TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அடாவடியாக முல்லைப் பெரியாறு அணைகட்ட தமிழக தொழிலாளிகளிடம் பணம் வசூலிப்பு!!

Go down

அடாவடியாக முல்லைப் பெரியாறு அணைகட்ட தமிழக தொழிலாளிகளிடம் பணம் வசூலிப்பு!! Empty அடாவடியாக முல்லைப் பெரியாறு அணைகட்ட தமிழக தொழிலாளிகளிடம் பணம் வசூலிப்பு!!

Post by ஜனனி Mon Dec 05, 2011 7:29 am

அடாவடியாக முல்லைப் பெரியாறு அணைகட்ட தமிழக தொழிலாளிகளிடம் பணம் வசூலிப்பு!! Mullai_periyaaru

தமிழகத்தில் இருந்து கேரள
தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் ஜீப்களை கம்பம் மெட்டு பகுதியில் ஒரு
கும்பல் இன்று காலை வழிமறித்து மிரட்டி பணம் வசூலித்தது. முல்லை பெரியாறில்
புதிய அணை கட்ட கேரள அரசு நிதி வசூலிக்க சொல்லியிருப்பதாக அவர்கள்
கூறியுள்ளனர். பணம் தர மறுத்த பெண் தொழிலாளர்களிடம் அத்துமீறி நடக்க
முயன்றுள்ளனர். இதனால், எல்லை பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தமிழக எல்லையையொட்டி கேரள பகுதியில் முல்லை பெரியாறு அணை உள்ளது. இந்த
அணை மூலம் தென் மாவட்ட விவசாயிகள் பாசன வசதி பெற்று வருகின்றனர்.

அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என சுப்ரீம் கோர்ட் அளித்த
தீர்ப்பை கேரள அரசு அமல்படுத்தவில்லை. அணை பலவீனமாக இருப்பதாக வதந்தி
கிளப்பி, புதிய அணை கட்டப் போவதாக கூறி வருகின்றனர்.

புதிய அணை கட்டுவதில் கேரள அரசு தற்போது தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது.
நில அதிர்வுகளால் அணை பலமிழந்து விட்டதாகவும் பேரழிவு ஏற்பட போகிறது
என்றும் மக்களிடையே பீதி கிளப்பப்பட்டு வருகிறது. புதிய அணை கட்ட
வலியுறுத்தி கேரள அரசியல் கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன.

பெரியாறு அணைக்குள் நேற்று அத்துமீறி புகுந்த கேரள இளைஞர் காங்கிரசார்
கடும் ரகளையில் ஈடுபட்டனர். தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும் தலைமதகு
பகுதிக்குள் நுழைந்து தமிழக பொதுப்பணித்துறை மற்றும் மின்வாரிய அலுவலகங்களை
சூறையாடினர். பணியில் இருந்த ஊழியர் களையும் தாக்க முயன்றுள்ளனர்.
அவர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள வனப்பகுதிக்குள் ஓடி ஒளிந்தனர்.

அணைக்கு ஊர்வலமாக வந்த காங்கிரசார், உருட்டுக்கட்டைகளால் கண்ணில்
தென்பட்ட தமிழ் விளம்பர போர்டுகளை அடித்து நொறுக்கினர். இதையடுத்து,
பெரியாறு அணையில் நூற்றுக்கணக்கான கேரள போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரள எல்லையில் தமிழ் பெண்களை இழிவுபடுத்தும் செயலில்
சிலர் இறங்கியுள்ளனர். தேனி மாவட்டம் சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம்,
கூடலூர், கோம்பை, தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரள மாநிலம்
நெடுங்கண்டம், கட்டப்பணை, மேட்டுக்குழி, மாழி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள
ஏலம், காபி தோட்டங்களுக்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலைக்கு சென்று
வருகின்றனர்.

தோட்ட உரிமையாளர்கள் ஜீப்களை மாத வாடகைக்கு பேசி, தொழிலாளர்களை வேலைக்கு
அழைத்து செல்கின்றனர். தமிழகத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஜீப்கள் தினமும்
தொழிலாளர்களை கேரளாவுக்கு ஏற்றிச் சென்று வருகின்றன.

இன்று காலை தொழிலாளர்களை ஏற்றி வந்த ஜீப்களை எல்லைப் பகுதியான கம்பம்
மெட்டில் ஒரு கும்பல் வழிமறித்தது. ‘முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட
வேண்டும். அதற்கு நிதி திரட்ட வேண்டும் என எங்கள் அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதனால் கேரள மாநிலத்துக்குள் செல்ல வேண்டும் என்றால் ரூ.100 தர
வேண்டும்’ என்று கேட்டு தகராறு செய்தனர். பணத்தை வாங்கிக் கொண்டு,
‘டிரைவர்ஸ் அசோசியேஷன்’ என்று மலையாளத்தில் அச்சடித்த ரசீதை கொடுத்தனர்.

அதில், எந்த பதிவெண்ணும் கிடையாது. சந்தேகமடைந்த ஒரு சில ஜீப்
டிரைவர்கள், பணம் கொடுக்க மறுத்துள்ளனர். ஆத்திரமடைந்த அந்த கும்பல்,
வேனில் இருந்த தமிழக பெண்களை வெளியே இழுத்துப்போட்டு ரகளையில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் அத்துமீறி நடக்க முயன்றனர். ‘பணம் கொடுக்காமல் யாரும்
கேரளாவுக்குள் நுழைய முடியாது’ என்று எச்சரித்தனர். இதை பார்த்ததும் மற்ற
ஜீப்களில் அமர்ந்திருந்த பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

பயத்தில் பலர் வேலைக்கு செல்லாமல் வீடு திரும்பி விட்டனர். இந்த சம்பவம்
தேனி மாவட்டத்தில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

வீண் வதந்திகளையும் பிரச்னைகளையும் எழுப்பி வன்முறையை தூண்ட கேரளா
முயன்று வருவதாக தொழிலாளர் அமைப்புகள் கூறுகின்றன. இந்த விஷயத்தில் மத்திய,
மாநில அரசுகள் தலையிட்டு ஆரம்பத்திலேயே சுமுக தீர்வு காண வேண்டும் என
எல்லை பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» முல்லைப் பெரியாறு:கேரளாவுக்கு தமிழக அரசு கண்டனம்
» முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழக எம்.பி.,க்கள் சொதப்பல்
» முல்லைப் பெரியாறு அணை: தமிழக அரசு பராமரிக்க அனுமதி
» முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் 6 வார அவகாசம்
» முல்லைப் பெரியாறு விவகாரத்தில் முரண்டு பிடிக்கும் கேரளா-தமிழக இளைஞர் தீக்குளிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum