TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 17, 2024 7:14 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 17, 2024 2:27 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 15, 2024 4:50 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நகைச்சுவையும் வித்தியாசமானவையும்

Go down

நகைச்சுவையும் வித்தியாசமானவையும் Empty நகைச்சுவையும் வித்தியாசமானவையும்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 05, 2016 8:44 am

பொழுது விடிந்தது
---------------------
அ.சுந்தரேசன்
----------
பொழுது விடிந்தது;பொற்கோழி கூவிற்று
பொன்னியின் செல்வியே எழுந்திரு!
விடிவெள்ளி முளைத்தது;வீதிஎங்கும் நடமாட்டம்
வீட்டுக்கு அரசியே எழுந்திரு!
பாலும் வந்தது;பருக தேனீரும் தயார்;
பாவை விளக்கே எழுந்திரு!
செய்தித்தாளும் வந்தது;நல்லசேதியும் வந்தது!
செந்தாமரையே எழுந்திரு!

(நாளையக் கணவர்களுக்காக!)

நன்றி ;திண்ணை
நகைச்சுவையும் வித்தியாசமானவையும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

நகைச்சுவையும் வித்தியாசமானவையும் Empty Re: நகைச்சுவையும் வித்தியாசமானவையும்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 05, 2016 8:46 am

ரவா தோசா கதா
-----------------------
சிறகு இரவிச்சந்திரன்
--------------

ஒரு பக்கம் சட்னி! இன்னொரு பக்கம் சாம்பார்! நடுவுல ஏழெட்டு தோசை! ஆசாமி தொப்பை தள்ளுது!
தோசைப்பிரியர்கள் எத்தனை வகை?

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில், கல்யாணத்துக்கு நிற்கும் ஒரு பெண் அருமையாக ரவா தோசை வார்ப்பாள். ஒரு பர்னரில் சின்ன தவ்வாவில் போட்டு எடுக்கப்பட்ட தோசையில் வெறுத்துப் போன தகப்பனார், தேடி கந்தசாமி கோயில் கடையில் செவ்வக தகட்டை வாங்கி வந்தார். பரிட்சார்த்தமான தேதியில் நான் போய் மாட்டிக் கொண்டேன். சோதனை எலி!

‘ சூப்பரா ஓட்டல் ரவா மாதிரியே இருக்கும்’ என்கிற சிபாரிசு வேறு!
பெரிய பர்னரும் சின்ன பர்னரும் சூடேற்ற ஒரு பக்கம் முருகலாகவும் இன்னொரு பக்கம் தீசலாகவும் வந்த தோசைக்கு ஆப்பிரிக்க கறுப்பில் ஒரு சைட் டிஷ் சாம்பார். பனை ஓலையில் கட்டி சைக்கிளில் ‘ புளேய்’ என்று கூவி விற்கப்படும் சமாச்சாரம் சாம்பாரில் திப்பலாக..

அன்றிலிருந்து ரவா தோசையை காசி ரேஞ்சுக்கு விட்டு விட்டேன்! பூனைக்கு பால் வச்ச கதையா எனக்கு ‘தகடு தகடு’ ரவா தோசை!

பாண்டி பஜாரின் சாந்தா பவன் ரவா தோசைக்கு ஈடு இணை உண்டோ! முறு முறுவென்று வாழை இலை ஏடுகளில் பரிமாறப்படும். அதற்கு சின்ன வெங்காய சாம்பார் பக்கெட்டில்! ஊறியும் ஊறாமலும் அசோக வனத்து சீதையைப் போல ( நனைதலும் காய்தலுமாய் – கம்பன் ) அந்த ரவா தோசை விள்ளலை உள்ளே தள்ளும் சுகம் விவரிக்க முடியாதது.

மாம்பலம் இந்தியன் காஃபி ஹவுஸ் ரவா தோசை கொஞ்சம் சீதாப்பழம். மடித்த மேல் புறம் முறுகலாகவும், உள்ளே கொள கொள வென்றும்.. பரட்டைக்கு சடை பின்னியது போல், மசாலா ரவா என்று ஒரு நாள் நான் கேட்டு, சேட்டன் மாஸ்டர் ரவாவின் ஷோரூமையும் நாசம் பண்ணியது தனிக் கதை.

வடக்கு உஸ்மான் ரோடு, ஓட்டல் கங்காவில் தரப்படும் ர.தோ. ஜஸ்ட் பாஸ்.. அதுவும் அந்த தக்காளி சட்னி உபயத்தில். இப்பவும் இருக்கிறது கங்கா காலமாற்றத்தால் அழுக்காகி, உமா பாரதியின் வரவை எதிர்பார்த்து!

நன்றி ;திண்ணை
நகைச்சுவையும் வித்தியாசமானவையும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

நகைச்சுவையும் வித்தியாசமானவையும் Empty Re: நகைச்சுவையும் வித்தியாசமானவையும்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 05, 2016 8:53 am

பொம்மனின் குமுறல்
------------
ரவிசந்திரன்
-----------------------
உனக்கு எதற்குடா நாங்கள் கட்ட வேண்டும்.???
இன்கம் டாக்ஸ், வாட், சர்வீஸ் டாக்ஸ்
கோடு எழுதினாயா, டெஸ்டிங் பண்ணினாயா?
ஸ்கீரீன் டிசைன் செய்தாயா?
சம்பளமில்லாமல் ஆபிஸில் தூங்கினாயா?
பென்ஞ் துடைத்தாயா?
டீமுக்கு பிட்சா, சீகரெட்டாவாது ! வாங்கினாயா?
இல்லை
தூங்கும் எங்கள் ப்ராஜெக்ட் மேனேஜருக்கு
சொரிந்தாவது விட்டாயா?
உனக்கு எதற்காட வரி , வட்டி, சர் சார்ஜ்
நெஞ்சு துடிக்கிறது.
கால் துரத்துக்கிறது வெளிநாட்டுக்கு ஒடு ஒடு என
தடுக்கிறது அன்னையின் முனகல்.


நன்றி ;திண்ணை
நகைச்சுவையும் வித்தியாசமானவையும்
ரவிசந்திரன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

நகைச்சுவையும் வித்தியாசமானவையும் Empty Re: நகைச்சுவையும் வித்தியாசமானவையும்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 05, 2016 8:56 am

அத்தைமடி மெத்தையடி
-----------------
தேனம்மை லெக்ஷ்மணன்
----------------
த்லுலுலுவ்வாயீ ஆரி ஆரி ஆரி ஆரி ஆராரோ.. என்று குட்டிக் குழந்தையை மடியில் இட்டு கே ஆர் விஜயா தாலாட்டும்போது நாமும் குழந்தையாகிவிடமாட்டோமா என்றிருக்கும். இந்தப் பாடலை இன்று என்றில்லை கிட்டத்தட்ட ஒரு ஏழெட்டு வயதிருக்கும் பார்த்த அன்றிலிருந்தே அப்போதிலிருந்தே அப்படி ஒரு பைத்தியம் இந்தப் பாட்டின் மீதும் கே ஆர் விஜயாமீதும்.

எனக்கு மூன்று அத்தைகள் உண்டு. அதில் இரண்டாம் அத்தைக்கு கே ஆர் விஜயா சாயல் அதிகம் இல்லாவிட்டாலும் அந்த சுருட்டை முடி உண்டு. சின்னக்குழந்தையில் ஒரு முறை தஞ்சாவூரில் ஐயாவின் கிராமத்துக்கு ( வயல் ) போயிருந்தபோது குளியாட்டுகிறேன் என்று சொல்லி ஒரு குளக்கரையோ அல்லது ஆறா என்று தெரியவில்லை. அதில் நான் இறங்க பயப்பட்டு கரை ஓரமாக நிற்க ”பயப்பட வேண்டாம்டா ஆத்தாப் பொண்ணு, வா “ என்று கைபிடித்துப் பயம் நீக்கி ( அப்பத்தாவுடன் முடியிறக்க நான் எந்த ஊர் கோயில் ஊரணிக்குச் சென்றாலும் படியில் உக்கார்ந்து கப்பில் மோந்து ஊத்திக் குளிக்கும் ரகம்.) தண்ணீரில் நின்று கொண்டார்.

என் கால்களை அவரின் கால்களில் சைக்கிள் கேரியரில் உட்கார்ந்தால் கூட்டி மடித்து வைத்துக் கொள்வது போல கோர்த்துக் கொள்ளச் செய்து உடலை ஒரு கையால் பிடித்து மறுகையால் மல்லாக்கத் தலையை மட்டும் அலசியபோது சூரிய வெளிச்சத்தால் கண் கூச குளு குளுவென்று தண்ணீர் சிகையையும் தலையையும் நனைக்க கண்ணில் எரிச்சலில்லாமல் தண்ணீர்க்கூச்சமும் மறைந்தது. மெல்ல மெல்ல தண்ணீரில் இறங்க வைத்தார். அதன் பின் ஒரே ஆட்டம்தான். ( அப்போவெல்லாம் கிராமங்களில் இருப்பவர்கள் காலைக்கடன் எல்லாத்துக்கும் கம்மாக்கரைக்குத்தான் போவார்கள்.)

திரைப்படங்களில் கே ஆர் விஜயாம்மாவைப் பார்க்கும்போதெல்லாம் ஏனென்று தெரியாமல் அத்தையின் ஞாபகம் வந்துவிடும். அதுக்கு அந்தப் பாட்டும் ஒரு காரணம்.

எவ்வளவுதான் படங்களில் நடித்துவிட்டாலும் அவர் ஒரு குழந்தை முகம் கொண்டவர். காதல் காட்சிகளில் கூட வளர்ந்த குழந்தைபோன்ற மென்மையான முகபாவங்களே இருக்கும். “ பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால் புன்னகை என்றே பேராகும். “ இதில் முஸ்லீம் பெண்ணாக நடிப்பார். அசல் முஸ்லீம் பெண்ணைப் ( மும்தாஜைப் ) பார்த்தது போலவே ஒரு தோற்றமயக்கம் ஏற்படும்.

“ஹாப்பி இன்றுமுதல் ஹாப்பி” இந்தப் பாடலில் அந்த ரோஸ் நிற ஸ்லீவ்லெஸ் சூடிதாரில் அசல் குழந்தைதான். நளினமாகவும் மென்மையாகவும் இருப்பார். அதே படத்தில் தேடினேன் வந்தது என்று பிள்ளைத்தனமாக ஆடும் ஆட்டமும் கொள்ளை அழகு.

மன்னவனே அழலாமா என்று வெள்ளை உடை அணிந்து பாடி அழவும் வைத்திருக்கிறார். சில சமயம் இருட்டில் நிலவில், மேகங்களில் கூட வெண்ணிற உடையில் விஜயாம்மா தெரிந்திருக்கிறார். !
கே ஆர் விஜயாவைப் பற்றி அவ்வளவாகத் தெரியாத காலத்தில் என் பெரியம்மா பெண் ரேவதி ரவுடி ராக்கம்மா படத்தில் ஒரு சீனில் டேபிள் ஃபேன் சுற்றும்போது தூங்கும் கே ஆர் விஜயாவின் சுருட்டைக்கூந்தல் பம்மென்று காற்றில் அசைவது பற்றி சிலாகித்துக் கூறினாள்.

(வீட்டில் பிள்ளைகள் பார்க்கக்கூடிய படம் என்றால்தான் அப்போது எல்லாம் கூட்டிச் செல்வார்கள். கை கொடுக்கும் கை, கண்ணா மூச்சி , எல்லோரும் நல்லவரே, தேவரின் தெய்வம், திருமலைத் தெய்வம், திருவிளையாடல், வீரபாண்டிய கட்டபொம்மன், குழந்தையும் தெய்வமும் இது போன்ற படங்கள்தான் அப்போது பார்த்திருக்கிறோம். சில படங்களுக்கு முழுக்கதையையும் கேட்டு ரசித்திருக்கிறோம். அப்போ எல்லாத்துக்கும் நேரம் இருந்தது. வானொலியில் ஒலிச்சித்திரம், அகிலபாரத நாடகம் எல்லாம் கேட்க. )

அந்த சீன் எப்ப வரும் எப்ப வரும் என்று விலாவாரியாகக் கேட்டுக் கொண்ட நான் அடுத்த நாள் படம் பார்க்கச் சென்றபோது அந்த சீன் வருவதற்காகக் காத்திருந்தேன். சில நொடிகளே வந்த அந்த சீனில் பம்மென்று புடவையும் முடியும் காற்றில் பறக்க புருவமும் இமைகளும், அழகான நாசியும் இதழ்களும் கொண்ட பூவைப்போல, மச்சம் வைத்த வட்ட நிலவைப் போல அவர் தூங்கும் காட்சி மனதைக் கொள்ளை கொண்டது. நம் சகோதரிக்குப்பிடிக்கும் என்றால் நமக்கும் பிடித்துவிடும்தானே. ! வெகுளித்தனமான அழகோடு அவர் நடித்த படங்களில் ஒன்று ரௌடி ராக்கம்மா. ராமு படத்தில் ஜெமினியோடு பாடும் பாடலிலும் கொள்ளை அழகுதான். இயல்பாய் அழகாய் பொருந்தி இருப்பார் எந்த வேடத்துக்கும்.

முத்துராமனோடு ஒரு படத்தில் நடித்திருப்பார். அதில் இந்தப் பாடல்வரும். “ உன்னைப்பார்க்கவேண்டும் பழக வேண்டும் பேச வேண்டும் ரசிக்க வேண்டும் எத்தனையோ ஆசை இந்த மனதிலே. இதை என்னவென்று எடுத்துச் சொல்ல முடியல. ஐ டோண்ட் நோ. ஐ லவ் யூ.. “ இதை எல்லாம் ரேடியோவில் கேட்கும்போதே திக் திக் என்று இருக்கும். ஐ லவ் யூ என்பதெல்லாம் அப்போது மிகப் பெரிய உச்சரிக்கக்கூடாத வார்த்தை. ஆனால் அந்த வார்த்தை தன்னுடைய த்ரில்லை இழந்து பலகாலமாகிவிட்டது. இன்றைய நட்பில் கூட ஒருவருக்கொருவர் இதை எல்லாம் சர்வசாதாரணமாகச் சொல்கிறார்கள்.

பட்டினத்தில் பூதம் படத்தில் அவர் டபிள் பீஸ் ஸ்விம் சூட் போட்டு ஒரு பாடலில் நடித்திருப்பார். சான்ஸே இல்லை. சிலருக்கு உடல் மட்டுமே நன்றாக இருக்கும். சிலருக்கு முகம் மட்டுமே நன்றாக இருக்கும். ஆனால் கே ஆர் விஜயாம்மாவுக்கு முகம் உடல் இரண்டுமே அழகு.

ஆண் பெண் இருபாலாருக்குமே ஆண் பார்வை ( MALE GAZE ) உண்டு. என்று ஒரு பேட்டியில் டான்சர் அனிதா ரத்னம் ( டிவிஎஸ் க்ரூப் ) சொல்லி இருந்தார். அது சில வருடங்களாக அனலைஸ் செய்துபார்க்கும்போது உண்மை என்றுதான் தோன்றுகிறது.

ஆனால் அப்போதைய ஹீரோயின்கள் போல ( சாவித்ரி, ) விஜயாம்மாவும் குண்டாகி விட்டார். நல்ல நேரம் படத்தில் எம்ஜியாரோடு நடிக்கும்போது அது நன்கு தெரியும். இது தமிழ்நாட்டுப் பெண்களுக்கே உள்ள ஒரு ஹெரிடிட்டி சாபம் போல.

சென்னையிலிருந்தபோது என் அண்டைவீட்டிலிருந்த அம்முபுஜ்ஜியோட அம்மா சொன்னதுதான் எங்கள் நட்பையே ஆட்டம் காணச்செய்தது. நடிப்பவர்களின் நடிப்பை மட்டும் பாராமல் அவர்களின் வாழ்க்கையை அலசுவது என்ற பொதுபுத்திக்கு அவரும் விலக்கல்ல. நடிகைகளின் வாழ்வு பற்றி பொதுக்கருத்து பொதுவார்த்தை சொல்வது பெரும்பாலும் ஆண்கள் என்றாலும் அதில் பெண்களும் சளைத்தவர்கள் அல்ல என்று அன்று தோன்றியது. அப்போது வெளிவந்த தினமலர் வாரமலரிலும் இதுபோன்ற தொடர் ஒன்றைப் படித்தேன்.
நமக்குப் பிடித்தவரைப் பற்றி யாரோ என்னன்னவோ சொன்னால் ஏற்படும் மன உளைச்சல் அளவிட இயலாதது. நமக்கு அந்த சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது. எப்படி வக்காலத்து வாங்குவது. அடுத்து அவர்களுடன் பேசலாமா வேண்டாமா என்பதும் புரிபடாது.

நமக்குத் தேவையானதை மட்டுமே எடுத்துக் கொள்வது. மற்றதை அவரிடமே விட்டுவிடுவது என்பதைக் கற்க எனக்குப் பல வருடங்கள் தேவைப்பட்டது. மேலும் சிலரை எந்தக் காரணத்துக்காகவும் வெறுக்கவே முடியாது . அதுபோலத்தான் கே ஆர் விஜயாம்மாவும்.

அடுத்து அடுத்து அவர் அம்மன் படங்கள் செய்ததும் எண்டையர் தமிழ்நாடும் வணங்கியது அனைவரும் அறிந்ததே. தன்னைக் காலடியில் போட்டு மிதித்த சமூகத்தைத் தன் காலில் விழுந்து வணங்கவைப்பது வெகுசிலருக்கே வாய்க்கிறது.

தசாவதாரத்திலும் நடித்திருக்கிறார். எவ்வளவு பெரிய உருவம் என்றாலும் எவ்வளவு வயதானாலும் குழந்தைத்தனம் சிலரிடம் மறைவதில்லை. பாந்தமும் மென்மையும் அழகும் எந்த வயதிலும் ஒரு சிலருக்கே வாய்க்கிறது.
இது ஒரு பெட்(PET) மனோநிலையாக இருக்கலாம். ஒருவரை ரசிக்க, ரசிகையாயிருக்க அவரது வாழ்க்கைச் சரிதமோ, சரகமோ முக்கியமில்லை. துறைசார்ந்த சாதனைகளே போதும் என்பது என் எண்ணம்.

நன்றி ;திண்ணை
நகைச்சுவையும் வித்தியாசமானவையும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

நகைச்சுவையும் வித்தியாசமானவையும் Empty Re: நகைச்சுவையும் வித்தியாசமானவையும்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 05, 2016 9:01 am

நியூஜெர்சியில் (எனது) காரோட்டம்!
(நகைச்சுவைப் பயணக் கட்டுரை)
-------------

ஒரு அரிசோனன்

அரிசோனாவில் கண்ணை மூடிக்கொண்டு கார் ஓட்டப் பழகிக்கொண்ட எனக்கு – அதாவது, கிழக்கு-மேற்காகவோ, அல்லது தெற்கு-வடக்காகவோ நூல் பிடித்தால் போல் செல்லும் பல தடங்கள் கொண்ட நேர் பாதைகளிலும், பிரீவேக்களிலுமே கார் ஓட்டிப் பழகிக்கொண்ட எனக்கு – என் மகன் வேலை பார்க்கும் நியூ ஜெர்சிக்குச் சென்றதும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கு காரோட்டி, திண்டாடித் தெருப் பொறுக்கிய என் நகைச்சுவை அனுபவங்களை உங்களுடன் பகிர்த்து கொள்கிறேன். நியூஜெர்சி வாசகர்கள் என்னை மன்னிப்பார்களாக! அல்லது, “வேணும் கட்டைக்கு வேணும்” என்று சிரிப்பார்களாக!

ஒரு வழியாக, வாடகைக் காரைப் பெற்றுக் கொண்டு, நியூவெர்க் விமான நிலையத்தை விட்டு வெளிவந்தால் மாறி மாறி குழப்புகிறமாதிரி வழிகாட்டிகள்! தவறிப்போய் வேறு ஒரு வழியை எடுத்து விட்டால், உடனே, அடுத்த வெளிவழியில் (exit) வந்து, திரும்பிச் சென்று, சரியான சாலையில் பொய் விட முடியாது. ஐந்தாறு மைல் சென்றால்தான், நாம் வர வேண்டிய சாலைக்கு வரமுடியும்! இல்லாவிட்டால், நியூயார்க் சென்று சுற்றிப்பார்த்து விட்டு மெதுவாக வீடு வந்து சேரலாம்!

உதாரணமாக, என் மகன் இருந்த ஹில்ஸ்பரோவிளிருந்து நியூவெர்க் விமான நிலையம் செல்லவேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள், நியூயார்க் போகும்வழியில்தானே நியூவெர்க் விமான நிலையம் இருக்கிறது என்று நியூயார்க் போகும் சாலையை எடுக்க முடியாது. எடுத்தால் அது எங்கோ சுற்றி நியூயார்க்குக்குக் கொண்டு விட்டுவிடும்! நியூவெர்க் விமான நிலையம் செல்லவே முடியாது!

மோரிஸ்டவுன் என்று மேற்கே செல்லும் வழியை முதலில் எடுத்து, இரண்டு மைல் தூரம் சென்று, அங்கிருந்து நியூயார்க் செல்லும் இன்னொரு வழியை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால், நியூவெர்க் போகாமல் மோரிஸ்டவுனுக்கே சென்று விடுவோம்!

என்ன, தலை சுற்றுகிறதா? படிக்கும் உங்களுக்கே இப்படி இருந்தால், விடிகாலையில், அருணோதயம் கூட வராத இருட்டில், நியூவெர்க் விமான நிலையம் செல்லப் புறப்பட்ட எனக்கு எப்படி இருந்திருக்கும்?
நீங்கள் ஊகித்தது சரிதான்! தப்பான வழியை எடுத்துத் தொலைத்துவிட்டேன்! கார் போகிறது, போகிறது, போய்க்கொண்டே இருக்கிறது! வெளிவழியைக் காணவே முடியவில்லை. கிட்டத்தட்ட ஐந்து மைல் சென்று வெளியேறினால், திரும்பிச்செல்ல உள்வழி (onramp) இல்லை!

தட்டுத்தடுமாறி, ஒரு பெட்ரோல் பங்க், சாரி, காஸ் ஸ்டேஷனுக்குச் சென்று, வழி விசாரித்துக்கொண்டு திரும்ப சரியான சாலைக்குச் செல்வதற்குள் விழி பிதுங்கிவிட்டது! பீனிக்ஸ் செல்லும் விமானம் தாமதமாகக் கிளம்பியதால் பிழைத்தேன், அதைப் பிடிக்க முடிந்தது!

சும்மா சொல்லக்கூடாது, புத்தம் புதிய பிரீவேக்கள், பளபளக்கும் சாலை விளக்குகள், என்று. பீனிக்சில் என்னைக் கெடுத்துத்தான் வைத்திருந்தார்கள்! அதுவும் டெம்ப்பியில் (Tempe)போக்குவரத்து விளக்குகள் (stop lights), தெருப் பெயருடன் இருக்கும் அழகே தனி! நீங்களே விரும்பினாலும் தொலைந்து போக முடியாது. என் மகன் இருந்த ஹில்ஸ்பரோவில் போக்குவரத்து விளக்குகள் கம்பியில் தொங்கி ஊசலாடிக்கொண்டு இருந்தன! அவை காற்றில் ஆடும் வேகத்தைப் பார்த்தால், பிய்ந்து விழுந்துவிட்டால் என்ன செய்வது என்று பயமாகவே இருக்கும்!

பீனிக்சில் சாதாரண ரோடுகள் கூட போக இரண்டு, வர இரண்டு என்று நால்வழிப் பாதைகளாகவே இருக்கின்றன. ஆனால், மத்திய நியூஜெர்சியில் பெரிய சாலைகள்கூட போக ஒன்று, வர ஒன்று என்று இருவழிப் பாதைகளாகவே இருக்கின்றன. ஆனால், ஹில்ஸ்பரோவில் 206 என்ற சாலையில் நெரிசல் நேரத்தில் மாட்டிக்கொண்டால் தொலைந்தோம்! பீனிக்சின் 10, 17, 202, 101 போன்ற பிரீவேக்களின் நெரிசல்கள்கூட ஒரு நேரிசல்களாகவே தோன்றாது! என்னை மாதிரி ஒருவர் வழி தெரியாமல் நத்தை போல ஊர்ந்துகொண்டிருப்பார், அவரை முந்திச் செல்ல முடியாமல் ஒரு மாப்பிள்ளை ஊர்வலமே சென்று கொண்டிருக்கும்!

பொதுவாக, இடது பக்கம் திரும்ப வேண்டும் என்றால் இடதுபுறத் தடத்தில்தானே (lane) இருக்கவேண்டும்? அப்படி நினைத்தால் ஏமாந்துதான் போவீர்கள்! பெரும்பாலான வழிகள் ஜாடிக்காது (jug handle) இடது திருப்பம் உள்ளவை. அதாவது, இடது பக்கம் திரும்பவேண்டும் என்றால், வலது பக்கத் தடத்திற்கு வரவேண்டும். நாம் திரும்பவேண்டிய சாலை வருவதற்குச் சற்றுதூரம் முன்னதாக “இடது பக்கத்திருக்குத் திரும்ப” என்று வலது பக்கத்தில் ஒரு அறிவிப்புப் பலகை இருக்கும். அதைப் பார்த்துப் படித்துத் தெரிந்துகொண்டு, வலது பக்கம் திரும்பி, குறுக்குத் தெருவுக்குச் சென்று காத்திருக்க வேண்டும். இது விபத்துக்களைத் தடுக்கிறதாம்!

சரிதான், இனிமேல் இடது பக்கம் திரும்ப வேண்டுமானால் வலது பக்கம் இருந்து விடலாம் என்று நினைத்தோமானால் வந்தது ஆபத்து! என்னை மாதிரி ஆட்களை — நியூஜெர்சி சாலைகளைப் பழிக்கும் ஆட்களைப் பழி வாங்கவேண்டும் என்றே சில தெருக்களுக்கு சாதரணமான இடது திருப்பம் வைத்திருப்பார்கள்! இதை எப்படி முன்னுக்கு முன்னதாவே தெரிந்து கொள்வது? பத்துப் பதினைந்து தடவை திண்டாடினால். தன்னாலேயே தெரிந்துவிடும்!

யாராவது நண்பர்கள் என்னைத் தங்கள் வீட்டிற்கு அழைத்து, அவர்களிடம் நான் வழி கேட்டால், சொல்லத் தடுமாறுவார்கள். நீங்களே வரை படத்தில் பார்த்துக்கொண்டு வந்துவிடுங்களேன் என்று சொல்லிப் போனை வைத்துவிடுவார்கள்!

சரி, பரவாயில்லை, நாமே, கூகுளில் பார்த்துக்கொண்டு கிளம்புவோம் என்று இரவில் மட்டும் கிளம்பவே கூடாது! வழி தேடிக் கண்டுபிடிக்கவே முடியாது! சூழல் உணர்வு (eco-sense) சற்றுகூட இல்லாமல், பீனிக்சில் இரவைக்கூடப் பகலாக்கும் வண்ணம் மின்விளக்குகள் சாலையில் கண்ணைப் பறிக்கும்,! ஆனால், சூழல் உணர்வு அதிகம் உள்ள நியூஜெர்சியில் அந்தக் கண் கூச்சே இல்லை! இருட்டு என்னைப் பயமுறுத்தியது. புறநகர் (suburban) சாலைகளில் விளக்கே இல்லை. வீடுகளும் உள்ளடங்கி இருந்ததால், நான் தேடிச் சென்ற வீட்டிக்கு முன்னாலே இருந்தால்கூட என்னால் அதை அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை!

ஜி.பி.எஸ் இருந்தால் ஒருவேளை பிழைத்தாலும் பிழைக்கலாம். சில சமயம் ஜி.பி.எஸ்ஸால்கூட நம்மைக் காப்பாற்றமுடியாது! சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.
ஒரே ஒரு கார்தான் இருந்ததால், என் மகனின் காரை நாங்கள் வைத்துக் கொண்டிருந்தோம்! படேல் காஷ் அண்ட் காரியில் காய்கறிகள் வாங்கிக்கொண்டிருந்தபோது எங்கள் மகன் எங்களைக் கூப்பிட்டு, அவனது அலுவலகத்திலிருந்து அழைத்துப்போகச் சொன்னான்.

முன்னதாகவே ஒரு ஜி.பி.எஸ் வாங்கி வைத்துக்கொண்டு இருந்ததால், அதில் என் மகனின் அலுவலக முகவரியை ஏற்றினேன். நாங்கள் இருந்த இடத்திற்கு வடமேற்கில் அவனது அலுவலகம் இருந்த போதிலும், ஜிபிஎஸ் என்னைத் தெற்கே போகுமாறு பணித்தது. அதை நம்பாமல், நான் வடக்குப் பக்கம் செல்ல ஆரம்பித்தது வினையாகப் போய்விட்டது.

திடுமென்று ஜிபிஎஸ் என் மகனின் அலுவலகத்திற்கு நேர் எதிர்த் திசையில் கிழக்குப்பக்கம் செல்லுமாறு வழிகாட்டியது,. ஜிபிஎஸ்சை மனதிற்குள், மனதிற்குள் என்ன மனதிற்குள், வாய்விட்டுத் திட்டிக்கொண்டே நான் செண்டுகொண்டிருந்த வழியில் தொடர்ந்தேன், கிழக்குப் பக்கம் செல்லும் சாலை வரும் என்ற நப்பாசையில்.
நான் என்னதான் அதை உதாசீனப் படுத்தினாலும், அது நான் செல்லலும் வழி தப்பு என்றே சொல்லிக்கொண்டு வந்தது. பனிக்காலமாதலால் இருட்டவேறு ஆரம்பித்துவிட்டது.

கடைசியில் இரண்டு மைல் சென்றதும் இடது பக்கம் திரும்புமாறு என்னைப் பணித்தது அந்த வழிகாட்டி. என்னால் நம்பவே முடியவில்லை! ஏனென்றால் அது காட்டிய திசை கிழக்கு1 என் மகனின் அலுவலகம் இருக்கும் திசை!
ஆனால், அடுத்த கணமே, எனது வியப்பு ஏமாற்றமாக மாறியது!
ஏனென்றால், இடது புறம் திரும்பும் இடம் வந்ததும் அதை அடைத்து ஒரு சுவர் தொடர்து கட்டப் பட்டிருந்தது! வேறு வழியில்லாமல், ஒரு கடையில் காரை நிறுத்தி, வழி கேட்டுக்கொண்டு, என் மகனின் அலுவலகத்திற்கு ஒருவழியாக வந்து சேர்ந்தேன்.

என் மனவருத்தத்தை என் மகனிடம் கொட்டினால், அவன் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான். நியூஜெர்சி மாநிலம் ஒரு மாதத்திற்கு முன்னர்தான் அந்த ரோடை அடைத்து விட்டதாம்! அது வழிகாட்டியின் சாப்ட்வேரில் புதுமைப்படுத்தப் படவில்லை.

வழிகாட்டி முதலில் சொல்லியபடி கேட்டிருந்தால் ஒருவேளை சீக்கிரமாக வந்து செர்ந்திருப்பேனோ இல்லை, சுற்றிக்கொண்டிருந்திருப்பேனோ தெரியாது.

எது எப்படி இருந்தாலும் சரி, புதிதாகச் செல்பவர்களுக்கு நியூஜெர்சியில் சரியான இடத்திற்கு, சரியான வழியில், சரியான நேரத்திற்குப் போய்ச்சேர, அங்கு கார் ஓட்ட நிறையப் பொறுமை இருக்கவேண்டும், கார் டாங்க் முழுக்கப் பெட்ரோல் இருக்கவேண்டும், அதிர்ஷ்டமும் அதிகமாகவே இருக்கவேண்டும்! அது முடியாவிட்டால், அந்த ஊர்க்காரர்களைக் கார் ஓட்டச் சொல்லி விட்டு, நிம்மதியாகக் கண்ணை மூடிக்கொண்டு ஒரு தூக்கம் போட்டு எழுந்திருக்கவேண்டும்.

ஒருவேளை அவர்களாலும் குறித்த நேரத்திற்குப் போய்ச்சேர முடியாவிட்டால் நம் மீது பழி விழாது அல்லவா!
அதனால்தான் நிறையப்பேர் நியூஜெர்சியிலிருந்து அரிசோனா வந்து கொண்டிருக்கிறார்கள், என் மகன் உள்பட!
யாரவது நியூஜெர்சிக்காரர்கள் அரிசோனா வந்தால் எனக்கு ஈமெயில் போடுங்கள்! நிம்மதியாக எங்காவது டீ, அல்லது காப்பி குடித்துக்கொண்டு நமது காரோட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வோம்!

நன்றி ;திண்ணை
நகைச்சுவையும் வித்தியாசமானவையும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

நகைச்சுவையும் வித்தியாசமானவையும் Empty Re: நகைச்சுவையும் வித்தியாசமானவையும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum