TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழக அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்: இருவருக்கு "கல்தா'

Go down

தமிழக அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்: இருவருக்கு "கல்தா' Empty தமிழக அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்: இருவருக்கு "கல்தா'

Post by அருள் Sat Dec 10, 2011 7:46 am

தமிழக அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்: இருவருக்கு "கல்தா' Tamil_News_large_364879
சென்னை: தமிழக அமைச்சரவையில் இருந்து, பரஞ்ஜோதி ராஜினாமா செய்தார்.
செல்வி ராமஜெயம் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பதிலாக, இந்து சமய
அறநிலையத் துறை அமைச்சராக திருப்பூர் ஆனந்தனும், சமூகநலத் துறை அமைச்சராக
வளர்மதியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அமைச்சரவையில் ஏற்கனவே மூன்று முறை மாற்றம் செய்யப்பட்டது. இது
தவிர, இலாகாக்களும் அவ்வப்போது மாற்றப்பட்டன. இந்நிலையில், கடந்த அக்டோபர்
மாதம் நடந்த திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற பரஞ்ஜோதி,
நவம்பர் 6ம் தேதி அமைச்சராக பதவியேற்றார். இவருக்கு, அறநிலையத் துறை, தமிழ்
வளர்ச்சி, சட்டம், நீதி, சிறைத் துறை ஆகிய முக்கிய பொறுப்புகள்
வழங்கப்பட்டன. ஆனால், இவர் மீது இடைத்தேர்தலின் போதே, திருச்சியைச் சேர்ந்த
டாக்டர் ராணி, பாலியல் புகார் கொடுத்தார். அமைச்சரான நிலையில், இவர் மீது
எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய, கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, இவர் மீது
இரண்டு வழக்குகள் நேற்று பதிவு செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, மேலிடத்தின்
உத்தரவுப்படி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக பரஞ்ஜோதி கடிதம்
கொடுத்தார். இதை ஏற்று, இவரை அமைச்சரவையில் இருந்து, கவர்னர் ரோசய்யா
விடுவித்தார். இத்துடன், அமைச்சர் செல்வி ராமஜெயத்தையும் அமைச்சரவையில்
இருந்து நீக்க, முதல்வர் ஜெயலலிதா பரிந்துரைத்து இருந்தார். இதையும் ஏற்று,
இவரையும் அமைச்சரவையில் இருந்து, கவர்னர் நீக்கியுள்ளார். இவர்களுக்கு
பதிலாக, சென்னையைச் சேர்ந்த வளர்மதி, திருப்பூரைச் சேர்ந்த
எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில், வளர்மதிக்கு அவர் ஏற்கனவே முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில்
வகித்து வந்த, சமூகநலத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் ஆனந்தனுக்கு
அறநிலையத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., அரசு அமைந்த பிறகு, அறநிலையத் துறை சண்முகநாதனுக்கு
ஒதுக்கப்பட்டது. கடந்த முறை நடந்த அமைச்சரவை மாற்றத்தில், சண்முகநாதனிடம்
பதவி பறிக்கப்பட்டு, பரஞ்ஜோதி வசம் ஒப்படைக்கப்பட்டது. இதேபோல, ஆட்சி
அமைந்த போது, சட்டம் மற்றும் சிறைத் துறை அமைச்சராக இசக்கி சுப்பையா
நியமிக்கப்பட்டார். இவரது பதவி ஒரு மாதத்தில் பறிக்கப்பட்டது. இதன் பின்,
செய்தித் துறை அமைச்சர் செந்தமிழன் வசம், சட்டம், நீதி, சிறைத் துறை
ஒப்படைக்கப்பட்டது. எனினும், கடந்த முறை நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது,
செந்தமிழனிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இதன்பின், ராஜேந்திர
பாலாஜி செய்தித் துறை அமைச்சராகவும், சட்டம், நீதி, சிறைத் துறை ஆகியவை
புதிதாக பதவியேற்ற பரஞ்ஜோதியிடமும் வழங்கப்பட்டது. ஆறு மாதங்களில், சட்டத்
துறையை கவனித்து வந்த மூன்றாவது அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
சட்டம், நீதி, சிறைத் துறை ஆகியவை, பள்ளிக் கல்வி அமைச்சர்
சி.வி.சண்முகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சட்டத்துறையை கவனிக்கும்
நான்காவது அமைச்சராக இவர் இருப்பார். செல்வி ராமஜெயம் முதலில் பதவியேற்ற
போது, சமூக நலன் மற்றும் சத்துணவுத் துறை அமைச்சராக இருந்தார். கடந்த
நவம்பரில் நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது, சத்துணவுத் துறை இவரிடம்
இருந்து பிரிக்கப்பட்டு, எம்.சி.சம்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது.

பதவியேற்பு எப்போது: புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள்
வளர்மதி, ஆனந்தன் ஆகியோரது பதவியேற்பு நிகழ்ச்சி, ராஜ்பவனில் வரும் 12ம்
தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.

நீக்கப்பட்ட இரண்டு அமைச்சர்கள்: பரஞ்சோதி: திருச்சி மேற்கு
தொகுதி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆன
பரஞ்சோதி, நவ., 6ம் தேதி இந்து சமய அறநிலைத்துறை மற்றும் சட்ட அமைச்சராக
பதவியேற்றார். பதவியேற்ற ஒரே மாதத்தில் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ராமஜெயம்: புவனகிரி சட்டசபை தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.,
வாக தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வி.ராமஜெயம் மே 16ம் தேதி, சமூக நலத்துறை
அமைச்சராக பதவியேற்றார். நவ., 5ம் தேதி இவருக்கு மகளிர் நலன்,
மாற்றுத்திறனாளிகள் நலன் ஆகியவை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. நேற்று
இவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 6 மாதங்களில் பதவியை
இழந்துள்ளார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக அமைச்சரவையில் விரைவில் அதிரடி மாற்றம்
» அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்: பிரதமராக அண்ணன் சமல், பாதுகாப்பு அமைச்சராக தம்பி கோதபாய
» தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றம்: இருவர் உள்ளே... இருவர் வெளியே...
» மத்திய அமைச்சரவையில் பெரும் மாற்றம் : புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
» தமிழக மீனவர்கள் வேறு சிறைக்கு மாற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum