்யாத குறையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஸ்ரீலங்கா உளவுத்துறை, தாய்லாந்து போலீஸிடம் கே.பி.-யின் 3 வெவ்வேறு
பெயர்களை கொடுத்திருந்தது. குமரன் பத்மநாதன், செல்வராசா பத்மநாதன்,
தர்மலிங்கம் செல்வராசா பத்மநாதன் என்ற ஏதாவது ஒரு பெயரில் கே.பி.
தாய்லாந்தில் தங்கியிருக்கலாம் என்று கூறியிருந்தார்கள்.

தாய்லாந்து இமிகிரேஷன் ரெக்கார்டுகளின்படி இந்த மூன்று பெயர்களிலும்
யாரும் சமீபகாலத்தில் தாய்லாந்துக்குள் நுழையவில்லை என்று சொல்லிக்
கொண்டிருந்தார் பாங்காக் போலீஸ் அதிகாரி யொங்யுன்.

இங்குள்ள மற்றொரு விஷயம், நிஜமாகவே கே.பி. விவகாரம் தாய்லாந்து போலீஸ் துறைக்கு தெரிந்திருக்கவில்லை.

தாய்லாந்து இன்டெலிஜென்ஸ் பிரிவின் ஒரு எலிமென்டுடன் கே.பி.-க்கு இருந்த
தொடர்பு பற்றி கடந்த பாகங்களில் கூறியிருந்தோம். அது ஒரு ரகசியமான
தொடர்பாக இருந்ததால், தாய்லாந்து காவல்துறையிடமோ, வேறு நிர்வாகப்
பிரிவுகளிடமோ, கே.பி. தொடர்பான ரெக்கார்டுகள் ஏதும் இல்லாதவாறு பார்த்துக்
கொள்ளப்பட்டிருந்தது.

புதன்கிழமை (12-ம் தேதி) காலை, லெப்டினென்ட் ஜெனரல் ரொனாரொங்
யொங்யுன்னிடம் 3 போலீஸ் பிரிவுகளிடம் இருந்து கிடைத்த ரிப்போர்ட்கள்
இருந்தன. தாய்லாந்து இமிகிரேஷன் போலீஸ், மெட்ரோபோலிட்டன் போலீஸ், ஸ்பெஷல்
டிவிஷன் ஆகிய முன்று பிரிவுகள் கொடுத்த ரிப்போர்ட்களிலும், கே.பி. என்ற
நபரைப் பற்றிய தகவல் ஏதும் தம்மிடம் கிடையாது என்று
குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தத் தகவல்தான் ஸ்ரீலங்கா உளவுப் பிரிவுக்கு தாய்லாந்து போலீஸ்
தரப்பிலிருந்து கூறப்பட்டிருந்தது. இருந்த போதிலும் கே.பி. என்ற நபர்
தமக்கு தெரியாமல் தாய்லாந்துக்குள் நடமாடுகிறாரா என்று தேடுதல் மேற்கொள்ள
உத்தரவிட்டு இருப்பதாகவும் போலீஸ் தலைமையகம் கூறியது.

இந்த விதத்திலும் கே.பி.க்கு பாங்காக்கில் வலை விரிக்கப்பட்டிருந்தது. இது பாங்காக்கில் காத்திருந்த இரண்டாவது ஆபத்து.

மூன்றாவது ஆபத்துதான் பெரியது. அது, இந்தியாவால் ஏற்பட்டிருந்தது.

புதுடில்லி அரசியலில் தற்போது ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக உட்துறை
அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு பாதகமான பைல் லீக் ஆகிய விவகாரத்தில்
சர்ச்சைக்கு உள்ளாகிய இன்றைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிதான், இந்தச்
சம்பவங்கள் நடைபெற்ற காலப் பகுதியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக
இருந்தார்.

கே.பி. கைது என்ற செய்தி பாங்காக் போஸ்ட் பத்திரிகையில் வெளியான தினத்தன்று காலை பிரணாப் முகர்ஜி பாங்காக்கில் இருந்தார்.

அமைச்சர் பிரணாப் முகர்ஜி பாங்காக் வந்தது, கே.பி. விவகாரத்துக்காக
அல்ல. அவரது விஜயம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்த டிப்ளமட்டிக் டூர்.
கோயின்சிடென்டாக அவரது வருகையும், கே.பி. கைது என்ற செய்தி வெளியானதும் ஒரே
நேரத்தில் நடந்திருந்தன. பாங்காக் போஸ்ட் பத்திரிகையில் கே.பி. கைது என்று
வெளியான செய்தியை நம்பிய பிரணாப் முகர்ஜி, கே.பி.-யை இந்தியாவிடம்
ஒப்படைக்க வேண்டும் என்று தாய்லாந்து வெளியுறவு அமைச்சிடம் வேண்டுகோள்
விடுத்தார்.

தாய்லாந்து வெளியுறவு அமைச்சுக்கு கே.பி. விவகாரம் பற்றி அடியும் தெரிந்திருக்கவில்லை, நுனியும் தெரிந்திருக்கவில்லை.

இதற்கிடையே பாங்காக்கில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இயங்கிவந்த இந்திய
உளவுத்துறை றோ (Research and Analysis Wing – R&AW or RAW) இந்த
விவகாரத்தில் குதித்தது. அவர்கள் தமது லோக்கல் நெட்வேர்க் மூலமாக
பாங்காக்கில் கே.பி. விஷயம் பற்றி அறிய முயன்றார்கள். அத்துடன்,
புதுடில்லியிலுள்ள றோ தலைமைச் செயலகத்துக்கும், கே.பி. கைது பற்றிய தகவலை
உடனே அறிவித்தார்கள்.

புதுடில்லியில் இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டார் அசோக் சதுர்வேதி.

ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? 20111205-Viruvirupu-3அசோக் சதுர்வேதி றோ தலைவராக இருந்தபோது உபயோகித்த இந்திய டிப்ளமட்டிக் பாஸ்போர்ட்!

இந்த விவகாரம் நடைபெற்ற செப்டெம்பர் 2007-ல், றோ உளவுத்துறையின்
டைரக்டராக இருந்தவர் அசோக் சதுர்வேதி. கே.பி.-யை பாங்காக்கில் இருந்து
இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான கடும் முயற்சியைத் தொடங்கினார் அவர்.

அசோக் சதுர்வேதி கான்பூரில் பிறந்த, உத்திரப்பிரதேசத்துக்காரர். ஆனால்,
மத்தியப் பிரதேசத்தில் இருந்தே இந்திய போலீஸ் சர்விஸில் (ஐ.பி.எஸ்.)
இணைந்து கொண்டவர் (1970 பேட்ச்).

அசோக் சதுர்வேதி றோவின் டைரக்டராக பதவியேற்குமுன், சிறிதுகாலம்
கனடாவிலும், பிரிட்டனிலும் றோ அதிகாரியாகப் பணிபுரிந்தவர்.
விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு செயற்பாடுகள் இந்த இரு நாடுகளிலும் அதிகம்
இருந்தது. அந்த விதத்தில், விடுதலைப்புலிகளின் வெளிநாட்டுத் தொடர்புகள்
பற்றி நன்றாக அறிந்தவர்.

புலிகளின் வெளிநாட்டு ஆபரேஷன்களில், 1980-களின் இறுதியில் இருந்து
கே.பி.-யின் பங்களிப்பு பற்றி, கனடாவிலும் பிரிட்டனிலும் உள்ள இந்தியத்
தூதரகத்தில் றோ அதிகாரியாக பணிபுரிந்த காலத்தில் இவருக்கு நன்றாகவே
தெரியும். அதனால், கே.பி. பிடிபட்டால் அது பெரிய கேட்ச் என்பதும் அவருக்கு
தெரியும்.

இதனால்தான், பாங்காக்கில் கைதான (என்று அவர் நம்பிய) கே.பி.-யை
எப்படியும் இந்தியாவுக்கு கொண்டுவரும் முயற்சிகளில் இறங்கினார் அசோக்
சதுர்வேதி. (2009-ல் றோ அமைப்பில் இருந்து ஓய்வுபெற்ற அசோக் சதுர்வேதி,
சமீபத்தில் மூன்று மாதங்களுக்குமுன் செப்டெம்பர் 18, 2011-ல்
புதுடில்லியின் மரணமடைந்தார்)

இந்த அசோக் சதுர்வேதி தொடர்பான சில முரண்பாடான சிந்தனைகள் றோ அமைப்புக்குள் இருந்தன.

ஒரு விதத்தில் பார்த்தால், றோ-வின் டைரக்டராக இவர் பதவி பெற்றதே
பாலிட்டிக்கல் அப்பாயின்ட்மென்ட்தான். இது நடைபெற்ற காலத்தில்
புதுடில்லியில் பிரதமர் அலுவலகத்தில் பிரமிக்கத்தக்க செல்வாக்குடன் இருந்த
கபினெட் செகிரெட்டரி பி.கே.சதுர்வேதியின் நெருங்கிய உறவினர் அசோக்
சதுர்வேதி. அந்த வழியில்தான் இவர் றோ அமைப்புக்கு தலைவரானார்.

அசோக் சதுர்வேதிக்கு இந்தப் பதவி கிடைக்கக்கூடாது என்று அந்த நாட்களில்
அழுத்தம் கொடுத்தவர் யார் தெரியுமா? விடுதலைப் புலிகள் விவகாரத்தில்
டில்லியில் இருந்து டீல் பண்ணிய மற்றொருவர்! அவர்தான், தேசிய பாதுகாப்பு
ஆலோசகராக இருந்த மாயன்கோட் கேலத் நாராயணன் (எம்.கே.நாராயணன் – தற்போது
மேற்கு வங்க கவர்னர்)

கே.பி. பாங்காக்கில் கைது என்ற (தவறான) தகவல் கிடைத்ததும், அசோக்
திரிவேதி இதில் றோவை ஈடுபட வைத்தார். தென்கிழக்கு ஆசியாவில் றோவின் பெரிய
நெட்வேர்க் இருக்கும் இடங்களில் பாங்காக்கும் ஒன்று. அந்த விதத்தில், றோ
அமைப்பு கே.பி.-யை தமது கைப்பிடிக்குள் கொண்டுவரும் முயற்சியைத்
தொடங்கியது.

அதாவது, இந்திய அரசு இரு விதங்களில் கே.பி.-யை இந்தியாவிடம் ஒப்படைக்க
வைக்க முயன்றது. அன்றைய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி பாங்காக்கில்
இருந்துகொண்டு ராஜதந்திர ரீதியாக முயற்சிகளில் ஈடுபட்டார். றோ-வின் தலைவர்
சதுர்வேதி டில்லியில் இருந்து கொண்டு, தமது ஆட்களை வைத்து பாங்காக்கில்
தனிப் பாதையில் அதே முயற்சியில் ஈடுபட்டார்.

அமைச்சர் முகர்ஜி, தாய்லாந்து வெளியுறவு அமைச்சின் ஊடாக கே.பி.-யை
கைப்பற்றப் பார்த்தார். றோ தமது ஆட்களை பிரைவேட்டாக இதில் இறக்கியதுடன்,
தாய்லாந்தின் மற்றோர் அமைப்புடனும் தொடர்பில் இருந்தது. அந்த அமைப்பின்
பெயர், சம்னக்காவோகுரொங் ஹங்சாட். (Sahmnakkhaogrong-Hangshaat)
தாய்லாந்திலுள்ள 5 பிரதான உளவு அமைப்புகளில் இதுவும் ஒன்று. அதன் பெயரை
தமிழுக்கு கொண்டுவந்தால், தேசிய பாதுகாப்பு கட்டமைப்பு.

தாய்லாந்து வெளியுறவு அமைச்சு கே.பி. பற்றி எந்தத் தகவலையும் கொடுக்க
முடியாத நிலையில் இருக்க, பிரணாப் முகர்ஜி, தாய்லாந்து பிரதமரிடம் இது
தொடர்பாக நேரில் பேசினார்.

பிரணாப் முகர்ஜியால் என்ன செய்ய முடிந்தது? றோவால் எதுவரை போக முடிந்தது? அந்த விபரங்கள் தொடரின் அடுத்த பாகத்தில்…


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? Empty Re: ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா?

Post by மாலதி Wed Jun 13, 2012 1:39 pm

அத்தியாயம் 6
ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா?

பாங்காக்கில் இந்திய உளவுத்துறை றோ ஒரு பக்கமாக கே.பி.-யைத்
தேடிக் கொண்டிருக்க, இந்தியாவின் அன்றைய வெளியுறவு அமைச்சர் பிரணாப்
முகர்ஜி எப்படியாவது கே.பி.-யை இந்திய அரசிடம் ஒப்படைக்குமாறு தாய்லாந்து
அரசுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார். தாய்லாந்து வெளியுறவு
அமைச்சுக்கு கே.பி. பற்றி எந்தத் தகவலும் தெரிந்திராத நிலையில், பிரணாப்
முகர்ஜி, தாய்லாந்து பிரதமரிடம் இது தொடர்பாக நேரில் பேசினார்.

இதையடுத்து தாய்லாந்து பிரதமர் அலுவலகமும் இந்த விவகாரத்தில் ஆர்வம் காட்டத் தொடங்கியது.

பிரணாப் முகர்ஜியும் தமது தாய்லாந்து சுற்றுப் பயணத்தின் நாட்களை
நீடித்து, பாங்காக்கில் மேலதிகமாக இரு தினங்கள் தங்கியிருந்தார். றோ தமது
ஆட்களை பிரைவேட்டாக கே.பி.யை தேடும் நடவடிக்கையில் இறக்கியதுடன்,
தாய்லாந்தில் 5 பிரதான உளவு அமைப்புகளில் ஒன்றான தேசிய பாதுகாப்பு
கட்டமைப்பு முலம் தேடிக்கொண்டு இருந்தது.

ஸ்ரீலங்கா உளவுத்துறை, தாய்லாந்து போலீஸ் துறையின் உதவியுடன் தேடிக்
கொண்டிருக்க, சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் கே.பி.யை கைது செய்ய
இன்டர்நேஷனல் வாரண்ட், மற்றும் தாய்லாந்து நீதிமன்ற அனுமதி ஆகியவை சகிதம்
பாங்காக்கில் கே.பி. தொடர்பான இடங்களை முற்றுகையிட்டு தேடியது.

இப்படியாக 4 தரப்பினர் தேடிக்கொண்டிருந்த நேரத்தில்தான், உடொன்-தானி
ஏர்போர்ட்டில் இருந்து லாவோஸ் செல்ல முடியாமல் கே.பி. பாங்காக் நோக்கி
திரும்பி வந்துகொண்டிருக்கும் விஷயம், தாய்லாந்து உளவுத்துறையின்
குறிப்பிட்ட ஒரு எலிமென்டுக்கு தெரியவந்தது. இவர்களுக்கு பாங்காக்கில்
கே.பி.-யை ஆளுக்காள் தேடிக் கொண்டிருக்கும் சகல விஷயங்களும் தெரியும்.

கே.பி. பாங்காக்கில் தலையைக் காட்டினால், ஏதோ ஒரு தரப்பிடம் சிக்கிக்
கொள்ள சான்ஸ் உள்ளது என்பதைப் புரிந்துகொண்ட இந்த உளவுத்துறை எலிமென்ட்,
கே.பி.-யை தாய்லாந்துக்கு வெளியே அனுப்பிவிடுவதுதான் தற்போது செய்ய
வேண்டியது என்று முடிவெடுத்தது. பாங்காக்கில் அவரைத் தேடும் 4
தரப்பினராலும் ஏற்பட்ட நெருக்கடி இருந்ததால், வேறு மார்க்கமாகவே வெளியே
அனுப்புவது என்று முடிவு செய்தது.

அதற்காக தமது தொடர்புகளை பயன்படுத்தி சில முன்னேற்பாடுகளைச் செய்தார்கள்
அவர்கள். அவர்களுக்கு ஏற்பாடு செய்ய சுலபமான எக்ஸிட் பாயின்டாக இருந்த
இடம் உடொன்-தானி என்பதால், அங்கிருந்து வெளியேறுவதற்கான ஏற்பாடுகளே
அவர்களால் செய்யப்பட்டன.

பாங்காக் நோக்கி வந்துகொண்டிருந்த கே.பி.-யை தொடர்பு கொண்ட அவர்கள்,
வந்த பாதையிலேயே மீண்டும் திரும்பி உடொன்-தானிக்கு போகச் சொன்னார்கள். அந்த
விமான நிலையத்தில் இருந்து வெளியேறுவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு
விட்டதாக தெரிவித்த அவர்கள், கே.பி.-யிடமுள்ள பாஸ்போர்ட்டுடன் எந்த
நாட்டுக்கு செல்ல முடியுமோ, அங்கே செல்ல ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னார்கள்.

அடுத்த சில மணி நேரத்தில் கே.பி.-யிடம் இருந்து தகவல் வந்து சேர்ந்தது.
மலேசியா செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அந்தத் தகவல் கூறியது.
அந்த நாட்களில் உடொன்-தானி ஏர்போர்ட்டில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கு,
சாட்டர் ரூட் சர்விஸ் ஒன்றை நடாத்திவந்தது டைகர் ஏர்வேஸ். அதில்
கே.பி.-க்கு டிக்கெட் எடுக்கப்பட்டிருந்த விபரம் தாய்லாந்து உளவுத்துறை
எலிமென்டுக்கு வந்து சேர்ந்தது.

இந்த ஏற்பாடு, சுலபமாக இருந்தது. உடொன்-தானி ஏர்போர்ட்டில் உள்ள
இமிகிரேஷன் அதிகாரிகள் மனது வைத்தால் போதும், சிக்கல் இல்லாமல்
தாய்லாந்தைவிட்டு வெளியேறிவிடலாம். அதை கச்சிதமாக செய்து முடித்தது
தாய்லாந்து உளவுத்துறையின் எலிமென்ட்.

இப்படியாக கே.பி. தாய்லாந்திலிருந்து வெளியேறிய பின்னர், அதையே தமக்கு
சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது தாய்லாந்து உளவுததுறை. தாய்லாந்தில்
அவரைத் தேடிக் கொண்டிருந்த 4 தரப்பினரிடமும், உடொன்-தானி ஏர்போர்ட்
இமிகிரேஷன் எக்ஸிட் ரெக்கார்டுகளை காட்டி, கே.பி. இப்போது தாய்லாந்தில்
இல்லை என்று எஸ்டாபிளிஷ் பண்ணிக் கொண்டார்கள்.

இப்படித்தான் கே.பி. தாய்லாந்தில் இருந்து வெளியேறி, சிங்கப்பூர் ஊடாக
மலேசியா சென்று அங்கே தங்கியிருந்தார். அதையடுத்தே நார்வே அதிகாரிகளை
கோலாலம்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடாத்துவதற்கும் ஏற்பாடுகள்
செய்யப்பட்டிருந்தன.

தாய்லாந்து எபிசோட் நடைபெற்ற நீண்ட காலமாகிவிட்ட நிலையில், நார்வே
அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்கு தம்மை தாய்லாந்துக்கு வருமாறு
அழைத்திருப்பதாக நினைத்துக்கொண்டு அமெரிக்காவில் இருந்து உருத்திரகுமாரன்
பாங்காக் சென்று இறங்கியது இப்படித்தான்.

பாங்காக்கில் தன்னை அழைத்துச் செல்ல யாரும் வரவில்லை என்று அறிந்தவுடன்,
திட்டம் ஏதோ ஒரு இடத்தில் சறுக்கி விட்டது உருத்திரகுமாரனுக்கு தெரிந்தது.
அவர், தனது தொடர்பாளர் ஒருவரிடம் தாம் பாங்காக் விமான நிலையத்தில் இறங்கி
நிற்பதாகவும், கே.பி.-யின் ஆட்கள் யாரையும் அங்கே காணவில்லை என்றும்
தெரிவித்தார். அந்தத் தகவல் மலேசியாவுக்கு போய்ச் சேர்ந்தது.

அதன்பிறகே என்ன நடந்தது என்று புரிந்து கொள்ளப்பட்டது. உருத்திரகுமாரனை
பாங்காக்கில் இருந்து புறப்பட்டு கோலாலம்பூருக்கு வந்து சேருமாறு தகவல்
கொடுக்கப்பட்டது.

இங்கே வந்தது அடுத்த சிக்கல்.

உருத்திரகுமாரன் பயணம் செய்தது ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்டில். அப்போது அந்த
பாஸ்போர்ட்டுக்கு மலேசியா செல்வதற்கு விசா தேவை. இவரோ அமெரிக்காவில்
மலேசியா விசா எடுக்காமலேயே தாய்லாந்துவரை வந்திருந்தார். இந்தக் கட்டத்தில்
இருந்த ஒரே வழி, பாங்காக் ஏர்ப்போர்ட்டுக்கு வெளியே சென்று, அங்கிருந்த
மலேசியத் தூதரகத்தில் விசா எடுக்க வேண்டும்.

மலேசியத் தூதரகம் பாங்காக் டவுன்-டவுனில் துங்மகாமெக் என்ற இடத்திலுள்ள
சத்தோன் ரேடில் உள்ளது. உருத்திரகுமாரனுக்கோ, பாங்காக் பரிச்சயமில்லாத
இடம். தன்னை யாராவது வந்து மலேசிய தூதரகத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும்
என்றார் அவர்.

பாங்காக்கில் இருந்து வெளியேறியபின், தனது பாங்காக் தொடர்புகளை
பயன்படுத்த கே.பி விரும்பவில்லை. பாங்காக்கில் இருந்து உருத்திரகுமாரனை
மலேசியாவுக்கு கொண்டுவந்து சேர்க்க வேண்டுமென்றால், யாரையாவது பாங்காக்
ஏர்போர்ட்டுக்கு அனுப்ப வேண்டும். வன்னியிலோ யுத்தம் இறுதிக் கட்டத்தை
நெருங்கிக் கொண்டிருந்தது. மலேசியாவிலோ, நார்வே குழுவினரைச் சந்திப்பதற்கு
நாள் குறிக்கப்பட்டு விட்டது.

உருத்திரகுமாரனோ, பாங்காக் ஏர்போர்ட்டின் அரைவல் ஹாலில் நிற்கிறார். அதிக அவகாசம் கிடையாது.

நார்வே குழுவினருடன் பேசுவது என்று முடிவாகியதும், அமெரிக்காவில்
இருந்து உருத்திரகுமாரன், ஆஸ்திரேலியாவில் இருந்து ஜோய் மகேஸ்வரன்
ஆகியோருடன் கோலாலம்பூருக்கு வருமாறு கூறப்பட்ட மற்றொருவர் பேரின்பநாயகம்.
இவர் கனடாவில் இருந்து கோலாலம்பூர் வந்து சேர்ந்திருந்தார்.

உருத்திரகுமாரனை பாங்காக்கில் சந்தித்து மலேசிய விசா எடுத்துக் கொடுத்து
கோலாலம்பூர் அழைத்துவர பேரின்பநாயகத்தை அனுப்பி வைப்பது என்று
முடிவாகியது. பேரின்பநாயகம் உடனடியாக கோலாலம்பூரில் இருந்து விமானம்
பிடித்து பாங்காக் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அவர் கனேடிய பாஸ்போர்ட்டில் பயணிப்பதால், இந்த நாடுகள் எதற்கும் முன்கூட்டியே விசா எடுக்கத் தேவையில்லை.

கோலாலம்பூரில் இருந்து பாங்காக் செல்ல விமானப் பயணம் வெறும் 2 மணி
நேரம்தான். இதனால், உருத்திரகுமாரன் பாங்காக் ஏர்போர்ட்டில் காத்திருக்க
சில மணி நேரத்தில் அங்கே போய் இறங்கினார் பேரின்பம். இவர்கள் இருவரும்
பாங்காக் விமான நிலையத்துக்கு வெளியே வரும் நேரத்தில், மலேசியத்
தூதரகத்தின் அலுவலக நேரம் முடிந்து விட்டது.

2009 பிப்ரவரி மாதம் 26-ம் தேதி வியாழக்கிழமை. மலேசியா தலைநகர்
கோலாலம்பூர், ஜாலன் ஸ்டெசென் சென்ட்ரல் பகுதியில் அமைந்துள்ள ஹில்டன்
ஹோட்டலில் நார்வே குழுவினர், புலிகளை ரகசியமாக சந்திப்பது என்று ஏற்பாடு
ஆகியிருந்தது. ஹில்டன் ஹோட்டலில் ஒரு suite-ல் காலை 10 மணிக்கு
பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட வேண்டும்.

அதற்குமுன் உருத்திரகுமாரனும், பேரின்பநாயகமும் மலேசியா திரும்ப வேண்டும்.

உருத்திரகுமாரன் பாங்காக் வந்திறங்கியது 24-ம் தேதி. பேரின்பம் அவரை
பாங்காக் விமான நிலையத்தில் சந்தித்ததும் 24-ம் தேதி. ஒருநாள் இரவு அவர்கள்
பாங்காக் ஹோட்டல் ஒன்றில் தங்கிவிட்டு சத்தோன் ரோடில் உள்ள மலேசியத்
தூதரகத்துக்குச் சென்றது 25-ம் தேதி காலை. அன்றைய தினமே விசா
கொடுத்துவிட்டால், 26-ம் தேதி காலை 10 மணிக்கு கோலாலம்பூரில் நார்வே
குழுவினருடன் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள முடியும்.

இந்த இடத்தில் அடுத்த சிக்கல். ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்டுக்கு விசா
கொடுப்பதற்கு 24 மணி நேரம் கால அவகாசம் தேவை என்று கூறிவிட்டது
தாய்லாந்தில் இருந்த மலேசிய தூதரகம். அதன்படி, பேச்சுவார்த்தை நடைபெறும்
26-ம் தேதிதான் விசா கிடைக்கும்.

அதன்பின் என்ன நடந்தது? அடுத்த பாகத்தில் பார்க்கலாமா?

-பல்வேறு தரப்புகளில் இருந்து பெற்ற தகவல்களுடன், ரிஷி


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? Empty Re: ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா?

Post by மாலதி Wed Jun 13, 2012 1:41 pm

அத்தியாயம் 7
ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா?

உருத்திரகுமாரனின் ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்டுக்கு விசா கொடுப்பதற்கு
24 மணி நேரம் கால அவகாசம் தேவை என்று கூறிவிட்டது தாய்லாந்தில் இருந்த
மலேசிய தூதரகம். அதன்படி, நார்வே குழுவினருடன் பேச்சுவார்த்தை நடைபெறும்
26-ம் தேதிதான் விசா கிடைக்கும் என்றாகிவிட்டது. 26-ம் தேதி காலை 9 மணிக்கு
கோலம்பூர் ஹில்டன் ஹோட்டலில் இவர்களைச் சந்திக்க நார்வே குழு சகல
ஏற்பாடுகளையும் செய்துவிட்ட நிலையில், அதிலும் மாற்றங்கள் ஏதும் செய்ய
முடியாது.

இந்த நிலையில் இவர்களுக்கு இருந்த ஒரே சாய்ஸ், உருத்திரகுமாரனை
பாங்காக்கில் விட்டுவிட்டு, பேரின்பநாயகம் மலேசியா திரும்ப வேண்டியதுதான்.

உருத்திரகுமாரன் 26-ம் தேதிவரை பாங்காக்கில் காத்திருந்து மலேசிய விசாவை
எடுத்துக்கொண்டு, அதன்பின் கோலாம்பூர் வந்து சேர்வதைத் தவிர வேறு
வழியில்லை. பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்கு என்று அமெரிக்காவில்
இருந்து வந்த அவர், நார்வே குழுவினருடன் 26-ம் தேதி காலை நடைபெறவிருந்த
பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள முடியாது போனது துரதிஷ்டமே. ஆனால், ஒருவேளை
நார்வே குழுவினருடனான பேச்சுவார்த்தை ஒரு செஷனுடன் முடிந்து விடாமல்
அடுத்தடுத்த நாட்களும் தொடர்ந்தால், புலிகள் குழுவில் இவரும் கலந்துகொள்ள
முடியும்.

இப்படி முடிவு எடுக்கப்பட்டபின், உருத்திரகுமாரனை பாங்காக்கில் விட்டுவிட்டு 25-ம் தேதியே கோலாலம்பூர் திரும்பினார் பேரின்பநாயகம்.

2009 பிப்ரவரி மாதம் 26-ம் தேதி. வியாழக்கிழமை. மலேசியா தலைநகர் கோலாலம்பூர்.

ஜாலன் ஸ்டெசென் சென்ட்ரல் பகுதியில் அமைந்துள்ள ஹில்டன் ஹோட்டலில்
நார்வே குழு, புலிகளை ரகசியமாக சந்திப்பது என்று ஏற்பாடு ஆகியிருந்தது.

ஸ்ரீலங்கா வடபகுதியில் ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே
யுத்தம் கடுமையாக நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம் அது. ராணுவம் வேகமாக
முன்னேறிக் கொண்டிருந்தது. புலிகள் ஒவ்வொரு முனையிலும் தமது இடங்களைக்
கைவிட்டு பின்வாங்கிக் கொண்டிருந்தனர்.

விடுதலைப்புலிகளின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக புலிகளின் தலைவர்
பிரபாகரனால் நியமிக்கப்பட்ட கே.பி., நார்வே குழுவைச் சந்திக்க வேண்டிய
2009, பிப்ரவரி 26-ம் தேதி, யுத்த முனையில் புலிகளின் நிலைமை மிகவும்
கவலைக்குரிய விதத்தில் இருந்தது. புலிகளை தாக்கியபடி முன்னேறிய ஸ்ரீலங்கா
ராணுவத்தின் 57-வது டிவிஷன் விஸ்வமடு டவுனுக்கும், 58-வது டிவிஷன்
தேவிபுரத்துக்கும், 59-வது டிவிஷன் முல்லைத்தீவு டவுனுக்கும், 55-வது
டிவிஷன் சாலை கிராமத்துக்கும், அதிரடிப்படை-2 உடையார்கட்டு குளத்துக்கும்,
அதிரடிப்படை-3 அம்பகாமத்துக்கும், அதிரடிப்படை-4 ஒட்டுசுட்டானுக்கும் வந்து
விட்டது.

மூன்று புறமும் ராணுவம், ஒரு புறம் கடல் என்று மிகச்சிறிய பகுதி ஒன்றில்
புலிகள் முற்றுகையில் சிக்கியிருந்தனர். புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட
போராளிகள், தளபதிகள், அனைவருமே அந்த சிறிய நிலப்பரப்புக்குள்தான்
இருந்தனர்! வேகமாக முன்னேறும் ராணுவத்தை தடுத்து நிறுத்தாவிட்டால்,
முற்றுகைக்குள் சிக்கியிருந்த புலிகளை விரைவில் ராணுவம் முழுமையாக
அழித்துவிடும்.

ஸ்ரீலங்காவுக்கு வெளியேயுள்ள தமிழ் மக்களிடம், புலிகள் பெரிய தாக்குதல்
ஒன்றை நடத்தி ராணுவ முற்றுகையை உடைக்கப் போகிறார்கள் என்று சொல்லிக்
கொண்டிருந்தார்கள். தமிழக அரசியல்வாதிகளும் கிட்டத்தட்ட அப்படியொரு
பிரமையைதான் ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். மொத்தத்தில் பிரச்சாரம் வேறு,
நிஜம் வேறு என்ற நிலையில் இருந்தது போர்க்களம். ஸ்ரீலங்காவுக்கு வெளியே
மிகச் சிலருக்கே நிலைமையின் தீவிரம் புரிந்திருந்தது.

நிலைமை புரிந்திருந்த சிலரில் கே.பி.யும் ஒருவராக இருந்தார். வேகமாக
முன்னேறிவரும் ஸ்ரீலங்கா ராணுவத்தை யுத்த நிறுத்தம் ஒன்றின் மூலம்
தடுக்கும் முயற்சியில்தான் அவர் நார்வே குழுவை ரகசியமாகச் சந்திக்க
முனைந்திருந்தார்.

வியாழக்கிழமை காலை கே.பி. குழுவினர் ஹில்டன் ஹோட்டலை சென்றடைந்தபோது, ஹோட்டல் முழுவதுமே மலேசிய உளவுத்துறையின் கண்கள் பரவியிருந்தன.

இந்தச் சந்திப்புக்காக ஸ்ரீலங்காவுக்கான நார்வே தூதர் டோர் ஹட்டேர்ம்
இதற்காக கொழும்பிலிருந்து மலேசியா வந்திருந்தார். ராஜதந்திர நடைமுறைப்படி
அவரது வருகை நார்வே அரசினால் மலேசிய வெளியுறவுத் துறைக்கு
அறிவிக்கப்பட்டிருந்தது. ஹில்டன் ஹோட்டலில் அவர் ஒரு பேச்சுவார்த்தையில்
கலந்து கொள்கிறார் என்ற விபரமும் கூறப்பட்டிருந்தது.

ஸ்ரீலங்காவில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டு இருக்கையில் இரு தரப்புக்கும்
இடையே நோர்வே பேசிக்கொண்டிருக்கிறது என்ற விபரமும் ராஜதந்திர வட்டாரங்களில்
தெரிந்திருந்தது. மலேசிய உளவுத்துறைக்கு இந்த விபரங்கள் போதுமே, இவர்கள்
சந்திக்கப்போவது புலிகளின் பிரதிநிதிகளைத்தான் என்று ஊகித்துக் கொள்வதற்கு!
அதனால், அன்று காலையில் இருந்தே ஹில்டன் ஹோட்டல் மலேசிய உளவுத்துறையின்
கடுமையாக கண்காணிப்பில் இருந்தது.

இங்குள்ள அடுத்த ரிஸ்க், கே.பி.யை கைது செய்வதற்காக தேடிக்கொண்டு இருந்தது சர்வதேச போலீஸ் இன்டர்போல்.

ஹில்டன் ஹோட்டலில் புலிகளின் சார்பில் தலைகாட்டப்போவது அவர்தான் என்று
தெரியவந்தால், உடனடியாக கைது செய்ய வந்துவிடுவார்கள் அவர்கள். இப்படியொரு
நிலையில் ரிஸ்க் எடுத்துத்தான் ஹில்டன் ஹோட்டல் சந்திப்புக்காகச்
சென்றிருந்தார் கே.பி. அவருடன் சென்றிருந்தவர்கள், கனடாவில் இருந்து
சென்றிருந்த பேரின்பநாயகம், ஆஸ்திரேலியாவில் இருந்து சென்றிருந்த ஜோய்
மகேஸ்வரன், மற்றும் கே.பி.யின் உதவியாளர் பொறி.

காலை 9 மணிக்கு ஹில்டன் ஹோட்டலில் இருந்த suit ஒன்றில் பேச்சுவார்த்தை
தொடங்கியது. இந்தச் சந்திப்புக்காக ஸ்ரீலங்காவுக்கான நார்வே தூதர் டோர்
ஹட்டேர்முடன், நோர்வே தலைநகர் ஆஸ்லோவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த
தாமஸ் என்பவரும், எரிக் சோஹேமின் உதவியாளர் ஒருவரும் கலந்து கொண்டனர்.

யுத்தம் நடைபெறும் பகுதியில் சிறிய ஏரியாவில் பொதுமக்கள் சிக்கியுள்ளதை
சுட்டிக்காட்டிய கே.பி., “யுத்த முனையில் இருந்து மக்களை வெளியே கொண்டு
வருவதற்கு யுத்த நிறுத்தம் ஒன்று அவசியம் என்பதுதான் எமது (புலிகளின்)
நிலைப்பாடு. அதற்கு நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று ஆரம்பித்தார்.
இது ஒருவிதமான பார்கேயினிங் தந்திரம்தான். (‘மக்களைக் காப்பாற்றுவதற்கும்’
என்றுள்ள நிலைமையை, ‘மக்களைக் காப்பாற்றுவதற்கு’ என்று ஒரு ‘ம்’மை
தவிர்த்துவிட்டு சொல்வது)

அதேநேரத்தில், யுத்த முனையில் என்ன நடக்கிறது, யாருடைய கை மேலோங்கி
இருக்கிறது, நிலைமை யாருக்கு சாதகமாக இருக்கிறது என்பது நார்வே
குழுவினருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

நார்வே தூதர் டோர் ஹட்டேர்ம், “நாம் வெளிப்படையாகப் பேசுவோமா? ஸ்ரீலங்கா
அரசு தமக்கு வெற்றி நிச்சயம் என்ற நிலையில் இருக்கிறது. உங்களை ராணுவம்
எல்லாத் திசையிலும் சூழ்ந்து முற்றுகை இட்டிருக்கிறது என்பது உங்களுக்கு
நன்றாக தெரியும். வெற்றி நிச்சயம் என்ற நிலையில் யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு
வருவதற்கு ஸ்ரீலங்கா அரசுக்கு எந்த தேவையும் கிடையாது. யுத்த நிறுத்தம்
ஒன்று உங்களுக்கு அவசியமாக இருக்கிறது” என்றார்.

“புலிகளுக்கு அழிவு என்பதைவிட, யுத்தத்தை தொடர்ந்தால் பொதுமக்கள்
தரப்பிலும் அழிவு அதிகமாக இருக்கும் என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்”
என்றார் கே.பி.

“அது எங்களுக்கும் புரிகிறது. அதை தவிர்க்க விரும்பினால் நீங்களும்
இறங்கி வர வேண்டும். நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருந்துகொண்டு அரசாங்கம்
இறங்கி வரவேண்டும் என்று எதிர்பார்த்தால் ஏதும் நடக்காது. காரணம்,
இறங்கிவர வேண்டிய தேவை ஏதும் அவர்களுக்கு கிடையாது. அவர்கள் யுத்தத்தை
முழுமையாக நடத்தி முடிப்பதையே விரும்புகிறார்கள்”

“யுத்தத்தை நடத்தி முடிப்பது, அரசியல் தீர்வு என்பதற்கான சான்ஸையே
இல்லாது செய்துவிடும். யுத்தம் நடந்து முடிந்துவிட்டால், தமிழர்களுக்காக
அரசுடன் பேசுவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள். அதனால்தான், யுத்த
நிறுத்தம் ஒன்றை கோருகிறோம்” என்று மற்றொரு கோணத்தில் வந்தார் கே.பி.

“நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறோம். யுத்த நிறுத்தம் வந்தால்
நல்லதுதான். அதே நேரத்தில் நாங்கள் சொல்வதையும் நீங்கள் புரிந்து கொள்ள
வேண்டும். இப்போது பலமான நிலையில் இருப்பது ஸ்ரீலங்கா அரசாங்கம்தான்.
அவர்களை சம்மதிக்க வைக்க வேண்டுமானால், நீங்கள் எதையாவது இழக்கத் தயாராக
இருக்க வேண்டும். To get something, you need to give something first.
அதற்கு நீங்கள் தயாரா என்பது முதலில் தெரிய வேண்டும்”

“நாங்கள் எந்தளவுக்கு இறங்கிவர வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?”

“யுத்தம் இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டது. உங்களுக்கும் கால அவகாசம்
அதிகம் இல்லை. இப்போது உள்ள நிலையில் உங்களால் ஒரேயொரு விதத்தில்தான்
இறங்கிவர முடியும்”

“அது என்ன?”

“ஒரே வழி, நீங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கச் சம்மதிக்க வேண்டும். அதை
நீங்கள் செய்யத் தயாராக இருந்தால், நாம் ஸ்ரீலங்கா அரசுடன் பேசிப்
பார்க்கலாம். அதற்கு நீங்கள் தயார் இல்லை என்றால், விரைவில் யுத்தம்
முடிவுக்கு வருவதைப் பார்ப்பீர்கள். அந்த முடிவு எப்படி இருக்கும் என்பதை
நாங்கள் சொல்ல வேண்டியதில்லை” என்றார் நார்வே தூதர் டோர் ஹட்டேர்ம்.

“இதைப்பற்றி நான் முடிவெடுக்க முடியாது. புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன்தான் முடிவெடுக்க வேண்டும்.”

“சரி. அவருடன் பேசிவிட்டுச் சொல்லுங்கள்”

“இப்போது அங்குள்ள நிலை உங்களுக்குத் தெரியும். யுத்தம் மிக மும்மரமாக
நடந்துகொண்டுள்ள நிலையில், அவரை நேரில் சந்தித்துதான் இது தொடர்பாக விளக்க
முடியும். ஆயுதப் போராட்டம் நடத்தும் ஒரு அமைப்பிடம் ஆயுதங்களை கீழே
வையுங்கள் என்று போனில் சொல்லிச் சம்மதிக்க வைக்க முடியாது என்பதை நீங்கள்
புரிந்து கொள்வீர்கள்” என்றார் கே.பி.

தனது கூற்றை நியாயப்படுத்துவதற்காக, கடந்த 80-களின் இறுதியில் இந்திய
அமைதிப்படை ஸ்ரீலங்காவில் இருந்தபோது இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலை
ஏற்பட்டதை சுட்டிக்காட்டிய கே.பி., அப்போது தாமும், ஆன்டன் பாலசிங்கமும்
பாங்காக் சென்ட்ரல் ஹோட்டலில் வைத்துச் செய்த ரகசிய நடவடிக்கை ஒன்றை
மேலோட்டமாக தெரிவித்தார்.

பாங்காக் சென்ட்ரல் ஹோட்டலில் சுமார் 1 வாரம் நடைபெற்ற அந்த ரகசிய
நடவடிக்கையின் பின்னரே, புலிகளின் ஈழப்போரில் ஒரு பெரிய திருப்பம்
ஏற்பட்டது. அது என்ன என்பதை அடுத்த பாகத்தில் பார்க்கலாமா?

-விறுவிறுப்பு.காம் இணையத்துக்காக, ரிஷி


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? Empty Re: ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா?

Post by மாலதி Wed Jun 13, 2012 1:43 pm

ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? KP-Prabakaran-LTTE-20120202-1அத்தியாயம் 8
ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா?

யுத்தம் முடிவதற்கு 3 மாதங்களுக்கு முன், “விடுதலைப் புலிகள்
ஆயுதங்களை கீழே வைத்தால்தான் மேற்கொண்டு ஏதாவது செய்ய முடியும்” என்று
கூறிய நார்வேயுடன் எதற்காக பேசணும்? இந்த தொடரின் கடந்த அத்தியாயத்தை (கடந்த அத்தியாயங்களைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்) படித்த சிலர் எம்மிடம் கேட்ட கேள்வி இது. இந்த கேள்விக்கு ஒரு பதில் உள்ளது.

அது ரொம்ப குரூரமான பதில்தான். ஆனால், துரதிஷ்டவசமாக.. நிஜமான பதில் அதுதான்.

விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கணும் என்று எந்த நாடும்
வற்புறுத்தவில்லை. அந்த நாடுகள் சொன்னதெல்லாம், “இந்த யுத்தத்தில் நீங்கள்
ஜெயிக்கப் போவதில்லை. உயிர் தப்பணும் என்றால் ஆயுதங்களை கீழே வையுங்க.
இல்லைன்னா, உங்க இஷ்டம்” என்பதைத்தான்.

இப்போது ஆளாளுக்கு, “புலிகள் அழிக்கப்படுவதை சர்வதேசமே வேடிக்கை
பார்த்துக் கொண்டு இருந்தது” என்று ஒப்பாரி வைக்கிறார்கள். சர்வதேசம்
சான்ஸ் கொடுத்துவிட்டுதான், வேடிக்கை பார்த்தது. யுத்தம் முடிவதற்கு 3
மாதங்களுக்குமுன் 2009 பிப்ரவரியில் கொடுத்த சான்ஸை புலிகளின் தலைவர்
பிரபாகரன் பற்றிக் கொள்ளவில்லை. மே மாத இரண்டாவது வாரத்தில், “சான்ஸை
மீண்டும் தாருங்கள்” என்று போனபோது டூ லேட்!

இந்த உண்மையை சொல்ல இங்கே மீடியா கிடையாது. யாராவது சொல்ல வாய் திறந்தால் துரோகி என்பார்கள்! ஆனால், அதைத்தான் இந்த தொடர் சொல்கிறது.

யுத்தம் முடிவை நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில், அதன் முடிவு
விடுதலைப் புலிகளுக்கு சாதகமாக இருக்கப் போவதில்லை என்பதற்கான அறிகுறிகள்
நன்றாக தெரிய தொடங்கியிருந்தன. “இதோ யுத்தம் புலிகளுக்கு சாதகமாக திரும்ப
போகிறது. ரொம்ப நாளா காத்திருந்த புலிகள் திருப்பி அடிக்க போறாங்க” என்று
விடுதலைப் புலிகளின் பிரசார ஊடகங்கள் சொல்லிக் கொண்டு இருந்தன.

ஆனால், அநேக நாடுகளுக்கு தத்தமது உளவுத்துறைகள் மூலம் யுத்தத்தின் முடிவு எப்படி இருக்கும் என்று தெரிந்திருந்தது.

வேறு நாடுகளுடன் தொடர்பில் இருந்த தமிழர்களிடம், “யுத்தத்தில் புலிகள்
தொடர்ந்தும் தாக்குப் பிடிக்க போவதில்லை” என்பதை அந்த நாடுகள் தெளிவாகவே
கூறியிருந்தன. “இனியும் யுத்தத்தை தொடரும் எண்ணத்தை விட்டுவிட்டு,
போராளிகளினதும் மக்களினதும் உயிர்களை காப்பாற்றும் நடவடிக்கைகளை எடுக்க
வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று சில வெளிநாட்டு உளவுத்துறைகளும் கூறின.

ஆனால், நம்புவதற்குதான் ஆளில்லை.

அமெரிக்க உளவுத்துறைகளில் ஒன்றில் (சி.ஐ.ஏ. அல்ல) ஆசிய விவகாரங்களை
கவனிக்கும் அதிகாரி ஒருவர், “புலிகளின் தலைவர் யுத்தத்தை தொடரும் முடிவை
எடுத்தால், தனது சொந்த போராளிகளை பலிகொடுக்க போகிறார் என்று அர்த்தம்.
யுத்தம் முடியும்போது அவர்கூட உயிர் தப்புவது சந்தேகமே” என்றார் மிகத்
தெளிவாக.

அதே நேரத்தில், அமெரிக்காவின் மற்றொரு உளவுத்துறை சி.ஐ.ஏ.-க்கு என்ன தெரிந்திருந்தது? சுருக்கமாக சொன்னால் எல்லாமே தெரிந்திருந்தது.

புலிகளின் தலைவர் பிரபாகரன், ராணுவத்தால் முற்றுகை இடப்பட்ட சிறிய
பகுதிக்குள் சிக்கியிருக்கிறார் என்பதை சி.ஐ.ஏ. நிச்சயமாக தெரிந்து
வைத்திருந்தது. 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாத நடுப்பகுதியில் தொடங்கி, அந்த
சிறிய பகுதிக்குள் பிரபாகரனின் நடமாட்டங்கள் எங்கெல்லாம் உள்ளன என்பதை
அமெரிக்க reconnaissance satellite இமேஜ்கள் உறுதி செய்து கொண்டிருந்தன. 24
மணிநேர கவரேஜ் அவர்களிடம் இருந்தது.

வன்னிக்குள் முற்றுகைக்குள் சிக்கியிருந்த புலிகள் ‘தமது ரகசியங்கள்’
என்று நினைத்திருந்த பல விஷயங்கள் அமெரிக்க உளவுத்துறைக்கு விலாவாரியாக
தெரிந்திருந்தன. விடுதலைப் புலிகளின் தலைவர் எங்கே இருக்கிறார்? எப்போது
வெளியே வருகிறார்? புலிகளின் நிஜமான பலம் எவ்வளவு? என்று ஆரம்பித்து பூரா
விஷயங்களையும் அவர்கள் அறிந்திருந்தார்கள்.

புலிகள் ரகசியம் என்று நினைத்து வைத்திருந்தவற்றை வெளிநாட்டு
உளவுத்துறைகள் எப்படி அறிந்து கொண்டார்கள்? யுத்தம் முடிந்தபின்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களை சொல்லிக் கொண்டார்கள்.

தமிழ் மீடியாக்கள் சில தமது அறிவுக்கு எட்டிய வகையில், காரணம் கூறின.
“துரோகி காட்டிக் கொடுத்தான், துரைசாமி ஊடுருவினான்” என்று சோழர்
சரித்திரக் கதை உறையூர் ஒற்றர்கள் பாணியில் அம்புலிமாமா கதைகள் சொல்லிக்
கொண்டிருந்தார்கள்.

Reconnaissance என்ற சொல்லுக்கு ஸ்பெல்லிங்கூட தெரியாத இந்த
அப்பாவிகளுக்கு, யுத்தம் நடைபெறும் இடம் ஒன்றில் வெளிநாட்டு உளவுத்துறைகள்
HUMINT (Human Intelligence) மூலம் கிடைக்கும் தகவல்களைவிட பெறுமதியான
தகவல்களை SIGINT (Signals intelligence) மூலம் பெறுகிறார்கள் என்று தெரிய
சான்சே இல்லை என்பதை, அவர்களது மீடியாக்களில் வெளியாகும் செய்திகளின்
டைப்பை பார்த்தாலே நீங்கள் புரிந்து கொள்ளலாம். (முதலை வாயில் சிக்கிய
ஆட்டுக்குட்டி – காணொளி பாரீர்)

அதே நேரத்தில், அனைத்துலக உளவுத்துறை ஆபரேஷன்களின் ரியாலிட்டி என்பது வேறு.

வன்னி யுத்தக் களத்தில் புலிகள் என்ன செய்கிறார்கள் என்பது
அமெரிக்காவில் ஃபோர்ட் பெல்வொய்ரில் (அட்லான்டிக் கரையோரம் உள்ள வர்ஜீனியா
மாநிலத்தில் உள்ள இடம்) அமைந்திருக்கும் NRO (National Reconnaissance
Office) தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தில் (ground station), அமெரிக்க KH-11
தொழில்நுட்ப சட்டலைட் மூலம் பதிவாகிக் கொண்டிருந்தது. (KH-12 ரக
சட்டலைட்கள் ஸ்ரீலங்கா உளவு பார்த்தலுக்காக பயன்படுத்தப்படவில்லை)

சட்டலைட் பதிவுகள் சான்டிலி என்ற இடத்திலுள்ள (இதுவும்
வர்ஜீனியாவில்தான் உள்ளது) NRO-ன் தலைமைச் செயலகத்தில் இருந்து,
லாங்க்லியில் உள்ள சி.ஐ.ஏ. தலைமைச் செயலகத்துக்கு செல்ல, அவர்களது
சிட்சுவேஷன் ரிப்போர்ட்களில் புலிகள் தொடர்பாக, “..the chances of survival
are almost zero” என்ற வாக்கியம் இடம்பெற்றது.

புலிகள் ஆயுதங்களை கீழே வைத்தால் மட்டுமே, ‘மட்டுப்படுத்தப்பட்ட’
உதவிகளை செய்ய முடியும் என்றது அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.! இது அவர்களது
ஸ்டான்டர்ட் ப்ரொசீசர். ஜெயிக்க முடியாத பார்ட்டியின் கைகளில் ஆயுதங்கள்
இருக்கும்போது அருகே செல்லக்கூடாது என்பது சி.ஐ.ஏ.-யில் பாலபாடம்.

அமெரிக்க டிப்பார்ட்மென்ட் ஆஃப் ஸ்டேட், பொதுமக்களின் அழிவை
தடுப்பதற்கு, புலிகள் ஆயுதங்களை கீழே வைத்தால்தான் எந்த அரசியல் நகர்வையும்
எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தது. நார்வே அரசை புலிகளின்
தலைமையுடன் பேசி, ஆயுதங்களை கீழே வைக்க விரும்புகிறார்களா” என்று கேட்க
சொல்லியிருந்தது. இதில் அவர்களுக்கு (அமெரிக்கா, நார்வே) எந்தவித
சென்டிமென்டும் கிடையாது.

2009-ம் ஆண்டு பிப்ரவரியில் புலிகள் ஆயுதங்களை கீழே வைக்க
ஒப்புக்கொண்டால், உயிருடன் இருப்பவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம்
கொடுக்க அமெரிக்கா தயாராக இருந்தது. பாதுகாப்பு கொடுக்கும் அளவில்
அவர்களுக்கு வசதிகளும், பலமும் இருந்தன. அதை பயன்படுத்திக் கொள்ளவே கே.பி.
முயன்றார்.

புலிகளின் வேண்டுகோளை அடுத்தே, வன்னிக்கு வெளியே புலிகளால் அதிகாரபூர்வ பிரதிநிதியாக ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? KP-LTTE-20120130-1அறிவிக்கப்பட்ட
கே.பி.-யுடன் பேசுவதற்கு நார்வே தமது குழுவை, ஸ்ரீலங்கா அரசுக்கும்
தெரிவிக்காமல் மலேசியாவுக்கு அனுப்பி வைத்திருந்தது. புலிகள் ஆயுதங்களை
கீழே வைப்பது தொடர்பாக கே.பி. பேசியது இதனால்தான்.

கடந்த அத்தியாயத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கான பதில் இதுதான். இனி, கோலம்பூரில் நடந்ததை பார்க்கலாம்.

2009, பிப்ரவரி 26-ம் தேதி காலை 9 மணிக்கு ஹில்டன் ஹோட்டலில் இருந்த
suit ஒன்றில் நார்வே குழுவை கே.பி. சந்தித்தார். இந்தச் சந்திப்புக்காக
ஸ்ரீலங்காவுக்கான நார்வே தூதர் டோர் ஹட்டேர்முடன், நோர்வே தலைநகர்
ஆஸ்லோவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த தாமஸ் என்பவரும், எரிக்
சோல்ஹேமின் உதவியாளர் ஒருவரும் கலந்து கொண்டனர்.

புலிகள் சார்பாக கே.பி.-யுடன் நேரில் பேசவே நார்வே குழு விரும்பியது.
கே.பி.யுடன் அந்த சந்திப்பில் கலந்துகொண்ட பேரின்பநாயகம், நார்வே
குழுவினரின் சில கேள்விகளுக்கு பதில் கொடுத்தார். ஜாய் மகேஸ்வரன்,
கே.பி.யின் உதவியாளர் போலவே செயற்பட்டார். பொறி, குறிப்புகளை எடுத்துக்
கொண்டிருந்தார். கே.பி.தான் முற்று முழுதாக இதை டீல் செய்தார்.

இந்த சந்திப்பில் கலந்து கொள்வதற்கு முன்னர் கே.பி., விடுதலைப்
புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் தொலைத்தொடர்பு சாதனம் மூலம், “ஆயுதங்களை
கீழே வைக்க வேண்டும்” என்பதே நார்வேயின் நிலைப்பாடு போல உள்ளது என்பதை
தெரிவித்திருந்தார். பிரபாகரன் அதற்கு சம்மதம் தெரிவித்திருக்கவில்லை.
முழுமையாக நிராகரித்தார். ஆனால், நார்வேயுடன் தொடர்ந்து பேசுமாறு
கூறியிருந்தார்.

யுத்தத்தை தொடர்ந்தால் புலிகள் தோல்வியடைவார்கள் என்று நார்வேயும்,
அமெரிக்காவும், உளவுத்துறைகளும் உறுதியாக சொல்லிக்கொண்டிருக்க, தொடர்ந்து
யுத்தம் புரியும் முடிவை பிரபாகரன் எடுத்திருந்தார். “அவரது முடிவை மாற்ற
வேண்டுமென்றால், யாராவது வன்னிக்கு சென்று அவருடன் நேரில் பேசி புரிய வைக்க
வேண்டும் என்பதைத் தவிர வேறு வழியில்லை” என்றார் கே.பி.

தனது கூற்றை நியாயப்படுத்துவதற்காக, கடந்த 80-களின் இறுதியில் இந்திய
அமைதிப்படை ஸ்ரீலங்காவில் இருந்தபோது இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலை
ஏற்பட்டதை சுட்டிக்காட்டிய கே.பி., அப்போது தாமும், ஆன்டன் பாலசிங்கமும்
பாங்காக் சென்ட்ரல் ஹோட்டலில் வைத்துச் செய்த ரகசிய நடவடிக்கை ஒன்றை
தெரிவித்தார். (சுவாரசியமான அந்த விபரங்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்)

இறுதி யுத்தம் கடுமையாக நடந்துகொண்டிருந்த நிலையிலும், பிரபாகரனை
சந்திக்க வன்னிக்கு செல்ல தாம் தயாராக இருப்பதாக தெரிவித்தார் கே.பி.

வெளிநாடுகளில் பாதுகாப்பாக இருந்துகொண்டு, ஏப்பம் விடுவதுபோல ஏதாவது
கூறிக்கொண்டிருக்கும் ‘கருத்து கந்தசாமிகள்’ எடுக்க துணியாத ரிஸ்க் அது
என்பதை நார்வே தரப்பு புரிந்து கொண்டிருந்தது.

யுத்தம் நடந்துகொண்டு இருக்கையில், என்னதான் பாதுகாப்பு உத்தரவாதம்
கொடுக்கப்பட்டாலும், தற்செயலாக இலக்கு தவறிய ஷெல் ஒன்றுகூட கே.பி.யின்
உயிரைப் பறித்து விடலாம். யுத்த முனையில் எதுவும் நடக்கலாம். அதற்குள்
சென்று பிரபாகரனை சந்திக்க தாம் தயார் என்று கே.பி. கூறியதை இன்றும்
ஒப்புக் கொள்ளும் டோர் ஹட்டேர்ம், தற்போது ஆப்கானிஸ்தான் காபுல் நகரில்,
நார்வே தூதராக உள்ளார். (தொலைபேசி – 93 (0) 701 105 000)

இது தொடர்பாக நாம் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, “கே.பி.-யுடன் நடந்த
சந்திப்பின்போது, அவர் ரிஸ்க் எடுத்து யுத்த முனைக்கு செல்ல முன்வந்தார்.
அதற்கு இரண்டு வழிகள் இருந்தன. முதலாவது, கொழும்பு விமான நிலையம்வரை
சென்று, அங்கிருந்து யுத்தம் நடைபெறும் வன்னிப் பகுதிக்கு அவரை அனுப்பி
வைப்பது. ஸ்ரீலங்கா ராணுவத் தலைமையின் உதவியுடன்தான் அதை செய்ய முடியும்.
கொழும்பில் இருந்து போக்குவரத்து ஏற்பாடுகளை அவர்கள்தான் செய்ய வேண்டும்.

ரணில் விக்ரமசிங்கே பிரதமராக இருந்த நாட்களில் பல தடவைகள் நாம் (நார்வே
தூதரகம்) செய்து கொடுத்த ஏற்பாடு அது. ஆனால் அப்போது யுத்தம் நடைபெறவில்லை.
2009 பிப்ரவரியில் கடுமையான யுத்தம் வன்னிப் பகுதியில் நடந்து
கொண்டிருந்தது. க்ராஸ் ஃபயரில் கே.பி. சிக்கி உயிரிழக்கலாம்.

இரண்டாவது, கே.பி.-யை மாலதீவு வரை அழைத்துச் சென்று, ஸீ-பிளேன் மூலம்
வன்னியில் நந்திக்கடலில் அவரை தரையிறங்க வைப்பது. அதுவும் ரிஸ்க்தான்.
தாழப் பறக்கும் சீ-பிளேன், தரையிலிருந்து மிகச் சுலபமாக தாக்கி
வீழ்த்தப்படலாம். ஆனால், பிரபாகரனை சந்திக்க செல்வதற்காக இந்த ரிஸ்க்கை
எடுக்க தாம் தயார் என்று கே.பி. என்னிடம் கூறினார். அவரே ரிஸ்க் எடுக்க
தயாராக இருப்பதால், அதற்கான சில ஏற்பாடுகளை நான் செய்தேன்” என்றார் டோர்
ஹட்டேர்ம்.

அடுத்த கட்டமாக ஸ்ரீலங்கா அரசின் அனுமதியைப் பெற வேண்டும். அதில்தான்
டோர் ஹட்டேர்முக்கு சிக்கல் ஏற்பட்டது. அதை அடுத்த அத்தியாயத்தில்
பார்க்கலாம்… (தொடரும்)


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? Empty Re: ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா?

Post by மாலதி Wed Jun 13, 2012 1:44 pm

அத்தியாயம் 9
ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா?

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நார்வே மற்றும்
அமெரிக்காவின் அவசர சேதியுடன் சந்திப்பதற்கான ஆலோசனை கோலாலம்பூர் ஹில்டன்
ஹோட்டலில் முடியும் கட்டத்தில் இருந்தது. வன்னியில் புலிகளுக்கும்,
ஸ்ரீலங்கா ராணுவத்துக்கும் இடையே யுத்தம் இறுதிக் கட்டத்தில் நடந்துகொண்டு
இருந்த பகுதிக்கு தாமே நேரில் சென்று பிரபாகரனைச் சந்திக்க தயார் என்று
நார்வே தூதரிடம் கூறியிருந்தார் கே.பி.

2009-ம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவதற்கு 3 மாதங்களுக்கு முன்,
2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. யுத்தம்
கடுமையாக நடந்து கொண்டிருந்த அந்த நேரத்தில், கே.பி.யை வன்னிக்கு அனுப்பி
வைக்க நார்வே வைத்திருந்த இரண்டு சாய்ஸ்கள் பற்றி கடந்த அத்தியாயத்தில்
எழுதியிருந்தோம்.

தற்போது ஆப்கானிஸ்தானில் நார்வே தூதுவராக உள்ள டோர் ஹட்டேர்மை நாம்
தொடர்பு கொண்டு கேட்டபோது, “கே.பி.யை வன்னிக்கு அனுப்பி வைக்க அந்த இரு
சாய்ஸ்களிலும் ட்ரை பண்ணப் போவதாக கோலாலம்பூர் ஹில்டன் ஹோட்டலில் வைத்து
நான் கூறியது உண்மைதான்” என்று தெரிவித்தார்.

“அப்படிச் சொல்லும்போது, பிரபாகரனைச் சந்திப்பதற்கு 1-வது சாய்ஸ்
அவ்வளவு சுலபமல்ல என்பது எனக்கு தெரியும். அதனால், 2-வது சாய்ஸிலேயே அதிக
கவனம் செலுத்தினேன்” என்றும் அவர் எம்மிடம் கூறினார். (கடந்த அத்தியாயத்தை
தவற விட்டவர்கள், அத்தியாயம் 8-ல் நார்வேயின் இரண்டு சாய்ஸ்களையும் ஒருமுறை
படிக்கவும்)

மலேசியாவில் இந்த ஆலோசனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, புலிகளின் தலைவர் பிரபாகரன், கே.பி.யுடன் நேரடி தொடர்பில் இருந்தார்.

யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்த காரணத்தால் பிரபாகரனுடன் மிகச்
சுருக்கமாகவே கே.பி.யால் பேச முடிந்தது. அமெரிக்காவும் நார்வேயும்
தெரிவித்த விஷயங்களை மேலோட்டமாக தெரிவித்த கே.பி., மீதி விபரங்களை தாமே
நேரில் வந்து விளக்கமாக தெரிவிப்பதாக பிரபாகரனிடம் கூறினார்.

ஆனால், நார்வே தூதர் டோர் ஹட்டேர்ம் கடும் சிக்கலில் இருந்தார்.
கொழும்பில் இருந்து அவர் எப்படி ரகசியமாக கோலாலம்பூர் வந்து கே.பி.யை
சந்தித்தார் என்பதை ஏற்கனவே எழுதியிருந்தோம். அப்படியான வழியில்
வந்துவிட்டு, ஸ்ரீலங்கா அரசிடம் எப்படி உதவி கேட்க முடியும்? அதுவும்,
பிரபாகரனுக்கு செய்தி கொண்டுபோகவுள்ள நபர் கே.பி. என்று சொன்னால், இவர்
எப்படி கே.பி.யை தொடர்பு கொண்டார் என்று ஸ்ரீலங்கா அரசு திருப்பிக்
கேட்கும்.

இதனால், நார்வே தலைநகர் ஆஸ்லோவில் உள்ள வெளியுறவு அமைச்சு மூலம்,
கொழும்புவை தொடர்பு கொள்ளும் முயற்சியில் இறங்கினார் நார்வே தூதர் டோர்
ஹட்டேர்ம்.

நார்வே குழுவைச் சந்தித்துவிட்டு தமது ஹோட்டல் ரூமுக்கு திரும்பிய
விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளான கே.பி., பேரின்பநாயகம், ஜாய் மகேஸ்வரன்
பொறி ஆகிய நால்வரும், இதற்கு புலிகள் தரப்பில் மாற்று வழி எதையாவது செய்ய
முடியுமா என்று ஆலோசனையை தொடங்கினார்கள். பாங்காக்கில் இருந்து கோலாலம்பூர்
வந்திறங்கிய உருத்திரகுமாரனும் (தற்போது அமெரிக்காவில், நாடு கடந்த தமிழீழ
அரசு என்ற அமைப்பில் பிரதமராக உள்ளவர்) இந்த ஆலோசனையில் கலந்து கொண்டார்.

இதற்கிடையே நார்வே குழுவினர், புலிகளின் பிரதிநிதிகளை தம்முடன்
டின்னரில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருந்தனர். உருத்திரகுமாரனையும்,
ஜாய் மகேஸ்வரனையும் டின்னருக்கு அனுப்பியபின், முன்பு புலிகளுக்காக கடல்
போக்குவரத்து விவகாரங்களில் முன்பு உதவிகள் செய்த இரு கப்பல்
கேப்டன்களையும் அழைத்து ஆலோசனையை தொடங்கினார் கே.பி.

நார்வே அரசு எவ்வளவு கடுமையாக முயன்றாலும், யுத்தம் நடைபெறும்
பகுதிக்குள் தம்மை அனுப்பி வைக்க ஸ்ரீலங்கா அரசு சம்மதிக்காது என்று கே.பி.
கருதினார். ஸ்ரீலங்கா அரசு சம்மதிக்காவிட்டால், கப்பல் மூலமாக யுத்தம்
நடைபெற்றுக் கொண்டிருந்த முல்லைத்தீவு மாவட்ட கடற்கரைக்கு கே.பி. செல்வது
எந்தளவுக்கு சாத்தியம் என்பது அலசப்பட்டது.

இங்குள்ள ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், அந்த நேரத்தில் ஸ்ரீலங்கா
கடற்படையின் கடல் முற்றுகைக்குள் இருந்த முல்லைத்தீவு பகுதியை கப்பல் மூலம்
சென்றடைவது பற்றி கே.பி. தவிர வேறு யாராலும் கற்பனைகூட செய்து பார்க்க
முடியாது.

என்ன காரணம்? கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் வெற்றியடைந்த பல யுத்தங்களின்போது, கப்பல் மூலம் ஆயுத சப்ளை செய்தவரே கே.பி.தான்.

1980களின் இறுதியில் இருந்து இலங்கையில் புலிகள் ஒவ்வொரு தாக்குதலை
நடத்திய போதும், தேவையான ஆயுதங்கள் கே.பி. மூலமாக தடையின்றி வந்து இறங்கிக்
கொண்டிருந்தன. விடுதலைப்புலிகள் அமைப்பு 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறிது
சிறிதாக கட்டியெழுப்பிய ராணுவப் பலம், வெறும் கரங்களால் யுத்தம் புரிந்து
பெறப்பட்டதல்ல. அதில் ஆயுதங்களும் பெரும் பங்கு வகித்தன.

ஓயாத அலைகள்-3 (ஆனையிறவு தாக்குதல்) 2000-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி
புலிகளுக்கு வெற்றியாக முடிந்தது. விடுதலைப் புலிகளின் சரித்திரத்தில்
மிகப்பெரிய ராணுவ வெற்றி அதுதான்.

அது முடிந்தபின் புலிகளின் தளபதிகள் அனைவரையும் அழைத்த பிரபாகரன், “இந்த
வெற்றியில் உங்கள் அனைவரின் பங்களிப்பும் உள்ளது. மிகப் பெரிய
பங்களிப்பு, யுத்தத்துக்கு தேவையான ஆயுதங்களை கே.பி. உரிய நேரத்தில்
சாதுர்யமாக இங்கே கொண்டுவந்து சேர்த்ததுதான். கே.பி. அனுப்பிய ஆயுதங்களே
இந்த வெற்றியை உறுதிப்படுத்தின” என்று அறிவித்தார். அந்த வெற்றிக்குப்
பின்னரே பல வெளிநாடுகள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்
கொண்டன.

2002-ம் ஆண்டுவரை வெளியேயிருந்து அந்த ஆயுத சப்ளையை செய்து கொடுத்தது கே.பி. என்ற ஒருவர்தான்.

2002-ம் ஆண்டு நிலைமை மாறியது. ‘பணம் இருந்தால் ஆயுதங்கள் வாங்கலாம்.
கப்பல் இருந்தால் அவற்றை ஏற்றி வந்து இறக்கலாம். இதில் பெரிதாக சூட்சுமம்
ஏதும் கிடையாது’என்ற கண்டுபிடிப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
கே.பி.யிடமிருந்து ஆயுத சப்ளை புதியவர்களிடம் கைமாற்றப்பட்டது. கே.பி.-யின்
ஆயுத சப்ளை காலத்தில், புலிகளின் ‘ஈழப்போர் 1ம், 2ம்,3-ம் கட்டம்’ என்று
நடந்தது. புதியவர்களின் புண்ணியத்தில், ‘ஈழப்போர் இறுதிக் கட்டம்’ நடந்து
முடிந்தது.

அது பெரிய கதை. இந்த தொடர் முடிந்தபின் அதையும் விலாவாரியாக எழுதலாம். இப்போது விட்ட இடத்துக்குச் செல்லலாம்.

கே.பி. தமது அனுபவங்களை வைத்து, நார்வே மற்றும் ஸ்ரீலங்கா அரசின் உதவி இல்லாமலேயே கப்பல் மூலம் ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? KP-Kittu-Prabakaran-20120206-4Aமுல்லைத்தீவு
கரைக்குச் சென்று பிரபாகரனைச் சந்திப்பது எந்தளவுக்கு சாத்தியம் என்று
மற்றையவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். புலிகளால் கடலில் வெற்றிகரமாக
செய்யப்பட்ட பல போக்குவரத்துகளும் இருந்தன. கப்பல்கள் அடிபட்ட சம்பவங்களும்
இருந்தன. முக்கியமானவர்கள் உயிரிழந்த சம்பவங்களும் இருந்தன.

இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் கே.பி.யின் பயணம்
உயிரைப் பணயம் வைத்து செய்யப்பட வேண்டிய ஒன்று என்பதால், கடந்த காலத்தில்
புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் இலங்கை நோக்கி கப்பலில் செல்லும்போது
உயிரிழந்த சம்பவத்தில், விடப்பட்ட தவறுகள் தொடர்பாக இவர்கள் அலசினார்கள்.

அந்த சம்பவம், புலிகளின் முக்கியஸ்தர் கிட்டு (சதாசிவம் கிருஷ்ணகுமார்) இலங்கைக்கு வரும் வழியில் இந்தியக் கடலில் உயிரிழந்த சம்பவம்.

இது தொடர்பாக அதிக தகவல்களை புலிகள் வெளியிடவில்லை. ரகசியம்
காக்கப்படுவதற்காக அவர்கள் அப்படி செய்திருக்கலாம். இதனால் அநேகருக்கு என்ன
நடந்தது என்பது மேலோட்டமாகதான் தெரியும். இதோ கிட்டு உயிரிழந்த பின்னணியை
முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

கிட்டு தனது காலை இழந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில்
இருந்தபோது, அவரை தன்னுடன் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல பிரபாகரனிடம்
அனுமதி கேட்டு பெற்றவர் கே.பி.தான். அப்போது புலிகளின் வெளிநாட்டு
ஆபரேஷனுக்கு கே.பி. பொறுப்பாக இருந்த காரணத்தால், தன்னுடன் நன்கு
பரிச்சயமான கிட்டு, தமக்கு உதவிகரமாக இருப்பார் என்று கூறியே அனுமதி
பெற்றிருந்தார்.

கிட்டு லண்டனில் தங்கியிருந்து புலிகளின் ஐரோப்பிய விவகாரங்களை
கவனிக்கத் தொடங்கிய நிலையில், சில ராஜதந்திர முறுகல்கள் ஏற்பட்டன. கிட்டு
தொடர்ந்தும் பிரிட்டனில் தங்கியிருப்பது தமக்கு சில சங்கடங்களை
ஏற்படுத்துவதாக ஹோம் மினிஸ்ட்ரி தெரிவித்தது. ஒரு கட்டத்தில் கிட்டு
பிரிட்டனில் இருந்து நாடு கடத்தப்படலாம் என்ற நிலையும் ஏற்பட்டது.

நிலைமை இறுகுவதைப் புரிந்துகொண்ட கே.பி., கிட்டுவை பிரிட்டனில் இருந்து சுவிட்சலாந்துக்கு நகர்த்தினார்.

அங்கே சிறிதுகாலம் கிட்டு தங்கியிருந்த நிலையில், விடுதலைப்புலிகள்
அமைப்புடன் அதிகாரபூர்வமற்ற முறையில் சில விஷயங்களை விவாதிக்க விரும்பியது
அமெரிக்க அரசின் முக்கிய டிப்பார்ட்மென்ட் ஒன்று. அமெரிக்க ஸ்டேட்
டிப்பார்ட்மென்ட் இதில் சம்மந்தப்படவில்லை. இதனால், வெளிநாடுகளில் உள்ள
அமெரிக்க தூதரகங்களை இதில் தொடர்பு படுத்த அவர்கள் விரும்பவில்லை. இதில்,
தூதரக அழைப்போ, அஃபிஷியல் விசாவோ கிடையாது.

அமெரிக்காவுக்குள் வைத்து பேசவும் அவர்கள் விரும்பவில்லை. அத்துடன்
மற்றைய நாட்டு உளவுத்துறைகள் அதிகளவில் செயற்படும் ஐரோப்பிய நகரங்களையும்
தவிர்க்க விரும்பினார்கள்.

இப்படியான சூழ்நிலையில் பெருத்தமான இடம், அமெரிக்காவுடன் தரை எல்லை வழியாக இணைக்கப்பட்டுள்ள நாடான மெக்சிகோதான்.

மெக்சிகோவில் வைத்து பேசலாம் என்ற சிக்னல் கொடுக்கப்பட்டது. கே.பி.யின்
அனுமதியுடன், சுவிஸ்ஸில் இருந்து மெக்சிகோ அனுப்பி வைக்கப்பட்டார் கிட்டு.
அங்கு சிறிது காலம் இருந்தபின், மீண்டும் ஐரோப்பா திரும்புவதில் விசா
தொடர்பான சிக்கல்கள் எழுந்தன. பெரிய ஆசிய நாடு ஒன்று, கிட்டுவுக்கு எந்த
ஐரோப்பிய நாட்டிலும் விசா கிடைக்காதபடி பார்த்துக் கொண்டது. அந்த நாடு…
இந்தியா!

இதில் இந்தியாவின் கோணத்தில், அவர்களை குறை சொல்ல முடியாது. காரணம்
கிட்டு, காலை இழந்தபின் இந்தியாவில் தங்கியிருந்த போதும், அதன்பின்
லண்டனில் தங்கியிருந்த போதும், இந்திய உளவுத்துறை ஒன்றுக்கு தனிப்பட்ட
முறையில் கொஞ்சம் ‘விளையாட்டு’ காட்டியிருந்தார்.

இவரை, அவர்கள் தமது இன்ஃபார்மர் என்று நீண்ட காலமாக நம்பியிருந்தனர்.
கிட்டு லண்டனில் இருந்த காலத்தில்கூட அவர்களது தொடர்பில் இருந்தார்.
குறிப்பிட்ட உளவுத்துறையின் ஒரு உயரதிகாரி, இவரை முற்று முழுதாக
நம்பியிருந்தார். ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபோது கிட்டு லண்டனில்
இருந்தார். அந்தக் கொலைக்கும் புலிகளுக்கும் தொடர்பு ஏதும் கிடையாது என்று
இந்திய உளவுத்துறைக்கு கூறியவரும் கிட்டுதான்.

அதன்பின் விஷயங்கள் யு-டர்ன் அடிக்க, கிட்டு தம்மை சுற்றலில் விட்டிருந்ததை இந்திய உளவுத்துறை ஹார்டு-வேயில் புரிந்து கொண்டது.

தம்மை ஏமாற்றிய கிட்டுவை லேசில் விடுவதில்லை என்று முடிவெடுத்து வேலை
செய்தார் அந்த உயரதிகாரி. உளவுத்துறையும் அதே நிலைப்பாட்டையே
எடுத்திருந்தது. கிட்டுவை ஆரம்பத்தில் லண்டனில் இருந்து கிளப்பியதிலும்
அவர்களது பங்கு இருந்தது.

இங்கு மற்றொரு விஷயத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். இந்திய உளவுத்துறை
ஐரோப்பாவில் கிட்டுமீது கை வைக்கவில்லை. இதுவே சி.ஐ.ஏ.யாக இருந்திருந்தால்
ஆளையே தூக்குவதுதான் அவர்களது நடைமுறை. பல தடவைகள் அப்படி செய்தும்
உள்ளார்கள், சில ரஷ்ய ராஜதந்திரிகளின் மர்ம மரணங்கள் உட்பட!

மொத்தத்தில் கிட்டு இந்திய உளவுத்துறையுடன் விளையாடிய விளையாட்டு,
அவருக்கே வினையாகி, ஐரோப்பிய நாடுகள் எதிலும் அவருக்கு விசா கிடைக்க
முடியாத நிலையை ஏற்படுத்தியது.

நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்ட கே.பி., கிட்டுவை மெக்சிகோவில்
இருந்து உக்ரேன் நாட்டுக்குள் கொண்டுவந்தார். சிறிது காலம் அங்கு
தங்கியிருந்தபின் அதுவும் சரிவராத காரணத்தால், கிட்டுவை போலந்து நாட்டுக்கு
நகர்த்தினார் கே.பி.

போலந்தில் தங்கியிருந்த கிட்டு, தன்னை வந்து சந்திக்குமாறு அவசர தகவல்
ஒன்றை கே.பி.க்கு அனுப்பினார். அப்போது தாய்லாந்தில் இருந்த கே.பி.,
போலந்து சென்று, கிட்டு தங்கியிருந்த வீட்டுக்கு சென்றார்.

அப்போது அங்கே கே.பி. கண்ட காட்சி, அவரை அதிர வைத்தது. அந்தக்
காட்சிதான் கிட்டு கப்பல் மூலம் இலங்கை திரும்பவும் காரணமாக இருந்தது. அதை
அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாமா? …(தொடரும்)

-விறுவிறுப்பு.காம் இணையத்துக்காக, ரிஷி


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? Empty Re: ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா?

Post by மாலதி Wed Jun 13, 2012 1:45 pm

அத்தியாயம் 10
ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா?

போலந்தில் தங்கியிருந்த கிட்டு, தன்னை வந்து சந்திக்குமாறு அவசர
தகவல் ஒன்றை கே.பி.க்கு அனுப்பிய விபரத்தை கடந்த அத்தியாயத்தில்
எழுதியிருந்தோம். போலந்தில் கிட்டு தங்கியிருந்த இடத்தில் இருந்த
சூழ்நிலையில், யாராலும் கிட்டுவை கற்பனைகூட செய்து பார்க்க முடியாது.

யாழ்ப்பாணத்தில் புகழின் உச்சியில் இருந்த காலத்தில், ஏராளமானவர்கள்
புடைசூழ ராஜ தோரணையில் இருந்த கிட்டு, போலந்தின் தலைநகர் வார்சோவில், ஒரு
அறையில், துணைக்கு ஒற்றை ஆள்கூட இல்லாத நிலையில், சுயமாக சமையல் பண்ணிக்
கொண்டு, கவனிப்பாரற்ற நிலையில் இருந்தார். பொழுதுபோக்காக ஓவியம் வரைந்து
கொண்டிருந்தார்.

அவரைக் கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டவர், எப்போதாவது ஒருமுறை தலையைக் காட்டினார்.

கிழக்கு ஐரோப்பாவில் குளிர் அதிகமுள்ள நாடுகளில் போலந்தும் ஒன்று.
கிட்டு போலந்தில் இருந்த நாட்கள் முழுவதும் அங்கு குளிர்காலம். அவர்
தங்கியிருந்த அறையில் ஹீட்டர் வசதிகூட கிடையாது. ஒரு காலை இழந்து,
கிரட்ச்சஸ் (ஊன்றுகோல்) உதவியுடன் நடக்க வேண்டிய நிலையில் இருந்த அவருக்கு,
வெளியே போய் பொருட்கள் வாங்கிக் கொடுக்கக்கூட உதவிக்கு ஆள் கிடையாது.

வெளியே கடுமையான ஸ்னோ. சாதாரண ஆட்களே நடக்கச் சிரமப்படும் அந்த ஐஸ்
படிவுகளில், ஒரு கால் இல்லாமல் ஊன்றுகோலுடன் நடமாடும் ஒருவரை கற்பனை செய்து
பாருங்கள். வெளியே கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு வருவது
என்றால் எப்படி இருக்கும்? பலதடவைகள் ஸ்னோவில் சறுக்கி விழுந்து, கைகளில்
காயங்களுடன் காணப்பட்டார் கிட்டு.

கே.பி.-யை அவர் அவசரமாக போலந்துக்கு அழைத்த காரணம், கே.பி.-யுடன் புறப்பட்டு எப்படியாவது தலைவரிடம் செல்வதற்குதான்.

இந்த இடத்தில் கிட்டு பற்றி சில விஷயங்கள் சொல்ல வேண்டும். இதில்
சொல்லப்படும் சில விஷயங்கள் கிட்டு பற்றி உங்களுக்கு தெரிந்த விஷயங்களுக்கு
நேர்மாறாக இருக்கலாம்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் அதீத உயரத்துக்கு சென்றவர் அவர்தான்
என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அதி உச்சத்தில் இருந்து ‘அதல
பாதாளத்துக்கு’ சென்றவரும் அவர்தான் என்பது, இன்றும் வெளிநாடுகளில்
கிட்டுவுக்கான நினைவு விழா நடத்தும் பலருக்கேகூட தெரியாது.

‘அதல பாதாளத்துக்கு’ என்று சொல்வதை உங்களில் சிலரால் ஜீரணிக்க முடியாமல்
இருக்கும் என்பது தெரியும். அப்படியானவர்கள், அவசரப்பட்டு ‘அடிவருடி..’
என்று தொடங்கி உங்கள் வசமுள்ள கலைச்சொற்களை தூவத் தொடங்கி விடாதீர்கள்.
முதலில், கீழே எழுதப்பட்டிருப்பதை முழுமையாகப் படிக்கவும். கிட்டு போன்ற
நிலையில் இருந்த ஒருவரால், அவர் ஐரோப்பாவில் தங்கியிருந்த நிலையைவிட மோசமாக
அதல பாதாளத்துக்கு செல்ல முடியாது என்பது ஆவரேஜ் ஐ.க்யூ உள்ள நபருக்கேகூட
புரியும்!

அப்படியும் புரியவில்லையா.. கட்டுரை படித்தபின் கைவசமுள்ள கலைச் சொற்களை
துவங்குங்க ராஜா, “அடிவருடி.. ஆள்காட்டி.. இடிவிழுந்தவன்..” in
alphabetical order.

கிட்டு இலங்கையில் எப்படி வாழ்ந்தார்? விடுதலைப்புலிகள் இயக்கத்தின்
யாழ்ப்பாண தளபதியாக கிட்டு இருந்த காலத்தில்தான், யாழ். குடாநாடு புலிகளின்
கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் கிட்டுவைச்
சுற்றி ஜேஜேன்னு ரொம்ப பெரிய கூட்டமே இருக்கும். அவரது உத்தரவுகளை
நிறைவேற்ற ஆள், அம்பு, சேனை என்று காத்திருப்பார்கள்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகிய விடுதலைப்புலிகள் பத்திரிகையில்
முதல் பக்கத்தில் இருந்து கடைசிப் பக்கம்வரை கிட்டுவை மையப்படுத்தும்
செய்திகளாகவே இருக்கும். கிட்டுவின் போட்டோ இல்லாத பக்கமே கிடையாது.
பிரபாகரன் அப்போது தமிழகத்தில் தங்கியிருந்தார். சுருக்கமாகச் சொன்னால்,
யாழ்ப்பாணத்தில் புலிகளின் ‘அதியுச்ச நட்சத்திரம்’ கிட்டுதான் என்ற நிலை
இருந்தது.

அப்படியிருந்த நிலையில்தான் கைகுண்டு தாக்குதல் ஒன்று காரணமாக கிட்டு ஒரு காலை இழக்க நேர்ந்தது.

அதன்பின் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகத்தில் தங்கியிருந்தார். இந்திய
அமைதிப்படை இலங்கையில் இருந்த நாட்களில், தமிழக அரசு அவரை சிறையில்
அடைத்தது. பின், இலங்கைக்கு இந்திய ராணுவத்தால் அனுப்பி வைக்கப்பட்டார்.
புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு, வன்னியிலுள்ள காடுகளில் தலைமறைவு வாழ்க்கை
வாழவேண்டிய நிலை ஏற்பட்டபோது, கிட்டுவும் காட்டில் வசிக்க நேர்ந்தது.

கால் இழப்பு ஏற்பட்ட நிலையிலும், அவரைச்சுற்றி எந்த நேரமும்
மெய்ப்பாதுகாவலர்களும் விசுவாசிகளும் இருந்தார்கள். தமிழகத்தில் சிறையில்
இருந்தபோதும், அவருடன் கைதான மற்றைய விடுதலைப்புலிகள் எப்போதும் அவரைச்
சுற்றி இருந்தார்கள். பின்பு காட்டுக்குள் வசித்தபோதும், அவரைச் சுற்றி ஒரு
கூட்டமே இருந்தது. கிட்டுவை தோளில் சுமக்கும் அளவுக்கு விசுவாசிகள்
இருந்தார்கள்.

ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? KP-Kittu-Ship-20120214-3யாழ்ப்பாணத்தில் செல்வாக்காக நடமாடிய கிட்டு

அப்படியாக ரொம்ப செல்வாக்காக இருந்த கிட்டு, போலந்தில் தன்னந்தனியே ஒரு
அறைக்குள், தனிமையில் இருந்ததை கண்டே கே.பி. திகைத்துப் போனார்.

அந்த நிலைக்கு எப்படிச் சென்றார் கிட்டு? ஐரோப்பாவில் அவருக்கு என்ன
நடந்தது? அதைப்பற்றி யாரும் இதுவரை வெளிப்படையாகவும், விலாவாரியாகவும்
தெரிவித்ததாக தகவல் இல்லை. இப்போது அவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

கே.பி.யின் வேண்டுகோளுக்கு இணங்க பிரபாகரன், கிட்டுவை லண்டனுக்கு
அனுப்பி வைத்த விபரங்களை கடந்த அத்தியாயத்தில் தெரிவித்திருந்தோம்.
லண்டனில் போய் இறங்கியவுடன், ஆரம்பத்தில் செல்வாக்காகத்தான் இருந்தார்
கிட்டு. அவரைச் சுற்றி ‘வெளிநாட்டுப் புலிகள்’ பலர் எப்போதும்
காணப்பட்டனர். லண்டனில், கிட்டுவின் பல அலுவல்களை கவனித்தவர் அஜித்.

கிட்டு லண்டனுக்கு அனுப்பப்பட்டபோது, இலங்கையில் இருந்து புலிகளின் தலைவர் பிரபாகரனால் கூடவே அனுப்பி வைக்கப்பட்டவர் அஜித்.

கிட்டுவுடன் எப்போதும் கூடவே இருக்குமாறு அஜித்துக்கு புலிகளின்
தலைவரால் உத்தரவிடப்பட்டு இருந்தது. (ஆனால், கிட்டு பிரிட்டனுக்கு வெளியே
வெவ்வேறு நாடுகளுக்கு சென்றபோது, அஜித்தால் அவருடன் செல்ல முடியவில்லை.
காரணம், பிரிட்டனில் அஜித்துக்கு அகதி அந்தஸ்தோ, வதிவிட விசாவோ
கிடைக்கவில்லை)

அரசியல் காரணங்களால் கிட்டுவுக்கு பிரிட்டிஷ் அரசால் சிக்கல்கள் எழத்
தொடங்கியபோது, ‘வெளிநாட்டுப் புலிகள்’ பலர் அவரை விட்டு விலகி நிற்கத்
தொடங்கினார்கள். ஆரம்பத்தில் தமது வீடுகளுக்கு கிட்டுவை அழைத்து பிலிம்
காட்டிய சிலர், பிரிட்டிஷ் ஹோம் ஆபிஸ் மற்றும் எம்.ஐ.5 ஆகியவை கிட்டுவில்
கண் வைத்ததும், ஒதுங்கத் தொடங்கினர். ஒரு கட்டத்தில், அவர்களது வீட்டுக்கு
கிட்டு வருவதாக சொன்னாலும் சாக்குப் போக்கு சொல்லி தட்டிக் கழித்தனர்.

பிரிட்டனில் இருந்த நிலையை, தாய்லாந்தில் இருந்த கே.பி.க்கு கிட்டு
தெரிவித்தார். அதையடுத்து கே.பி., பாரிஸில் இருந்த திலகரை தொடர்பு கொண்டு,
கிட்டுவை லண்டனை விட்டு வெளியே கொண்டுவர ஏதாவது செய்ய முடியுமா என்ற
கேட்டார்.

இது நடந்த காலப்பகுதியில் திலகருக்கு, ஜெனீவாவில் உள்ள ஐ.நா.
அலுவலகத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன. திலகர் தனது ஐ.நா. அலுவலக
தொடர்புகள் மூலம் கிட்டு சுவிட்சலாந்து செல்வதற்கான ட்ரவல் டாக்குமென்ட்
ஒன்றை ஏற்பாடு செய்தார்.

ஐ.நா. கிட்டுவுக்காக வழங்கிய இந்த ட்ரவல் டாக்குமென்டை laissez-passer
என்று அழைப்பார்கள். வழங்கப்பட்ட நாட்டுக்கு (சுவிட்சலாந்து) ஒருவழி பயணம்
மட்டும் செய்யக்கூடிய, நாடற்றவர்களுக்கான, பாஸ்போர்ட் போன்ற சமாச்சாரம்
இது.

இப்படியான ட்ரவல் டாக்குமென்ட் ஒன்றை வைத்துக் கொண்டு சுவிட்சலாந்தில்
சுதந்திரமாக நடமாடுவது கொஞ்சம் சிரமமானது. அவ்வப்போது போலீஸ்
சோதனைகளின்போது, இந்த ஆவணம் வைத்திருப்பவர்களை ஜாஸ்தி குடைவார்கள். அது
மாத்திரமல்ல, அவருடன் கூட இருப்பவர்களையும் அதிக விசாரணைகளுக்கு
உட்படுத்துவார்கள்.

இந்த இடத்தில் சுவிஸ் காவல்துறை (கன்டொன் போலீஸ் அல்ல.. ஃபெடரல் போலீஸ்)
பற்றிய ஒரு விபரம் சொல்ல வேண்டும். கிட்டு, விடுதலைப் புலிகள் இயக்கத்தைச்
சேர்ந்தவர் என்பதால், அவர் சுவிஸ் ஃபெடரல் போலீஸின் சிறப்பு பிரிவு
ஒன்றின் கண்காணிப்பில் இருந்தார்.

சுவிஸ் போலீஸில் உள்ள இந்த சிறப்பு பிரிவு, தீவிரவாதம் மற்றும்
வெளிநாட்டு பணப் பரிமாற்றங்களை கண்காணிக்கும் ரகசிய அமைப்பு. அந்த சிறப்பு
பிரிவின் பெயர், Einsatzgruppe TIGRIS. (ஆங்கிலத்தில், Task Force TIGRIS)

(இப்படியொரு ரகசிய டிவிஷனே கிடையாது என்று கூறிக்கொண்டிருந்த
சுவிட்சலாந்து அரசு, சமீபத்தில் 2009-ம் ஆண்டுதான், இந்தப் பிரிவு
இயங்குவது உண்மைதான் என ஒப்புக்கொண்டது.)

சுவிட்சலாந்தில் கிட்டுவோடு நெருக்கமாக இருந்தவர்கள் சிலர், இந்தப்
சிறப்பு பிரிவின் கண்காணிப்புக்குள்ளும் வந்து, விசாரணைகளிலும் சிக்கிக்
கொண்டனர். அதையடுத்து, சுவிட்சலாந்திலும் கிட்டுவை விட்டு விலகத்
தொடங்கினார்கள் சில சுவிஸ் புலி முக்கியஸ்தர்கள்.

கிட்டு, விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாண தளபதியாக இருந்தபோது, முழு
யாழ்ப்பாணத்தின் சட்டம் ஒழுங்கு நடைமுறைகள் அவரது கண்ணசைவிலேயே நடந்தன.
அப்படி பழக்கப்பட்டுவிட்ட ஒருவரை, சுவிஸ் போலீஸின் இந்த கண்காணிப்பும்
விசாரணைகளும் அதிர வைத்தன. அவரது வாழ்வில் அதுவரை தன்னைச் சுற்றி பலரை
வைத்து அதிகாரத்துடன் இருந்த அவருக்கு, தன்னிடம் நெருங்காமல் ஆட்கள் விலகி
விலகிச் செல்வது திகைக்க வைத்தது.

கடந்த அத்தியாயத்தில் நாம் குறிப்பிட்ட மெக்சிகோ பயணத்தின்போதுகூட கிட்டுவுக்கு தனிமைதான் கிட்டியது.

கிட்டு சுவிட்சலாந்து செல்வதற்கு திலகர் ஏற்பாடு செய்ததுபோல, மெக்சிகோ
செல்லும் ஏற்பாடுகளை அமெரிக்காவில் இருந்தபடி கவனித்தவர், புரஃபெஸர்
செல்வகுமார். கிட்டுவை மெக்சிகோவுக்கு புறப்பட்டு வருமாறு கூறியவரும்
செல்வகுமார்தான். கிட்டுவுக்கு துணையாக மெக்சிகோ சென்றவர் நாதன்.
மெக்சிகோவில் சில நாட்கள் தங்கிவிட்டு நாதன் திரும்பிவிட, மெக்ஸிகோவில்
தனித்துப் போனார் கிட்டு.

அமெரிக்காவில் பணிபுரிந்து கொண்டிருந்த செல்வகுமார், கிட்டுவுடன் மெக்சிகோவில் தங்கியிருப்பது சாத்தியமில்லை.

இப்படியாக ஈழத் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கிடைத்த அனுபவத்தால் ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? KP-Kittu-Ship-20120214-1வெறுத்துப்
போயிருந்த கிட்டுவுக்கு, ஒரு கட்டத்தில் எந்தவொரு மேற்கு ஐரோப்பிய நாடும்
விசா கொடுக்க தயாராக இல்லை என்பது நன்றாகவே புரிந்தது. அப்படியான நிலையில்
அவர் உடனடியாக செல்லக்கூடிய ஒரே நாடு உக்கிரேன்தான். கிட்டுவும் உக்ரேன்
செல்வதையே விரும்பினார்.

அதற்கு ஒரு காரணமும் இருந்தது.

கிட்டுவுக்கு வெளிநாடு செல்லும் முன்பே, அவர் புலிகளின் சார்பில் ஒருவரை
உக்ரேனுக்கு அனுப்பி வைத்திருந்தார். ரஷ்யா உடைந்து, உக்ரேன்
உருவாகியபோது, உக்ரேனில் தங்கிவிட்ட ரஷ்ய ஆயுதங்கள் வெளிச் சந்தைக்கு வரும்
என்ற ஊகம் பரவலாக அடிபட்டுக் கொண்டிருந்தது. அப்படியான நிலையில், புலிகள்
இயக்கத்தில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுத்து, அவரை உக்ரேன் சென்று தங்கி,
அங்குள்ள நிலைமைகளை ஆராயுமாறு அனுப்பி வைத்திருந்தார் கிட்டு.

அப்படி கிட்டுவால் முன்பே உக்ரேனுக்கு அனுப்பப்பட்ட நபர், நரேன்.

கிட்டு தாமும் வெளிநாடு செல்வோம் என்றே நினைத்திராத காலத்தில்
கிட்டுவால் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்ட இந்த நரேன், அப்போதும் உக்ரேனில்
தங்கியிருந்தார். இதனால்தான், உக்ரேன் செல்ல விரும்பினார் கிட்டு.

கிட்டு உக்ரேனுக்கு செல்லும் ஏற்பாடுகளை கே.பி. செய்து கொடுக்க, உக்ரேன்
சென்று நரேனுடன் சேர்ந்து கொண்டார் கிட்டு. தலைநகர் கிவ்வில் தங்கிக்
கொண்டார்.

ஈழத் தமிழர்கள் அதிகம் வசிக்காத நாடு உக்ரேன். எப்படியாவது
அங்கிருந்தும் கிளம்பி, இலங்கைக்கு செல்வதே கிட்டுவுக்கு விருப்பமாக
இருந்தது. ஆனால், இலங்கைக்கு சும்மா திரும்ப அவர் விரும்பவில்லை.
திரும்பிச் செல்வதற்குமுன் புலிகள் இயக்கத்துக்காக எதையாவது
சாதித்துவிட்டு, புகழுடன் நாடு திரும்ப விரும்பினார் அவர்.

கிட்டுவை நன்கு அறிந்தவர்களுக்கு அவரது இந்த மென்டாலிடி நன்றாக தெரிந்திருக்கும்.

கிட்டு உக்ரேனுக்கு சென்ற அந்தக் காலப்பகுதியில் உக்ரேன் கிட்டத்தட்ட
ஒரு ஆயுத கறுப்பு சந்தையாக இருந்தது. ரஷ்யா உடைந்தபின் உக்ரேனுக்கு கிடைத்த
பல ஆயுதங்கள், திருட்டுத்தனமாக சுடச்சுட விற்பனையாகிக் கொண்டிருந்தன.
அதனால், அனைத்து நாடுகளின் உளவுத்துறைகளும் உக்ரேனுக்குள் வட்டமடித்துக்
கொண்டிருந்தன.

உக்ரேனுக்குள் இருந்துகொண்டு கிட்டு, இரண்டு காரியங்களில் ஈடுபட்டார்.
முதலாவது, உக்ரேனில் இருந்த சில ஆயுத வர்த்தகர்களிடம் தொடர்பை ஏற்படுத்தி,
புலிகள் இயக்கத்துக்காக ஆயுதங்களை பெற்றுக் கொள்ளும் முயற்சி.

இரண்டாவது, உக்ரேனில் ராணுவம் தொடர்பான கோர்ஸ் ஒன்றை செய்ய முயன்றார்.
உக்ரேனில் Sevastopol என்ற இடத்தில், ராணுவ கல்வி கற்பிக்கும் மையம் ஒன்று
இருந்தது. அதன் பெயர் Nakhimov. உக்ரேன் ராணுவ அதிகாரிகள் தமது வாரிசுகளை
ராணுவ கல்வி கற்க சேர்த்துவிடும் இடம் இது. அதில் இணைந்து கொள்வதற்கான
முயற்சிகளை செய்து கொண்டிருந்தார் கிட்டு.

உக்ரேனில் ஆயுதத் தரகர்களுடன் தொடர்பை ஏற்படுத்தும் கிட்டுவின்
முயற்சிகள் ஓரளவுக்கு கைகூடும் நிலையை அடையத் தொடங்கின. உக்ரேனுக்குள் கிவ்
புறநகரப் பகுதியில் இருந்து ரகசியமாக இயங்கிய ஆயுத வியாபாரி ஒருவரையே
கிட்டு தேர்ந்தெடுத்து அவருடன் தொடர்புகளை ஏற்படுத்த முயன்றார். இந்த
நபரின் பெயர், லியோனிட் மினின் (Leonid Efimovich Minin).

ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? Leonid-Efimovich-Minin-20120214-1உக்ரேன் ஆயுத வியாபாரி லியோனிட் மினின்

இந்த லியோனிட் மினின், மர வர்த்தகம் செய்வதாக வெளியே காட்டிக்கொண்டு,
ரகசியமாக ஆயுத வியாபாரம் செய்த நபர். 1990களின் துவக்கத்தில் சுவிட்சலாந்து
சுக் நகரில் தனது மர வர்த்தக நிறுவனத்தை பதிவு செய்துகொண்டு, மர ஏற்றுமதி
செய்யும் போர்வையில், உக்ரேனில் இருந்து ஆயுதங்களை அனுப்பிக்
கொண்டிருந்தவர். 1992-ல் இவர் ஆயுத வர்த்தகம் செய்வதை தெரிந்துகொண்டு, உளவு
அமைப்புகள் இவரை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்திருந்தன.

அதாவது கிட்டு, உக்ரேன் போய் இறங்கிய அதே 1992-ம் ஆண்டு, இந்த லியோனிட் மினினை உளவு அமைப்புகள் கண்காணிக்கத் தொடங்கின.

இப்படியான நிலையில் உக்ரேனில் கிட்டு, ஒரு பக்கமாக இந்த நபருடன் ஆயுத
வர்த்தக தொடர்பை ஏற்படுத்த முயன்றபடி, மறு பக்கமாக ராணுவ இன்ஸ்டிடியூட்டில்
அட்மிஷன் எடுக்கும் முயற்சிகளிலும் ஈடுபட, உளவுத்துறைகளின் பார்வை
இவர்மீதும் விழுந்தது. உக்ரேன் ராணுவ உளவுத்துறை டி.ஐ.யு. (DIU – Defence
Intelligence of Ukraine) கிட்டுவை வட்டமிடத் தொடங்கியது.

இந்த நிலையில் கிட்டுவை உக்ரேனுக்குள் விட்டுவைப்பது ஆபத்து என்று
உணர்ந்து கொண்ட கே.பி., நிலைமை இறுகுவதற்குமுன் கிட்டுவை உக்ரேனில் இருந்து
போலந்துக்கு நகர்த்துமாறு நரேனுக்கு தகவல் அனுப்பினார்.

நரேன், கிட்டுவை போலந்துக்கு கொண்டுவரும்போது, அங்கே கிட்டுவை வரவேற்று,
தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு, அவருடன் தங்கியிருப்பதற்கு
லண்டனில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டவர், சேகர். சிறிது நாட்களே
கிட்டுவுடன் போலந்தில் தங்கியிருந்த சேகர், அடிக்கடி கிட்டுவை தனியே
விட்டுவிட்டு லண்டன் சென்று விடுவார். அவருக்கும் ஆயிரம் சோலி.

அப்படி கிட்டு தனியே இருந்த ஒரு தினத்தில்தான், அங்கே போய்
இறங்கியிருந்தார் கே.பி.! அவரிடம் கிட்டு சொன்ன முதல் வாக்கியம், “என்னை
எப்படியாவது தலைவரிடம் (பிரபாகரன்) கொண்டுபோய் விட்டுவிடு மச்சான்”

ஆனால், கிட்டு தலைவரிடம் போய் சேரவில்லை. போகும் வழியில் இந்தியக் கடலில் உயிரிழந்தார்.

கிட்டு ஏன், எப்படி இறந்தார்? அநேகருக்கு அது பற்றி முழுமையான விபரங்கள்
தெரியாது. நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால், அது அடுத்த
அத்தியாயத்தில்! …(தொடரும்)


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? Empty Re: ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா?

Post by மாலதி Wed Jun 13, 2012 1:47 pm

ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? Kittu-Viruvirupu-20120612-1அத்தியாயம் 11
ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா?

விடுதலைப் புலிகளின் முன்னாள் யாழ்ப்பாணத் தளபதி கிட்டு
(சதாசிவம் கிருஷ்ணகுமார்) இந்தியக் கடலில் வைத்து கப்பலுடன் வெடித்துச்
சிதறியது எப்படி? இது பற்றி முன்பு நான்கைந்து வெவ்வேறு விதமாக கூறப்பட்டு
வந்தன. அதில் எந்தக் கதை நிஜம் என்பதில் குழப்பங்கள் இருந்தன.

விடுதலைப் புலிகள் இலங்கையில் பலமாக இருந்தபோது, கிட்டுவின் இறப்பு எப்படி நடந்தது என்று விலாவாரியாக வெளியிடவில்லை.

கிட்டு கப்பலுடன் வெடித்துச் சிதறியது பற்றிய நிஜமான கதை தெரிந்தவர்கள்
மிகச் சிலரே. அவர்களும், புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களாக
இருந்தார்கள். அவர்கள் யாரும் அப்போது வாய் திறந்து எதையும் கூறவில்லை.
புலிகளின் ரகசியம் காத்தல் அதற்கு காரணமாக இருந்தது.

இப்போது, இந்த விவகாரம் தொடர்பாக முழுமையாக தெரிந்த ஓரிருவரே உயிருடன்
உள்ளார்கள். அவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில்
இது எழுதப்பட்டுள்ளது. என்ன நடந்தது என்பதற்கு ஒரு பதிவு வேண்டும் அல்லவா?

சரி, இந்த விஷயத்தில் நிஜம் என்ன? உண்மையில் என்னதான் நடந்தது?

சில ஐரோப்பிய நாடுகளில் மாறி மாறி இருத்த கிட்டு, கடைசி நாட்களில்
தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்பதை, கடந்த
அத்தியாயங்களில் எழுதியிருந்தோம். (அவற்றைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்) அதன்பின் போலந்தில் இருந்து கிட்டுவை, தாய்லாந்துக்கு அழைத்துக் கொண்டார் கே.பி.

கிட்டுவை தாய்லாந்தில் இருந்து புலிகளின் கப்பல் ஒன்றில் இலங்கைக்கு அனுப்பி வைப்பதே திட்டம்.

இலங்கை கடற்படையினரின் கண்களில் சிக்காமல் கப்பலை இலங்கை கடல்
பகுதிக்குள் கொண்டு செல்வதே ரிஸ்க் அதிகமான காரியம். அதிலும், கப்பலில்
கிட்டு போன்ற புலிகளின் முக்கியஸ்தர் செல்வதால், தீவிர முன்னேற்பாடுகள்
செய்யப்பட்டன. கிட்டு செல்வதற்கான கப்பலை செலுத்துவதற்காக கேப்டன் ஒருவரை
தேர்ந்தெடுத்து, தொலைத் தொடர்பு சிறப்பு பயிற்சிக்காக சிங்கப்பூருக்கு
அனுப்பி வைத்தார் கே.பி.

எதற்காக இந்த விசேட பயிற்சி? அந்த நாட்களில் (90களின் துவக்கத்தில்)
புதிதாக வந்திருந்த தொழில்நுட்பம் ஒன்று தொடர்பான பயிற்சி அது. அதைப்
பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டும். அதையும் ஏன் சொல்ல வேண்டும் என்ற
காரணம், தொடர்ந்து படிக்கும்போது உங்களுக்கே புரியும்.

1992-ம் ஆண்டு டிசம்பர் மாத நடுப்பகுதியில் கிட்டு தாய்லாந்துக்கு வந்து
சேர்ந்தார். அப்போது, விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு செயல்பாடுகளுக்கு
பொறுப்பாளராக கே.பி. இருந்தார். இலங்கையில் யுத்தத்தில் ஈடுபட்டுக்
கொண்டிருந்த புலிகளுக்கு தேவையான ஆயுதங்கள், மற்றும் உபகரணங்கள் அனைத்துமே
கே.பி.-யின் தலைமையில் இயங்கிய பிரிவால் அனுப்பப்பட்டு வந்தன.

புலிகளின் கடந்தகால செயல்பாடுகளை அறிந்தவர்களுக்கு ஒரு விஷயம் நன்கு
தெரிந்திருக்கும். புலிகள் உபயோகித்த ஆயுதங்கள், மற்றும் உபகரணங்கள், அநேக
தருணங்களில் இலங்கை அல்லது இந்திய ராணுவங்களிடையே கூட இருந்ததில்லை. அவை
லேட்டஸ்ட் மாடல்களாக இருக்கும்.

இதற்கு காரணம், மார்க்கெட்டில் புதிய தொழில்நுட்பம் ஏதாவது
வந்துவிட்டால், புலிகளின் வெளிநாட்டுப் பிரிவு உடனடியாக வாங்கி, இலங்கைக்கு
அனுப்பி விடுவது வழக்கமாக இருந்தது. வெளிநாட்டுப் பிரிவுக்கு கே.பி.
பொறுப்பாளராக 2003-ம் ஆண்டுவரை இருந்தார். அதுவரை இதுதான் வழமையாக
இருந்தது.

1992-ல் சட்டலைட் டெலக்ஸ் தொழில்நுட்பம் மார்க்கெட்டுக்குள் வந்தது. பல
பெரிய நிறுவனங்களே அதை வாங்கத் தயங்கிய ஆரம்ப நாட்களில், புலிகளின்
வெளிநாட்டுப் பிரிவு, சட்டலைட் டெலக்ஸ் உபகரணங்களை வாங்கியது.

1990களில், புலிகள் தமது தொலைத் தொடர்புகளுக்கு, ஐ-காம், YESU-747
தொலைத் தொடர்பு சாதனங்களை பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில்
சட்டலைட் டெலக்ஸ் தொழில்நுட்பம் அறிமுகமாகவே, புலிகளின் தலைவர் பிரபாகரன்
பிரத்தியேகமாக பயன்படுத்த முதலில் சட்டலைட் டெலக்ஸ் உபகரணம் ஒன்று
புலிகளின் வெளிநாட்டுப் பிரிவால் வாங்கப்பட்டது.

அந்த நேரத்தில், கிட்டுவும் தாய்லாந்து வந்து, இலங்கைக்கு செல்வது என்று
முடிவாகியதால், கிட்டு செல்லவிருந்த கப்பலில் சட்டலைட் டெலக்ஸை
பயன்படுத்துவது என்று திட்டமிட்டார் கே.பி.

கிட்டு செல்வது பரம ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. தாய்லாந்தில் சுமார் 2
வாரங்கள் கிட்டு, ரகசிய இடம் ஒன்றில் தங்கியிருந்தார். கிட்டு கப்பலில்
இலங்கை செல்லப்போகும் விஷயத்தை எந்தவொரு தொலைத் தொடர்பு உரையாடலிலும்
பயன்படுத்தாமல் ரகசியம் காக்கப்பட்டது. காரணம், புலிகளின் தொலைத்தொடர்பு
உரையாடல்களை இடைமறித்து அறிந்து கொள்வதில், இலங்கை, இந்திய உளவுத்துறைகள்
உட்பட சில வெளிநாட்டு உளவுத்துறைகளும் ஆர்வமாக இருந்தார்கள்.

இதனால்தான், புதிதாக வந்த சட்டலைட் டெலக்ஸ் தொழில்நுட்பத்தை கிட்டு
செல்லப்போகும் கப்பலில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த புதிய
தொழில்நுட்பத்தை இடைமறித்து அறியும் உபகரணங்கள் அப்போது இருக்கவில்லை.
(இப்போது உள்ளன)

இந்த சட்டலைட் டெலக்ஸ் உபகரணத்தை நடுக்கடலில் நகரும் கப்பல் ஒன்றில்
வைத்து இயக்கும் பயிற்சிக்காகவே, கேப்டன் ஒருவரை சிங்கப்பூர் அனுப்பி
வைத்திருந்தார் கே.பி.

இந்த விபரங்களை ஏன் விலாவாரியாக சொல்கிறோம் என்றால், இந்த சட்டலைட்
டெலக்ஸ் உபகரணமே, கிட்டுவின் இறப்புக்கு மறைமுகமான ஒரு காரணமாக இருந்தது.

சிங்கப்பூரில் சட்டலைட் டெலக்ஸ் பயிற்சியை முடித்துக் கொண்டு, சட்டலைட்
உபகரணத்துடன் திரும்பியிருந்தார் அந்த கேப்டன். ஆனால், அதே நேரத்தில்
புலிகளின் மற்றொரு கப்பல் முக்கிய பொருட்களுடன் இலங்கைக்கு செல்ல
வேண்டியிருந்தது. புலிகள் அமைப்பின் முக்கியஸ்தரான கிட்டுவும் அதே கப்பலில்
செல்ல வேண்டும் என்பதால், தம்மிடம் இருந்தவர்களில் சிறந்த கேப்டனையும்,
மாலுமிகளையும் கப்பலை செலுத்த அனுப்புவது என்று முடிவு செய்தார் கே.பி.

சிங்கப்பூர் பயிற்சிக்கு சென்ற கேப்டனைவிட, முக்கிய பயணங்களில்
அனுபவமுள்ள மற்றொரு கேப்டனை அனுப்புவது என்றும், புலிகளுக்குச் சொந்தமான MV
Yahata என்ற கப்பலில் கிட்டுவை அனுப்புவது எனவும், முடிவு செய்யப்பட்டது.

MV Yahata கப்பலைச் செலுத்த நியமிக்கப்பட்ட அனைவருமே தமிழர்கள்தான்.
அவர்களது பெயர்கள், ஜெயச்சந்திரன், சிவராசா, சற்குணலிங்கம்,
கிருஷ்ணமூர்த்தி, நாயகம், இந்திரலிங்கம், பாலகிருஷ்ணன், மோகன்.

இதில் ஜெயச்சந்திரன் கப்பலின் கேப்டன், சிவராசா என்பவர் ‘பவுண்’ என்ற பெயரிலும் அறியப்பட்டவர். கப்பலின் சீஃப் இஞ்சினியர் அவர்.

கிட்டு இலங்கை செல்வதற்காக தாய்லாந்து வரை வந்திருக்கிறார் என்ற விபரம்,
புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கும், வேறு ஓரிரு முக்கிய
தளபதிகளுக்கும் மட்டுமே தெரிந்திருந்தது. அந்த விஷயம் மிக ரகசியமாக
வைக்கப்பட்டிருந்தது. கப்பலில் கிட்டுவுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக 8
பேர் அடங்கிய விடுதலைப்புலிகள் டீம் ஒன்றும் தாய்லாந்தில் தயாராக இருந்தது.

லெப். கர்ணல் குட்டிஸ்ரீ என்கிற ஸ்ரீ கணேசன் (சுதுமலை), மேஜர் வேலன்
என்கிற சுந்தரலிங்கம் சுந்தரவேல் (பருத்தித்துறை), கடற்புலி கேப்டன் ஜீவா
(பாஷையூர்), கடற்புலி கேப்டன் குணசீலன் (யாழ்ப்பாணம்), கடற்புலி கேப்டன்
ரோஷன் (நல்லூர்), கடற்புலி கேப்டன் நாயகன் (வல்வட்டித்துறை), கடற்புலி
லெப்டினென்ட் நல்லவன் (யாழ்ப்பாணம்), கடற்புலி லெப்டினென்ட் அமுதன்
(யாழ்ப்பாணம்) ஆகியோர் கிட்டுவுக்கு பாதுகாப்பு கொடுக்க நியமிக்கப்பட்ட
விடுதலைப் புலிகளின்.

இதில் லெப். கர்ணல் குட்டிஸ்ரீ, புலிகளின் ஆயுத தயாரிப்புத் துறையில்
முக்கியமான ஒருவர். இலங்கையில் புலிகளால் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள்
பலவற்றின் வடிவமைப்பில் இவரது பங்களிப்பு அதிகம். புலிகளிடம் இல்லாத
ஆயுதங்கள் பற்றிய நுணுக்கங்களை அறிவதற்காக விடுதலைப்புலிகளின் தலைவர்
பிரபாகரன், குட்டிஸ்ரீயை கே.பி.-யிடம் அனுப்பி வைத்தார்.

கே.பி.-யுடன் லெபனான் சென்ற குட்டிஸ்ரீ, புலிகளின் வெளிநாட்டுப்
பிரிவின் பாலஸ்தீன விடுதலை ( பி.எல்.ஓ. ) தொடர்புகள் மூலம் அங்கு ஆயுதத்
தயாரிப்பில் சில பயிற்சிகளைப் பெற்றார். அதன்பின் பிரபாகரன் கேட்டிருந்த
புதிய ஆயுதங்கள் பற்றிய விபரங்களுடன், கிட்டு ஏறிய அதே கப்பலில்
பயணித்திருந்தார்.

இந்த 8 விடுதலைப் புலிகளும் கிட்டு கப்பலுடன் வெடித்து இறந்தபோது இறந்து போனார்கள்.

கிட்டு இறந்த செய்தியை வெளியிட்டபோது, இவர்களது பெயர்களையும்
வெளியிட்டிருந்தது விடுதலைப்புலிகள் இயக்கம். ஆனால், இந்த 8 பேரையும் தவிர,
மற்றொரு விடுதலைப்புலி உறுப்பினரும் அந்த கப்பலில் இருந்தார். அவரது
பெயரை புலிகள் இயக்கம் அப்போது, இறந்தவர்கள் பட்டியலில் வெளியிடவில்லை.

அவரது பெயர் பிரபாகரன். லெப்டினென்ட் பிரபா என்று அழைப்பார்கள். இந்த
பிரபா, புலிகளுக்கும், இலங்கை முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவுக்கும் இடையே
பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நாட்களில், கொழும்பில் சில ரகசிய
நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்.

அதன்பின், பிரேமதாசா அரசுக்கும், புலிகளுக்கும் இடையே இருந்த டீல்
முறிந்தது. அந்த நேரத்தில் பிரபாவை கொழும்பில் இருந்து வெளியே அனுப்ப
வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்படித்தான், அவர் தாய்லாந்தில் இருந்த
கே.பி.-யிடம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.

சிறிது காலத்தின்பின், அவரை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்கும்படி
புலிகளின் தலைமையிடம் இருந்து தகவல் வந்தது. அந்த வகையில், கிட்டு பயணம்
செய்த கப்பலில் அவரும் பயணம் செய்திருந்தார். கிட்டுவுடன் சேர்ந்து அவரும்
இறந்து போனார்.

ஆனால், அவரின் சில நடவடிக்கைகள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்ற காரணத்தால், அவர் இறந்ததை புலிகள் அறிவிக்கவில்லை.

இதேபோன்று மற்றொரு விஷயமும் நடந்தது. கிட்டு சென்ற கப்பல் வெடித்துச்
சிதறியபின், அந்தக் கப்பலில் செல்லாத மற்றொருவர் கொல்லப்பட்டார் என இந்திய
உளவுத்துறை சில நாட்கள் நம்பிக்கொண்டிருந்தது. அதை பிற்பாடு பார்க்கலாம்.

MV Yahata கப்பல், அதன் ஊழியர்களையும், கிட்டுவையும், 9 விடுதலைப்
புலிகளையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. கப்பலில் புதிதாக
வாங்கப்பட்டிருந்த சட்டலைட் டெலக்ஸ் சாதனமும் இருந்தது. அது தரையில்
இயங்குவதில் எந்த சிக்கலும் இருக்கவில்லை.

கப்பல் புறப்பட்ட நிமிடத்தில் இருந்து, சகல தொடர்புகளுக்கும், சட்டலைட்
டெலக்ஸையே பயன்படுத்துமாறு கே.பி. கூறியிருந்தார். எக்காரணம் கொண்டும்,
ஐ-காம் உபகரணத்தை பயன்படுத்த வேண்டாம் எனவும் எச்சரித்திருந்தார்.

கப்பல் கேப்டன் ஜெயச்சந்திரனுக்கு இந்த சட்டலைட் உபகரணத்தை உபயோகிக்க
ஓரளவுக்கு தெரிந்திருந்தது. கிட்டுவின் குழுவில் சென்ற புலிகளில்,
சுந்தரலிங்கம் சுந்தரவேல் என்ற பெயரைப் பார்த்திருப்பீர்கள். புலிகள்
வட்டாரங்களில் இவரை ‘வேல்’ என்று அழைப்பார்கள். இவரும் தொலைத் தொடர்பு
சாதனங்களை இயக்குவதில் ஸ்பெஷலிஸ்ட்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால், தாய்லாந்து அனுப்பப்பட்டவர் இவர்.

இலங்கையில் இருந்து பிரபாகரனின் தகவல் தொடர்புகள் வெளிநாட்டுக்கு
போவதும், வெளிநாட்டில் இருந்து பிரபாகரனுடன் தகவல் பரிமாற்றம் செய்வதும்,
தாய்லாந்தில் இருந்த ‘வேல்’ ஊடாகவே அந்த நாட்களில் நடைபெற்று வந்தன.
இதனால், அவரும் சட்டலைட் தகவல் தொடர்பு உபகரணத்தை ஓரளவுக்கு இயக்கத்
தெரிந்தவர்.

இவர்கள் இருவரும் சமாளிப்பார்கள் என்ற தைரியத்தில்தால், சிங்கப்பூர்
பயிற்சிக்கு சென்ற மற்றைய கேப்டன் வராமல், கிட்டுவின் பயணம் துவங்கியது.

தாய்லாந்தின் புக்கெட் துறைமுகத்தில் இருந்து கப்பல் புறப்பட்டது.
கப்பல் புறப்பட்டு, சில மணி நேரத்தில், அதில் இருந்த சட்டலைட் டெலக்ஸ்
இயங்கவில்லை.

இங்கு மற்றொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். இது நடைபெற்ற நாட்களில்,
இந்திய உளவுத்துறை றோ, தாய்லாந்தின் தெற்கு கடற்பரை நகரமான புக்கெட்டில்
அதிக கவனம் செலுத்திக் கொண்டிருந்தது. அதற்கு காரணம், புலிகளை கண்காணிப்பது
அல்ல, பாகிஸ்தானின் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ. அங்கிருந்து சில ரகசிய
நடவடிக்கைகளை செய்து கொண்டிருந்தது.

ஐ.எஸ்.ஐ. ரகசிய ஆயுத ஷிப்மென்ட்டுகளை அனுப்ப புக்கெட் துறைமுகத்தை
பயன்படுத்திக் கொண்டிருந்ததை மணந்து பிடித்திருந்த றோ கேட்டுக்கொண்டதன்படி,
அந்தமான் பகுதியில் இருந்த இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்
ஒன்று அவ்வப்போது, புக்கெட்டுக்கு அருகே ரகசியமாக வந்து
போய்க்கொண்டிருந்தது.

ஒருதடவை, இந்திய நீர்மூழ்கிக் கப்பல் புக்கெட் கடலில் நீருக்கு வெளியே
தெரிந்ததை போட்டோ எடுத்து அந்த நாட்களில் வெளியிட்டிருந்தது பாங்காக்
போஸ்ட் பத்திரிகை. அதே துறைமுகத்தில் இருந்துதான், புலிகளும் இயங்கிக்
கொண்டிருந்தனர்.

கிட்டு பயணம் செய்த MV Yahata கப்பல் நடுக் கடலுக்கு சென்றதும், அதில்
எழுதப்பட்டிருந்த YAHATA என்ற பெயரில் முதல் எழுத்தையும், கடைசி
எழுத்தையும் அதில் இருந்தவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டபடி அழித்தார்கள்.
இப்போது கப்பலின் பெயர் AHAT என்று மாறியது.

சட்டலைட் டெலக்ஸ் வேலை செய்யாத நிலையில், YESU-747 தொலைத் தொடர்பு
சாதனத்தின் மூலம் கப்பலில் இருந்து, கே.பி.-யை தொடர்பு கொண்டார்கள். அந்தத்
தொடர்புக்காக புலிகள் உபயோகித்தது, வர்த்தகக் கப்பல்கள் வழமையாக
உபயோகிக்கும் அலைவரிசையை அல்ல.

இந்த புதிய அலைவரிசையில் மெசேஜ் போவதை, ஆட்டோ-ட்ராக் பண்ணியது, அந்த ஏரியாவில் இருந்த இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்…. (தொடரும்)


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? Empty Re: ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா?

Post by logu Sat Jun 16, 2012 7:16 pm

ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? 917304 ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? 917304 ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? 917304
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? Empty Re: ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? அத்தியாயம் 12
» photoshop psd பைல்கள் தம்ப்நைல்-ஆக தெரிய வேண்டுமா?
» கர்ப்பமாக இருக்கும் போது என்ன குழந்தைன்னு தெரிய வேண்டுமா?
» போரின் இறுதி நாட்களில் நடந்தது என்ன? – மதகுரு சொல்லும் உண்மைக்கதை(!)
» போரின் இறுதி நாட்களில் நடந்தது என்ன? – மதகுரு சொல்லும் உண்மைக்கதை(!)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum