TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அதிக ஊட்டச்சத்துகளுடன் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களில் முக்கியமானது முட்டை.

2 posters

Go down

அதிக ஊட்டச்சத்துகளுடன் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களில் முக்கியமானது முட்டை. Empty அதிக ஊட்டச்சத்துகளுடன் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களில் முக்கியமானது முட்டை.

Post by Tamil Tue Jan 05, 2010 9:30 pm

Egg,முட்டை,புரோட்டீன் (Protein)
முட்டைகுழம்பு செய்யும் முறை

அதிக ஊட்டச்சத்துகளுடன் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களில் முக்கியமானது முட்டை.


அதிக ஊட்டச்சத்துகளுடன் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களில் முக்கியமானது
முட்டை. புரோட்டீன் (Protein) அதிகம் நிறைந்தது. விட்டமின் A (Vitamin A),
விட்டமின் B (Vitamin B) அளவில் அதிகம் இருப்பதால், தோல் ஆரோக்கியத்திற்கும்,
பார்வை திறனுக்கு வலுவூட்டவும், இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும் மிகவும்
உகந்தது. சைவ உணவு உண்பவர்கள்கூட இன்று அதிகம் விரும்பிச் சாப்பிடும் சுவையான,
ஊட்டம் நிறைந்த உணவுப் பொருள் இது. முட்டையை அவித்து சாப்பிடலாம், ஆம்லெட் போட்டு
சாப்பிடலாம் என்று இருந்த நிலை போய், இன்று எண்ணற்ற விதங்களில், சுவைகளில் பல்வேறு
உணவுகள் முட்டையைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அவற்றினை இந்தப் பக்கத்தில்
தொகுத்து தருகின்றோம்.


Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அதிக ஊட்டச்சத்துகளுடன் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களில் முக்கியமானது முட்டை. Empty ரசம் சாதத்தோடு நல்ல காம்பினேஷன்

Post by Tamil Tue Jan 05, 2010 9:32 pm

ரசம் சாதத்தோடு நல்ல
காம்பினேஷன்


தேவையான பொருட்கள்



  • முட்டை-2
  • தேங்காய் துருவல்-1 1/2மேசைகரண்டி
  • கடுகு-1/2தேக்கரண்டி
  • மிளகாய் வற்றல்-2
  • கறிவேப்பிலை-சிறிதளவு
  • உப்பு-தேவையான அளவு
  • எண்ணெய்-1மேசைகரண்டி


செய்முறை



  • வாணலியில் எண்ணெய் சூடாக்கி கடுகு,பொடியாக வெட்டிய மிளகாய்வற்றல், கறிவேப்பிலை
    தாளித்து தேங்காய் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
  • உப்பு, முட்டை உடைத்து சேர்த்து கிளறவும்.
  • முட்டை வெந்து உதிரியானதும் இறக்கி சூடாக பரிமாறவும்.

குறிப்பு:

தேங்காய் எண்ணெயில் தாளித்தால் சுவையும் மணமும் கூடும்

வழங்கியவர்

கவிசிவா
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அதிக ஊட்டச்சத்துகளுடன் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களில் முக்கியமானது முட்டை. Empty முட்டை உருளைக்கிழங்கு கபாப்

Post by Tamil Tue Jan 05, 2010 9:38 pm

தேவையான பொருட்கள்




  • உருளைக்கிழங்கு [வேக வைத்தது]- 2 கப்
  • வெங்காயம்-2
  • பச்சை மிளகாய்-3
  • துருவிய இஞ்சி- அரை ஸ்பூன்
  • சோம்புப்பொடி- அரை ஸ்பூன்
  • அரிந்த பொதினா- கால் கப்
  • அரிந்த கொத்தமல்லி- அரை கப்
  • பூண்டு விழுது- அரை ஸ்பூன்
  • மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
  • தக்காளி விழுது- அரை கப்
  • மிளகாய்த்தூள்- அரை ஸ்பூன்
  • தேவையான உப்பு
  • முட்டைகள்-4
  • பிரட் ஸ்லைஸஸ்-4
  • எண்ணெய் தேவையான அளவு





செய்முறை




  • முட்டைகளை வேக வைத்து ஓடுகளை நீக்கவும்.
  • முட்டைகளை இரண்டாக வெட்டி மஞ்சள் கருக்களைப் பிரிக்கவும்.
  • வாணலியில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
  • வெங்காயத்தைப்பொடியாக அரிந்துப் போட்டு வதக்கவும்.
  • பின் இஞ்சி, பொடியாக அரிந்த பச்சை மிளகாய், பூண்டு விழுது, சோம்புப்பொடி, கொத்தமல்லி, புதினா, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  • வதங்கிய விழுதில் பாதியை உருளைக்கிழங்கில் சேர்க்கவும்.
  • மீதமுள்ள வெங்காய விழுதில் தக்காளி, மிளகாய்த்தூள் சேர்த்து மேலும் சிறிது வதக்கவும்.
  • இதில் முட்டை மஞ்சள் கருக்களைக் கலந்து ஆற வைக்கவும்.
  • மறுபடியும் இந்த பேஸ்டை பாதியாக வெட்டிய வெள்ளைக்கருக்களில் அடைக்கவும்.
  • உருலைக்கிழங்கில்
    போதிய உப்பு, பிரட் தூள் சேர்த்து நன்கு பிசைந்து, ஒவ்வொரு பாதி
    முட்டைக்கருவைச் சுற்றிலும் கவனமாக பதிய அவித்து முட்டை போல உருட்டவும்.
  • இப்படி எல்லா முட்டை வெள்லைக்கருக்களையும் உருளைக்கிழங்கு பேஸ்டால் மூடியதும்
  • மிதமான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அதிக ஊட்டச்சத்துகளுடன் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களில் முக்கியமானது முட்டை. Empty முட்டை குழம்பு

Post by Tamil Tue Jan 05, 2010 9:38 pm



தேவையான பொருட்கள்




  • 1. முட்டை - 4 (வேக வைத்து 4 துண்டாக வெட்டியது)
  • 2. வெங்காயம் - 1 (அ) சின்ன வெங்காயம் - 15
  • 3. தக்காளி - 1
  • 4. கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க
  • 5. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  • 6. கறிவேப்பிலை
  • 7. உப்பு
  • 8. எண்ணெய் - 1 குழிக்கரண்டி
  • 9. இஞ்சி விழுது - 1/4 தேக்கரண்டி
  • 10. பூண்டு விழுது - 1/4 தேக்கரண்டி
  • அரைக்க:
  • 1. மிளகாய் வற்றல் - 5
  • 2. மல்லி - 1/4 மேஜைக்கரண்டி
  • 3. ஏலக்காய் - 2
  • 4. மிளகு - 1/4 தேக்கரண்டி
  • 5. சீரகம் - 1/4 தேக்கரண்டி
  • 6. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
  • 7. பட்டை - 1
  • 8. லவங்கம் - 2
  • 9. கறிவேப்பிலை - கொஞ்சம்
  • 10. தேங்காய் - 1/4 கப் (அ) தேங்காய் பால் - 1/2 கப்




செய்முறை




  • தேங்காய் தவிற அரைக்க வேண்டிய அனைத்தையும் வெறும் கடாயில் போட்டு வறுத்து வைக்கவும்.
  • இதை தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் பாதி வதங்கியது இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  • பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
  • இதில் உப்பு, மஞ்சள் தூள், அரைத்த மசாலா, முட்டை சேர்த்து, தேவைக்கு தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும்.
  • மசாலா வாசம் போனதும் எடுக்கவும்.





குறிப்பு:


சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி அனைத்துக்கும் நனறாக இருக்கும்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அதிக ஊட்டச்சத்துகளுடன் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களில் முக்கியமானது முட்டை. Empty மசாலா ஆம்லெட்

Post by Tamil Tue Jan 05, 2010 9:39 pm

தேவையான பொருட்கள்




  • முட்டை -3
  • கேரட் -1
  • வெங்காயம் -1
  • கரம்மசாலா -2ஸ்பூன்
  • கறிவேப்பிலை -சிறிது
  • உப்பு -தேவையான அளவு
  • எண்ணை -தேவையான அளவு




செய்முறை




  • கேரட்டை தோல் நீக்கி துறுவிகொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிவைக்கவும்.
  • ஒரு கப்பில் கேரட்,வெங்காயம்,உப்பு,கரம்மசாலா சேர்த்து நன்கு கலக்கவும்.அதில் முட்டைகளை உடைத்து ஊற்றிநன்கு கலக்கவும்.
  • அடுப்பில்
    தோசைக்கல்லை காயவைத்து முட்டை கலவையில் ஒருகரண்டி ஊற்றி 1ஸ்பூன்
    எண்ணைவிட்டு வெந்ததும் திருப்பிவிட்டு நன்றாக வெந்ததும் எடுக்கவும்.
  • எல்லாவற்றையும் இதேபோல் ஊற்றி எடுக்கவும்.
  • சுவையான மசாலா ஆம்லெட் ரெடி.பிரட்டினுள் வைத்து குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கு குடுத்துவிடலாம்.





வழங்கியவர்


செல்வி
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அதிக ஊட்டச்சத்துகளுடன் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களில் முக்கியமானது முட்டை. Empty பேக்கிங்முட்டைக்குழம்பு

Post by Tamil Tue Jan 05, 2010 9:40 pm

இந்த
முட்டைகுழம்பு சுவையானதும் புரதம்,கொழுப்பு
மினரல்,விற்றமின்,கல்சியம்,பொஸ்பரஸ்,இரும்பு,போன்ற பல சத்துகள்
அடங்கியதும் வித்தியாசமானதும், பெரியவர் முதல் சிறியவர்கள் விரும்பகூடியது
ஆகும்.







தேவையான பொருட்கள்




  • முட்டை - 5
  • வெங்காயம்(சிறிதாக வெட்டியது) - பாதி
  • கரட் (சிறிய)(துருவியது) - பாதி
  • லீக்ஸ் (சிறிதாகவெட்டியது) - சிறிதளவு
  • தக்காளிப்பழம்(சிறிதாக வெட்டியது) - 2
  • கருவப்பிலை(சிறிதாகவெட்டியது)- தேவையானளவு
  • பச்சைமிளகாய்(சிறிதாகவெட்டியது) - 1
  • மிளகாய்த்தூள் - தேவையானளவு
  • மட்ராஸ்கறித்தூள் - தேவையானளவு(விரும்பினாள்)
  • மஞ்சள்தூள் - சிறிதளவு(விரும்பினாள்)
  • கடுகு - அரை தேக்கரண்டி
  • பெருஞ்சீரகம் (தனியா) - அரை தேக்கரண்டி
  • இஞ்சி(சிறிதாகவெட்டியது) - மிகமிகசிறியதுண்டு
  • உள்ளி(பூண்டு)(சிறிதாகவெட்டியது) - 4 பல்
  • உப்பு - தேவையானளவு
  • எண்ணைய் - தேவையானளவு
  • பால் . தேவையானளவு
  • தண்ணீர் -தேவையானளவு
  • பழப்புளி (கரைத்தது) - தேவையானளவு
  • அஜினோமோட்டோ -கால்தேக்கரண்டி (விரும்பினாள்)




செய்முறை




  • (1)ஒருபாத்திரத்தில் முட்டையை உடைத்து போடவும்.
  • (2)அதனுடன்
    துருவியகரட்,சிறியதாகவெட்டிலீக்ஸ்,
    சிறிதாகவெட்டியதக்காளிப்பழம்,சிறிதாகவெட்டிய சிறிதளவு கருவப்பிலை,ஒரு
    பச்சைமிளகாய்,கால் கரண்டி மிளகாய்த்தூள்,மிகமிக சிறியதுண்டுஇஞ்சி,
    சிறிதாகவெட்டிய 2 பல் உள்ளி(பூண்டு),சிறிதளவு உப்பு ஆகியவற்றை
    கிரைண்டரில்(மிக்ஸியில்) போட்டு நன்றாக(கலந்து)அடிக்கவும்(இதில் கலந்தவை
    யாவும் நன்றாக அரைக்கப்பட்டு முட்டைநுரைத்து காணப்பட வேண்டும்).
  • (3)பின்பு
    கிரைண்டரில்(மிக்ஸியில்)அடித்தவற்றை ஒரு தட்டையான பாத்திரத்தில் அல்லது
    நீராவியில் வேகவைக்ககூடிய உயரம் குறைந்த பாத்திரத்தில் போடவும்.
  • (4)தட்டையான
    பாத்திரத்தில் போட்டால் அதனை மைக்கிறோவே அவனில் வைத்து பேக் செய்யலாம்
    அல்லது நீராவியில் வைக்ககூடிய உயரம் குறைந்த பாத்திரத்தில் போட்டால் அதை
    நீராவியில் அவிக்கவும்.
  • (5)இவை பேக்செய்த அல்லது நீராவியில்
    அவித்த பின்பு அதை ஓரளவு சிறிய சதுர அல்லது விரும்பிய அளவில் அல்லது
    விரும்பிய வடிவில் துண்டுகளாக வெட்டவும்.
  • (6)அடுப்பில் ஒருபாத்திரத்தை வைத்து அதில் சிறிதளவு எண்ணைய் விட்டு அது கொதித்ததும் அதில் கடுகு போட்டு வெடிக்கவிடவும்.
  • (7)பின்பு அதில் வெட்டிய வெங்காயத்தை போடவும் .
  • (8)வெங்காயம் ஓரளவுபொரிந்ததும் அதில் பெருஞ்சீரகம்(தனியா)போட்டு தாளிக்கவும்.
  • (9) தாளித்த பின்பு அதில் மிளகாய்த்தூள் போட்டு நன்றாக கலக்கவும்.
  • (10)அதன் பின்பு மிகுதியாக உள்ள தக்காளிப்பழத்தை போட்டு நன்றாக கலக்கவும்.
  • (11)பின்பு
    அதனுடன் மிகுதியாக உள்ள
    உள்ளி(பூண்டு)கருவப்பிலை,மட்ராஸ்கறித்தூள்,மஞ்சள்தூள்,உப்பு பால்,சிறிதளவு
    தண்ணீர்,கரைத்தபழப்புளி,அஜினோ மோட்டோ ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
  • (12)கலந்தவற்றை நன்றாக கொதிக்கவிடவும் .
  • (13)அவை
    நன்றாக கொதித்ததும் அதில் வெட்டிய முட்டைதுண்டுகளை போட்டு கலந்து
    கொதிக்கவிடவும் (விரும்பினாள் பிரட்டல் கறியாகவும் செய்யலாம்).
  • (14)கறிகொதித்ததும் சுவையானதும் வித்தியாசமானது மான முட்டைகுழம்பு தயாராகிவிடும்.
  • (15)பின்பு அடுப்பிலுள்ள பாத்திரத்தை இறக்கி வைக்கவும்.
  • (16)அடுப்பிலிருந்து
    இறக்கிய பாத்திரத்திலுள்ள குழம்பை சோற்றுடன்(சாதத்துடன்)அல்லது இடியப்பம்,
    புட்டு,பாண் இட்லி,தோசை,சப்பாத்திஆகியவற்றில் எதனுடனாவது சேர்த்து
    பரிமாறவும்.





குறிப்பு:

மாற்று
முறை - மரக்கறிவகைகளில் விரும்பியதை அல்லது எலும்பில்லாத இறைச்சி
வகைகள்,முள்ளு எடுத்த மீன்வகைகள்,சுத்தமாக்கப்பட்ட இறால்,நண்டு
இவையாவற்றையும் முட்டையுடன் கலந்தும் செய்யலாம் ,இவற்றில் சிலவற்றை
மட்டும் சேர்த்தும் செய்யலாம், வெங்காயம் பச்சைமிளகாயை மட்டும் சேர்த்தும்
செய்யலாம்.
எச்சரிக்கை- இருதய நோயாளர் ,முட்டை அலர்ஜி உடையவர்கள் ஆகியோர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்


வழங்கியவர்


திருமதி துஷ்யந்தி கலைவேந்தன் (ஜேர்மனி)
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அதிக ஊட்டச்சத்துகளுடன் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களில் முக்கியமானது முட்டை. Empty பரோட்டா சாண்ட்விச்

Post by Tamil Tue Jan 05, 2010 9:41 pm

தேவையான பொருட்கள்




  • பரோட்டா - 2
  • முட்டை - 2
  • எண்ணெய் - 2 டீஸ்பூன்
  • உப்பு,மிளகு - தேவைக்கு
  • தக்காளி - 1 சிறியது
  • வெங்காயம் - 1
  • மிளகாய் - 1
  • வெள்ளரி - பாதி
  • லெட்டூஸ் - 2 இலை
  • சாண்ட்விச் பேப்பர் - 4




செய்முறை




  • பரோட்டா 2 தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  • வெங்காயம்,தக்காளி,லெட்டூஸ்,மிளகாய் ,வெள்ளரி கட் செய்து கொள்ளவும்.
  • முட்டையை அடித்து அதனுடன்.வெங்காயம்,தக்காளி,மிளகாய்,உப்பு,மிளகு சேர்த்து இரண்டாக சுட்டு எடுக்கவும்.
  • பின்பு
    பரோட்டாவில் முட்டை பொறித்ததை வைத்து அதன் மேல் லெட்டூஸ்,வெள்ளரி வைத்து
    சுருட்டி பரோட்டாவில் வைத்து இரண்டு பக்கமும் மடித்து வைக்கவும்.
  • இதனை சாண்ட்விச் பேப்பரில் வைத்து சுற்றி பரிமாறவும்.
  • இது சுவையனதும் சத்தானதும் கூட,இது அரேபிய நாட்டின் ரெஸ்டாரண்டில் பேச்சிலர்ஸ் விரும்பி உண்ணும் காலை உணவாகும்.





குறிப்பு:


இதே போல் பரோட்டாவில் கீமா சாண்ட்விசும் செய்யலாம்.



வழங்கியவர்


ஆசியா உமர்.





பரிமாறும் அளவு



2 நபர்களுக்கு.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அதிக ஊட்டச்சத்துகளுடன் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களில் முக்கியமானது முட்டை. Empty மசாலா முட்டை குழம்பு

Post by Tamil Tue Jan 05, 2010 9:42 pm

தேவையான பொருட்கள்




  • முட்டை - 4
  • வெங்காயம் - 2
  • தக்காளி - 3
  • புளி - எலுமிச்சைபழம் அளவு
  • பூண்டு - 7 பல்
  • இஞ்சி - 1 சிறிய துண்டு
  • மிளகாய்த்தூள் - 2 1/2 டீஸ் ஸ்பூன்
  • மல்லித்தூள் - 1 டீஸ் ஸ்பூன்
  • மஞ்சள்த்தூள் - 1/2 டீஸ் ஸ்பூன்
  • அரைக்க:
  • --------
  • தேங்காய்த்துருவல் - 1/2 கப்
  • அண்டிபருப்பு - 7
  • பெருஞ்சீரகம் - 1/4 டீஸ் ஸ்பூன்
  • கசகசா - 1/4 டீஸ் ஸ்பூன்
  • தாளிக்க:
  • -------
  • எண்ணெய் - 1/4 கப்
  • பட்டை - 1 சிறிய துண்டு
  • கிராம்பு - 2 எண்ணம்
  • பெருஞ்சீரகம் - 1/4 டீஸ் ஸ்பூன்
  • சீரகம் - 1/4 டீஸ் ஸ்பூன்
  • வெந்தயம் - 1/4 டீஸ் ஸ்பூன்
  • கறிவேப்பிலை - 2 கீற்று
  • உப்பு - தேவைக்கேற்ப




செய்முறை




  • முட்டைகளை
    தனியாக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து ஒரு கரண்டி எண்ணெய் விட்டு 1/2
    டீஸ் ஸ்பூன் உப்பு போட்டு வேகவைக்கவைத்து ஓடுரித்துவைக்கவும்
  • வெங்காயம்,தக்காளி,பூண்டு,இஞ்சி இவற்றை பொடியாக நறுக்கிகொள்ளவும்
  • புளியை 2கப் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும்
  • தேங்காய்த்துருவல்,அண்டிபருப்பு,பெருஞ்சீரகம்,கசகசா இவற்றை நைசாக அரைக்கவும்
  • வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, பெருஞ்சீரகம், சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்
  • பின்னர் பூண்டு,இஞ்சி,வெங்காயம்,இவற்றை நன்றாக வதக்கவும்,
  • வதக்கியதும் தக்காளியை போட்டு நன்றாக தக்காளி கரையும் வரைவதக்கவும்.
  • அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்த்தூள் போட்டு நன்றாக கிளறவும்.
  • அதில் புளிகரைசலை ஊற்றி கொதிக்கவைக்கவும்.பாதி கொதிநிலையில் உப்பு போட்டு,வெந்த முட்டைகளை நான்கு புறமும் லேசாக கீறி விட்டு போடவும்
  • 2 நிமிடம் கழித்து அரைத்துவைத்துள்ள தேங்காய்துருவல் கலவையை சேர்க்கவும்.
  • எல்லாமும் சேர்ந்து வரும் போது உப்பு சரிப்பார்த்து இறக்கவும்.





வழங்கியவர்


மஹாபிரகதீஸ், China





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



4

15 min

20 min
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அதிக ஊட்டச்சத்துகளுடன் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களில் முக்கியமானது முட்டை. Empty எள்ளு முட்டை

Post by Tamil Tue Jan 05, 2010 9:43 pm

தேவையான பொருட்கள்




  • முட்டை – 3
  • வெள்ளை எள் (வருத்தது) – 2 டீஸ்பூன்
  • டேபிள் சால்ட் (தூள் உப்பு) – 1 டீஸ்பூன்




செய்முறை




  • முட்டையை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்
  • எள்ளை டேபிள் சால்ட்டில் கலந்து கொள்ளவும்.
  • உறித்த முட்டையை எள்+உப்பு கலவையில் தொட்டு சாப்பிடவும்.
  • தென் கொரியாவில் அவித்த முட்டையை இப்படியும் உண்டு மகிழ்கிறார்கள்.





வழங்கியவர்


இந்திரா





பரிமாறும் அளவு


சமைக்கும் நேரம்



3

10 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அதிக ஊட்டச்சத்துகளுடன் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களில் முக்கியமானது முட்டை. Empty முட்டை குருமா

Post by Tamil Tue Jan 05, 2010 9:44 pm

தேவையான பொருட்கள்




  • முட்டை அவித்தது - 4
  • தேங்காய் - 4 டேபிள்ஸ்பூன்
  • முந்திரிபருப்பு - 4
  • பட்டை-1
  • கிராம்பு - 1
  • ஏலம் - 1
  • சோம்பு - அரை டீஸ்பூன்
  • இஞ்சி - சிறிய துண்டு
  • பூண்டு - 4 பல்
  • மிளகாய்- 2-4
  • புதினா ,மல்லி இலை - சிறிது
  • வெங்காயம் - 1
  • தக்காளி- 2
  • எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
  • மஞ்சல் பொடி - கால் ஸ்பூன்
  • உப்பு - தேவைக்கு




செய்முறை




  • வெங்காயம் தக்காளி மெல்லியதாக கட் செய்து வைக்கவும்.அவித்த முட்டை
  • சிறிது கீரி விட்டுக்கொள்ளவும்.
  • தேங்காய் ,மற்ற பொருட்கள் யாவும் சேர்த்து சிறிது எண்ணெயில் வதக்கி அரைத்துக்கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,வெங்காயம்,தக்காளி போட்டு ,உப்பு சேர்த்து வதக்கி ,மூடி போட்டு சிறிது மசிய விடவும்.
  • பின்பு அரைத்த தேங்காய் கலவையை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  • நன்கு கொதிவந்ததும் அவித்த முட்டை சேர்த்து சிம்மில் வைத்து எண்ணெய் தெளியவும் இறக்கவும்.
  • சுவையான முட்டை குருமா ரெடி.





குறிப்பு:


இது சப்பாத்தி,இடியாப்பத்துடன் பரிமாறலாம்.



வழங்கியவர்


ஆசியா உமர்.





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



நான்கு நபர்களுக்கு

15 நிமிடம்

15 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அதிக ஊட்டச்சத்துகளுடன் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களில் முக்கியமானது முட்டை. Empty வெஜ் முட்டை ஆம்லெட் ரோல்

Post by Tamil Tue Jan 05, 2010 9:47 pm

இது குழந்தைகள் நன்றாக விரும்பி சாப்பிட கூடியது.







தேவையான பொருட்கள்




  • முட்டை - 2
  • வெங்காயம் - 1
  • கேரட் - 1
  • பீஸ் - 1/2 தே.க
  • குடமிளகாய் - 1
  • கரம்மசாலா தூள் - 1/2 தே.க
  • மிளகாய் தூள் - 1/2 தே.க
  • பட்டர் - 1 தே.க
  • எண்னெய் - 1 தே.க
  • உப்பு - தேவைகேற்ப்ப




செய்முறை




  • வெஜ்டெபிள்ஸை ஒரு பானில் கொஞ்சம் பட்டர்+எண்ணேய்
  • விட்டு வதக்கி கொள்ளவும்.
  • வதங்கிய பிறகு அதில் உப்பு கரம்மசாலா, மிளகாய் தூள்
  • போட்டு நன்றாக கலந்து வதக்கவும்.
  • முட்டையை அடித்து அதில் உப்பு, மிளகாய் தூள்,பட்டர்
  • போட்டு அடித்து ஆம்லெட் செய்து கொள்ளவும்.
  • ஒரு ஆம்லெட்டின் நடுவில் அதில் 1 ஸ்பூன் காய்கறி கலவை
  • கொஞ்சம் பட்டர் வைத்து நல்ல சுருட்டவும்.
  • முதலில் இரண்டு ஒரமும் சுருட்டி பின் நடு பகுதியையும்
  • சேர்த்து சுருட்டி வைக்கவும்.
  • வட்டவடிவ துண்டுகளாக வெட்டி மேலே
  • கொத்தமல்லி இலை போட்டு பரிமாறவும்.





குறிப்பு:


வெஜ்க்கு பதில் சிக்கன் கறி ட்ரையாக இருந்தால் அதை சேர்த்து ரோல் செய்யலாம்.



வழங்கியவர்


விஜிடிவிம்





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



2

10

15


<table width="98%" border="0" cellpadding="0" cellspacing="0"><tr> <td valign="top" align="left">
</td></tr></table>
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அதிக ஊட்டச்சத்துகளுடன் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களில் முக்கியமானது முட்டை. Empty ஹாஃப் பாயில்ட் முட்டை தோசை

Post by Tamil Tue Jan 05, 2010 9:53 pm

மாவின் மேல் முட்டை ஊற்றி செய்யும் முட்டை தோசையை விட இது செம்ம அருமையாக இருக்கும்







தேவையான பொருட்கள்




  • தோசை மாவு - 1 கப்
  • முட்டை - 2
  • உப்பு - 2 பின்ச்
  • நெய் - தோசைக்கு தேவையான அளவு




செய்முறை




  • முட்டை
    வேகவைக்க அதும் மூழ்கும் அளவு தண்ணீர் கொதிக்க வைத்து முட்டை சேர்த்து 2
    கொதி வந்ததும் தீயை அனைத்து விடவும்..சிறிது சூடு அடங்கியதும் முட்டையை
    எடுத்து மேலே ஓட்டை ஒரு தட்டு தட்டி உள் உள்ள முட்டையை ஸ்பூனால் எடுத்து
    சூடாக ஒரு பவுளில் போட்டு உப்பும் கலந்து நன்கு ஸ்பூனால் அடித்து குழம்பு
    போல் ஆக்கி வைக்கவும்
  • முட்டை ஒரேடியாக வெந்து போகாமலும் தண்ணீர்
    போல இல்லாமலும் வேக வைக்க வேண்டும்.சிறிது அதிகம் வெந்துவிட்டால் பால்
    கலந்து அடிக்க கொஞ்சம் குழம்பு போல் வரும்.
  • பிறகு தோசையை மொருகலாக நெய் ஊற்றி சுட்டு அதனை அடித்த ஹாஃப் பாயில்ட் முட்டையில் முக்கி சாப்பிடலாம்





குறிப்பு:


முட்டையும் தோசையும் கண்டால் ஒடும் எந்த பிள்ளையும் இதனை விரும்பி
சாப்பிடும்.தோசை சுட்ட பின் முட்டை உடைத்தால் போதும் முட்டை சூடாக இருக்க
சாப்பிட்டால் தான் ச்மிகவும் சுவையாக இருக்கும்


வழங்கியவர்


தளிகா
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அதிக ஊட்டச்சத்துகளுடன் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களில் முக்கியமானது முட்டை. Empty முட்டை குழம்பு - 2

Post by Tamil Tue Jan 05, 2010 9:54 pm

தேவையான பொருட்கள்




  • முட்டை - 4
  • சின்ன வெங்காயம் - 10
  • தக்காளி - 2
  • அரைக்க:-
  • காய்ந்த மிளகாய் - 6
  • இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
  • பட்டை - ஒரு துண்டு
  • லவங்கம் - 1
  • தேங்காய் - 2 .டேபுள் ஸ்பூன்
  • சோம்பு - 1/2 ஸ்பூன்




செய்முறை




  • முட்டையை
    உடைத்து ஊற்றி சிறிது உப்பு சேர்த்து நன்றாக அடித்து ஒரு பாத்திரத்தில்
    ஊற்றி ஆவியில் வேகவைத்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளியை வதக்கி அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்,
  • நன்றாக வதக்கி அரைகப் தண்ணிர் சேர்த்து குழப்பு திக் ஆனதும் முட்டையை போட்டு ஒரு கொதி விட்டு இறக்கவும்,
  • நல்ல மணமாக சாதத்திற்க்கு எற்றது,
  • மசாலா கெட்டியாக வைத்து முட்டையை பிரட்டி விட்டால் இன்னும் நன்றாக இருக்கும்





வழங்கியவர்


ரேணுகா
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அதிக ஊட்டச்சத்துகளுடன் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களில் முக்கியமானது முட்டை. Empty கடாய் முட்டை வறுவல்

Post by Tamil Tue Jan 05, 2010 9:55 pm

நல்லெண்ணெய் மற்றும் பூண்டு சேர்ப்பதால் மிகவும் அருமையாக இருக்கும்.







தேவையான பொருட்கள்




  • முட்டை – 4
  • மஞ்சள் தூள் – ½ தே.கரண்டி
  • மிளகாய் தூள் – 2 தே.கரண்டி
  • பூண்டு – 2 பல்
  • நல்லெண்ணெய் – 1 மேஜை கரண்டி
  • உப்பு – 1 தே.கரண்டி




செய்முறை




  • முதலில் முட்டை தண்ணீரில் போட்டு வேகவைத்து தோல் உரித்து கொள்ளவும்.
  • பின் முட்டைகளை இரண்டாக வெட்டி கொள்ளவும்.
  • பூண்டினை துறுவி கொள்ளவும் ( காரட் துறுவுவது போல)
  • ஒரு பாத்திரத்தில் துறுவிய பூண்டு ,மஞ்சள் தூள், மிளகாய் தூள் , உப்புடன் 2 - 3 தே.கரண்டி தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
  • தோசை கல்லினை காயவைக்கவும்.
  • பின் வெட்டி வைத்துள்ள முட்டைகளை கரைத்து வைத்துள்ள கலவையில் போட்டு பிரட்டி தோசை கல்லியில் போட்டு எண்ணெய் ஊற்றி வேகவிடவும்.
  • 2
    நிமிடம் கழித்து திருப்பி போட்டு வறுக்கவும்..(முட்டை சில சமயம் இப்படி
    செய்யும் பொழுது வெடிக்கும். அதனால் திருப்பி போட்டவுடம் ஒரு தட்டு
    போட்டால் நல்லது)
  • இப்பொழுது சுவையான மணமான கடாய் முட்டை வறுவல் ரெடி.





குறிப்பு:






வழங்கியவர்


Geetha Achal





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



4

10 நிமிடம்

5 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அதிக ஊட்டச்சத்துகளுடன் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களில் முக்கியமானது முட்டை. Empty முட்டை குழிப்பாணியரம்

Post by Tamil Tue Jan 05, 2010 9:56 pm

எப்பொழுது அரிசி மாவில் தான் குழிப்பாணியரம் சாப்பிடுவோம். மாறுதலுக்காக முட்டையில் செய்து அனைவரையும் அசத்துங்கள்







தேவையான பொருட்கள்




  • முட்டை – 2
  • வெங்காயத்தாள் – 2
  • பச்சை மிளகாய் – 1
  • தக்காளி – 1 சிறியது
  • மஷ்ரும் - 2
  • துருவிய சீஸ் – 1 தே.கரண்டி
  • உப்பு – ½ தே.கரண்டி
  • மஞ்சள் தூள் – ½ தே.கரண்டி
  • பட்டர் – தேவைக்கு எற்ப




செய்முறை




  • முதலில்
    வெங்காயத்தள்,பச்சை மிளகாய்,மஷ்ருமை மிகவும் பொடியதாக வெட்டி வைத்து
    கொள்ளவும். தக்காளியின் விதை பகுதியை நீக்கிவிட்டு பொடிதாக அரிந்து
    வைக்கவும்.
  • முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி கொள்ளவும்.
  • அதன் பின் அதில் வெட்டி வைத்துள்ள பொருட்களை மஞ்சள் தூள் மற்றும் உப்புடன் சேர்த்து நன்றாக கலக்கவும்
  • குழிப்பாணியார
    கல்லினை சூடுபடுத்தி கொள்ளவும். கல் சூடனதும் பட்டரை சிறிது சிறிதாக
    ஒவ்வொரு குழியிலும் ஊற்றி பின் அதில் கலந்து வைத்திருக்கும் கலவையை அதில்
    ஊற்றவும்.
  • ஒரு பகுதி நன்றாக வெந்த பிறகு திருப்பி போட்டு துருவிய சீஸை அதன் மேல் தூவி சூடாக முட்டை குழிப்பாணியரத்தை பரிமறவும்.
  • குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.





வழங்கியவர்


கீதா ஆச்சல்





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



2

5 நிமிடம்

10 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அதிக ஊட்டச்சத்துகளுடன் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களில் முக்கியமானது முட்டை. Empty முட்டை வெங்காய மசாலா

Post by Tamil Tue Jan 05, 2010 10:00 pm

தேவையான பொருட்கள்




  • 1. முட்டை - 6
  • 2. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை
  • 3. பச்சை மிளகாய் - 4
  • 4. இஞ்சி - 1 இன்ச்
  • 5. வெங்காயம் - 2
  • 6. கரம் மசாலா - 1 தேக்கரண்டி
  • 7. உப்பு
  • 8. நெய் (அ) எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
  • 9. பால் - 1 கப்
  • 10. கடுகு, சீரகம், கருவேப்பிலை - தாளிக்க




செய்முறை




  • முட்டை வேக வைத்து உறித்து பாதி பாதியாக வெட்டி வைக்கவும்.
  • வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் நன்றாக அரைத்து வைக்கவும்.
  • கடாயில்
    எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், கருவேப்பிலை போட்டு தாளித்து,
    அரைத்த மசாலா சேர்த்து வெங்காயம் வதங்கும்வரை வதக்கவும்.
  • முட்டை சேர்த்து வெங்காயம் கலர் மாறும் வரை வதக்கவும்.
  • இதில் பாலும், உப்பும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
  • எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும் போது, கொத்தமல்லி இலை தூவி, கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கிவிடவும்.





குறிப்பு:


பரோட்டா, சப்பாத்தி, சாதத்துக்கு பக்க உணவாக சுவை சேர்க்கும். பால் சேர்த்து செய்வதால் வித்தியாசமான சுவை தரும்.



வழங்கியவர்


VaniVasu
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அதிக ஊட்டச்சத்துகளுடன் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களில் முக்கியமானது முட்டை. Empty முட்டை மசாலா - மற்றொரு வகை

Post by Tamil Tue Jan 05, 2010 10:01 pm

தேவையான பொருட்கள்




  • 1. முட்டை - 3
  • 2. மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
  • 3. தனியா தூள் - 1 1/2 தேக்கரண்டி
  • 4. மிளகு தூள் - 1 தேக்கரண்டி
  • 5. சோம்பு - 1 தேக்கரண்டி
  • 6. பட்டை, லவங்கம்
  • 7. உப்பு
  • 8. ஏலக்காய் - 1
  • 9. வெங்காயம் - 1
  • 10. தக்காளி - 1/2
  • 11. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி




செய்முறை




  • முட்டை வேக வைத்து உறித்து, லேசாக மேலே கத்தியால் கீரி வைக்கவும், வெட்ட வேண்டாம். (மசாலா ஊற உதவும்)
  • வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும்.
  • மிளகாய் தூள், தனியா தூள், மிளகு தூள், சோம்பு, பட்டை, லவங்கம், ஏலக்காய் அனைத்தையும் மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும், அரைத்த விழுது சேர்த்து சிறுந்தீயில் வதக்கவும்.
  • எண்ணெய்
    பிரிந்து வரும்போது, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி, வேக வைத்த முட்டை,
    உப்பு, 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கெட்டியாக கொதிக்கவிடவும்.





வழங்கியவர்


VaniVasu
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அதிக ஊட்டச்சத்துகளுடன் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களில் முக்கியமானது முட்டை. Empty உருளைக்கிழங்கு முட்டை ஆம்லெட்

Post by Tamil Tue Jan 05, 2010 10:02 pm

இலங்கையை சேர்ந்த என் தோழி ஒருவர் செய்து காட்டியது.







தேவையான பொருட்கள்




  • 1. முட்டை - 4
  • 2. உருளைக்கிழங்கு - 1 (அ) 2
  • 3. பச்சை மிளகாய் - 4
  • 4. வெங்காயம் - 1
  • 5. கருவேப்பிலை
  • 6. கொத்தமல்லி
  • 7. உப்பு
  • 8. எண்ணெய்




செய்முறை




  • வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கவும்.
  • தோல்
    நீக்கிய உருளைக்கிழங்கை பஜ்ஜி'க்கு சீவுவது போல் சீவி, எண்ணெய்'ல் ஃபிரை
    செய்து வைக்கவும் (மொரு மொருப்பாக கூடாது. நன்றாக வதங்கினால் போதும்)
  • முட்டையை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி, உப்பு கலந்து அடிக்கவும்.
  • இதில் நறுக்கிய வெங்காயம், வதக்கிய உருளை, கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • ஒரு
    நான் -ஸ்டிக் பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் இந்த கலவையை
    ஊற்றி ஆம்லெட் போல் வேக விடவும். (மூடி போட்டு வேக வைத்தால் திருப்பி
    போடும்போது விட்டுப்போகாது.)
  • ஒரு பக்கம் நன்றாக வெந்ததும் திருப்பி போட்டு வேக விட்டு எடுத்து தட்டில் வைத்து முக்கோனமாக கேக் வெட்டுவது போல் வெட்டி வைக்கவும்.





குறிப்பு:


விரும்பினால் கேரட் துருவல், பெப்பர் கூட சேர்க்கலாம். சற்று சின்ன ஆழமான
நான் -ஸ்டிக் பாத்திரம் பொருத்தமாக இருக்கும். அப்போது தான் ஒம்லெட்
வெட்டி வைக்க, திருப்பி போட தோதாக இருக்கும். இது மெலிதாக இல்லாமல் சற்று
கனமாக இருக்கும். உள்ளே நன்றாக வெந்துவிட்டதா என பார்க்கவும்.


வழங்கியவர்


VaniVasu
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அதிக ஊட்டச்சத்துகளுடன் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களில் முக்கியமானது முட்டை. Empty முட்டை ஆம்லேட் (குழந்தைகளுக்கு)

Post by Tamil Tue Jan 05, 2010 10:27 pm

தேவையான பொருட்கள்




  • முட்டை - ஒன்று
  • உப்பு - ஒரு சிட்டிக்கை
  • மிளகு தூள் - ஒரு சிட்டிக்கை
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை சிட்டிக்கை
  • தண்ணீர் - ஒரு தேக்கரண்டி
  • பட்டர் (அ) நெய் - ஒரு தேக்கரண்டி




செய்முறை




  • முதலில் தண்ணீரில் மிளகு தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்டை போட்டு நல்ல கலக்கி கொண்டு பிறகு முட்டையை போட்டு நல்ல அடிக்கவேண்டும்.
  • முட்டை
    ஊற்றி விட்டு கலக்கினால் திட்டு திட்டாக நிற்கும் தண்ணீரில் மசாலாவை
    கலக்கி விட்டு கலக்கினால் முடையின் எல்லா பகுதியிலும் மசாலாக்கள் சேரும் .
  • இப்போது தோசை தவ்வாவில் பட்டர் (அ) நெய்யை போட்டு தோசை மாதிரி சுட்டு எடுத்து கொடுக்க வேண்டும்.





குறிப்பு:


குழந்தைகளுக்கு காலை (அ) மாலை டிபனாக கொடுக்கலாம்.
அப்படியே கையில் சுருட்டி கொடுத்து சாப்பிட வைக்கலாம்.
தட்டில் சிறிய துண்டுகளா பிச்சி போட்டும் சாப்பிடவைக்கலாம்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ரொட்டியில் வைட்து சுருட்டியும் கொடுக்கலாம்.




வழங்கியவர்


ஜலீலா





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



ஒரு குழந்தைக்கு

2 நிமிடம்

3 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அதிக ஊட்டச்சத்துகளுடன் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களில் முக்கியமானது முட்டை. Empty எக் ஃபிரைடு ரைஸ்

Post by Tamil Tue Jan 05, 2010 10:29 pm


ரெஸ்டாரெண்ட்களில்
வாங்கும் ஃபிரைடு ரைஸில் சாதத்தை விட காய்கறிகளின் அளவு மிகக் குறைவாகவே
இருக்கும். இது போல் நாம் வீட்டில் செய்தால் நிறைய காய்களின் சத்தும்
கிடைக்கும். அதே சமயத்தில் சுவையானதாகவும் இருக்கும். இது
குழந்தைகளுக்கும் பிடிக்கும்.


தேவையானப் பொருட்கள்





  • பாஸ்மதி அரிசி - 350 கிராம்
  • முட்டை - 2
  • கோஸ் - 1/2 கப்
  • கேரட் - 1/2 கப்
  • பீன்ஸ் - 5
  • குடை மிளகாய் - 1
  • பெரிய வெங்காயம் - 1/2
  • ஸ்பிரிங் ஆனியன் - 1
  • பேபிகார்ன் - 5
  • ஆப்பிள் தக்காளி - 1/2
  • பச்சை மிளகாய் - 2
  • வெள்ளை மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
  • எண்ணெய் - 3 தேக்கரண்டி
  • அஜினமோட்டோ - 1/4 தேக்கரண்டி
  • சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
  • உப்பு - 1 தேக்கரண்டி
  • மல்லி இலை - சிறிதளவு



கால்
மணி நேரம் ஊற வைத்த பாஸ்மதி அரிசியை ஒன்றுக்கு ஒன்றரை மடங்கு என தண்ணீர்
ஊற்றி உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்து வேக வைத்து, உதிரியாக ஆற வைக்கவும்.
கேரட்டை சற்று பெரிதாக துருவிக் கொள்ளவும். கோஸ், குடைமிளகாய் ஆகியவற்றை
நீளவாக்கில் சன்னமாக நறுக்கவும். பீன்ஸ், ஸ்பிரிங் ஆனியன், பேபி கார்ன்,
பச்சை மிளகாய் ஆகியவற்றை சன்னமாக(வட்டமாகவும்) நறுக்கவும். வெங்காயம்,
தக்காளியை நீட்டமாக நறுக்கவும். (தக்காளியை நறுக்கிய பிறகு உள்ளே
இருக்கும் ஜூஸ் மற்றும் விதை பகுதியை நீக்கி விடவும்.)


வாணலியில்
1/2 தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி, சூடாக்கி முட்டையை உடைத்து ஊற்றி சிறிது
உப்பு சேர்த்து துருவல் போல் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.


மேலும் 1/2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி நறுக்கிய பீன்ஸை 1 நிமிடம் வதக்கி வைத்துக் கொள்ளவும்.


பின்பு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து 1/2 நிமிடம் வதக்கவும்.


பிறகு
ஸ்பிரிங் ஆனியன், பேபி கார்ன், கோஸ், கேரட் என ஒவ்வொன்றாக சேர்த்து
வதக்கவும். ஒவ்வொன்றையும் சிறிது நேரம் வதக்கி பின்னர் அடுத்த பொருளை
சேர்க்கவும்.


பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவும்.


அதன் பிறகு பொரித்து வைத்துள்ள முட்டையை சேர்த்து ஒரு முறை வதக்கி அஜினோமோட்டோ, சோயா சாஸ் சேர்க்கவும்.


இறுதியாக மீதியுள்ள உப்பு, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து ஒரு வதக்கு வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.


இந்த
கலவையை சாதத்துடன் கலந்து(அதிகம் கிளர வேண்டாம்) பொடியாக நறுக்கிய மல்லி
இலை தூவி மூடி வைத்து குறைவான தீயில் 3 அல்லது 4 நிமிடம் வைக்கவும்.
இதற்கு மூடியுடன் கூடிய பாத்திரமாக இருந்தால் நன்று. இல்லையென்றாலும்
பரவாயில்லை.


இப்போது
சுவையான வெஜிடபிள் எக் ஃபிரைடு ரைஸ் ரெடி. கெட்சப் அல்லது டொமெட்டொ
சாஸுடன் பரிமாறவும். இதில் பொடியாக பிரித்து எடுத்த காலிபிளவர், வேக வைத்த
பட்டாணி, பீட்ரூட் போன்றவையும் சேர்க்கலாம். பீட்ரூட் சேர்க்கும் போது
சாதத்தின் நிறம் மாறிவிடும். பிடிக்காதவர்கள் சேர்க்காமல் செய்யலாம்.


அறுசுவையில்
மஹிஸ்ரீ என்ற பெயரில் சமையல் குறிப்புகள் வழங்கி வரும் திருமதி. ஸ்ரீகீதா
மகேந்திரன் அவர்களின் தயாரிப்பு இந்த ப்ரைடு ரைஸ்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அதிக ஊட்டச்சத்துகளுடன் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களில் முக்கியமானது முட்டை. Empty காய்கறி முட்டை தோசை

Post by Tamil Tue Jan 05, 2010 10:30 pm

தேவையான பொருட்கள்




  • தோசைமாவு -- தேவையான அளவு
  • முட்டை -- 4 என்னம்
  • கேரட் -- 1/2 கப் (துருவியது)
  • உருளைக்கிழங்கு -- 1/2 கப் (வேகவைத்து மசித்தது)
  • பட்டாணி -- 2 ஸ்பூன் (வேகவைத்து மசித்தது)
  • மிளகுத்தூள் -- 2 டீஸ்பூன்
  • சீரகத்தூள் -- 2 டீஸ்பூன்
  • உப்பு --ருசிக்கேற்ப
  • எலுமிச்சை சாறு -- 1 பழம்




செய்முறை




  • முட்டையை உடைத்து உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து கேரட்டை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
  • பின் அதனுடன் பட்டாணியை போட்டு ஒரு வதக்கு வதக்கி கொஞ்சம் எண்ணைய் சேர்த்து உருளைக்கிழங்கை சேர்க்கவும்.
  • தேவையான அளவு உப்பு,மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
  • பின் இவற்றை முட்டைகலவையில் போட்டு கட்டியில்லாமல் கலக்கவும்.
  • தோசைக்கல்லை
    காயவைத்து தோசையை ஊற்றி அதில் இந்த முட்டை கலவையை பரப்பி ஒரு டீஸ்பூன்
    எண்ணைய் ஊற்றி திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.
  • ரெடி





வழங்கியவர்


Subha Jayaprakash -- dubai





ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



12 min

30 min
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அதிக ஊட்டச்சத்துகளுடன் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களில் முக்கியமானது முட்டை. Empty Re: அதிக ஊட்டச்சத்துகளுடன் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களில் முக்கியமானது முட்டை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum