TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


படம் காட்டுகிறார்கள்!

Go down

படம் காட்டுகிறார்கள்! Empty படம் காட்டுகிறார்கள்!

Post by logu Tue Jul 12, 2011 7:10 am


படம் காட்டுகிறார்கள்! Edits





தமிழ்நாட்டில்
உள்ள பெரும்பாலான உள்ளாட்சி அலுவலகங்களில் கடந்த சில வாரங்களாக ஒரு
கேலிக்கூத்து நடைபெற்று வருகிறது. தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி,
முன்னாள் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் படங்களை அகற்றக்கூடாது, ஜெயலலிதா
மீண்டும் முதல்வர் ஆனதற்கு பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானத்தை
நிகழ்ச்சிநிரலில்கூட சேர்க்க மாட்டோம் என்கிற போராட்டம்தான் அது.ஆட்சி
மாறும்போது, அப்போது ஆட்சி பீடத்தில் யார் முதல்வரோ, பிரதமரோ அல்லது அந்த
நேரத்தில் யார் குடியரசுத் தலைவரோ அவரது படத்தை அரசு அலுவலகங்களில்
அதிகாரிகளின் அறைகளிலும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளின் அலுவலக
அறைகளிலும் மாட்டி வைப்பது திமுக ஆட்சிக்கு வந்தபிறகு
வழக்கப்படுத்தப்பட்டு இருக்கிறது.ஆட்சி பீடத்தில் திமுக
அமர்ந்தாலும், அதிமுக அமர்ந்தாலும், ஒவ்வோர் அலுவலகத்திலும் இருக்க
வேண்டிய அரசு அங்கீகரித்த புகைப்படம் செய்தி, மக்கள் தொடர்புத் துறையால்
அறிவிக்கப்படுவதும், அந்தப் படம் பல அளவுகளில் அச்சிடப்பட்டு மலிவு
விலையில் விற்பனை செய்யப்படுவதும் வழக்கமாகவே இருந்து வருகிறது. இடவசதி
உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் முன்னாள் முதல்வர்களின் படங்களையும்,
முன்னாள் நகர்மன்றத் தலைவர்கள் படங்களையும்கூட வரிசைப்படி மாட்டி
வைப்பதும்கூட நடைமுறையில் உள்ளது. அரசு கட்டிக்கொடுத்துள்ள
சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் எதிர்க்கட்சி எம்எல்ஏ என்பதற்காக,
முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை மாட்டி வைக்க மாட்டேன் என்று சொல்ல முடியுமா?
அந்தக் கட்டடம் அவரது சொந்த வீடு அல்ல. அரசு கட்டித் தந்துள்ள அலுவலகம்.
உள்ளாட்சி அமைப்புகளில் மட்டும் ஏன் இந்தப் பிரச்னை? இந்த ஆட்சி மாற்றத்தை
அவர்களால் ஏற்க முடியவில்லை என்பதுதான் காரணம்.இந்தக் கேலிக்கூத்து
குறித்து பத்திரிகைகளிலும் காட்சி ஊடகங்களிலும் தொடர்ந்து செய்திகள்
இடம்பெற்றபோதிலும், திமுக தலைமை இதுகுறித்து எந்தவித அறிக்கையும் அல்லது
எதிர்வினையும் புரியாமல் சும்மா இருப்பது, இந்தப் போராட்டத்தை மேலும்
ஊக்குவிப்பதாக இருப்பதால், சிறிய ஊர்களிலும் இத்தகைய எதிர்ப்புகள்
எழுந்துள்ளன. ஈரோடு அருகே ஒரு ஊராட்சி மன்றக் கூட்டம், அலுவலக
வராண்டாவில், ஒன்றியத் தலைவரின் பின்பக்கச் சுவரில் கருணாநிதியின் படமும்,
அவரது மேசையில் கருணாநிதி, ஸ்டாலின் உருவம் கொண்ட சிறியபடமும்
வைக்கப்பட்டு, கூட்டம் நடத்தப்பட்டதாகப் புகைப்படத்துடன் செய்திகள் வந்தன.திமுக
தலைவர் கருணாநிதி, தான் திருவாரூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக
அவைத்தலைவர் முன்பாக உறுதிமொழி ஏற்க வந்த நாளில், அவைத் தலைவர் மேசையில்
கருணாநிதியை நோக்கி வைக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை
ஒருவர் அவைத்தலைவரை அப்படம் பார்க்கும்படித் திருப்பி வைக்கும்
காட்சியையும் காண நேர்ந்தது. அதாவது முதல்வர் ஜெயலலிதா படம்
பார்த்துக்கொண்டிருக்க, முந்தைய முதல்வர் கருணாநிதி கையெழுத்துப்
போடக்கூடாது என்று அந்த விசுவாசத் தொண்டர் விரும்புகிறாராம். இது அவரது
விருப்பம் மட்டும்தானா, புரியவில்லை!நீங்கள் சட்டப்பேரவைத்
தேர்தலில்தானே வெற்றி பெற்றிருக்கிறீர்கள், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி
பெற்ற பிறகு கருணாநிதியின் படத்தை நீக்கிக்கொள்ளுங்கள் என்று ஒரு ஒன்றியத்
தலைவர் விசுவாசக் கூக்குரல் கொடுத்ததாகக் கேள்விப்படும்போது, இவர்களைப்
பார்த்துச் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. தமிழகத்தில் இருக்கும்
உள்ளாட்சி அமைப்புகள் தமிழக அரசுக்குச் சொந்தமில்லை என்பதைப்போன்று
பேசுகிறார்கள் இவர்கள். இந்தப் போராட்டங்களுக்குக் காவல்துறையின்
உதவியுடன் போய் படத்தை அகற்றுவதைப் பார்த்தால், சிரிப்புத்தான் வருகிறது.
இது என்ன மன்னராட்சியா, மக்களாட்சியா? என்ற சந்தேகம் எழுகிறது. எதற்காக
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்படி ஒரு எதிர்ப்பு?சென்ற
உள்ளாட்சித் தேர்தலின்போது, மேயர், நகர்மன்றத் தலைவர், ஒன்றியத் தலைவர்
ஆகிய பதவிகள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் வழக்கம்
கைவிடப்பட்டது. இந்த அமைப்புகளுக்குத் தேர்வு செய்யப்படும் கவுன்சிலர்கள்
தங்களுக்குள் பெரும்பான்மை செல்வாக்குள்ள ஒருவரைத் தேர்வு செய்யும்
நடைமுறை உருவானது.இந்த மாற்றத்துக்கு அடிப்படைக் காரணம்,
கவுன்சிலர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆளும்கட்சிக் கூட்டணியைச்
சேர்ந்தவர்களாக இருந்து, மேயர், நகர்மன்றத் தலைவர் போன்ற பதவிகளுக்கு
மக்களால் எதிர்க்கட்சி வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டால் ஏற்படும்
நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்குத்தான் மறைமுகத் தேர்தல் கொண்டு
வரப்பட்டது. இப்போது அந்த நடைமுறையை அதிமுக அரசு நீக்கப்போகிறது
என்று பேச்சு எழுந்துள்ளது. அப்படி நீக்கப்பட்டு, மேயர், நகர்மன்றத்
தலைவர், பதவிக்குத் தனியாகப் போட்டியிடும் நிலைமை ஏற்பட்டால், இப்போது
அப்பதவி வகிக்கும் தங்களுக்கே அந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்கிற
ஆசையில், தங்களது தீவிர விசுவாசத்தைத் தலைமைக்குத் தெரியப்படுத்தும்
விளம்பர அரசியல்தான், "கருணாநிதி, ஸ்டாலின் படங்களை எடுக்க விடமாட்டோம்'
என்கிற கூச்சல்.ஒரு விஷயத்தில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.
மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மன்றம் போன்ற அமைப்புகளில் அதிகாரிகள்,
மாமன்றக் கூட்டம் நடைபெறும் அரங்கு, அலுவலகம் போன்றவற்றில் முதல்வரின்
படம் இடம்பெறுவதுதான் நியாயம். அதேநேரத்தில், மேயர், நகர்மன்றத் தலைவர்
போன்றவர்களின் அறைகளில் அவர்கள் தங்களது தலைவர்களின் படங்களை
வைத்திருப்பதைத் தடுப்பது தவறு.இந்தப் பிரச்னைக்கு ஒரு
முற்றுப்புள்ளி வைத்து, எல்லா அரசு அலுவலகங்களிலும் தேசப்பிதா மகாத்மா
காந்தி, குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர் ஆகிய மூவரின் படங்கள் மட்டுமே
இருக்க வேண்டும் என்கிற கருத்தொற்றுமையை ஏன் ஏற்படுத்தக் கூடாது? நாற்பது
ஆண்டுகளுக்கு முன்புவரை எல்லா அரசாங்க அலுவலகங்களிலும் ஆளுநர்
படத்தைத்தானே மாட்டி வைத்திருந்தார்கள். நிர்வாகத்தில் அரசியல் கலக்க
வேண்டிய அவசியம்தான் என்ன?
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum