TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம்

Go down

டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம் Empty டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம்

Post by மாலதி Sat Oct 01, 2011 7:42 am

சென்னை:"டாஸ்மாக்' மதுபான கடைகளில் விற்பனை குறைந்துள்ளதாக கணக்கு
காட்டப்பட்டுள்ளது. போலி சரக்குகள் விற்பனை மற்றும் அண்டை மாநில சரக்குகள்
விற்பனை ஆகியவற்றால், விற்பனை குறைந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால்,
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டு
வருகிறது. இதில், பல்வேறு குறைபாடுகள் தெரியவந்தன.

தமிழகத்தில், 7,434 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த
கடைகளுக்கான மது சப்ளை, அந்த மண்டல குடோன்களில் இருந்து வழங்கப்பட்டு
வருகிறது. தமிழகத்தில், மொத்தம் உள்ள "டாஸ்மாக்' கடைகள் ஆறு மண்டலங்களாகப்
பிரிக்கப்பட்டுள்ளன. இதில், கோவை, சேலம், திருச்சி, மதுரை மற்றும்
சென்னையில் இரு மண்டலங்கள் என, செயல்பட்டு வருகின்றன."டாஸ்மாக்'
துவக்கப்பட்டதிலிருந்து, சரக்குகளின் விற்பனை ஆண்டுதோறும், சராசரியாக 17
சதவீதம் அதிகரித்து வந்துள்ளது. தற்போது, முதல் முறையாக சரக்குகள் விற்பனை,
12 சதவீதமாகக் குறைந்துள்ளது, சமீபத்தில், மண்டல வாரியாக நடந்த மாதாந்திர
ஆய்வுக் கூட்டத்தில் தெரிய வந்துள்ளது.

இதற்கு, தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை, திருவள்ளூர் மற்றும்
காஞ்சிபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலம் மற்றும் ஈரோடு,
திருப்பூர், உதகை, கோவை மாவட்டங்களைக் கொண்ட கோவை மண்டலம் ஆகியவற்றில்,
கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில், சரக்கு விற்பனை குறைந்தது காரணமாகக்
கூறப்படுகிறது.

இதுகுறித்து, டாஸ்மாக் பணியாளர் ஒருவர் கூறும் போது, ""இதே காலத்தில்,
பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட, "ஹாட்' வகை மதுபானங்களின் விற்பனை, அண்டை
மாநிலங்களான புதுச்சேரி மற்றும் ஆந்திராவில், 6 லட்சம் மற்றும் 3 லட்சம்
பெட்டிகள் வரை அதிகரித்துள்ளது. சென்னை, கோவை மண்டலங்களில், "டாஸ்மாக்'
சரக்கு விற்பனை குறைந்ததற்கு, அண்டை மாநிலங்களான புதுச்சேரி மற்றும்
ஆந்திராவிலிருந்து கொண்டு வரப்படும் சரக்கு, "டாஸ்மாக் பார்'களில்
விற்கப்படுவது முக்கிய காரணம்'' என்றார்.

அதிரடி சோதனை:
மதுபான பாட்டில்கள் விலையை, குவார்ட்டருக்கு
ஐந்து ரூபாய் என்ற வீதத்தில் உயர்த்திய பின், அரசுக்கு வர வேண்டிய விற்பனை
வரி, ஆயத்தீர்வை போன்றவை அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், இவை
குறைந்ததால், ஏதோ முறைகேடு நடப்பதாக அரசுக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து,
"டாஸ்மாக்' கடைகளில் இரண்டு நாட்களாக, பறக்கும் படையால், தொடர் சோதனை
நடத்தப்பட்டு வருகிறது.இதில், ஒரு மண்டலத்திற்கு விற்பனை அடிப்படையில்,
சராசரியாக ஐந்து முதல் ஆறு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு
மண்டலத்திற்கு, 15 பறக்கும் படை என, ஆறு மண்டலங்களுக்கு பறக்கும் படையினர்
சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த பறக்கும் படையில், ஐந்து
பேர் இடம் பெற்றுள்ளனர்.சோதனையின் போது, கடைக்கு சரக்கு வந்த தேதி, கடையின்
இருப்பு சரக்கு, விற்பனையான சரக்கு, அதற்கான பணம் சரியாக உள்ளதா என
கணக்கிடப்படுகிறது. அது மட்டுமன்றி, "பார்'களில் போதிய வசதி
செய்யப்பட்டுள்ளதா, பாருக்கான குறுமத் தொகை முறையாக செலுத்தப்படுகிறதா
என்பது உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள் மேற் கொள்ளப்படுகிறன.

இந்த ஆய்வில், பெரியளவில் தவறுகள் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில், அது
குறித்து மாவட்ட, மண்டல மேலாளர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. சிறிய
அளவிலான குறைகள், ஆய்வு அறிக்கையாகத் தயார் செய்து, உடனுக்குடன் சென்னைக்கு
அனுப்பப்பட்டு வருகிறது.மது குடிப்பவர்களின் எண்ணிக்கையோ, குடிக்கும்
அளவின் எண்ணிக்கையோ குறையாத நிலையில், விலை உயர்த்தப்பட்ட பின்பும்,
அரசுக்கு வருவாய் குறைந்து வருவதற்கு, அதிகளவில் போலி மதுபானங்கள் புழக்கமே
காரணம் என்று கூறப்படுகிறது. "பார்'கள் மூலம் போலி மதுபானங்களை விற்பதால்,
டாஸ்மாக் கணக்கில் விற்பனை அளவு குறைந்துள்ளது.

போலி மதுபானங்களால், போதை ஏறாமல், இன்னும் அதிகமாக குடிக்கும் நிலைக்கு
தான் குடிமகன்கள் தள்ளப்பட்டுள்ளனர். சென்னை, கோவை மண்டலங்களில், அண்டை
மாநில சரக்குகள் விற்பனையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. சில
நிறுவனங்கள், டாஸ்மாக் நிறுவனம் மூலம் மது வகைகளை அனுப்பாமல், நேரடியாக
கடைகளுக்கு அனுப்பி வரி ஏய்ப்பு செய்வதாலும், விற்பனை அளவு
குறைந்திருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.

"டாஸ்மாக்' விற்பனை சரிவு ஏன்?
டாஸ்மாக் நிர்வாகத்தில் உள்ள
அதிகாரிகளின் ஊழல் அதிகரித்ததே, பல்வேறு முறைகேடுகளுக்கு காரணம் என்று
கூறப்படுகிறது. "டாஸ்மாக்' சில்லறை விற்பனையை தமிழக அரசே துவக்கிய போது,
அரசுக்கு வருவாய் அதிகரிக்கத் துவங்கியது. அப்போது, எம்.பி.ஏ., பட்டதாரிகளை
மாவட்டத்துக்கு ஒருவர் வீதம், ஒப்பந்த அடிப்படையில் நியமித்து, அவர்கள்
மூலம் விற்பனை கண்காணிக்கப்பட்டு வந்தது. இதனால், நிர்வாகத்தில் லஞ்சம்
என்பது இல்லாமல் இருந்தது.இந்நிலையில், தி.மு.க., ஆட்சி 2006ல் அமைந்ததும்,
எம்.பி.ஏ., பட்டதாரிகள், வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். டாஸ்மாக் கடைகளை
கண்காணிக்கும் பொறுப்பு, வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது முதல், ஊழல் அதிகரிக்கத் துவங்கியது. ஒவ்வொரு அதிகாரியும்,
தங்களுக்கு மாதம் தோரும் கடைகளில் இருந்து, இவ்வளவு தர வேண்டுமென, தொகையை
நிர்ணயித்தனர்.

படிப்படியாக வளர்ந்த ஊழல் :
இதை கடைகளின் மேலாளர்கள்,
கடைக்காரர்களிடம் சுமத்தினர். கடைக்காரர்கள், வாடிக்கையாளர்களின் தலையில்
சுமத்தினர். இதனால், குவார்ட்டருக்கு இரண்டு ரூபாய் கூடுதல் விலைக்கு
விற்கும் பழக்கம், தமிழகம் முழுவதும் துவங்கியது. இவ்வாறு கூடுதல் விலைக்கு
விற்க ஆரம்பித்ததால், உள்ளூர் போலீசார், ரவுடிகள், ஆளுங்கட்சியினர்,
கவுன்சிலர் ஆகியோர், டாஸ்மாக் விற்பனையாளர்கள், பார் உரிமையாளர்களிடம்
மாமூல் வசூலிக்கத் துவங்கினர். இதுவே, நாளடைவில் பெரிய ஊழல் வளர காரணமானது.
தமிழக அரசு தனது வருவாயை பெருக்க, குவார்ட்டருக்கு ஐந்து ரூபாய் வீதம்
விலையை உயர்த்தியதால், வழக்கத்தை விட, அரசுக்கு விற்பனை வரி மற்றும்
ஆயத்தீர்வை மூலம் வருவாய் அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், விலையை
உயர்த்திய பின், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில், வரி வருவாய் குறைந்தது. இதனால்
தான், அரசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் சிறியதாக துவங்கிய ஊழல்,
தற்போது போலி சரக்கு அதிகளவில் விற்பனை செய்தல், அண்டை மாநில சரக்கு
விற்பனை செய்தல் என்ற அளவுக்கு உயர்ந்துவிட்டது.

நிறுவனங்களே ஊழல்?
மேலும், மதுபான நிறுவனங்களே, டாஸ்மாக்
குடோன் மூலம் சரக்கு வழங்காமல், நேரடியாக கடைகளுக்கு சப்ளை செய்கின்றனவா
என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அவ்வாறு விற்பனை செய்வதன் மூலம், அரசுக்கு
செலுத்த வேண்டிய ஆயத்தீர்வை, விற்பனை வரி என, சரக்கின் விலையில் பாதிக்கும்
மேல் மிச்சப்படுத்த முடியும். இதனால் கூட அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட
வாய்ப்புள்ளது. தமிழகம் முழுவதும், தற்போது ஆளுங்கட்சியினர் வசம், "பார்'
உரிமம் சென்றுள்ளதால், போலி சரக்கு போன்றவற்றில், அதிகாரிகளால் கடுமையான
நடவடிக்கை எடுக்க முடியாத நிலையும் உள்ளது. டாஸ்மாக் கடைகளில் கூட்டம்
குறையவில்லை. குடிப்பவர்களின் எண்ணிக்கையும், அளவும் குறையவில்லை. ஆனால்,
விற்பனை குறைந்து வந்துள்ளது. எனவே, அதிகாரிகள் மட்டத்தில் லஞ்சத்தை ஒழிக்க
நடவடிக்கை எடுத்தால், விற்பனையாளர்கள் மட்டத்தில் முறைகேடுகள் தானாகவே
குறைந்துவிடும்.

அடுக்கடுக்கான விதிமீறல்கள் - "டாஸ்மாக்' அதிகாரிகள் அதிர்ச்சி :
தமிழகம்
முழுவதும், "டாஸ்மாக்' அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், ஊழியர்களின்
பல்வேறு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால், அதிர்ச்சியான
அதிகாரிகள், சம்பந்தப்பட்டோருக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளனர். 32
தனிப்படை அதிகாரிகள், "டாஸ்மாக்' கடைகளில் அதிரடிசோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த இரு தினங்களாகத் தொடரும் இந்த சோதனை, இன்றுடன் முடியும். இதில்,
"டாஸ்மாக்' ஊழியர்களின் பல்வேறு விதிமீறல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

பதிவேடே பராமரிக்கவில்லை!
பல இடங்களில் விற்பனைப் பதிவேடு,
இருப்புப் பதிவேடு, பில் புக், சரக்குத் தேவைக்கான பதிவுப் புத்தகம்
உள்ளிட்டவை, பராமரிக்கப்படாமல் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
பெரும்பாலான இடங்களில், குடிமகன்கள் வாங்கும் சரக்குகளுக்கு, ரசீது
தரப்படவில்லை. பல கடைகளின் ஊழியர்கள், மேற்பார்வையாளர்கள் முறைகேடுகளில்
ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. சில இடங்களில், "டாஸ்மாக்' தாலுகா
அதிகாரிகளும், ஊழியர்களின் விதிமீறல்களுக்கு, உடந்தையாக இருந்ததும் தெரிய
வந்துள்ளது.

குடிமகன்களிடம் கறவை:
பல இடங்களில், அதிகபட்ச விற்பனை
விலையை விட, கூடுதல் விலைக்கு சரக்கு விற்றுள்ளனர். குறைந்த விலை
சரக்குகளைத் தான், பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றுள்ளனர். இதேபோல், பல
இடங்களில், "பார்'களில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளில், "பீர்'
பாட்டில்களைக் குளிர்வித்து, அதிக விலைக்கு விற்றதையும், அதிகாரிகள்
கண்டுபிடித்துள்ளனர்.பல இடங்களில், கடைகளில் விற்பனைப் பணம் குறைவாக
இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில கடைகளில், ஊழியர்களே பிளாஸ்டிக்
டம்ளர், தண்ணீர் பாக்கெட்கள் வாங்கி வைத்து, அதிக விலைக்கு விற்று
சம்பாதித்துள்ளனர். சோதனை குறித்து, "டாஸ்மாக்' பொது மேலாளரிடம் கேட்டபோது,
""வழக்கமாக ஆண்டுதோறும் நடத்தும் சோதனையைத்தான் இப்போதும் நடத்துகிறோம்.
விதிமீறலில் ஈடுபட்டோருக்கு அபராதம் விதிக்கப்படும். அந்தந்த கடைகள்
இருக்கும் பகுதிக்கு பொறுப்பான, அதிகாரிகளுக்கும் அபராதம் விதிப்போம்,''
என்றார்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» புத்தாண்டில் டாஸ்மாக் சரக்குகள் விற்பனை "விர்ர்...'
» தஞ்சை : டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதால், குடிமகன்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் 230 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் தஞ்சை நகரில் மட்டும் 72 கடைகள் உள்ளன. கடந்த 10 நாட்களாக இக்கடைகளில் பீர் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இ
» திருவண்ணாமலையில் போலி குடிநீர் தயாரித்து கேன்களில் விற்பனை: அதிகாரிகள் சோதனை
» டாஸ்மாக்' கடைகளில் குவிந்த "குடி'மகன்கள் ஒரே நாளில் ரூ.150 கோடி விற்பனை
» "தாகம்' தீர்க்க டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய "குடிமகன்'கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum