TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
தளத்தில் தேட
Latest topics
» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun May 28, 2017 8:39 am

» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Wed May 17, 2017 6:56 pm

» அகராதியில் காதல் செய்கிறேன்
by கவிப்புயல் இனியவன் Tue May 16, 2017 7:21 pm

» தாய் தந்தை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sat May 13, 2017 12:32 pm

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu May 11, 2017 11:49 am

» ஏனடி காதலால் கொல்லுகிறாய்
by கவிப்புயல் இனியவன் Sat May 06, 2017 6:32 pm

» நீ இல்லையேல் கவிதையில்லை
by கவிப்புயல் இனியவன் Sat May 06, 2017 12:23 pm

» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க
by velang Thu May 04, 2017 8:27 am

» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
by கவிப்புயல் இனியவன் Tue May 02, 2017 8:18 pm

» தொழிலாளர் தினக் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon May 01, 2017 7:42 am

» காதல் சோகத்திலும் சுகம் தரும்
by கவிப்புயல் இனியவன் Sat Apr 29, 2017 1:46 pm

» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க
by velang Fri Apr 28, 2017 10:51 pm

» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட
by velang Mon Apr 24, 2017 10:18 pm

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட
by velang Thu Apr 20, 2017 7:53 am

» என் இதயம் பேசுகிறது
by கவிப்புயல் இனியவன் Tue Apr 18, 2017 11:58 am

» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Apr 17, 2017 9:59 am

» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.
by velang Sat Apr 15, 2017 10:28 pm

» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு
by கவிப்புயல் இனியவன் Thu Apr 13, 2017 7:13 pm

» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.
by velang Thu Apr 13, 2017 7:44 am

» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க
by velang Tue Apr 11, 2017 10:04 pm

» அவள் மனித தேவதை
by கவிப்புயல் இனியவன் Sat Apr 08, 2017 12:41 pm

» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்
by velang Fri Apr 07, 2017 10:30 pm

» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர
by velang Thu Apr 06, 2017 9:41 pm

» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க
by velang Mon Apr 03, 2017 10:17 pm

» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க
by velang Thu Mar 30, 2017 9:25 pm

» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட
by velang Wed Mar 29, 2017 8:25 am

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 11:42 am

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 11:18 am

» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய
by velang Wed Mar 22, 2017 10:09 pm

» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
by velang Tue Mar 21, 2017 9:48 pm

» பஞ்ச வர்ணக்காதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Mar 20, 2017 8:47 pm

» வேலன்:-பியோனோ கற்றுக்கொள்ள
by velang Sat Mar 18, 2017 9:30 pm

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Sat Mar 18, 2017 5:23 pm

» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட
by velang Thu Mar 16, 2017 9:44 pm

» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட
by velang Wed Mar 15, 2017 9:41 pm

» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட
by velang Tue Mar 14, 2017 10:02 pm

» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட
by velang Sun Mar 12, 2017 9:57 pm

» உயிர் காக்கும் விவசாயின் உயிர்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 12, 2017 9:01 pm

» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு
by கவிப்புயல் இனியவன் Sun Mar 12, 2017 7:30 pm

» வேலன்:-டெக்ஸ்டாப்பினை அழகுப்படுத்த
by velang Sat Mar 11, 2017 10:21 pm

பதிவுகளை EMAIL மூலம் பெற:
Enter your email address:

Related Posts Plugin for WordPress, Blogger...

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

கனவுகள் உங்கள் சாய்ஸ்! லூசிட் டிரீம்

View previous topic View next topic Go down

HOT கனவுகள் உங்கள் சாய்ஸ்! லூசிட் டிரீம்

Post by Tamil on Mon Jun 06, 2016 9:21 pm

கனவுகள் உங்கள் சாய்ஸ்! லூசிட் டிரீம் அறிவோம்
கனவுகள்
பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன், தன்னுடைய இளம் வயதில் கனவு ஒன்றைக் கண்டார். அந்தக் கனவில், அவர் ஒரு மலையில் இருந்து மிக வேகமாக இறங்குகிறார். சாதாரண வேகம் அல்ல… ஒளியின் வேகத்தில் பயணிக்கிறார். அந்த நேரத்தில், நட்சத்திரங்களின் தன்மை மாறுவதை அவர் காண்கிறார். விழிப்புக்கு வந்த பிறகு இதைப் பற்றி சிந்தித்து, ஓர் கோட்பாட்டை வகுக்கிறார். அதுதான், அறிவியல் உலகம் இன்றும் கொண்டாடும் ‘சார்பியல் கோட்பாடு (principle of relativity).’
‘கண்ணைத் திறந்துவைச்சுட்டு கனவு காணுறான்’ என்று சொல்வார்கள். எல்லோருமே இப்படிக் கனவு காண்பது உண்டு. ஆனால், ஒரு சில விநாடிகளில், அது கனவு என்று நினைவுக்குத் திரும்பிவிடுவோம். ஆனால், நினைவுக்குத் திரும்பாமல், அந்தக் கனவுலகத்தில் சிறிது நேரம் உலா வந்தால், எப்படி இருக்கும்?
கனவுகள் மகிழ்ச்சி தருவதாகவும், கோபப்படுத்துவதாகவும், பயமுறுத்துவதாகவும், என்ன உணர்வு எனக் கணிக்க முடியாததாகவும் இருக்கலாம். கனவுகளில், அச்சுறுத்தும் கனவு (Night-mare), மீண்டும் மீண்டும் வரும் கனவு (Recurring), லூசிட் (Lucid) என மூன்று வகை உள்ளன. முதல் இரண்டு, நாம் பெரும்பாலும் அறிந்ததும் அனுபவிப்பதுமே… இவற்றை நம்மால் கட்டுப்படுத்த முடியாது… பங்கேற்க மட்டுமே முடியும். ஆனால், லூசிட் கனவை நாம் கட்டுப்படுத்தலாம்.
[You must be registered and logged in to see this link.]
லூசிட் என்றால் ‘தெளிவு’ என்று பொருள். கனவு காணும்போது, அது கனவுதான் என்ற தெளிவோடும் விழிப்போடும் கனவு காண்பதே லூசிட்  டிரீமிங். லூசிட் டிரீமிங் மூலம், நாம் கனவில் பறக்கலாம், நமக்கு வேண்டிய கதாபாத்திரங்களை வரவைக்கலாம். எதிரே சிங்கமே வந்தாலும், அதில் ஏறி சவாரி செய்யலாம்.  எளிமையாகச் சொன்னால், நம் மனம் விரும்புவதை, அதன் இஷ்டம் போல் நாம் செய்யலாம். இங்கு எந்த சட்டதிட்டமோ, உலக விதி முறைகளோ பொருந்தாது.
இப்படி கனவு காண்பதால் என்ன நன்மை இருக்கப்போகிறது என்று நினைக்கலாம். இதிலும், நமக்கு ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. முக்கியமாக, நம் பயத்தைப் போக்கலாம். நம்மை அச்சுறுத்தும் கனவுகளில் இருந்து விடுபடலாம்.
யார் வேண்டுமானாலும் லூசிட் டிரீமிங் செய்யலாம். முறையான பயிற்சி இருந்தால், இதைத் துல்லியமாக நிறைவேற்ற முடியும். மனஅழுத்தத்தில் இருந்து விடுபடவும் நமக்குப் பிடித்த செயலை, பிடித்த சூழலில் முழு சுதந்திரத்தோடு செய்யவும் லூசிட் டிரீமிங் வழி வகுக்கும். பெரும்பாலும் யோகிகள், புத்த மத லாமாக்கள், தென் அமெரிக்க ஷமன்கள் இதுபோன்ற கனவு உலகில் இருப்பர். இதனால், லூசிட் டிரீமிங் பற்றி அறிந்த பலரும், இவர்களைத் தேடிச்சென்று கற்றுக்கொள்கின்றனர்.
லூசிட் டிரீமிங் எந்தெந்த வகையில் நமக்கு உதவுகிறது?
லூசிட் டிரீம் என்பதைக் கிட்டத்தட்ட ஓர் ஒத்திகை போல பயன்படுத்த முடியும். நாளை தேர்வு உள்ளது என்றால், லூசிட் டிரீமிங் மேற்கொள்பவர்கள், முந்தைய இரவுத் தூக்கத்தில் வரும் கனவிலேயே அந்தத் தேர்வுக்கான ஒரு மாதிரியை ஒத்திகைபார்த்துக்கொள்ள முடியும். அலுவலக பிரசென்டேஷன், மேடையில் பாடுவது, பேசுவது, நடனம் ஆடுவது போன்றவற்றை லூசிட் டிரீமில் ஒத்திகை பார்த்து மேடை பயத்தைப் போக்கலாம்.
எப்படி லூசிட் டிரீமிங் செய்வது?
நன்கு சௌகரியமாகப் படுத்துக்கொள்ள வேண்டும். நாம் மிகவும் அசதியாக இருக்கும் நேரம் இது நன்றாகச் செயல்படும். கைகளை பக்கவாட்டில் வைத்து, கண்களை மூடி அசையாமல் படுத்திருக்க வேண்டும். கண்கள் மூடியிருந்தாலும், தூங்காமல் விழித்திருக்க வேண்டும்.
நம் மூளை தூங்கத் தயாராக இருக்கிறாயா? என்று நம் உடலுக்கு சிக்னல்கள் அனுப்பும். இந்த சிக்னல்கள், கை கால்களில் ஓர் அரிப்பாகவோ, திரும்பிப் படுக்கத் தூண்டுவதாகவோ, கண்களை சிமிட்டச் செய்வதாகவோ இருக்கலாம். இவை அனைத்தையும் புறக்கணித்துவிட வேண்டும். கேட்பதற்கு இவ்வளவு ஸ்டெப்ஸ் இருக்கிறதே என்று தோன்றினாலும், செயல்படுத்துவது மிகவும் சுலபம் 20-30 நிமிடங்களுக்குப் பின், நம் மார்புப் பகுதியில் மூச்சுவிடும் அசைவுகளைக்கூட நாம் உணர முடியும். உடலில், வயிற்றில் ஏற்படும் ஜீரண சப்தங்கள்கூட கேட்கும்.
[You must be registered and logged in to see this image.]
நாம் இப்போது உடல் ஆற்றல் இழந்த நிலையில் இருக்கிறோம். நம் கண்களைத் திறந்தால், நாம் தூங்கும் முன்பு அதிகம் சிந்தித்தவை நம் கண் முன் எண்ணங்களாக ஓடும். ஆனால், நம் உடலை அப்போது அசைக்க முடியாது. சிலர் கண்களைத் திறந்துகொண்டே கனவு காண்பதைப் பார்த்திருப்போம், கிட்டத்தட்ட அதுபோலத்தான் இதுவும். அப்படியே கண்களை மூடிக்கொண்டால், நம் கனவு துவங்கிவிடும். நாம் கனவுதான் காண்கிறோம் என்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டு, நாம் கனவினை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவோம்.
எப்போது அதிகக் கனவுகள் வருகின்றன என்பதைக் கண்டறிய வேண்டும். ரெம் (REM-Rapid Eye Movement) எனும் வேளையில்தான் அதிகபட்சக் கனவுகள் வரும். அது நாம் காலையில் விழிப்பதற்கு சில மணி நேரம் முன்போ அல்லது மதிய உறக்க வேலையிலோதான் அதிகம் நிகழும். அந்த வேளையைக் குறிவையுங்கள். ரெம் தூக்கம் பெரும்பாலானோருக்கு காலை ஐந்து முதல் ஏழு மணி அளவில்தான் நிகழும். அப்போது, எழுந்து கொஞ்சம் வீட்டுக்கு உள்ளேயே நடந்துவிட்டு, கொஞ்சம் ஏதேனும் படித்துவிட்டு மீண்டும் தூங்கிவிடலாம். தூங்கும் முன், ‘நான் லூசிட் டிரீமிங் செய்யப்போகிறேன் என்பது எனக்குத் தெரியும்’ எனச் சொல்லிவிட்டுத் தூங்க வேண்டும்.
லூசிட் டிரீமிங்கின் போது நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள்
நாம் பயப்பட, உலகில் ஒன்றுமே கிடையாது. எந்தத் துன்பமும் நம்மை வந்து சேரப்போவது இல்லை. எந்த உயரத்தில் இருந்தும் குதிக்கலாம். ஒன்றும் ஆகாது.
உணர்வுகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதிகம் ஆர்ப்பரித்தால், விழித்துக்கொள்வோம். அமைதியாகக் கனவைக் கையாள வேண்டும்.  கனவில் வரும் இந்த இடத்துக்கு நாம் ஏற்கெனவே வந்துள்ளோம் என்பதுபோல பாவிக்க வேண்டும்.
நம் கற்பனை எவ்வளவு தூரம் போகுமோ, அவ்வளவு தூரம் நம் கனவுகளும் நீளும்.


லூசிட் கனவு காண வகுப்பு!
[You must be registered and logged in to see this image.]
மேற்கத்திய நாடுகளில் லூசிட் டிரீமிங் வகுப்புகள் உள்ளன. சரியான முறையில் பயிற்சிகளை மேற்கொண்டு, நம் பயங்களையும் தடைகளும் தாண்டி வர லூசிட் டிரீமிங்கை ஒரு கருவியாகப் பயன் படுத்திக்கொண்டால், தியானத்தைப் போல, இதுவும் ஒரு சிறந்த பயிற்சியே. நிக்கோலா டெஸ்லா, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், சல்வேடார் டாலி, ஜேம்ஸ் கேமரூன் போன்ற சாதனையாளர்கள் லூசிட் டிரீமர்களே!


நன்மை தீமைகள்!
நாணயத்தின் இரு பக்கங்களைப் போல் லூசிட் டிரீமிங்கும் நன்மை தீமைகளைக் கொண்டுள்ளது.

நன்மைகள் 

வீரதீரச் செயல்களுக்கும் ஆரவாரத்துக்கும் பஞ்சம் இருக்காது.
நடைமுறை வாழ்க்கையில் நாம் புதிதாகச் செய்யப்போகும் செயலை லூசிட் டிரீமிங்கில் செய்து ஒத்திகை பார்த்துக்கொள்ளலாம். (ஒருவரிடம் நம் காதலைக் கூற வேண்டும் என்றால்கூட, அதை நாம் ஒத்திகை பார்த்துக்கொள்ளலாம். இது நம் தைரியத்தையும் நம்பிக்கையையும் கூட்டும்)
நாம் கனவுதான் காண்கிறோம் எனும் உணர்வுநிலைக்கு முன்னேறி, நம் பயங்கள் எல்லாம் மறைந்துவிடும்.
பிரச்னைகளை நேரடியாக அணுகாமல், லூசிட் டிரீமிங் செய்து, அதிலேயே ஒரு தீர்வுக்கு வந்துவிட்டு, நிதர்சனத்தில் அந்தப் பிரச்னையை நம்பிக்கையோடு கையாளலாம்.
தீமைகள்
அதிகமாக லூசிட் டிரீமிங் மேற்கொள்ளுதல், நம்மை அதற்கு அடிமைப்படுத்தி, நம் தூக்க நேர அமைப்புகளைப் பாதிக்கும். இதனால், உடல் நல மாற்றங்கள் ஏற்படும்.
லூசிட் டிரீமிங் என்பது நம் ஊரில் அதிகம் அறியப்படாத விஷயம். நம் லூசிட் டிரீமைப் பகிர்ந்துகொள்ள, ஒரு நண்பன் இல்லை என்றால், தனிமைப்படுத்தப்படும் உணர்வு வந்துவிடும்.
தூக்கத்தில் ஆற்றல் இழந்த நிலை ஒரு முக்கியப் பிரச்னை. நாம் விழித்திருந்தாலும், உடல் உறக்கத்திலேயே இருக்கும். லூசிட் டிரீமிங் செய்யும்போது, நாம் தூக்கத்துக்கும் விழிப்புக்கும் நடுவில் பயணிப்போம்.


கனவில் கண்ட கணித மேதை!
[You must be registered and logged in to see this image.]
ஐன்ஸ்டீன் மட்டும் அல்ல… நம் நாட்டின் பெருமிதம், கணித மேதை ராமானுஜமும்கூட இப்படிக் கனவு கண்டவர்தான். “தூங்கும்போது எனக்குள் இயல்புக்கு மாறான அனுபவம் ஏற்படுகிறது. பாயும் ரத்தத்தில் இருந்து ஒரு திரை தோன்றுகிறது. திடீரென ஒரு கை பல்வேறு கணக்குகள், தீர்வுகளை அந்தத் திரையில் எழுதுகிறது. அவற்றை அப்படியே என் மூளையில் பதியவைக்கிறேன். விழித்ததும் அது பற்றி ஆய்வுசெய்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார். அவர் வாழ்ந்த அந்த குறுகிய காலத்தில் 3000-க்கும் மேற்பட்ட கணிதத் தேற்றங்களை வகுத்துள்ளார்.
நன்றி – விகடன்
avatar
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11794
Join date : 02/01/2010

View user profile http://www.usetamil.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum