TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மார்பகத்தை இழக்காமலிருக்க.... மார்பக புற்றுநோய்

Go down

மார்பகத்தை இழக்காமலிருக்க.... மார்பக புற்றுநோய் Empty மார்பகத்தை இழக்காமலிருக்க.... மார்பக புற்றுநோய்

Post by ஜனனி Wed Nov 16, 2011 7:51 am

இப் பெண் போல மார்பகத்தை இழக்காமலிருக்க..


[You must be registered and logged in to see this image.]


இந்தப் பெண் போல பாதிப்புறுவதற்கு எந்தப் பெண்ணிற்குத்தான் விருப்பம்
இருக்க முடியும். பெண்மையின் அடையாளமாக அவளது பெருமையின் சின்னமாக,
சுயகௌரவத்;தைப் பேணுவதாக இருப்பது மார்பகங்கள். இதை இழப்பது பெண்களால்
சகிக்கக் கூடிய விடயம் அல்ல.

மற்றவர்களை மோகிக்க வைத்த அதே உறுப்பு அவளைச் சாகடிக்கவும் கூடும் என்பதுதான் சோகமான மறுபக்கம்.

புற்றுநோய் என்றால் புதைகுழிக்கு செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்ற எண்ணமே இன்றும் பலரிடையே நிலவுகிறது.

ஆனால் இன்று மார்புப் புற்றுநோயானது குணமாக்கக் கூடிய நோய் என்பது
பலருக்குத் தெரிவதில்லை. அதுவும் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிட்டால்
வந்த சுவடின்றி முற்றாக மாற்றக் கூடியதாகும்.

மார்பகப் புற்று நோயானது பால் சுரக்கும் கலங்களில் அல்லது சுரந்த பாலை முலைக்குக் கடத்தும் குழாய் (கான்) களில் தோன்றுவதாகும்.

யாருக்கு?

ஆண்களுக்குக் கூட மார்புப் புற்றுநோய் வரலாம். பெண்களே பெருவாரியாகப்
பாதிக்கப்படுகிறார்கள். அவர்களில் எத்தகையவர்களுக்கு இது வருவதற்கான
வாய்ப்பு அதிகம்?

  • தாய், சகோதரி என நெருங்கிய குடும்ப உறவினர்களிடையே காணப்பட்டால் வாய்ப்பு அதிகமாகும்.
  • மகப் பேறு இல்லாத பெண்களுக்கு.
  • காலம் கடந்து முதுவயதில் தாய்மைப் பேறு அடைந்தவர்களுக்கு ஏனையவர்களi விட அதிக சாத்தியம் உள்ளது.
  • மாதவிடாய் நின்ற பின்னர் திடீரென அதிகளவு எடை கூறியவர்கள்.
  • பெண் ஹோர்மோன் ஆன ஈஜ்ரோஜனைத் தூண்டுவதற்கான சிகிச்சைகளை நீண்டகாலம் செய்தவர்களுக்கு.
  • மிகக் குறைந்தளவு வயதிலேயே பூப்படைந்தவர்களுக்கு.
  • மிகப் பிந்திய வயதிவேயே மாதவிடாய் முற்றாக நின்றவர்களுக்கு.
  • ஈஜ்ரோஜன் அடங்கிய கருத்தடை மாத்திரைகளை மருத்துவ ஆலாசனை இன்றி நீண்ட காலம் உபயோகித்தவர்களுக்கு


இவ்வாறான வாய்ப்புள்ளவர்களுக்கு மாத்திரமின்றி ஏனையவர்களுக்கும் அது வருவதற்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது.

எனவே ஒவ்வொருவரும் தமது மார்பகங்களில் அக்கறை செலுத்துவது அவசியமாகும். அதன் முதற்படி அதனை அக்கறையுடன் கவனிப்பதுதான்.


[You must be registered and logged in to see this image.]


இதன் மூலம் ஆரம்ப அறிகுறிகளை ஒருவரால் கண்டறிய முடியும்.

அறிகுறிகள்


  • முக்கியமானது மார்பில் தோன்றும் வீக்கங்களும் கட்டிகளுமாகும். வலி
    இருக்கிறதோ இல்லையோ எத்தகைய மாற்றங்களும் கவனத்தில் எடுக்கப்பட
    வேண்டியவையே.

மார்புக் கச்சையின் அளவும் ஆரோக்கியமும்


  • சாதாரண அவதானத்தில் அல்லது கண்ணாடி முன் நின்று பார்க்கும்போது மார்பக
    அளவுகளில் மாற்றம் தென்பட்டால் அசட்டை செய்ய வேண்டாம். சிலருக்கு
    இயல்பிலேயே ஒரு மார்பு மற்றதைவிடப் பெரிதாக இருக்கும். இது பயப்பட
    வேண்டியதில்லை. ஆனால் அந்ந அளவுகளில் புதிய மாற்றம் ஏற்பட்டால் கவனத்தில்
    எடுப்பது அவசியம்.

[You must be registered and logged in to see this image.]


  • மார்பின் மேற்பரப்பில் ஏதாவது பள்ளம் அல்லது உட்குழிவு ஏற்பட்டால்.
  • மார்பக தோலின் மிருதுத் தன்மையில் மாற்றம் ஏற்பட்டால், முக்கியமாக
    தோடம்பழத்தில் உள்ளது போல சிறு திட்டிகளும் பள்ளங்களுமாக மாற்றம்
    ஏற்பட்டால்.
  • முலைக்காம்பின் தோற்றத்தில் மாற்றம். அல்லது துருத்திக் கொண்டிருந்த முலைக்காம்பு உள்வாங்கப்பட்டால்.

[You must be registered and logged in to see this image.]


  • முலைக் காம்பின் ஊடாகத் திரவம் வெளியேறினால்.
  • மார்பகத்தில் வலி ஏற்பட்டால். சில பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில்
    வழமையாக வலி ஏற்படுவதுண்டு. இதைத் தவிர ஏதாவது வலி ஏற்பட்டால் மருத்துவரைக்
    காண வேண்டும்.

[You must be registered and logged in to see this image.]


மேற்கண்ட அறிகுறிகள் ஏதாவது தெரிந்தால் உடனடியாக உங்கள் குடும்ப மருத்துவரை அல்லது உங்கள் பகுதியில் உள்ள மருத்துவரை அணுகுங்கள்

பரிசோதனைகள்

மார்பகத்தில் கட்டியிருந்தால் அல்லது இருக்கிறதா எனச் சந்தேகம் எழுந்தால் பரிசோதனைகள் மூலமே விடை காண முடியும்.

1. மமோகிறபி அல்லது மார்பக கதிர்ப்படம் என்பது மிக முக்கியமானதாகும்.
ஐககளினால் தடவிக் கண்டு பிடிக்க முடியாத சிறிய கட்டிகளைக் கூட மிக ஆரம்ப
நிலையிலேயே கண்டறிய உதவுகிறது. வழமையன கதிர்படங்கள் (X
Ray)
போலல்லாது மிகக் குறைந்தளவு கதிர்வீச்சு மட்டுமே பயன்படுத்தப்படுவதால் ஆபதற்றது.
2. ஸ்கான் (Ultra
Sound Scan)
பிரிசோதனை. குட்டியிருக்கிறதா எனச் சந்தேகம் இருந்தால்
அதனைக் கண்டறிய மிக உதவியானது. அதிலும் முக்கியமாக இளம் பெண்களில் கட்டி
மிகத் தளிவாகத் தெரியும்.
3. சிறிய ஊசி மூலம் கட்டியிலுள்ள சிறியளவு திசுக்களைப் உறிஞ்சி எடுத்து
பெற்று இழையவியல் பரிசோதனை செய்தல். கட்டியானது ஆபத்தற்ற சாதாரண கட்டியா
புற்றுநோயா போன்ற விபரங்களை அறிய இது அவசியமாகும்.

[You must be registered and logged in to see this image.]



நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு வருவோம். இப் பெண் போல மார்பகத்தை இழக்காமலிருக்க நீங்கள் செய்ய வேண்டியவை என்ன?
1. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் உதாரணமாக மாதமொருமுறை உங்கள்
மார்பகங்களை கட்டியிருக்கிறதா என்பதையிட்டு சுயபரிசோதனை செய்வது
அவசியமாகும்.. இதை எப்பொழுது செய்வது எவ்வாறு செய்வது என்பது பற்றி மற்றொரு
கட்டுரையில் பார்க்கலாம்.
2. கட்டி சிறியதாக இருந்தாலும் உடனடியாக மருத்துவரைக் காணுங்கள்.
சுயபரிசோதனையின் போது மேலே சொன்ன அறிகுறிகளில் ஏதாவது இருந்தாலும் அவ்வாறு
அணுகவும்.
3. மருத்துவரின் ஆலோசனையுடன் மமோகிறபி (Mamography)
எனப்படும் மார்பக கதிர்ப்படம் எடுத்தல். கட்டி வந்த பின் அல்ல.
வெளிப்படையாகத் தெரிய முன்னரே ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது அவசியமாகும்.


மமோகிறாம்



இது ஒரு முக்கிய பரிசோதனை. கட்டி தென்பட்ட பின் செய்வது மாத்திரமல்ல,
இந்நோய் வர வாய்புள்ள பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்காக அவசியம் செய்ய
வேண்டிய பரிசோதனை ஆகும்.


[You must be registered and logged in to see this image.]


இந் நோய் வருவதற்கான சாத்தியம் அதிகமுள்ள பெண்களுக்கு 35 வயதிற்கு பின்னர் வருடாவருடம் செய்வது அவசியம்.

50வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை செய்வது
அவசியம். ஆயினும் இதற்கான வசதி நாடு பூராவும் இல்லை என்பது உண்மையே.
ஆயினும் கொழும்பில் தனியார் துறையினரால் பல இடங்களில் செய்யப்படுகிறது
என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவம்

இன்றைய நிலையில் மார்பகப் புற்று நோய் வந்தால் கூட முதலில் கூறியது போல
மார்பகத்தை முற்றாக அகற்றும் சிகிச்சைகள் செய்யப்படுவதில்லை.
சத்திரசிகிச்சை, கதிர் சிகிச்சை, மற்றும் ஊசி மருந்துகள் மூலம் முழமையாகக்
குணமாக்கலாம்.

ஆபத்தான நோயெனப் பயந்து மறைக்காது, உடனடியாக மருத்துவரை அணுகுவதன் மூலம் பூரண குணம் பெற்று ஏனைய பெண்களைப் போல வாழலாம் என்பது உறுதி.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum